Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW_Contest_Writer_078 அவர்களின் மௌனத்தின் மறுபக்கம்

Advertisement

ஓம் சாயிராம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, என் மனதிற்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே!

உங்கள் கதையின் தனித்துவமான கதைக்கரு பற்றியும், அதை நீங்கள் பக்குவமாகக் கையாண்ட விதத்தைப் பற்றியும் வாசக தோழமைகள் Chitrasaraswathi & Narmadha Subramaniyam அளித்த விமர்சனங்களைப் பார்த்த பின் தான் கதையைப் படித்தேன்.

தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறை எண்ணி பரிதவிக்கும் மனைவி ஒரு புறம்; ஏதோ சரியில்லை என்ற யூகத்தில் அவளைத் தேடி வரும் கணவர் மறுபுறம் என அனாமிகா-ஷ்யாம் தம்பதிகளின் புரிதலை ஒரே அத்தியாயத்தில் உணர்த்திவிட்டீர்.

அனாமிகா: “வெகுளித்தனம்” அவள் பிறவிகுணம் என்று சொல்லும் அளவிற்கு அவளைத் தத்ரூபமாக சித்தரித்துவிட்டீர்கள்; அவள் நிகிலின் மாயவலையில் சிக்கியதும் சரி, அதைக் கணவரிடம் சொல்லமுடியாமல் தவித்ததும் சரி எல்லாமே அவளின் இயல்பான குணமாகவே இருந்தது.

தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் மனையாளுடன் மல்லுக்கட்டிய ஷ்யாமின் பொறுமைக்குக் கோவில் கட்டலாம்.

மனைவயின் ரகசியங்கள் அறிய அவன் மெனக்கெட்டதும், அதை அறிந்த பின் அவன் கடைப்பிடித்த நிதானமும், எடுத்த முடிவுகளும் என ஒவ்வொன்றையும் படிக்க படிக்க மெய்சிலிர்த்துவிட்டது ஆத்தரே. குறிப்பாக, “எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் உன் கூட இருப்பேன்னு நம்பிக்கை இல்லைல!” என்று ஷ்யாம் நொந்த இடம், அவன் தேக்கிவைத்த காதல், கோபம், ஆதங்கம், வலி அனைத்தையும் உணர்த்தியது.

அதே சமயத்தில் பிரச்சனைகளைத் தவிர்க்க அவன் குடும்பத்தை விட்டு தள்ளியிருக்க முடிவெடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆத்தரே. அவள் ரகசியத்தைத் தன் வாயால் சொல்லமாட்டாள் என்று தீர்க்கமாக அறிந்த பின்னும் பிடிவாதமாக இருந்தது ஏன் என்று தோன்றியது. இது தான் அவள் குணம் என்று முப்பது வருடங்களாகக் கண்கூடாகப் பார்த்தும், அனுசரித்தும், நிழலாய் தொடர்ந்தும் பக்கபலமாய் வாழ்ந்தவன், திடீரென்று அவளை சுயமாகச் செயல்படும் கட்டாயத்திற்குத் தள்ளிவிட்டதில், ஆண்களுக்கே உரிய ஈகோ சற்று எட்டிப்பார்ப்பது போல இருந்தது.

ஏனோ தெரியவில்லை! நீங்கள் நிகிலை சித்தரித்த விதம் மிகவும் பிடித்திருந்தது. அவனைக் கெட்டவன் என்று முற்றிலும் ஒதுக்க முடியாமல், அப்பாவி என்று பரிதாபமும் கொள்ள முடியாத அளவிற்கு, அனுவிற்கு இணையாக கதை படிக்கும் எங்களையும் குழப்பிய உங்கள் எழுத்துநடை செம்ம.

நிகிலுக்கு, அனுவிடம் தோன்றிய உணர்வை, வெளித்தோற்றத்தைத் தாண்டி, ஒருமித்த எண்ணங்கள், ரசனைகளில் மலர்ந்த ஈர்ப்பு என்று சொல்லலாம். கதையின் தொடக்கத்தில் நீங்கள் நிகிலுக்குத் தந்த முக்கியத்துவம், இறுதியில் இல்லாதது போல ஒரு உணர்வு ஆத்தரே. Word Limit தடையாக இருந்திருந்தால், அவனுக்கு ஒரு தனிக் கதை எழுதுங்கள். In my opinion, he deserves a better life too.

சில இடங்களில் கதை சற்று மெதுவாக நகர்வதைப் போல உணர்வைத் தந்தது. இருவரின் மனநிலையை விளக்க அத்தனை அத்தியாயங்கள் தேவைப்பட்டிருந்தாலும், அவர்கள் எண்ணோட்டங்கள் வரும் இடங்கள் ஒரே விஷயத்தில் உழலுவது போல இருந்தது. (Felt same sentences/ideas repeating)

பிரிந்திருக்கும் போது அவர்கள் மனநிலையை ஆழமாக எடுத்துரைத்தது போல, சேர்ந்தபின் அவர்கள் எவ்வாறு வாழ்க்கையைக் கடந்து வந்தார்கள் என்று ஒரு சில அத்தியாயங்களாவது வர்ணித்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

அதே மாதிரி, நீங்கள் IT துறையை சார்ந்தவர் என்று நினைக்கிறேன். On Site Project, America என்றதும் உங்கள் உற்சாகம் காட்சிகளின் வர்ணனையில் பிரதிபலித்தது. ஆனால் மன்னிக்கவும் ஆத்தரே! அது அனு-ஷ்யாம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கதையின் விறுவிறுப்பை குறைத்தது. (சுவாரசியமான சீரியலுக்கு இடையே வரும் விளம்பரங்கள் மாதிரி)

அன்பின் கூட்டாய், இருவரின் குடும்ப உறவுகள், நட்பு வட்டாரம் எனப் படிக்க படிக்க இதமான உணர்வை தந்தது. அதில் ரஞ்சு மற்றும் கார்த்திக்கின் தோழமை அசாதாரணமானது. ரகசியம் காப்பதிலும், அதை உடைப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.

இன்றைய காலத்தில் மனோநிபுணர்களின் அவசியத்தையும், அத்துறை சார்ந்தவர்களின் ஆத்மார்த்தமான சேவை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ராகினியின் காட்சிகள் மூலம் அழகாகச் சொல்லிவிட்டீர் ஆத்தரே.

யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும், எதை யாரிடம் சொல்ல வேண்டுமென்றும், குறிப்பாக Family & Professional Life இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்றும் சொல்லும் விதமாக, இன்றைய சமுதாயத்திற்கு நல்லதொரு கதை தந்த உங்களுக்கு நன்றிகள் பல பல. நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
N

Nirmala vandhachu ???
??????
 
Top