Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 12

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---12

தான் கேட்டதற்க்கு எந்த பதிலும் சொல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பரினிதாவிடம் “என்ன நான் கேட்டதற்க்கு எதுவும் நீ சொல்ல வில்லையே…” என்றதற்க்கு.

“நான் சொன்னா தப்பா எடுத்துக்கிட்டா…? அப்புறம் நீங்க என் அண்ணாவுக்கு உங்க சிஸ்டரை கொடுக்கமா போயிட்டீங்கனா…? அது தான் யோசிக்கிறேன்.”

“பரவாயில்லை ஒரு சில விஷயத்தில் நல்ல விவரமா தான் இருக்கே.தன் கையில் உள்ள டைரியை காண்பித்து இது படித்தவுடன் உன் அண்ணன் செயலில் நியாயமான காரணம் இருந்தால் கண்டிப்பாக உன் அண்ணாவுக்கு என் சகோதரியை திருமணம் செய்து கொடுப்பேன். அதனால் நீ எதற்க்கும் தயங்காமல் உன் மனதில் என்னை பற்றி இருப்பதை சொல்லி விடு.”

அவன் பேச்சில் தைரியம் வந்தவளாக அவள் எப்போதும் பேசுவது போல் தன் மனதில் பட்டதை வெளிபடையாக பேசினாள். “இல்லை அந்த டைரியைய் படித்ததில் இருந்து தெரிந்துக் கொண்ட விஷயம் என்ன வென்றால் எட்டு வருடம் முன் நீங்கள் வசதியில்லாமல் தான் இருந்தீர்கள்.

அப்படி இருந்த நீங்கள் இந்த குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு வசதியாக இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக ஏதோ செய்து தான் முன்னுக்கு வந்து இருக்க வேண்டும்.” என்று சொல்லி விட்டு அவன் என்ன நினைப்பானோ என்று அவன் முகத்தையே பார்த்தாள்.

மனதுக்குள் பரவாயில்லை நாம் நினைத்த அளவுக்கு இவள் முட்டாள் இல்லை என்று நினைத்துக் கொண்டே “ஏதோ என்றால் என்ன கொலை , கொள்ளையா இல்லை கடத்தல் சம்மந்தமாக ஏதாவது என்று நினைக்கிறயா...அதையும் வெளிப்படையாக சொல்லி விடு.”

“அய்யோ அப்படி எல்லாம் இல்லை.அதாவது இப்போ நீங்க பிள்டிங் கட்டுவதற்க்கு பிளான் ஒரு மாதிரி வரைந்து அனுமதி வாங்கிக் கொண்டு. அதற்க்கு எதிர் பதமாக கட்டுவது. இல்லை உங்கள் இடத்தில் உள்ள பக்கத்தில் இருக்கும் புரம்போக்கு நிலத்தையும் சேர்த்து கட்டுவது அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன்.” அவள் பேச பேச அவனுக்கு ஆச்சரியம் தாளமுடியவில்லை.

இருந்தும் அதை மறைத்து “எதை வைத்து அப்படி சொல்கிறாய்.”

“இல்லை பொதுவா எல்லா படத்திலும் அப்படி தான் காட்டுறாங்கா… அதை வைத்து தான் அப்படி சொன்னேன். தப்பா இருந்தா கோவிச்சீக்காதீங்க.”

“சேச்சே இல்லை கோவிச்சிக்கலே...ஆனால் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்.”

“நீங்க கோவிச்சுக்காதை பார்த்தா நான் சொன்னது உண்மை தான் போலவே...அப்படியா..?”

அவள் தலையை கொட்டி “உனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம்.இப்போ உனக்கு உன் அண்ணன் கல்யாணம் நடக்கணுமா வேண்டாமா…”

“அய்யோ நடக்கணும். நான் இனி மேல் இதை பற்றி ஒன்றும் பேச மாட்டேன். ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “

அவளை சந்தேகமாக பார்த்துக் கொண்டே “என்ன சந்தேகம்.”

“இல்லை என் அண்ணனுக்கு மட்டும் தான் கல்யாணம் நடப்பது போலவே பேசுறீங்களே...அதில் உங்கள் சகோதரியின் வாழ்க்கையும் அடக்கம் தானே…”

அவள் பேச்சில் தன் கையைய் இரு காதிலும் பிடித்துக் கொண்டே” தவறு தான் இப்போது என்னை இந்த டைரியை படிக்க விடுகிறாயா..இல்லையா…?”

அவன் தன் காதை பிடித்து பரினிதாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே ஸ்ரீதர் எதோ சந்தேகம் கேட்க அந்த இடத்திற்க்கு வந்தான்.வந்தவன் தன் பாஸின் செயலில் விக்கித்து நின்று விட்டார்.

இந்த எட்டு வருடத்தில் ஆஷிக் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவன் ஸ்ரீதர். பெரிய பெரிய பதவியில் இருப்பவர்களிடமே ஆஷிக் தலை வணங்கி போக மாட்டான். அப்படி பட்டவன் ஒரு சிறு பெண்ணின் முன் மண்டியிடுவது போல் நடந்து கொள்வது அவனுக்கு வியப்பு ஏற்பட்டது .

அதுவும் இல்லாமல் அந்த செயலுக்கு அவன் முகத்தில் தோன்றிய பாவம் இது வரை அவர் ஆஷிக்கின் முகத்தில் கண்டதே கிடையாது.கண்டிப்பாக அந்த பெண்ணிடம் ஏதோ இருக்கிறது என்று பரினிதாவை உற்று பார்த்தார்.

அழகு தான் ஆனால் இந்த பெண்ணை விட அழகான பெண்ணை வைத்து எல்லாம் ஆஷிக் விளம்பரம் செய்து இருக்கிறான். இவன் ஒரு கண் சாடை காட்டினால் போதும் அவர்கள் இவன் மடியில் வந்து வீழ்வதற்க்கு. ஆனால் ஆஷிக் எப்போதும் பெண்களிடம் கொஞ்சம் தள்ளியே தான் பேசுவான். அப்படி பட்டவன் இந்த பெண்ணிடன் மயங்கும் அளவுக்கு என்ன இருக்கிறது என்று அவளையே உற்று பார்க்கும் வேளையில் ஆஷிக்கும் ஸ்ரீதரை பார்த்து விட்டான்.

அதுவும் அப்போது ஸ்ரீதர் பரினிதாவையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவனிடம் கண்டன பார்வை ஒன்றை வீசியவாறே….”இப்போது நான் கூப்பிடாமல் நீ ஏன் வந்தாய்.” என்று கோபத்துடன் கேட்க அதற்க்கு ஸ்ரீதருக்கு பதில் பரினிதா தான் அஷிக்குக்கு பதில் அளித்தாள்.

“இது என்ன கேள்வி ஏதாவது வேலையாக இருக்கும். அதற்க்கு தான் வந்திருப்பார்.” என்று ஆஷிக்கிடம் பேசியவள்.

ஸ்ரீதரிடம் “ஆமாம் தானே “ என்று வினாவினாள்.

ஸ்ரீதருக்கு இபோது தான் உதறலாக இருந்தது இப்பெண் நமக்கு சப்போட் செய்யாமல் இருந்தாலே பரவாயில்லையாக இருக்கும் போல.தான் பரினிதாவை பார்த்ததால் தான் ஆஷிக் தன்னிடம் கோபம் காட்டினான் என்பதை ஸ்ரீதர் புரிந்துக் கொண்டான்.

ஆஷிக் கோபக்காரன் தான் .ஆனால் தேவை இல்லாமல் கோபப்பட மாட்டான்.அதுவும் இல்லாமல் தான் வேலையாக தான் எப்போதும் அவன் ரூமுக்கு வருவேன் என்று ஆஷிக்குக்கு நன்கு தெரியும். அப்படி இருக்கும் போது தன்னிடம் ஆஷிக் காட்டிய கோபத்துக்கு காரணம் பரினிதாவை தான் பார்த்தது தான் என்று தெரிந்துக் கொண்ட ஸ்ரீதர்.

தன் பேச்சை வேறு திசைக்கு மாற்ற எண்ணி “நான் வேலை இல்லாமல் வருவேனா சார்.அதுவும் நீங்கள் சிஸ்டருடன் பேசிக் கொண்டு இருக்கும் போது.” என்ற பேச்சுக்கு ஸ்ரீதர் எதிர் பார்த்த மாதிரி ஆஷிக்கின் கோபம் குறையாமல் அதிகம் தான் ஆகியது.

“யாருக்கு சிஸ்டர் “

ஆஷிக்கின் கோபத்துக்கு உண்டான காரணத்தை தெரிந்துக் கொண்ட ஸ்ரீதர் “அய்யோ சார் எனக்கு தான் சார் சிஸ்டர்” என்று ஒரு வித பதட்டத்துடன் கூறினான்.

அந்த பேச்சில் தன் கோபம் பாதி குறைந்தவனாக

“சரி என்ன விஷயம் “

“சார் அடையாருக்கு வந்த சிமெண்ட்டில் கலப்படம் இருப்பதாகவும் அதனால் வேறு இடத்தில் இனி சிமெண்ட் வாங்கலாம் என்று மேஸ்திரி சொல்கிறார் சார். ஆனால் நம் இன்ஜீனியர் அதெல்லாம் இல்லை. இதே இடத்தில் வாங்கலாம். எனக்கு தெரியாதது படிக்காத அந்த மேஸ்திரிக்கு எங்கு தெரிய போகிறது என்று சொல்கிறார் சார். இதில் யார் பேச்சை கேட்பது என்று தெரியவில்லை சார்.

அதுவும் இல்லாமல் சிமெண்ட் ஸ்டாக் இல்லை இப்போது ஆர்டர் கொடுக்க வேண்டும். அதனால் தான் நான் வந்தேன் சார்.” என்ற ஸ்ரீதரை ஒரு நிமிடம் தான் பார்த்தான்.

பின் “சிமெண்ட் வாங்கும் இடத்தை மாற்று. அதற்க்கு முன் அந்த இன்ஞீனியரை மாற்ற வேண்டும். அதனால் நாளை என்னை வந்து பார்க்க சொல். அவர் கணக்கை செட்டில் செய்துடலாம்.” என்று சொல்லி ஸ்ரீதரை அனுப்பி விட்டு பரினிதாவை பார்த்தான்.

பரினிதா வைத்த பார்வை மாற்றமல் ஆஷிக்கையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் முன் தன் கைய் அசைத்தும் அதன் பிரதிபலன் இல்லாமல் போகவே அவள் தோள் தொட்டு என்ன என்று வினாவினான்.

“இல்லை உங்கள் செயல் எல்லாம் அதிரடியாக இருக்கிறதே அது தான் யோசித்தேன். ஆமாம் நீங்கள் ஏன் இன்ஞீனியரை மாற்ற வேண்டும் என்று சொன்னீர்கள். ஏன் …? அந்த மேஸ்திரி பொய் சொல்லி இருக்கலாம் இல்லையா…?”

“இல்லை அந்த மேஸ்திரி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அவனுக்கு ஒரு ஆதாயமும் இல்லை.ஆனால் இந்த இன்ஞீனியருக்கு ஆதாயம் இருக்கு .ஏன் என்றால் இந்த இடத்தில் வாங்குங்கள் என்று ரெகமண் செய்ததே இந்த இன்ஞினியர் தான்.”

“ஒ இதில் இவ்வளவு விஷயம் இருக்கா. அப்போ பிஸ்னஸ் செய்வது ரொம்ப கஷ்டம் தான் போல.”

“உனக்கு இந்த கஷ்டமே வேண்டாம் பரினிதா. நீ எப்போதும் போல எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்றதற்க்கு

“அது எப்படி முடியும் .” என்ற அவள் கேள்வியில் .

“ஏன் முடியாது “ என்றதற்க்கு ஒரு நிமிடம் யோசித்தவள்.

என்ன நினைத்தாலோ “இப்போ இதெல்லாம் எதற்க்கு நீங்கள் அந்த டைரி படித்து கொடுத்து விட்டால் நான் போக வேண்டும். நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது.”

என்று சொன்னவள் கண் சிமிட்டி விட்டு நான் இங்கு வருவதற்க்கு முன் என் போனை சுச் ஆப் செய்து விட்டேன்.ஏன் என்றால் என் அண்ணன் போன் செய்தால் நாம் மாட்டிக் கொள்வோம் இல்லையா…?” என்று சொல்லி விட்டு குறும்புடன் சிரித்தாள்.

அவள் செயலையும் பேச்சையும் பார்த்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். இவள் புரிந்து தான் பேசுகிறாளா...இல்லை புரியாமல் பேசுகிறாளா...என்று அவள் முகத்தை பார்த்தான்.

பாவம் அந்த முகத்துக்கு கீழ் பாத்திரம் வைத்தால் எப்படியும் ஒரு படி பால் வந்து அந்த பாத்திரத்தில் கொட்டும். அப்படி வைத்துக் கொண்டு இருந்தாள் அவள் முகத்தை.

அவள் முகத்தை பார்த்தவன் சேச்சே இந்த முகம் சூது வாது அறியாதது என்று நினைத்தான். ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே தன் எண்ணத்தை மாற்ற போவது அறியாமல்.

பின் சரி இனி நேரத்தை கடத்த கூடாது என்று எண்ணினான்.ஆம் இது வரை அவளிடம் நேரம் செலவிட எண்ணியே அவன் அந்த டைரியை பிரித்து படிக்காமல் காலம் கடத்திக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு நன்கு தெரிந்து விட்டது சித்தார்த்தின் செயலுக்கு நியாயமான காரணம் கண்டிப்பாக இருக்கும் என்று. ஏன் என்றால் சித்தார்த்தின் தாத்தாவை பற்றி படித்து இவர் போல் இருக்க முடியுமா...அதுவும் இந்த காலத்தில் என்று நினைத்தவன்.

அப்படி பட்டவரின் வழிகாட்டுதலில் வளர்ந்தவனால் கண்டிப்பாக ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றமுடியாது. அதுவும் இல்லாமல் சித்தார்த் ஆருண்யாவுக்கு பிடித்த மாப்பிள்ளையாக இருக்கும் பட்சத்தில் அவனையே தான் அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தான். அதுவும் இல்லாமல் சித்தார்தை போல் மாப்பிள்ளை கிடைக்க கண்டிப்பாக கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அதனால் தான் சந்தோஷ மனநிலையில் இருந்த ஆஷிக் பரினிதாவுடன் நேரம் செலவிட எண்ணினான். இப்போது பரினிதா சொல்லி தான் நேரம் அதிகமாகி விட்டது என்றும்,பரினிதாவும் காலத்தில் வீடு போகவேண்டும் என்று கருதியும் டைரியை படிக்க ஆராம்பித்தான்.

அவன் அதனை பிரித்ததும் எதிர் சேரில் அமர்ந்து இருந்த பரினிதா அவனை ஒட்டிய வாக்கில் வந்து நின்றுக் கொண்டு அவனுடன் சேர்ந்து தானும் படிக்க நினைத்தாள்.பிரித்தவன் அவள் அருகாமையில் எதனையும் படிக்க தோன்றாமல் அப்படி அமர்ந்து இருந்தான்.

பரினிதா அந்த பக்கத்தை படித்தவள் அவன் திருப்பாமல் இருக்கவும் “என்ன திருப்பவில்லை.இன்னுமா நீங்கள் இந்த பக்கத்தை படித்து முடிக்க வில்லை. படிப்பில் நீங்கள் எனக்கும் மேலே இருப்பீங்க போலவே…”என்ற அவள் பேச்சில் திரும்பவும் நேரம் சென்றுக் கொண்டு இருப்பதை அறிந்தவன்.

“நீ தான் படித்து விட்டாயே…திரும்பவும் ஏன் படிக்கிறாய். போய் எதில் இருக்கையைய் காண்பித்து உட்கார்.நான் படிக்கிறேன்.” என்றதற்க்கு

“எனக்கு காலேஜ் புக் படிக்க தான் பிடிக்காது. ஆனால் அது என்னவோ தெரியவில்லை என் அண்ணனின் டைரி படிக்க படிக்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. நான் என்னவோ என் அண்ணவை கடமை தவறாமல் இருக்கும் அம்பி என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இந்த டைரி படித்ததில் இருந்து தான் தெரிந்தது. என் அண்ணன் அம்பி கிடையாது. ரேமோ என.” என் சொல்லி விட்டு ஆஷிக்கை பார்க்க.

ஆஷிக் இப்போது அவளையே முறைத்துக் கொண்டு “இப்போது நான் படிக்கனுமா… வேண்டாமா ...சொல்.” என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு நல்ல பெண்ணாக அவன் சொன்னது போல் எதிர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

இப்போது ஆஷிக் சில பக்கத்தை விட்டு விட்டு படித்துக் கொண்டு இருந்தான். முதலில் அவன் டைரியில் படிப்பு தாத்தவை பற்றியே அதிகம் இடம் பெற்று இருந்தது. பின் ஆருண்யாவை பற்றி படிக்க படிக்க சித்தார்த் எவ்வளவு டீப்பாக ஆருண்யாவை விரும்பி இருக்கிறான் என்று அந்த டைரி மூலம் தெரிந்துக் கொண்டான்.

பின் கடைசி சில பக்கத்தை படிக்க படிக்க அவனுக்குமே சித்தார்த்தின் நிலமை நன்கு விளங்கியது.அதுவும் தாய், தந்தை, தாத்தா இறந்த அன்றே தன் தங்கையின் இந்த நிலைமை தெரிய வந்தால் ஒரு அண்ணனாக அவன் எடுத்த முடிவு சரியே என்று யோசிக்க வைத்தாலும், ஆருண்யாவின் உடன் பிறப்பாய் யோசிக்கும் போது வருத்தமாக தான் இருந்தது.

அதுவும் அந்த தேதி பார்க்கும் போது அப்போது தான் தன் மாமாவினாலும் அவள் பாதிக்கபட்டாள். அப்படி இருக்கும் போது அப்போது அவளுக்கு மனதுக்கு ஆறுதலாக இருக்காமல் தன் தங்கைக்காக தன் சகோதரியைய் கைய் கழுவியது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது இருந்தும் இது கோபப்படும் சமயம் அல்ல.

அதுவும் இல்லாமல் காதல் முறிவை சித்தார்த் தான் எடுத்து உள்ளான் அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது ஆருண்யாவே சித்தார்த்தை திருமணம் செய்ய சம்மதிக்க வைப்பதற்க்கு நாம் மிக கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

இவள் மற்றவரையும் கண்டிப்பாக மணமுடிக்க மாட்டாள். அதனால் நாம் தான் எப்படியாவது ஆருண்யாவிடம் பேசி சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைத்திட வேண்டும். அப்படி இருக்கும் போது நாமே சித்தார்த் மேல் கோபப்பட்டால் ஆருண்யாவின் கோபம் இன்னும் அதிகமாகும் என்று கருதியே இது கோபப்படும் சமயம் அல்ல.

சிந்தித்து செயல்பட வேண்டும் என்று நினைத்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டே படித்து முடித்து டைரியைய் மூடும் போது பரினிதா எழுந்துக் கொண்டே அந்த டைரியைய் வாங்க கைய் நீட்டினாள்.

அவன் கொடுக்காமல் தன் மேஜை டிராயரில் போட்டு மூடிக் கொண்டான். அதனை பார்த்த பரினிதா “அது எங்க அண்ணா டைரி கொடுங்க” என்று கேட்டதற்க்கு

“ஏன் கதை புக் மாதிரி பொழுது போக்குக்கு படிக்க போகிறாயா…?”

“இல்லை அதை எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டே வந்தவள்.

“அய்யோ இது நான் பொள்ளாச்சி கெஸ்ட் அவுஸ்சிலிருந்து எடுத்துட்டு வந்தேனே ...இப்போ நான் இதை எப்படி எடுத்துட்டு போய் வைக்கிறது.” என்று அவனிடமே கேட்டு விட்டு.

அவளே… “ஒன்று செய்யலாமா….எங்க அண்ணா வருவதற்க்கு எப்படியும் நாளை மதியமாகி விடும்.இன்று இரவு என் வீட்டு கிட்ட நீங்க கார் எடுத்துட்டு வந்துடுங்க. நான் ரெடியா இருக்கேன். இதை வைச்சிட்டு திறும்பவும் நாம் வந்திடலாம். எப்படி என் ஐய்டியா..?”

அவன் தலையில் கொட்டி விட்டு “ இனி இது போல் பைத்தியகார தனமெல்லாம் பண்ணாதே…என்னை பத்தி உனக்கு என்ன தெரியும். தைரியாமா எங்கூட இரவு வர என்று சொல்கிறாய்.

இப்போது இந்த டைரி நீ படித்தது உன் அண்ணனுக்கு தெரிந்தால் தப்பே இல்லை.அதனால் தான் நான் ஆருண்யாவை கண்டுபிடித்தேன் என்று சொல்லிடு பின் என்ன சொல்லி நீ உன் அண்ணன் திருமணத்தை நடத்தி வைப்பே சொல்.”

என்று அவன் சொல்ல சொல்ல “ஆமாம் இல்லை. நான் படித்து நான் தான் ஆருண்யாவை கண்டு பிடித்தேன் என்று சொன்னா அண்ணா என்னை திட்ட மாட்டார்கள் இல்லை.” என்று சொல்லி மகிழ்ந்து போனாள்.

“ஆமாம் நீ எப்படி என்னை கண்டு பிடித்தாய்.நானே கேட்கனும் என்று நினைத்தேன்.” என்று கேட்டதற்க்கு.

தான் கண்டு பிடித்த விதத்தை மிக பெருமையாக விவரித்து சொன்னாள். அதை கேட்ட ஆஷிக் நிஜமாகவே வியந்து தான் போனாள்.இவளின் செயல் சில சமயம் சிறு குழந்தை போலவும், சில சமயம் பக்குவமான பெண் போலவும் இருக்கிறாளே…என்று நினைத்துக் கொன்டே அவளிடம் .

“வா போகலாம். உனக்கு டைம் ஆகவில்லையா…?” என்று கேட்டதற்க்கு.

“ஆமாம் டைமாகுது.அதுவும் என் அண்ணன் கேர் டேக்கர் கிட்ட போன் செய்து கேட்டால் அவ்வளவு தான்.அவர் போகும் போதே...எங்கேயும் போகதே...என்று சொல்லிட்டு தான் போனார்.

அதுவும் இல்லாமல் என் அண்ணாவாவது பரவாயில்லை.என் பாட்டிம்மா போன் செய்தால் அவ்வளவு தான் நான் மாட்டினேன்.” என்று அவள் பயத்துடன் பேசியதை கேட்டு.

“உனக்கு பாட்டின்னா அவ்வளவு பயமா..”

“பின்னே அவங்க ஒரு லேடி பின்லேடன் தெரியுமா…?”

“அவங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்கம்மாட்டியா…? அவங்க எவ்வளவு திறமையா அவங்க பிஸ்னஸை ரன் பண்றாங்க. அவங்களை பாராட்டாமல் கிண்டல் செய்கிறாயா…?”

“ஆமா அவங்க பிஸ்னஸ் ரன் செய்வது உங்களுக்கு எப்படி தெரியும்….”

அவள் கேட்டவுடன் என்ன சொல்வது என்று சிறிது நேரம் தெரியவில்லை.அவன் அவள் அண்ணனை பற்றியும், அவன் குடும்பவிவரமும்,விசாரித்தயும்,அதுவும் உன்னை தூக்க தான் என்ற உண்மையையா சொல்ல முடியும்.
 
Top