Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 14 1

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---14

இவன் இப்படி எண்ணமிடும் போதே பரினிதா ஏதோ பேச ஆராம்பித்ததை தடுத்து நிறுத்தினான். இனி இவள் பேசுவதை நாம் பொறுமையுடம் கேட்டு இருக்க முடியாது. கண்டிப்பாக இவள் இப்படியே பேசிக் கொண்டு இருந்தால் நம் கோபம் எல்லை கடந்தாலும் கடந்து விடும்.

அதனை இவளிடம் தான் நான் காமிப்பேன். இவள் கண்டிப்பாக அதனை தாங்க மாட்டாள். பின் நம்மிடம் இப்படி பேசுவதை தவிர்த்து விடுவாள் என்று நினைத்து அவள் பேசுவதை தடுத்து நிறுத்தி அவன்ச் பேசினான்.

“இதோ பார் ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள். நீ உன் அண்ணன் பேச்சை கேட்பாயோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் சிஸ்டர் கண்டிப்பாக என் பேச்சை கேட்பாள்.” என்று அவன் பேச்சை தொடர விடாமல்.

“இப்போ இதை ஏன் என் கிட்ட சொல்றீங்க. அது என்ன வார்த்தை நான் என் அண்ணன் பேச்சை கேட்பேனா… இல்லையா… என்பதில் சந்தேகம் உங்களுக்கு. உங்க சிஸ்டர் மட்டும் இல்லை நானும் என் அன்ணன் பேச்சை கேட்டு தான் நடப்பேன்.” என பேசிக் கொண்டு இருந்தவளை கைய் சாடையில் தடுத்து .

“அண்ணன் பேச்சை கேட்பவள் எப்படி அவருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடியும்.”

“எப்படி என்று உங்களுக்கு தெரியாதா… நானே என் அண்ணாவுக்கா தான் பிடிக்க வில்லை என்றாலும் கல்யாணம் செய்ய முடிவு எடுத்தேன். அது தெரிந்தும் இப்படி பேசுறீங்களே…?” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே அவள் கண்ணில் கண்ணீர் முட்ட அதை துடைத்துக் கொண்டே பேச நினைத்து பேசமுடியாமல் முகத்தை மூடிக் கொண்டு அழுகையை என்ன கட்டு படுத்த நினைத்தும் முடியாமல் அழளானாள்.

இவ்வளவு நேரம் துடுக்குதனத்துடனும், குழந்தைதனத்துடனும் பேசிக் கொண்டு இருந்தவள் இப்படி அழவும் ஆஷிக்கால் தாளமுடியாமல் அவள் முகத்தை தன் மார்பில் புதைத்துக் கொண்டு சமாதனப்படுத்தினான்.

அந்த செயலில் அவன் மனதில் எந்த விதகல்மிஷமும் இல்லை. ஒரு குழந்தை அழுதால் எப்படி அக்குழந்தையை நாம் சமாதானப்படுத்துவோமோ அந்த மனநிலையில் தான் ஆஷிக் இருந்தான்.

பரினிதாவும் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் இன்னும் சொல்ல போனால் இன்னும் அவன் மார்பில் தன் முகத்தை அழுந்த புதைத்துக் கொண்டு தன் அழுகையைய் கட்டுப்படுத்தினாள்.

ஆஷிக் அவள் தலைமுடியை தடவ தடவ அவள் மனமும் கொஞ்சம் ஆறுதல் பெற்று அவள் அழுகை கட்டுக்குள் வந்தது.பின் அழுகை முற்றிலும் நின்றதும் தன் முகத்தை அவன் சட்டையிலேயே நன்கு துடைத்துக் கொண்டு பின் தன் முகத்தை அவன் மார்பிலிருந்து எடுத்து சரியாக அமர்ந்துக் கொண்டு.

“என்ன என்னை என் வீட்டில் விடுகிறதா...எண்ணமே இல்லையா…?” என்ற அவள் கேள்வியில் புன்னகையிடன் அவளை பார்த்திருந்தான்.

அவள் அழுகை நின்றதுமே தன் முகத்தை எடுத்து விட்டு தன் செயலுக்கு கொஞ்சமாவது வெட்கப்படுவாள் என்று நினைத்திருந்தான். ஆனால் அழுகை நின்றதும் தன் சட்டையையே அவள் கட்சீப்பாக பயன் படுத்துவாள் என்று அவன் கொஞ்சமும் எதிர் பார்க்க வில்லை.

அதுவும் இல்லாமல் முகத்தை எடுத்ததும் எதுவும் நடவாது போல் சதாரணமாக அவள் பேசியதை நினைத்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.அவன் வண்டியை எடுக்காமல் தன்னை பார்த்து சிரிப்பதை பார்த்த பரினிதா

“இப்போ சிரிப்பு என்ன வேண்டியிருக்கு இப்போ காரை எடுக்கிறீங்களா… இல்லை நான் ஆட்டோ பிடித்து செல்லட்டுமா…?” என்று கேட்டதற்க்கு

“காரை எடுப்பது இருக்கட்டும் தன் சட்டையை காண்பித்து இது இப்படி அழுக்கு செய்து இருக்கிறாயே இப்படியே நான் எப்படி போவது.”

அவன் சட்டையில் உள்ள கண்ணீர் கரையை பார்த்தவள் பின் அவன் முகத்தை பார்த்து “இப்போ வீட்டுக்கு தானே போக போறீங்க. என்னவோ பெண் பார்க்க போவது போல் இப்படி அலட்டி கொள்கிறீங்க. வீட்டுக்கு சென்றதும் எப்படியோ ஒரு இத்து போன ஷாட்ஸை தான் மாட்டிக்கிட்டு அலைய போறீங்க.

அதற்க்கு இப்படியே போன ஒன்றும் குறைந்து விடாது. அதுவும் இல்லாமல் ஆருண்யா அண்ணியின் சகோதரன் என்ற முறையில் எப்படியோ எங்கள் வீட்டில் சம்மந்தி வீட்டுக்கு என்று உங்களுக்கு துணி எடுத்து கொடுப்பார்கள். அப்போ நான் ஒன்று கூடுதலாக எடுத்து கொடுத்து விடுகிறேன்.” என்று கூறிவிட்டு திரும்பவும் காரை எடுக்க சொன்னதற்க்கு

காரை எடுக்காமல் “விளையாட்டு எல்லாம் போதும் பரினிதா உனக்கும் லேட் ஆகிறது.எனக்கும் லேட் ஆகிறது.

அவள் ஏதோ பேச வந்ததை தடுத்து நீ எதுவும் பேசதே...நீ எதோ சொன்னீயே நான் டெல்லியில் இருந்து வருவதற்க்குள் திருமணம் முடித்து விடுவேன் என்று . அப்படி மட்டும் செய்து வைத்தாய் என்றால் உன் அண்ணன் கூட ஆருண்யாவுக்கு திருமனம் செய்யமாட்டேன். அதுவும் இல்லாமல் ஆருன்யாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து விடுவேன்.”

அவன் பேச பேச நம்ம திருமணம் செய்து கிட்டா இவனுக்கு என்ன வந்தது என்று நினைத்தவள் அதை கேட்கவும் செய்தாள். அவள் கேட்டவுடன் ஒரு ஆழ்ந்த பார்வையுடன் அவளை பார்த்தவன்.

பின் தன் பார்வையை மாற்றிக் கொண்டு “என் அம்மா மாப்பிள்ளையோட தங்கை இப்படி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டால் அவர்கள் வீட்டில் பெண் கொடுப்பதற்க்கு தயங்குவார்கள்.

அதுவும் இல்லாமல் நீ உன் அண்ணனுக்காக திருமணம் போன்ற பெரிய விஷயத்தை இப்படி முடிவு எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.இத்தோடு பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது.

ஆனால் அதை நான் ஆருண்யாவுக்கும் உன் அண்ணனுக்கும் திருமணம் முடிந்தவுடன் சொல்கிறேன்.இதோ பார் நான் விளையாட்டுக்கு சொல்ல வில்லை.நான் டெல்லி சென்று வருவதற்க்குள் நீ ஏட கூடமாக ஏதாவது செய்து வைத்திருந்தால் அவ்வளவு தான்.” என்று தன் பேச்சி முடிந்தது என்ற வகையில் காரை எடுத்தான்.

பின் அவள் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு “என் அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால்..?”

“அது பற்றி உனக்கு கவலை தேவை இல்லை. இனி மேல் இது என் பொறுப்பு அதனால் இந்த விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலை படமால் நிம்மதியாக இரு.” என்றதற்க்கு

“என் அண்ணா ஒத்துக் கொள்ளவில்லை என்றால்.”

“அது எப்படி ஒத்துக் கொள்ளமால் இருக்கிறான் என்று பார்க்கிறேன். முதலில் என் தங்கையை விட்டு பிரிந்ததற்க்குக்காவது காரணம் இருந்தது. அப்போது நீ மிகவும் சிறிய பெண். அதனால் உன்னை பொறுப்பாக வளர்க்க தன் காதலை தியாகம் செய்தான் என்று சொல்லலாம்.

இன்னும் சொல்ல போனால் என் சகோதரியை விட்டு பிரிந்ததுக்கு சொன்ன காரணத்தை அவன் சரியாக கூட நிறைவேத்த வில்லை. உன்னை அவனா வளர்த்தான். ஆஸ்ட்டலில் சேர்த்து விட்டு அவன் பாட்டுக்கு அவன் படிக்க சென்று விட்டான்.

அவள் கையைய் பிடித்து பார் எங்காவது இதில் சதை இருக்கிறதா…? என்று.இருபது வயது பெண் போலவா இருக்கிறாய். தன் கார் முன் உள்ள கண்ணாடியை பார்க்க சொல்லி விட்டு பார்க்க பதினெழு பதினெட்டு வயது மாதிரி தான் தெரிகிறது.” அவன் மேலே எதோ சொல்ல வர அதை தடுத்த பரினிதா.

“போதும் என் அண்ணாவை திட்டியது. என்ன என் அண்ணாவை அவன் இவன் என்று திட்டுறீங்க. என் அண்ணன் இந்த சென்னை கலெக்டர். அது முதலில் நியாபகத்தில் வைச்சிக்கோங்க.” என்று சொன்னவளை.

ஒ அம்மணிக்கு அவங்க அண்ணாவை பத்தி சொன்னா மூக்கு மேலே கோபம் வருகிறதோ….என்று நினைத்துக் கொண்டே “ நான் உன் அண்ணனை கலெக்டர் என்ற முறையில் திட்ட வில்லை. என் வருங்கால மச்சான் என்ற முறையில் தான் திட்டினேன்.”

“ஒ உங்க வீட்டில் வீட்டு மாப்பிள்ளைக்கு இப்படி தான் மரியாதை கொடுப்பிங்களோ…எங்க ஊரில் எல்லாம் வீட்டு மாப்பிள்ளைக்கு எப்படி மரியாதை கொடுப்பாங்க தெரியுங்களா…?”

“இது வரை தெரியாது பரினிதா” என்று சொல்லிக் கொண்டே அவளை பக்கவாட்டில் திரும்பி பார்த்தான்.

அவள் அவனை பார்க்காமல் “அப்போ இனிமேலாவது தெரிஞ்சுக்குங்க.”

“கண்டிப்பா பரினிதா.நீ சொல்லி விட்டால் அப்புறம் அதற்க்கு மறுப்பு ஏது.”

அவன் தான் சொன்னதை கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்து போய் “அப்போ நான் என்ன சொன்னாலும் கேட்பீங்களா…?”

சிறிது யோசித்த ஆஷிக் “ எனக்கு பாதகம் இல்லாத விஷயம் என்றால் கண்டிப்பாக நீ சொன்னதை நான் கேட்கிறேன்.”

அவன் சொன்னதற்க்கு “உங்களுக்கு பாதகமாக நான் என்ன சொல்ல போகிறேன்.” என்று சொல்லி விட்டு அவளை பார்த்து சிரித்தாள்.

அந்த சிரிப்பில் ஆஷிக் கொஞ்சம் தடுமாறி தான் போனான். இது வரை பேசிக் கொண்டு வந்ததில் அவன் மனதில் எந்த தடுமாற்றம் எதுவும் இல்லை.அதுவும் அவள் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொன்னதில் இருந்து பயந்து போய் இவள் ஏதாவது செய்து வைத்திட போகிறாள் என்ற பயத்தில் அதை செய்யக்கூடாது என்று அவளுக்கு புரியவைப்பதிலேயே அவன் மொத்த கவனமும் இருந்ததால் வேறு எந்த எண்ணமும் இல்லாமல் பேசிக் கொண்டு இருந்தான்.

இப்போது அவள் அப்படி செய்ய மாட்டாள் என்ற தெளிவு வந்ததும்.தன் கவனம் வேறு திசையில் செல்பதை அவனே உணர்ந்தான். அவள் சிரிப்பு பார்ப்பதற்க்கு நன்றாக இருந்தும் ஏதோ குறைவது போல் அவனுக்கு தோன்றியது.

பின் அவன் அவளை உத்து பார்த்த போது தான் தெரிந்தது அவள் முகத்தில் கன்னம் கொஞ்சம் ஒட்டினால் போன்று உள்ளதை. இதே கொஞ்சம் பூசினால் போன்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்த ஆஷிக் காரை ஒட்டிக் கொண்டே தன் இடது கரத்தால் அவள் கன்னத்தை தொட்டு

“பரினிதா இங்கு சதை போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் இருந்து கைய் எடுக்காமலேயே இருந்தான்.

அவன் கன்னம் தொட்டதுமே பரினிதாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அது என்ன மாதிரி என்று தான் அவளுக்கு புரியவில்லை. இருந்தும் இதற்க்கு முன் தனக்கு இப்படி நேர்ந்தது இல்லை என்பதை மட்டும் அவள் புரிந்துக் கொண்டாள்.

மேலும் பெண்களுக்கே உண்டான ஒரு எச்சரிகை உணர்வும் சேர்ந்துக் கொள்ள அவன் தன் கன்னத்தில் இருந்து கைய் எடுக்காமல் இருப்பதை பார்த்து இவளே அவன் கையைய் தட்டி விட்டாள்.
 
லூசாயிருந்தாலும் நம்ம பரினிதா
புள்ளை விவரம்தான்
தன் கன்னம் தொட்ட ஆஷிக்கின்
கையைத் தட்டி விட்டுட்டாளே
 
Last edited:
Top