Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 18

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---18

அன்று ஞாயிறு என்பதால் சித்தார்த் லேட்டாக தான் எழுந்தான். எழுந்தவுடன் கல்யாணம் பற்றி பேச பொள்ளாச்சிக்கு நாம் மட்டும் போவோமா...இல்லை பரினிதாவையும் அழைச்சிட்டு போவோமா என்று யோசிக்கும்

வேளையில் கதவு தட்டும் ஒசையில் சமையல்காரம்மா தான் என்று நினைத்து வரலாம். என்று சொல்லி டவளை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு குளிக்க பாத் ரூம் செல்ல திரும்ப நினைக்கும் போது அவன் மற்றொறு தோளில் விழுந்த கையின் ஸ்பரிசத்தில் சட்டென்று அந்த கையைய் பக்க வாட்டில் பார்க்கும் போதே தெரிந்து விட்டது.

அந்த கையின் சொந்தகாரர் பாட்டிம்மா என்று. பாட்டிம்மாவை பார்த்தது சந்தோஷத்தை அளித்தாலும் சொல்லாமல் வந்து இருப்பது யோசனையை வரவழைத்தது. ஏன் வந்து இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே அவர் முகத்தை பார்த்தான்.

சித்தார்த் தான் வந்து அழைக்காது தன்னையே பார்த்திருப்பதை பார்த்த வரலட்சுமி “ஏன்ன சித்தார்த் கல்யாணம் முடிந்து என்னை பார்க்கலாம் என்று நீ நினைத்திருந்தாயா….அது தான் என்னை பார்த்ததும் ஷாக் அடித்தது போலாகி விட்டதா…” என்று கேட்டதிலிருந்தே பாட்டிம்மா அனைத்தும் தெரிந்து தான் வந்து இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்டான்.

இது யார் வேலையைய் இருக்கும் என்பதனையும் புரிந்துக் கொண்டு , பரினிதாவை இவள் இப்போது எல்லாம் பெரிய பெரிய வேலையெல்லாம் பார்க்க ஆராம்பித்து விட்டாள். என்று மனதில் அவளை பற்றி நினைத்துக் கொண்டே பாட்டிம்மாவிடம்.

“என்ன பாட்டி இப்படி சொல்றீங்க. எனக்கே இது பற்றி நேற்று இரவு தான் தெரியும். காலையில் உங்களை பார்க்க தான் பொள்ளாச்சிக்கு கிளம்பலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் பாட்டிம்மா. அதற்க்குள் நீங்களே வந்து விட்டீர்கள்.”

“ என்ன நேற்று இரவு தான் தெரியும். எதற்க்கு என்னை பார்க்க கிளம்பினாய் என்று விளக்கமாக சொல்கிறாயா.” என்ற கேள்வியிலேயே பாட்டிம்மாவின் கோபம் இது அல்ல என்று தெரிந்தக் கொண்ட சித்தார்த் பாட்டிம்மாவிடம்.

“எட்டு வருடம் முன் நாம் இருந்த நிலையில் நான் வேறு என்ன முடிவு எடுக்க முடியும் பாட்டிம்மா...அதுவும் பரினிதாவை அப்படி பார்த்து விட்டு நான் வேறு எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் கூட இல்லை. அதுவும் இல்லாமல் இந்த முடிவு அவள் நல்லதுக்காவும் தான் எடுத்தேன் பாட்டிம்மா…”

“எது நல்லது என்று நீ முடிவு செய்யக் கூடாது சித்தார்த். முதலில் படிக்கும் வயதில் காதலித்ததே தப்பு. அதை விட பெரிய தப்பு அவளை கைவிட நினைத்தது. அவளிடம் நீ அனைத்தையும் சொல்லி இருக்க வேண்டும்.”

“பாட்டிம்மா நான் அவளிடம் நம் நிலையை சொல்லி இருந்தால் கண்டிப்பாக காத்திருப்பதாக தான் சொல்வாள்.அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் பாட்டிம்மா.எனக்கு நன்கு தெரியும்.பரினிதா படிப்பு முடிந்து அவளுக்கு கல்யாணம் செய்து வைத்து முடிப்பதற்க்குள் எனக்கு முப்பது வயதாகி விடும் என்று.

ஆண் எனக்கு பரவாயில்லை.ஆனால் ஒரு பெண்ணுக்கு முப்பது வயது வரை கல்யாணம் ஆகவில்லை என்றால் அவர்கள் வீட்டில் எப்படி ஒத்துக் கொள்வார்கள். அதுவும் இல்லாமல் என்னிடன் அவள் கேட்டதே படிப்பு முடிந்ததும் உடனே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று தான்.

நான் எப்படி அவள் எனக்காக பத்து வருடம் காத்திருப்பதை ஏற்க முடியும். அதனால் தான் நான் எதையும் சொல்லாமல் அந்தஸ்த்து காரணம் காட்டினால் என்னை வெறுத்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாள் என்று நினைத்து அப்படி கூறினேன் பாட்டிம்மா.”

“இப்போது என்ன ஆச்சி அவள் திருமணம் செய்துக் கொண்டாளா…சித்தார்த் ?”

“அது தான் பாட்டிம்மா எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவள் எட்டு வருடமாக திருமணமே செய்யாமல் இருப்பாள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை பாட்டிம்மா…”

“நினைத்து பார்த்து இருக்க வேண்டும் சித்தார்த். அப்போ எதை பார்த்து அவளை விரும்பினாய். சொல் எதை பார்த்து அவளை விரும்பினாய். ஒருவன் உண்மையாக விரும்பி இருந்தால் கண்டிப்பாக அவளை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பான். நாம் மறுத்தாலும் அவள் வேறு ஒருவனை மணக்க மாட்டாள் என்று நீ அவளை பற்றி தெரிந்து வைத்திருந்தால்.

அவளிடம் அனைத்தையும் சொல்லி இருப்பாய். கண்டிப்பாக நீ சொன்ன மாதிரி உனக்காக கல்யாணம் செய்யாமல் காத்துக் கொண்டு தான் இருப்பாள். ஆனால் இப்போது இருப்பதை போல் மனவருத்தத்தில் இல்லை, சந்தோஷத்தில்.”

பாட்டிம்மா பேச பேச தான் அவனின் தவறு புரிந்தது. ஆம் அவள் எப்படி பட்டவள் என்று அவனுக்கே தெரியுமே. முதலிம் தன்னிடம் பேச தயங்கியது பின் தன் மேல் உயிராய் இருந்தது.

என்று ஒவ்வொன்றாக நினைக்க நினைக்க அவனின் தவறின் அளவு பெரியதாக தோன்றியது. பாட்டிம்மா சொன்ன மாதிரி நாம் அவளிடம் அனைத்தும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். நாமும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்பட வைத்து விட்டோமோ...என்று வருந்தி பாட்டிம்மாவையே கவலையுடன் பார்த்தான்.

தன் பேரன் தன் தவறை உணர்ந்து விட்டான் என்று அவன் முகத்தை வைத்தே தெரிந்துக் கொண்ட பாட்டிம்மா “சரி விடு சித்தார்த். நடந்தது பற்றி பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்லை. இனி நடப்பதை பார்ப்போம். இப்போது அந்த தம்பி டெல்லிக்கு கிளம்பி இருப்பாரா சித்தார்த்.” என்று கேட்டதர்க்கு.

“தெரியவில்லையே பாட்டிம்மா. என்னிடம் நேற்று இன்று போவதாக சொன்னார். ஆனால் காலையா, மாலையா, என்று சொல்ல வில்லை பாட்டிம்மா.” என்று சொன்னதற்க்கு .

“சரி போன் போட்டு கேளு.” என்றதற்க்கு எந்த பதிலும் சித்தார்த்திடம் இல்லாமல் போக பாட்டிம்மா.

“என்ன சித்தார் போன் செய் என்று தானே சொன்னேன்.”

“சித்தார்த் தயக்கத்துடன் “என்னிடம் ஆஷிக்கின் நம்பர் இல்லை பாட்டிம்மா.” என்ற பேரனை முறைத்து விட்டு.

“உன் மூளையை படிக்க மட்டும் தான் உபயோகிப்பாயா…? வேறு எதற்க்கும் அதை உபயோகிக்கவே மாட்டாயா…? என்று பாட்டிம்மா கேட்கும் சமயம் அங்கு வந்த பரினிதா. தன் மனதுக்குள் இப்போது என்னிடம் ஆஷிக் நம்பர் இருக்கிறது.

ஆனால் சொன்னால் இந்த பாட்டிம்மா அதற்க்கும் என்னை தான் திட்டுவார்கள் என்று நினைத்துக் கொண்டே சொல்லலாமா வேண்டாமா என்று தன் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தாள்.

தங்கள் இருவரையும் திருட்டு முழி முழித்து பார்த்துக் கொண்டு இருந்த பரினிதாவை பார்த்த பாட்டிம்மா “இப்போ எதற்க்கு இந்த முழி முழித்துக் கொண்டு இருக்கே. என்ன செய்து வைத்திருக்கிறாய்.” என்ற பேச்சில் நாம் சொல்ல வேண்டாம் என்று தன் பட்டி மன்றத்துக்கு தீர்ப்பை வழங்கி ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டு இருந்த பாட்டிம்மாவை பார்த்து சித்தார்த்.

“என்ன பாட்டிம்மா குட்டிம்மாவையே பார்க்கிறீங்க.”

“இல்லை நாம் இவளை சின்ன பெண் என்று நினைத்துக் கொண்டு இருந்தா...என்ன பெரிய வேலை எல்லாம் பார்த்து இருக்கா. அதை தான் நினைச்சிட்டு இருக்கேன். உனக்கும் ஆருண்யாவுக்கும் திருமணம் முடித்தவுடன் இவளுக்கும் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து விட்டால் என் கடமை முடிஞ்சுடும் சித்தார்த்.

முதல் மாதிரி இப்போ என் உடம்பு இல்லை. அதே மாதிரி தான் தொழிலிலும் பிரச்சினை தான். இப்போ நான் பிஸினஸ் பேசுறவங்க எல்லாம் சின்ன வயசு பசங்களா.. தான் இருக்காங்க.

அவங்க பேச்சும் பிடிக்கலே...அவங்க நடந்துக்கிறதும் பிடிக்கலே.. உனக்கு இந்த தொழிலில் எல்லாம் பிடிப்பு இல்லை என்று எனக்கு தெரியும். அது தான் பரினிதாவை நம் ஊரிலேயே ஒருத்தவங்க கேட்கிறாங்க.

வசதி அப்படி பெரிசா இல்லான்னாலும். அந்த குடும்பத்தை பற்றி எனக்கு நல்லா தெரியும். அதுவும் இல்லாமல் அந்த குடும்பம் உங்க தாத்தா மேல் ரொம்ப மரியாதை வைச்சிட்டு இருக்காங்க.அதனால் நம்ம வீட்டு பெண்ணை நல்லா பார்த்துப்பாங்க.

அதுவும் இல்லாமல் நம் தொழிலையும் அந்த பையன் பார்த்துப்பான்.நம் பரினிதாவும் அந்த ஊரில் என் கூடவே இருக்கலாம் இல்லையா…? அது தான்.”

பாட்டிம்மா சொல்வது அனைத்தும் சரியே என்று சித்தார்த்துக்கு தோன்றினாலும் என்னவோ அவன் மனது இதற்க்கு உடன் பட மறுத்தது.அது என்ன என்று தெரியாத காரணத்தால் எதுவும் சொல்லாமல்.

“நீங்கள் அவர்களிடம் சரி என்று சொல்லி விட்டிர்களா...பாட்டிம்மா?”

“இல்லேப்பா என்ன இருந்தாலும் அண்ணன் காரன் உங்கிட்ட கேட்காமல் நான் எப்படி சொல்வேன். என்ன சித்தார்த் என்ன விஷயம் உனக்கு இந்த இடம் பிடிக்க வில்லையா . எது என்றாலும் சொல்லுப்பா…”

“அதெல்லாம் ஒன்றும் இல்லே பாட்டிம்மா. பரினிதா சின்ன பெண்ணாய் இருக்கிறாள். அதுவும் இல்லாமல் இன்னும் படிப்பு முடியலே. இந்த காலத்தில் பெண்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் பாட்டிம்மா...அதை நான் வெளியில் எல்லோரிடமும் சொல்றேன்.

ஆனால் நானே அதை கடைப் பிடிக்கவில்லை என்றால் எப்படி.தப்பா நினைக்கிலேன்னா. பாட்டிம்மா…முதலில் இப்போ என் கல்யாணத்தை பார்ப்போம். அந்த கல்யாணத்துக்கு நீங்க சொன்னீங்களே இடம் அவர்களும் வரட்டும். பின் முடிவு செய்யலாம் பாட்டிம்மா. ஆனால் ஒன்று அவள் படிப்பு ரொம்ப முக்கியம் எனக்கு.”

“சரிப்பா.. நீ சொன்னா மாதிரியே செய்யலாம். இப்போ அந்த தம்பிக்கிட்டே நான் பேசனுமே...” என்றதற்க்கு.

“அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை பாட்டிம்மா. நான் டெலிபோன் டைரக்டரில் பார்த்துட்டு ஆஷிக்குக்கு போன் செய்து எப்போ போறார் என்று கேட்டு சொல்கிறேன்.” என்று சொல்லி விட்டு டெலிபோன் டைரியில் ஆஷிக்கின் நம்பரை தேடலானான்.

இங்கு ரூமுக்கு வந்த பரினிதாவால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் சித்தார்த்தின் நம்பரை தன் செல் போனில் தேடி அவனை அழைத்தான். முதல் தடவை முழு ரிங்கும் போய் எடுக்காமல் போக இரண்டாம் தடவையும் அவன் நம்பரை அழைத்து காதில் வைத்து காத்திருந்தாள்.

அப்போதும் அவன் எடுக்கவில்லை என்றதும், பரினிதாவுக்கு டென்ஷன் கூடி விட்டது. நாம் வீட்டுகே போவோமா என்று யோசித்த வேலையில் அவளுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்காமல் ஆஷிக்கே அவளை போனில் அழைத்து இருந்தான்.

“என்ன பேபிம்மா காலையிலேயே இந்த மாமாவை அழைச்சி இருக்கே என்ன விஷயம்.”

“என்னை பேபிம்மா என்று கூப்பிடாதிங்க.

“அதை சொல்ல தான் அழைச்சியா...ஏஞ்சல்.”

“ம் இது பரவாயில்லை . என் அண்ணா கூட என்னை அப்படி தான் அழைப்பார்.

“இது உன் அண்ணன் அழைக்கும் அழைப்பு கிடையாதுடா...அதை அப்புறம் சொல்றேன். இப்போ என்னை எதுக்கு கூப்பிட்ட பரினிதா. ஏதாவது முக்கியமான விஷயமா…? என்று கேட்டதற்க்கு.

“ஆமாம் .”

என்று சொல்லி விட்டு பாட்டிம்மாவை நேற்று இரவு அழைத்து சொல்லியது. பின் அதற்க்கு பாட்டிம்மாவிடம் தான் வாங்கிய திட்டு என்று அனைத்தையும் சொல்லி முடித்தவள்.

இறுதியாக “ உங்கள் நம்பர் என் அண்ணாவிடம் இல்லை. என்னிடம் இருக்கிறது, ஆனால் அதை சொன்னாள் திரும்பவும் என் பாட்டிம்மா முதலில் இருந்து ஆராம்பிப்பாங்க. அது தான் இப்போ நீங்களே என் அண்ணாவை அழைச்சி பேசுங்க. அதற்க்கு தான் போன் செய்தேன்.” என்று சொல்லி விட்டு தன் கடமை முடிந்தது என்ற வகையில் செல்லை அணைத்து விட்டாள்.

இந்த பக்கம் அணைந்த செல்லை ஒரு புன் சிரிப்போடு பார்த்திருந்த ஆஷிக் பரவாயில்லை நம் பேபிம்மாவும் கொஞ்சம் விவரமா தான் யோசிக்கிறாங்க. என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே திரும்பவும் பரினிதாவிடம் இருந்து வந்த அழைப்பை பார்த்து சிரித்துக் கொண்டே அதை ஆன் செய்து காதில் வைத்து.

“என்ன இந்த மாமா கூட பேசாமல் உன்னால் இருக்க முடியவில்லை போல்.”

“ஆமாம் ஆமாம் .உங்க கூட பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை என்ன செய்கிறது. ஆமாம் நீங்களும் உங்கள் அறிவை தொழிலுக்கு மட்டும் தான் உப்யோகிப்பிங்களா...”

“ஏன் பேபிம்மா..உனக்கு இந்த சந்தேகம்.”

“பின் என்ன என் அண்ணா தான் உங்கள் போன் நம்பர் வாங்க வில்லை என்றால் நீங்களும் இப்போது என் அண்ணாவுக்கு போன் செய்ங்க என்றதற்க்கு சரி என்று விட்டு அவர் நம்பரை வாங்கவே இல்லையே…” என்றதற்க்கு மனதில் சிரித்துக் கொண்டே சித்தார்த் நம்பர் தனக்கு தெரியும் என்று சொல்லாமல்.

“நான் மறந்துட்டேன் பேபிம்மா.சரி இப்போ சொல் உன் அண்ணன் நம்பரை” என்றதற்க்கு .

“இதுக்கு தான் வீட்டுக்கு ஒரு அறிவாளி வேணும் என்பது.” என்று சொல்லி விட்டு சித்தார்த் நம்பரை கொடுத்து விட்டு போனை வைத்து விட்டாள்.

ஆஷிக் மனதுக்குள் இவள் வேலை முடிந்தால் உடனே போனை கட் செய்து விடுகிறாளே….நாளை இவள் அண்ணன் திருமணம் முடிந்ததும் நம்ப கூட பேச மாட்டோளோ என்ற யோசனையிலேயே சித்தார்த்தை அழைத்தான்.

இந்த பக்கம் சித்தார்த்தும் ஆஷிக் நம்பரை எடுத்து அவனை அழைக்கும் வேலையில் ஆஷிக்கே அழைத்ததை பார்த்து சிரித்துக் கொண்டே

“அலோ ஆஷிக் “ என்றதற்க்கு இந்த பக்கம் இருந்த ஆஷிக் இவனுக்கு போன் நம்பர் தெரியாது என்று தானே பரினிதா கொடுத்தாள். நாம் பேசாமல் எப்படி கண்டு பிடித்தான் என்று யோசிக்கும் வேலையிலேயே டெலி போன் டைரக்டரியை பார்த்து கண்டு பிடித்து இருப்பான் என்று புரிந்துக் கொண்ட ஆஷிக் .

“சொல்லுங்க சித்தார்த் நானே உங்களை கூப்பிடலாம் என்று நினைத்திருந்தேன். எங்களுக்கு மாலை தான் ப்ளைட் டிக்கட் கிடைத்து உள்ளது.அதனால் நீங்கள் எங்க அம்மாவிடம் பேச வேண்டும் என்றால் இப்போது வந்தால் பேசலாம்.” என்று சித்தார்த்தின் பாட்டிம்மா வந்திருப்பதை பரினிதா மூலம் தெரிந்துக் கொண்டு அதனை சொல்லாமல் அழைப்பு விடுத்தான்.

சித்தார்த்தும் உடனே “நானே அது விஷயமாக தான் கூப்பிட நினைத்தேன் ஆஷிக். என் பாட்டிம்மா காலையிலேயே வந்து விட்டார்கள். எல்லாம் நம் குட்டிம்மா வேலை நேற்று இரவே போன் செய்து அனைத்தும் சொல்லி விட்டாள்.” என்று கூறி சிரித்தவனின் வார்த்தையில் சித்தார்த் சொன்ன நம் குட்டிம்மா என்ற வார்த்தை அவன் மனதுக்குள் குளிர் பரவ செய்தது.

அவனும் சிரித்துக் கொண்டே “அப்போ நல்லதா போச்சி .நீங்கள் உங்கள் பாட்டிம்மாவையும் கூட அழைத்து வந்து என் அம்மாவிடம் பேசி விடுங்களே சித்தார்த்.” என்ற அழைப்பிற்க்கு.

தயங்கிக் கொண்டே “ஆஷிக் உங்கள் அம்மா என்ன சொன்னாங்க.என்னைப் பற்றி ஏதாவது.” என்று மேலே கேட்க முடியாமல் தன் பேச்சை நிறுத்தினான்.

அதை புரிந்துக் கொண்ட ஆஷிக்கும் “முதலில் கொஞ்சம் கோபம் தான் பட்டார்கள் சித்தார்த். நாமும் அம்மாவாக அவர்கள் நிலையில் இருந்து யோசித்து பார்க்க வேண்டும். இந்த எட்டு ஆண்டுகளில் முதல் மூன்று ஆண்டுகள் நாங்களே அவள் திருமணத்தை பற்றி பேச்சே எடுக்க வில்லை. அதற்க்கு காரணம் பொருளாதாரத்தில் நான் என்னை நிலைப்படுத்திக் கொள்ள எனக்கு அந்த மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது.

பின் அவள் திருமண பேச்சை எடுத்தவுடன் அவள் உடனடியாக மறுத்து விட்டாள். எங்களுக்கு காரணம் புரியாமல் எப்படி தவித்தோம் தெரியுமா...அதுவும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு பதில் சொல்லவே முடியாது.

என்னை விடுங்கள் என்னிடம் நேரிடையாக கேட்க யாருக்கும் தைரியம் இருக்காது. ஆனால் என் அம்மா. அவர்கள் எந்த விழாவுக்கும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

அதுவும் காரணம் புரியாமல் தவித்தது தான் பெரிய கொடுமை. இப்போது தான் என் அம்மாவுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது ஒரு வேலை லவ் பெயிலியராக இருக்குமோ என்று. அதனால் தான் நேற்று மாலையே நாங்கள் டெல்லி செல்வதாக இருந்தது.

அதற்க்குள் உங்கள் தங்கையே என்னை தேடி ஆபிசுக்கு வந்து விட்டாள். அதற்க்கு மேல் தான் உங்களுக்கே தெரியுமோ...நேற்று உங்களிடம் பேசி விட்டு என் அம்மாவிடம் அனைத்தும் சொல்லி விட்டேன். முதலில் வருத்தமாக இருந்தாலும் நான் உங்களை பற்றி சொன்னதும் சந்தோஷம் தான்.

என்ன ஒன்று சீக்கிரம் திருமணத்தை முடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அது தான் நீங்கள் உங்கள் பாட்டிம்மாவை கூட்டிக் கொண்டு பேசினால் நான் ஆருண்யாவிடம் பேசி அவளிடம் எப்படியாவது சம்மந்தம் வாங்கி விடுவேன். அது தான் பரினிதாவே ஐடியா கொடுத்து இருக்காளே…” என்று சிரித்துக் கொண்டே போனை அணைத்தான்.

சித்தார்த்தும் தன் பாட்டிம்மாவிடம் அனைத்தும் கூறி ஆஷிக் வீட்டுக்கு அவரை அழைத்து செல்ல கிளம்பி ரெடியாகி கிளம்பும் வேலையில் நானும் வருவேன் என்று கூறிய பரினிதாவை வரலட்சுமி பாட்டிம்மா அதட்டி வீட்டில் இருக்கும் படி கூறி சித்தார்த்தும் பாட்டிம்மா மட்டுமே ஆஷிக் வீட்டுக்கு சென்றனர்.




 
:love::love::love:

என்னப்பா எல்லாம் வேலையும் பார்த்த பர்னியை காரியம் ஆனதும் கட் பண்ணி விட்டுட்டு போறீங்களே........

ஏஞ்சல் நீ அந்த பக்கம் போனதும் இந்த பக்கம் போன் பண்ணி பேசப்போறா ஆஷிக் கிட்ட.......
 
Last edited:
Top