Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 20 1

Advertisement

Admin

Admin
Member




அத்தியாயம்---20

ஆஷிக் பங்களாவின் உள் செல்லாமல் வெளியில் இருந்தே போனில் அவளை அழைத்து.

“நீ எங்கு இருக்கிறாய் ஆருண்யா…”

“வீட்டில் தான் இது என்ன கேள்வி ஆஷிக். மணி பத்தாகிறது இந்த டைமில் வீட்டில் இல்லாமல் வேறு எங்கு இருக்க போகிறேன்.”

“அப்படியாம்மா...நான் போன தடவை வந்த போது மணி பத்தரை.ஆனால் நீ அந்த சமயத்தில் ஏதோ விபத்து பற்றி விசாரிக்க சென்று இருந்தாய். அது நியாபகம் இருக்கா…”

“சரி விடு .அதை சொல்ல தான் போன் செய்தாயா…?

“இல்லை இப்போ உன் வீட்டுக்கு வந்தா சாப்பிட ஏதாவது கிடைக்குமா...இல்லை திரும்பி ஒரு நல்ல ஓட்டலுக்கு போய் சாப்பிட்டு உன் வீட்டுக்கு வரவா…?”

“ஏய் இப்போ எங்க இருக்கே பக்கி.” ஆஷிக் இதை அனைத்தும் ஸ்பீக்கர் மோடில் போட்டு பேசிக் கொண்டு இருந்ததால் பக்கத்தில் இருந்த சித்தார்த்தும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

அவள் பக்கி என்ற பேச்சில் சிரித்தே விட்டான். அந்த சத்தத்தில் அந்த பக்கத்தில் இருந்த ஆருண்யா சட்டென்று உஷாராகி உன் பக்கத்தில் யார் இருக்கிறார். ஸ்பீக்கரிலா பேசிக் கொண்டு இருக்கிறாய்…?” அவள் கேள்வியில் தான் ஒரு நல்ல ரிப்போட்டர் என்பதை நிருபித்தாள்.

“ஏய் இப்போ என்ன என் கிட்டேயே உன் ரிப்போர்டர் வேலையை செய்கிறியா…” கொஞ்சம் பொறுமையா தான் கேளேன்.ஆமாம் பக்கத்தில் என் பிரண்ட் தான் இருக்கான். இப்போ அதுக்கு என்ன. அது தான் வீட்டுக்கு வந்தா சாப்பாடு கிடைக்குமா..இல்லை அவரை ஒட்டலுக்கே அழைச்சிட்டு போய் சாப்பிட்டு விட்டு பின் உன் வீட்டுக்கு வரவா என்று நினைத்து தான் நான் போன் செய்தேன். சரி வைக்கிறேன்.” என்றவனிடம் அவசரமாக.

“ஏய் இரு இரு வைக்காதே… பின் தயங்கி ஸ்பீக்கர் மோடை மாத்து என்று சொல்லி விட்டு ஒரு நிமிடம் அமைதி காத்தாள்.

இந்த பக்கம் இருந்த சித்தார்த்தோ வேண்டாம் என்ற வகையில் சைகை செய்ததையே ஏற்றுக் கொண்டு ஸ்பீக்கர் மோடை மாத்தாமல் மாற்றி விட்டேன் என்று கூறினான்.

பின் என்ன பெரியவர்கள் பழ மொழி சும்மாவா கூறியிருக்கிறார்கள். மரம் ஏற வேண்டும் என்றாலும் மச்சான் உதவி தேவை என்று. நமக்கோ இங்கே கல்யாணத்துக்கே இவன் உதவி தான் தேவை படுகிறது. அப்படி இருக்கும் போது சித்தார்த் சொல்வதை தானே கேட்டு ஆக வேண்டும்.

“அது யார் ஆஷிக் எனக்கு தெரியாத ப்ரண்ட் உனக்கு. அதுவும் வீட்டுக்கு கூட்டிட்டு வர அளவுக்கு .” என்ற ஆருண்யாவின் பேச்சிக்கு.

“ஏன் உனக்கு தெரியாமல் எனக்கு பிரண்ட் இருக்க கூடாதா...நீ என்ன எங்கிட்டே சொல்லிட்டு தான் எல்லாத்தையும் செஞ்சியிருக்கியா என்ன…?”

ஒரு நிமிடம் அமைதிக்கு பின் ஆருண்யா “இல்லை ஆஷிக் உனக்கு தெரியாமல் ஒரு விஷயத்தி செய்து விட்டு தான் இப்போது வாழ்க்கை முழுமைக்கும் கஷ்டத்தை அனுபவிக்கிறேன் .” என்ற பேச்சில் சித்தார்த்,ஆஷிக் இருவரும் அமைதியாகி விட்டனர்.

ஆருண்யா சிறிது நேரத்துக்கு எல்லாம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு “சரி ஆஷிக் என்ன வெளியில் போனிலேயே பேசி விட்டு அப்படியே போயிடுறதா ஐய்டியாவா...உன் பிரண்டையும் கூட்டிட்டு வா சாப்பிட எல்லாம் ரெடியா தான் இருக்கு. நானும் இன்னும் சாப்பிடவில்லை.” என்று போனை அனைத்ததும் சித்தார்த்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் காலிங் பெல் மேல் கைய் வைப்பதற்க்கு முன் ஆருண்யா வே கதவை திறந்து விட்டு.

“வா ஆஷிக்” என்று கூறிபக்கத்தில் இருக்கும் ஆஷிக் பிரண்டையும் வரவேற்க்கும் பொருட்டு சித்தார்த் பக்கம் தன் பார்வையை செலுத்தினாள்.சித்தார்த்தை பார்த்ததும் சிரித்துக் கொண்டு இருந்த அவள் முகம் புன்னகையை தொலைத்து விட்டு அப்படியே அவன் முகத்திலேயே பார்வை நிலைத்து நிற்க எதுவும் பேசாமல் பேச தோன்றாமல் சிலையாக நின்றாள்.

ஆஷிக் அவளின் நிலை உணர்ந்து ஆருண்யா கொஞ்சம் தள்ளு என்று சொல்லி விட்டு அவளை கொஞ்சம் ஒதுக்கி விட்டு தான் சித்தார்த்தை வீட்டுக்குள் அழைத்து சென்றான்.ஆருண்யா அப்போதும் உள் வராமல் அப்படியே இருப்பத்தை பார்த்த ஆஷிக் அவளை அழைக்கும் பொருட்டு பேச வாய் திறந்த வேலையில் சித்தார்த் ஆஷிக்கிடம் எதுவும் பேசாத என்று சைகையில் சொல்லி விட்டு ஆருண்யா அருகில் சென்றான்.

“ஆருண்யா…? என்று அழைத்து விட்டு ஒன்றும் பேசாமல் பேச தோன்றாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தான். சித்தார்த்தின் குரலில் தன் உணர்வுக்கு வந்து விட்ட ஆருண்யாவும் எதும் பேசாமல் சித்தார்த்தின் முகத்தையே பார்த்திருந்தாள்.

ஆருண்யாவுக்கு சித்தார்த் முன்னோடு இப்போது மிக அழகாககி விட்டதாக தான் தோன்றியது. முன்னும் சித்தார்த் அழகு தான் . ஆனால் அப்போது இளமையின் தொடக்கதில் இருந்தான். ஆனால் இப்போதோ முழுமையான ஆண்மகனாக அவள் கண் முன் தோன்றியதால் இன்னும் கவர்ச்சியோடு காணப்பட்டான்.

ஆதுவும் இப்போது அவனுடன் சேர்ந்துக் கொண்ட பதவியும் அவனுக்கு மேலும் மிடுக்கை கொடுத்தது. ஆருண்யா சித்தார்த்தை எடை போடும் வேலையில் சித்தார்த்தும் அந்த வேலையைய் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

எட்டு வருடம் முன் டீன் ஏஜில் இருந்த ஆருண்யாவை இப்போது வளர்ந்த முழுமையான பெண்ணாக பார்த்த போது அவனுமே கொஞ்சம் தடுமாறி தான் போனான். இருந்தும் இருக்கும் சூழலையும் ஆருண்யாவின் மனநிலையையும் நினைத்து அவள் உடல் மேல் பாய்ந்த பார்வையை கொஞ்சம் மேல் நோக்கி அவள் முகத்தில் நிலைய விட்டான்.

முன்னும் ஆருண்யா அறிவாளி தான் அதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அந்த அறிவு தானே சித்தார்த்தை முதலில் கொஞ்சம் அசைத்து பார்த்தது. ஆனால் இப்போது அறிவோடு அனுபவமும் கொடுத்த பாடத்தில் அவள் முகத்திலும் சரி, பார்வையிலும் சரி,அறிவும், தைரியமும் சேர்ந்து அவன் கண்ணுக்கு அவள் பாரதி கண்ட புதுமை பெண்ணாகவே காட்சி அளித்தாள்.

அந்த பாரதி கண்ட புதுமை பெண் போல் என்ற எண்ணம் சித்தார்த் மனதில் ஒடும் போதே அய்யோ புரட்சி என்ற பெயரில் தன்னை ஒதுக்கி அது மாதிரி ஏதாவது முடிவு எடுப்பாளா...என்ற பயமும் மனதில் பரவாலாயிற்று.ஆனால் அடுத்து ஆருண்யா பேசி வார்த்தையில் அந்த பயம் துணி கொண்டு துடைத்தது போல் ஆகி விட்டது.

“ஏன் சித்தார்த் என்னிடம் உண்மையை சொல்லாமல் பிரிந்தீர்கள். என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா...இல்லை அந்த நம்பிக்கை உங்களுக்கு உணர்த்தும் அளவுக்கு நான் உங்களிடம் பழக வில்லையா...இந்த எட்டு வருடமாக இந்த கேள்வி மட்டும் தான் என்னுள் குடைகிறது சித்தார்த்.” என்ற ஆருண்யாவின் பேச்சில் சட்டென்று ஆஷிக்கை பார்த்தான்.

ஆஷிக்கும் அப்போது ஆருண்யாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த பார்வையே சொன்னது ஆஷிக் ஆருண்யாவிடம் எதுவும் சொல்ல வில்லை என்று. சித்தார்த்திந் அந்த பார்வையையும் பார்த்த ஆருண்யா .

“இப்போது கூட என்னை தெரியவில்லை தானே. என்னிடம் ஆஷிக் தான் சொல்லி இருப்பான் என்று அவனை தானே நீ பார்த்தே….இதில் இருந்தே தெரிகிறதே நீ என்னை எந்த அளவுக்கு புரிந்து வைச்சிருக்கே என்று.” சொல்லி விட்டு ஹாலுக்குள் நுழைந்து அங்கு ஹோபாவில் அமர்ந்து இருந்த ஆஷிக்கின் பக்கத்தில் இருந்த தன் சுடி தாரின் துப்பாட்டைவை எடுத்து தன் தோள் சுற்றி படர விட்ட வாரே …

ஆஷிக்கிடம் “உன் புது பிரண்டை உள்ளே வந்து உட்கார சொல் .” என்று சொல்லி விட்டு சமையல் அறை நோக்கி சென்றாள்.

சித்தார்த் ஆஷிக் அழைக்காமலேயே உள்ளே வந்து ஆஷிக் பக்கத்தில் அமராமல் ஆருண்யாவை பின் தொடர்ந்து சமையல் அறைக்கு சென்றான். இதனை பார்த்த ஆஷிக் அடப்பாவி என்ன தாண்ட நடக்குது இங்கே நான் என்னவோ ஆருண்யா சித்தார்த்தை வீட்டுக்குள்ளேயே நுழைய விட மாட்டாள் என்று நினைத்து அவளை சாமதானப்படுத்த நான் என்ன என்ன பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தால். இவர்கள் அதற்க்கு தேவையே இல்லாமல் செய்து விட்டார்களே...என்று நினைத்துக் கொண்டே நான் இப்போது இங்கு இருக்கவா இல்லை அவர்களே பேசி கொண்டு ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நாம் வெளியில் செல்லலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே சமையல் அறையில் இருந்து சாப்பிடுவதற்க்கு அனைத்தையும் டையினிங் டேபிளில் வைத்து விட்டு ஆஷிக்கை பார்த்து .
 
:love::love::love:

நல்ல understanding ரெண்டு பேருக்கும்.......
இனி கடவுளே தடுத்தாலும் நடக்காது.......

இனி உனக்கு வேலையில்லை போல.......
அடுத்த flight எப்போன்னு பார்த்து சீக்கிரம் ஊர் போய் சேரு ஆஷிக்.......
 
Last edited:
Top