Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 20 2

Advertisement

Admin

Admin
Member
“சாப்பிட வா ஆஷிக்”. என்று ஆஷிக்கை அழைத்த ஆருண்யா பக்கத்தில் தண்ணீர் ஜாடி வைத்துக் கொண்டு சாப்பிட அமரலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்த சித்தார்த்தின் கையில் இருந்த தண்ணீர் ஜாடியை வாங்கி டேபிளில் வைத்து விட்டு.

“நீயும் சாப்பிடு சித்தார்த். சென்னையில் எப்போ சாப்பிட்டியோ ...நீ பசி தாங்க மாட்ட தானே…” என்று சொல்லி விட்டு மூன்று தட்டை வைத்து அதில் சப்பாத்தியையும் குரூமாவையும் ஊத்தி விட்டு அவர் அவர் முன் தட்டை வைத்து விட்டு தன்னுடைய தட்டை எடுத்துக் கொண்டு ஆஷிக் பக்கத்தில் அமர்ந்த சாப்பிட தொடங்கி விட்டாள்.

அவள் செயல் அனைத்தையும் வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆஷிக்கும் சித்தார்த்தும். சித்தார்த் ஆருண்யா தன் பக்கத்தில் அமராமல் ஆஷிக் பக்கத்தில் அமர்ந்தது வருத்தத்தை அளித்தாலும், நாம் செய்த செயலுக்கு சாப்பிட வைப்பதே பெரிய அதிசயம்.

அதுவும் நான் பசி தாங்க மாட்டேன் என்பதை எப்போதோ தான் சொன்னதை மறக்காமல் நியாபகம் வைத்துக் கொண்டு இருப்பதை நினைத்து சந்தோஷத்துடன் விரைந்து சாப்பிட்டான். சீக்கிரம் சாப்பிட்டால் தான் நான் ஆருண்யாவிடம் பேச முடியும் என்று நினைத்து தான் அவ்வளவு விரைவாக சாப்பிட்டான்.

ஆனால் அவன் அவசரம் புரியாமல் ஒரு துண்டு சப்பாத்தி அவன் தொண்டை குழியில் சிக்கி அவனுக்கு இருமலை வரவழைத்தது. அவன் தலையில் கொட்டி அவனின் கையில் தண்ணீரை கொடுத்த ஆஷிக்.

“பொறுமையா சாப்பிடு சித்தார்த். நீ இப்படி கட கட என்று சாப்பிடும் அளவுக்கு சப்பாத்தியும் குரூமாவும் எனக்கு அவ்வளவு ருசியாக இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே…” என்று சொல்லி விட்டு தன் சப்பாத்தியை மெல்ல முடியாமல் மென்று விழுங்கினான்.

ஏன் என்றால் சப்பாத்தி அந்த அளவுக்கு ஹாடாக இருந்தது. அந்த வெருப்பில் தான் ஆஷிக் சித்தார்த்திடம் அப்படி பேசினான். பின் என்ன அவனே சாப்பிட முடியாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால். இவன் என்ன என்றால் மென்மையான இடியாப்பத்தை சாப்பிடுவது போல் ஒரு வாய்க்கு பாதி சப்பாத்தியைய் உள்ளே தள்ளினால் அதை பார்த்து ஆஷிக்குக்கு வயிறு எரியுமா எரியாதா….

ஆஷிக் சொன்னதை கேட்ட சித்தார்த் சட்டென்று ஆருண்யாவை பார்த்தான். ஆனால் நியாயம் தெரிந்த ஆருண்யா நல்ல வேலையாக சித்தார்த்தை முறைக்காமல் ஆஷிக்கை முறைத்துக் கொண்டே…

“உனக்கு எவள் அப்படியே வாயில் போட்டதும் கரைவது போல் சப்பாத்தி சுட்டு போடுகிறாள் என்று நானும் தான் பார்க்க போகிறேனே…” என்றதற்க்கு

அசால்டாக “நான் ஏன் அவளை சமையல் அறையில் விட போகிறேன்.” என்று ஆருண்யாவிடம் கூறிவிட்டு மனதுக்குள் அவளுக்கு தண்ணியே சுட வைக்க தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் எங்கே சப்பாத்தி சுட்டு போடுகிறது என்று நினைத்து கொண்டே கடைசி சப்பாத்தி துண்டையும் கஷ்டப்பட்டு விழுங்கி விட்டு ஆருண்யாவை பார்த்தான்.

ஆருண்யா சாப்பிடாமல் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த ஆஷிக் “என்ன ஆருண்யா உன்னாலேயே நீ சுட்ட சப்பாத்தியைய் சாப்பிட முடிய வில்லையா…?” என்று கேட்டான்.

அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் “என்ன ஆஷிக் நம் வீட்டுக்கு வரும் மருமகள் சிங்கப்பூரில் இருக்கிறாளா…” என்று சம்மந்தமே இல்லாமல் கேட்கும் ஆருண்யாவுக்கு பதில் அளிக்காமல் ஆருண்யா, சித்தார்த் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

பின் “ஏன் கேட்கிறே….”

“இல்லை கடைசியா சிங்கப்பூர் போவதற்க்கு முன் கூட இங்கு வந்து தான் சென்றாய். அப்போது கூட எப்போதும் இருப்பது போல் விரைப்பாய் தான் இருந்தாய். ஆனால் இப்போது நீ நடந்துகிறதிலேயும்,பேசுவதிலும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. அதனால் தான் சிங்கப்பூரில் உனக்கு ஒரு பெண் பார்த்து விட்டு வந்துட்டியோ...அந்த பெண்ணால் தான் உனக்கு இந்த மாற்றோமோ என்று நினைத்து தான் கேட்டேன். “

சித்தார்த்தை பார்த்துக் கொண்டே ஆருண்யாவின் முன் கையெடுத்து கும்பிட்டு விட்டு “தாயே முதலில் நீ உன் பிரச்சின்சையை பாரு.அதை விட்டு எனக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டுடாதே….”

அவன் பேச்சில் ஆருண்யா குழம்பி தான் போனால் “ஏய் இல்லை என்றால். இல்லை என்று சொல்லிட்டு போவது தானே...அதற்க்கு ஏண்டா கையெடுத்து எல்லாம் கும்பிடுகிறாய்.”

சித்தார்த் இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு ஆஷிக்கின் காதில் “இப்போ உன்னை பற்றி பேச தான் இங்கு வந்தாயா ஆஷிக்.முதலில் நீ சாப்பிட்டு விட்டால் கைய் கழுவி விட்டு இடத்தை கொஞ்சம் காலி செய்தால் நல்லது.” என்று கூறி விட்டு சித்தார்த் கைய் கழுவ எழுந்தான்.

ஆருண்யாவுக்கு சித்தார்த் ஆஷிக்கிடன் என்ன சொன்னான் என்று கேட்க வில்லை என்றாலும் என்ன சொல்லி இருப்பான் என்று யூகித்து ஆஷிக்கை பார்த்து சிரித்து விட்டு அவளும் சித்தார்த்தை பின் தொடர்ந்தான்.

அடப்பாவிங்களா இங்க என்ன தாண்டா நடக்குது என்று நினைத்துக் கொண்டே அவனும் கைய் கழுவ எண்ணி வாஷ் பேஷன் அருகில் சென்ற போது அங்கு இருவரும் கைய் கழுவாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இனி நாம் இங்கு இருப்பது அதிக படி என்று கருத்திய ஆஷிக் அவர்கள் இருவரையும் விலக்கி விட்டு கைய் கழுவவும் அவன் செல் இசைக்கவும் சரியாக இருந்தது.கைய் கழுவி விட்டு யார் என்று செல்லை எடுத்து பார்த்த போது அதில் மின்னிய பெயர் அவனின் முகத்தில் புன்னகையை பூக்க செய்தது.

தன் செல்லில் மின்னிய பேபிம்மா என்ற பெயரையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்த போது ஆருண்யா “நீ கைய் கழுவி விட்டால் இடத்தை காலி செய். மத்தவங்க கழுவ வேண்டாமா…”

அவள் பேசி முடிப்பதற்க்கும் செல்லின் இசை அடங்குவதற்க்கும் சரியாக இருந்தது. அந்த கோபத்தில் “நீ இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டு இருந்தாய்.” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு இரு இரண்டு அடி வைத்திருப்பான்.

பின் திரும்பவும் வந்து சித்தார்த், ஆருண்யா, இருவரையும் பொதுவாக பார்த்த படி. “நான் ஒரு அரை மணி நேரம் வெளியில் சென்று விட்டு வருகிறேன்.நீங்கள் அதற்க்குள் பேசி முடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று சொல்லி விட்டு.”

சித்தார்த்திடம் “பேச மட்டும் செய்ய வேண்டும்.” என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

ஆஷிக் வெளி வாசல் தாண்டும் போது ஆருண்யாவிம் ஆஷிக் என்ன சொன்னான் என்று சித்தார்த்திடம் கேட்பதை கேட்டுக் கொண்டே வெளியில் வந்தவன் காரில் அமர்ந்ததும் முதலில் செல் எடுத்து பரினிதாவுக்கு அழைத்தான்.

செல்லை ஆன் செய்த பரினிதா மொட்டையாக கேட்டது.

“என்ன ஆச்சி” என்பதே…

“என்ன என்ன ஆச்சி எனக்கு ஒன்றும் புரிய வில்லையே…” என்று அவள் என்ன கேட்கிறாள் என்று தெரிந்துக் கொண்டே அவளை வெறுப்பு ஏத்த அப்படி கேட்டான்.

அவன் எதிர் பார்த்த மாதிரி தான் பரினிதாவும் அவனிடம் பேசினாள் .” இப்போ எதற்க்கு எங்க அண்ணாவை கூட்டிட்டு டெல்லிக்கு போயி இருக்கிங்க. அங்கு இருக்கும் தாஜ் மாஹால் பார்க்கவா …” என்ற அவள் பேச்சை கேட்டு மனதுக்குள் உன் அண்ணனை தாஜ் மஹால் கூட்டிட்டு போய் நான் எண்ணத்தை செய்ய போகிறேன். அதுவே நீ என்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே…

“ஏய் முந்திரி கொட்டை. உனக்கு எல்லாத்திலேயும் அவசரம் தானா...இப்போ தான் அவங்க பேசட்டும் என்று அவங்களை தனியே விட்டுட்டு வந்து இருக்கேன். அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். ஆனால் எனக்கு என்னவோ ஆருண்யாவுக்கே சித்தார்த்தின் நிலை முதலிலேயே தெரிந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் .அதனால் நீ கவலைபடதே…”

“எதை வைத்து அண்ணிக்கு முதலிலேயே தெரிந்து இருக்கும் என்று சொல்றீங்க.

“எல்லாம் ஆருண்யாவின் பேச்சு மற்றும் அவள் நடந்துக்கிறதை வைச்சி தான் சொல்றேன். அவளுக்கு சித்தார்த் மேல் கோபம் எல்லாம் இல்லை வருத்தம் தான். அதனால் எல்லாம் நல்ல படியாக தான் முடியும் .”

“அப்போ வீட்டில் சீக்கிரம் கல்யாணம் நடக்கும் என்று சொல்லுங்க.” என்ற அவள் பேச்சிக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

பரினிதா திருமணம் என்றதும் நேற்று பாட்டிம்மா பேசிய பரினிதாவின் கல்யாண பேச்சி தான் நியாபகத்துக்கு வந்தது. இதை பற்றி இவளுக்கு ஏதாவது தெரியுமா...என்று நினைத்தவன் கேட்பதா வேண்டாமா… என்று இவன் எண்ணமிடும் போதே.

பரினிதா “என்ன ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறீங்க.” என்ற பேச்சிக்கு எரிந்து விழுந்தான்.

“எனக்கு என்ன தெரியும். உனக்கு தெரிய வேண்டும் என்றால் உன் அண்ணாவிடமே போன் செய்து தெரிந்துக் கொள்.” என்று சொல்லி விட்டு போனை அனைத்து விட்டு தன் தலையை ஸ்டேரிங்கில் வைத்துக் கொண்டான்.

அவன் மனதில் இது தான் ஒடிக் கொண்டு இருந்தது. எப்படி இருந்தேன் நான். ஆனால் இவள் எப்படி என்னை மாற்றி விட்டாள். எதையும் கேட்கவோ ...பேசவோ நான் தயங்கியதே கிடையாது.

ஆனால் இப்போது இவளிடம் இவள் திருமணத்தை பற்றி கேட்கவே என்னை இப்படி யோசிக்க வைத்து விட்டாளே….என்ற ஆத்திரத்தில் தான் கோபத்துடன் பேசி கட் செய்தான்.

ஆனாலும் அவன் மனதில் ஒரு எதிர் பார்ப்பு இருந்தது.திரும்பவும் பரினிதாவே தனக்கு போன் செய்வாள் என்று. அதனால் திரும்பவும் ஸ்டேரிங்கில் இருந்த தலையை நிமிர்த்தி போனை கையில் வைத்துக் காத்துக் கொண்டு இருந்தான்.

பத்து நிமிடம் கையில் வைத்திருந்தும் போன் வராமல் போக காரின் டேஷ் போடில் போனை போட்டு விட்டு டைமை பார்த்தான். இன்னும் டைமாக வில்லை என்றதும் உள் செல்லாமல் காரிலேயே அமர்ந்திருந்தான்.

பரினிதா ஆஷிக் கோபத்திடன் பேசி வைத்ததும் ஒரு நிமிடம் எதற்க்கு கோபமாக பேசினான் என்று யோசித்தவள். சரி என்ன டென்ஷனோ இப்போது போன் செய்ய வேண்டாம். பிறகு பேசலாம் என்று நினைத்து படுக்க சென்றாள்.




 
:love::love::love:

சொல்லாத காதலுக்கே இப்படியா ஆஷிக்???
அங்க சொல்லிக்கிட்டே ஒன்னையும் காணோம்........
வெயிட் பண்ணுப்பா கொஞ்சம்......

பாடத்தையே arrear வச்சி படிக்கிறவ.......
உன்னை மட்டும் உடனே புரிஞ்சுப்பாளா என்ன???
 
Last edited:
Top