Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 21

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---21

ஆருண்யா வீட்டில் ஆஷிக் போனவுடன் சித்தார்த் ஒன்றும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தான். ஆருண்யாவுக்கு ஆயாசமாக இருந்தது. இன்னமும் இவன் நம்மிடம் அவனாகவே எதுவும் சொல்ல மாட்டானா...என்று.

ஆருண்யா வாய் திறக்கும் வேலையில் சித்தார்த் “முதலில் என்னை மன்னத்து விடு ஆரு. நான் உன்னிடம் என் நிலைமையை சொல்லி இருக்க வேண்டும் சொல்லாதது என் தவறு தான். நான் சொல்லாததுக்கு காரணமும் உன் நல்லதுக்கு தான் ஆரு. “

இது என்ன புது கதை என்று பார்த்த ஆருண்யாவிடம் “நான் சொல்வது உண்மை தான் ஆருண்யா.நான் உன்னிடம் காதல் சொன்ன போது நீ என்ன சொன்னாய் நாம் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தானே…அப்படி இருக்கும் போது நான் எப்படி எனக்காக பத்து வருடம் காத்திரு என்று எப்படி சொல்ல முடியும்” என்று சொல்பவனை பார்த்து .

“அதற்க்காக நீ என்னை மறுத்தால் உடனே வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வேன் என்று எப்படி உன்னால் நினைக்க முடிந்தது. இது தான் நீ என்னை புரிந்துக் கொண்ட லட்சணமா “ என்ற ஆருண்யாவின் பேச்சி தன் பாட்டிம்மா சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

அவர்களும் இப்படி தானே சொன்னார்கள். அவளை சரியாக புரிந்து இருந்தால் கண்டிப்பாக நீ சொல்லி இருப்பாய் என்று ஆருண்யாவின் பேச்சிக்கு பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து நின்றான்.

சித்தார்த் அப்படி தலை கவிழ்ந்து நிட்பதையும் பார்க்க முடியாது “சித்து தலை நிமிர்ந்து என்னை பார். நீ இப்படி தலை கவிழ்ந்து இருப்பதை என்னால் பார்க்க முடியாது. அது என் முன்னால் இருந்தாலும் அதுவே…”

என்று சொல்பவளை இவளுக்கு நான் என்ன செய்தேன். என்ற வகையில் பார்த்திருந்தான். ஆருண்யா அவனாக எதுவும் பேச மாட்டான் என்ற முடிவுக்கு வந்தவளாக அவன் அருகில் வந்து “இப்போதாவது எல்லாம் சொல்கிறாயா சித்து.” என்று கேட்டாள்.

“அப்போ உனக்கு எதுவும் தெரியாதா ஆரு. அப்போ எப்படி நீ என் மீது கோபப்படாமல் இருக்கிறாய்.” என்றதற்க்கு.

“உன்னை பற்றி நன்கு புரிந்து வைத்திருந்ததால். நீ என்னை அந்தஸ்த்து காட்டி மறுத்தால் நான் உடனே அதனை நம்பி விடுவாய் என்று நினைத்து விட்டாயா….சொல். எனக்கு தெரியும் உண்மையான காரணம் அது அல்ல என்று. அதுவும் இல்லாமல் நீ என்னிடம் பேசி பிரியும் ஒரு மாதம் முன் தான் உன் பெற்றோரும்,தாத்தாவும் விபத்தில் இறந்தார்கள் என்று எனக்கு தெரியும்.

அதை பற்றி நான் உன்னிடம் பேச வரும் போது எல்லாம் நீ என்னை அவாய்ட் செய்தாய். பின் ஒரு மாதம் கழித்து நீயே வந்து இப்படி பேசுகிறாய். நீ காதல் முறிவு சொன்ன உடன் உன்னை விட்டு பிரிந்து விடுவேன் என்று நீயே முடிவு செய்து விட்டாயா...அந்த அளவுக்கு தான் என்னை புரிந்து வைச்சிருக்கிறாயா….இப்போதாவது சொல் சித்” என்றதற்க்கு அனைத்தையும்சொல்லி முடித்தான்.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஆருண்யா…”நீ என்னை மட்டும் கஷ்டப்படுத்த வில்லை சித்து. உன் சின்ன தங்கையையும் சேர்த்து தான் கஷ்டப்படுத்தி இருக்கிறாய்.அந்த வயதில் அதுவும் அந்த சமயத்தில் ஒரு பெண் துணை கண்டிப்பாக அவளுக்கு தேவை.

ஆனால் அதை நீயும் யோசிக்க வில்லை என்றால் ஒரு பெண்ணான பாட்டியும் இதை எப்படி யோசிக்காமல் போனார்கள் என்று தான் எனக்கு தெரியவில்லை.” என்று கூறியவள்.

“சரி சித்து .நீ கலெக்டர் பதிவி ஏற்ற பிறகாவது என்னை தேடி வருவே என்று எதிர் பார்த்தேன். ஆனால் அப்போது வராமல் இப்போது நீ வந்து இருக்கிறாய் என்றால் எப்படி” என்று கேட்டவளை ஒரு நிமிடம் பார்த்தவன் இனி ஒன்றும் மறைக்க கூடாது என்று முடிவு செய்தவனாய் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“அப்போ இப்போ கூட நீயா என்னை தேடி வரவில்லை. அதுவும் அதற்க்கு நீ சொன்ன காரணம் எனக்கு திருமனம் முடிந்திருந்தால். அது கேட்க தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது சித்து. ஆனால் எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது நீ என்னை தவிர யாரையும் திருமனம் செய்ய மாட்டாய் என்று. நீ இப்படி சொல்லும் போது என் மீது தான் தவறோ உனக்கு நான் அந்த நம்பிக்கையை கொடுக்க வில்லையோ என்று தான் எனக்கு தோன்றுகிறது சித்து.” என்று சொல்லும் ஆருண்யாவின் மீது தம் கைய் வைத்து.

“இல்லை ஆரு என் மீது தான் தவறு .இப்போது கேட்கிறேன் நீ என்னை திருமணம் செய்துக் கொண்டு என் வீட்டுக்கு மருமகளாகவும் என் தங்கைக்கு தாயாகவும் வருவாயா…?”

“கண்டிப்பாக சித்து.” என்று கூறி அவனையே பார்த்துக் கொண்டு இருக்கும் ஆருண்யாவிடம் “ஒரு சில பெண்களுக்கு வயது கூட கூட அழகு வந்து சேருமாம். நீ அந்த வகையா…” என்று சொல்லிக் கொண்டே அவள் உதட்டை ரசனையாக நிமிண்டும் போது அங்கு வந்து சேர்ந்த ஆஷிக் இதனை பார்த்து விட்டு சித்தார்த்தை முறைத்துக் கொண்டே வந்து அமர்ந்தான்.

அவன் வந்ததும் ஆருண்யா டைம் பார்க்க அது சரியாக அவன் சென்ற அரை மணிநேரம் கடந்து காணப்பட்டது. “நீ பைனன்ஸ் பிஸ்னசும் செய்வது எனக்கு தெரியும். ஆனால் ஒரு கடன் காரனிடம் சொன்ன டைமிக்கு வருவது போல் தான் ஒரு சிஸ்டரிடமும் நடந்துக் கொள்வாயா…? ஆருண்யா கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது சித்தார்த்திடம்.

“நான் உங்களிடன் என்ன சொல்லிட்டு போனேன்.” என்று கேட்டதற்க்கு.

இங்கு வரும் போது என்ன சொல்வாளோ என்று நினைத்துக் கொண்டு இருந்த சித்தார்த் இப்போது ஆருண்யாவின் சம்மதம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் “எனக்கு நியாபகம் இல்லையே...என் நியாபகத்தில் இருப்பது இப்போது ஒன்னே ஒன்னு தான். அது நீங்கள் என் மச்சான்.” என்ற பேச்சி ஆஷிக்கிடம் இருந்தாலும் பார்வை என்னவோ ஆருண்யாவிடமே இருந்தது.

அண்ணன் தங்கை ஒரே கேட்டகிரி போல் காரியம் முடிந்ததும் நம்மை கைய் கழுவி விடுவதில் என்று நினைத்துக் கொண்ட ஆஷிக். ஆனால் பரினிதா நீ என்னை கைய் கழுவ நினைத்தாலும் நான் உன்னை விடுவதாக இல்லை என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக ஆருண்யாவிடம் “என்ன ஆருண்யா உனக்கு இந்த திருமனத்தில் முழு சம்மந்தம் தானே…” என்று திரும்ப திரும்ப கேட்டு உறுதி படுத்திக் கொண்டான்.

அதனை பார்த்த சித்தார்த் அவளே ஒத்துக் கொண்டாலும் இவன் இவளை குழப்பி விட்டு விடுவான் போலவே என்று நினைத்து அதனை ஆஷிக்கிடம் கேட்கவும் செய்தான்.

“இவள் இவ்வளவு சீக்கிரம் ஒத்துக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் நீங்களே இவளை எப்படி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது என்ற கவலையில் தானே இங்கு வந்தீர்கள். உங்கள் தங்கை கூட ஒரு ஐடியா கொடுத்தாளே...அப்படி இருக்கும் போது இவள் ஒத்துக் கொண்டது யோசிக்க வைக்கிறது தானே அதனால் அவள் சகோதரனாய் நான் கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன். “ என்ற ஆஷிக் பேச்சி சித்தார்த்துக்கு நியாயமாக பட அமைதியாக இருந்தான்.

ஆருண்யா சிரித்துக் கொண்டே ஆஷிக்கிடம் சித்துவை காண்பித்து இவர் என்னிடம் அப்போதே எல்லாம் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இவர் பிரிவதற்க்கு அவர் சொன்ன காரணத்தை என்னால் நம்ப முடியவில்லை.

அதனால் தான் ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்தேன் .இவர் முன்பே என்னிடம் சொல்லி இருந்தால் பரினிதா ஆஸ்டலிலேயே இருந்து இருக்க தேவை இருக்காது.” என்று சொல்லி விட்டு ஆஷிக்கை பார்த்தாள்.

ஆஷிக்குக்கு பரினிதா என்ற பெயரே ஒரு வித பரவசத்தை ஏற்படுத்தி இருந்தது. சித்தார்த்தை பார்த்து இவன் மட்டும் முன்பே ஆருண்யாவிடம் பேசி இருந்தால் நன்றாக தான் இருந்து இருக்கும்.

நாமும் ஐந்து வருடம் முன்னே ஆருன்யாவுக்கு சித்தார்த்துக்கும் திருமணத்தை முடித்து விட்டு இருக்காலாம். அம்மாவுக்கு நிம்மதியாவது கிடைத்து இருக்கும். நாமும் பரினிதாவை ஐந்து வருடம் முன்னே பார்த்து இருந்து இருக்கலாம்.

அவளும் தனிமையை உணர்ந்து இருக்க மாட்டாள் என்று அனைத்தையும் நினைத்தவன். ஐந்து வருடம் முன் பரினிதாவை பார்த்திருந்தால் அவள் பதினைந்து வயது சிறு பெண் என்பதனை மட்டும் மறந்து விட்டான்.

பின் அனைத்தும் மின்னல் வேகத்தில் தான் நடந்தது.சித்தார்த் ஆருண்யாவின் திருமணம் சித்தார்த்தின் சொந்த ஊரில் பொள்ளாச்சியில் அவர்களின் குலதெய்வ கோயிலில் தான் நடைப்பெற்றது.

ரிசப்ஷன் கிராண்டாக சென்னையில் நடப்பதால் திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் ஊரில் உள்ளவர்களை மட்டும் அழைத்து சிம்பிளாக முடித்து விட்டனர்.கல்யாணம் இவ்வளவு எளிமையாக நடப்பதில் யாருக்கு வருத்தமோ இல்லையோ நம்ம பரினிதா தான் ஆருண்யாவின் கைய் பற்றி அதை விடாமல்.

“இப்போது எதற்க்கு இந்த பாட்டிம்மா இப்படி திருமணத்தை சிம்பிளாக முடித்து விட்டார்கள் . இன்னும் ஒரு மாதம் சென்றே திருமணத்தை ஒரு பெரிய கல்யாணம் மண்டம் பார்த்து வைத்திருக்கலாம் இல்லையா….என்று கேட்டவள் நம்மிடம் இல்லாதா பணமா…?” என்று கேட்டு விட்டு அவள் குஞ்சலம் வைத்த சடையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு ஆருண்யாவிடம் கேட்டாள்.

அவள் பேசுவதையும் ,அவள் செய்கையையும் ஒரு வித ரசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்த ஆஷிக் “பார்த்து பார்த்து தலையை மெல்ல ஆட்டு. இல்லை என்றால் சவுரி முடி வந்து விடபோகிறது.” என்றதற்க்கு ஒன்றும் சொல்லாமல் தானே சவுரியை தனியாக எடுத்து அவன் கையில் கொடுத்தால்.

தன் கையில் உள்ள சவுரியையும் அவளையும் மாறி மாறி பார்த்து முழித்துக் கொண்டு இருந்த ஆஷிக்கை பார்த்து ஆருண்யா சித்தார்த் சிரித்துக் கொண்டு இருந்தார்கள் என்றால் பரினிதாவை பெண் கேட்ட மாப்பிள்ளை வினோத் முறைத்துக் கொண்டே தன் குடும்பத்தாராடு அந்த கோயில் வந்தனர்.

அந்த குடும்பம் உள் நுழையும் போதே வரலட்சுமி பாட்டி “ எல்லோரும் வாங்க என்ன இவ்வளவு லேட் திருமணமே முடிந்து விட்டதே…” என்றதற்க்கு.

அந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ராஜாராம் “சரியான நேரத்துக்கு தான் கிளம்பினேன் அம்மா. ஆனால் எதோ கட்சி கூட்டம் என்று வரும் வழியில் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டோம் .”

“சரி விடுங்க பொண்ணு மாப்பிள்ளையை போய் ஆசிர்வாதம் செய்து விட்டு பக்கத்தில் இருக்கும் ஒட்டலில் தான் சாப்பிடுவதற்க்கு ஏற்பாடு செய்து இருக்கோம் போய் சாப்பிடுங்க .” என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு பைய்யனை அழைத்து அவர்களை கவனி என்று சொல்லி விட்டு மற்றவர்களை வர வேற்க பாட்டிம்மா சென்றார்.

பரினிதாவை திருமணம் செய்ய கேட்டவர்கள் அனைவரும் வரலட்சுமியின் பேச்சை கேட்டிருக்க பரினிதாவுக்காக கேட்ட மாப்பிள்ளை வினோத் மட்டும் வந்ததில் இருந்து பரினிதா, ஆஷிக்கை, பார்த்திருந்தான்.

அதுவும் கடைசியாக பரினிதா தன் சவுரியை எடுத்து ஆஷிக் கையில் கொடுத்து விட்டு சிரிப்பதும். அதை பார்த்து சித்தார்த் ஆருண்யா ரசித்து சிரிப்பதை பார்த்து வாயிறு எரிந்து போனான்.

வினோத் போன திருவிழாவில் தான் பரினிதாவை பார்த்தான். முதலில் ஒரு பெண் என்ற நினைவில் மட்டுமே அவளை பார்த்தான். மற்றபடி திருமணம் என்று அந்த நிலைக்கு எல்லாம் செல்லவில்லை. தன் நண்பர்களோடு பேசுவதும் பின் பரினிதாவை பார்ப்பதுமாக இருந்தவன்.

ஒரு சமயம் பார்க்கும் போது அவள் அருகில் சித்தார்த் வந்து பேசுவதை பார்த்து நெற்றி சுருக்கினான். பரினிதாவை தான் யார் என்று வினோத்துக்கு தெரியாது. ஆனால் சித்தார்த்தை நன்கு அவனுக்கு தெரியும். அவனை மட்டும் அல்லாது அவன் குடும்பத்தை பற்றியும் அவன் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.

அதற்க்கு காரணம் அவன் தாத்தா ராஜாராம் தான்.சித்தார்த்தின் தாத்தாவை பற்றியும் அவர் தான் முதன் முதலில் தனக்கு தொழில் தொடங்க உதவியது பற்றியும் கேட்டது மட்டும் அல்லாது அவர்களின் வசதி பற்றி தாத்தா சொன்னதை சின்ன வயதில் இருந்து கேட்டு இருக்கிறான்.

பின் அவன் வளர வளர அவன் குடும்பத்தை பற்றியும் அவர்களின் செல்வ நிலமை பற்றியும் தெரிந்து வைத்திருந்தான்.ஒரு பேரன் கலெக்டர் என்றும் ஒரு பேத்தி சென்னையில் படித்துக் கொண்டு இருக்கிறாள் என்றும் தெரியும். சித்தார்த்தை மட்டுமே பார்த்திருந்த வினோத் இப்போது தான் பரினிதாவை பார்க்கிறான்.

முதலில் சித்தார்த் பேசுகிறான் என்றால் யார் என்று யோசித்துக் கொண்டே பார்த்திருந்த வினோத்தை அவனின் தாத்தாவே அவன் அருகில் வந்து பரினிதாவை காண்பித்து அந்த பெண்ணை கொஞ்சம் பார் என்று சொன்னதை கேட்டு.

மனதில் இது வரை அதை தானே செய்துக் கொண்டு இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டே

“ ஏன் தாத்தா “ என்று கேட்டான்.

“ உனக்கு அந்த பெண்ணை கேட்கலாம் என்று நினைக்கிறேன்.” என்றதற்க்கு

“அந்த பெண் யார் தாத்தா”

“ஒ உனக்கு அந்த பெண் யார் என்றே தெரியாது இல்லை. அந்த பெண் நம்ம வரலட்சுமி பாட்டியின் பேத்தி சென்னையில் படித்துக் கொண்டு இருக்கிறாள்.” என்று சொன்னதோடு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.

வினோத்தின் தாத்தா அந்த பெண்ணை உனக்கு கேட்க போகிறேன் என்று தான் சொன்னார். ஆனால் வினோத்தோ தனக்கு அவள் தான் மனைவி என்ற கனவில் மிதக்க ஆராம்பித்து விட்டான்.
 
:love::love::love:

அடேய் அங்கே ஒரு ஈட்டிக்காரன் காத்துக்கிட்டிருக்கான்.......
நீ இடையில் வந்தால் அவ்ளோ தான்........
ஓடிடு ஓடிடு.......

சித்து ஆரு லவ்ஸ் :D:D:D:D
 
Last edited:
Top