Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 23

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---23

மந்திரியின் பேச்சில் குழம்பி போய் பார்த்தவனாகா… “நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.”

“சரி வந்தது வந்து விட்டேன். நான் நேரிடையாவே கேட்டு விடுகிறேன்.ஆறு மாதம் முன் நான் மந்திரி பதவி ஏற்றதுக்கு என்னுடைய சார்பாக ஒரு விருந்துக்கு உங்களை அழைத்திருந்தேனே...நியாபகம் இருக்கா…”

“ஆ நல்லா நியாபகம் இருக்கே. நான் கூட வந்தேனே…”

“அப்போ நான் என் பெண்ணை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அது உங்களுக்கு நியாபகத்தில் இருக்கா…” என்ற மந்திரியின் கேள்வியில் ஆஷிக் இப்போது மந்திரியை கேள்வியோடு பார்த்தான்.

அவனுக்கு ஏதோ விளங்குவது போல் இருந்தது. ஏன் என்றால் அவ்விழாவில் மந்திரியின் பெண் தன்னோடு நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். அவனுக்கே கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது. அவ்விழாவில் பத்திரிகைகாரர்களும் வந்து இருந்தனர்.

அவர்கள் ஏடகூடாமாக ஏதாவது எழுதி விட போகிறார்களோ என்று. அவனுக்கு கவலை இல்லை. ஆனால் இதனால் அப்பெண்ணுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட போகிறது என்று நினைத்து மந்திரியிடம் தான் என் சிஸ்டரை பார்க்க போகிறேன் என்று சொல்லி விட்ட அவ்விழாவில் பாதியிலேயே வெளியேறினான்.அதனை நினைத்து கொண்டே

“ஏன் இல்லாமல் நன்றாக நியாபகம் இருக்கு. இப்போது எதற்க்கு அதை கேட்கிறீங்க.”

“காரணமா தான் ஆஷிக். அன்றே என் பெண் உன் மீது விருப்பம் என்று சொல்லி விட்டாள்.” என்று சொன்னது தான்.

“ஐய் ஜாலி.” என்று எகிரி குதித்தது யாராக இருக்கும் என்று நினைக்கிறீங்க. எல்லாம் நம்ம பரினிதா தான்.

அவளின் சந்தோஷத்தை பார்த்த மந்திரியின் உதடு புன்னகையை காண்பித்தது என்றால், ஆஷிக்கின் கண்கள் கோபத்தை காட்டியது. அவன் கோபத்தை பார்த்து விட்டு இவன் ஏன் இப்படி முறைக்கிறான்.

ஒரு சமயம் அந்த பெண் அவ்வளவு மோசமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டாள். ஆனால் இப்போது அவளுக்கும் சேர்த்து அந்த மந்திரியே பேச ஆராம்பித்து விட்டார்.

“பாப்பாவை ஏன் கோச்சிக்கிறீங்க ஆஷிக். வீட்டில் ஒரு கல்யாணம் என்றால் அந்த வீட்டு சார்ந்த பெண்ணுக்கு சந்தோஷமாக தானே இருக்கும்.” என்று அந்த மந்திரி திருமணம் வரை சென்று விட்டார்.

அந்த மந்திரிக்கு தெரிந்து விட்டது இந்த பெண்னுக்கு ஆஷிக் மீது விருப்பம் எல்லாம் இல்லை என்று. இந்த ஆஷிக் தான் அப்பெண்ணை கொஞ்சம் விருப்பதோடு பார்க்கிறான். அதுவும் அப்பெண்ணிடம் கூட சொல்லவில்லை என்று. அதனால் தான் நேரிடையாக திருமணம் என்று சொல்லி விட்டார் தன் பெண்ணின் அழகில் உள்ள நம்பிக்கையில்.

ஆஷிக் பரினிதாவிடம் திரும்பி “பேபிம்மா நீ சித்தார்த், ஆருண்யாவிடம் போ” என்று சொன்னதற்க்கு.

“நான் அங்கு தானே இருந்தேன். நீங்க தானே அங்கே இருந்து விரட்டி விட்டிட்டீங்க. இப்போ போ என்று சொல்லுறீங்க.” என்று சொல்லி விட்டு தன் காலை தரையில் உதைத்தாவாறு நடந்து சென்று தன் அண்ணனின் அருகில் நின்று கொண்டாள்.

ஆஷிக் அவள் செய்கையை ஒரு புன்னகையுடன் பார்த்து விட்டு மந்திரியிடம் “என்ன சார். கல்யாணம் என்று எல்லாம் பேசுறீங்க. உங்க பெண்ணுக்கு மட்டும் விருப்பம் இருந்தால் போதுமா...”

“அது தான் உங்க கிட்ட கேட்க வந்தேன் ஆஷிக். நான் என் பெண் சொன்னவுடனே உங்களிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அப்போது உங்கள் சிஸ்டருக்கு கல்யாணம் முடிவாக வில்லை.

அதுவும் இல்லாமல் அவர்கள் உங்கள் இரட்டையர். ஒரே வயதில் இருந்துக் கொண்டு பெண்ணுக்கு திருமணம் செய்யாமல் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று நினைத்து தான் பொறுமையாக கேட்கலாம் என்று நினைத்து விட்டேன். ஆனால் இப்போது அது தவறோ என்று எனக்கு படுகிறது.” என்று சொல்லிக் கொண்டே பரினிதாவை பார்த்தார்.

அவர் பார்வையை தொடர்ந்து தன் பார்வையையும் செலுத்திய ஆஷிக் “ நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே” என்று சொல்பவனை மந்திரி தன் பார்வையை பரினிதாவிடம் இருந்து ஆஷிக்கிடம் மாற்றினார்.

ஆனால் அப்போதும் ஆஷிக் விடாமல் பரினிதாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆஷிக் பார்வையை பார்த்த மந்திரி “இது சரி வரும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா…” என்றவுடன் தன் பார்வையை பரினிதாவிடம் இருந்து திருப்பி மந்திரியிடம் கூர்மையான பார்வை பார்த்துக் கொண்டே

“எது சரி வருமா...என்று கேட்கிறீர்கள்.”

பரினிதாவை காட்டி “நானும் உங்கள் வயது கடந்து வந்தவன் தான். பரினிதாவை பார்த்தவாரே அப்பெண்ணின் விளையாட்டுத்தனம் பார்க்க நன்றாக தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை என்று வரும் போது பக்குவம் தான் கைய் கொடுக்கும்.

அதுவும் நீ நிறைய தொழில் செய்பவன். அந்த தொழிலில் உங்களுக்கு உதவியாக அப்பெண் இருக்க வேண்டுமே தவிர. உங்கள் வேலையையும் கெடுத்துக் கொண்டு இருப்பவளாக இருக்க கூடாது. அதுவும் அந்த பெண் குடும்பம்.” என்றதும்.

இவ்வளவு நேரம் அவர் சொல்வதை எல்லாம் எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டு இருந்த ஆஷிக் “அக்குடும்பத்தை பற்றி பேச நமக்கு தான் யோகியதை இல்லை.” என்றான்.

முதலில் அவர் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டதற்க்கு காரணம் அவனுமே பரினிதா மேல் தன் எண்ணம் போவதை நினைத்து இது சரி வருமா என்று இப்போது மந்திரி சொன்னா காரணத்தை எல்லாம் யோசித்து தான் பார்த்தான்.

இன்னும் சொல்ல போனால் அவனுக்கு பெண்கள் மீது எல்லாம் பெரிய ஈடுபாடு எல்லாம் கிடையாது என்றாலும் திருமணம் செய்ய கூடாது என்று எல்லாம் அவன் நினைத்தது இல்லை. அப்படி திருமணம் செய்துக் கொண்டால். அப்பெண் நம் தொழிலுக்கு உதவியாக இருக்கும் பெண்ணை தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான்.

ஆஷிக்குக்கு இன்னும் இன்னும் தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை பெருக்க நினைத்தான். அதனால் முதலில் தன் சகோதரியையும், தன் அம்மாவையுமே தொழிலை பார்த்துக் கொள்ளும் மாறு கூப்பிட்டான். ஆனால் சொல்லி வைத்த மாதிரி இதில் எல்லாம் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று இரண்டு பேரும் சொல்லி விட்டனர்.

அப்போது சரி நமக்கு வரும் மனைவியாவது தொழில் செய்பவளாகவோ...இல்லை அதில் விருப்பம் இருப்பவளாகவோ இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் பரினிதா இதற்க்கு எதிர்பதம் என்றும் அவன் உணர்ந்து தான் இருந்தான். இருந்தும் இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும், அவள் மீது தன் மனம் செல்வதை அவனால் தடுக்க முடியவில்லை.

பின் அவளை நினைக்க நினைக்க இத்தனை வருடம் அவன் மனதில் இருந்த அழுத்தம் குறைவது போல் இருந்ததால். அவள் எனக்கு இந்த மகிழ்ச்சி கொடுத்தால் போதும் மற்றவற்றை நானே பார்த்துக் கொள்வேன் என்று நினைத்து தான் பரினிதாவை தன் மனைவியாக நினைக்க ஆராம்பித்தான்.

அதனால் தான் மந்திரி பேசுவதை தடுக்காது கேட்டுக் கொண்டு இருந்தான். ஆனால் அவள் குடும்பம் என்ற உடன் அவனால் பொறுத்துக் கொள்ளமுடிய வில்லை. சித்தார்த்தின் தாத்தாவை பற்றி டிடெக்டிவ் கொடுத்த ரிப்போர்ட்டை படிக்க படிக்க அவனால் வியாக்காமல் இருக்க முடியவில்லை.

இக்காலத்தில் இப்படி பட்ட மனிதரா என்று.அப்படி இருக்கும் போது முப்பது வருடம் முன் சாரயம் தொழில் செய்து. பின் படி படியாக முன்னேறிய இந்த மந்திரி அக்குடும்பத்தை பற்றி பேசலாமா...என்று நினைத்து தான் அப்படி கூறினான்.

ஆனால் அந்த மந்திரியோ ஆஷிக் நினைத்ததுக்கு எதிர் பதமாக பேசினார். “அது தான் ஆஷிக் நானும் கூறுகிறேன்.நீங்கள் அக்குடும்பத்தில் பெண் கொடுப்பதை கேள்வி பட்டு நானும் விசாரித்தேன். நான் நினைத்தது சரி தான் என்பது போல் தான் இருந்தது மாப்பிள்ளையின் வசதி.

ஆனால் நான் எதிர் பாராதது அவர்களின் குடும்பம் பாராம்பரியமும், அவர்களின் நேர்மையும், வரலட்சுமி அம்மாவை காண்பித்து அவர்களின் கணவர் அந்த காலத்திலேயே தன் ஊர் மக்கள் எங்கும் வேலை தேடி வெளியே செல்ல கூடாது என்று நினைத்து ஒரே சமயத்தில் மூன்று தொழில் சாலையை தொடங்கினாராமே...”

என்று சொல்லி விட்டு சித்தார்த்தை காண்பித்து “உங்கள் மாப்பிள்ளை மட்டும் என்ன லேசு பட்டவரா ...இந்த காலத்தில் பார்க்க முடியாதா...நேர்மை,நியாயம், என்று பார்த்துக் கொண்டு இந்த ஐந்தாண்டு சர்வீசில் ஐந்து இடத்துக்கு மாற்றம் வாங்கி இருக்கிறாரே….இப்போதும் அவர் மாற்றலுக்கு ஏற்பாடு நடப்பதாக தான் கேள்வி பட்டேன்.” மேலும் ஏதோ சொல்ல வந்தவரை தடுத்து நிறுத்திய ஆஷிக்

“இப்போது என்ன சொல்ல வரிங்க. இவ்வளவு பாரம்பரியமிக்க குடும்பம் என் குடும்பத்தில் எப்படி பெண் எடுத்தார்கள் என்றா இல்லை எப்படி பெண் கொடுக்க போகிறார்கள் என்றா…?” என்ற ஆஷிக்கின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

உண்மையில் அவர் அதை தான் குறிப்பிட எண்ணினார். மேலும் உன் சகோதரியாவது சித்தார்த் விரும்பினான் அதனால் திருமணம் செய்துக் கொண்டான். ஆனால் உன் நிலமை அப்படி இல்லையே. அந்த பெண்ணை நீ தான் விரும்புகிறாய். அப்பெண்ணுக்கு உன் மீது நாட்டம் இல்லை போலவே என்று சொல்லி விட்டு. என் பெண்ணை மணந்தால் கிடைக்கும் லாபத்தை கூற எண்ணினார்.

ஏன் என்றால் அவர் தன் பெண்ணிடம் ஆஷிக்கிடம் பேசி அவனை உனக்கே திருமணம் செய்து விடுகிறேன் என்று கூறிவிட்டு வந்திருந்தார். அது மட்டும் இல்லாது ஆஷிக்கின் திறமை மீது அவர் நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். தன் ஒரே பெண்ணை ஆஷிக்குக்கு திருமணம் செய்து கொடுத்தால் நம் தொழிலை திறம்பட பார்ப்பதோடு அவனும் மேலும் மேலும் முன்னேறுவான் என்று நினைத்தும் ஆஷிக்கை மாப்பிள்ளையாக்க எண்ணினார்.

அதனால் தான் ஆஷிக்குக்கு வேறு பெண் மீது நாட்டம் என்று தெரிந்தும் அதனை கலைத்து தன் பெண்ணை மணம் முடிக்க எண்ணினார். இருந்தும் அவர் உள் மனது சொல்லியது இது தான். ஆஷிக் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் இருந்து பின் வாங்க மாட்டான் என்று. இருந்தும் முயற்ச்சித்து தான் பார்ப்போமே என்று பேசி பார்த்தார்.

அவர் எதிர் பார்த்த மாதிரியே தான் ஆஷிக்கும் பேசி வைத்தான். “நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே. ஆனால் இதில் ஒன்று இருக்கிறது. என் குடும்பம் பாராம்பரியம் மிக்க குடும்பம் இல்லை என்றாலும் சாராயம் காச்சும் குடும்பமும் இல்லையே….அது மட்டும் இல்லாமல் அந்தஸ்த்திலும் நாங்கள் அவர்களுக்கு சமமே ...

அதனால் நீங்கள் என் திருமணத்தை பற்றி கவலை படாமல் அடுத்த எலெக்க்ஷனுக்கு என்னிடம் உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்று மற்றும் சொல்லுங்கள் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்ற பேச்சில் அமைதியாக அவ்விடத்தை விட்டு அகன்றார். ஏன் என்றால் ஒரு சில அவரின் ரகசியங்கள் ஆஷிக்கிடம் இருக்கிறது. அதனால் அவனை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

மேலும் நம் பெண்ணின் அழகுக்கும் ,அந்தஸ்த்துக்கும் மாப்பிள்ளை நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். இவன் என்ன பெரிய இது என்று இந்த பழம் புளிக்கும் என்ற வகையில் நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

ஆஷிக் அவர் செல்வதை ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.அவனுக்கு தெரியும் அந்த மந்திரி தன்னை பகைத்துக் கொள்ள மாட்டார் என்று. அவர் உலகத்துக்கு சொல்வது எனக்கு ஒரே பெண் என்று. ஆனால் அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்ற விவரம் ஆஷிக்குக்கு தெரியும். அதனால் இனி இந்த விஷயத்தை பற்றி பேசி பிரச்சனை பண்ண மாட்டார் என்று நினைத்துக் கொண்டே மணமக்கள் இருக்கும் இடத்துக்கு சென்றான்.

ஆனால் அமைச்சர், மந்திரி ,என்று எல்லோர் வாயையும் அடைக்க தெரிந்த ஆஷிக்கால் பரினிதாவின் வாயைய் அடைக்க வித்தை தெரியாதவனாய் மணமக்கள் இருக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டு முழித்தான்.

ஆம் அவன் அங்கு செல்வதற்க்குல் மந்திரி பெண் ஆஷிக்கை விரும்பியதை பற்றி சொல்லி ஒரு காதல் நாடகத்தையே நடத்தி முடித்து விட்டாள். இதில் என்ன கொடுமை என்றால் இவருக்கும் விருப்பம் போல் அதனால் தான் என்னை அவ்விடத்தை விட்டு போக சொல்லி விட்டார் என்று. எக்ஸ்ரா ஒரு பிட்டை வேறு போட்டு விட்டாள்.

அந்தோ பாவம் அந்த நேரத்துக்கு பார்த்து அந்த இடத்தில் ஆஷிக்கின் அம்மா கலையரசி, வரலட்சுமி பாட்டி வேறு இருந்தார்கள். ஆஷிக் போன உடனே ஆருண்யா பரினிதா சொன்னதை சொல்லி விட்டு .

“இது உண்மையா ஆஷிக் “ என்று கேட்டதுக்கு ஆருண்யாவுக்கு பதில் அளிக்காமல் பரினிதாவை பார்த்து முறைத்துக் கொண்டு நின்று இருந்தான்.

பின் ஆருண்யா சித்தார்த்தை பார்க்க சித்தார்த் “என்ன ஆஷிக் எதுவும் சொல்லாமல் இருக்கே.அப்போ உண்யை தானா….”

ஆருண்யாவிடம் பதில் சொல்லாமல் இருப்பது போல் சித்தார்த்திடம் இருக்க முடியாது என நினைத்து .

“அப்படி எல்லாம் இல்லை.” என்று முழுவதும் சொல்வதற்க்குள்.

“அவங்க பொய் சொல்றாங்க நானே என் காதால் கேட்டேன்.” என்ற பரினிதா பேச்சில் இப்போது ஆஷிக் எதுவும் சொல்லாமலேயே பாட்டிம்மா…

“நீ சும்மா இருக்க மாட்டே ...அது தான் ஆஷிக் சொல்றாங்களே....முதலில் அவர் சொல்வதை என்ன என்று கேட்போம்.” என்று கூறினார்.

அவருக்கும் ஆஷிக் அந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கிறார்களா...என்று தெரிய வேண்டி இருந்தது. ஏன் என்றான் அந்த மந்திரி பற்றி அவரும் கேள்வி பட்டு இருக்கிறார். ஆனால் அது நல்ல விதமாக இல்லை. அதனால் தான் தெரிந்துக் கொள்ள விரும்பினார்.

ஆஷிக் வரலட்சுமிபாட்டிம்மாவை பேசியதை கேட்டு இவர் அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைக்க மாட்டார்களே என்று நினைத்துக் கொண்டே சித்தார்த்திடன்

“நான் அவர் கொடுத்த ஒரு விருந்துக்கு சென்று இருந்தேன் அங்கு அவர் பெண் என்னை பார்த்து விட்டு அவர் அப்பாவிடம் என்னை மணக்க விருப்பம் என்று போல் சொல்லியிருக்கிறால் போல் .ஆனால் நான் மறுத்து விட்டேன்.” என்று கூறி விட்டு வரலட்சுமி பாட்டிம்மாவை பார்த்தான்.

ஏன் என்றால் காரணம் இல்லாமல் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்று. ஆஷிக் நினைத்தது போலவே தான் அவர் பேச்சிம் இருந்தது. “நல்ல முடிவை தான் எடுத்து இருக்கிங்க ஆஷிக். அவரை பற்றி நான் நல்ல விதமாக கேள்வி பட்டது இல்லை. ஒரு நிமிடம் அவர் நம் குடும்பத்தோடு இணைவதா என்று நினைத்து விட்டேன் பரவாயில்லை.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்துக்கு விடை பெறுவதற்க்காக வினோத் குடும்பம் வந்தது.
 
:love::love::love:

ஆஷிக் உனக்கு வில்லி இந்த பர்ணி தான்........
ரொம்ப கஷ்டமான டாஸ்க் போலவே இவளை கல்யாணம் பண்ணுறது........
சீக்கிரமா சித்தார்த் கிட்ட பேசிடு.......
 
Last edited:
Top