Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 24

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---24

வினோத் குடும்பத்தை பார்த்த பிறகு தான் பாட்டிம்மாவுக்கு பரினிதாவை அவர்கள் கேட்டதே நியாபகத்துக்கு வந்தது. இந்த ஒரு வாரத்திலேயே திருமணம் வைத்ததால் அவருக்கு ஏகாப்பட்ட வேலை.

என்ன தான் முக்கியமானவர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்து மற்றவற்களை ரிசப்ஷனுக்கு அழைக்கலாம் என்று நினைத்தாலும், அந்த முக்கியமானவர்களே நிறைய பேர் இருந்தார்கள். இதில் யாருக்கு கொடுப்பது யாரை விடுவது என்பதிலேயே அவர் தடுமாறி போனார். அந்த டென்ஷனில் வினோத் குடும்பத்தை மறந்தவர்.

இப்போது அவர்களை பார்த்தவுடன் நியாபகம் வந்தவராக சித்தார்த்திடம் “சித்தார்த் நான் சொன்னனே…பரினிதாவை கேட்கிறார்கள் என்று அது இவர்கள் தான்.” என்று அறிமுகப்படுத்தினார்.

பாவம் பரினிதாவுக்கு இது எதுவும் தெரியாது. அதனால் முதலில் பேந்த பேந்த விழித்து விட்டு பின் தான் அவர் சொன்னது உரைத்தவளகா வினோத்தை பார்த்தாள். வினோத்தோ பரினிதாவை பார்ப்பதும் பின் ஆஷ்க்கை பார்ப்பதுமாக இருந்தான்.

ஆஷிக்கின் கண்கள் வேறு எங்கும் பார்க்காமல் பரினிதாவையே தான் பார்த்துக் கொண்டு இருந்தது. வினோத்தை சிறிது நேரம் பார்த்தவள் பின் அவள் எப்போதும் செய்வது போல் வேடிக்கை பார்க்க ஆராம்பித்து விட்டாள்.

அவள் செயலில் ஆஷிக்கால் ஒன்றும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆஷிக்குக்கு முதலில் பாட்டிம்மா வினோத் குடும்பத்தை காட்டி இவர்கள் தான் பரினிதாவை கேட்டவர்கள் என்று சொன்னவுடன் சட்டென்று அவன் கண்கள் பரினிதாவை தான் பார்த்தது.

பாட்டிம்மா பேச்சிக்கு பரினிதாவின் முழி காட்டிக் கொடுத்து விட்டது. அவளுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று. அவன் கொஞ்சம் சந்தோஷப்படும் வேலையிலேயே பரினிதா வினோத்தை பார்த்தது கோபத்தை ஏற்படுத்தியது.

இப்போது இவள் எதற்க்கு அவனை பார்க்கிறாள். பிடித்து இருந்தால் திருமணம் செய்துக் கொள்வாளமா...அதற்க்கு நான் தான் விட்டு விடுவேனா….பாவம் சின்ன பெண் இவளிடம் கொஞ்சம் பொறுமையாக போகலாம் என்று நினைத்தால் விட மாட்டாள் போலவே என்று நினைத்துக் கொண்டு தன் பார்வையை அகற்றாது அவளையே தான் பார்த்திருந்தான்.

வினோத்தை பார்த்தவள் பின் சுற்றும் முற்றும் பார்ப்பதை பார்த்து அவன் நொந்தே விட்டான். தொழிலில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அடுத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்று துள்ளியமாக அறிந்துக் கொள்பவனால்.

ஒரு சிறு பெண்ணின் மனதில் என்ன நினைக்கிறாள் என்று அறிந்துக் கொள்ள முடியவில்லையே….காலம் முழுவதும் இது தான் தொடருமோ என்று நினைத்தாலும், அவளை நான் அட்ஜஸ் செய்துக் கொள்வேன் என்று நினைத்தானே தவிர இவள் நமக்கு சரிபடா மாட்டாள். அதனால் நமக்கு வேண்டாம் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆஷிக்கின் சிந்தனை இந்த வகையில் சென்று கொண்டு இருக்கும் போது சித்தார்த்தின் பேச்சால் தன் கவனத்தை அங்கு செலுத்தினான்.

சித்தார்த்துக்கு ஏனோ வினோத்தை முதல் பார்வையிலேயே பிடிக்க வில்லை. அதற்க்கு காரணம் அவன் அலைபாயும் கண்களாக கூட இருக்கலாம். ஆனால் முதலிலேயே இந்த இடம் பற்றி பாட்டிம்மா சொன்ன உடன் அவன் மனத்துக்கு ஏதோ பட்டது போலவே இப்போதும் வினோத்தை பார்த்ததும் அப்படி தான் தோன்றியது.

அதனால் பாட்டிம்மாவிடம் “இப்போது கல்யாண டென்ஷனில் இருக்கிறேன் பாட்டிம்மா...அதனால் இதை பற்றி பிறகு பேசலாம்.” என்பதிலேயே பாட்டிம்மாவுக்கும், வினோத்தின் தாத்தாவுக்கும் புரிந்து விட்டது.

இந்த சம்மந்தத்தில் சித்தார்த்துக்கு விருப்பம் இல்லை என்று. ஆனால் அதை எதுவும் புரிந்துக் கொள்ளமுடியாதா வினோத் அவர்கள் பிறகு பார்க்கலாம் என்பதிலேயே மகிழ்ந்து போய் விட்டான்.

மேலும் தங்கள் திருமணத்தை பற்றி பேசும் போது எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் ஆஷிக்கை பார்த்து இவனுக்கு பரினிதாவின் மீது விருப்பம் எல்லாம் இல்லை. சொந்தம் என்ற வகையில் தான் நம் பார்வை பார்த்து அவ்விடத்தை விட்டு அவளை போக சொன்னான் போல்.

ஆனால் இப்போது அவனுக்கு தெரிந்து இருக்கும் நான் அவளுக்கு உடமையானவன் என்று. இப்போது அவன் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வான் என்று நினைத்துக் கொண்டே பரினிதாவை பார்த்து தலையாட்டினான். பாவம் அவன் தலையாட்டலை கவனியாத பரினிதா ஆருண்யாவிடம் மிக முக்கிய கேள்வியை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அவள் தன்னை பாராது தன் அண்ணியிடம் பேசுவதை பார்த்த வினோத் கடுப்புடன் பரினிதாவை முறைத்துக் கொண்டே மனதில் உன் கழுத்தில் முதலில் தாலி கட்டுகிறேன். பிறகு உனக்கு என்னை புரிய வைக்கிறேன் நான் யார் என்று நினைத்துக் கொண்டே தன் குடும்பத்துடன் சென்றான்.

இவை அனைத்தையும் பார்த்து இருந்த ஆஷிக் வினோத் பின்னே சென்று அவன் தோளில் கைய் போட்டு அவன் குடும்பத்தை பார்த்து “நான் வினோத்திடம் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றதற்க்கு ஒன்றும் சொல்லாமல் கிளம்பினர்.

ஆனால் வினோத்துக்கோ அவர்களை போக வேண்டாம் என்று தடுக்க வேண்டும் போல் இருந்தது ஆஷிக்கின் கைய் அழுத்தம். ஆம் ஆஷிக் வினோத்தின் மேல் கைய் போட்டது போல் தான் சாதரணமாக தெரிந்தது.

ஆனால் அவன் எவ்வளவு அழுத்தம் கொடுத்தான் என்பது வினோத்துக்கு மட்டுமே புரிந்த ரகசியம். வினோத்தின் குடும்பம் அவனை விட்டு கொஞ்சம் தள்ளி போனவுடம் ஆஷிக் வினோத்திடம்.

“உன் தாத்தா எவ்வளவு புத்திசாலியாக சித்தார்த் பிறகு பேசலாம் என்று சொன்னவுடன் புரிந்துக் கொண்டார். சித்தார்த்துக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று.ஆனால் நீ என்ன வென்றால் அது புரிந்துக் கொள்ளக் கூட தெரியாத மட சாம்பிரணியா பரினிதாவை பார்த்து தலையாட்டி வைக்கிற. சரி அது தான் விடு என்று பார்த்தால் அவள் உன்னை பார்க்கவில்லை என்று அவளை முறைத்து வேறு பார்க்கிறாய். ம் உன்னை என்ன செய்தால் தகும்.” என்று சொல்லும் ஆஷிக்கின் மட சாம்பிரணி என்ற வார்த்தை அவன் தன்மானத்தை எழுப்பி விட.

ஆஷிக்கை பார்த்து “சித்தார்த் உங்களிடம் இந்த சம்மந்தம் பிடிக்க வில்லை என்று சொன்னாரா….இல்லை அதை என் தாத்தா புரிந்துக் கொன்டதை அவர் வந்து உங்களிடம் சொன்னாரா….” என்று கேட்டவனை இதுவே வேறு ஒரு இடமாக இருந்தால் அவனை கொலையே செய்து இருப்பான்.

ஆனால் இருக்கும் இடம் கருதி தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான். அவன் வரலட்சுமி அம்மாவுக்கு முன்னால் தான் தாழ்ந்து தெரிவதை அவன் விரும்பவில்லை. ஏன் என்றால் இந்த வினோத்தை முடிப்பதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று அவர்கள் செயல் மூலமே அவன் தெரிந்துக் கொண்டான்.

மேலும் பரினிதா வீட்டில் பாட்டிம்மாவின் செல்வாக்கையும் ,இந்த பத்து நாட்களாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். இது மாதிரி சிம்பிளாக கோயிலில் திருமணம் செய்வதில் ஆஷிக்குக்கும், சித்தார்த்துக்கும், பரினிதாவுக்கும் கூட கொஞ்சமும் விருப்பம் இல்லை.

ஆனால் இது தான் என் விரும்பம் என்று பாட்டிம்மா திட்ட வட்டமாக சொல்லி விட்டதால் சித்தார்த் ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டான். சாதரணமாகவே பரினிதாவை அந்த வீட்டில் ஒரு சின்ன பெண்ணாகவே நடத்துவதால் அவள் பேச்சை யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

இந்த ஏற்பாட்டுக்கு ஆருண்யாவும் ஒத்துக் கொண்டதால் இவனும் சரி என்று விட்டு விட்டான். அதில் இருந்து அவன் அறிந்துக் கொண்டது இந்த பாட்டிம்மா தான் நினைத்ததை எப்படியாவது நடத்தி முடித்து விடுவார்கள் என்று.

அதனால் தன் கோபத்தை முகத்தில் காண்பிக்காது அடக்கிய குரலில் “உன்னை போல் மற்றவர்கள் நிழலில் வாழ்பவருக்கும், மற்றவர்களின் செல்வாக்கில் குளிர்காய நினைப்பவனுக்கும், இந்த சென்ஸ் இருக்காது.

அதாவது மற்றவர்கள் சொல்லாமலே புரிந்துக் கொள்வது. அப்புறம் இனி பரினிதா பக்கம் உன் பார்வை போச்சீ நான் இது மாதிரி பேசிட்டு சும்மா இருக்க மாட்டேன். அது எப்படிடா வீட்டில் திருமணம் பேசும் பெண்ணை அப்படி பார்த்து வைப்பே...இதில் இருந்தே தெரிகிறதே உன் யோக்கியதை என்ன என்று.

இப்போ நான் சொல்வதை நல்லா கேட்டுக்கோ இனி உன் தாத்தா இதை பற்றி பேச மாட்டார். ஏன் என்றால் நான் சொன்ன அந்த சென்ஸ் அவரிடம் இருக்கிறது. அதனால் இதை மறந்து விட்டு நீ உன் வழிக்கு போனால் உனக்கு நல்லது. இல்லை என்றால் உன் உடம்பில் ஏற்படும் சேதாரத்துக்கு நாம் பொறுப்பு கிடையாது.” என்று சொல்லி விட்டு மணமக்களை நோக்கி சென்றான்.

அஷிக்குக்கு இந்த வினோத் வெறும் மண் பாம்பு என்று பார்த்தவுடன் தெரிந்து விட்டது. வரலட்சுமி அம்மாவின் செல்வாக்குக்கும், இந்த வயதுக்கே ஏற்பாடும் கிளர்ச்சியால் மட்டுமே பரினிதாவை திருமணம் செய்ய விருப்புகிறான் என்று.அதனால் இனி பரினிதா பக்கம் பார்வை செல்லாது என்று தெறிந்தவனாக மகிழ்ச்சியுடன் தன் சகோதரியின் அருகில் போய் நின்றான்.

அப்போது தான் பரினிதா தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை எல்லாம் ஒவ்வொன்றாக தன் அண்ணியிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். கடைசியாக ஆஷிக் வந்து அங்கு நிற்க்கும் வேலையில் “அண்ணி உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணி இந்த புடவை மடிப்பு கலையாமல் அப்படியே இருக்கிறது. எனக்கு நிக்கவே மாட்டேங்குது. சரிஞ்சி சரிஞ்சி விழுதா அதை பார்த்து பாட்டிம்மா கூப்பிட்டு சத்தம் போடுறாங்க.இதனால் இதை சரி செய்யவே மூன்று முறை உள்ளே போகும் படியாகி விட்டது என்றால்.” அப்போது தான் அங்கு வந்து நின்ற ஆஷிக்கை காண்பித்து இவர் என்னடா என்றால் இந்த இடத்தி விட்டு போ என்கிறார்.

திரும்பவும் உங்க அண்ணன் பக்கத்தி நில் என்கிறார். நான் சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது அண்ணி.ஆஷிக்குக்கு கொஞ்சம் மூளை ஏதாவது பிசகி விட்டதா….” என்றும் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அதனை கேட்ட ஆருண்யா சிரிக்காமல் “ஆஷிக் எப்போது உன்னை போ என்றான் எப்போது எங்கள் பக்கத்தில் நில் என்றான்.” என்று கேட்டதற்க்கு பரினிதா எப்போது என்று சொல்ல ஆராம்பிக்கும் வேலையில்.

ஆஷிக் “உனக்கு அது ரொம்ப அவசியம் தெரிஞ்சுக்கனுமா...உன்னிடம் முதலில் அவள் என்ன கேட்டா. உங்களுக்கு எப்படி புடவை நிக்கிறது என்பது தானே….முதலில் நீ அவளுக்கு புடவை எப்படி கட்டுவது சொல்லி கொடு. அத்தோடு மிக முக்கியம் அது விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லி கொடு.” என்னும் ஆஷிக்கை ஆருண்யா சந்தேகத்தோடு பார்த்தாள்.

அவளுக்கு தெரிந்த ஆஷிக் இல்லை இவன். எப்போது இருந்து இவன் பெண்களின் ட்ரஸ் செய்வதில் எல்லாம் கவனம் செலுத்த ஆராம்பித்தான். ஆருண்யாவும், ஆஷிக்கும் இரட்டை பிறவி என்பதால் அவன் நடவடிக்கை அனைத்தும் அவளுக்கு அத்துப்படி.

அவர்கள் தந்தை இருக்கும் வரையில் ஆருண்யாவும், ஆஷிக்குக் ஒன்றாக தான் பள்ளி போவார்கள் வருவார்கள். அவர்கள் உடன் பிறப்பு என்பதோடு நல்ல நண்பர்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்கும்.அப்படி இருக்கும் காலத்திலேயே ஆஷிக் தன் உடயை கூட சரியாக கவனிக்க மாட்டான்.

ஒரு முறை டூஷ்ஷன் செல்வதற்க்கு முதன் முதலில் அவள் தாவணி கட்டி விட்டு ஆஷிக் முன் வந்து நின்றாள். ஆனால் அதை கவனியாது “என்ன ஆருண்யா அப்படியே நிக்குற சீக்கிரம் சைக்கிளில் ஏறு.” என்று சொன்னதற்க்கு .

“ஏண்டா பக்கி முதன் முதலில் தாவணி கட்டிட்டு நிக்கிறேன். அது எப்படி இருக்கு என்று சொல்லா மாட்டியா…” என்று அவள் கேட்டவுடன் தான் தன் உடையையே அவன் பார்த்தான்.

பின் தான் “சாரி ஆரு நான் கவனிக்கவில்லை.” என்று சொன்னவன் “இது பற்றி எனக்கு என்ன தெரியும் .”என்று அப்போதும் ஒரு விட்டேரியான தன்மையில் தான் பேசினான்.

தன்னுடன் நன்றாக பேசிக் கொண்டு இருந்த காலத்திலேயே இப்படி என்றால் எப்போது தந்தை தற்கொலை செய்து இறந்தாறோ அப்போது இருந்து அனைத்தும் மாறி விட்டது. ஆஷிக் அம்மாவிடம் கூட அளந்து தான் பேசுவான். அது மாதிரி தான் தன்னிடமும் நடந்துக் கொண்டான்.

அவனின் இந்த செயலுக்கு உண்டான காரணம் ஆருண்யாவுக்கு புரிந்து விட்டது. திடிர் என்று ஏற்பட்ட இந்த நிலை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் மற்றவர்கள் வீட்டில் ஒரு அகதிகளாக இருப்பதை அவன் விரும்பவில்லை என்று தெரிந்ததும் அவளும் அவனின் மனம் நலம் புரிந்து அவனை விட்டு கொஞ்சம் விலக ஆராம்பித்தாள்.

எப்போது அவர்கள் தந்தை இறந்தாரோ அன்றிலிருந்து ஆருண்யா புது உடையே உடுத்தியது கிடையாது. தன் மாமா பெண்கள் போட்ட பழைய துணியைய் அணிந்து தான் அவள் கல்லூரிக்கே சென்றாள். அந்த விஷயம் இன்று வரை ஆஷிக்குக்கு தெரியாது.

அந்த லட்சணத்தில் தான் தன் சகோதரியின் உடையை கவனித்து இருக்கிறான். அப்படி பட்டவன் இன்று பரினிதாவின் உடையை பற்றி பேசியதில் புத்திசாலியான ஆருண்யாவுக்கு பொறி தட்டியது.

பின் தான் அவள் யோசிக்க ஆராம்பித்தாள் சித்தார்த்தை கூட்டிக் கொண்டு வரும் போது தான் ஆஷிக்கின் மாற்றத்தை பார்த்து சிங்கப்பூரில் பெண் பார்த்து விட்டான் என்று தான் நினைத்தது தவறோ…. அந்த பெண் என்ற நினைவோடு பரினிதாவை பார்த்தாள்.
 
"உன் பார்வையை நானறிவேன்"னு கலெக்டர் பொண்டாட்டி அண்ணனை கண்டுகொண்டாள்
இனி ஆஷிக் இவளிடமிருந்து தப்பிக்க முடியாது
 
Last edited:
Top