Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 10

Advertisement

S


அத்தியாயம்-----10

ஆஷிக் அன்று மாலை தான் டெல்லி செல்ல இருப்பதாலும்,அத்தோடு ஒரு வாரம் கழித்து தான் சென்னை வர இருப்பதால் சென்னை பிரான்சில் நிறைய வேலை காத்திருப்பதால் தன் அன்னையிடம் “அம்மா மாலை நான் நேராக ஏர்போட்டுக்கே வந்து விடுகிறேன். நீங்க வீட்டில் இருந்த மாலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் போதும்.” என்று சொல்லி விட்டு ஆபிசுக்கு வந்து சேர்ந்தான்.

ஆபிஸ் வந்ததும் வேலை நிறைய இருந்ததால் வேறு எந்த சிந்தனை எதுவும் இல்லாமல் மூன்று மணி வரை வேலை சரியாக இருந்தது.பின் தான் அவன் மதிய உணவே உட் கொண்டான். உணவை சாப்பிட்ட உடன் டெல்லியில் தன் சிஸ்டரிடம் என்ன பேச வேண்டும் என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

நாம் கேட்டால் உண்மையான பதிலை சொல்வாளா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.அப்படி அவள் எதுவும் சொல்ல வில்லை என்றால் என்ன செய்வது என்ற யோசனையின் முடிவில் நாம் இன்று போன உடனே அவளிடம் பேசி விட வேண்டும்.

அப்படி பேச வில்லை என்றால் நாளை அங்கிருந்தே நமக்கு எப்போதும் செய்து கொடுக்கும் சென்னையில் உள்ள டிடெக்டிவிடம் ஆருண்யா படித்த காலேஜ் மற்றும் வருடம் சொல்லி விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.பாவம் அவனுக்கு தெரிய வில்லை தனக்கு முன்னே ஒருத்தி அனைத்து விவரத்தையும் திரட்டி தன்னை தேடிக் கொண்டு வர போகிறாள் என்று.

டிடெக்டிவ் ஆபிசில் இருந்து வெளியே வந்த பரினிதாவோ ரிசப்ஷன் ஹாலில் உள்ள சேரில் அமர்ந்துக் கொண்டு ஒபன் செய்த கவரில் உள்ள ரிப்போர்ட்டை படிக்க ஆராம்பித்தாள்.அதில் இப்போது ஆருண்யா டெல்லியில் உள்ளார் என்று தெரிந்ததுக் கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்தது.

அவள் நினைத்த திட்டமே வேறு. அடுத்த வாரம் சித்தார்த்துக்கு பிறந்த நாள் வருகிறது.அதற்குள் ஆருண்யாவிடம் பேசி திருமணத்திற்க்கு சம்மந்தம் வாங்கி தன் அண்ணனுக்கு ஒரு சர்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்பது அவள் திட்டமாக இருந்தது.

இப்போது அவர்கள் ஊரில் இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும், தன் மனதுக்குள் சூழ்நிலையை குறை சொல்லகூடாது. எப்படி பட்ட சூழ்நிலையையும் நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அவளுக்கு அவளே பாராட்டு பத்திரமும் வாசித்துக் கொண்டாள்.

பரினிதா நீ எங்கேயோ போய்ட்டே போ. என்னம்மா திங் பண்ணுறே… நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை என்று அவளே அவளை பாராட்டிக் கொண்டு தன் மனதில் போட்ட திட்டத்தை செயல் படுத்த எண்ணினாள்.

அதில் ஆஷிக்கின் வீட்டு முகவரியும் இருந்தது ஆபிஸ் முகவரியும் இருந்தது. இப்போது நாம் எங்கு போகலாம் என்ற யோசனையின் முடிவில் ஆஷிக் ஆபிசுக்கே செல்லலாம். ஆஷிக்காவது அன்று சொர்க்க பூமியில் பார்த்தோம்.

அன்று நம்மிடம் நன்றாக தான் பேசிக் கொண்டு இருந்தார்.நான் தான் ஐஸ்கிரீம் மீது உள்ள ஆசையால் அனைத்து பேவரேட்டையும் எடுத்து வைத்துக் கொண்டோம். அதனை பார்த்து தான் பாவம் மனுஷன் பயந்து ஒடி விட்டார்.

இனி மேல் இது போல் செய்யமாட்டேன் என்று சொல்லி நாம் பேச்சு வார்த்தையை தொடரலாம் என்று முடிவு செய்துக் கொண்டு ஆஷிக்கை சந்திப்போம் என்று இறுதி முடிவை எடுத்த பரினிதா நேராக ஒரு பிரபலமான துணிகடைக்கு சென்றாள்.

அங்கு மங்களகரமான ரெட் கலர் சாரியை எடுதுக் கொண்டு அடுத்து ஒரு நகை கடை சென்று ஒரு மோதிரத்தை வாங்கி கொண்டாள். அவளுக்கு பெரிய நகை வாங்க தான் எண்ணம்.

ஆனால் என்ன செய்வது ஆர்வ கோளாரில் எடுத்து வந்த பணத்தில் முக்கால் பாகம் அந்த டிடெக்டிவுக்கு கொடுத்து விட்டதால் இருக்கும் பணத்தில் இது தான் வாங்க முடிந்தது அவளாள்.

பின் பூ பழம் என்று அனைத்தையும் வாங்கிக் கொண்டாள். இந்த சம்பிரதாயம் எல்லாம் எப்படி தெரியும் என்றால் பொள்ளாச்சியில் இவர்கள் குடும்பம் தான் பெரிய குடும்பம் என்பதால் ஒரு வீட்டில் திருமணம் வைத்தால் இவர்கள் வீட்டில் இருந்து இந்த சீதனம் அந்த திருமண வீட்டுக்கு சென்றடையும்.

அவள் அம்மா இருக்கும் வரையில் அவர்கள் தான் இதனை வாங்குவார்கள்.தன் அம்மாவின் பின்னையே சுற்றும் பரினிதா இதனை பார்த்து என்ன என்று கேட்ட போது ஒரு பெண் வீட்டுக்கு திருமணம் செய்யும் போது இது கொடுப்பது நமது சம்பிரதாயம் என்று சொன்னதை நியாபகம் வைத்துக் கொண்டு இதனை எல்லாம் வாங்கினாள். குறிப்பாக ரெட் கலர் சாரி எடுத்ததுக்கும் இதுவே காரணம்.

தன் அன்னை மங்களத்தை குறிப்பது ரெட் அது தான் ஒவ்வோரு பெண் வீட்டுக்கும் இது வாங்குகிறேன் என்று சொன்னதை நினைவு கூர்ந்து அனைத்தும் வாங்கிக் கொண்டு ஆஷிக்கின் ஆபிசுக்கு சென்றாள்.

அப்போது தான் ஆஷிக் அனைத்து வேலையும் முடித்து விட்டு ஏர்போட் செல்வதற்க்காக தன்னுடைய ஒய்வு எடுக்கும் அறையில் எப்போதும் இருக்கும் உடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமுக்கு சென்று தன்னை சுத்தபடுத்திக் கொண்டு மாற்று உடையும் மாற்றி தன்னுடைய சீட்டில் அமர்ந்தான்.

இன்னும் செல்வதற்க்கு ஒரு மணி நேரம் இருப்பதால் தன்னுடைய மனேஜரை அழைத்து அனைத்து விவரத்தையும் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ரிசப்ஷனில் இருந்து ஆஷிக்குக்கு கால் வந்தது.

அதனை எடுத்து காதில் வைத்ததும் ரிசப்ஷனிஸ்ட்டில் சொன்ன “ உங்களை பார்க்க “ என்ற வார்த்தையை முடிக்க கூட வில்லை.

சட்டென்று கோபத்துடன் “இப்போது நான் ஏர்போட்டுக்கு கிளம்பி கொண்டு இருக்கிறேன் யாரையும் பார்க்க முடியாது.” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

ஸ்ரீதரிடம் ஒரு வாரத்துக்கு உண்டான வேலையை விளக்கி கொண்டு இருக்கும் போது திரும்பவும் ரிசப்ஷனில் இருந்து போன் வந்ததும் எடுத்த உடன் கத்த ஆராம்பித்து விட்டான்.

ஆனாலும் அந்த ரிசப்ஷனிஸ்ட்டு மிக பொறுமையாக “சார் வந்து இருப்பது நம் சென்னையின் கலெக்டர் தங்கை சார்.” என்று சொன்னது தான் தாமதம்.

“ உடனே அனுப்பு .“

என்று சொல்லி விட்டு கண் ரூமின் வாசலை பார்த்திருந்தாலும், மனதோ எதற்க்கு வந்திருப்பாள் என்று என்ன யோசித்தும் அவனால் ஒரு சதவீதம் கூட கெஸ் பண்ண முடியவில்லை.

ஸ்ரீதரும் வாசலையே பார்த்திருந்தார். யாருக்காக ஆஷிக் இவ்வளவு ஆர்வமாக வாசலை பார்க்கிறார் என்று நினைத்து அவரும் பார்க்கும் போதே… கையில் ஒரு பெரிய தாம்புல தட்டும் .அதில் பரினிதா வாங்கிய புடவை மோதிரம், மற்றும் பூ, பழம் அதனில் வீற்று இருக்க கையில் ஏந்தியபடியே ஆஷிக்கை பார்த்து புன்னகைத்துக் கொண்டு தான் கொண்டு வந்த தட்டை ஆஷிக்கின் டேபிள் மேல் வைத்து எதிர் சீட்டில் அமர்ந்துக் கொண்டாள்.

ஆஷிக் எதுவும் பேசாமல் அவளையும் தன் டேபிளில் அவள் வைத்த தட்டையுமே பார்த்துக் கொண்டு இருந்தான். பரினிதாவோ அவன் பேசாததை ஒரு பொருட்டாகவே கருதாமல் தான் வந்த வேலை தான் முக்கியம் என்பது போல் ஆஷிக்கிடம் பேச ஆராம்பித்தாள்.

“ நான் இந்த தட்டுடன் ஏன் வந்திருக்கிறேன் என்று தானே யோசிக்கிறீர்கள் அங்....சாரி சாரி இனிமேல் நான் உங்களை அங்கிள் என்று கூப்பிட மாட்டான்.” பின் அவளே எப்படி கூப்பிடுவது என்று சத்தமாக பேசி விட்டு மனதுக்குள் ஏதோ உறவு முறை யோசித்தவள் ஆஷிக்கிடம் “நான் உங்களை அத்தான் என்று கூப்பிடவா மாமா என்று கூப்பிடவா…?” என்று அவனிடமே கேள்வியும் எழுப்பினாள்.

அவளின் பேச்சிம் அவளின் செயலும் ஆஷிக்குக்கு மேலும் குழப்பதையே ஏற்படுத்தியது.இருந்தாலும் அவளின் அத்தான், மாமா ,என்ற அழைப்பு அவன் மனதுக்குள் மழை சாரல் அளித்தது.

பரினிதாவோ அவனின் குழப்பமான முகத்தை கருத்தில் கொள்ளாமல் மேலும் குழப்பி விட பேச்சை தொடர்ந்தாள்.

“எங்கள் ஊர் வழக்கப்படி சம்மந்தம் பேசவரும் போது செய்வது போல் அனைத்தும் வாங்கி விட்டேன்”.என்று கூறி எழுந்து நின்றுக் கொண்டு டேபுல் மேல் வைத்த தட்ட எடுத்து அவன் புரம் நீட்டினாள்.

ஆஷிக் பரினிதா நீட்டிய தட்டை வாங்காமல் அவளையே யோசனையுடன் பார்த்திருந்தான். அவன் மனதுக்குள் இவள் என்ன சம்மந்தம் என்று சொல்கிறாள். நான் இவள் சிறு பெண் என்று நினைத்திருந்தால் இவள் என்னடா என்றால் அதிரடியாக காரியத்தில் இறங்கி இருக்கிறளே என்று தான் அவனுக்கு நினைக்க தோன்றியதே …தவிர அவள் தன் சிஸ்டரை அவள் அண்ணனுக்கு பெண் கேட்டு வந்து இருப்பாள் என்று சிறிதும் அவனுக்கு எண்ண தோன்றவில்லை.

அவன் இவ்வாறு யோசித்துக் கொண்டு இருக்கும் போதே பரினிதா டேபுள் அந்த புரம் இருந்ததால் தட்டின் கணம் தாளமல் அவள் அந்த தட்டை நழுவி விழ பார்க்க .ஆஷிக் சிறிதும் யோசிக்காமல் அதனை சட்டென்று தன் கையில் வாங்கிக் கொண்டான்.

பரினிதா தன் கையில் உள்ள தட்டை அவன் வாங்கிக் கொண்டதும் அவனிடம் “அப்போ நாம் சம்மந்தம் செய்துக் கொண்டோம். அப்படியே கல்யாண நாளையும் குறிச்சிடலாமா…?”

என்ற அவள் பேச்சைக் கேட்டதும் இவளுக்கு எதில் விளையாடுவது என்று விவஸ்தையே இல்லையா…? அதுவும் ஸ்ரீதரின் முன்னால் என்று நினைத்த ஆஷிக். தங்களையே குரு குரு என்று பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீதரை போகும் படி கண் சாடை செய்தான்.

இது வரை பரினிதாவின் செயலை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீதர். ஆஷிக்கின் கோபமான கண் சாடையில் பவ்வியத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றாலும், மனதுக்குள் அந்த பெண் செய்ததுக்கு அவளிடம் கோபம் பாடாமல் தன்னிடம் காண்பித்தது ஏதோ இடிக்கிறதே… என்று எண்ண தோன்றியது.

வெளியில் ஸ்ரீதரை அனுப்பி விட்ட ஆஷிக் இது வரை இருந்த இளகு தன்மை மாறி கோபத்துடன் தட்டை காண்பித்து .

“இது என்ன பைத்தியகாரத் தனம் .” என்று திட்டினான்.

அவனுக்கு ஸ்ரீதர் முன்னால் இவள் இப்படி செய்து விட்டாளே… அவன் என்ன நினைப்பான் பரினிதாவை .அந்த கோபத்தில் தான் அவளை திட்டினான்.

அவன் கோபமாக திட்டியதும் பரினிதாவும் கோபத்துடன் “இதில் என்ன பைத்தியகார தனம் இருக்கிறது.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் என்னை பாராட்ட தான் வேண்டும்.அதை விட்டு என்னை திட்டுகிறீர்களே…

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இதை நீங்கள் செய்து இருக்க வேண்டும். ஆனால் என்னளவு உங்களுக்கு பொறுப்பு உணர்வு இல்லை என்றாலும் நானே அனைத்தையும் கண்டு பிடித்து செய்து இருக்கும் போது என்னை பாராட்டாமல் திட்டுகிறீர்களா…?” என்று கோபத்துடன் வினாவினாள்.

அவளின் நானே கண்டுபிடித்து என்ற வார்த்தை கேட்டவுடன் தான் அவன் யோசிக்கவே ஆராம்பித்தான். நான் இவளை நினைத்தது யாருக்கும் சொல்ல வில்லையே… இவள் என்ன கண்டு பிடித்தாள்.இவள் வேறு விஷயத்துக்கு வந்து இருக்கிறளா…? ஆனால் சம்மந்தம் என்று சொன்னாளே…

சரி இனி நாம் எதுவும் பேச வேண்டாம். எது என்றாலும் அவள் வாயில் இருந்தே வரட்டும் என்று அவள் முகம் பார்த்தான்.

ஆனால் பரினிதாவோ தான் வந்த வேலையை மறந்து அங்கு கண்ணாடி வழியே தெரியும் வாட்டர் ப்ளாஸை ரசித்துக் கொண்டு இருந்தாள். அவளின் ரசனையான முகம் இவனுக்கும் ரசிக்கும் படி இருந்தாலும் டெல்லி செல்வதற்க்கான ப்ளைட்டின் நேரம் நெருங்கி விட்டதாலும்,அங்கு தன் அன்னை வந்து காத்திருப்பார்கள் என்ற காரணத்தாலும், அவளை அழைக்கும் பொறுட்டு.

“ பே…” பேபி என்று அழைக்க வந்தவன் மாற்றி “பரினிதா எது என்றாலும் சீக்கிரம் சொல். நான் டெல்லி போக வேண்டும். ஏர்போர்டில் என் அம்மா காத்துக் கொண்டு இருப்பார்கள்.” என்ற வார்த்தையை கேட்டதும்.

ஆவாளுடன் அவன் முகம் பார்த்து “ அண்ணியைய் பார்க்க போகிறீர்களா..?” என்ற கேள்விக்கு

“உங்கள் அண்ணி யார்…? நான் ஏன் அவர்களை பார்க்க வேண்டும்.” என்ற வார்த்தை முடிக்கும் முன்னே அவனுக்கு சட்டென்று மனதுக்குள் அதுவாக இருக்குமோ ….என்று சந்தேகம் வந்தவுடன் அவளையே கூர்மையுடன் பார்த்து .

“இப்போ யாரை நீ அண்ணின்னு சொன்னே…?”

“ஆருண்யா அண்ணியைய் தான் சொன்னேன்.”என்று சொல்லி விட்டு உனக்கு இது கூட தெரியாதா என்று ஒரு முட்டாளை பார்ப்பது போல் அவனை பார்த்து வைத்தாள்.

“என்ன உளறுகிறாய்.”

“நான் ஒன்னும் உளறளைய். நீங்க தான் ஒன்னும் தெரியாமல் இருக்கிறீங்க.” என்று சொல்லி விட்டு கண் சாடையில் பக்கத்தில் வா என்று அழைத்தும் ஆஷிக் ஒன்றும் புரியாமல் அப்படியே அமர்ந்து இருக்கவும் பரினிதாவே எழுந்து ஆஷிக் பக்கத்தில் நின்று அவன் காதில் “என் அண்ணாவும், உங்கள் சகோதரியும் லவ் பண்றாங்க “ என்று சொல்லி விட்டு அவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்து வைத்தாள்.

அவள் பேசுவதை நம்பவும் முடியாமல், நாம்பாமல் இருக்கவும் முடியாமல், முழித்து அவளையே பார்த்தான். நம்ப முடியவில்லை என்பதற்க்கு காரணம் பரினிதாவின் செயல் தான்.

முதலில் இவளுக்கு எப்படி தெரியும் சித்தார்த்தும் ஆருண்யாவும் விரும்பினார்கள் என்று. சித்தார்த் சொல்லி இருப்பான் என்று அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.சித்தார்த் பரினிதாவை ஒரு குழந்தை போல் நடத்துகிறான் என்று அன்று சொர்க்க பூமியில் பார்த்த சிறிது நேரத்திலேயே தெரிந்துக் கொண்டான்.

அதனால் கண்டிப்பாக தன் மனதை இவளிடம் சொல்லி இருக்க மாட்டான்.அதனால் இவள் ஏதோ உளறுகிறாளோ என்று சந்தேகம் ஏற்பட்டது. ஒரு வேளை இவள் சொல்வது உண்மையோ என்று யோசப்பதற்க்கு காரணம் ஆருண்யா திருமணம் வேண்டாம் என்று சொல்வது.
Super sis episode
 
nice ud. farinitha veetla patti periyavanga irukanga ethum yosikama ashik kita vanthu pesitrukiye..
 
Top