Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Elampoorani’s Mona Devathai – A Short Story

 

வணக்கம் நான் கார்த்திகேயன்,இவள் என் சரிபாதி கயல்விழி .                  

 நான் ஐடி துறையில் வேலைபார்க்கும் ஒரு சராசரி இளைஞன்.                                              

என்னடா இவன் எடுத்தவனே அவனோட அறிமுகம் கொடுக்கிறான் பார்க்கிறீர்களா?                          



Advertisement

 எங்களோட  வாழ்க்கையில முக்கிய மொழியாக இருந்தமௌனம்எனது   வாழ்க்கையாகவே மாறிய கதைதான் இது .                                                     

 இத நான் சொல்ற மாதிரி சொன்னால் தானே நல்லா இருக்கும்.                         

அதனால நானும் என் சரிபாதியும் இந்த கதையை சொல்ல போகிறோம். “அதனால தான் எங்களோட  அறிமுகம் முதல்ல“. 

Advertisement

என் சரிபாதியை பற்றி அவளே சொல்லுவாள். Avar avar ennankal avargalr pakirnthal than inimai.

Advertisement

கார்த்திகேயன்: 

நான் என் வீட்டிற்கு ஒரே பிள்ளை.                                         

வழக்கமாக வீடுகளில் ஆண் பிள்ளைகள் அம்மாவின் செல்லப் பிள்ளைகளாக இருப்பர்.                                     

Advertisement

ஆனால் என் வீட்டில் நான் தந்தையின் செல்லப்பிள்ளை.” 

காரணம் எனக்கும் என் தாய்க்கும் ஆனா உரையாடல் வெறும் மௌனமாக மட்டுமே இருக்கும்“. 

ஆம்,  புகைப்படத்தில் இருப்பவர்கள் நமக்கு மௌனத்தை மட்டுமே பதிலாக அளிப்பார்கள்  இல்லையா?                

 நான் எனது தாயை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.” 

என் தந்தையின் மேல் உள்ள நம்பிக்கையில் என் தாய் என்னைவிட்டு சென்றுவிட்டார் நான் பிறந்த உடனே“.                            

என் தந்தை  ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்.                     

என்னதான் ஐடி துறையில் வேலை பார்த்தாலும், கைநிறைய சம்பாதித்தாலும்,   நான்  என் தந்தையின் பேச்சை மீறியது கிடையாது“.                                           

 என் தந்தையும் அவரது பேச்சை மட்டுமே நான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரல்ல.

எனக்கு முழுசுதந்திரம் கொடுத்து இருந்தார்“.

 என் தாயின் நம்பிக்கையை பொய்யாகமல்  என்னை நல்ல விதமாகவே வளர்த்தார்.                                         

அத்தனை நாள் மௌனம் என்பது எனக்கும் என் தாய்க்கும் இடையேயான ஒரு உணர்வாக மட்டுமே இருந்தது

 என் நாளின் தொடக்கம்  என்  தாயுடனான ஆன மவுன  பேச்சு வார்த்தை உடன் ஆரம்பிக்கும்.   

என் முதல் தோழன் எனது பைக் “லக்கி”.

அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது boss..

 “ஆனாலும் லக்கி என்ற பெயர் பிடித்ததால் என் முதல் தோழனுக்கு அதையே வைத்துவிட்டேன்“.  

 இரண்டாவது உற்ற தோழன் சதிஷ் என்னுடன் வேலை பார்ப்பவன்.

அன்று வழக்கம் போல் நான் வேலைக்கு கிளம்பி வந்த போது என் தாயுடனான மவுனம் பேச்சு அன்று இல்லாமல் போனது

வீட்டில் பராமரிப்பு வேலைகள் நடப்பதால் சுவரில் இருந்த புகைப்படங்கள் அனைத்தும் ஓர் அறையில் அடுக்கப்பட்டிருந்தன.

 இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங். அந்த படபடப்புடன் வந்த எனக்கு என் தாயின் புகைப்படம் இல்லாதது மீண்டும் ஒரு பெரிய படபடப்பையும் மனதில் கவலையையும் கொடுத்தது .

சூழ்நிலை என்னவோ நன்றாக தான் இருந்தது மிதமான குளிரோடு காலை வெயில் ஆரம்பமானது

நல்ல மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த குளிரான சீதோசனம் மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.                                         

சாதாரண மனநிலையில் இருந்து இருந்தாலும் அந்த சூழ்நிலை நமக்கு மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கும்.   

“எனக்குத்தான் இந்த நாள் மோசமானதாக இருக்கும் என்று எண்ணம்”

ஆனால் அப்போது எனக்கு தெரியாது, இந்த இனிமையான சூழ்நிலை போல்  “இந்த நாள் என் வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாளாக அமையும் என்று” .

 தாயின் புகைப்படத்தை பார்க்காத கவலையோடு வெளியே வேகமாக வந்தபோது என் முதல் நண்பன் என்னை ஏமாற்றிவிட்டான்.

 “பஞ்சர் கடைக்கு அழைத்தால் மட்டுமே வருவேன் இல்லாவிடில் என்னால் நகர முடியாதுஎன்று படுத்துவிட்டான்.                              

அடுத்த சோதனை என எண்ணிக் கொண்டே வேகவேகமாக அருகில் இருக்கும் பஸ் நிலையத்திற்கு சென்றேன்.  

நான் செல்லும் பஸ் வர இன்னும் நேரம் இருக்கிறது போல “. 

என்னை போல் பலர் அங்கு காத்துகிடந்தனர்ஆனால் எவர் முகத்திலும் என்னால் எனது படபடப்பையும் கவலையும் போல் காண முடியவில்லை .     

இயல்பாய் நின்றிருந்தனர். நான் செல்லும் பஸ் வந்து விட்டது”.

 வேகமாக திரும்பிய போது பஸ்ஸின் முதல் இருக்கையில் ஜன்னலோரத்தில் தெரிந்தது ஓர் முழுநிலவு.                  

 மனதில்அழகிய ஜன்னலோர தேவதைஎன்று தோன்றியது.                            

“அவளை பார்த்த முதல் என் படபடப்பும் கவலையும் மறைந்து நெஞ்சம் கொஞ்சம் அமைதி கொண்டது”.

 “என் தாயின் புகைப்படத்தை பார்த்தால் matum வரும் அந்த உணர்வு”. வேகமாக சென்று பஸ்ஸில் ஏறிக்கொண்டேன் .

வழக்கம் போல் நிறைய கூட்டம் இல்லை”   ஆயினும் எல்லாம் இருக்கைகளிலும் ஆட்கள் இருந்தனர்.                                 

 அந்த தேவதையின் அருகில் தான் நின்றிருந்தேன்

அவள் இருந்த இருக்கையில் மட்டுமே இடம் இருந்தது“. ஆனாலும் உட்கார தயக்கம் எனக்கு.

என்னதான் படித்து ஐடிதுறையில் வேலை பார்த்தாலும் பெண்களோடு சகஜமாக பேசுவது என்பது கொஞ்சம் தயக்கம்தான். .                                                            

“அந்த பாடத்தில் நான் ரொம்பவே வீக்”. அப்போது  அந்த தேவதை என் பக்கம் பார்த்து  அமருமாறு கண்ணை அசைத்தாள்.                                       

எவ்வளவு அழகான கண்கள்“. கண்கள் பேசும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் அதை இன்று தான் முதல் முறை உணர்கிறேன்.                                   

அவளுக்கு என் படபடப்பு புரிந்திருக்கும் போல.”

 அவள் கையில் இருந்த வாட்டர் பாட்டிலை என்னிடம் கொடுத்தாள்“. அப்போது எனக்கு அது தேவையாகதான் இருந்தது.                                         

 என்னதான் மனம் அமைதி அடைந்து இருந்தாலும்எனது படபடப்பு கொஞ்சம் இருந்து கொண்டேதான் இருந்தது“.       

பின்பு என்னை பார்த்த அழகாய் ஒரு புன்னகை

அந்த புன்னகையே  என் வாழ்க்கையாகி போகும் “. என அந்த நிமிடம் நான் நினைக்கவில்லை.                   

அதன் பின் நானும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்தேன். பின்பு நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிவிட்டேன்.

அதுவரை என்னிடமிருந்த படபடப்பு ஏதுமின்றி அமைதியாக இருந்தேன்.

 பின்பு வழக்கம் போல் ஆபீஸ் சென்று மீட்டிங் நல்லபடியாக முடித்து எனது இருக்கையில் அமர்ந்திருந்தேன்

 இந்த மீட்டிங்காக நான் கவலைப்பட்ட காரணம் இந்த மீட்டிங்தான்.

 “என் வேலையின் அடுத்த கட்டத்தை முடிவு செய்யப்போகிறது“.

 ஆம், எல்லா இளைஞர்கள் போல் நானும்அயல் நாடு சென்று வேலை செய்ய வேண்டும்என்பது எனது நீண்டநாள் ஆசை. இந்த மீட்டிங்தான் அதற்கான அடிப்படை.                                         

  “இப்போது புரிகிறதா என் கவலையும் படபடப்பும் ஏன் வந்தது என்று.”       

 அப்போது  என் அருகில் வந்தான் என் உற்ற நண்பன் சதீஷ். “இளம் வயதிலிருந்தே என்னுடன் இருப்பவன்“. எனது உணர்வுகளை நன்றாக புரிந்து கொள்வான்.             

அன்று என் மனதில் இருந்த மகிழ்ச்சியால் என் முகமும் பிரகாசமாக இருந்ததுஎன்ன மச்சி,மீட்டிங் நல்லபடியா முடிந்தது போல இவ்வளோ பிரகாசமா இருக்கு“. 

ஆமாண்டா ஒரு வழியா இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சு .செம ரிலாக்ஸ்டா இருக்கேன்.

அதுசரி ,அதை விட வேறு ஏதோ ஒன்று உன் முகத்துல இன்னிக்கு இருக்கு? என்ன விஷயம்? 

நானும் காலையில்  நடந்ததை சொன்னேன்.  

 “அவன் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்தவன்“. 

 சரி விடு இன்னைக்கு ஒரு நாள்தானே பஸ்ல வந்தஅது நல்ல அனுபவம் நினைச்சுக்கோ“. 

அவன் பேச்சில்வேறு ஏதும் நினைத்து மனதை குழப்பிக் கொள்ளாதேஎன்ற விளக்கம் இருந்தது.                        

அவன் சொல்லாத போதும் எனக்கு அது புரிந்துதானிருந்தது

ஆனாலும் என்னால்அந்த ஜன்னலோர தேவதையை நினைக்காமல் இருக்க முடியவில்லை“.

நாட்கள் போகபோக சரியாகிவிடும் என்று நினைத்துக கொண்டு எனது மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டேன்.

 நாட்கள் சென்றாலும் என்னால்என் ஜன்னலோர தேவதையைமறக்க முடியவில்லை.                                     

 தினமும் ஆபீஸ் செல்லும் போதுஎத்தனை பேருந்துகள் என்னை கடந்தாலும் என் கண்கள் ஜன்னலோரசீட்டில் இருப்பவர்களை ஆராய்ந்து கொண்டிருந்தது என்னையுமறியாமல்“. 

பின்பு எதேச்சையாக ஒரு நாள் அந்த பஸ்சை நான் கிராஸ் செய்ய வேண்டி வந்தது

அப்போதுஅந்த ஜன்னல் ஓரத்தில் என் தேவதை இருந்தாள்“.                                  

 ஆம்,”என் தேவதை அவள்”

அவளை  “பார்க்காத இத்தனை நாள்களிலும்அவளை பார்த்தஅந்த நொடி தோன்றிய உணர்வுஎன  என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.அவள் என் தேவதை என்று .    

 என் மனம் சிறகு இல்லாமல் பறந்தது. அதன் பின் தினமும் அந்த பேருந்து வரும் நேரத்திலேயே நான் என் பயணத்தை தொடர்ந்தேன்.” 

தினமும் என் ஜன்னலோர தேவதையின் தரிசனம் கிடைத்தது“.                                   

ஒரு சில நாட்களிலேயே எனக்கு புரிந்துவிட்டது, அந்த ஜன்னல் ஓர தேவதைதான் என் வாழ்க்கை என்று

அதன் பின் என் முதல் நண்பனை கழட்டிவிட்டு தினமும் பேருந்து பயணம் என ஆரம்பித்தேன்.                               

 கேள்வி கேட்ட என் தந்தையிடம் ஏதேனும் காரணங்கள் சொல்லி சமாளித்து கொண்டு இருந்தேன். அவர் ஒரு மாதிரியாக பார்த்தார். .ஆனால் எதும் கேட்கவில்லை .

 இவ்வாறு தினமும் அவளை பார்ப்பது வெறும் புன்னகை என என் நாட்கள் சென்று கொண்டிருந்தது.                  

 அவளும் என்னை பார்த்து புன்னகைக்க ஆரம்பித்திருந்தாள்.

 ஒவ்வொரு நாளும் அவள் என்னை பார்த்து புன்னகைக்கும்அந்த தருணம் மட்டுமே என் நாட்களில் முக்கியமாக நிமிஷம் என  சேமிக்கப்பட்டது என் மனதில்“.          

அவளை பார்க்காத நாட்கள் வெறுமையாக நகர்ந்தது .அனைவரும் விரும்பும் வார   இறுதி விடுமுறை எனக்கு பிடிக்காமல் போனது.  

 அவளோடு பார்வையில் மட்டும் பேசாமல் நேரில் பல கதைகள் பேசிட ஆசை எழுந்தது.” உதடுகள் பேசாவிட்டாலும் அவள் கண்கள் தினம் ஆயிரம் கதைகள் பேசும்“.         

பேசாவிடினும் எங்களுக்குள் ஓர் சொல்லப்படாத நட்பு ஆரம்பித்திருந்தது.

 என் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்டு என் நண்பன் என்னிடம் கேட்ட போது அனைத்தையும் சொல்லிவிட்டேன்.   

 அவனும் இதைஇப்படியே வளர்த்துக்கொண்டு இருக்காதே நேரடியாக பேசி முடிவுசெய்என்று கூறினான். 

 என்னாளும்  நாட்களை இவ்வாறு கடத்த முடியவில்லை. “ஒரு நாள் அவளிடம் பேசி விடுவதுஎன அவள் அருகில் சென்றேன்.             

 அவள் அருகில் இருந்த ஒரு பெண்மணி அவளிடம் ஏதோ கேள்வி கேட்க அவள் அதற்கு சைகையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்

அந்த பெண்மணி ஏன் இவாறு  பேசுகிறாள் என கேட்க, அப்போது தான் தெரிந்ததுஅவள் ஓர் கடவுளின் குழந்தைஎன்று.                                    

 “எனக்கு இது அதிர்ச்சியான செய்தியாக இருந்ததுஇருந்தாலும்அதிர்ச்சிதான் ஒழிய வேறு ஏதும் எதிர்மறை எண்ணங்கள் இல்லை.

 இது நாள் வரைஎன் ஜன்னலோர தேவதையாகஇருந்தவள்ஒரு மௌன தேவதைஎன புரிந்து கொண்டேன்.        

இந்த மௌன தேவதையே என் வாழ்க்கையாக வேண்டுமென அந்த நிமிடம் இன்னும் உறுதியாக நினைத்து கொண்டேன்

அவளும் என்னை கவனித்துவிட்டாள்

அவள் முகத்தில் ஓர் கவலை.                      

 சரி நண்பர்களே இங்கிருந்துஎன் மௌன தேவதையே மீதி கதையை உங்களுக்கு சொல்லுவாள்“.

அவள் சொல்வதை நான் மொழி பெயர்கிறேன். 

அவள் எண்ணங்கள் அவள் வாய்மொழியாக கூறினாலே புரியும்.                                                          

 நான் கயல்விழி

கார்த்திக்கின் மௌன தேவதை“. Enada ival ipad solkiral enru parkirengala?

Ithu thanapikai.en kathal engalitha hanambikai’

வீட்டில் ஒரே பெண் .என்னால் பேச முடியாது .பிறவி குறை.

என்னை பற்றி தெரிந்த பிறகு என் பெற்றோர் இனொரு குழந்தை வேண்டாம் என்று முடிவேதுவிட்டனர்

 படித்தது எல்லாம் ஸ்பெஷல் ஸ்கூல். .டிகிரி முடித்து இப்போ ஒரு ஸ்பெஷல் ஸ்கூல்லில் வேலை பார்க்கிறேன்

சரி என்னை பற்றிய அறிமுகம் போதும் வாருங்கள் அன்று என்ன நடந்தது என்று கூறுகிறேன்.                                

 அன்று ஒரு பெண் என்ன அருகில் அமர்ந்திருந்தாள்ரொம்ப நேரமாக என்னிடம் பேசி கொண்டே வந்தார் .

நான் அவர் பேசுவதில் பாதி கவனமும் ,இவரின் மேல் கவனனுமாக இருந்தேன்.

 அப்போது அந்த பெண் ஏன் பதில் பேசவில்லை என கேட்க ” நான் சைகையில் பதில் சொன்னேன்“.      

 கார்த்தி என்னை பார்த்து கொண்டிருக்கிறார் என தெரிந்து.

 அந்த பெண்னிடம் பேசிவிட்டு  கவலையோடு அவரை பார்த்தேன் . “அந்த கண்களில் ஏமாற்றத்தையும் பரிதாபத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன்“. ஆனால்அந்த கண்கள் என்னை ஏமாற்றிவிட்டன“.                                       

 ஆம், அதில் எனக்கு தெரிந்தது காதல் மட்டுமே“. அந்த நிமிடம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .

ஆனாலும் நான் நிதர்சனம் உணர்ந்தவள் . “பிறந்ததிலிருந்து மௌனம் மட்டுமே என் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வருகிறேன்“. 

எத்தனையோ மனிதர்களை கடந்துவிட்டேன். அவர்களில் பெரும்பாலானோர் பார்வையில் நான் பரிதாபம் மற்றும் ஏளனம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

நான் படித்து முடித்து வேலை பார்த்தாலும்  மற்றவர்களை பொறுத்தவரை நான் ஓர் சராசரி பெண் அல்ல.

அதும் கடந்த வருடங்களில் நான் தெரிந்து கொண்டதுதிருமண வாழ்க்கைக்கு நான் தகுதியானவள்  அல்லஎன்று இந்த சமூகம் என் மேல் முத்திரை குத்திவிட்டது

அதனால் நான் அந்த கண்களின்  காதலை புறக்கணித்து நகர்ந்து சென்றுவிட்டேன்.

 ஆனால் நானும் சாதாரண உணர்வுள்ள பெண்தான்.” ஆசைகளும் ஆபாசங்களும் என்னுள்ளும் இருக்கின்றன

கார்த்திக்என்னை பார்த்த போது அவருக்கு தோன்றிய உணர்வு எனக்கும் தோன்றியது“.                                            

ஆனால் என்னால் வெளிப்படுத்த இயலாது.என் போல் உள்ளவர்களை கார்த்திக்கடவுளின் குழந்தைகள்என்று கூறினார்

ஆனால் அவர் போலவே அவர் சுற்றத்தாரும் நண்பர்களும் நினைப்பார்கள் என்று கூற முடியாது.

 அந்த கண்களின் காதலை நான் ஏற்று கொண்டால்என் மேல்  படும் பரிதாப பார்வைகளும், ஏளன  பார்வைகளும் கார்த்திகையும் தொடரும்“. 

 அதனால் நான்அங்கிருந்து மௌனமாக நகர்ந்து விட்டேன் . “மௌனம்   எனக்கு புதிதல்லவே“.

 நான் அவ்வாறு நகர்ந்த பின்பு கார்த்திக் முகத்தில் தோன்றிய வேதனை என்னுள் வலியயை தந்தது .

அவரின் கவலை என்னை பாதித்தாலும் என்னால் அங்கு நிற்க முடியாது.         

 “காதல் என்பது சுகம் மட்டுமே தருவதல்லவே , வலிகளும் கூடத்தான்“. 

இங்கு என் மௌனத்தால்எங்கள் காதல் இருவருக்கும் வலிகளை மட்டுமே கொடுத்திருக்கிறது“.                                   

ஆம் , காதல் எங்களுக்கு சொல்லாவிடினும் நாங்கள் புரிந்து கொண்ட உணர்வு” .

“அதை மாற்றவும் முடியாது மறக்கவும் முடியாது“. 

ஆனால் நிதர்சனம் வேறு அல்லவாகாதல் வெறும் வார்த்தையாக மட்டுமே எங்களுள் இருந்து  இறந்துவிட்டது“.           

அப்படித்தான் நான் நினைத்து கொண்டிருந்தேன். அந்த நாள் வரும் வரை.

 அன்றைக்கு பிறகு கார்த்திக் பல முறை என்னிடம் பேச முயன்ற போதும் நான் அவரை தவிர்த்துவிட்டேன்

என் பயண நேரத்தையும் மாற்றி கொண்டேன்.                                                 

 என் மனதில் காதலின் வலியோடு சேர்ந்து ஓர் குற்றவுணர்ச்சிஇதை முதலிலேயே நான் தடுத்திருக்கலாம் அல்லவா“? 

இப்போது என்னோடு சேர்ந்து அந்த நல்ல மனிதனுக்கும் காதலின் வலி காயம் ஏற்படுத்தி கொண்டிருக்கும்.        

ஆனாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலை“. 

இது நாள் வரை என் மௌனம் எனக்கு பெரிதாக தெரிந்தது இல்லை. ஆனால்இன்று என் வாழ்வின் சாபம்என்று நினைத்துக் கொண்டேன்

இத்தகைய நிலையில் தான் அந்த நாள் வந்தது

எப்போதும் போல் மனதின் வலிகளோடு காலையில் எழுந்து என் வழக்கமான வேலைகளை முடித்து வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தேன், அப்போது வாயில் மணி அடித்தது.           

 என் அம்மா   கிச்சனில் பிஸியாக இருந்ததால் கயல் யார் என்று பார்? என்று கூறினார்.

 கதவை திறந்த எனக்கு அதிர்ச்சி!

 அதும் இன்ப அதிர்ச்சி

 அங்கு கார்த்திக் அவரின் தந்தையோடு நின்று கொண்டிருந்தார்.  

பல நாட்களுக்கு பின் அன்றுதான் அவரை பார்த்தேன்.                         

 அப்போது அங்கு வந்த என் தாய் அவர்களிடம் வெகு  நாள் பழகியவர் போல் வாருங்கள் அண்ணா   வந்து அமருங்கள்,வாப்பா கார்த்திக் .

அவள் அப்பா வெளியே சென்றிருக்கிறார். சீக்கிரம் வந்து விடுவார்.                           

நான் உங்களுக்கு குடிக்க டீ   கொண்டு வருகிறேன் என்று சகஜமாக பேசிக்கொண்டே உள்ளே சென்றாள்.                                  

 கார்த்திக்கின் தந்தையும் பொறுமையாக செய்யுமா, ஒன்னும் அவசரம் இல்லை   “நம்ம வீடு தானே“.                                          

 நீ பதட்டப்படாமல் மெதுவாக செய் என்றார்.

 என் தாயின் அண்ணா என்ற அழைப்பிலேயே அதிர்ச்சியில் இருந்து மீண்ட நான்எனது நம்ம வீடா என்று மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

 என்னால் இங்கு நடப்பதை நம்ப முடியவில்லை. ஆயினும் மரியாதை கருதி அவர்களிடம் சென்று வரவேற்பாய்   ஒரு புன்னகை செய்து விட்டு என் தாயிடம் சென்றுவிட்டேன்.                                                   

இவை அனைத்தையும் கார்த்திக் ஓர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்

நான் தவிர்த்து சென்ற பின்னும் பல நாட்கள் அவர் என்னை    தொடர்ந்து வந்தார்“.                            

ஆனால் நான்என்னுள்  தோன்றிய உணர்வுகளை மறைத்துஎன் மனதை கல்லாக்கி கொண்டேன்

 நான் கல்லானால் மட்டுமே கார்த்திக்கின் வாழ்வு மலரும்என்று நினைத்து கொன்டேன்.   

 பின் ஒரு நாள் அவர் என்னை தொடர்வதை நிறுத்திவிட்டார்.” அந்த நாள்தான் நான் அவரை எந்த அளவுக்கு காதலிக்கிறேன் என் உணர்தேன்“.

அவரை காணாத அந்த நாள் என் வாழ்வின் இறுதியான நாளாக இருக்கக கூடாதா என்று  ஏங்கினேன்.            

மௌனம் எப்படி என் வாழ்க்கையின் இறுதி வரை தொடருமோ”  அது போல்இந்த காதலின் வலியும் இறுதி வரை தொடரும்என நினைத்து கொண்டேன்.                   

அதன் பின் அன்றுதான் அவரை என்  வீட்டில் பார்க்கிறேன். நான்  என் வீட்டின் பின்கட்டில்vநின்று  யோசித்து கொண்டிருந்தேன் எவ்வாறு இது சாத்தியம் என

ஒரு பக்கம் மிகுந்த மகிழ்ச்சி . ஆனால் மறுபக்கம் எவ்வாறு இதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தயக்கம்.

 எவ்வாறு தடுப்பது என்று யோசித்துக கொண்டிருந்தேன். வாழ்வை வெறுத்த நாள் அவை

என் காதல் கைக்கூடி வரும் போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை.                     

 இதயத்தை கசக்கி பிழிவது போன்று வலி. “இதயத்தின் வலி விழி வழியாக வழிந்தோடியது“. 

என்றும் போல் அன்றும் நினைத்துக்  கொண்டேன் . “இந்த மௌனம் என் சாபம் என“.                         

அப்போது அவர் புன்னகையோடு என அருகில் வந்து நின்றார்.

 “என் வலி மறைத்து  விழி தொடைத்து  அவரை பார்த்து புன்னகைத்தேன்“.

 என் விழிமொழி படிப்பவருக்கு என் வலி  தெரியாதா என்ன ?

 பேபிஉன் வேதனையும் விழிகளின் கண்ணீரும் தேவையற்றதுஎன்றார் மென்மையாக என் கைபற்றி .                 

 நான் எப்படி இங்கனு யோசிக்கிறிய ?

 உனக்கே தெரியாம பல நாட்கள் மாலை வேளையிலும் உன்னை தொடர்ந்து, உன் வீட்டை கண்டு கொண்டேன்.             

அதன் பின் நேராக என தந்தையிடம் சென்றேன் .

 “அப்பா நா உங்ககிட்ட கொஞ்சம்    பேசணும்” .

சொல்லு கார்த்தி கொஞ்ச நாட்களாக நீ எதோ மனதில் போட்டு குழப்புகிறாய்.    

 நீயா சொல்லணும் தான் எதும் கேக்கல.    

இப்பாவது அப்பாட பேசணும் தோணுச்சே .

அது அப்பா நா ஒரு பொண்ணை விரும்பறேன். 

இதை நான் எதிர்பாத்தேன் கார்த்திக். உன் தேர்வு கண்டிப்பா தப்பாகாது. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.

 “தேங்க்ஸ்பா “. 

 பின் கயல்விழி பற்றி அனைத்தையும் கூறினேன். அனைத்தையும் கூறி முடித்து ஓர் படபடப்புடன் அமர்ந்திருந்தேன்.

 சட்டென என் தந்தை என்னை அணைத்து கொண்டார் . உன்னை நினைத்து பெருமையா இருக்கு. 

நான் உன்னை நல்லா வளர்த்து இருக்கேன் நினைக்கும் போது சந்தோசமா இருக்கு கார்த்திக்

ஆன அப்பா அவள் சம்மதிக்க மறுக்கிறாளே

  “நாம் எல்லாரும் பேசி என் மருமகளை சம்மதிக்க வைக்கலாம்” . 

நீ சந்தோசமா இருடா”  என்று கூறி சென்று விட்டார். 

மேலும் இரண்டு நாட்கள் சென்றது. அன்று காலை என் தந்தைஆபீஸ் லீவ் சொல்லி விடு. ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும்என்றார்.                            

  “சரிங்க அப்பா“. 

எங்கே போகிறோம்?       

 என் நண்பன் வீட்டுக்கு.                          

 அங்கு சென்ற பின்தான் தெரிந்தது.  “அது என் தேவதையின் வீடு”  என்று.        

 என் வாழ்வின் மற்றுமொரு மறக்க முடியாத நாள்அந்த இரண்டு நாட்களில் என் அப்பா அவளின் பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்.

 கடந்து போன திருமண விஷயங்களால் அவர்களுக்கும் ஓர் தயக்கம். 

அதனால்தான் என் அப்பா என்னை அவர்களிடம் அழைத்து சென்றது. ஒரு வழியாக அவள் பெற்றோரை சம்மதிக்க வைத்தாயிற்று. 

  இனி பெண்ணின் சம்மதம் தான் வேண்டும் . அதன் பின் அவளிடம் பேசினோம்

அவளின் பயம் தன்னை போல தன் வாரிசுளுக்கும் ஆகுமோஎன்றுதான் .

 பின் அவளிடம் அனைவரும் பேசி சிலமருத்துவர்களின் ஆலோசனை செய்ய வைத்துசம்மதிக்க வைத்தோம்.

 “அவளை சமாதானம் செய்ய எங்களுக்கு சில வாரங்கள் தேவைபட்டது“.                

 இந்த சில வாரங்களில்அவளின் தவிப்பை பார்த்து அவள் என்னை எவ்வளவு காதலிக்கறாள்”  என்று புரிந்து கொண்டேன் .

 அவளை என் இறுதி மூச்சுவரை சந்தோசமா வச்சுக்கணும் முடிவுபனேன்.

 பிறகு என்ன பாஸ் சுகம் தான்டும் டும் தான் .

ஆடம்பரமும் இல்லாமல் அதற்காக ரொம்ப எளிமையாகவும் இல்லாமல் அழகாய் எங்கள் திருமணம் நடந்தேறியது”

அதன் பின் இன்றுவரை சுகம் மட்டுமே

 “மௌனம் என்  வாழ்க்கையாகி  போனது“.                                                        

 என் மௌன தேவதை உடன்  என் வாழ்க்கை சுகமாய் சென்றது.              

 இந்த குறுகிய காலத்தில் காதல் பல வலிகளை தந்திருந்தாலும் இன்று சுகமாய்  இனிய திருமண வாழ்க்கையை தந்திருக்கிறது.                                      

ஆதலால்காதல்செய்வீர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!