Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 16

மாயாவி 16 ::

 

உன்னை சேர விரும்பி…

எந்தன் பாதங்களுக்கு… 



Advertisement

கட்டளையிட்டு உந்தன்…

பாதையை தொடர்ந்து… 

என்னை வர வைக்கிறாயே!

Advertisement

என்னடி மாயாவி நீ !

Advertisement

 

“ஹே கவி ! எச்ஆர், இன்டெர்வியூல செலக்ட் ஆன பைனல் லிஸ்ட் அனுப்பி இருக்காங்க… நீயும் நானும் ஒரு முறை பார்த்துட்டு அதில் இருந்து செலக்ட் பண்ணனும்… வா எல்லோரும் வெயிட் பண்ணறாங்க….” என்று கவியை குழலி அழைக்க, கவியோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

Advertisement

“என்னடா?” 

 

“அவசியம் இப்ப புது ஆளை எடுக்கணுமா? அமுதன்கிட்ட நான் பேசறேனே…” என்றவனிடம்,

 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்… ஒரு ப்ராஜெக்ட் கையை விட்டு போனதே போதும்… இப்ப நீ வர்றியா இல்லையா…” என்று அவள் முறைத்தவாறே கேட்கவும், அவன் இடத்திலிருந்து எழுந்தவன் ,

“அப்ப அப்ப இந்த கம்பெனிக்கு நீ முதலாளியா இல்ல நான் முதலாளியான்னு தெரியல…” என்று முணுமுணுத்தவனைப் பார்த்து,

 

“ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி போடா…” என்று அவனை கேலி செய்தவளை பார்த்து வியந்து அதை பற்றி கேட்டால் அவள் இன்னும் அவளுக்குள் ஒடுங்குவாள் என்று நினைத்தவன்,

 

“ஹே ! பூனை என்னையே கலாய்க்கற அளவுக்கு வளர்ந்துட்ட போல… சரி வா போவோம்…” என்றபடி இருவரும் நேர்காணல் நடக்கும் அறைக்குள் நுழைந்தனர்.  

 

“கவி! ஏற்கனவே சிவில்ல அனுபவம் இருக்கவங்களை தான் பில்டர் பண்ணி இருக்கேன்னு இந்த பிரியா சொல்லியிருந்தாங்க… ஆனால் ஒருத்தர் கூட அந்த அளவுக்கு இல்லையே…” என்றபடி தன் முன்னிருந்த விவரங்களை பார்வையிட்டவள் சொல்ல,

 

“அப்ப இதை அப்படியே கொஞ்சம் நாளைக்கு நிறுத்தி வைக்கலாம்…” என்று அவன் சொன்னதும் அவனை முறைத்தவள்,

 

“ஹே கவி ! இங்க பாருடா…” 

 

“என்ன பூனை?” என்று சலித்தபடியே கேட்டபடியே அதை பார்த்தவனின் விழிகள் விரிய,

“இது அபிநய சரஸ்வதி இல்ல… அப்பவே அப்படி வாயடிப்பா… கூப்பிடு கூப்பிடு உடனே உள்ளே கூப்பிடு காலேஜ் டைம்ல பார்த்தது…” என்று ஆர்வத்தோடு சொன்னவனை, கேலியாக பார்த்தவள், 

“அவகிட்ட பல்பு வாங்கறதுல உனக்கு என்ன ஒரு ஆர்வம்…” என்றபடி  அவளை உள்ளே அழைக்கும் முன் அவளின் விவரங்கள் பார்த்து,  

 

“டேய்! கவி ! படிப்பு மட்டுமில்ல மேடம் வேலை செஞ்சிருக்க கம்பெனி கூட பெரிய அளவுல தான் இருக்கு…” என்பதற்குள் கவி அவளை உள்ளே அழைத்திருக்க, வந்த பெண்ணவள் குழலியை முதலில் பார்த்துவிட்டு, 

 

“வாவ்! சீனியர் நீங்க இங்க தான் இருக்கீங்களா? எவ்வளவு வருஷமாச்சு உங்களை பார்த்து… எப்படி இருக்கீங்க?” என்று வருடங்கள் கழித்து நட்பை சந்திக்கும் மகிழ்ச்சியில் கேட்டவாறே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளை,

 

“உங்களை யாரும் உட்கார சொல்லலையே அபிநய சரஸ்வதி…” என்ற கிண்டல் குரலில் திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

 

இத்தனை நேரம் பைலை தன் முகம் மறைக்குமாறு வைத்துக் கொண்டிருந்தவனை யாரோ என்று எண்ணியவள் கவியை பார்த்ததும், “இவனும் இங்க தான் இருக்கானா?” என்று நினைத்தாள்.

 

“உங்களுக்கு இன்டெர்வியூல யார் கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா அபிநய சரஸ்வதி…” என்றவனின் நக்கலில்,

   

“என் பேரு வெறும் சரஸ்வதி…” என்று முறைத்துக் கொண்டே சொன்னாள்.

 

“ஹான் ! அப்படியா? பார்த்தா அப்படி தெரியலையே… உள்ள வந்த ஐஞ்சு நிமிஷத்துல உங்க முகம் ஐம்பது அபிநயம் காட்டுச்சே… அப்ப அபிநய சரஸ்வதி கரெக்ட் தானே…” என்று கிண்டலிக்க,      

 

“டேய் ! சும்மா இருடா… நீ வா சரஸ்… நான் நல்லா இருக்கேன்… நீ எப்படி இருக்க? உன்னோட ப்ரொபைல் பார்த்தேன்… குட்…” என்று குழலி சொன்னதும் புன்னகைத்து ,

 

“தேங்க் யு சீனியர்…” என்றவளை பார்த்து,

 

“அவங்க இந்த கம்பெனி ஜிஎம் மரியாதையா மேம்னு சொல்லுங்க…” என்று கவி சொல்லவும்,

 

“சூப்பர் மேம் ! வாழ்த்துக்கள்…”

 

“அவன் கிடக்கிறான் இந்த கம்பெனி முதலாளின்னு அப்ப அப்ப கொஞ்சம் பந்தா காட்டுவான்… நீ எதுவும் கண்டுக்காத…” என்று குழலி சொன்னதும் “என்னது இது இவன் கம்பெனியா…” என்று ஆச்சர்யப்பட்டாள்.

 

அவளின் வேலை விஷயமாக பேசி அவளின் திறமையை கிரகித்தவள், “ஓகே சரஸ் ! செலக்ஷன் பத்தி எச்ஆர் கிட்ட இருந்து மெயில் வரும்… ஹோப்! பார் தி பெஸ்ட்…” என்றதும்,

 

“ஓகே மேம்!” என்றவாறு கிளம்பியவளை,

 

“மிஸ்! அபிநயசரஸ்வதி ! உங்க பைலை மறந்து வைச்சுட்டு போறீங்க…” என்று நிறுத்தியவனை முறைத்தவாறே பைலை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

 

“கவி! சரஸ் கிட்ட திறமையும் இருக்கு அனுபவமும் இருக்கு… இங்க இருக்க அவளோட ப்ரொபைல் விவரம் அண்ட் அவகிட்ட பேசின வரைக்கும் எல்லாமே பெஸ்ட்டா இருக்கு… எனக்கு ஓகே…. நீ என்ன சொல்ற?” என்று குழலி சொன்னதும்,

 

“நானும் நீ அவளை இன்டெர்வியூ எடுக்கும் போது கவனிச்சேன்… புது புது ஐடியாஸ் கூட சொல்றா… இதெல்லாம் விட இங்க சேர்ந்தா அவளை கலாய்ச்சிக்கிட்டு எனக்கும் கொஞ்சம் நேரம்போகும்… அதனால அடுத்த வாரமே சேர்ந்துட சொல்லு…” என்றவனை முறைத்தாலும் அதற்கான வேலையில் இறங்கி சரஸ்வதியின் வருகையையும் அடுத்த வாரம் என்று உறுதி செய்திருக்க,

 

இரண்டு நாள் கழித்து திடீரென அவர்கள் முன் வந்து நின்ற அமுதனை இருவரும் எதிர்பார்க்கவில்லை…  

 

“வாங்க அமுதன் ! எப்படி இருக்கீங்க? அப்பா எப்படி இருக்காங்க?” என்று நலம் விசாரித்த கவியிடம் பதில் கூறினாலும் யாரையும் ஏறெடுத்து பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தவனை இருவருமே கண்டு கொண்டனர்.

 

“சொல்லுங்க அமுதன்… என்ன விஷயமா வந்திருக்கீங்க? பார்க்கவே கொஞ்சம் டல்லா வேற தெரியறீங்க?” என்று தன் மனதில் தோன்றிய கேள்வியையே நண்பனும் கேட்க, அதற்கான பதிலை எதிர்நோக்கி கணவனை பார்த்தாள்.

“உங்ககிட்ட எதுவும் சொல்லாம இங்க வேலையில இருந்து போனது தப்பு தான்… அதற்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்… இனி அது மாதிரி தப்பு நடக்காது… நான் இனி இங்கயே வேலை பார்க்கிறேன்…” என்றவனின் பதிலில் அதிர்ந்த கவி, குழலியை பார்க்க அவளோ,

 

“நீங்க எந்த தகவலும் சொல்லாம போனதால கம்பெனியில இருந்து உங்களை எடுத்துட்டோம்… அதுமட்டுமில்லாம உங்க இடத்துக்கு வேற ஒருத்தரை எடுத்தாச்சு…” என்ற மனைவியின் பதிலில் இன்னும் சோர்ந்தவன், 

 

“ஓஓ! சரி ! அப்ப நான் கிளம்பறேன்…” என்று அவன் வெளியேற எழுந்தான்.

 

“சாரி ! அமுதன்… நம்ம முன்ன பேசி வைச்ச ப்ராஜெக்ட் கையை விட்டு போனதால உடனே ஆள் எடுக்க வேண்டிய கட்டாயம்… அதான்… அவங்களும் அடுத்த வாரம் வர்றாங்க…” என்று வருத்தமாக சொல்லிய கவியைப் பார்த்தவன்,

 

“சாரி ! என்னால தானே அந்த ப்ராஜெக்ட் கையை விட்டு போச்சு… நானும் எந்த தகவலும் சொல்லாம போய் ஒரு மாசத்துக்கு மேல ஆகுதுல்ல… அதை சரி பண்ண நீங்களும் சரியான முடிவை தான் எடுத்திருக்கீங்க… நீங்க இதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க…” என்றவன் கிளம்ப,

 

“அமுதன் ! நீங்க கொஞ்சம் வெளியே இருங்களேன்… ஒரு ஐஞ்சு நிமிஷம் நான் உடனே கூப்பிடறேன்…” என்று கவி சொல்லவும் அவனுக்கு தலையசைத்தவாறு வெளியேறினான்.

 

“ஹே ! காரு… எல்லாம் உன்னால தான் அப்போ இருந்து நான் சொன்னேன் அவர்கிட்ட மறுபடியும் பேசறேன்னு… இப்பவும் ஒன்னும் கெட்டு போகல அவருக்கு அவரோட வேலையையே திருப்பி கொடுத்துடலாமே…” என்றதும் குழலி அவனை முறைக்க,

 

“இப்படி எல்லாத்தையும் சுலபமா தூக்கி கொடுக்கற வேலையை நிறுத்து… அதனால தான் சில சமயம் அதோட மதிப்பு தெரியாம போயிடுது… அதுவுமில்லாம சரஸ்க்கு என்ன பதில் சொல்லுவ…” என்று கடிந்தவளைப் பார்த்து,

 

“அதெல்லாம் எனக்கு தெரியாது… அமுதனுக்கு இப்ப இங்க வேலை கொடுத்தாகணும்… சரஸ்ஸை வேணும்னா இவருக்கு அசிஸ்டன்ட்டா போடலாம்…” என்றான்.  

 

இப்படி இருவரின் வாக்குவாதங்களுக்கு இடையில் கவி அமுதனை உள்ளே அழைத்து ஏதோ சொல்ல வர இடையிட்ட குழலி, 

 

“உங்க இடத்துக்கு வேற ஒருத்தரை எடுத்துட்டோம் அதை மிஸ் பண்ண முடியாது… அவங்களுக்கு அசிஸ்டண்டா வேலை செய்ய உங்களுக்கு சம்மதமா… இப்போதைக்கு அது தான் பண்ண முடியும்… நீங்க வேலை செய்யறதை பார்த்து அதுக்கு அப்புறம் மத்ததை முடிவு பண்ணலாம்…” என்றவளை கவி முறைக்க, அமுதனோ

 

“எனக்கு வேலை கொடுத்ததே ரொம்ப பெரிய உதவி… இந்த முறையாவது எல்லாம் சரியா செய்வேன்னு நம்பறேன்…” என்றவனின் வார்த்தை அவளுக்கும் சேர்த்து சொல்லுவது போலிருக்க பார்வையோ அவள் விழிகளை விட்டு அகலவில்லை…  

 

“அப்ப நீங்களும் அடுத்த வாரமே சேர்ந்துக்கறீங்களா?” என்று கவி கேட்க,

 

“இல்லை… நாளையில இருந்து வேலைக்கு வரேன்… எனக்கு உங்ககிட்ட இருந்து இன்னும் ஒரு உதவி வேணும்…” என்று அமுதன் தயக்கமாக நிறுத்தினான்.   

 

“காரு நீ உன் இடத்துக்கு போ… நம்ம அப்புறம் பேசலாம்…” என்றதும் அவனை முறைத்துக் கொண்டே “அப்படி என்ன ரகசியம் பேச போறாங்க…” என்று முணுமுணுத்துவிட்டு அவள் வெளியேற போக, மனைவியின் முணுமுணுப்பைக் கேட்டவன்,

 

“இல்ல ரகசியமெல்லாம் இல்ல…” என்று வேகமாக சொல்லி அவளை நிறுத்தியவன், 

 

“கவி நீங்க எனக்கு தங்க ஒரு இடம் ஏற்பாடு பண்ணி தர்றீங்களா? இங்க வேலை செய்யற பேச்சுலர்ஸ் கூட ஷேர் பண்ற மாதிரி என் சம்பளத்துக்கு தகுந்த மாதிரி இருந்தா எனக்கு இன்னும் நல்லது…” என்றவனை கவி அதிர்ந்து பார்க்க, அவன் மனைவியோ விரக்தியாக சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டாள்.  

 

“ஏன் அமுதன்? நீங்க இப்படி தனியா தங்க வேண்டிய அவசியம் என்ன? இப்ப தான் எல்லாம் சரியா நடக்குதுன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்… அதுக்குள்ள இப்படி சொல்றீங்க…” என்று வருந்தியவனை பார்த்து,

 

“இல்ல கவி… உண்மையாவே இப்படி நடக்கறது தான் சரி… இது போல வெளிய தங்கினா தான் என்னோட தனிப்பட்ட செலவுக்காவது நான் சம்பாதிக்கணும்னு வேலையில தாக்கு பிடிச்சு இருப்பேன்…”

 

“அதுக்கு அப்புறம் போக போக எனக்கு அதுல ஒரு ஈடுபாடு வந்து வேலை எனக்கு பிடிச்சு போகலாம்… அது வரைக்கும் கொஞ்ச நாள்… ஏன்னா நான் முதல்ல என்னை சரி பண்ணனும்…” என்று முடிவோடு கூறினான்.

 

“நீங்க என்னென்னவோ சொல்றீங்க? சரி நீங்க எங்கேயும் வெளிய போய் தங்க வேணாம்… என்கூடவே தங்கிக்கோங்க…” என்று கவி சொல்லவும்,

 

“உங்களுக்கு எதுக்கு சிரமம்… ஏற்கனவே நீங்க எனக்கு நிறைய உதவி செய்யறீங்க?” என்று அமுதன் மறுத்தான்.

 

“காருவோட புருஷன்னு நிரூபிக்கறீங்க போல? அவளும் நான் சொல்றதை கேட்க மாட்டா நீங்களும் கேட்க மாட்டேங்கறீங்க…” என்றவனின் வார்த்தை சிரிப்பை வர வைத்தாலும், 

 

“சரி நான் உங்க கூட தங்கினா… உங்க வீட்ல யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்று அமுதன் கேட்டதும்,

 

“எனக்கு யாரும் இல்ல… நான் மட்டும் தான் அங்க தனியா தங்கியிருக்கேன்… அதனால எனக்கு கம்பெனி கொடுங்க…” என்றவன் வார்த்தையில் இல்லாத வலியை அவனின் முகத்தில் கண்டவன்,

 

“சாரி! எனக்கு தெரியாது… இனி நானும் உங்க பிரெண்ட், ரூம் மேட் எல்லாமே….” என்று அவனுடன் கைகுலுக்கினான்…

 

அவனை அவனே சரி செய்ய அமுதன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!