Un Vizhigalin Mozhi Ennavo 19
அன்று மதிய உணவு இடைவேளையில் கங்கா மதுவிற்கு அழைக்க, கல்லூரியில் இருந்து இவள் வரும்பொழுது வீடிற்கு தேவையான பொருட்கள் ஏதாவது வாங்கி வரச் சொல்வது வழக்கமானது என்பதால் சாதாரணமாகவே அழைப்பை ஏற்றாள் .
“மதுமா பிஸியாடா “என்ற கங்காவின் கேள்விக்கு,” லஞ்ச் ஹவர்தான் சொல்லுங்க அத்தை”
“இல்லடா காவியா மேல ஒரு கண்ணு வச்சுக்கோ, ரத்தினம் அண்ணா வியாபார விஷயமா அடிக்கடி வெளியேவே இருக்காரு
மனோவும் இங்கே இல்ல, புள்ள கொஞ்சம் நம்ம காவேரி அக்கா மாதிரி பயந்த சுபாவம் .வேற யாராவது பசங்க பிள்ளை கிட்ட ஏதாவது வம்பு பண்ண போறாங்க, அதான்…. கொஞ்சம் சக்தி கிட்டயும் சொல்லி பார்த்துக்க சொல்லு.”
Advertisement
“சரிங்க அத்தை,மருமகள் மேல இப்போவே இவ்ளோ பாசமா ” என்றவள் அவர் ஏதோ சொல்ல தடுமாறுவது போல் தோன்றவும் “சொல்லுங்க அத்தை “என்க..
“இல்லடா உனக்கு தெரிஞ்ச வரைக்கும் காவியா வேற யாரையாவது லவ் பண்றாளா“
“அய்யோ!!! அத்தை அவளாவது யாரையாவது லவ் பண்றதாவது அவள் மனோவை தான் லவ் பண்றா, நானும் அவனும் வண்டியில் போகும்போது எவ்வளவு ஏக்கமா பாக்குவா தெரியுமா அத்தை. இந்த நாய்க்கு தான் அவ மனசு புரிய மாட்டேங்குது அவளை பார்த்தாலே முறைச்சிகிட்டு திரியுது .எது எப்படியோ அண்ணனும் தம்பியும் காதலிக்கிற பொண்ண முறைக்கிறதுல ஒத்துமையா இருக்காங்க.”
Advertisement
“ஏய் வாலு உங்களுக்கு தாண்டி அவனுங்களுடய நல்ல மனசு புரியல, படிக்கிற பிள்ளைங்க கவனத்தை கலைக்காம இருக்கணும்னு தான் என் மகனுங்க கட்டுப்பாடா இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் அத புரிஞ்சுகிட்டு சமத்தா படிச்சு முடிச்சுட்டு வெளியில வாங்க” என்று வைத்துவிட்டார் .
Advertisement
மதுவால் அவளையே மன்னிக்க முடியவில்லை பாவம் காவியா, மனோ ஓட நம்பர் தான கேட்டா ,இப்படி திட்டி அனுப்பி விட்டோமே என தன்னையே நொந்தவள். காவியாவின் வகுப்பிற்கு சென்று மன்னிப்பை வேண்டி மனோவின் நம்பரையும் கொடுத்துவிட்டு வந்தாள்.
[the_ad id=”6605″]
Advertisement
மதியவேளையில் சுட்டெரிக்கும் சூரிய பகவான் அவர் வேலையை செவ்வனவே செய்து கொண்டிருக்க, அதற்கு நேர்மாறாக ஏதோ காஷ்மீரில் இருப்பது போல் ஏசியால் குளிர்ந்து இருந்தது அந்த நிறுவனம்.
பெரிய ஹால் குட்டி குட்டி தடுப்புகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தடுப்பிலும் ஒரு மேசை அதன்மேல் கணினியும் இருந்தது. குறைந்தது ஐம்பது பேராவது அந்த ஹாலில் இருந்தாலும் அவ்வளவு நிசப்தமாக இருந்தது.
யாரும் யாரையும் கவனிக்காமல் கணினியிலேயே முகம் புதைத்திருந்தனர் .மனோ முக்கிய வேலையில் மூழ்கி இருந்தான்.அவன் அலைபேசி அவனின் கவனத்தை களைக்க நிமிர்ந்து பார்த்தவனின் முகம் ஒரு முறை மகிழ்ந்து பின் யோசனையை தத்தெடுத்தது .
அமைதியாய் அழைப்பை ஏற்று” ஹலோ என்க அந்தப்பக்க்கம் இருந்து சத்தம் வராமல் வெறும் மூச்சு காற்றின் சத்தம் மட்டுமே வந்தது .”ஹேய் டோரா இப்போ எதுக்கு கால் பண்ண இப்படி பேசாம இருக்க வா என்று அதட்டினான்.
ஹ…லோ….. என்று காவியா கூறும் பொழுதே இண்டர்காமில் மேனேஜர் அவனிற்கு அழைப்பு விடுத்தார்.” இங்கே பாரு நான் முக்கியமான ஒர்க்ல இருக்கேன். எதுக்கு கூப்பிட்ட சீக்கிரம் சொல்லு: என்று அவசரப் படுத்த,
“வந்து கா……லே….ஜ்..ல …….”
“சொல்ல வந்ததை சொல்லாமல். ஏண்டி இப்படி கபடி வெளயாடற மாதிரி மூச்சுவாங்கர,காலேஜ்ல ஏதாவது ப்ராப்ளமா ,சுதர்சன்( மாணவ தலைவன்) கிட்ட சொல்லு.புக்ஸ் வேணும்னா மதுகிட்ட வாங்கிக்கோ,முடியாத பிரச்சினை என்றால் சக்தி அண்ணா கிட்ட சொல்லு. எனக்கு வேலை இருக்கு பாய் “என்று வைத்து விட்டான்.
மாலை
நேற்று போல் இன்றும் மதுவை கல்லூரி பேருந்தில் செல்ல சொல்ல,” ஏன் இன்னைக்கு யாரை அடிக்க போறீங்க,நானும் பாத்துட்டு தான் இருக்கேன் வர வர நீங்க பண்றது எதுவும் சரியில்லை .அவரை எதுக்கு அடிச்சீங்க எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் என்று மல்லுக்கு நின்றாள் .
“இங்க பாரு ஸ்ரீ பிரவீன் கூட இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ வீட்டுக்கு போ,
நான் வந்து எல்லாம் தெளிவா சொல்றேன் .”என்றான் தன்மையாக உடனே ஏற்றால் அது மது ஸ்ரீ கிடையாதே !
அவளுடைய ஆஸ்தான போஸில் இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி நின்று அவனை முரைத்தவள் .”எவ்ளோ வேலை நாளும்பரவால்லை .முடிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்.”
சக்தியின் பொறுமை பறந்து கொண்டிருந்ததது .”யேய் இங்க பாரு ஆம்பளைக்கு ஆயிரம் வேலை இருக்கும் .எப்போ பாரு உன்கூட ஜோடி போட்டு சுத்த முடியாது கிளம்பு” என்று முடித்து விட்டான் .
“ஓஹோ! அப்படிங்களா சார் ரொம்ப சந்தோஷம் .என்கூட வண்டில வானு கூப்டு பாருங்க அப்போ தெரியும் நான் யாருனு .”என்று கத்திவிட்டு சென்று விட்டாள்.
அவள் கஷ்டம் அவளிற்கு .மெயின் ரோடில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஊருக்கு நடந்து செல்ல வேண்டும் .மாலை வேளை என்பதால் பால் கறந்து சொசைட்டிற்கு கொண்டு போகும் வேலையே இரு மாமாக்களும் சரியாக இருக்கும் .
உள்ளுக்குள் அவனை திட்டி முனுமுனுத்து கொன்டே அவ்விடத்தை விட்டு நகர போக, “ஸ்ரீ நைட் வரதுக்கு லேட் ஆகும் நேத்து மாதரி வெயிட் பண்ணாம சாப்ட்ரு “,
“அப்படியே கலெக்ட்ர் வேலை பாக்கறாரு லேட்டா வரதுக்கு இன்ணைக்கும்
யாரையாவது அடிச்சீங்கன்னு தெரிஞ்சது…… போலீஸ்ல பிடிச்சி கொடுத்துடுவேன்.
ஜாக்கிரதை என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றாள் .”
மது அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும் அங்கு அட்டகாச சிரிப்போடு வந்து நின்றான் பிரவீன் .அதிலிருந்ந்தே தெரிந்தது மதுவின் மிரட்டலை கேட்டு விட்டார் என்று .
“அதான பார்த்தேன் நேத்து நீங்க ஆடுன ருத்ர தாண்டவத்தை பாத்துட்டு ரொம்ப கோவக்காரர் போல மது பாவம்னு நெனச்சேன் .லெகக்சரர் என்னவே பிளாக்மெயில் பண்ண பொண்ணு .அவகிட்ட அடிமை சாசனம் எழுதிகுடுத்த உஙகள சும்மாவா விடும் .அங்கும் மீனாட்சி ஆட்சி தானா “
[the_ad id=”6605″]
“அட நீங்க வேற சார். நான் சாசனம் எழுதி தரதுக்கு முன்னாடி இருந்தே எங்க வீட்ல மேடம் வோட ஆட்சி தான் .எல்லார்க்கும் ரொம்ப செல்லம்.
அவ பிளாக்மெயில் பன்னது எல்லாம் மறந்துடுங்க சார் அவளுக்கு பதில் நா சாரி கேட்டுக்கிறேன் .”
“அத விடுங்க சார் சின்ன பொண்ணு தான, இந்த மாதிரி வெளையாட்டா இருக்கிற எத்தனை பொண்ணுங்க, கல்யாணம், கொழந்தைனு ஆனதுக்கு அப்புறம் அவங்க இயல்பான குணத்தை மறந்துட்டு ரொம்ப சீரியஸ்சா மாறிடறாங்க,
அவங்கள எல்லாம் எப்போதாவது பாக்கும்போது நம்ம கிட்ட படிச்சா பொன்னுங்களானு சந்தேகமாவே இருக்கும் .
அந்த மாதிரி இல்லாம மதுவை அவளோட இயல்பு போல அப்படியே வச்சி கோங்க சார். அதை தான் ஒரு ஆசிரியரா உங்க கிட்ட கேட்டுக்கெடுக்கிறேன் .அவங்க அப்படி இருந்தா தான் சார் நாமளும் சந்தோசமா இருக்க முடியும் .நம்ம கல்யாண வாழ்க்கையும் ஜெயிக்கும் .”
சக்தி ‘நிச்சயமா சார்” என்றான் புன்னகையுடன் .அவன் மனைவி அவனை விட்டு மனதளவில் விலகி சென்று கொண்டு இருப்பதை அறியாமல் .
“ஓகே சார் நாளைக்கு சுரேஷ் அடிச்சதை பத்தி உங்களுக்கு விசாரணை இருக்கே,நீங்க ஒன்னும் கவலை படாதீங்க நீங்க அடிக்கும் போது பார்த்தது நான் தான்.
நான் சாட்சி சொல்ல மாட்டேன். செக்யூரிட்டி நேத்தே அவரை யாரும் அடிகல கீழே தடுக்கி விழுந்துடாருனு மேனஜ்மென்ட்ல இன்பாம் பணிட்டாரு .சுதர்சன்கு இவங்கள பத்தி தெரியும் .அதனால பசங்கள வார்ன் பண்ணிட்டான் .ஸ்டுடென்ட்ஸ் யாரும் தலை இடமாட்டாங்க ,
மயக்கம் தெளிஞ்சி சுரேஷ் உங்க மேல காம்ப்ளைன்ட் பன்னதுனாலதான் விசாரணை வச்சிருக்காங்க,சாட்ச்சி இல்லைனா நோ சஸ்பெண்ட். பொண்ணுங்க பிரச்சனைக்கு என்ன பண்ண போறீங்க ,உங்க மச்சான் அர்ஜுன் சார் என்ன சொன்னாரு” .
“இபோதைக்கு அவனுங்கள பாலோ பண்ண சொல்லிற்கான். அவனுங்க கேம்பஸ் விட்டு போனதும் பாலோ பண்ண வேண்டியது தான் . ஆனா எனக்கு அவனுங்க பண்ற தில்லுமுல்லு தெரியும்னு
அவனுங்களுக்கும் தெரியும் அனாலும் அமைதியா இருக்காங்களே அதான் டௌட்டா இருக்கு .
எவ்ளவு ட்ரை பன்ணியும் அவங்களுக்கு ஆப்போஸிட்டா ஒரு ஆதாரம் கூட கிடைக்க மாட்டிங்குது . பாகபாக்கலாம் எங்க போய்ட போறானுங்க டைம் ஆகுது நீங்க கிளம்புங்க , நான் லைப்ரரி போய்ட்டுவரேன் .” என்று சக்தி லைப்ரரி செல்ல
பிரவீன் “கவலை படாதீங்க சார், திருடன் கண்டிப்பா ரொம்ப நாளைக்கு தப்பிக்க முடியாது ,சீக்ரம் மாட்டுவான்.” என்று தன் வீட்டை நோக்கி சென்றான் .
சக்தி கல்லூரி லைப்ரரி முடிந்து கிளம்பும் நேரத்தில் அமைதியாக தன் முன் நின்றிருந்த இருவரையும் ஆச்சரியமாய் பார்த்தான் .ஆம் மனோ அர்ஜுன் இருவரும் நின்றிருந்தனர்.
சக்தி ” என்னடா சொல்லவே இல்லை .என்று பார்க்க,”அண்ணா நீ ஒரு பிரச்சனையில் இருக்கும் போது நாங்க எப்படி வராமலிருப்போம் .”
துன்பம் வரும் வேளையில் ராமனுக்கு லட்சுமணன் போல் ஒரு தம்பியும் குகன் போன்று தோழனாய் ஒரு மச்சான் இருக்க, இவனுக்கு என்ன பயம். புது தெம்பு வந்தது போல் இருந்தது .எவன் நாளும் வாங்கடா என்னும் நிலையில் இருந்தான் ஷக்தி.
மனோ பார்க்கிங்கில் வண்டி எடுக்க செல்ல காவியா விசயம் என்று சக்தி இழுக்க அர்ஜுன் அவசரமாக இல்லை என்று தலையசைத்தான் .
சதீஷ் தினகரன் இருவரையும் பின் தொடர்ந்து கண்காணிப்பது என்று முடிவு செய்து பின் தொடர இவர்களைப் பற்றி அறியாமல் இருவரும் ஒரு நவீன வசதி உள்ள பாரில் அமர்ந்து இருந்தனர்.
சதீஷ் சரக்கை எடுத்து வாயில் சரித்து அட்டகாச சிரிப்புடன் கண்களில் போதை மின்ன தன் போனை எடுத்து “உனக்கு எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கேன். இன்னும் ஒன் ஹவர் ல என் முன்னாடி வந்து நிக்கணும்” என்று விரட்டியவன்.
‘தினா சுரேஷ் பையன் இல்லாம களத்தில் நாமலே குதிக்க வேண்டியதா இருக்கு. என்று போலியாய் சலித்துக் கொண்டான். மூவரும் ஊன்றி கவனித்திருக்க மனோவின் மொபைல் சிணுங்கியது.
அதைப் பார்த்தவன் ஒரு நொடி தாமதித்து உடனே ஏற்றான் மறுபக்கம் காவியா அழுகுரலோடு “மாமா நான் சாகப் போறேன் .நாளைக்கு நான் செத்ததுக்கு அப்புறம் என்ன பாக்க வருவீங்களா இல்ல வர மாட்டீங்களா, உங்களுக்குத்தான் என்ன பிடிக்காது இல்ல ,
ஆனா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் .என்றவள் அடுத்த நொடிஅழைப்பை நிறுத்திவிட்டால்.” அய்யோ காவியா என அலறி அடித்து அசுர வேகமாய் வாசல் நோக்கி ஓட ஆரம்பித்தான் .அர்ஜுன் சக்தி இருவரும் ஏதோ புரிவது போல் இருந்தது. அவனை பின்னால் அமர வைத்துஅர்ஜுன் வண்டியை கிளப்பினான். சக்தி அவனைப் பிடித்துக் கொண்டுஅமர்ந்தவன் .
[the_ad id=”6605″]
அவளுக்கு என்ன ஆச்சு என்று தன்மையாய் விசாரித்தான். காவியா மதியம் அழைத்ததும் இப்போது அழைத்ததையும் கூறியவன் .”அண்ணா அவளுக்கு ஏதோ பிரச்சனை எனக்கு பயமா இருக்குன்னா ,அவ கூப்பிடும் போது நான் அவாய்ட் பண்ணிட்டேன். எனக்கு அவ வேணும் அவ இல்லாமல் நான் செத்து போயிடுவேன் என்று கதறி துடித்தான் . அதோடு சீக்கிரம் போங்க “என்று கத்த ஆரம்பித்தான்.
அவளுக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதே! என்று அவனைத் தேற்றியவன் காவியாவிற்கு ஒரு பக்கம் அழை த்துக் கொண்டிருந்தான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ரத்தினத்திற்கு அழைத்தவன்.
“மாமா நான் இப்போ அங்க வரேன்.காவ்யா நல்லா இருக்காளா ,நான் வர்ற வரைக்கும் காவியாவ பத்திரமா பாத்துக்கோங்க , உங்க பக்கத்துலயே உட்கார வையுங்க ,”
“என்ன ஆச்சு சக்தி அவ நல்லா தான் இருக்கா, அவள பக்கத்து வீட்ல விட்டுடு நானும் அத்தையும் துக்க வீட்ல இருக்கோம் “என்றார் பதறியவறாக ,
மொழி தொடரும் …………
