Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 14

என்னவள்_14

 

கொஞ்சமும் பிடித்தம் இல்லாமல் நிமிர்ந்து சக்தியை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் ஃகாபியை கையில் எடுத்து கொண்டான்.

 



Advertisement

“போதும்மா இப்படி வந்து உட்காரு.. என்னபடி மோகனுக்கு நேராக இருந்த இருக்கையில் அமர  வைக்க…சற்று தலைகுணிந்தபடி அமர்ந்தாள் சக்தி. “

 

“நிமிர்ந்து பாருமா பையனை… என் பொண்ணு என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான்னு உங்கள் அப்பா மாப்பிள்ளை ஃபோட்டோ கூட வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாரு…என மாப்பிள்ளையின் தாயார் கூற…அப்போதும் நிமிர்ந்து பார்க்க வில்லை. “

Advertisement

 

Advertisement

“பொண்ணு பார்க்க சாந்தமா அமைதியான பொண்ணா தெரியுது. அழகிலேயும் எந்த குறையும் சொல்ல முடியாது”மாப்பிள்ளை வீட்டு பக்கத்து உறவினர் ஒருவர்  கூறினார்.”

 

“அப்புறம் மாப்பிள்ளை வீட்லதான் இப்போது பதில் சொல்லணும். எங்க பெண்ணை உங்களுக்கு பிடிச்சு இருக்கா…முதியவர் ஒருவர் தொடர்ந்து பேசுவதற்கு எடுத்து கொடுத்தார்…”

Advertisement

 

“பெண்ணை பிடிக்காமலா இத்தனை பேரும் வந்து இருக்கிறோம் ஏற்கனவே பேசி முடிச்சு மாதிரி தானே இனி பேச என்ன இருக்கு.”

 

“என்னப்பா இப்படி சொல்லற இப்ப இப்படி சொல்லிட்டு பின்னாடி இது பத்தல அது பத்தலன்னு பேசக்கூடாது இல்லையா…பொண்ணுக்கு சீர் என்ன செய்வீங்க ,நகை எவ்வளவு போடுவிங்க இதெல்லாம்..இப்பவே இந்த சபையில் சொல்லிடுங்க…”

 

“என்க்கு  பொண்ணுங்க ரெண்டு பேர் தான் இருக்கற  சொத்து எல்லாமே ரெண்டு பேருக்கும் தான். பெரிய பொண்ணு கல்யாணத்துக்குஎன்ன செஞ்சேனோ அதை அளவு இந்த பொண்ணுக்கும் செய்வேன். செய்யற சீர் செனத்தியில எந்த குறையும் வராது.  இப்போதைக்கு ஐம்பது பவுன் நகை இருக்கு கல்யாணம் பண்ணி அனுப்பும் போது வீட்டுக்கு தேவையான எல்லா பொருளும்  வாங்கி தந்திடுவேன். மாப்பிள்ளைக்கு புது கார் ஒன்றும் வாங்கி தர்றேன். இன்னும் ஏதாவது வேணும்னாலும் கேளுங்கள் செய்யறேன் முருகேசன் தனது கெளரவத்தை விட்டு தராமல் பேச…”

 

“அப்புறம் என்னப்பா அவங்க தரப்பில் தரப்போறது சொல்லியாச்சு…இனி மேற்கொண்டு எப்போது கல்யாணம் வைக்கலாம் அப்படிங்கறதை பார்க்கலாம் தானே…”இல்லை வேற ஏதாவது கேட்ணுமா…

 

[the_ad id=”6605″]

 

 

 

” இல்லை மேற்கொண்டு பேச எதுவும் இல்லை…பொண்ணு அவங்க பொண்ணு…குடுக்கறதும் அவங்க இஷ்டம் தான்…கொண்டு வர்றதை வச்சி அனுபவிக்க போறது அவங்க பொண்ணு தான் நாங்க எதையும் எடுக்கப்போறது இல்லை மாப்பிள்ளையின் தகப்பனார் சொல்ல…”

 

“அப்ப சரி என்றவர்”முருகேசன் நீங்க சொல்லுங்கப்பா என கூறினார். 

 

“ம்…கல்யாணம் எப்போதுன்னு பேசிடலாம் என்றவர் கோமதி காலண்டரை எடுத்துட்டு வந்து கொடு…என்றார் சிறிது நேரத்தில் எல்லாம் நல்ல நாள் பார்க்க ஆரம்பிங்க…”

 

“ஏம்பா இவ்வளவு தூரம் வந்தாச்சு…வீடு நிறைஞ்சு ஆளுங்க இருக்கறாங்க இன்றைக்கே நிச்சயம் பண்ணிடுங்க…பட்டு சேலை எடுத்துவிட்டு வராட்டி என்ன  பொண்ணுக்கு பூ மட்டும் வச்சிட்டு போயிடுங்க என்ன நான் சொல்லறது…”

 

“இதுவும் நல்ல ஐடியா தான் அப்படியே செஞ்சிடலாம். என்ன முருகேசன் சரியா இன்றைக்கே பூ  வச்சிடலாம் தானே இல்லை வேற நல்ல நாள் ஏதாவது பார்க்கணுமா..”

 

“இத்தனை பேர் கூடி இருக்கிறோம். இன்றைக்கே நல்ல நாள் தான் இன்றைக்கே பூ வச்சி கல்யாணத்தை உறுதி பண்ணிக்கலாம். தட்டு மாத்திக்கலாம் “என்று சொல்லவும்…

 

 மாப்பிள்ளை பக்கத்து சொந்தத்தில் ஒருவர்…”அப்புறம் என்ன அவங்க அவங்க முடிவை சொல்லியாச்சு…எப்பா அந்த தாம்பால தட்டை எடு…நான் கொடுக்க வேண்டியது எல்லாம் எடுத்து தர்றேன் என்றவர் தட்டை எடுத்தவர் பூ,பழம்,வெற்றிலைபாக்கு எடுத்தவர் பூ நிறைய தட்டில் ஸ்வீட்டை வைத்து கொடுத்தவர்…இந்தாங்க பொண்ணு வீட்டுக்கு சார்பில் இதை வாங்கிட்டு பொண்ணுக்கு இந்த பூவை வச்சி அழைச்சிட்டு வாங்க..என்று கூற கோமதியையும் முருகேசன் இருவரும் தட்டை பெற்று கொண்டனர்.”

 

“பொண்ணுக்கு  பூவை வச்சி அழைச்சிட்டு வாங்க நீங்களும் அப்படியே ரொக்கப்பணம் வச்சி இப்போதே  இது போல திரும்ப  கொடுங்க …”

 

“இதோ என்று உள்ளே போனவர் எடுத்து வந்து தர…ரொக்கப்பணம் இப்போதைக்கு ஒரு லட்சம் வச்சு இருக்கிறேன் மிச்சத்த கல்யாணத்துக்கு முன்னாடி தந்திடறேன் என்று சொல்லி இவர்கள் தட்டை கொடுக்க அவர்கள் கொடுத்த தட்டை சக்தி யிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்…

 

மாப்பிள்ளை வீட்டுச்சார்பில் இரண்டு பேர் சக்தியின் கூடவே வந்தவர்கள் தலையில் பூ வைத்து மறுபடியும் ஹாலிற்கு அழைத்து வந்தனர்.

 

“பொண்ணு வந்தாச்சா…இங்கே அழைச்சிட்டு வாங்க மாப்பிள்ளை பக்கத்தில் உட்கார வைக்க” என்று கூற இவளை அழைத்து வந்து மோகனின் அருகே அழைத்து வந்து அமர்ந்து வைத்தனர். அருகில் அமரவுமே மொத்தமாக முகம் இருக  அமர்ந்து இருந்தான் மோகன் இந்த முடிவு இவன் எதிர் பாராதது.

 

மறுத்து பேசலாம் என்றால் அங்கே அவனை பேசக்கூட விட தாயாராக யாரும் இல்லை.  அருகில் அமரவும் சற்றே நகர்ந்து அமர்ந்து கொண்டான். அதை பார்த்த பெரியவர் ஒருவர்…

 

“என்ன தம்பி இவ்வளவு கூச்சபடறிங்க நீங்க கட்டிக்கப்போற பொண்ணு தான் நெருங்கியே உட்காரலாம் நாங்க எதையும் கண்டுக்கு மாட்டோம். இந்த காலத்தில் இத்தனை கூச்சப்படறிங்க…நானெல்லாம் பொண்ணு பார்க்க போன காலத்தில் இத்தனை சுதந்திரம் எதுவுமே கிடையாது.  முகத்தை பாராக்க கூட விட்டது இல்லை அப்படி பார்க்க போனா நீங்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்கதான் என்ன சிரித்தபடி கூற…அருகில் இருந்தவரோ…என்ன  பெரியவரே மலரும் நினைவா…பேசுங்கள் பேசுங்கள் கேட்க நல்லா தான் இருக்கு…”

 

“அட போப்பா நீ வேற…முகத்தை காட்டி இருந்தா என்னை கட்டிக்கிட்டவளுக்கு கல்யாணம் நடந்தே இருக்காது முகத்தை காட்டாததாலதான் தெறியா தனமாக கட்டிக்கிட்டேன். “

 

“ஹா…ஹா…சரிதான்  ஐயாவுக்கு எத்தனை பசங்க…அதையும் அப்படியே சொல்லிடுங்க..”

 

“ஆறு பேராக்கும்…அரை டஜன் நம்மலோட பேர் சொல்ல போறது நம்ப பசங்க தானே…அப்புறம் நான் சேர்த்த சொத்தே அவங்கதானே…”

 

“கேட்டுக்கோங்க மாப்பிள்ளை அவருக்கு எத்தனை தைரியம் பாருங்களேன்…அப்புறம் உங்கள் வீட்டு அம்மா எங்கே இங்கே வந்து இருக்கறாங்களா…”

 

“அதை ஏன் கேட்கற… அவள் இந்த வயதில் என் கூட கோச்சிக்கிட்டு அவனுக்கு பெரிய பையன் வீட்டில் இருக்கறா…அது எதுக்கு இப்போ…அது தான்  பையனும் பொண்ணும் வந்து உட்கார வச்சாச்சே அப்படியே வந்து எல்லோரும் ஆசிர்வாதம் பண்ணுங்கள் என்ன வேடிக்கை பார்த்துவிட்டு இருக்கறிங்க…”

 

[the_ad id=”6605″]

 

 

 

“அதுவும் சரிதான் வாங்கபா…முதல்ல பொண்ணோட பக்கத்தில் இருக்கறவங்க வாங்க அப்படியே லைனா வாங்க…பொண்ணு மாப்பிள்ளைக்கு ஸ்வீட் முதலில் கொண்டு வாங்க. இவர்கள் சொல்லவுமே ஸ்வீட் பாக்ஸை எடுத்து கொண்டு வந்து கொடுத்தாள் திவ்யா..”

 

“அதை வாங்கியவர் மாப்பிள்ளை இந்தாங்க பொண்ணுக்கு முதலில் ஒரு பீஸ் எடுத்து ஊட்டி விடுங்க என மோகனுக்கு முன்பு பாக்ஸை நீட்ட அவனோ ஸ்வீட் பாக்ஸையே பார்த்து இருந்தான். “

 

“மாப்பிள்ளை கனவு கண்டுட்டு இருக்கிறார் சக்தி நீ எடுத்து கொடுமா…என இவள் புறம் நீட்ட ஒரு சிறு துண்டை எடுத்து மோகனை நோக்கி நீட்டினாள் சக்தி…”

 

“என்ன செய்வது என ஒரு நிமிடம் யோசித்தவன் நீட்டிய ஸ்வீட்டை தன் கைகளில் வாங்கி கொண்டான்.இதை பார்த்தவர்கள் என்ன மாப்பிள்ளை வாயை திறந்து வாங்க இப்படி யோசிச்சா மிச்சம் எல்லாம் எப்படி நடக்குமாம்…குறும்பாக அருகில் இருந்தவர் கூற…அருகில் இருந்த மற்றவரோ…நீ வேற இப்படி இருக்கற பசங்க எல்லாம் கரெக்டா இருப்பாங்க என இரு பொருள் படக்கூற…சக்தி தான் மொத்தமாக முகம் சிவந்து அமர்ந்து இருந்தாள். “

 

“போதும் மாப்பிள்ளை இப்போது உங்கள் முறை ஸ்வீட் எடுத்து கொடுங்கள் என்றவர்கள் இவனை விடுவதாக இல்லை.  வேறு வழியில்லாமல் எடுத்தவன் ஊட்டுவதற்கு சக்தியை பார்க்க…மொத்தமாக சிவந்த முகத்தோடு தலை குணிந்து அமர்ந்து இருந்தாள். “

 

“எடுத்தவன் அவளுக்கு அருகில் கையில் எடுத்து போக கை தன்னை அறியாமல் நடுங்கி கொண்டு இருந்தது.  நடப்பது எதுவும் அவனுக்குபிடிக்கவில்லை தவறு என்ற எண்ணம் மனம் முழுக்க நிறைந்து இருக்க வாய் அருகில் எடுத்து சென்றவன் அப்படியே தயங்கி நிறுத்த…அதை தன் கையில் வாங்கி கொண்டாள் சக்தி…

தேங்க்ஸ் என்ற ஒற்றை சொல்லோடு…”

 

அடுத்ததாக வரிசையாக வர ஆரம்பித்தனர் இருவரையும் வாழ்த்துவதற்கு….கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிந்து இருந்தது இருவரையும் வாழ்த்தி முடிக்க…அத்தனையையும் திவ்யா தனது செல் பேசியில் பதிவு செய்து கொண்டாள்.வாழ்த்தி முடிக்கவும் ஒருவர்…

 

“இரவு சாப்பிட்டிற்கு ரெடி பண்ணி இருக்கு எல்லோரும் அப்படியே சாப்பிட வாங்க…பந்தியில் இலை போட்டு ரெடிமாக இருக்கு அப்படியே முன்னாடி வாங்க என அனைவரையும் அழைத்து சென்றார். “

 

“முதலில் மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்ட அமர  வைத்தவர்கள்,மறுபுறம் சக்தி,மோகன் இருவரையும் தணியாக அமர வைத்து சாப்பிட வைத்து இருந்தனர்…ஒவ்வொன்றாக பரிமாற,பரிமாற ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான் மோகன்… இருக்கமான மனநிலையிலும் மோனுக்கு நினைவுகள் எல்லாம் செல்வியை மட்டுமே சுற்றிக்கொண்டு இருந்தது. “

 

இங்கே பெண்ணை  பார்த்து விட்டு வருவது தானே வீட்டிற்கு சென்று விருப்பமில்லை என்ன சொல்லி விடலாம் என முடிவு செய்து வந்து இருக்க…இங்கே நடந்தது எதிர் பாராதது ஏனோ தாய்,தந்தை இருவரையும் கூட்டத்திற்கு நடுவில் எதிர்த்து பேசவோ,மரியாதை குறைவாக நடத்தவோ அவனால் முடியவில்லை. இப்போதும் வீட்டிற்கு சென்ற பிறகு பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணம் தான். ஆனால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் அதுவும் அப்போது அவனுக்கு தெரியவில்லை. 

 

அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் புறப்பட்டு விட சக்தி தனது சகோதரியோடு அவளது அறைக்குள் சென்று இருந்தாள்.அங்கே உள்ளே நுழையவும் முதலில் திவ்யாவிடம்  பேசியது இதுதான்.  “அக்கா இவங்க நடவடிக்கை சரி இல்லையோன்னு தோணுது. எதுவோ சரியில்லை.  எதுவுமே பேசலை என்கிட்ட…”

 

“சக்தி எல்லோரும் ஒரே மாதிரியா இருப்பாங்க சிலர் இப்படி தான். அவ்வளவு சீக்கிரம் பேச மாட்டாங்க ஆனால் அது பிரச்சினை இல்லை கல்யாணம் ஆனால் சரி ஆகிடும் முழுக்க முழுக்க மாறிடுவாங்க இது மாதிரி நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். “

 

“அதில்லைகா…மாமாவை பார்த்து இருக்கிறேனே அவங்க உன்கிட்ட எவ்வளவு பேசினாங்க…”

 

[the_ad id=”6605″]

 

 

 

“அதுதான் சொல்லறேன் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க  இதையெல்லாம் யோசிக்கவே நீ தேவை இல்லை…இன்னும் கொஞ்சம் நேரம் எல்லோரும் போகட்டும் அப்பாகிட்ட தெளிவாக கேட்டுக்கலாம் .

மாப்பிள்ளையோட குணம் எப்படி, என்னன்னு ஒகே வா…என அந்த பேச்சிற்கு அந்த நேரத்தில் முற்று புள்ளி வைத்தாள் திவ்யா. “

 

சற்று நேரத்தில் எல்லாம் அனைவரும் புறப்பட்டு இருந்தனர் எஞ்சி இருந்தது இவர்கள் மட்டும் தான் திவ்யாவின்  மாமனார் மாமியார் கூட புறப்பட்டு இருந்தனர். “என்ன சம்பந்தியம்மா நைட் இங்கே தங்கிட்டு காலையில் புறப்படுவிங்கன்னு நினைச்சேன் என கோமதி கூற…”

 

“காலையில் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் வந்திடுவாங்க அங்கே இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் வேற வழி இல்லை திவ்யா வேணுப்னா இன்னும் நாலு நாள் இருந்துவிட்டு சிவா வந்ததும் வந்தா போதும் பங்சன் எந்த குறையும் இல்லாமல் நல்லா நடந்தது.நமக்கு அதுதானே வேணும் சிவாவும் இல்லைங்கறப்போ அங்கே அவனோட தோட்டத்தையும் பார்க்கணுமு அதனால இப்போது போனால் தான் சரியாக இருக்கும் சம்பந்திம்மா…நாங்கள் மறுபடியும் இன்னொரு நாள் வரோம் ரெண்டு நாள் தங்கிவிட்டு போகிற மாதிரி என சொல்லி விட்டு திவ்யாவிடம் அபியை பத்திரமா பார்த்துக்கோ…சிவா வரவும் இங்கே வந்து உன்னை அழைச்சிட்டு வருவான் என்ன புறப்பட்டு சென்றனர்.”

 

அவர்கள் புறப்படவும் கோமதி திவ்யா இந்த பூ,பழம் தட்டை பூஜை அறையில் எடுத்து வைம்மா அப்படியே குட்டியை சக்தி கிட்ட கொடுத்திட்டு வா நாம வீட்டை கொஞ்சம் சரி பண்ணலாம். ரொம்ப கசகசன்னு இருக்கு எல்லாம் கலைஞ்சு…இதோ மா என்றபடி சக்தியிடம் தந்து விட்டு அன்னையிடம் வந்தாள் திவ்யா. 

 

அதே நேரம் அங்கே மோகன் வீட்டில் வந்தவர்கள் எல்லோரும் புறப்பட்டு இருக்க…அது வரையிலும் அமைதியாக இருந்தவன் அனைவரும் புறப்பட்டு இருக்க வேகமாக வந்து அங்கே பெண் வீட்டில் கொடுத்து அனுப்பி இருந்த தாம்பால தட்டை வேகமாக,ஆக்ரோஷத்தோடு  மொத்த கோபமும் முகத்தில் தேங்கி இருக்க கண்கள் சிவந்தபடி வேகமாக தட்டி இருந்தான்.தட்டிய வேகத்தில் எதிர் புறத்தில் இருந்தது சுவற்றில் மோதி அனைத்தும் வீடு முழுக்க சிதறி இருந்தது. 

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!