Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 21

என்னவள்_21

 

ஃபோனில் கேட்டது நிஜமாகவே மோகனின் குரல் தானா அதுவே அவளுக்கு தெரியவில்லை.  கண்களை மூடி அவனது குரலை ஞாபகத்துக்கு வரவழைக்க முயற்சி செய்தாள்…. வரவேற்புக்காக இரண்டு பேரையும்  ஸ்டேஜில் நிறுத்தி இருந்ததால்…  அதிகமாக நிறைய பேர் வந்ததாலும் அவனது குரலை தனித்து கேட்க முடியவில்லை. எப்படி யோசித்தும் ஞாபகத்தில் வரவில்லை…மொத்தமாக சொன்னால் இவள் கவனிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

 



Advertisement

மறுபடியும் ஃபோனை பார்க்க நம்பர் ஆது மோகனுடையது தான்  ஆனால் குரல்…பிடிக்கவில்லை என்றால் இத்தனை நாளில் திறைய சந்தர்ப்பம் இருந்ததே…அப்போது விட்டுவிட்டு ஏன் இப்போது அழைத்து சொல்ல வேண்டும். இரவு கூட வரவேற்றிபின் போது அமைதியாக தானே இருந்தான் முகத்தில் அப்போது ஏதாவது வித்தியாசமாக தெரிந்ததா என்று யோசித்தால் அப்படி எதுவும் தெரியவில்லை. பின் ஏன் இப்படி ஒரு ஃபோன் பண்ணினான்.

 

திருமணம் விடியற்காலையில் முதல் முகூர்த்தத்தில் பேசி இருக்க முழுவதுமாக இரண்டு மணி நேரம் தான் இருந்தது.  யாராவது வேண்டும் என்றே விளையாடுகிறார்களோ…யோசித்தபடியே அமர்ந்தவள் சுற்றிலும் பார்க்க இன்னமும் எல்லோரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.

Advertisement

 

Advertisement

யார் அழைத்தது என்ன கேட்டு விடலாம் என ஃபோன் செய்ய…போன் சுவிச்ஆப் என வந்தது.யோசனையோடு ஃபோனை வைத்தவள் இப்போது நன்றாக எழுந்து அமர்ந்திருந்தாள். இவள் அசைவு தெரியவும் அடுத்ததாக திவ்யாவும் எழுந்து அமர்ந்தாள் .”என்ன சக்தி  எழுந்திட்டியா என்று கேட்டபடி…”

 

“ஆமாம் கா தூக்கம் கலைஞ்சிடுச்சு என்று  சொல்லவும்…”

Advertisement

 

“சரி உட்கார்ந்து இரு…நான் போய் ஃகாபி எடுத்துவிட்டு வரேன்” என்று எழுந்து செல்ல ஃபோன் வந்ததை சொல்வதா  வேண்டாமா ஒன்றும் புரியவில்லை.  சில திருமணங்களில் இது போல விளையாடுபவர்கள் உண்டு தான்  இதை எத்தனை தூரம் நம்புவது ஒன்றும் புரியவில்லை. 

 

அதற்குள் திவ்யா ஃகாபி எடுத்து வந்திருந்தாள்” என்ன சக்தி இன்னும் ஃமோபைலை பார்த்துவிட்டு உட்கார்ந்து இருக்கற…என்ன ஆச்சு இந்தா இந்த ஃகாபியை குடிச்சிட்டு போம் குளிச்சிட்டு பட்டு சேலை கட்டிட்டு வந்திடு…அதுக்குல்ல ப்யூட்டிசியன் தலைபிண்ண வந்திடுவாங்க…”

 

“சரிக்கா என கையில் ஃகாபியை வாங்கியவள் அக்கா மாப்பிள்ளை வீட்டில் எழுந்தாச்சா ஃகாபி எடுத்துட்டு வரட்டுமான்னு கேட்டுட்டு என்ன பண்ணறாங்கன்னு பார்த்துவிட்டு வருகிறாயா..”

 

“என்ன சக்தி கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை மேல அக்கரையா..என இவளை கிண்டல் செய்ய ஆரம்பிக்க…”

 

“அக்கா ப்ளீஸ் “என்ற சொல் அவளை நிறுத்தியது. சரி இருந்தது பார்த்துவிட்டு வந்திடறேன் என மாப்பிள்ளை அறையை நோக்கி எழுந்து சென்றாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அங்கே மோகன் இவளுக்கு பேசிய அடுத்த நொடி அவனது தந்தை பார்த்து இருந்தார். 

“எத்தனை தூரம் சொன்னாலும் நீ கேட்க மாட்ட…இன்னமும் இடுப்பில் தான்  சொறுகி இருக்கறேன் மருந்து பாட்டிவை”…என்றபடி ஃபோனை பிடிங்கி சுவிச்ஆப் செய்து மனைவியிடம் தந்து விட்டு நகர்ந்து இருந்தார் “கல்யாணம் முடிஞ்ச பிறகு அவன்கிட்ட ஃபோனை கொடுத்தால் போதும் என்றபடி…சில நிமிடத்திலேயே போ…போய் குளிச்சிட்டு பட்டு வேஷ்டி கட்டிட்டு வந்து உட்காரு…என்று சொல்லி விட்டு அமர்ந்த போதுதான் திவ்யா அங்கே வந்து சேர்ந்தாள்.”

 

“அத்தை  ஃகாபி எடுத்துவிட்டு வரவா என்றபடி…”

 

“ம்…கொண்டு வாம்மா என்று மோகனின் தாயார் சொல்ல…மாப்பிள்ளை எங்கே அத்தை என்று அடுத்த கேள்வியை கேட்டு இருந்தாள்.”

 

“குளிக்கறான் ஏதாவது பேசணுமா இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெடி ஆகணுமே அதுதான் அங்கே பொண்ணு ரெடி ஆகியாச்சா..”

 

“இப்ப  குளிக்க போய் இருப்பார்கள் அத்தை என்றவள் அவர்களுக்கு எடுத்து வந்திருந்த ஜக்கில் இருந்து இவர்களுக்கு எடுத்து வந்து தந்துவிட்டு சக்தியிடம் வந்து மாப்பிள்ளை குளிக்க போயாச்சு…போ…போ…ஒடுக்கப்பட்ட சீக்கிரம் குளிச்சிட்டு வா என்று அனுப்பி வைத்தாள்.”

 

“சக்தி மனதிற்குள் முடிவே செய்து விட்டாள். யாரோ விளையாண்டு இருக்கறாங்க நமக்கு ஃபோன் செய்து என்று…இவள் குளித்து வரவுமே வேகமாக நேரம் நகர்ந்து ஆரம்பித்தது. “

 

திருமணம் சம்பிரதாயமாக நடக்க என்ன சற்று நகர்த்தி மண்டபத்திற்கு நடுவில் இருப்பது போல அழகாக வடிவமைத்து இருந்தனர். சுற்றிலும் பூக்கள் சுழ…நடுவில் இவர்கள் அமர…கூடவே நடுவில் ஓமம் வளர்த்து மந்திரம் சொல்ல இரண்டு ஐயர்களை அமர்ந்து வைத்து இருந்தனர்.

 

முதலில் மாப்பிள்ளைக்கு தாய் மாமா சீர் முடிந்து அடுத்ததாக இவளை அழைத்து சென்றனர். அதே போல் சக்திக்கும் தாய்மாமா சீர் முடிக்க இவளை அழைத்து சென்றவருக்கு சில நிமிடத்திலேயே மாப்பிள்ளை வீட்டில் இருந்து கூரைசேலை எடுத்து வந்து தர…அதை மாற்றியவர்கள் இவளை மணவரைக்கு அழைத்து சென்றனர். 

 

ஏற்கனவே மாப்பிள்ளை மோகன் மணமேடையில் காத்திருக்க…மங்கள வாத்தியம் முழங்க…ஜயர் மந்திரத்தை ஓத… சுபயோக சுபநேரத்தில் சக்தியின் கழுத்தில் தங்க தாலியை அணிவித்தான் மோகன்….அது முடியவுமே மோகனின் வலது கையில் சக்தியின் கையை எடுத்து வைத்தவர்கள்  இருவரின் கைகளையும்  கட்ட வெண்ணிற  டவள் கொண்டு லேசாக  கட்டி இருக்க..தம்பி முறையில் இருப்பவன் தீபம் ஏற்றியபடி முன்னாள் நடக்க அதை தொடர்ந்து மோகன் இவளின் கை பற்றி மணவரையை  சுற்றி  அக்னியை வலம் வர ஆரம்பித்தனர்.

 

மறுபடியும் ஸ்டேஜில் நிற்க வைக்க…புத்தம் புது தாலி மின்ன புன்னகையோடு மோகனின் அருகில் நின்று வாழ்த்த வந்தவர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டனர் இருவரும்…

 

[the_ad id=”6605″]

 

 

 

நேரம் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது மதியம் எண்ணெய் தேய்ப்பு என ஆரம்பித்து மதிய விருந்தும் அங்கேயே முடித்து இருக்க…பெண் வீட்டிற்கு முதலில் மாப்பிள்ளை, பெண்ணை அழைத்து சென்றனர். பெரும்பாலானவர்கள் பெண் வீட்டுக்கு சென்று இருந்தனர். சிலர் வீடுகளுக்கு புறப்பட்டு இருந்தனர். மாலை நான்கு மணிக்கு மாப்பிள்ளை பெண்ணை மறுபடியும் மாப்பிள்ளை வீட்டிற்கு..பொள்ளாச்சிக்கு அனுப்பி விட முடிவு செய்து இருந்தனர்…ஒரு மணி நேரத்தில் பெண் வீட்டார் பொள்ளாச்சியில் மாப்பிள்ளை வீட்டை பார்த்து விட்டு திரும்பி வர ஏற்பாடு செய்து இருந்தது. 

 

சக்திக்கு தர வேண்டிய சீர்வரிசையை இவர்கள் மாலையில் செல்லும் போது எடுத்து செல்வதாக ஏற்பாடு செய்திருக்க அதற்கு டெம்போ ரெடியாக நின்று இருந்தது. 

 

சக்தியையும் மோகனையும் அழைத்து கொண்டு மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டு இருக்க…மோகனின்  கவனம் துளி கூட இங்கே இல்லை  அமைதியாக இருக்கமாக இருந்தான்…அருகில் யாராவது ஏதாவது கேட்டால் மட்டும் பதில் சொன்னான் அவ்வளவு தான்  அங்கே சக்தியின் வீட்டிற்கு செல்லவும் பால் பழம் தர…”வேண்டாம் என்று ஒரே பேச்சில் மறுத்து விட்டான் எனக்கு இது பிடிக்காது ஏற்கனவே தலைவலி அதிகமாக இருக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டான்.”

 

“கோமதிக்கு மனது ஆறவேயில்லை இதெல்லாம் சம்பிரதாயம் சக்தி …மாப்பிள்ளை இப்படி சொல்லறாங்க…என்று  கூற..”

 

“அம்மா இப்ப விட்டுடு நாளைக்கு காலையில் இங்கே வரும் போது குடு…அப்போது குடிப்பாங்க…குடிக்க வச்சிடலாம் சரியா என்று இயல்பாக பேசி அனுப்பி வைத்தாள். குடிக்க மாட்டேன் என்று சொன்னது சக்திக்கு கொஞ்சம் வருத்தம் தான்.  திவ்யாவிற்கும் சிவாவிற்கும்  பால்பழம் தரும் போது இவள் அடித்த லூட்டி இன்றும் யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு கிண்டல் செய்திருந்தார்…இவன் எளிதாகநிராகரித்து இருந்தான்.”

 

“எப்படியும் அடுத்த தாள் காலையில் கோவிலுக்கு அழைத்து செல்வது என்ற முறை இருந்தது காலையிலேயே இங்கே வரும் அழைக்க வந்து விடுவார்கள் நாளைக்கு எப்படியும் கொடுத்து விட வைத்து விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.”

 

நான்கு மணிக்கு எல்லாம் பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து மாப்பிள்ளை, பெண்ணை கூடவே அத்தை முறை வருபவர் இன்னும் இருபரை சேர்த்து சக்தியோடு மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்…பிரியபோகிறோம் என்ற உணர்வு தோன்ற தாயாரை பார்த்து அழுது தந்தை,திவ்யா என்ன அத்தனை பேரையும் பார்த்து அழ… ஒருவாறு தேற்றி சக்தியை அனுப்பி வைத்தனர். வண்டி புறப்படவுமே மோகன் கண்களை இருக்க மூடி கதவில் சாய்ந்து கொண்டான்.

 

இவள் எனது மனைவி என்கின்ற எண்ணமோ இவளது அழுகையோ எதுவும் அவனை பாதிக்கவில்லை. கூட்டிட்டு வந்தவர்கள் தான் சக்திக்கு ஆறுதல் சொல்லி கொண்டு வந்தனர். 

 

மாப்பிள்ளை வீட்டு வாசலில் இறங்கவும் ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்து சென்றனர். இவளை ஹாலில் அமர  வைத்து கூடவே சுற்றிலும் இருந்த உறவினர்கள் அமர்ந்து கொள்ள… இவளிடம் ஆளாளுக்கு பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தனர்.

 

“சக்தி என்ன படிச்சு  இருக்கறிங்க என ஆரம்பித்து அவளிடம் சரளமாக கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தனர்.

வந்தவர்களுக்கு மோகனின் தாயார் ஃகாபி கொடுத்தவர் சக்தியிடம் இங்கே வந்து பூஜை அறையில் விளக்கேற்றிட்டு வந்து உட்காருமா என்று இவளை பூஜை அறைக்குள் அழைத்து சென்றார்.”

 

“இவள் எழுந்து நடக்கவும் பொண்ணு அழகு மட்டும் இல்லை மா…இந்த பொண்ணுக்கு  தலைமுடி எவ்வளவு நீளமா இருக்கு…இதுவே தனி அழகை தருது இவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.”

 

மோகன் வேகமாக மாடிமில் இருந்த தனது

அறைக்குள் சென்றவனுக்கு அத்தனை ஆத்திரம் வேகமாக சட்டையை கலட்டியவன் கோபமாக கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டான். கடைசி வரைக்கும் அவன் நினைத்தது நடக்கவில்லை.  எல்லாம் முடிந்து விட்டது என்பது போன்ற மனநிலையில் இருந்தான்.

 

இந்த மனநிலையில் படுத்துக் இருக்க  கீழே சக்தி அங்கே இருந்தவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள். அவரது மாமியார் அமர்ந்து இருந்தவர்களுக்கு ஃகாபி எடுத்து வர…அவரிடம் சக்தி தட்டை வாங்கியவள் அமர்ந்து இருந்தவர்களுக்கு தர…அரசி சக்தியிடம்…”சக்தி மோகனுக்கு இந்த ஃகாபியை கொடுத்துவிட்டு வந்திடு என கூறி இவளது கையில் தந்தவர் மாடியில் இருப்பான்  போய் கொடு என்று அனுப்பி வைக்க…வாங்கியவள் எடுத்து படி மாடி படிக்கட்டில் கை வைக்கும் போது மோகன் வேகமாக வந்து கொண்டு இருந்தான்.”_,

 

வந்த வேகம் எதிரில் வருவது யார் என்ற எண்ணம் எதுவும் அவனுக்கு தெரியவில்லை. அவ்வளவு வேகம் அவனது நடையில் இவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே…”இவள் என்னங்க”அழைப்பு எதுவும் அவனது காதில் விழவில்லை…இவளை தாண்டி வாசலுக்கு சென்று இருந்தான். ஹாலில் இருந்தது அரசி “மோகன் எங்கே போகிறாய்…ஏன் இத்தனை அவசரம்…என்ன ஆச்சு…என்று கேட்டது கூட காதில் விழவில்லை.  வண்டியை எடுத்து புறப்பட்டு இருந்தான்.”

 

[the_ad id=”6605″]

 

 

 

சக்தி மட்டும் அல்ல  அரசியும் திகைத்தபடி அவன் சென்ற வழியை பார்த்து கொண்டு நின்றனர். எடுத்த வண்டி கூட அத்தனை வேகம் அவனது வேகமே எதையோ அரசிக்கு உணர்த்த வேகமாக உள் அறைக்குள் நுழைந்தவள் கணவனுக்கு அழைத்து சொல்லி இருந்தார்.

 

பதிலுக்கு கணவன் சொன்ன பதில் கேட்கவும் கொஞ்சம் மனதிற்குள் பயம் வந்து இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பெண் வீட்டில் உள்ளவர்கள் வந்து விடுவார்களே…என்ன பதில் சொல்வது என நினைத்தவர் அப்படியே அமர்ந்து விட்டார். 

இது எதுவும் தெரியாத சக்தி அவளது வீட்டாருக்காக காத்து இருந்தாள்.

 

தொடரும். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!