Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 24

என்னவள்_24

 

“அண்ணா கரெக்டா சிமெண்ட் போடுங்கள்..எடுத்துட்டு வர்ற அளவு சரியாக இல்லை பாருங்க…சற்று நகர்ந்து நின்று கொண்டு வேலை செய்பவரிடம் சொல்ல…”

 



Advertisement

“என்ன கார்த்தி தம்பி எத்தனை வருஷமாக வேலை செய்யறேன் என்னையவே குறை சொல்லறிங்களே என்று கேட்டார் அவர்….”

 

“எத்தனை வருஷம் செஞ்சாலும் நீங்க மாறலையே..பூசற சுவரில் சிமெண்ட் நிற்கலைன்னா நம்மலை தான் குறை சொல்லுவாங்க” என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஃபோன் அவனை அழைத்தது…எடுத்து பார்க்க இவனது தாயார் அழைத்து கொண்டு இருந்தார்.

Advertisement

 

Advertisement

“பார்த்துக்கோங்கணா…”என்றபடி சற்று நகர்ந்து ஃபோனை அட்டென் செய்தான்.

“அம்மா. ..சொல்லுமா என்று கூற…”

 

Advertisement

“கார்த்திக் பத்திரிக்கை அடிச்சு முடிஞ்சுதாம் மதியம் சாப்பாட்டிற்கு வரும் போது அங்கே அவங்க ஆபீஸ் போய் வாங்கிட்டு வந்திடுடா…”

 

“அம்மா இங்கே வேலை இருக்கே மா…இன்றைக்கு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர்ற ஐடியாவே இல்லையே…”

 

“கார்த்திக் மதியம் வா கொஞ்சம் உன்கிட்ட பேசவேண்டியது இருக்கு. பத்திரிக்கையை வாங்கிட்டு வந்து சேரு நான் ஃபோனை வைக்கிறேன்” என்றபடி மொபைலை கட் செய்து இருந்தார்.’ இந்த அம்மா இருக்கறாங்களே…வர வர குழந்தை மாதிரி அடம் பிடிக்கறாங்க..வா ன்னா வா…முடிந்தது…’

நேரம்பார்க்க…பன்னிரெண்டு மணியை நெருங்கி கொண்டு இருந்தது. பத்திரிக்கை அடிக்க கொடுத்து இருந்த ஆபீஸ்க்கு ஃபோன் செய்தான். 

 

“ஹலோ நான் கார்த்திக் பேசறேன் பத்திரிக்கை ரெடி ஆகிடுச்சா…ப்ளீஸ் அதை கொஞ்சம் ஃபேக் பண்ணி வச்சிடுங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வர்றேன் என்று கூறியவன்  ஒரு நன்றியையும் உதிர்த்து விட்டு கட் செய்தான்” அப்படியே  மறுபடியும் வேலை நடக்கும் இடத்தை கவனிக்க சென்றான்.

 

ஒரு மணி ஆகும் போதே புறப்பட்டு சென்றவன் பத்திரிக்கையை வாங்கி கொண்டு அதற்குரிய பணத்தை செலுத்தி விட்டு காரின் பின் இருக்கையில் எடுத்து வைத்து கொண்டு நேரடியாக வீட்டிற்கு வண்டியை செலுத்தினான்.

 

வண்டியை வீட்டின் எதிரில் நிருத்தியவன் பத்திரிக்கை கவரை எடுத்து உள் செல்ல வாசல் வரைக்கும் வந்த குணலட்சுமி பத்திரிக்கையை வாங்க கை நீட்டினார்.

 

“அம்மா வெயிட்டா இருக்கு எங்க வைக்கனும் அதைமட்டும் சொல்லுங்க “என்றபடி உள்ளே வர…”கார்த்திக் பூஜை ரூம்பில் வச்சிடு..”.என்றபடி இவன் உண்பதற்கு எடுத்து வைத்தார். 

 

[the_ad id=”6605″]

 

 

 

பூஜை அறையில் வைத்தவன் தனது அறைக்குள் சென்று முகம்  கைகால் கழுகிவிட்டு சாப்பிட அமர்ந்தவன் “சொல்லுங்கமா என்ன பேசணும் என்று ஆரம்பித்தான்.”

 

“டேய் சாப்பிட்டு முடிடா…லட்சுமி சொன்னபடி  நகர…”

 

“ம்மா..சொல்லுங்க எனக்கு டைம் இல்லை இப்போது புறப்படணும். “

 

“ஆமாம் டா…உன் அப்பாகிட்ட சொன்னால் அவனை கேளுன்னு சொல்லிட்டு போயாச்சு…”

 

“என்னமா கேட்க போறிங்க…”

 

“கார்த்திக் முதல் பத்திரிக்கை குலதெய்வம் கோவிலுக்கு தான் முதலில் வச்சி சாமி கும்மிடணும் நாம எப்ப போகலாம்.”

 

“அம்மா நீங்களும் அப்பாவுக்கு போயிட்டு வந்திடுங்க…என்னால முடியாது ஒரு நாளே ஆகும்.”

 

“அப்புறம் எப்பதாண்டா இதெல்லாம் தெரிஞ்சுக்கறது…போகணும் கார்த்திக்..சொல்லியபடி சற்று நகர்ந்து சென்று  முகத்தை தூக்கி வைத்தபடி அமர்ந்து கொள்ள…”

 

“அம்மா…இப்ப எதுக்காக இப்படி உட்காரறிங்க…குழந்தை மாதிரி பண்ணறிங்கமா…”

 

“என்ன பண்ணினா என்ன நீ சரின்னு சொல்லறையா…இல்லை தானே…”

 

“அம்மா உங்கள் கிட்ட பேச முடியாது அப்பா இன்றைக்கு சாப்பிட வருவாங்கதானே அவங்க கிட்ட பேசிக்கறேன் என்றபடி உணவு உண்டு முடித்தவுடன் கை கழுகி விட்டு அப்பாவுக்காக காத்து இருந்தான் கொஞ்சம் நேரத்தில் எல்லாம் அவரும் வந்து இருந்தார்.”

 

“வந்ததுமே லட்சுமி சொல்லி குறைபட…”

“லட்சுமி நான் தான் சொன்னேனே வேலை நேரம் அவனால்  முடியாதுன்னு…இப்போது இருந்து இன்னும் மூன்று வருஷத்துக்கு வேலை முழுக்க இருக்கு..அந்த அளவுக்கு நம்ம கிட்ட பில்டிங் கட்ட ஆர்டர் இருக்கு. .. எனக்கு அவன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதே போதும்ன்னு இருக்கு.நீ என்னடான்னா அவனை படுத்தி எடுக்கிற…”

 

“அப்படி சொல்லுங்க அப்பா அம்மாவுக்கு புரிகிற மாதிரி”  என கார்த்திக் பதில் சொன்னான்.

 

“ஆனால் முதல் பத்திரிக்கை வைக்க கோவிலுக்கு போகணுமே…”என்றபடி கணவனின் முகம் பார்க்க…”

 

“வா லட்சுமி இந்த வாரம் பிருந்தாவை கூப்பிட்டுட்டு நாம மூன்று பேரும் போயிட்டு வரலாம்.  கார்த்திக் இந்தா இந்த மூன்று மண்டபம் தான் நம்ம சாய்ஸ் இதில் எது பிடித்து இருக்கிறதுன்னு பார்த்துவிட்டு ஃபுக் பண்ணனும்.அப்புறம் இது மாயா அப்பா கொடுத்தது. இவங்க எல்லாம் பெஸ்ட் மேரேஜ் அசம்பிலராம்…இவங்கல்ல நமக்கு யார்கிட்ட கொடுக்கலாம்ன்னு பார்த்து அட்வான்ஸ் கொடுத்திடு…மண்டபமும் ஒன்றை சூஸ் பண்ணி  இவங்க கிட்ட சொல்லிடு அவங்க மிச்ச வேலையை பார்த்துக்குவிங்க….”

 

“சரிப்பா என்றபடி கார்த்திக்   எழுந்தான்…இப்போது அமைதியாக அவனுடைய அம்மா அமர்ந்து இருந்தாள். இன்னும் என்ன மா…”

 

“டேய்…இன்னும் பொண்ணுக்கு முகூர்த்த சேலை எடுக்க போகலை இன்றைக்கு நல்ல நாள் சாயங்காலமா போத்தீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாமா…”எழுந்தவன் அதே  கார்த்திக் அதே இடத்தில் அமர்ந்து கொண்டான்”.அம்மா எனக்கு என்ன தெரியும்…யாரெல்லாம் போறிங்க…”

 

“நிறைய பேர் எல்லாம் இல்லைடா நம்ம வீட்டில் நாலு பேர் மாயா வீட்டில் மூன்று பேர் அவ்வளவு தான்.  போயிட்டு வந்திடலாமா…”

 

“அப்பா அங்கே வேலை நடக்கற இடத்திற்கு போணா திரும்ப வரமுடியாது நீங்க மட்டும் போயிட்டு வந்திடுவிங்க…சரியா…”

 

“கார்த்திக் நீ கட்டிக்க போற பொண்ணுக்கு எடுக்க போகிற சேலை நீ பார்க்க வேண்டாமா…”

 

[the_ad id=”6605″]

 

 

 

“அம்மா கட்டிக்க போறது அவள் தானே அவளுக்கு பிடிச்சா பத்தாதா..”

 

“கார்த்திக் சாயங்காலம் அங்கே வரணும் அவ்வளவு தான் கிளம்பு ..அப்படியே இங்கே இருக்கும் போதே அப்பா சொன்ன வேலையை முடிச்சிட்டு போ…அங்கே போனதும் நீ மறந்திடுவே…அப்படியே மாயா அப்பாகிட்ட கேட்டுக்கோ…எந்த மண்டபம் வசதியாக இருக்கும்ன்னு…அப்படியே இன்றைக்கு போத்தீஸ்க்கு அவங்க மூன்று பேரையும் வரச்சொல்லிடு…கல்யாணம்ன்னா சும்மாவா வேலை நிறைய இருக்கும் ஒவ்வொன்றுக்கும் மறுத்து பேசிட்டே இருப்பியா…கோவிலுக்கு வேணும்னா அப்பா சொன்னது மாதிரி போய்க்கறோம்…போயிட்டு வந்த பிறகு பத்திரிக்கை வைக்கத்தான் நேரம் சரியா இருக்கும். “

 

“அம்மா…சரிமா ஒன்று செய்யுங்க அங்கே துணிக்கடைக்கு வந்ததும் கால் பண்ணுங்கள் வந்திடறேன் இப்போதைக்கு ஆளை விடுங்க… ஒரு கரண்டி சோறு போட்டுவிட்டு ஜீரணம் ஆகிற அளவுக்கு பேச வைக்கறிங்க…”

 

“டேய்…ஏன்டா மறுபடியும் பசிக்கிறதா…”

 

“ஜயோ அம்மா மறுபடியும் எதையாவது எடுத்துட்டு வந்திடாதிங்க…நான் கிளம்பறேன்வாசல் வரை சென்றவன் திரும்பி பிருந்தா எத்தனை மணிக்கு வீட்டிற்கு வருவா மா …”

 

“காலையிலேயே சொல்லிட்டேன்டா டிரெஸ் எடுக்க போகணும்ன்னு…டியூசனுக்கு இன்றைக்கு போக வேண்டாம்ன்னு ஐந்து மணிக்குள் வந்திடுவா…”

 

“ஏற்கனவே ப்ளான் போட்டுவிட்டு தான் என்கிட்ட சொல்லறிங்க…”என்றபடி மாயாவின் தந்தைக்கு அழைப்பு விடுத்தான். “அங்கிள்  என்று அழைத்தவன் இவன் ஏற்கனவே முடிவு செய்து இருந்த மண்டபத்தை கூற…அடுத்தது மேரேஜ் அசெம்ளரிடம் பேசிவிட்டு…அப்பா  நீங்கள் சொன்னவங்ககிட்ட  பேசியாச்சு…ஆறுமணிக்கு துணிக்கடைக்கு வந்தால் போதும் தானே என்றபடி புறப்பட்டான்.”

 

ஆனால் இவன் நினைத்தபோது போல அங்கே அந்த நேரத்தில் வேலை முடியவில்லை ஏன் வீட்டில் சொல்லி விட்டு வந்து இருந்ததையே மறந்து இருந்தான். முழுக்க ம்ழுக்க வேலையில் மட்டுமே கவனம் இருந்தது. மொபைல் ஃபோனை சைலண்ட்டில் போட்டு இருக்க சத்தமும் இவனுக்கு கேட்கவில்லை…ஏழுமணியை தொடும் போது அழைப்பு வந்து கொண்டு இருந்தது. எடுத்து பார்த்தவனுக்கு  அப்போது தான் ஞாபகமும் வந்தது. நேரம் பார்க்க ஏழு மணியை நெருங்கி கொண்டு இருந்தது…பிருந்தா நான்கு முறை…இவனது தாயார் இரண்டு முறை மாயா…நிறைய கணக்கே  இல்லாத அளவிற்கு அநேகமாக புறப்பட்ட நேரத்தில்  இருந்து அழைத்து கொண்டே இருந்து இருப்பாள் போல…இப்போதும் அவள் தான் அழைத்து கொண்டு இருந்தாள்…வேகமாக அட்டென் செய்ய பேசியது மாயா தான் …

 

“கார்த்திக் இன்றைக்கு நம்மோட கல்யாணத்துக்கு டிரெஸ் எடுக்க இங்கே வந்து இருக்கிறோம் இன்னும் நீ வரலை..எப்ப  வருவே…எப்ப இருந்து கூப்பிடறேன் தெரியுமா…எத்தனை மணிக்கு தான் வருவ…”

 

“ஸாரி மறந்துவிட்டேன்…மாயா…”

 

“இது பதில் இல்லை கார்த்திக் இது சின்ன விஷயம் இல்லை மறந்து போக…நம்ம கல்யாணம் இது…நான் எத்தனை கனவு காணறேன் தெரியுமா…நீங்க கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இப்படி இருந்தா எப்படி? கல்யாணத்துக்கு பிறகு வேலை கவனத்தில் என்னையும் மறந்திடுவியா…ம்…”

 

“ஸாரி…ஸாரி  மாயா இத்தனை பேசணுமா சில நேரம் இப்படி தான் ஆகும்…இதோ கிளம்பிட்டேன்…அங்கே உனக்கு பிடிச்சதை எடுத்து வை வந்திடறேன்.”

 

“ஸாரி கார்த்திக் இன்னும் உனக்கு என்ன பற்றி தெரியவில்லை நீ வராமல் ஒரு சேலையை கூட பிரித்து பார்க்க மாட்டேன் ஒரமாக வந்து அமர்ந்து இருக்கிறேன். உறவுக்காரங்களுக்கு  கொடுக்கன்னு…துணி எடுக்க போய் இருக்கறாங்க…அவங்க வந்த பிறகு தான்  எடுக்கணும் அதுவும் நீ வந்தா தான்.இல்லைனா இப்படியே புறப்பட்டு போயிடுவேன்.”

 

“ஏய்… மாயா அப்படி  எதுவும் செஞ்சிடாதே…வந்திடறேன்…என்றபடி புறப்பட்டான்.”

 

ஏற்கனவே இவளது பிடிவாதம் இவளது தந்தை சொல்லி இருக்க இவன் போகிற வரைக்கும் அமர்ந்த இடத்தில் தான் அமர்ந்து இருப்பாள் என்று தோன்றியது. போகும் போதே இவனது தாயாருக்கு அழைத்து பேசியவன்…”அம்மா வந்துட்டே இருக்கிறேன்…பிருந்தாவுக்கு எடுத்தாச்சா…”

 

“இல்லை டா இனிதான் பார்க்கணும் அவளுக்கு எப்படி  வாங்கறதுன்னு கேட்கணும் இத்தனை நேரம் கொடுக்க வேண்டியவங்களுக்கு தான் எடுத்து இருக்கிறேன்.  மறுபடியும் எப்படியும் இன்னும் ரெண்டு முறை வரவேண்டியது இருக்கும். வீட்டுக்கு போனபிறகு தான் தெரியும் யாரையெல்லாம் விட்டு இருக்கறோம்ன்னு…நான் ஃபோனை வைக்கறேன்டா சீக்கிரம் வா…என்றபடி ஃபோனை கட் செய்து விட்டு பிருந்தாவை தேடினார். “

 

[the_ad id=”6605″]

 

 

 

இங்கே தரைதளத்தில் ஓரு ஓரமாக அமர்ந்து இருந்த மாயா எதிரில் தெரிந்த கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்தாள். ஏன் மாயா மைதாமாவு கலரில் இருக்கற..போன்றவன் வர்றவன் எல்லாம் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு போறாற் ஏன் இந்த கார்த்திக் உன்னை பார்க்க மாட்டேங்குறான். .ஏன் உன்னால கார்த்திக்கை இம்ப்ரஸ் பண்ண முடியலை…அழகாகதானே இருக்கறே…இருக்கி பிடித்து இருந்தது அவள் போட்டிருந்த அந்த சுடிதார் கொஞ்சம் கழுத்து கூட சற்றே  இறக்கமாக…. அது கூட அவளை அழகாகதான் காட்டியது…முகம் சுளிக்கும் அளவில் இல்லை..யோசனை எல்லாம் கார்த்திக்கை சுற்றி இருக்க கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. 

 

பஸ்ட் ப்ளோரில் உடை எடுத்து விட்டு பிருந்தா,அம்மா அப்பா இவளுடைய தாய் தகப்பனார் இறங்கி வந்தனர். அவர்கள் அப்படியே பட்டு புடவை இருக்கும் பகுதிக்கு செல்ல…லட்சுமி பிருந்தாவிடம் “மாயா அந்த பக்கத்தில் உட்கார்ந்து இருக்கறா…இங்கே அழைச்சிட்டு வா பிருந்தா நாங்கள் அங்கே போய் சேலையை பார்க்கிறோம் என நகர்ந்து சென்றார்.” 

 

பிருந்தா ஆவளோடு இவளை நெருங்கியவள் “அண்ணி வாங்க டிரஸ் பார்க்கலாம் அம்மா அழைச்சிட்டு வரச்சொன்னாங்க…நானும் கூட நீங்க எடுக்கற சேலை மாதிரியே எடுக்க போறேன் கல்யாணத்துக்கு ஒரே மாதிரி கட்டலாம் என்று கண்கள் மின்ன கூறினாள்.”

 

ஏற்கனவே கொஞ்சம் கோபமாக எரிச்சலோடு இருந்தவள்  யோசிக்காமல் அவளுக்கு பதில் சொல்லி இருந்தாள்.”என்ன எப்ப பார்த்தாலும் ஓரே மாதிரி எடுக்கிறேன்…ஓரே மாதிரி எடுக்கறேன்னு சொல்லிட்டு இருக்கற…பத்தாவதுதானே படிக்கற… இப்பவே என்ன சேலை கட்டவேண்டியது இருக்குது…என்ன நாளைக்கே உனக்கு கல்யாணமா கட்டி அனுப்பப்போறாங்க… அதுதான் துணி குவிந்து கிடக்குதே லெகன்ஹா,சோலின்னு அதில் ஏதாவதை  எடுக்க வேண்டியது தானே…சுள்ளென்று எரிந்து விழுந்திருந்தாள் பிருந்தாவின் மீது…”

 

அப்படியே முகம் சுருங்கி போக தன் தாயாரை நோக்கி நகர்ந்தாள்…பிருந்தா

அப்போது தான் கார்த்திக் உள்ளே வந்து கொண்டு இருந்தான் பிருந்தாவிடம் மாயா கூறியது ஊமை படம் போல தெரிய…முகவாட்டத்தோடு நகர்ந்த பிருந்தாவை பார்த்தபடி மாயாவிடம் வந்தவன்…”மாயா பிருந்தா கிட்ட என்ன சொன்ன ஏன் அப்படி போறா…”

 

“ஹாய்” என்றபடி முகம் மலந்தவள் இவன் கேட்ட கேள்விக்கு… என்ன சொன்னேன்…என்றபடி யோசிக்க ஆரம்பித்தாள்…கோபம் இருந்தால் மாயா என்ன பேசுகிறாள் என்பது அவளுக்கே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக பேசிவிடுவாள்.

 

“அது எதுக்கு கார்த்திக் வாங்க போய் டிரஸ் செலக்ட் பண்ணலாம் என உரிமையோடு அவனின் கை கோர்த்தபடி அழைத்து சென்றாள்.”

 

அங்கே போய் அமரவுமே எடுத்து போட ஆரம்பித்து இருந்தனர்.” பிருந்தா உனக்கு டிரஸ்  எடுத்தாச்சா என்று கேட்டபடி இவளது கையில்இருந்து தனது கையை எடுத்தவன் பிருந்தா அருகில் சென்றான்.”

 

“இல்லை ணா இனி தான் எடுக்கணும்…”

 

“கல்யாண பொண்ணுக்கு எடுக்கிற சேலை மாதிரியே எடுக்கணும்ன்னு.சொன்னேல்ல அன்றைக்கு…அதே மாதிரி எடுத்துக்கோ…ஒகே வா…”

 

“இல்லை ணா…லெஹன்கா எடுக்கலாமன்னு இருக்கிறேன் நல்லா இருக்கும் இல்லை எனக்கு…”

 

“உனக்கு எது போட்டாலும் நல்லா இருக்கும் ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு…சரியாக முகத்தை பார்த்து கேட்டு இருந்தான்.”

 

“அண்ணா வந்து பசிக்குதுணா அதுதான் முகம் அப்படி இருக்கு”…மாயா சொன்னதை மறைத்து இருந்தாள். அவங்க சொல்லியும் சரிதானே…பத்தாவது படிக்கிற பொண்ணுக்கு இப்பவே ஏன் சேலை வாங்கணும்…எப்போதும் முள்ளாக குத்துவதுதான் மாயாவின் குணம் என்பது வீட்டில் யாருக்கும் தெரியவில்லை.  தெரிந்த போது காலம்  கடந்து இருந்தது. 

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!