Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 25

என்னவள்_25

 

தாயார் விடுப்பு சொல்லி விட்டேன் என்று சொல்லவும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது சக்திக்கு…

இப்போது இங்கே வேலைக்கு போன பிறகு நிறைய மாறி இருந்தாள். அவளுக்கு இப்போது நிறைய தைரியம், தன்னம்பிக்கை வந்து இருந்தது.  முன்பு போல ஒன்றையே யோசித்து கொண்டு இருப்பது இப்போது மாறி இருந்தது. 



Advertisement

 

நடந்ததை ஒரு வாராக மறக்க பழகி இருந்தாள் காலம் கூட சிறந்த மருத்து தான் நிறைய மறக்க பழகி இருந்தாள். சக்தியின் தகப்பனார் அதற்கு பிறகு சற்றே ஓய்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.  அன்றைய சம்பவத்திற்கு பிறகு ஏதோ பத்தாண்டுகளுக்கு பிறகு தோன்றும் மூப்பின் தோற்றத்தை இப்போதே பெற்று இருந்தார்.

 

Advertisement

கோமதியும் அப்படிதான்.  இதற்காகவே சக்தி சிரித்தமுகமாக இருக்க பழகிக்கொண்டாள்…இப்போது எல்லாம் கொஞ்சம் இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தாள். தோட்ட வேலைக்கு வருபவர்களோடு…அவர்களின் பார்வை கூட மாற ஆரம்பித்து இருந்தது.  யாரோ சிலர் தான் கொஞ்சம் பரிதாப பார்வை  பார்ப்பது…பழையது போல மோகனை திட்டாவிட்டாலும் அவர்களுக்குள் பேசிக்கொள்வது…”நம்ம பொண்ணு தங்கம் அந்த நாய்க்கு வச்சிக்க தெரியவில்லை என்பது போன்ற பேச்சு தான். “

Advertisement

 

அன்று கொஞ்ச நேரம் தோட்டத்தை சுற்றி வந்தவள் பழைய வழக்கம்போல குழந்தைகளை கொண்டு வந்திருந்தவர்களிடம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து இருந்தாள் விடுமுறை இவளுக்கு நன்றாகவே வேகமாக கழிந்தது.  குழந்தையோடு சிரித்து விளையாடியது கோமதிக்கும் மகிழ்ச்சி தர அவளை பார்த்தபடி நகர்ந்து சென்றிருந்தார். 

 

Advertisement

மாலையில் திவ்யாவிடமும், அபிநயாவிடமும்  ஃபோன் செய்து செல்லம் கொஞ்சியவள் இரவு தூங்கும் போது நேற்றைய குழப்பமோ, பயமோ எதுவுமே இல்லை.  இது என் வாழ்க்கை.. இனி தேவையில்லாத விஷயத்தை யோசித்து இனியும் கவலைபடக்கூடாது என்ற தெளிவான முடிவுக்கு வந்து இருந்தாள். இப்படி தோன்றியதாலேயோ என்னவோ நல்ல தூக்கம் வந்தது. அடுத்த நாள் விழித்தபோது புதிதாக பூத்த ரோஜாவை போல் முகம் மலர்ந்து இருந்தது. 

 

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு அன்று காலையிலேயே வேலைக்கு புறப்பட்டு இருந்தாள் சக்தி. தெளிவாக முடிவு செய்ததால் பழைய மாதிரி யாருடைய பார்வையும் இவளை பாதிக்கவில்லை…இப்போது அவளை பார்ப்பவர்களை பார்த்து லேசாக புன்னகைத்தபடி  வண்டியை செலுத்தினாள். இவளது புன்னகை இவளை பார்த்தவர்கள் முகத்திலும் தொற்றி இருந்தது.அங்கே அவளது ஷோரூம் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்லும் போது… அங்கே இவள் கண்ட காட்சி வேறாய் இருந்தது. 

 

[the_ad id=”6605″]

 

 

 

அத்தனை ஸ்டாப்பும் அங்கே வரவேற்புஹாலில் குழுமி இருந்தனர். வழக்கமாக இவள் வரும் போது பெரும்பாலும் அங்கே பரபரப்பாக அவரவர் வேலையை செய்து கொண்டு இருப்பர்…இன்று வேறாக இருக்க இவளும்  கூட்டமாக இருக்கும் ஹாலை நோக்கி நகர்ந்தாள்.

 

ஏற்கனவே ரேஷ்மா வந்து அங்கே கூட்டத்தோடு நின்றிருக்க இவளும் அவளது அருகில் சென்று நின்றுகொண்டாள். மெதுவாக அவளது கையை சுரண்டியவள் “ரேஷ்மா ஒரு நாள் தானே வரலை இங்கே என்ன நடக்குது ஏன் எல்லோரும் இங்கே கூடி இருக்கறிங்க…ஏதாவது விசேஷமா…”

 

” உனக்கு தெரியாதா.. ஸாரி  ஃபோன் பண்ண மறந்திட்டேன்….நம்ம முதலாளி வந்து இருக்கறாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம கிட்ட பேசப்போறாங்க…அது தான் இங்கே எல்லோரும் கூடி இருக்கிறோம்…”

 

“அப்படியா…என்றவள் ஆனால் எல்லோரோட முகமும் செம ஹேப்பியா இருக்கு…இன்கிரிமெண்ட் ஏதாவது தரப்போறாங்களா…சக்தி இவளிடம் கேட்டாள்…”

 

“அதுதான் வருஷாவருஷம் சம்பளம் ஏற்றி தர்றாங்களே… உனக்கு தெரியாதா…ஸாரி நீ சேர்ந்து இன்னும் ஒரு வருஷம் ஆகலைல்ல..அதுதான்  தெரியவில்லை.  வருஷா வருஷம் நம்ம கம்பெனி ஆண்டுவிழா கொண்டாடுவாங்க…ரொம்ப சிறப்பா…இந்த வருஷமும் அது போல கொண்டாடப்போறாங்கன்னு நினைக்கிறேன் அதுக்காக பேச வந்து இருப்பாங்க…செம ஜாலியா இருக்கும். “

 

“ஓ…”என்றபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். மொத்தமாக நின்றதால்

ஹால் முழுக்க கூட்டம் நிறைந்து இருந்தது ஒரு புறம் சர்வீஸ் செய்யும் ஆண்கள் மொத்தமாக நின்றிருக்க இந்த பக்கத்தில் வேலையில் இருக்கும் பெண்கள் இருபது பேரும் நின்றிருந்தனர்.

 

வந்திருப்பவர் பேசுவதற்கு ஏற்றாற்போல் ஒரு டேபிள் இரண்டு இருக்கைகளை அவசரமாக போட்டுக்கொண்டு இருந்தனர் கூடவே சிறிய ஒலிப்பெருக்கியும்…

 

அதிக நேரம் காக்க வைக்காமல் அறுபது வயதை நெருங்கி கொண்டு இருந்த அந்த ஹோரூம்பிற்கு சொந்தகாரர் அங்கே வர…சத்தம் அனைத்தும் அப்படியே அடங்கியது. அனைவருமே அவர் பேசப்போவதை கேட்க ஆவளாக அவரது முகத்தை பார்த்தனர்.

 

 ஓலிப்பெருக்கியை கையில் பிடித்தபடி..”அனைவருக்கும் வணக்கம்  இந்த நிருவனம் அதாவது இந்த ஹோரூம் துவங்கி வரும் இருபத்திநான்காம் தேதியோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது.  அதை கொண்டாட நிறைய திட்டமிட்டு இருக்கிறேன் இது எல்லாமே இங்கே வேலை செய்கிற நீங்கள் இல்லாமல் சாத்தியம் இல்லை.  அதற்காக இந்த முறை பெரிதாக விழா எடுக்க முடிவு செய்ய பட்டு உள்ளது அது என்ன என்பதை நம்ம  பிரபு…உங்களுக்கு விளக்கமாக எடுத்து சொல்லுவார். வண்டி வாங்க கூட நிறைய சலுகைகளை அறிவித்து இருக்கிறேன் தேவைபடுபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்  நன்றி என்றவர்….அவசரம் வேலை இருக்கிறது அதனால் நான் இப்போது புறப்படுகிறேன் பிரபு மிச்ச தகவலை உங்களுக்கு சொல்லுவார் என்றபடி அவர் புறப்பட்டார்.”

 

இரண்டு நிமிடம் இப்படியே வெயிட் பண்ணுங்கள் வந்திடறேன் என பிரபுவும் அவரோடு வாசல் வரை அவர் கூடவே சென்றான். 

 

சக்தியின் அருகில் வந்தவர்…”சக்திபொண்ணு தானே நீ நல்லா இருக்கிறாயாமா…என்ன விசாரித்தவர்… சிவா, திவ்யாவை இருவரையும் கூட விசாரித்து விட்டுபுறப்பட்டார்”. பிரபுவோடு நகர்ந்தவர் பிரபுவிடம் திரும்பி “அந்த பொண்ணு வேண்டப்பட்ட பொண்ணு கொஞ்சம் நல்லா பாத்துக்கோ” என்றபடி புறப்பட்டார். வாசலில் அவர் காரில் ஏறி புறப்படும் வரைக்கும் நின்றவன் மறுபடியும் நின்றிருந்த இடத்திற்கு வந்தான்.

 

மறுபடியும் சலசலப்பாக பேச ஆரம்பித்து இருக்க…”நன்றி நண்பர்களே  என இவனது குரல் கேட்கவும் பேச்சு சத்தம் அடங்கியது. இங்கே வேலை செய்யறவங்களுக்கு ஆபர் கொடுத்து இருக்கறிங்க…வழக்கமாக பத்து பர்சண்ட்டேஜ் கொடுக்கறாங்கன்னா இந்த முறை நம்முடைய ஆபீஸ் ஸ்டாப்புக்கு இருபத்தி ஐந்து பர்சன்டேஜ் வரைக்கும் தள்ளுபடியில் வண்டியை கொடுக்க முடிவு செய்து இருக்கறாங்க…நம்மோட ஜிஎம்…தேவை படறவங்க இதை யூஎஸ் பண்ணிக்கலாம். “

 

[the_ad id=”6605″]

 

 

 

“அப்புறம் இந்த வருஷம் ஆண்டுவிழாவை பெரியதாக கொண்டாடணும்ன்னு சொல்லி இருக்கறாங்க…குடில் ரெஸ்டாரண்ட்ல ஒரு நாள் முழுக்க ஃபங்சன் வைக்கறது மாதிரி ப்ளான்…காலையில் பத்து மணி தொடங்கி நைட் பத்து மணி வரைக்கும்..

மூன்று வேளையும் சாப்பாடு கம்பெனி செலவில்…நாள் முழுக்க போரடிக்காமல் இருக்க… உங்களுக்கு சின்னதாய் கேம் வைக்கலாம்ன்னும் நிர்வாகம் முடிவு செய்து இருக்கு…கூடவே வின் பண்ணினவங்களுக்கு பரிசும் மாலை ஆறு மணிக்கு கொடுக்கிறது போல… ஆர்கெஸ்ட்ராவும் இருக்கு…ஒகே இப்போதைக்கு இவ்வளவு தான். “

 

“என்ன மாதிரி கேம் வைக்கலாம்ன்னு அவங்க அவங்க விருப்பத்தை எழுதி இங்கே வைக்கிற பாக்ஸில் போடணும்…முக்கியமான விஷயம் எல்லோரும் போடணும் எது நம்மால் முடியுமோ அதை எடுத்துக்கலாம். தள்ளுபடி வண்டிக்கு மட்டும் அல்ல…ஸ்பேர் பாட்ஸ்க்கும் தான்  சோ..எதுவுமே வேணும்னோ இங்கே வேலை செய்யறவங்க இந்த ஆபரை பயன்படுத்திக்கோங்க…

பிடிச்சவங்களுக்கு வாங்கி கொடுங்கள்…மாலை நான்கு மணி வரைக்கும் டைம் அதுக்குல்ல இந்த பாக்ஸை நிரப்பிடுங்க என்று சொல்ல லேசான சிரிப்பலை கிளப்பியது.”

 

“ஓகே…இப்போது போய் வேலையை பாருங்க “என்றதும் எல்லோரும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.மதியம் வரைக்கும் பேச்சு அணை பற்றியதாக இருந்தது.  சக்தி தன்னுடைய இடத்திற்கு வர கூடவே வந்த ரேஷ்மா..”.சக்தி நாமலும் ஏதாவது போட்டியை பற்றி எழுதலாம்.  என்ன போட்டி வைக்கலாம்.  ஒட்டப்பந்தயம் வைக்க சொல்லலாமா…”

 

“ரேஷ்மா ஆள் தான் வளரலை அறிவுமா…தாம என்ன ஸ்கூலா படிக்கிறோம் ஓட்டப்பந்தயம்  வைக்க…வேடிக்கை பார்க்கற எல்லோரும் சிரிப்பாங்க வேற ஏதாவது யோசி…”

 

“லெமன் அன் ஸ்பூன்…ரேஷ்மா கேட்க…”

 

“இது கொஞ்சம் ஓகே தான் இன்னும் கொஞ்சம் பெட்டரா யோசிக்கலாம். “

 

“போ சக்தி எங்க ஏரியாவில் விநாயகர் சதுர்த்திக்கு,பொங்கலுக்கு  இதெல்லாம் தான் வைப்பாங்க…”

 

“அடப்பாவி…உன்னை எல்லாம் வச்சிக்கிட்டு…சக்தி சிரித்தபடி தனது கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்…”

 

“நீதான் சொல்லேன்…செமையா சிரிக்கற மாதிரி கேம்…”

 

“சொல்லிட்டா போச்சு….என்றவள் இரண்டு நிமிடம் யோசித்தவள் பலூன் ஊத வைக்கலாம் நிமிடத்தில் எத்தனை பலூன் ஊதி கட்டறாங்கன்னு பார்க்கற மாதிரி…கவிதை சொல்லலாம்…மேக்சிமம் படிச்சவங்க தானே…பாட்டு கூட பாட வைக்கலாம் ஆர்கெஸ்டராவுக்கு சொல்லி இருக்கறதால…டைம் நல்லா பாஸ் ஆகும்.”

 

“ஐ…சூப்பர் சக்தி இதெல்லாம் எழுதி போட்டுடவா…”

 

“போடேன்…செலக்ட் ஆனாதானே…பார்க்கலாம் என்றபடி பில்லை செக் செய்தாள்”…இவள் நேற்று வரவில்லை ஆனால் மோகன் என்ற பெயரில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆயிரத்திற்கு ஃபில் போட்டு இருந்தனர்.  பெயரை பார்க்கவும் முகம் சுருக்கியவள் அந்த நிமிடம் மட்டும் தான் உடனே வழக்கம்போல மாறி இருந்தாள்.

 

‘நீண்ட நாட்களுக்கு பிறகு குரலை கேட்டபோது அந்த நிமிடம் தோன்றிய பயம்…ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை ஏற்கனவே நிறைய பயந்து நிறைய அழுது இனி அது போல பயப்படக்கூடாது. தைரியத்தை வளர்ந்து கொள்ள வேண்டும்.  எக்காரணத்தை கொண்டும் பழைய நினைவு தன்னை பாதிக்க கூடாது என தெளிவாக முடிவு செய்து இருந்தாள்.’ 

 

என்ன இத்தனை செய்தவனுக்கு எந்த தண்டனையையும் இவர்கள் தரப்பில் தராமல் விலகியது இப்போதும் மனதை உருத்திக்கொண்டே இருந்தது.  நிறைய நேரம் இதை பற்றி யோசித்து இருக்கிறாள். அன்று இருந்த மனநிலையில் சக்தியை அங்கிருந்து அழைத்து வந்தால் போதும் என்ற நினைவு மட்டுமே அப்போது அவர்கள் வீட்டாருக்கு இருந்தது.  மோகனின் மேல் கப்ளைண்ட் தரவோ அவனை பிடித்து அடிக்கவோ அந்த நேரத்தில் தோன்றவில்லை. 

 

ஆனால் சக்தி நினைவு தெரிந்ததில் இருந்தே தினமும்  விடிந்து  எழுந்ததும் முதலில் தெய்வத்தை வணங்கி விட்டு  தெய்வத்தின் முன்பு நின்று ஸ்லோகம் சொல்லியபிறகுதானே அடுத்த வேலை செய்ய நகர்வதே…

அப்படி என்றால் தெய்வம் இருக்கிறது என்பது எல்லாம் பொய்யா? இந்த கேள்வி அடிக்கடி அவளது மனதில் தோன்றும் ஒன்று.  ஒரு முறை திவ்யாவிடம் கூட கூறி இருக்கிறாள்.அதற்கு அவள்” அப்படி இல்லை சக்தி  அப்படி எல்லாம் யோசிக்க கூடாது. கொஞ்சம் யோசித்து பாரு…இங்கே உன்கிட்ட நல்லவன் மாதிரி நடந்து கிட்டு அங்கே அந்த பொண்ணு கூடவும் வாழ்ந்து இருந்தா…இதை மாதிரி நிறைய கேள்வி படறோமே…ஏதோ நாம பண்ணின நல்லது நம்மல  இந்த அளவோட காப்பாற்றிடுச்சுன்னு நினைச்சிக்கோ…பளார் பளார்ன்னு நாலு விட்டுட்டு வந்து இருந்தா மனசு கொஞ்சம் சமாதானம் ஆகி இருக்கும்…அதுதான் நடக்கலை இந்த வகையில் சிவா மேலேயே எனக்கு கோபம் தான்…இப்படி சொல்லி தேற்றி இருந்தாள். “

 

“இவளுக்கு தான் அவனது முகம் மறக்கவில்லையே தவிர அவன் சுத்தமாக இவளை மறந்து இருந்தான். பாதிக்கப்பட்டது இவள்தானே தவிர அவன் இல்லையே…”

 

“திவ்யா இப்போது எல்லாம் அடிக்கடி சொல்வது கடவுள் உனக்குன்னு  ஒரு வாழ்க்கை இருக்கறதுலேயே பெஸ்டா வச்சி இருப்பாரு… அதுக்காக தான் இத்தனை சிரமம் சீக்கிரமே உனக்கு நல்லது நடக்கும் இதுவும் அவள் சொல்வது தான்”.  ஆனால் சக்திக்கு தான் எல்லா ஆசைகளும் மறத்து போய் இருந்தது.  இப்போது கல்யாண ஆசையும் இல்லை கனவுகளும் இல்லை. இப்படி  அவளது மூளை இஷ்டம் போல்  யோசித்தபடி இருக்க…கண்கள் கம்ப்யூட்டரை மட்டுமே வெறித்து கொண்டு இருந்தது. 

 

“ஹலோ…சக்தி  அங்கே ஏதாவது இருக்கிறதா” என்ன  என்று சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தால் உதட்டில் தொற்றி இருந்த சிரிப்போடு பிரபு நின்றிருந்தான்.”வந்து முழுசா பத்து நிமிஷம் ஆகுது நிமிர்ந்து பார்ப்பிங்கன்னு பார்த்தா…பார்க்கற ஐடியாவே இல்லை போல இருக்கு…”

 

[the_ad id=”6605″]

 

 

 

சற்று நகர்ந்து ரேஷ்மா சிரிப்பது தெரிந்தது…”ஸாரி ஸார் கவனிக்கலை சொல்லுங்க என்று இவள் கேட்டாள்…”

 

“உங்கள் ரெண்டு பேருக்கும் வேலை கொண்டு வந்து இருக்கிறேன்… ரெண்டு பேரும் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கள்…பண்ணுவிங்கதானே…

சின்ன உதவி தான் “

 

“சொல்லுங்கள் ஸார் என்ன பண்ணனும்…”

 

“இது காலையில் கீழே வச்ச பாக்ஸ்… இதில் எந்த ,எந்த கேம் எழுதி இருக்கறாங்கன்னு இந்த நோட்ல எழுதி தரணும்…இப்போதைக்கு இந்த பக்கம் யாரும் வரமாட்டாங்க அதனால தான்… மொத்தமாக எழுதிடுங்க…கேம் படித்து பார்த்துவிட்டு ஈஸியா இருக்கறதை நாம எடுத்துக்கலாம். முடியும் தானே…”

 

” முடியும்  ஸார் கொடுங்க எழுதி தர்றேன் என சக்தி வாங்கி கொண்டாள்”. 

 

“ஒருத்தர் பேப்பரில் இருக்கறதை சொல்லுங்கள் இன்னோருத்தர் அதை ஒன்று, இரண்டுன்னு நம்பர் போட்டு எழுதுங்கள்..கடைசியில் செலக்ட் பண்ணிக்கலாம்…”பிரபு சொல்ல…

 

“ஓகே ஸார் “என்றபடி சக்தி பாக்ஸை ஒபன் செய்ய ரேஷ்மா அவளுக்கு அருகில் தனது இருக்கையை நகர்த்தி போட்டவள்  நீ எழுது  நான் படிக்கறேன் என்பது போல படிக்க தயாரானாள்.

 

பிரபு சொல்லி விட்டு  நகர்ந்து சென்றவன் திரும்பி வந்து “சக்தி உடம்பு சரியாகிடுச்சா இப்போது ஒகே தானே என்று கேட்க…”சட்டென முகத்தை நோக்கியவள் அவனது பார்வையின் பொருள் தெரியாதவள் லேசான  புன்னகையோடு தலையை மட்டும் ஆட்டினாள்.

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!