Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 3

என்னவள்_3

 

பளீரெண்ற விளக்குகள் வண்ணம் சேர்க்க மொத்தமாக வெளிச்சத்தில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது அந்த ரெசார்டின் உற்பகுதி…வந்தவர்களை வரவேற்று கொண்டு இருந்தார் மாயாவின் தந்தை திருச்செல்வம் அருகிலேயே அவரது மனைவி கவிதாவும் நின்றிருந்தார். 

 



Advertisement

மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரிசையாக ஒவ்வொரு வாகனமாக வந்து நிற்க ஆரம்பித்தது.. வருபவர்கள் அத்தனை பேரையும் வரவேற்று உள்ளே அனுப்பி வைத்து கொண்டிருந்தனர்.

 

கார்த்திக் வந்த வாகனம் வந்து நிற்கவும் வேகமாக வண்டிக்கை அருகில் சென்று அவன் இறங்கவும் “வா கார்த்திக் என லேசாக அணைத்து வரவேற்க.”.

Advertisement

 

Advertisement

“என்ன அங்கிள் புதுசா எப்பவும் போல இருங்க எனக்கே என்னவோ போல ஆகுது.நீங்கள் பார்த்து வளர்ந்தவன் நான் மரியாதை எதுவும் தேவையில்லை.”  

 

“இருக்கலாம் பா  ஆனாலும் இனி எனக்கு மாப்பிள்ளை ஆக போறவன் முன்னாடி மாதிரி இருக்க முடியாதே…”

Advertisement

 

“அப்பா அங்கிளை என்னன்னு கேளுங்கள்”, என அருகில் இருந்த தந்தையிடம் சொன்னவன் “அம்மா இப்ப என்ன பண்ணனும் இங்கே நமக்கு ஏதாவது ரூம் அரேன்ஜ் பண்ணி இருக்கிறதா..”

 

“ஆமாம் கார்த்திக்  பொண்ணோட ரூம்பிற்கு பக்கத்து ரூம் அங்கே கொஞ்ச நேரம் உட்காருங்க இன்னும் நிறைய பேர் வரவேண்டியது இருக்கு வந்த பிறகு மேடைக்கு வந்தால் போதும்.இன்னும் நேரம் இருக்கே..”

 

“அம்மா டைம் இருக்குங்கறாங்க நீங்கள் அங்கே அவ்வளவு அவசரப்படுத்துனிங்க..”

 

[the_ad id=”6605″]

 

 

 

“டேய் இன்றைக்கு நீ  ஆபீஸ் போனதே எனக்கு பிடிக்க லை நீ என்னடான்னா அப்படியே சைட் ஒர்க் பார்த்தேன்னு எப்படி வந்த..முழுக்க முழுக்க அழுக்கோட…”

 

“அம்மா நாம செய்யற வேலை அந்த மாதிரி  அதுக்காக இப்படி சொன்னால் எப்படியாம்.” சொன்னவன் அடுத்த கேள்விக்கு தாவி இருந்தான்.” என்ன மா இப்பவே இவ்வளவு கூட்டம் இருக்கு. கொஞ்ச பேருக்கு தான் சொன்னதால் அங்கிள் சொன்னாங்க..”

 

“மாயா வீட்டில் அவ ஒரே பொண்ணு டா..இந்த ஃபங்சனும் கல்யாணமும் தானே நல்லா பண்ண முடியும் அது தான் அவங்க பக்கத்தில் நிறைய பேருக்கு சொல்லி இருக்கறாங்க..அப்புறம் அவங்க பக்கத்தில் சொந்தகாரங்க ஜாஸ்திடா.. அதனால தான் இத்தனை கூட்டம்.”

 

“எல்லோரும் நம்மைதான் பார்க்கறாங்கமா..”

 

“மாப்பிள்ளைன்னா சும்மாவாடா அப்படி தான் இருக்கும் பேசாமல் வா”, என்றபடி இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கெ அழைத்து சென்றார். 

 

அங்கே போகவுமே “அண்ணா நான் அண்ணியை போய் பார்த்துவிட்டு வரப்போகிறேன்  என்றபடி மணமகள் இருந்த அறை நோக்கி நகர்ந்தாள் பிருந்தா.” 

 

“அம்மா  இவளுக்கு என்னமா ஆச்சு இப்படி இருக்கறா..”

 

“போடா நீதான் மாயாகிட்ட பேசலை அவளாலாவது பேசட்டும் எப்பப்பாரு வேலை வேலைன்னு அதையே கட்டிப்பிடிச்சிட்டு சுத்தற இந்த கல்யாணம் முடிஞ்ச பிறகாவது மாறுவையான்னு பார்க்கலாம். “

 

“நீங்கள் திருந்த மாட்டிங்க கையில் இருக்கறதை கொடுங்கள் எத்தனை நேரம் சுமந்துட்டு இருப்பிங்க..”

 

“இந்த அக்கறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை  அப்பாவும் பையனும் இதில் மட்டும் சரியா இருக்கறிங்க…”

 

“இந்த ஃபேக்கையும் அந்த பிரோவில் வச்சி பூட்டிடு இதில் தான் பொண்ணுக்கு போட போற மோதிரம் இருக்கு நான் முன்னாடி  போய் வர்றவங்களை பார்க்கிறேன். உன்னோட ஃப்ரெண்டுங்க எல்லாம் எப்போது வருவாங்க..”

 

“வருவாங்கமா எல்லோருக்கும் மெசேஜ் போட்டு இருக்கிறேன் ஒவ்வொருத்தராக வருவாங்க.”

 

“சரிடா பிருந்தா வந்தா பார்த்துக்கோ சரியா”, என நகர்ந்து வெளியேறினார். 

 

அதே நேரம் பிருந்தா அடுத்து இருந்த அறைக்குள் நுழைந்து இருந்தால் “ஹலோ மாயா அண்ணி..என்றபடி..

 

 ப்யூட்டிசியன் இன்னும் அவளை தயார் செய்து கொண்டு இருக்க கடைசி கட்டமாக லிஸ்டிக் திற்றிக்கொண்டு இருந்தார் அந்த ப்யூட்டிசியன் பெண்மணி. இவளது சத்தம் கேட்டு நிமிர உதட்டில் லிஸ்டிக் லேசாக கோடு இழுத்து சற்றே முகத்தில்  பட்டு இருந்தது.  கண்ணாடியில் பார்த்தவள் சற்று கோபமாக சட்டென அந்த பெண்மணியை நகர்த்தி விட்டாள். 

 

சாதாரணமாக தனிமையில் இருந்து இருந்தால் அந்த பெண்மணிக்கு நிச்சயமாக அடி விழுந்து இருக்கும் அந்த அளவுக்கு கோபக்காரி. சிறு தவறு கூட செய்ய கூடாது அவளுக்கு  எதுக்காக பணம் தர்றோம். சரியாக செய்ய தானே . சரியாக செய்ய வராட்டி எதுக்காக இங்கே வேலைக்கு வரணும் என்கிற எண்ணம் எப்போதும் உண்டு. 

 

இன்று அடிக்கவில்லை  ஆனால் நன்றாக முறைத்தாள். இவள் ஆடியது தவறு இல்லை அவள் போட்டதில் தப்பு என்பது போல பார்த்தவள் ,”பார்த்து லிப்டிக் போட மாட்டிங்களா இங்கே பாருங்க நான் மறுபடியும் இப்போது முகத்தை சரிபண்ணிட்டு வரணும். ஒரு வேலையை கூட சரியா செய்ய தெரியவில்லை எப்படி உங்களை வேலைக்கு சேர்த்தாங்க.இன்றைக்கு மேக்கப்புக்கு மட்டும் ஐம்பதாயிரம் பேசி இருக்கறிங்க அதுக்கு ஏத்தமாதிரி வேலை செய்ய தெரியாதா..”

 

“ஸாரி மேம் நீங்கள் தான் ஆடினிங்க..”

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஹலோ என்ன என் மேல தப்பு சொல்லுவியா உனக்கு சம்பளம் தர்றது எல்லாத்தையும் அட்ஜெட்ஸ்ட் பண்ணி வேலை செய்ய தான் புரியுதா..இது கூட அங்கே கூட்டமாக ஆட்கள் இருந்ததால் பதில் சொன்னால் இல்லை என்றால் வேறு மாதிரி கத்தி இருப்பாள். “

 

அருகில் இருந்த அவளது சித்தி ரேணுகா தான் மெதுவாக அவளை தொளை தொட்டு சமாதானப் படுத்தினாள். 

 

“ஷ்…மாயா கூல்…

இங்கே இத்தனை பேர் உன்னைதான் கவனிக்கறாங்க பேசாமல் இரு அப்புறம் பேசிக்கலாம்”, என்றபடி பிருந்தா விடம் திரும்பியவள் “பிருந்தா மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் வந்தாச்சா வந்ததும் உங்கள் அண்ணியை பார்க்க உடனே வந்திட்டு போல இருக்கு..”

 

“ஆமாம் ஆன்ட்டி அண்ணி என்னுடைய டிரஸ் நல்லா இருக்கா உங்களோடது பார்த்து அதே கலர்ல எடுத்து கட்டிட்டு வந்தேன்”,என வெகுளியாக கூற…

கொஞ்சம் புத்திசாலி பெண்ணாக இருந்து இருந்தால் மாயாவின் பார்வையிலேயே கண்டு இருப்பாள் தான் அணிந்து வந்தது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை…

 

ரேணுகா தான்  இதற்கும் பதில் அளித்தாள். “வெரி ப்யூட்டிபூல் ரொம்ப அழகாக இருக்கு ஏஞ்சல் மாதிரி  இருக்கற..”

 

“தேங்க்ஸ் ஆன்ட்டி வர்றேன் அண்ணி பை அப்புறம் வந்து மறுபடியும் பார்க்கிறேன் “,என அந்த இடத்தில் இருந்து நகர்ந்து தங்களது அறையை நோக்கி நகர்ந்தாள். 

 

அவள் நகரவும் மாயாவின் தோழி ஒருத்தி “என்ன மாயா இந்த மாதிரி கலர்ல யாரும் போடக்கூடாது நான் தனியாக தெரியணும் இந்த ஃபங்சனுக்குன்னு சொன்னே…இப்பபாரு நீ கல்யாணம் பண்ணி போக போகிற வீட்டிலேயே உனக்கு போட்டிக்கு ஆள் இருக்கு.”

 

“அப்படி எல்லாம் ஆக விடமாட்டேன்.  இந்த மாயா எல்லா இடத்திலேயும் தனியாக தான் தெரிவா இன்றைக்கு வேணும்னா தப்பா போய் இருக்கலாம் எப்போதும் இனி இது மாதிரி ஆகாது. “

 

“மாயா உன்னோட ஃப்ரெண்டுங்க விளையாட்டுக்கு சொல்லறாங்க.. இப்படி எல்லாம் பேசக்கூடாது  அவங்க நம்மை விடவும் வசதிடா அவளும் இதுமாதிரி யூனிக் கா வாங்கலாம் இல்லையே சும்மா தொட்டதுக்கும் கோபப்படக்கூடாது.”

 

“சித்தி உனக்கு தெரியாது இதுமாதிரி வேற டிரஸ் இருக்க கூடாதுன்னு அந்த டிசைனர்கிட்ட தனியா கேட்டு வாங்கினேன். உங்களுக்கு தான் பஸ்ட் போட்டு தர்றேன்னு அப்படி அடிச்சு பேசினா இங்கே என்ன ஆச்சு பாருங்க இது சேலை அந்த பொண்ணு பாவாடை, தாவணி..அதுவும் லெகன்கா டைப்ல டிசைன் துளி கூட மாறலை.”

 

“சரிடா எழுந்திரு முதல்ல எல்லாம் சரியாக இருக்கிறதான்னு பார்க்கலாம் என்று சொல்லவும் எழுந்து நின்றாள் மாயா..கிட்டத்தட்ட ராணியோட கம்பிரத்தோடு அந்த உடைக்கு ஏற்ற நகைகளோடு அழகாக…”

 

“சித்தி மாப்பிள்ளைக்கு ஃபங்சனுக்கு போட டிரஸ் எடுத்து இருந்தோமே அதை கொண்டு வந்து இருக்கறிங்கதானே அதை எடுத்துட்டு வந்து அவங்க கிட்ட கொடுக்க சொல்லுங்க நான் மட்டும் ரெடி ஆனால் போதுமா..”

 

“இருடா மாப்பிள்ளையோட அம்மாவை அழைச்சிட்டு வரேன் அவங்க கிட்ட கொடுத்து கொடுக்க சொல்லலாம்.” ஏற்கனவே இந்த ஏற்பாடு மாயாவின் தந்தைக்கு  பிடிக்கவில்லை.  மாயா கார்த்திக் சம்மதிக்க மாட்டான் பா அவனுக்கு அதிக ஆடம்பரம் பிடிக்காது நீ வாங்கிட்டு அவன் வேண்டுமாம் முடியாதுன்னு சொன்னா  அவ்வளவு மரியாதையாக இருக்காது உனக்கும்  கஷ்டம்  அவனுக்கும் தேவை இல்லாமல் மனகஷ்டம் என சொல்லி இருக்க இதையெல்லாம் கேட்டால் அது மாயா இல்லையே…

 

“அப்பா நான்   இதை வாங்கி எடுத்துவிட்டு வரத்தான் போறேன்  நீங்க எனக்கு அளவு மட்டும் கேட்டு  சொல்லுங்க…போடலைனா  அது என்னுடைய பிரச்சினை  அப்போது இல்லாட்டி கல்யாணத்துக்கு பிறகு ஒரு நாள் போட வச்சிப்பேன்”. அப்படி சொல்லி தான் வாங்கி இருந்தால் ஆனால்  இன்று அவனை போட வைக்க வேண்டும்  என்று தீர்மானத்தோடு புறப்பட்டு வந்து இருந்தாள். 

 

சற்று நேரத்தில் எல்லாம் கார்த்திக்கன் தாயாரை அழைத்து வர சற்றும் தாமதிக்காமல் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள் மாயா..

 

அவளது செய்கை குணலஷ்மி நெகிழ்ந்து போனார்.” நல்லா இருமா என்றபடி எழுப்பி விட”.. “ஆன்ட்டி மேக்கப் ஒகே தானே நல்லா இருக்கறேனா..அதிகமாக தெரியவில்லை தானே”..அவள் கேட்டது உண்மை தானே இப்போது எல்லாம் மேக்கப் போட்டது போல தெரியாமல் இருக்க போடப்படும் மேக்கப் தானே அதிகம். 

 

“அப்படி எதுவும் தெரியலைடா அழகான இருக்கற என்றபடி கூற.. ஆன்ட்டி  ஒரு சின்ன ஹெல்ப் எனக்கு நீங்கள் தான் உதவணும். “

 

[the_ad id=”6605″]

 

 

 

“என்ன மா…என்ன  செய்யணும்  சொல்லு செய்யறேன். ஏதாவது வேண்டுமா  சொல்லுடா…”

 

“இல்லை ஆன்ட்டி அதெல்லாம் இல்லை.  வந்து…ஆன்ட்டி  ஃபங்சனுக்காக ஒரு டிரஸ் கார்த்திக்கிற்கு  வாங்கினேன் இதை போட சொல்ல முடியுமா…இது என்ன அதிக பிரசங்கிதனமா அப்படின்னு  நினைக்காதிங்க ப்ளீஸ்.  அப்பா வேண்டாம்ன்னு தான் சொன்னாங்க நான் தான் ஆசையா வாங்கினேன். இந்த டிரஸ் வாங்கும் போது அதை பார்த்தேன் ரொம்ப பார்க்க ஹேன்சம்ன்னு சொல்லற அளவுக்கு நேர்த்தியாக இருந்தது அது தான் யோசிக்காமல் வாங்கிட்டேன்.” 

 

“இவ்வளவு தானா பரவாயில்லை குடுடா நீ வாங்காமல் இனி வேற யார் வாங்கி தர போறா கொடு அவன்கிட்ட கொடுத்து போடச்சொல்லறேன்.”என்றபடி வாங்கி கொண்டு புறப்பட்டார் லஷ்மி.

இதை பார்த்தபடி அருகில் இருந்த அவரது சித்தி ரேணுகா ,”பரவாயில்லை மாயா கொஞ்சம் உன்னை நினைத்து பயந்திட்டு இருந்தேன் உன்னோட குளத்திற்கு போகிற இடத்தில் எப்படி சமாளிக்க போறேன்னு நீ புத்திசாலி பொண்ணு பொழச்சுக்குவ” என்று சொல்லவும் அவளை செல்லமாக  முறைத்தபடி “சித்தி நான் யாரு மாயாவாக்கும் யார் கிட்ட எப்படி பேசினா வேலை ஆகும்ன்னு எனக்கு தெரியும்.” 

 

அங்கே டிரஸ்சை எடுத்து கொண்டு கார்த்திக்கிடம் சென்றவர் “என்னுடைய மருமகளுக்கு உன் பேல் எவ்வளவு பாசம் பாரு. உனக்கு இன்றைக்கு ஃபங்சனுக்கு போட இந்த டிரஸ் எடுத்து இருக்கறா இதை போட்டுக்கணுமாம். இந்தா டா இதை மாற்றிக்கோ”..என எடுத்து வந்த உடையை நீட்ட.. “அம்மா நான்  போட்டு இருக்கற டிரஸ்சே நல்லா தான் இருக்கு எதுக்குமா இது..வாங்கி பிரித்து பார்த்தவன் அம்மா கோர்ட்சூட் இதை யாரு இங்கே போடறாங்க இதெல்லாம் தேவையே  இல்லாதது”.

 

“டேய் ஓவரா பேசாதே வர்றவங்களுக்கு ரெண்டு பேரும் தனியாக தெரிய வேண்டாமா இன்றைக்கு ஒரு நாள் தானே போட்டுக்கோடா  நான் வேற உன்னை போட வைக்கறேன்னு வாங்கிட்டு வந்துட்டேன். முடியாதுன்னு திரும்ப தந்தால் நல்லா இருக்காது. நல்ல பையன்ல்ல போட்டுக்கோடா”.

 

“அம்மா…”

 

“உள்ளே வரலாமா..ஏதோ பெரிய டிஸ்கசன் போகுது போல இருக்கு.”

 

“டேய் வாடா வா வா..”ஏன் இத்தனை  லேட் அப்பவே உன்னை  எதிர் பார்த்தேன்.”

 

“வந்ததும் ஃப்ரெண்ட்ங்க எல்லோரையும் முன்னாடி பார்த்தேனா அங்கேயே பேசிட்டு நின்னுட்டேன் பேசிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிடுச்சு”.

 

“வாப்பா சிவா நீ மட்டும் தான் விந்தியா

வீட்டில் அழைச்சிட்டு  வரலையா”லஷ்மி கேட்க…

 

“நீங்க வேற  பெரியம்மா அவளையும் தான் அழைச்சிட்டு வந்தேன் ஊட்டியில் இருந்து கீழே வண்டியில் இறங்கறதுக்குல்ல ஃபுல்லா வாந்தி  அவங்க  அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்து இருக்கிறேன் நைட் அங்கே தான் தங்கனும் அடிக்கடி வரமுடியறது இல்லை  அது வேற ஒரே கம்ளைண்டா இருக்கு. நாம தான் இப்படின்னா இந்த தடியனும் அந்த பக்கம் வரமாட்டேங்கறானே”.

 

“அடேய் வேலை சரியா இருக்கிறதுடா எங்க நகர..அப்பாவுக்குமுன்பு மாதிரி முடியறது இல்லை அவங்களுக்கு ரெஸ்ட் வேணும்னா நான் ஓடித்தான் ஆகணும் வீட்டில் அம்மா அப்பா எப்படி இருக்கறாங்க”.

 

“நல்லா இருக்கறாங்க கல்யாணத்துக்கு கட்டாயம் கூட்டிட்டு வரேன்”.இன்னமும் கையில் துணியோடு லஷ்மி நிற்க அதை கையில் வாங்கியவன் நல்லா இருக்குதுடா போட்டுக்கோ…அங்கே ஸ்டேஜ் டெக்கயேஷன் செமையா இருக்கு அதுக்கு இந்த டிரஸ் நல்லா மேச்சேரி ஆகும்”.

 

“அப்புறம் என்ன சிவாவே சொல்லிட்டான் இந்தா இதை மாத்திக்கோ இந்த பிருந்தா எங்க இங்கே அழைச்சிட்டு வரேன் இரு” என்றபடி நகர்ந்து சென்றார்.

 

உடையை எடுத்து போட்டவனுக்கு அப்போது தெரியவில்லை  இப்போது மட்டும் அல்ல ஒவ்வொரு முறையும் உடை விஷயத்தில் மட்டும் அல்ல இனி ஒவ்வொன்றிக்கும் அவள் இஷ்டப்படி தன்னை மாறவைத்து  அவள் விருப்பத்திற்கு மட்டுமே தலையாட்ட வைக்க போகிறாள் என்பதை…ஒரு வேளை முதலிலேயே தெரிந்து இருந்தால் இந்த திருமணத்தை நிறுத்தி இருப்பானோ…

 

தொடரும். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!