Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 4

என்னவள்_4

 

வண்டியை எடுத்தபடி மெயில் ரோட்டிற்கு வண்டியை விட எப்போதும் போல இன்றும் பார்ப்பவர்கள் சற்றே இவளை பரிதாபமாக பார்ப்பது போல் தோன்றியது கண்களுக்கு தெரிந்தாலும் எதையும் கவனிக்காமல் வண்டியை செலுத்தினாள். இது ஒன்றும் புதிது அல்லவே ஆறு மாதங்களாக இவன் கண்ணில் படுவது தானே..இன்னும் எத்தனை நாள் இது போன்ற பார்வையை சந்திக்க போகிறாளோ…

 



Advertisement

மொத்தமாக கூட்டமாக நிற்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி ஏன் என்னை இப்படி பரிதாபமாக பார்க்கிறீர்கள் நான் என்ன தவறு செய்தேன்  எனக்கு யாருடைய பரிதாப பார்வையும் தேவை இல்லை என கத்தவேண்டும் போல தோன்றியது.  

 

என்ன பார்ப்பவர்கள் அத்தனை பேரும் இவளுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள்  ஏன் சிறு குழந்தையில் இருந்தே இவளது  ஒவ்வொரு வளர்ச்சியையும் நேரில் பார்த்தவர்கள் அல்லவா..மெயின் ரோட்டை நோக்கி வண்டியை வேகமாக ஒட்டினாள். அடுத்த நாற்பது நிமிடம் வேகமாக நகர இவளது வண்டி ஆபீஸின் வாசலில் நின்றது.

Advertisement

 

Advertisement

வழக்கம்போல தனது வண்டி நிருத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தியவள் ஆபிஸின் உள் நுழைய அங்கே சந்தை கடை போல ஒருவர் கோபமாக கத்திக்கொண்டு இருந்தார். நின்று இரண்டு நிமிடம் கவனித்தவள் வேகமாக தனது இடம் நோக்கி நகர்ந்தாள். 

 

அங்கே மாடியில் இவளது விற்பனை பிரிவில் வேலை பார்ப்பவள் வாசலிலேயே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். 

Advertisement

 

“என்ன ரேஷ்மா செம வேடிக்கை போல காலையில் வேலை இல்லையா..”கீழே எட்டிப்பார்த்த படி கூற..

 

“நீ வேற சக்தி அங்கே பிரச்சினை முடிஞ்சா தான் இந்த பக்கத்தில் படி ஏறி வருவாங்க செம இன்டரஸ்டிங்கா இருக்கு. பேசறவர் எவ்வளவு அழகாக பாயின்ட்  பாயிண்டா பேசறார் தெரியுமா..அங்கே  அவங்க பதில் சொல்ல தெரியாமல் திணறுறதை பார்க்கும் போது செம காமெடியா இருக்கு நீயே இங்கே வாயேன் ரெண்டு நிமிடம் பாரு விழுந்து விழுந்து சிரிப்ப ,நீ சிரிக்கறதுக்கு நான் கேரண்டி..”

 

“அப்படி என்ன கேட்கறாரு”, என்றபடி எட்டிப்பார்க்க  கீழே நடப்பது தெளிவாக தெரிந்தது.”வண்டியை வாங்கற வரைக்கும் அப்படி காலில் விழுந்திங்க எனக்கு இப்போது பதில் தெரியணும் வண்டியை எடுத்துவிட்டு போய் எத்தனை நாள் ஆச்சு முழுசா ஒரு வாரம் முடியலை செல்ப்ஸ்டாட் ஒர்க் ஆகலை  இங்கே வந்து சொன்னா சின்னதாய் கூட ரெஸ்பான்ஸ் பண்ணலை என்ன பார்த்தா எப்படி தெரியுது, பைத்தியக்காரன் மாதிரியா…நான் கன்சியூமர் கோர்ட்டுக்கு போவேன் என்னை  என்ன  நினைச்சிங்க நான் யார் தெரியுமா”.

 

எட்டிப்பார்த்த சக்தி  “என்ன ரேஷ்மா ரயில் எஞ்சின் மாதிரி விடாமல் பேசறாரு கேட்கற எனக்கே மூச்சு வாங்குதே அங்கே என்ன தான் ஆகும்”.

 

“அதை தெரிஞ்சிக்கதான் நானும் பார்க்கிறேன். “

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“சரி தான் நீயே வேடிக்கை பாரு நான்  போறேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம் டாரகேட் டாரகேட் நல்லா உயிரை எடுக்கறாங்க வர்றது முதல் மாதிரி குவாலிட்டியும் இருக்கிறது இல்லை  நானும் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து கவனிக்கிறேன் வாரம் ரெண்டு பேர் இதை மாதிரி சண்டை போட்டுட்டு போறாங்க.”

 

“என்ன செய்ய சக்தி ப்ரோடக்ட் பேர் வாங்கிச்சுல்ல அப்புறம் விளம்பரம் சின்னவங்கல்ல இருந்து பெரியவங்க வரைக்கும் அதை பார்த்து ஏமாறறாங்கலே…”

 

“அதுவும் சரிதான்  யாரை குறை சொல்ல பார்க்கற நாமலே ஏமாறும் போது யாரை தான் குறை சொல்ல..சொன்னபடி தனது ஃபேக்கை எப்போதும் வைக்கும் இடத்தில் வைக்க…”

 

“அதைதான் நானும் சொல்லறேன் போன வாரம் என்னுடைய ஃப்ரெண்ட் ஹேர்பால்க்கு ஏதோ ஷாம்பு பெஸ்ட்ன்னு வாங்கி முன்னாடி விடவும் அதிகமாக கொட்டுதுன்னு பொளம்பறா..”

 

“ரேஷ்மா இயற்கையாக கிடைக்கிற பழவகைகளை சாப்பிடலாம் அதுவே ஹெல்த்தானே..சரியா சாப்பிடாமல் உடம்பை கெடுத்துக்கறாங்க அப்புறம் முடியாது கொட்டுதுன்னா எப்படியாம். பழங்கள் ஓவ்வொரு சீசனுக்கும் வரத்தான் செய்யுது அந்தந்த சீசன்ல ரேட் கூட சீப்பாத்தான் இருக்கிறது.”

 

“சக்தி நீ சொன்னா நம்புவேன். பாரேன் எவ்வளவு நீளமா முடி வளர்த்தி வச்சி இருக்கற..கருகருன்னு அடர்த்தியா…ம் சக்தி இன்றைக்கு ரொம்ப அழகா இருக்கற என்ன அந்த நெற்றியில் இருக்கற தழும்பு மட்டும் இல்லைன்னா இன்னும் அழகா இருப்ப..”

 

தன்னை அறியாமல் நெற்றியில் கைவைக்க அதே நேரம் மறுபடியும் ரேஷ்மாஅழைத்தாள். சக்தி சீக்கிரம் இங்கே வா பிரச்சினை முடியப்போகுது. வா  இங்கே வந்து பாரு. ரெண்டு நிமிஷத்தில் சரி பண்ணி அனுப்பிடுவார் பாரேன் என கூப்பிட மறுபடியும் அவள் தின்ற இடத்திற்கு நகர்ந்தாள். 

 

அங்கே சத்தமிட்ட அந்த நபரிடம் இப்போது பேசிக்கொண்டு இருந்தது பிரபு அங்கே சர்வீஸ் பிரிவின் இன்சார்ஜ் ஒவ்வொரு முறையும் பிரச்சினை நடக்கும் போது பெரும்பாலும் பேசி சமாதானம் செய்வது அவன் தான்.  அங்கே வேலை செய்யும் பல பெண்களின் தற்போதைய கனவு நாயகன்.

 

“என்ன பிரச்சினை  கூப்பிட மாட்டிங்களா வாங்க ஸார்…நீங்கள் என்கிட்ட சொல்லுங்கள் நான் சரிபண்ணி தர்றேன்” .

 

“நீங்களே யாருங்கள் ஸார் வண்டியை வாங்கினது இங்கே இருக்கறவங்க கிட்டதானே உங்கள் கிட்ட நான் ஏன் சொல்லணும்.”

 

“ஸார் வண்டியை விக்கறதோட அவங்க வேலை முடிஞ்சு போச்சு…வண்டியில் பிரச்சினைன்னா நான் தான் பார்க்கனும் சொல்லுங்க என்ன பண்ணனும்.”

 

“அது..வண்டியை வாங்கி ஒரு வாரம் கூட முடியவில்லை அதுக்குல்ல ஸ்டார்ட் ஆகலை..”

 

“வண்டி ஃபுக் எடுத்துவிட்டுவந்து இருக்கறிங்கதானே அதை

 கொடுங்கள் வண்டியை எடுத்துவிட்டு வந்து இருக்கறிங்கதானே நான் போய் பார்க்கிறேன் ஸார்.” 

 

“எனக்கு இப்ப வண்டி வேணும் எனக்கு உடனே சரிபண்ணி தரணும்”.

 

“கட்டாயம் ஸார் எங்களோடு வேலையே அது தானே..ஒரு அரைமணி நேரம் தாங்க சரிபண்ணி தந்திடறேன். ஸ்பெஷலா நானே கவனிச்சு தர்றேன். உள் அறையில் இருந்த சமைக்கும் பெண்மணியிடம் …ஏம்மா ஸாருக்கு ஒரு டம்ளர் காபி எடுத்துட்டு வந்து கொடுங்கள்..”

 

“ஸார் உங்களோட வண்டியோட பிரச்சினை என்னன்னு பார்த்துவிட்டு 

பேட்டரி தான் பிரச்சினைன்னா புதிது போட்டு தந்திடறேன் ஜட்ஸ் அரைமணி நேரம் டைம் தாங்க என்றபடி விசிட்டர் அமரக்கூடிய இருக்கையில் அமரவைத்து ஃகாபியையும் இவனே வாங்கி வந்து அவர் கையில் தந்து விட்டு சர்வீஸ் செய்யும் இடத்திற்கு நகர்ந்தான்.”

 

பிரபு இங்கே வேலைக்கு சேர்ந்து முழுதாக நான்கு மாதங்கள் முடிந்து இருந்தது. இவனது குடும்பம் வசிப்பது சென்னையில்  அங்கே வேலைக்கு தேர்வாகி கோயம்புத்தூர் பிரிவுக்கு அனுப்பி வைத்து இருந்தனர். இவனது குடும்பம் சிறியது. தாயார் வாசுகி இவனது தங்கை ஸ்ரீ இருவரும் தான் இவனது உலகம்.  தந்தை இவனது பத்தாவது வயதில் தந்தை இறந்து விட்டார்.

 

தந்தை இருக்கும் வரையிலுமே இவனது தாயாருக்கு நிம்மதியான வாழ்வு இல்லை  தினமும் குடித்து விட்டு வந்து இவனது தாயாரிடம் ஏதாவது சண்டை இழுத்து அவரை அடிப்பதையே வழக்கத்தில் வைத்து இருந்தார். இதனாலேயே அவர் இருந்து வரையில் நிம்மதி துளி கூட கிடையாது இவர்களுக்கு…அவர் இறந்த பிறகு தான் சற்றே நிம்மதியாக இருந்தார்கள் என்றால்…அதுதான்  உண்மையும் கூட அதன் பிறகு வாழ்க்கை சற்றே சிரமம் தான்..பணத்திற்கு ஆனாலும்  நிம்மதி இருந்தது நிறைய…சிறிய கூடு போன்ற சிறு வீடு தேவைக்கு சில பாத்திரங்கள் மாற்றி உடுத்த சில உடைகள் தந்தை இறந்த போது இவர்களுக்கு இருந்தது அவ்வளவு தான் வாசுகி ஊறுகாய் விற்பனை செய்து வந்தார் அது ஓரளவிற்கு இவர்களுக்கு போதுமானதாக இருந்தது.வாசுகி இருவரையும் பசியால் வாடத அளவிற்கு பார்த்துக்கொண்டார். 

 

பிரபு புத்திசாலி வீட்டு சூழ்நிவை புரிய…அப்போது  காலையிலேயே அந்த ஏரியாவில் நீயூஸ் பேப்பர் போட ஆரம்பித்து இருந்தான் . மாலையில் அதே போல ஒரு ஹோட்டலில் டேபிள் கிளினிங் வேலைக்கு சென்று விடுவான். பொறுப்புகளை உணர்வு கொண்டதாலோ என்னவோ எதுவும் சிரமமாக இருந்தது இல்லை.  

 

படிப்பு அங்கிருந்த கார்ப்பரேஷன் பள்ளியில் தொடர்ந்தது. பத்தாவது முடிக்கவும் பால்டெக்னிக்கில் எளிதாக சேர்த்து இருந்தான். அப்போது இருந்தே அவனுக்கு இந்த டூவிலர் சர்வீஸ் இவனுக்கு பிடித்து இருந்தது. 

 

இப்போது மாறி இருந்தான் ஹோட்டலில் இருந்து டூவீலர் சர்வீஸ் செய்வதற்கு இவனுக்கு இருந்த ஆர்வம் இவன் வேலை செய்த அந்த சர்வீஸ் செய்பவருக்கு பிடித்து விட அதில் உள்ள அனைத்து நுனுக்கங்களையும் கற்று தந்து இருந்தார்.  

 

கொஞ்சம் வருமானம் அதிகமாகவும் சற்றே பெரிய வீட்டுக்கு குடி ஏறினர். இவனுக்கு எளிதாக அருகில் இருந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது ஆனால் இவனது கனவு வேறாக இருந்தது. ஆறுமாத காலம் முடியவும் எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட்டோடு அடுத்துஇருந்த சற்றே பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான் இப்போது சற்றே அதிகமாக சம்பளம் கிடைத்தது. அங்கே இவனது திறமையை பார்த்த மேளாளருக்கு இவனை ரொம்பவே பிடித்து இருந்தது. 

 

அவனிடம் பேச்சு கொடுத்தவர் இந்த நிறுவனத்திற்கு அவனை அனுப்பி வைத்தார். 

 

[the_ad id=”6605″]

 

 

 

பிரபு அங்கே அந்த ஆபீஸ்ல வேலைக்கு ஜாயின் பண்ணிக்கறையா ஆறு மாதம் டிரைனிங் தருவாங்க வேல்ட் முழுக்க அவங்களுக்கு  கிளைகள் இருக்கு நீ இன்னும் உயர்ந்த இடத்திற்கு போக உனக்கு உதவியாக இருக்கும் என்ன சொல்லற..என கேட்க

இவனுக்கு புதிது புதிதாக கற்றுக்கொள்ள ஏதாவது வேண்டும். ஏற்கனவே மார்கெட்டிங்கில் முன்னணி யில் இருந்து அனைத்து பைக்,டூவிலர் அனைத்தையும் பிரித்து அசெம்பல் செய்து இருந்தான். 

 

ஏன் இதனையும் முயற்சி செய்யலாமே என நினைத்தவன் உடனே தனது சம்மதத்தை தெரிவித்தான். ஆறு மாதம் முடிந்த போது வண்டியை பற்றிய அனைத்து விஷயங்களை மட்டும் அல்ல அங்கிருந்த அனைத்து வேலைகளிலும் நன்றாக தேறி இருந்தான். 

 

இவனை ரெக்கமண்ட் செய்த அவருக்கு இருந்த மரியாதை இவனுக்கு இருந்த திறமை இரண்டும் சேர இங்கே கோயம்புத்தூர் பிரிவுக்கு சர்வீஸ் இன்சான்ஜ்ஜாக அனுப்பி வைத்தனர்… நாற்பது ஆயிரம் சம்பளத்தோடு..

 

ஒரளவுக்கு நல்ல சம்பளம் இப்போது இங்கு தான் இவனுக்கு கிடைத்தது.  முதல் மாதம் சம்பளம் வாங்கவும் முதலில் சென்னை சென்றவன் வீட்டுக்கு தேவையான பிரோ,கட்டில்,மிக்சி,கிரைண்டர் என தேவையானது எல்லாமே வாங்கி தந்து விட்டு வந்திருந்தான். ஸ்ரீக்கு தேவையான உடைகள் இப்படி..

 

ஆரம்பம் முதல் தாயாரின் கஷ்டங்களை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ பெண்களிடம் இவனுக்கு மரியாதை அதிகம். யாரிடமும் அதிர்ந்தோ ,அதட்டியோ பேசியது இல்லை. அதுமட்டுமல்ல அங்கிருக்கும் அனைவரிடமும் இவன் நடந்து கொள்வதும் நட்புரீதியாகவே..அதனாலோ என்னவோ இவனை அங்கேஅனைவருக்கும் பிடித்தது.  அங்கே வேலை செய்யும் பெண்கள் பலருக்கும் இவன்தான்  கனவு நாயகன். இவனுக்கே தெரியாமல் அப்படி ஒரு ரசிகை பட்டாளத்தை ஏற்படுத்தி இருந்தான். 

 

வண்டியை நகர்த்தி சென்றவன் உரிய இடத்தில் நிறுத்தி அவனே பேட்டரியை செக் செய்து கழட்ட  ஆரம்பித்து இருந்தான். 

 

அண்ணா என்றபடி அருகில் நின்ற சர்வீஸ் பையனிடம் வேண்டிய ஸ்பேனரை பெற்றுக்கொண்டவன் செக் செய்து விட்டு “புது பேட்டரி எடுத்துவிட்டு வா  இது சரி இல்லை.  இனி வண்டி டெலிவரி கொடுக்கும் போது செக் பண்ணிட்டு கொடுங்க அடிக்கடி இங்கு வந்து இப்படி கேட்கறது நல்லாவா இருக்கிறது. யார்  டெலிவரி கொடுத்தது.”

 

“அண்ணா இங்கே இல்லை ணா. பக்கத்தில் இருக்கற வேற ஒரு செண்டர்ல வாங்கி இருக்கறாங்க, பைனான்ஸ் கம்பெனி மூலமா..இது ஆறுமாதம் முன்னாடி டெலிவரி  கொடுத்தது அங்கே சரியாக பதில் சொல்லலை போல இருக்கு அது தான் இங்கே வந்து கத்திட்டாரு…”

 

“எது எப்படியோ யார் வாங்கினாலும் பார்த்து அனுப்புங்கள் அவ்வளவு பணம் போட்டு வாங்கும் போது கம்ளைண்ட் இருந்தா யாருக்கும் கோபம் தான் வரும். நீயோ நானோ விட்டுடுவமா என்ன? “

 

அருகில் இருந்த தண்ணீரில் கையை கழுவியவன் நானே பேசி அணுப்பிடறேன் போய் வேலையை பாரு என்னபடி மறுபடியும் விசிட்டிங் ஹாலிற்கு வந்தான்.

 

“வேலைக்கு முடிஞ்சுதுங்க ஸார். புது பேட்டரியே மாற்றியாச்சு…ஸாரி இனி இதுமாதிரி நடக்காது இந்தாங்க இது என்னுடைய நம்பர் எப்போது இங்கே வந்தாலும் எனக்கே கூப்பிடுங்கள் நானே உங்களுக்கு ஸ்பெஷலா நானே சரி பண்ணி தர்றேன்.”

 

“வர்றேன் தம்பி நல்ல பையனா, பொருப்பா இருக்கற என்றபடி புறப்பட்டார்.” 

 

“ஷப்பா முடிஞ்சுது சக்தி பிரச்சினை அவரு அவரோட வண்டியோட புறப்பட்டாச்சு பிரபு ஸார் கிரேட் இல்லை  எவ்வளவு அழகாக பிரச்சினையை சமாளிக்கறாங்க..”

 

“அதுக்குதான் சம்பளம் தர்றாங்க நாற்பது ப்ளஸ்ல…”

 

“அதவிடு சக்தி நேற்று என்ன பண்ணின கிளம்புற அவசரத்தில் சேல்ஸ்ரிப்போட் மெயில் பண்ணலையா…”

 

“அச்சச்சோ மறந்துட்டேன். காலையில் வந்து அவரே அனுப்பிட்டார்.”

 

[the_ad id=”6605″]

 

 

 

“சுத்தம் இப்ப என்ன செம்ய”..

 

“ஒரு நன்றி சொல்லிடு  ரொம்ப சிம்பிள் என்றபடி அங்கிருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்”.

 

“சொல்லத்தான் வேணும் என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள் சக்தி. “

 

கொஞ்ச நாட்களாக இவளும் அவனை பார்த்து கொண்டு தானே இருக்கிறாள் அடிக்கடி இவளிடம் வந்து பேசுவதை சற்று நேரம் நின்றவள் முடிவு செய்து இருந்தாள் முதலும் கடைசியுமாக  அவனிடம் பேசி விடவேண்டும் என்று… முடிவு செய்யவும் மனம் நிதானத்திற்கு வர எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதை மனதிற்குள் ஒத்திகை பார்த்தபடி தனது இருக்கையில் அமர்ந்தாள். 

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!