ஹலோ Excuse me இந்த Chair – a நான் எடுத்துக்கலாமா ??
ஒரு Cabin-ல் இருந்து இன்னொரு Cabin-ல் வந்து chair- ஐ கேட்பது எல்லாம் எதோ ஒரு வித attention-ற்கு தான் என்று பச்சையாய் தெரிந்தது அருணிற்கு.
Yeah Please … Rolling Chair ஐ தள்ளி அவள் பக்கம் வைத்தான்..
தன்னையே மறந்து அவனின் கண்களையே 5 நொடி உத்து பார்த்து எதையோ எதிர்பார்த்து இருப்பவளை பார்த்து அழுத்தமாக என்ன என்பது போல் கேட்டான்.
தன்னிலைக்கு மீண்டு வந்து வெட்கபட்டுக்கொண்டே Thank you.. என்று நடந்தாள் அவனை திரும்பி பார்த்து கொண்டே…
இதே போல் தான் அடுத்த இரண்டு நாட்களும் சென்றது.. அருணும் Board meeting வேளைகளில் busy ஆக, அபர்ணாவிற்கு மட்டும் Office-க்கு வருவதே அருணை பார்ப்பதற்காக தான் என்பது போல கண்ணும் கருத்துமாய் இருந்தாள்.
அபர்ணா அருணை சைட் அடிப்பது அருணின் Team-ல் சில பேருக்கு தெரிந்து விட்டது. அருணின் ஜூனியர் நரேஷ் ஒரு படி மேல் சென்று சிரித்து கொண்டே
சார் புதுசா வந்து இருக்க அந்த பொண்ணு உங்களையே பாக்கிற மாதிரி இருக்கு சார் என்று சொல்லியே விட்டான்
தடால் என்று 7 வருடம் பின்னோக்கிய நினைவுகளில் அருண்!!!
பீச்சில் Get-together – இல் நண்பன் மனோ சொன்ன அதே வார்த்தைகள்!!!
டேய் மச்சான் ஸ்ருதி உன்னையே பாக்கிற மாதிரி இருக்கு டா…
ஒரு நொடி Time machine -இல் சென்றது போல இருந்தது அவனுக்கு.. Psych- இல் இருந்து வெளியே வந்தவனாய்.
என்ன..என்ன சொன்ன? பதற்றமாய் கேட்டான் அருண்
ஐயோ sorry சார்.. இங்க எங்க எல்லாருக்கும் அப்படி தான் தோணுச்சு.. அதனால தான் சொன்னேன் Really very sorry sir…
எழுந்து வேகமாய் Restroom நோக்கி சென்றான்… சென்னையின் அத்தனை தண்ணீர் பிரச்சன்னையிலும் Wash basin – ஐ திறந்து Full force – இல் அடிக்கும் தண்ணியில் முகத்தை கழுவி கொண்டே இருந்தான் ஸ்ருதியின் நினைவுகள் போகும் வரை. பிறகு சற்று நிதானமாய் கண்ணாடியில் முகத்தை பார்த்தான்.
இப்படி பைத்தியக்காரனை போல சதா சர்வகாலமும் அவளை பற்றியே நினைத்து கொண்டு இருக்கும் தன் மீது கோபம் கோபமாய் வந்தது!!! சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டு தன் cabin நோக்கி சென்றான்.. அபர்ணா இருக்கும் இடம் தேடி கண்கள் போனது!!
அவள் தன்னை ரொம்ப Close ஆக Watch செய்து கொண்டு இருப்பது தெரிந்தது!! அருணின் பதட்ட மனநிலை அவளையும் பதட்டமடைய செய்திருப்பதாக அவளின் கண்கள் சொல்லியது!!
மதியம் Lunch முடிந்து Conference ரூம் இருக்கும் இடம் நோக்கி பரபரப்பாக சென்று கொண்டு இருந்தான் அருண். மீண்டும் அபர்ணா இருக்கும் இடத்தை ஒரு முறை பார்த்தான்…
காலியாக இருந்தது. எங்கயாவது போயிருப்பாள் போல என்று Lift நோக்கி விரையும் பொழுது தான் Lift அருகில் தனக்காகவே காத்திருப்பது போல் அங்கே அபர்ணா!
எதையாவது பேசி விடுவாளோ யோசனையாக ஒரு பக்கம் இருந்தாலும் எதையாவது பேசினால் நன்றாக தான் இருக்கும் என்று நினைத்து கொண்டே கிட்டே நெருங்கினான் .
[the_ad id=”6605″]
ஹாய் உங்க பேரு அருண் தானே என்று அதிரடியாக கேட்டாள் அபர்ணா..
எதுவுமே தெரியாதவனை போல கொஞ்சம் சுதாரித்து கொண்டவனாய்.
Yeah tell me என்றான்..
Actually நீங்க ரொம்ப Cute – ஆ இருக்கீங்க. அதனால தான் உங்கள பாத்துட்டே இருந்தேன் தப்பா எடுத்துக்காதீங்க!!
வயிற்றில் இருந்த பட்டாம்பூச்சிகள் அனைத்தும் உயிர்த்தெழுவது போன்ற ஒரு எண்ணம் அருணிற்கு !!
வைத்த கண் வைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் அபர்ணா..
பிறகு ஏதோ பேச முயன்றவளாய் இருந்தவள் பின்னால் CEO நடந்து வருவதை பார்த்து பதறி கொண்டு bye என்று சொல்லி வேகமாக நகர்ந்தாள்!!!
அவளின் அந்த அணுகுமுறையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதோ ஒன்றில் இருந்து மீள முடியாமல் நின்று கொண்டிருந்த அருணிடம் வந்த ceo
என்ன அருண் மீட்டிங் போகலாமா என்று கேட்டவுடன் தான் மீண்டும் சகஜ நிலைக்கு வந்தான்…
மீண்டும் அதே நாள்.. அதே இடத்தில்… அதே அபர்ணா.. லிஃப்டை நோக்கி வந்த அருணிடம்…
Hey hii..Actually I think I have a crush on you..
வெட்கத்தை காட்டிக்கொள்ளக்கூடாது என்று மெனெக்கெட்டான் அருண்..
Oh… Really?
நிஜமா நான் இன்னைக்கு Fulla- a கூட உங்கள தான் பாத்துட்டே இருந்தேன்!!
அது இந்த Office -ke தெரியும் நெனைக்கிறேன்!!
Oops! நிஜமாவா ?? அவ்ளோ கேவலமாவா நான் சைட் அடிக்கிறேன்!! சே.. சரி Can I ask you something? நீங்க Committed ah?
இல்ல இந்த முறை எதையும் யோசிக்காமல் வேகமாக ஆணித்தரமாக சொன்னான் அருண்.
அருணிற்கு Office உள்ளே இப்படி அவளிடம் பேசி கொண்டிருப்பது அவனை பற்றிய மற்றவர்களின் அபிப்ராயத்தை மாற்றும் என்று தோன்றியது. எனவே
Hey.. நான் இப்போ Urgent – a வெளிய போயிட்டு இருக்கேன்.. This is my card.. எப்போ வேணாலும் U can call me.. Let’s keep in touch .. அபர்ணாவிற்கு Lead குடுத்து விட்டு நடையை கட்டினான் அருண்..
என்னமோ தெரியவில்லை அபர்ணாவிடம் பேசவேண்டும் என்பது போல தோன்றியது…
நிச்சயமாக அவளிடம் Impress ஆகி விட்டான் அருண்.. தைரியமாக அவள் மனதில் பட்டதை சொன்ன விதம் , அவளின் நளினம் இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக அருண் வாழ்க்கையில் இருந்த வெறுமை அவனை அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல உந்தி கொண்டே இருந்தது..
[the_ad id=”6605″]
Weekend-ல் Office இல்லை.. so, கண்டிப்பா அபர்ணா இவனுக்கு ஒரு கால் அல்லது அடலீஸ்ட் Whatsapp Text- ஆவது செய்வாள் என்று எதிர்பார்த்திருந்தான் அருண்..
ஸ்ருதியின் பிரிவுக்கு பிறகு சில, பல பெண்களை சந்தித்து விட்டாலும் எதோ ஒரு வகையில் அபர்ணாவிடம் மட்டும் இவன் Attract ஆனதற்கு காரணம் புரியவே இல்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்ருதியிடம் அல்லது ஸ்ருதியை பற்றிய பேசிய நேரமே குறைந்து விட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!!
இதை எல்லாம் நினைத்துக்கொண்டு தன் வாழ்க்கையை வீணடிக்க விரும்பவில்லை. அவன் தனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ண தொடங்கினான். அப்பொழுது தான் வந்து சேர்ந்தது அபர்ணாவின் message..
ஹலோ திஸ் ஐஸ் அபர்ணா!!
இது மாதிரி நினைச்சது நடந்தது எவ்வளவு நாள் ஆச்சு என்று நினைத்து கொண்டே…
ஹலோ அபர்ணா Wassup??
அருணிற்கு அபர்ணா மிகவும் Comfortable ஆக தெரிந்தாள்.. இத்தனைக்கும் இருவருக்கும் இடையே எப்படியும் 8 வயது வித்தியாசம் இருக்கும்.. அபர்ணா பள்ளிக்கு சென்றிருந்த காலத்திலேயே அருண் ஸ்ருதியுடன் commit ஆகி இருந்திருப்பான். அவ்வப்போது இந்த வயது விஷயம் அவனுக்கு உள்ளூர உறுத்தி கொண்டு இருந்தாலும் Whatsapp Texts தொடர்ந்தது.. சில பல விசாரிப்புகளுக்கு பிறகு,
நிஜமாலுமே நீங்க இது வரைக்கும் யார்கூடயும் commit ஆகலே ??
அப்படி நான் சொல்லலையே.. இப்போ committed இல்ல னு தான் சொன்னேன்.
So you have been in a relationship?
Yes of course!!
இப்போ அவங்க உங்க கூட இல்லையா
Yeah she left me!
ஏன் என்னாச்சு?? தெரிஞ்க்கலாமா…
தெரிஞ்சுக்க கூடாதுனு எதுவும் இல்ல..
சரி அப்போ நான் call பண்ணட்டுமா?
அவனே கால் செய்தான்..
Hey.. அபர்ணா சொல்லு !!
ஹ்ம்ம் …
என்னாச்சு ??
இல்ல.. சொல்லுங்க ..
Are you okay?
ஹ்ம்ம்… சொல்லுங்க …
நான் வேணா அப்புறமா call பண்ணட்டுமா ??? I think you are not okay!!
ஹே இல்ல…. சொல்லுங்க.. அப்படில இல்ல எனக்கு பயமா இருக்கு!!
ஏன் பயம் ?? என்னாச்சு
சொல்லுவேன் தப்ப நெனைக்க கூடாது…
பரவாயில்ல சொல்லு… என்னத்த சொல்ல போறாளோ என்றபடியே அருண்
உங்க கிட்ட தைரியமா வந்து office- ல பேசிட்டேன்…Text-ம் பண்ணிட்டேன்.. but, உங்க கிட்ட அதுக்கு மேல பேசுறதுக்கு பயமா இருக்கு!!!
என் நான் அப்படி என்ன பண்ணிட போறேன் …
இல்ல உங்க மேல ரொம்ப பெரிய மரியாதை இருக்கு… அது தான் பயமே னு நெனைக்கிறேன்!!
சரி அப்போ Text பண்ணட்டுமா ??
இல்ல கொஞ்ச நாள் ஆகும் நெனைக்கிறேன்.. நீங்க சொல்லுங்க நான் கேக்கறேன்.
என்ன சொல்லட்டும் ??
ஏன் அவங்க உங்களை விட்டு போனாங்க ??
இந்த மாதிரி …இந்த மாதிரி ஒரு கேள்விக்கு தான் இத்தனை நாள் காத்து கொண்டது போல் எண்ணினான் அருண்.. யாரவது கேட்டு விட மாட்டாங்களா தன்னை பற்றி தெரியாதவர்களிடம் ஸ்ருதியை பற்றியும் தன் பிரச்னையை பற்றியும் கூறினால் எதாவது விடை கிடைத்து விடாதா?? இந்த இரண்டு வருடங்கள் எனது 350 கிராம் இதயம் சுமந்து கொண்டு இருக்கும் ton கணக்கு பாரத்தை யாரவது இறக்கி விட மாட்டார்களா என்று ஏங்கி கொண்டு இருந்தவனுக்கு தேவதைகளால் மீண்டும் ஒரு சான்ஸ் கொடுக்க பட்டவள்தான் இந்த அபர்ணா என்பது போல உணர தொடங்கினான்.
ஆனால் நிச்சயமாக காதல் மட்டும் கூடவே கூடாது.. இனி ஒரு முறை ஏமாற நான் தயாராகவே இல்லை.. இல்லவே இல்லை என்று உறுதி மொழி பூண்டு தன் காதல் கதையை அவளிடம் சொல்ல ஆரம்பித்தான் அருண்…
கோர்வையாக சொல்லாவிட்டாலும் மனதில் இருந்ததை முடிந்த வரை அவளுக்கு போர் அடிக்க கூடாது என்று பார்த்து பார்த்து சொன்னான். இருந்தாலும் அவள் கொஞ்சம் அமைதியாகவே கேட்டு கொண்டு இருந்தது அருணிற்கு புரியவில்லை..
ஒரு வேலை தூங்கிட்டாளோ??
அடிக்கடி ஹலோ.. இருக்கீயா என்று உறுதிப்படுத்தி கொண்டே மேலும் விவரித்தான் …
இது தான் நடந்தது அபர்ணா.. And so am here all alone!!
அபர்ணாவிடம் இருந்து Dead Silence..
Hey hello..are you there?
மீண்டும் அதே … ஹ்ம்ம்ம் …
என்ன யா ரொம்ப போர் அடிச்சுட்டேனா??? இதுக்கு தான் அப்போவே நான் சொல்ல மாட்டேன்னு சொன்ன .. என்று சொல்லி முடிவதற்குள் !!!
ஒரு சின்ன விசும்பல் சத்தம் அவளிடம் இருந்து..
ஹே என்னாச்சு யா ??
ஒன்னும் இல்ல.. சொல்லுங்க.. பேச முடியாமல் தவித்தாள்
[the_ad id=”6605″]
நீ normal ஆ இல்ல அபர்ணா
என்னால முடியல ..
ஏன் ??
கொஞ்சம் சத்தமாகவே அழ தொடங்கினாள் அபர்ணா.
பதறி போனான் அருண்.
ஹே ஏய் ரிலாக்ஸ் என்னாச்சு என் இப்படி wait wait!!!
இல்ல உங்களுக்கு ……..இப்படி நடந்துருக்க கூடாது…… நீங்க ரொம்ப……. ஸ்வீட்!!
இப்படி அவள் அழுது கொண்டே பேச முடியாமல் இருந்தது அருணிற்கு என்னவோ பண்ணிற்று..
இந்த இரண்டு வருஷ சோகத்தை தனக்காக சேர்த்து அவளும் அழுவதாக எண்ணினான் அருண். எப்பொழுதோ தான் நடித்த Short film-ல் விளையாட்டாக பேசிய ஒரு serious வசனம் மனதில் வந்தும் போனது !!
உன் கண்ணு முன்னாடி உனக்காக ஒரு பொண்ணு அழும் போது நீ கல்லு மாதிரி நின்ன னா உண்மையிலே நீ பெரிய ஆளு தான் !!!
தன்னையே இத்தனை வருடம் தேற்ற முடியாமல் தோற்று போன அருண் அபர்ணாவை தேற்றும் முயற்சியில் …
சரி விடு விடு.. It all happens…Am now okay ya..Life- னா அப்படி தான்.. You don’t worry!
ஹ்ம்ம்ம்… அழுகையை கன்ட்ரோல் செய்ய முடியாமல் அவள்.
நான் Text பண்றேன் உங்களுக்கு… sorry என்று வைத்து விட்டாள்.
ஒரு விதத்தில் இது நல்லது தான்.. Let her take her own time.. என்று feel செய்தான்
Hey am really sorry for making you feel even more bad…Am not able to control myself.. sad ஸ்மைலியுடன் அபர்ணா
That’s okay ya.. நாம வேற எதாவது பேசலாம்.. சாப்பிட்டியா ??
வேறு சில டாபிக்கில் நள்ளிரவு வரை நீண்டது whatsapp உரையாடல்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இரவு நேரத்தில் whatsapp-இல் அருண்!!
யாருமே கண்டுகொள்ளவில்லை என்றாலும் தன் contact List -ல் இருக்கும் அத்தனை பேரும் தான் Online- இல் இருப்பதையே உற்று நோக்குவார்களோ என்று யோசித்தான்…இடையில் ஸ்ருதியின் contact சென்று பார்த்தான்…
Status-ல் Fervent and Believer.. என்று போட்டிருந்தாள்..
Fervent என்றால் meaning என்ன என்று google -இல் போட்டு பார்த்தான்.
எதையோ Expect செய்து கொண்டிருப்பவர் என்ற வகையில் அர்த்தம் இருந்தது. ஒரு வேலை இந்த ஆங்கில வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் தெரிஞ்சுருந்தா ஸ்ருதி விட்டு போகாம இருந்துருப்பாளோ என்னவோ!!! ஐய்யயோ முடிலடா சாமி..
மூடிட்டு அபர்னாகிட்ட ஒழுங்கா பேசு என்று தன்னை தானே சொல்லி கொண்டான்… சரி ஒரே ஓரு முறை ஸ்ருதி online-இல் இருக்காளா என்று மட்டும் பார்த்து கொண்டான். நினைத்தது போலவே அவளும் இந்நேரத்தில் ஆன்லைன் இல் இருந்தாள்.
தனக்கு ஒரு அபர்ணா போல அவளுக்கு யாரோ என்று யோசித்து கொண்டான்..
Cha… இவ்ளோ தானா இந்த வாழ்க்கை?? இதுக்கா இத்தனை scene!! இது தான் நடக்க போகுது இப்படி தான் வாழ்க்கை இருக்க போகுதுனு தெரிஞ்சிருந்தா இவ்ளோ கஷ்டம் தேவை இல்லையே !!!
ஒருவேளை இது முன்னாடியே தெரிஞ்சுட்டா life bore –ஆ தான் இருந்துருக்குமோ என்னமோ!!
தத்துவ ஞானி போல ஆனான் அருண்.. தத்துவங்கள் இப்படி தான் உருவாகுது போல என்று சொல்லி கொண்டே அபர்ணாவுக்கு reply செய்ய தொடங்கினான்!!
இரவு பகல் பாராமல் இருவரின் நட்பு நன்றாக வளர்ந்தது. தூங்கும் நேரம் தவிர அத்தனை நேரமும் அருணிடம் பேசிக்கொண்டே இருந்தாள் அபர்ணா. Whatsapp-ல், call-ல், instragram-ல்..
ஆனால் office-ல் மட்டும் இருவரின் நட்பு யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டனர்.
ஹே.. நீங்க இன்னைக்கு போட்டிருக்க shirt ரொம்ப நல்லா இருக்கு!! blue Suits you well..
message-ஐ படித்து தான் போட்டிருந்த சட்டையை ஒரு முறை பார்த்து விட்டு அந்த cabin-னில் இருந்த அபர்ணாவை பார்த்தான். அவனையே விழுங்குவது போன்று பார்த்து கொண்டு இருந்தாள்.
அன்றிரவு வீட்டில் யாரும் இல்லை என்பதால் video call-ல் அவனை வர சொன்னாள்.
அவளுக்கு எப்பொழுதும் அருணை தன் பக்கத்திலே வைத்து கொள்ள வேண்டும் ஒரு Teddy bear- ஐ போல!!
அருணிற்கும் இதை புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் இவளுடன் பழகிய பிறகு தான் கொஞ்சம் Mind peaceful ஆக இருந்தது என்பதால் அந்த நேரத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நான் உங்க மேல ரொம்ப Addict ஆயிட்டேன்னு நெனைக்கிறேன் …
அப்படி ல யாரு மேலயும் ஆகாத. உனக்கும் நல்லது இல்ல எனக்கும் நல்லது இல்ல…
உங்களை எனக்கு எவ்ளோ புடிக்கும் தெரியுமா?? எங்கேயோ வெச்சிருக்கேன் உங்களை!! தமிழ் சினிமாவில் Hero Heroine – ஐ பார்த்து பேசும் வசனமெல்லாம் அருணிடம் கூறினால் அவள்..
என்னை யாரும் தலை மேலே தூக்கி வெக்கவும் வேணாம், தரை ல போட்டு உடைக்கவும் வேணாம்.
அவனோ 70 களின் வசனங்களை பேசி கொண்டு இருந்தான்..
ஆமா ஆமா ரொம்ப தான்…சரி நீங்க தான் பாட்டு ல பாடுவிங்க னு சொன்னிங்களே எனக்காக ஒரு பாட்டு பாருங்களேன் !!
இப்போ வா?? வேணாம்.
ஏன் எனக்காக பாட மாட்டிங்களா?? உங்க Ex- கு தான் பாடுவீங்களா ??
ஹே அப்படில இல்ல நீ வேற என் அதெல்லாம் நியாபகப்படுத்துற ??
அப்போ ஒழுங்கா பாடுங்க!!! குழந்தையை மிரட்டும் தொனியில் குழைந்தாள் அபர்ணா….
நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் …
ஆகாயத்தில் நூறு நிலாக்கள் அங்கங்கே நிலா புறாக்களும் பறந்தன …
காற்றெல்லம் அவள் தேன் குரலாய் இருந்தது..மலரெல்லாம் அவள் உடலால் மலர்ந்தது …
கண்ணை மூடிக்கொண்டு ரஹ்மான் பாட்டில் உருகினான் அருண்.
ஹேய் செம்ம சூப்பரா பாடுறீங்க.. கை தட்டி குதூகலித்தாள் அபர்ணா
தேங்க்ஸ்.. Blush செய்து கொண்டே அருண் ..
சரி உண்மைய சொல்லுங்க, அவங்கள நெனைச்சு தானே பாடுனீங்க ??
ஹ்ம்ம்.. ஆமா
இன்னும் நீங்க மறக்கலயா ?
தெர்ல ..
ஒரு வேளை அவங்க திரும்பி வந்த என்ன பண்ணுவீங்க ??
அதெல்லாம் நடக்காது..
ஒரு வேலை வந்தா?? என்னை மறந்துருவிங்கல…
உன்னை ஏன் நான் முதல்- ல நினைக்கணும்? வாய் வரைக்கும் வந்தே விட்டது ..
ஏதாச்சும் நடக்குறது பேசு என்று சமாளித்தான்
ஆமா.. நீங்க மறந்துருவிங்க என்னை விட்டு அவங்க கூட போயிடுவீங்க!!
இது என்னடா பெரிய வம்பா இருக்கு என்று
சரி தூங்க போகலையா நீ? Topic-கை மாத்தினான்..
ஆனால் விடாப்பிடியாக அபர்ணா…
நீங்க எனக்கு தான் அதை நியாபகம் வெச்சுக்கோங்க.. என்று அதட்டினாள்…
Hey.. என்ன யா பேசுற ??
ஆமா அப்படியே உங்களை கடிச்சு தின்னுடலாம் போல இருக்கீங்க… சீண்ட ஆரம்பித்தாள் அபர்ணா!!
இதற்கு மேல் இந்த நேரத்தில் இனிமேல் வீடியோ காலில் வரவே கூடாது என்று யோசித்து,
உனக்கு இன்னைக்கு ரொம்ப over ஆயிடுச்சு நீ தூங்க போ..நாளைக்கு பேசிக்கலாம்.. good night..
பிறகு தூங்குவதற்கு முன்பு யோசித்தான்.
ஒரு வேலை அவ சொன்ன மாதிரியே ஸ்ருதி திரும்பி வந்தா நல்லா இருக்கும் ல… ஆனா அது நடக்குமான்னு தெர்ல என்று நினைத்து முடிக்கும் முன்னரே,
இவ்ளோ தூரம் avoid பண்ணிட்டு அவ வருவா நான் வெட்கமே இல்லாம திரும்பவும் அவ நெனைக்கிறத செய்யணுமா? சான்ஸ் eh இல்ல.. அருணின் இன்னொரு பர்சனாலிட்டி எட்டி பார்த்தது..
ஸ்ருதிக்கு எப்போவும் தான் நெனைச்சது தான் நடக்கணும் நான் வேணும்னா வேணும்!! அவளுக்கு வேணாம் ந வேணாம்!!