Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Gokulathil Raaman

Gokulatthil Raman 16 B

தலையை கைகளால் தாங்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் தன் மகனை பார்க்க பார்க்க சத்தியனுக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது. அவனை நெருங்கி அவன் தோள் தொட்டவரின் கரத்தை வெடுக்கென தட்டிவிட்டான் காண்டீபன்.

 

“அப்பா வேணுன்னு செய்யலடா” என அவர் ஆரம்பிக்க,

“அப்பாவா? அப்பாக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?” என்றான் எகத்தாளமாய்.



Advertisement

 

காண்டீபன், “சின்ன வயசுல என்கிட்ட பாசமா ஒட்டி ஒட்டி வந்தவனை நீங்க துரத்தி அடிக்கும்போது எனக்கு வலிக்கல…

சொந்த அண்ணன்கூடவே சேரக்கூடாதுன்னு நீங்க சொன்னதைக் கேட்டு அவனை நான் ஒதுக்கி வச்சப்போ எனக்கு வலிக்கல…

Advertisement

அப்பா என்கிட்டே பாசமா இருந்தாலும், அண்ணனை ஒதுக்கி வைக்குறாரேன்னு தோனுனப்போ எனக்கு வலிக்கல… 

Advertisement

அவன்கிட்ட எரிஞ்சு விழுந்து, கோவத்தை நான் காட்டும்போதும், அமைதியா சிரிச்சுக்கிட்டே போவானே… அப்பக்கூட எனக்கு வலிக்கல…

அப்பா செய்யுறதெல்லாம் சரிதான்னு உங்களை முழுசா நம்பி இப்போ ஏமாந்து நிக்குறேனே இந்த நிமிஷம் வலிக்குதுப்பா!” என நெஞ்சை பிடித்துக்காட்டி அடிக்குரலில் அவன் அழுக, மகனின் அழுகையில் முற்றிலும் உடைந்தார் சத்தியராஜன்.

 

Advertisement

“என்மேல நீங்க காட்டின பாசமெல்லாம் நான் நல்ல நேரத்துல பொறந்ததால தான். இல்லையா? இதே நானும் அவனை மாறி ஒரு அம்மாவாசைல பொறந்துருந்தா, என்னால உங்களுக்கு கெடுதல்ன்னு எவனோ ஒரு கேடுக்கெட்ட ஜோசியன் சொல்லிருந்தா… நான் செத்தாக்கூட உங்களுக்கு வருத்தமா இருக்காதுல? ஏன்னா இவ்வளோ தானே உங்க பாசம்?” என்றான் அவன்.    

 

“இல்லடா…” சத்தியன் தொடங்க, கையெடுத்து கும்பிட்டவன், “மனசெல்லாம் ரணமா இருக்கு! என்னால தாங்கிக்க முடியல!! என் அப்பா இப்படின்னு என்னால சத்தியமா தாங்கிக்க முடியல! நான் ஏமாந்து போயிட்டேன்! உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாம இருந்துட்டேன்! அவனால மட்டும் எப்படி இதெல்லாம் தாங்கிக்க முடியுதுன்னு தெரியலையே!” நெற்றியில் அடித்துக்கொண்டு இன்னும் ஏதேதோ புலம்பினான் காண்டீபன்.

[the_ad id=”6605″]

மீண்டும் சத்தியன் பேச வர, “எனக்கு உங்களை பார்க்கக்கூட பிடிக்கல!  உங்கமேல இருக்க கோவத்துல என்னை நானே ஏதாவது செஞ்சுக்குவேனோன்னு பயமா இருக்கு!” என காண்டீபன் சிறு பிள்ளையென அழ, அதற்குமேல் சத்தியன் அங்கே நிற்கவில்லை. மௌனனாய் தடுமாறும் நடையுடன் அவர் வீட்டை விட்டு வெளியேற அவரை ‘போகாதே’ என சொல்ல அங்கே ஒருவரும் முன்வரவில்லை.

 

பெரிய வீட்டில் நடந்த எதுவும் அறியாத இன்பன், தன் வீட்டின் முன்னே கயிற்றுக்கட்டிலை போட்டு, தன் கொக்கிமூக்கியுடன் குலாவிக்கொண்டிருந்தான்.

 

“இருட்டி போச்சு! ரொம்ப நேரம் புள்ளைய குளிர் காத்துல உட்கார வைக்காம, வீட்டுக்குள்ள அனுப்புடா, நேரமே தூங்கட்டும்!” வீட்டினுள் இருந்து தங்கத்தின் குரல் மட்டும் வந்தது.

 

“அதானே என்னடா இன்னும் உன் பாடிகார்ட் சத்தம் போடலையேன்னு பாத்தேன்” என இன்பன் கிண்டலாய் சொல்ல, அவன் தோள் வளைவில் சாய்ந்தவள், “அவங்களுக்கு நம்ம மேல அவ்வளோ பாசம்!! அதான்” என்றாள் சின்ன சிரிப்புடன்.

 

[the_ad id=”6605″]

 

“எனக்குக்கூட உன்மேல ரொம்ப பாசம் தான்!! காட்ட முடியலையே” என்றவனின் கரங்கள் அவன் பாசத்தை அவள் மேனியில் பதிவி செய்ய அவசரப்பட, “ஸ்ஸ்… சும்மா இருங்க” என்றாள் அவள்.

 

“க்கும்… அத்தே வந்ததுல இருந்தே சும்மா தானே இருக்கேன்!!” என்றான் போலி சலிப்புடன்.

 

“அடடா! ரொம்ப தான் சலிப்பு வருது உங்களுக்கு” என சிரித்தவளை தன்னோடு இறுக்கியவன், “ஹ்ம்ம்! அப்பறம்… மூக்கியோட நெக்ஸ்ட் ப்ளான் என்ன?” என்றான் காற்றிலாடும் அவள் முன்னுச்சி சிகையை ஒதுக்கியபடி.

 

“ம்ம்ம்? நெக்ஸ்ட் என்ன? சாப்பிட்டாச்சு… தூங்க வேண்டியது தான்!” என அவள் சொல்ல, “கிழிஞ்சுது போ… நான் அதை கேட்கல! எதிர்க்கால திட்டம் என்னனு கேட்டேன்” என்றான்.

 

“திட்டமா? அதெல்லாம் ஒன்னும் இல்ல”

 

“ஒன்னும் இல்லன்னா, இப்படியே சாப்பிட்டு தூங்கி பொழுதை போக்கலாம்ன்னு பிளான்னா?” என்றான் சிறு கண்டிப்புடன்.

 

“ப்ச்… என்ன மாமா பண்ண சொல்ற என்னை?”

 

“அதை நீ தான் சொல்லணும்” என அவன் சொல்ல, “புரியல” என்றாள் கோகிலா.

 

“எம்.பி.ஏ முடிச்சுட்டு உங்க அப்பா கம்பனியை கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல திறமையா நிர்வாகம் பண்ணிருக்க… இதே நீ என்னை கல்யாணம் செய்யாம இருந்துருந்தா நீ இப்படி தான் சாப்பிட தூங்கன்னு பொழுதை போக்கிருப்பியா? இந்நேரம் ஒரு கம்பனிக்கு முதலாளியா இருந்துருக்க மாட்ட?” என கேட்க, அது உண்மை தான் என்றாலும், “எனக்கு இப்போ அதுல எல்லாம் இன்டரஸ்ட் இல்ல மாமா” என்றாள் கோகிலா.

 

“இல்லடா! நீ என்னை கல்யாணம் செஞ்சதால உன்னோட அடையாளத்தை நீ இழந்ததா இருக்கக்கூடாது! உனக்கு நிறைய டைம் இருக்கு… என்ன செய்யலாம்ன்னு யோசி! ஆனா, இன்பனோட மனைவிங்குறது மட்டுமே உன்னோட அடையாளமா இருந்துடக் கூடாது… புரிஞ்சுதா?” என்றான்.

 

அவனை கண்ணெடுக்காமல் ஆசையாய் பார்த்தவள், அருகே நெருங்கி, அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து, “எத்தனை பேருக்கு இந்தமாதிரி தோனும்ன்னு தெரியல மாமா! இப்படி ஒருத்தன் எனக்கு கிடைச்சதுக்கு ஐயம் ரியல்….லி லக்கி!!” என்றாள் ஆத்மாத்தமாய்.

 

அவள் வதனத்தை தன் கரங்களில் தாங்கியவன், “ஒண்ணுமே இல்லாம இருந்த எனக்கு, பொக்கிஷமா கிடைச்சவ நீ! நான்தான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி!” என்றான் உள்ளார்த்தமாய்.

 

சிறிது நேரம் தொடர்ந்த அவர்களின் மோன நிலை தங்கத்தின் அதட்டலில் தான் கலைந்தது.

“இன்னுமா உள்ள வரல?”

[the_ad id=”6605″]

“அத்தே, கூப்பிட்டாச்சு! நீ உள்ள போய் படு” என இன்பன் சொல்ல, “நீங்களும் வாங்க” என்றாள் கோகிலா.

 

“இல்லடா, அறுவடை செஞ்சதெல்லாம் இங்கதான் வெளில அடுக்கி வச்சுருக்கோம்! மயிலு ஏதும் வந்து கலைஞ்சு போட்டுடும்! ஆள் இருந்தா தான் சரிப்படும்! நீ உள்ள போ, நான் இங்கயே படுத்துக்குறேன்” என அவன் சொல்ல, அரை மனதாய் உறங்க சென்றாள் கோகிலா.

 

நட்டநடு நிசி… அந்த சோளக்காட்டில் காற்றின் சத்தமும், கீச்சிடும் பூச்சிகளின் சத்தத்தையும் தாண்டி, மெலிதாய் அவள் செவி சேர்ந்தது ஓர் குரல்…!

 

“பேபி….!!!”

“யூ ஸ்டில் லுக் சோ ஹாட் பேபி…”

“என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்ட! உன்னை அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சியா?”

“நீ எனக்கு கிடைக்கலன்னா நான் உன்னை கொன்னுடுவேன்னு என் டேட் அண்ட் மாம் கிட்ட ப்ராமிஸ் பண்ணேன்!”

“சொன்ன வார்த்தையை காப்பாத்தனும் இல்லையா!? ஐ ஹேவ் கம் ஃபார் யூ பேபி… டுமாரோ வில் பீ த லாஸ்ட் டே ஆஃப் யுவர்ஸ்… ஒரு சின்ன சாம்பிள் மட்டும் காட்டிட்டு போறேன்… என்ஜாய் த நைட்”

 

காதோரம் ஒலித்த அந்த குரலும், அதில் தொனித்த வன்மமும் கோகிலாவை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து வெடுக்கென எழுந்துக்கொள்ள செய்ய, ஏனோ அக்குரல் இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருப்பதை போலவே பிரம்மை தோன்றியது.

 

அருகில் சலனமின்றி உறங்கும் தங்கத்தை தொந்தரவு செய்யாது எழுந்தவள், ஜன்னல் அருகே சென்று வெளியே பார்க்க, கட்டிலில் நிர்மலமான முகத்துடன் உறங்கிக்கொண்டிருந்தான் பேரின்பன்.

 

நின்றுப்போன திருமணத்திற்கு முதல் நாள் இரவு, இதேபோல் ஜன்னலோரம் நின்று உறங்கும் இன்பனை ரசித்துகொண்டிருந்தது அவள் நினைவுக்கு வர, தன்னைப்போல அவள் இதழ்கள் விரிந்தது.

 

அதே லயிப்புடன் நின்றிருந்தவள் விழிகளில், சிறு பொறியாய் வெளிச்சம் பரவுவது தென்ப்பட, ‘என்னது அது?’ என அவள் கூர்ந்துப் பார்ப்பதற்குள் அப்பொறி பெரிதாகி மடமடவென பெருந்தீயாய் மாற, “மாமாஆஆஆ” என கத்தப்போனவள் விதிர்விதிர்த்து நின்றாள், அத்தீச்சுவாலையின் பின்னே வெளிப்பட்ட அக்குரூர முகத்தில்!!!  

 

அவள் உதடுகள் நடுக்கத்துடன் அசைந்தது… ‘கி…ஷோ…ர்’ என…!

 

-வருவான்…  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!