Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idayathai thirudatha Episode 31.2

“ஆமாம் சித்தப்பா உண்மைதான். நான் தான் எல்லோர் கிட்டயும் சொல்லிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது கடை தெரியுமா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

 

“அப்போ உனக்கு விஷயமே தெரியாதா? உன் கிட்ட யாருமே சொல்லலையா?”

 



Advertisement

“ என்ன விஷயம் சித்தப்பா? எனக்கு தெரியாதே.” என்று புரியாமல் கேட்டாள் மதுமிதா.

 

“உங்க அண்ணாமலை ஸ்டோர் இருக்கு இல்லை?”

Advertisement

 

Advertisement

“ஆமாம்.” என்றால் மதுமிதா.

 

“அந்த அண்ணாமலை ஸ்டோர்  மேல  கட்டிட வேலை நடக்குது. உனக்கு தெரியுமா?”

Advertisement

 

“அது எனக்கு தெரியும் மாமா. கீழ ஸ்டோர் ரூம் சின்னதா இருக்குன்னு மேல பெரிய ஸ்டோர் ரூம் கட்டுவதா மாதவன் சொன்னாரு.” என்றாள் மாதவன் திருமணத்திற்கு முன்பு அப்படி சொல்லி இருந்தான்.

 

“ அப்படியா சொன்னான் மாதவன்?” என்று ஆச்சரியமாக கேட்டார்.

 

அவர் “ஆமாம் சித்தப்பா. அதுதானே உண்மை.” என்று கேட்டாள் மதுமிதா.

 

“அங்கு ஒரு அழகான கடை கட்டிட்டு இருக்காங்க.”

 

“அப்படியா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் மதுமிதா.

 

“அந்த கடை உனக்கு ரொம்ப வசதியா இருக்கும்.”

 

“என்ன சித்தப்பா சொல்றீங்க?” என்று கேட்டாள்.

 

“இன்னுமா உனக்கு புரியல?”

 

“உன்னோட டெய்லரிங் வேலைக்கு அந்த கடை ரொம்ப பொருத்தமா இருக்கும். அந்த கடை மெயின் ரோட்டில் இருக்கு. நல்ல வியாபாரம் வரும்.” என்றார்.

 

மதுமிதா யோசித்தாள்.

மாதவன் அந்த இடம் கடை வைப்பதற்கு நல்ல இடம் என்று சொன்னது ஞாபகம் வந்தது.

 

ஆனால் ‘மாதவன் ஏன் இந்த கடையை பற்றி  அவளிடம் சொல்லவே இல்லை?’ என்று யோசித்தாள்.

 

“ நீ அந்த கடைக்கு போய் பார்த்து இருக்கியா?”

 

“ஒரே ஒரு நாள் போயிருக்கிறேன் சித்தப்பா.”

 

“என்னம்மா  இப்படி இருக்க. நாளைக்கு நீ அந்த கடைக்கு போய் பாரு. பார்த்தால் தான் உனக்கும் புரியும். உங்க குடும்பத்துக்கு ஒரு கடை சொந்தமா நல்ல இடத்துல இருக்கும்போது நீ எதுக்கு வெளியில தேடிட்டு இருக்க?

சரி நீ தான் சின்ன பொண்ணு விஷயம் தெரியாமல் வெளியே தேடிட்டு இருக்க. வீட்ல இருக்குற  பெரியவங்க உனக்கு  இந்த கடையை பத்தி சொல்லி, உனக்கு கொடுத்து இருக்கலாம் இல்லையா? எல்லாத்துக்கும் ஒரு நல்ல மனசு வேணும். அது அங்க இருக்குற மாதிரி தெரியலையே.” என்று அவர் பொடி வைத்து பேசவும் மதுமிதாவுக்கு தன் புகுந்த வீட்டினரை பற்றி அவர் அப்படி பேசுவது கோபத்தை முதலில் தூண்டியது.

எனினும் அவர் பேசுவதில் இருந்த உண்மை  புரிந்து அமைதி காத்தாள்.

 

‘இந்நேரம் இதே வார்த்தையை மலர் கிட்ட சொல்லி இருந்தால் அவள் என்னை சும்மாவே விட்டு இருக்க மாட்டாள். இவன் என்னடான்னா அமைதியா இருக்காளே.’ என்று மனதில் நினைத்து மகிழ்ந்தார் சரோஜா.

 

“சரி மதுமிதா அவங்க  பேசலனா என்ன? நீ அவங்களை நிக்க வச்சு நல்லா கேளு. நாளைக்கு நீ மாதவனை கூட்டிட்டு கடைக்கு போய் அந்த புது கட்டிடத்தை பாரு. அப்புறம் நீயே பேசுவ.” என்றார் சரோஜா.

‘இவங்க ரெண்டு பேரும் சொல்றது கரெக்டு தான்.’ என்று நினைத்தாள் மதுமிதா.

 

“நான் கேட்கிறேன்” என்று பதில் கூறினாள்.

அதை கேட்டு சரோஜா மற்றும் அவரது கணவரின் முகம் மலர்ந்தது.

 

இரவு படுக்கும் முன்பு காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரம் வைத்துவிட்டு படுத்தாள் மதுமிதா.

 

காலை அலாரம் அடிக்க எழுந்து குளித்து முடித்து தயாரானாள்.

அவளுக்கு முன்பு எழுந்து உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்த மாதவன் மதுமிதாவை வினோதமாக பார்த்தான்.

 

“என்ன மது காலையிலேயே கிளம்பி ரெடியா இருக்க. எங்க போற?” என்று புரியாமல் கேட்டான்.

 

“அது அது வந்து எனக்கு வீட்ல போரடிக்குது. அதான் சும்மா உங்க கூட கடைக்கு ஒருநாள் வரலாம்னு நினைக்கிறேன். வரலாம் இல்லையா?” என்று கேட்டாள்.

 

“தாராளமா வரலாம்.” என்றான் மாதவன் சாதாரணமாக.

 

இருவரும் கிளம்பி கீழே வந்தனர்.

 

“அத்தை நானும் இன்னிக்கு இவர் கூட கடைக்கு போகலாம்னு இருக்கேன்.” என்று மதுமிதா சொன்னதும் பார்வதி உண்மையில் மகிழ்ந்தார்.

 

‘சரி எப்படியாவது இவங்க ரெண்டு பேரும் பேசி  பழகட்டும் என்று நினைத்து “சரி போய்ட்டு வா” என்றார் .

 

மலர் இடமும் சொல்லிவிட்டு மாதவனுடன் கடைக்கு வந்தாள் மதுமிதா.

 

கடைக்குள் நுழைந்த மாதவன் தன் வேலையில் ஆழ்ந்தான்.

 

மதுமிதா என்று அங்கு ஒரு பெண் இருப்பதையே மறந்து வேலை செய்து கொண்டிருந்தான்.

‘வேண்டும் என்று இவன் இப்படி பண்றானா?’ என்று ஒரு நிமிடம் நினைத்து அவன் முகத்தை உற்றுப்பார்த்தாள்.

ஆனால் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த அவன் உழைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

‘அப்படி எல்லாம் இல்லை.’ என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

 

அன்று வந்திருந்த  சூட்கேஸ் களை எண்ணி கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவற்றை எல்லாம் ஓரமாக எங்கு வைக்க வேண்டும் என்று அங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தான்.

 

வேலையை முடித்த பிறகு வந்து தன் அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தான்.

 

மதுமிதா  அருகிலிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள்.

 

அவளைப் பார்த்த மாதவன்

“ சாரி மது.   இன்னிக்கி வேலை ஜாஸ்தி அதான் உன்கிட்ட பேசவே முடியல.” என்றான் வியர்வையைத் துடைத்தபடி.

 

“சரி. உனக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா?” என்று கேட்டான்.

 

“இல்லை வேண்டாம்.” என்றாள் அவள்.

 

“ தர்பூசணி ஜூஸ் எடுத்துட்டு வர சொல்றேன். நல்லா இருக்கும். சாப்பிடு.” என்றான்.

 

“சரி” என்றாள் அவள்.

 

“இரண்டு டம்ளரில் தர்பூசணி சாறு வந்தது. இருவரும் எடுத்து சுவைத்தனர்.”

 

“ஜூஸ் உண்மையாவே ரொம்ப நல்லா இருக்கு.”

 

“ இன்னொரு டம்ளர் எடுத்துட்டு வர சொல்லட்டுமா?”

 

“இல்லை இல்லை போதும்.”

 

“ வேற என்ன வேண்டும்?”

 

“எனக்கு  நீங்க புதுசா  கட்டுகிற கட்டிடத்தை பார்க்கணும்.” என்றாள் அவனை உற்றுப் பார்த்து.

 

“மது உனக்கு காட்டணும்னு நினைச்சிட்டு இருந்தேன். வேலை டென்ஷன்ல மறந்து போயிட்டேன். சரி வா.” என்றான் .

 

மதுமிதா அவனுடன்  லிப்டில் மேலே  சென்றாள்.

 

நான்காம் தளத்தில் முதலில் ஸ்டோர் ரூம் இருந்தது. பிறகு அதனை கடந்து நடந்து சென்றவள் அங்கு இருந்த கடையை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

 

அது அவள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தாலோ அப்படியே இருந்தது. முதலில் ஒரு கண்ணாடி கதவு மயில் தோகை விரித்தவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றாள். தரையில் அழகிய பெரிய பூக்கள்  தெரிந்தது. பிறகு இரண்டு சின்ன அறைகள், ஒரு பெரிய அறை மற்றும் ஒரு பெரிய ஹால் இருந்தது. எல்லா விதத்திலும் அந்த கடைஅவள் தையல் வேலை செய்ய பொருத்தமாக இருக்கும் என்பது புரிந்தது.

 

‘சரோஜா சொன்னது உண்மைதான்.’ என்று நினைத்தாள்.

 

“இந்த கடை ரொம்ப அழகா இருக்கு. நான் ரொம்ப நாளா எனக்காக ஒரு கடை தேடிட்டு இருக்கேன். உங்களுக்கு தெரியும் தானே?” என்று அவனை உற்றுப் பார்த்து கேட்டாள் மதுமிதா.

 

“தெரியும் மது. உன….” இன்று அவன் சொல்லுவதற்கு முன்பே அவள் இடை புகுந்து

 

“அப்புறம் எதுக்கு என்கிட்ட இந்த கடையை பற்றி சொல்லவே இல்ல?” என்று சிறிது கோபமாக கேட்டான்.

 

“அது……”

‘இவளோட பிறந்தநாள் அன்னிக்கி சொல்லலாம்னு இருந்ததை எப்படி சொல்றது?’ என்று யோசித்தான் மாதவன்.

 

அதனை தவறாக புரிந்து கொண்ட மதுமிதா

“சொன்னால் இந்த கடையை நான் கேட்பேன். அதனாலதான் சொல்லல. உங்களுக்கு இந்த கடையை எனக்கு கொடுக்க விருப்பமில்லை. அப்படித்தானே?

 

இந்த கடையை பற்றி யாருமே என்கிட்ட சொல்லல. சொந்தமா எடுத்து நடத்த கடை வேணும்னு வீட்ல இருக்க எல்லார்கிட்டயும் நான் கேட்டேன். ஆனால் யாருமே இந்த கடையை எடுத்து நடத்த சொல்லல. ஏன்னா அப்படி சொல்றதுக்கு  யாருக்கும் மனசு இல்ல.” என்றாள் கண்கள் கலங்கியபடி.

 

“நான் உங்கள் எல்லோரையும் என் மனசுல எங்க வச்சிருக்கேன் தெரியுமா? ஆனால் நீங்க எல்லாரும் சேர்ந்து என்கிட்ட இந்த கடையை பத்தி சொல்லாம மறைச்சு வெச்சிருக்கீங்க. நீங்க எல்லோரும்  இவ்வளவு   செல்பிஷா இருப்பீங்கன்னு நினைக்கவேயில்லை. ஏன் இந்த கடையை வீட்டு மருமகள் நான் எடுக்க நடத்தக் கூடாதா?” என்று கோபம் குறையாமல் கேட்டாள்.

 

“மது வார்த்தையை அடக்கிப் பேசு. நமக்கு கல்யாணம் ஆகி மூணு மாசத்துக்கு மேல ஆகுது. இவ்வளவு நாளா எங்க எல்லார் கூடவும் பழகி இருக்க . எங்களயா செல்பீஷ்னு சொல்ற? நீ எங்களை புரிந்து கொண்டது இவ்வளவு தானா?” என்று கோபமாக கேட்டான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!