Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan episode 23.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

“ரொம்ப தேங்க்ஸ் கீதா.  நான் சொன்னதற்காக உங்களோட கிளோஸ் பிரெண்ட் மதுமிதா கிட்ட பொய் சொல்லி இருக்கீங்க.” என்றான் மாதவன்.

 



Advertisement

“இல்லையே.  நான் பொய் சொல்லவில்லை. நீங்க நல்லவர். . நான் உண்மையை தான் சொல்லி இருக்கேன். நீங்க அந்த நகையை எடுக்கல.  அப்புறம் அந்த கத்தியை கூட  வீசவில்லை.  இது இரண்டையும் தான் நான் சொன்னேன். அது உண்மைதானே மாதவன்?” என்று கேட்டாள் கீதா.

 

“அது உண்மைதான்.  ஆனால் திருவிழாவில் பார்த்தது   நான்னு நீங்க சொல்லல.” என்றான் மாதவன்.

Advertisement

 

Advertisement

“ஆமா மாதவன். நான் அவகிட்ட ஒரு உண்மையையும்  மறைக்கிறேன்.  ஆனாலும் பொய் சொல்ல. நான் அவளோட நல்லதுக்குதான் மறைத்தேன்.  நீங்க அவள் மேல வைத்திருக்கிற  உண்மையான காதல் என்னை இப்படி சொல்ல வச்சிடுச்சு” என்றாள்.

 

“இப்போ நான் தப்பு பண்ணலைன்னு ப்ரூ பண்ண முடியாது.  அதனால தான் என்னால சொல்ல முடியல.  என்னால அதை ப்ரூ பண்ண முடியும் போது கண்டிப்பாக நானே அவளிடம் இதை சொல்லிடுவேன் .

Advertisement

நீங்களாவது நான் சொன்னதை மட்டும் வைத்து நான் தப்பு பண்ணலன்னு   ஒத்துக் கொண்டீர்களே. ரொம்ப சந்தோஷம் .”

 

“அன்னிக்கி நான் உங்களை பார்த்த வரைக்கும் நீங்க எந்த தப்பும் பண்ணாத மாதிரி தான் எனக்கு தோணுச்சு அதனாலதான் உங்களை நம்பினேன்.

கூடிய சீக்கிரம் இந்த விஷயத்தை அவளிடம் சொல்லிடுங்க.  அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.  நான் மறைத்த உண்மை அவளுக்கு தெரிய வந்தால் நம்ம ரெண்டு பேர் மேலயும் ரொம்ப கோபப்படுவாள்.”

 

“ஆமாம் கீதா.  நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதை ப்ரூப்  உடன்  என் மேல எந்த தப்பும் இல்லைனு புரிய வைக்கிறேன்.  அதுவரைக்கும் இந்த விஷயம் அவளுக்கு தெரியாம பாத்துக்கலாம்.” என்றான் மாதவன்.

“நல்லவேளை மாதவன்.  நீங்க அன்னிக்கி நைட் என்கிட்ட பேசணும்னு கூப்பிட்டீங்க .இல்லைன்னா  இந்நேரத்துக்கு நான்  மதுமிதாவிடம் இவன் தான் அவன்னு சொல்லி இருப்பேன்.” என்றாள் கீதா.

 

“மதுமிதாவை கொஞ்ச நாளா நான் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன். அவளோட கேரக்டரை ஓரளவுக்கு நான்  புரிஞ்சு வச்சிருக்கேன்.  அவள் கண்டிப்பா உங்க கிட்ட கேட்டுட்டு தான் என்னை கல்யாணம் பன்னிக்குவான்னு யோசித்தேன். அதனாலதான் உங்க கிட்ட பேசினேன்.” என்றான் மாதவன்.

“சரி இனிமேல் உங்க கல்யாணத்துக்கு எந்த தடையும் இருக்காது. அப்படித்தானே?” என்றான் சுரேஷ்.

 

“ஆமாம் சுரேஷ். இனிமேல் இந்த கல்யாணத்துக்கு எந்த தடங்களும் வராதுன்னு  நம்பறேன்.” என்றான் மாதவன்.

 

அன்று மாதவன் அண்ணாமலையை ஹோட்டலில்  விட்டுவிட்டு வாழைப்பழம் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு தன்னுடைய நண்பன் அகிலனுக்கு போன் செய்தான்.

 

“அகில் சுரேஷ் கிட்ட பேசினியா?” என்று கேட்டான்.

 

“நான் பேசினேன் டா.  சுரேஷ் இன்னும் கொஞ்ச நேரத்துல கீதாவை கூட்டிக்கிட்டு வந்துடுவான்.” என்றான் அகிலன்.

 

“சரி டா அகில்.  நானும் வந்துடறேன்.” என்று காரை எடுத்துக்கொண்டு அந்த ஷாப்பிங் மாலுக்கு சென்றான்.

 

அங்கு கீதா,  சுரேஷ் மற்றும் அகிலன் இருந்தார்கள்.  அவர்களிடம் சென்றான் மாதவன்.

அகிலன் சுரேஷிடம்

“நான் சொன்ன பிரெண்ட் இவன்தான்.” என்று மாதவனை  காண்பித்தான்.

 

“இவன் சுரேஷ்” என்று  மாதவனுக்கு அறிமுகப்படுத்தினான் அகிலன்.

 

“ஹாய் சுரேஷ். ஐ அம் மாதவன்.”  என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் மாதவன்.

 

மாதவனை கண்ட கீதா அதிர்ச்சியாக “ நீயா?” என்று கேட்டாள்.

 

“கீதா நான் சொல்வதை ஒரு நிமிஷம் கேளுங்க.” என்று மாதவன் கூறியதை பொருட்படுத்தாமல் கீதா சுரேஷை பார்த்து

 

“ சுரேஷ் இவனை பார்க்க தான் என்னை இங்க கூப்பிட்டியா? எனக்கு இந்த விபரம் தெரிஞ்சிருந்தா,  இங்க வந்தே இருக்க மாட்டேன்.” என்றாள் கோபமாக.

“கீதா ப்ளீஸ்.  என்னை கொஞ்சம்  பேச விடுங்க.” என்றான் மாதவன்.

 

“நீங்க பேச வேண்டியது என்கிட்ட இல்லை. மதுமிதாகிட்ட.” என்றாள் கீதா.

 

“நான் கண்டிப்பா மதுமிதா கிட்ட பேசுவேன். ஆனால் இப்போ என்னால பேச முடியாது.  அதனாலதான் உங்க கிட்ட பேச வந்திருக்கிறேன்.” என்றான் மாதவன்.

 

சுரேஷ்

“கீதா அவர் என்னதான் சொல்ல வராருனு  கொஞ்சம் கேளு.” என்று கூறவும்  கீதா மாதவனை ‘என்ன?’ என்பது போல பார்த்தாள்.

 

மாதவன் அன்று நடந்தவற்றை அவளிடம்  கூற ஆரம்பித்தான். திருவிழாவை பார்ப்பதற்காக தேனிக்கு சென்ற மாதவன் மற்றும் அவனது நண்பர்கள் துரையின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அன்று நண்பர்கள் அனைவரும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது துரையின் தங்கை அழுதுகொண்டே ஒரு தோழியுடன்

வீட்டுக்குள் நுழைந்தாள்.

 

துரையின் தாய்

“என்ன ஆச்சு லதா? ஏன் அழுதுகிட்டே வர்ற?” என்று அவளைப் பார்த்து பதறியபடி அவளிடம் சென்றார்.

 

“அம்மா  நானும் என் ப்ரெண்டும் திருவிழா கடையில  வளையல் வாங்கிக்கிட்டு இருந்தோம். அப்போ  நாலு பொறுக்கிப்  பசங்க  எங்கள ஜாடை மாடையா தப்பு தப்பா பேசினாங்க.  நாங்களும் கண்டுக்காம போயிட்டு இருந்தோம்.  அப்புறம் அவங்க எங்களை ஃபாலோ பண்ணி போற இடத்துக்கெல்லாம் வந்து தொல்லை கொடுத்தாங்க. ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டதுக்கு என்னோட துப்பட்டாவை பிடித்து இழுத்து  தூக்கி போட்டுட்டான் ஒருத்தன்.

அப்புறம் கீழே கிடந்த துப்பட்டாவை எடுத்து போட்டுக்கிட்டு நான் ஓடி வந்துட்டேன்.” என்று அழுதாள்.

 

இதைக் கேட்டுக்கொண்டிருந்த துரை  ஆவேசமாக அவளிடம் வந்தான்.

 

“என்ன லதா சொல்ற? எவன் அவன் உன்கிட்ட இப்படி நடந்துகொண்டது? என்கூட வா வந்து எனக்கு அவனை அடையாளம்  காட்டு.  நான் அவன் கை கால்களை  உடைத்து  ஊனம்  ஆக்கறேன் பார்.” என்றான்.

 

 

“ஆமாண்டா.  தங்கச்சி கிட்ட வம்பு பண்ணின அவனை சும்மா விடக்கூடாது.  வாங்கடா போகலாம்.” என்று மாதவனும் கூற நண்பர்கள் அனைவரும் சாப்பாட்டை பாதியிலேயே விட்டுவிட்டு அவனுடன் திருவிழாவுக்கு வந்தனர் .

 

 

லதாவை பார்த்து மாதவன்

“நானும் துரையும் உன்கூட வரோம்.  நாம இந்த பக்கம் அவனை தேடுவோம்.

அப்புறம் உன் பேர் என்ன மா?” என்று கலாவின் தோழியை பார்த்து கேட்டான் மாதவன்.

 

“என் பெயர் லதா.” என்றாள் அவள்.

 

அவன் “ஓகே லதா .  நீ வேற பக்கம் போய் பாரு.  உன் கூட  குமரனும் அகிலனும் வருவாங்க. முதல்ல நீங்க அந்த பொறுக்கி பசங்களை பார்த்தா விசில் அடிங்க.  நாங்க அங்க வருவோம். இல்லை நாங்க முதல்ல பொறுக்கி பசங்களை பார்த்தா நான் விசில் அடிக்கிறேன்.  நீங்க இங்க வந்திடுங்க.” என்றான் மாதவன்.

 

“சரி டா. அப்படியே பண்ணலாம்.” என்று சொல்லிவிட்டு இரு குழுவாக பிரிந்து அந்தப் பெரிய திருவிழா தெருவில் இருபக்கமும் அந்த பொறுக்கி பசங்களை தேடிச் சென்றனர்.

 

 

 

லதா பார்வையைச் சுழல விட்டு திருவிழா கடைகளில் இருக்கும் ஆண்களில் அந்த பொறுக்கி பசங்களை தேடினாள்.

 

தேடியவள் ஒரு இடத்தில் அந்த நான்கு பொறுக்கி  பசங்களை கண்டாள். கண்டவள்

“அண்ணா அதோ இருக்காங்க பாரு.  அந்த நாலு பசங்க தான். எங்க கிட்ட  தப்பா  நடந்துகிட்டது.” என்று ஆள்காட்டி விரலால் அந்த நான்கு  பசங்களை காண்பித்து கூறினாள் .

 

துரை மற்றும் மாதவன் அவர்களிடம் சென்றனர்.

மாதவன் துரையின் தங்கை லதா காட்டி

 

“இவ கிட்ட எவன்டா அவன் தப்பா நடந்துகிட்டது?” என்று கேட்டான்.

 

அந்த நான்கு பொறுக்கி பசங்களும் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு அலட்சியமாக நின்றுகொண்டிருந்தனர்.

பதில் கூறவே இல்லை. எனவே லதாவிடம் திரும்பி

 

“யாருமா   உன் துப்பட்டாவை பிடித்து இழுத்தது?” என்று கேட்டான் மாதவன்.

 

“இதோ கட்டம் போட்ட சட்டை போட்டுகிட்டு கூலிங் கிளாஸ் போட்டு  இருக்கானே.  இவன் தான்.” என்று அவனை காட்டினாள் லதா.

 

“இவங்க எல்லோருமே என்னையும் என்னோட   பிரண்டையும் தப்பு தப்பா பேசினாங்க.” என்று  அழ குரலில் சொன்னாள் லதா.

 

மாதவன்  அந்தக் கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தவனின் சட்டையை பிடித்து

“எவ்வளவு திமிரு உனக்கு? பொம்பள பிள்ளையை தப்பு தப்பா பேசி இருக்க.  அவளோட துப்பட்டாவை பிடித்து இழுத்து இருக்க.  வாடா என் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு.” என்று அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

 

ஆனால் அந்தக் கட்டம் போட்ட சட்டை மாதவனின் கையை தட்டிவிட்டு

“என் மேலேயே கை வைக்கிறியா? இரு நான் யாருன்னு உனக்கு காட்டுகிறேன்.”  என்றவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த  மற்ற பொறுக்கி பசங்களை பார்த்து

 

“இந்த ரெண்டு பேர் கை கால்களையும் அடிச்சி உடைங்கடா.” என ஆவேசமாக  கத்தினான்.

 

அதைக்கேட்ட பக்கத்திலிருந்த மற்ற மூன்று பொறுக்கி பசங்களும் மாதவனையும் துரையையும் தாக்கினர்.

 

மாதவனும் துரையும் அவர்களை தாக்கினார்கள். ஒருகட்டத்தில் துரையின் இருகைகளையும் ஒருவன் பின்புறமாக பிடித்து அவனை நிலைகுலைய செய்தான்.  மற்ற மூன்று பொறுக்கிகளும் மாதவனை தாக்கினார்கள்.

 

ஒருவன் “நீங்க ரெண்டு பேரும் எங்க நாலு பேரு கிட்ட  நல்லா  மாட்டிக் கொண்டீர்கள்.” என்று பலமாக சிரித்தான்.

அப்போது மாதவன் விசில் அடித்தான்.  அந்த விசில் சத்தத்தை கேட்ட குமரனும் அவனது நண்பனும் அங்கு ஓடி வந்தார்கள். ஓடி வந்தவர்கள்  துரையையும் மாதவனையும் தாக்கிக் கொண்டிருந்த பொறுக்கி பசங்களை  தாக்கினர்.

 

மாதவன் மற்றும் அவனது மூன்று நண்பர்களும் அந்த நான்கு பொறுக்கி பசங்களை தாக்கினர். மொத்தத்தில் 8 ஆண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அந்த பொறுக்கி  பசங்களில் ஒருவன் மாதவன் போலவே நீல நிற சட்டை அணிந்திருந்தான்.

 

அவனும் மாதவனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.  ஒரு கட்டத்தில் மாதவன் அந்த நீலநிற சட்டை அணிந்திருந்த  பொறுக்கியின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து  குத்தினான்.

 

அந்த குத்தை தாங்கமுடியாமல் துவண்டு போனான் அந்த பொறுக்கி.  தொடர்ந்து அவனால் மாதவனை தாக்க முடியவில்லை எனவே ஏதாவது கட்டை கிடைக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.  எந்த கட்டையும் அவனுக்கு தென்படவில்லை.  ஆனால் அவன் பக்கத்தில்  ஒருவன் வெவ்வேறு விதத்திலான காய்கறிகள் நறுக்கும் கத்தி மற்றும் அரிவாள்மனைகளை சாலையில் பரப்பி  விற்றுக் கொண்டிருந்தான்.

 

இதனை கவனித்த அந்த பொறுக்கி  அதில் இருந்து ஒரு கத்தியை எடுத்து மாதவனை தாக்க முயன்றான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!