ஒரு நாவல் வாசிக்கும் போது நெக்ஸ்ட் என்ன,எப்டி கதை நகரபோகுதுன்னு ஆர்வத்தை தூண்டி விடுறது எழுத்தோட வெற்றி.,சமீபத்துல அப்டி ஒரு நாவல் வாசிச்சேன்.ஒவ்வொரு எபியும் ஏதோ நாம வேற கிரகத்துல வாழ்ற ஃபீல் தந்தது.பயன்படுத்திய சொற்கள் எல்லாம் ரொம்ப வித்தியாசமா புதுசா இருந்தது..கதையோட சிறுதுணுக்கையும் நான் சொல்லல.because கதையோட ஒவ்வொரு பகுதியையும் சிலாகிச்சி தனியா புக்கே போடலாம்.அவ்வளவு நுட்பமான பல விடயங்கள் பொதிந்துருக்கு…நீங்களே நாவலை படிச்சு புது அனுபவத்துல நனைங்க….
[நாவல் :இன்டர்ஸ்டெல்லர் லவ்]
பெயரே வாசிக்கிற ஆர்வத்தை தூண்டிச்சு. reach heights writer!!!god bless you…ஆங் சொல்ல மறந்துட்டேன்
அந்த puzzles எல்லாம் ரொம்ப நல்லாருந்தது…
Bhuvimani :
போட்டி கதைகள்ள படிச்ச ஒரு கதை பத்தி சொல்ல வந்திருக்கேன்…இது எழுத்தாளரோட முதல் கதையாம்..சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது….
வின்டோ வின் இன்டர்ஸ்டெல்லார்
காதல்.. கதை தான் அது…
இதை பத்தின விமர்சனம் எல்லாம் இல்லை இந்த பதிவு…படிச்ச ஆர்வத்தில் படிக்காதவங்க இருந்தங்கன்னா மிஸ் பண்ண கூடாதுன்றதுக்காக போடப்பட்ட பதிவு..
என்ன கதை எதை பற்றியதுன்னு சொல்லனும்னா நீங்க படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் சுவாரசியமா இருக்கும்..
இந்த கதைக்கு எழுத்தாளர் அதிகமான உழைப்பை கொடுத்துருக்கார்…
யாருக்கெல்லாம் அறிவியல் கணக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்குமோ அவங்க கட்டாயம் படிக்க வேண்டிய கதை..
இந்த கதையை படிக்க ஆரம்பிச்சா வீட்டு வேலையெல்லம் முடிச்சிட்டு வாண்டுங்களை தூங்க வச்சிட்டு படிங்க…ஏன்னா எடுத்திட்டா கீழ வைக்கவே முடியாது அவ்ளோ சுவாரசியமான கதை..
நந்தினி ஆதி காதல் உண்மையிலேயே அற்புதமானது தான்…
அக்கிலஸ் ஆரியன் லூனா மூமூ எல்லாரையும் பிடிச்சது..
ப்ரமோத்தியோஸ் தியாகம் கண் கலங்க வச்சிருச்சு..
கடைசி வரைக்கும் பயங்கர சஸ்பென்ஸ் ஆகவும் ட்விஸ்ட் ஆகவும் இருந்துச்சு ஒரு இடத்தில் கூட சலிப்பு ஏற்படலை…
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே… எழுத்தாளர் பத்தி ஒன்னும் தெரியாது தெரிஞ்சவங்க நான் ரொம்ப ஹாப்பி இந்த கதை படிச்சத்துலன்னு சொல்லுங்க…. அப்பறம் வின்டோ க்கு பெட்டி நெறய ஹார்லிக்ஸ் பூஸ்ட் complan பார்சல்
RevathiKannapiran :
நான் போட்டி கதைகள் வாசிக்க ஆரம்பித்து விட்டேன் பிரண்ட்ஸ். அதில் ஒரு கதையை பற்றி உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
Vinto Vinto Interstellar Love. இந்த கதையின் தலைப்பை பார்த்ததும் நான் இங்கிலீஷ் நாவல் என்று நினைத்தேன். நமக்கு இங்கிலீஷ் சுட்டுப்போட்டாலும் வராது இருந்தாலும் இந்த ஸ்டோரி அவங்க போட்டிருந்த பிக்சர்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. அதனால் உள்ளே சென்று பார்ப்போம் என்று நுழைந்தேன். இது முழுக்க முழுக்க தமிழ் நாவல். நாம் சின்னவயதில் பொதிகை சேனலில் பார்த்த கேப்டன் வியூ, ஸ்டார் வார்ஸ் மாதிரி மிகவும் அருமையாக இருந்தது வேற்று கிரகம் அந்த கிரகங்களுக்கு வைத்த பெயர்கள் அதில் வாழும் மக்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருந்தது. இடையிடையே கேட்கப்படும் கேள்விகள் தான் மிகவும் பயங்கரம், நமக்கு அறிவியலும் மற்றும் கணக்கு சுட்டுப்போட்டாலும் வராது ஆனால் பயந்துவிடாதீர்கள் எல்லாமே அருமையாக இருந்தது இடையிடையில் மார்ஸ்கோடு பற்றிய விளக்கமும் சூப்பராக இருந்தது. நாம் வேற்று கிரகத்திற்கு சென்றது போல் ஒரு உணர்வு இடையிடையே நிறைய ட்வீஸ்டுகள். யாரும் டைட்டில் பார்த்து இங்கிலீஷ் நாவல் என்று நினைத்துவிடாதீர்கள் முழுக்கமுழுக்க தமிழ் நாவல் மிகவும் அருமையாக உள்ளது நீங்களும் வாசித்து மகிழுங்கள்.
Aruna Jayakumar :
#இன்டெர்ஸ்டெல்லர்_காதல்
#வின்டோ
வேற்று கிரக மனிதர்கள் பற்றியும் பூமிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கு இது தான் கதை.
நந்தினி நம்ம ஹீரோயின் வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்படும் குழந்தை. என்ன எதற்காக எப்படி எல்லாம் கதையில் படிச்சுக்கலாம்.
ஆதி ஹீரோ, ஆர்யன் ஹீரோயின் பிரண்ட். பூமி வாசிகள் தான் இவர்கள். இவங்க எல்லாம் சயின்டிஸ்ட். அந்த அளவுக்கு பெரிய பொசிஷன் and பூமி ல நடக்குற மாதிரி கதை குடுத்துட்டு அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் அழுத்தமா கொடுத்து இருக்கலாம்.
வேற்று கிரகம் இருப்பது உண்மையா இல்லையானு இப்போவரை யாருக்கும் தெரியாது. இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை அப்டினு தான் நாம நெனச்சுட்டு இருக்கோம். ஆனா இந்த கதை படிச்ச அப்பறோம் தான் ஒரு டவுட் வருது உண்மையாவே அப்டி இருக்குமோ? நம்ம கிட்ட தான் சொல்லாம மறைக்கிறாங்களோ? அப்டினு தோணும்.
கயா இது தான் இந்த கதையில்வரும் முக்கியமான வேற்று கிரகம். அங்க இருக்க கெட்டவன் ப்ரோமிதியஸ அழிக்க போராடும் நல்லவர்கள். அதற்கு துணை நிற்கும் ஆரியன், ஆதி, நந்தினி. எதற்காக இவங்க அங்க போகணும்? அந்த கிரகம் அழிஞ்சுதுன்னா இந்த அண்டசராசமே அழியும் அப்படி என்ன இருக்கு அங்க?
மனிதன் எப்படி தோன்றினான் என்பதே கேள்விக்குறி தான் ஒவ்வருத்தர் ஒவ்வாரு மாதிரி சொல்வாங்க பல கோட்பாடுகள் இங்க இருக்கு. ஆனா இந்த கதைய படிச்ச அப்பறோம் இப்படியும் நடந்து இருக்கலாமோனு தோணும். பல கிரகங்கள் அதன் அமைப்புகள் அப்பப்பபா நெஜமாவே இப்படி இருக்குமோனு தோன வச்ச கதை.
எழுதியவர் அவ்ளோ அழகா ஒவ்வரு விஷயத்தையும் எழுதி இருகாங்க. நாம கனவுல கூட நெனச்சு பாக்க முடியாத கற்பனை. இந்த கற்பனைக்காகவே பெரிய சல்யூட். ஒவ்வரு காட்சிலையும் வாழ்ந்து வந்த பீல். கதை படிக்க படிக்க அந்த உலகம் கண்ணு முன்னால வந்து போகுது.
எதனால அந்த குழந்தை இங்க வந்துச்சு? அதை அனுப்பியதன் நோக்கம் என்ன? ஹீரோ ஹீரோயின் ஒன்னு சேந்தாங்களா? கயா கிரகத்துக்கு என்ன ஆச்சு? என்பது தான் கதை.
முக்கியமா அந்த பசில்ஸ் ரொம்ப நல்லா இருந்துது மேத்ஸ் தெரிஞ்சவங்களுக்கே கொழப்பும் எப்படித்தான் எழுதினாங்கனு தெரில. வித்யாசமான கதையை விரும்புபவர்களுக்கு இந்த கதை விருந்து தான்.
ஆனந்த ஜோதி :
வின்டோஸ்” இன்டர்ஸ்டெல்லர் லவ் “போட்டிக்கதைக்கான விமர்ச்சனம்.
இந்த தொடர்கதை படிப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், அட்டகாசமாகவும், ஒரு வித எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஒரு டாப் ஹாலிவுட் மூவி பார்த்தது போன்ற கிக்கை கொடுக்கிறது . பரிசு வாங்க தகுதியான தொடர்கதை. அருமையான விளக்கங்கள் ,அட்டகாசமான கதையம்சம் ..வாழ்த்துக்கள் சகோதரா
நந்தினி :
கயா கிரகத்தில் அண்ணன் தம்பி மோதலில் மகளின் ஆத்மாவை வேறு கிரகத்திற்கு அனுப்பி வைத்து அவர்கள் மறித்துபோக ,எதிராளியோ அக்குழந்தையை தேடியலைகிறான். வருடங்கள் பல தாண்டிய வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படுகின்ற மாற்றங்கள் ,பழைய நினைவுகளின் தாக்கம் ,தோழனது அன்பு அக்கறை , நாயகனின் சந்திப்பு அதற்கு பிறகு ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள் எல்லாமே அருமை.
தன்னுடைய கிரக மக்களை ,சிற்றரசர்களை கொடிய ஆட்சிபிடியிலிருந்து காத்திட மந்திரியின் உத்தரவின் படி எரிகல்லை கண்டுபிடிக்கச் செல்வது,
ஒவ்வொரு சமயமும் உயிரை பணையம் வைத்து, விடுகதைக்கான புதிரை தேடியலைவதும் கண்டுபிடிப்பதும் அபாரம்
கடைசி சில அத்தியாயங்கள் அதிரடி….எதிரியிடமான தாக்குதல், ,விலங்குகளுடனான மோதல் எல்லாமே சூப்பர் சீட்டின் நுனியில் அமர்ந்து படத்தை பார்க்கும் ஆர்வத்தை கொடுக்கிறது .
நண்பனின் குறும்பும் கேலியும் தூள். மனதில் ஏதாவது நினைத்து அவரிடம் மாட்டி முறைக்குமிடம் ரசனை.
செலினாவின் வரவு, அவரது மாற்றம் கிரகத்திற்கு நிர்ணயித்த அரசர்கள் அவர்களுக்கு கொடுப்பட்ட வரம் எல்லாமே அருமையாக இருந்தது. அந்த காலத்திலே வரத்தை கொடுத்து தெய்வம் மாட்டுவது போன்று இதிலும் மாட்டியிருக்கிறார் அருமையான விளக்கம்.….
ஷேக்ஸ்பியரின் கருத்து எனக்கு பிடித்து நான் பள்ளிநாளில் படித்த கருத்தே அருமை சகோ..
தொடர்கதை ரொம்ப அட்டகாசமாக இருக்கிறது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள் சகோ
நன்றி தோழமைகளே
Thanga Malar :
வின்டோவின் இன்டெர்ஸ்டெல்லார் லவ்
ஒரு வித்தியாசமான, துணிச்சலான முயற்சி
அசத்தலான science fiction..
அயல் கிரகங்களில் தேடல் சாகசங்கள்..
அழகு கோட்டைகள், பயங்கர மிருகங்கள், மிரட்டும் ஆபத்துக்கள்..
கயா கிரகத்து அரியணை போட்டியில் பூமியில் இருந்து சென்ற நந்தினி, ஆதித்யன், ஆரியனின் பங்களிப்பு..
க்ரிசான்டா, மூமூ,
சிரஸ், மினர்வா,
ப்ரொமேத்தியஸ்,
செலினா,
பொசய்டன்,
அக்கிலஸ், லூனா
பிரம்ம கிரந்தம்,
வெலாரிஸ் கோட்டை..
இத்தனையும் நம் மனதில் ஆழ பதிந்தவை
படங்கள் ஒவ்வொன்றும் நம்மையும் அங்கே அழைத்து சென்றன
Puzzles, கண்டுபிடிப்புகள் அசத்தல் ரகம்
சூப்பர் மேன், ஹாரி பாட்டர், என்ட் கேம் போன்றவற்றை விரும்பும் சாகச கதைப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்..
தவற விடாதீர்கள். .
நன்றி வின்டோ..
Vijayasanthi :
Vinto Vinto வாவ்…ஒரு வழியா உங்க கதையை முடிச்சாச்சு…..
கதையை செமையா எழுதிருக்கீங்க…முதல் கதை மாதிரியே தெரில…
யாருமா இந்த ஆத்தர்??? இதுக்கு முன்னாடி கதை எழுதி இருக்காங்களா??? இதான் முதல் கதையா??? ஒன்னும் தெரியல????…
“அறிவியல் கோட்பாடுகள், கண்டுபிடிப்புகள், கற்பனைனு” எல்லாத்தையும் கலந்து கட்டி தோரணமா தொங்கவிட்டு இருக்காங்க!!!…
இந்த ஆசிரியர் “அறிவியல்ல ஒரு சூரப்புலி , கணிதத்துல ஒரு அசராபுலி”… மொத்தத்துல “ஒரு அடங்காபுலி, அதிசயபுலி , அற்புதபுலி , கொழம்புபுலினு” எல்லாமே இவங்கதான்!!..
கதையை படிக்க ஆரம்பிச்சதும் , ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது.. இந்த கதைக்காக இவங்க எவ்வளவு உழைச்சி இருக்காங்க, எவ்வளவு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி இருக்காங்கனு…
“செம பிரில்லியண்ட் செம படிப்பஸ் ஆஆ இருப்பாங்க போல இந்த ஆத்தர்”!!!…
கதையை பத்தி எப்படி விமர்சனம் பண்றது சொல்ல தெரியல..
“பூமிக்கும் , கயாகிரகத்துக்கும் , அண்டசசாரத்துக்கும் , இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதையின் களம்…
“வரங்களை அள்ளி கொடுத்துட்டு அப்பறம் பிரச்சனைகளை சமாளிக்கறதே இந்த கடவுளுக்கு வேலையா இருக்கும் போல…” இங்கயும் அப்படியே!!…
வரங்களை தவறா உபயோக படுத்தற டைடன் கிட்ட இருந்து , இந்த அண்டசசாரத்தை எப்படி மீட்டெடுக்கக்கறாங்க நந்தினி (க்ரிஸாண்டா), ஆதித்யா , ஆர்யன் அண்ட் கோ னு நல்லா விறுவிறுப்பா ஹாலிவூட் பட ரேஞ்சுக்கு சொல்லி இருக்காங்க.. அடுத்து என்ன என்னனு பரபரப்பவே கதையை கொண்டு போனதுக்கே ஆசிரியருக்கு சபாஷ்!!!…
ஒவ்வொரு கட்டங்கள் தாண்டறதுக்கும் வர விடுகதைகள் எல்லாம் பயங்கரம்!!… வர்ணனைகள் காட்சிகளை கண்ணு முன்னாடியே கொண்டு வந்ததற்க்கே ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!!!…கதையில வர “ட்விஸ்ட் அண்ட் டர்ன்ல” சூப்பர் & அன்எக்ஸ்பெக்டட்!!.. எல்லா சம்பவங்களுக்கும் கன்னக்டிவிட்டி தந்து, தொய்வே இல்லாம கதையை தந்ததற்கு வாழ்த்துக்கள்…
“ஒரு புதியவுலகம், புது அனுபவம்” வேணுமா??? இந்த கதையை படிங்க!!..
ஒன்னு மட்டும் தான் தோணுச்சு. இந்த ஜட்ஜ்ஸ் எல்லாமே பாவம்யா…. இப்படி எல்லாருமே கலந்து கட்டி சூப்பர் சூப்பர் அ கதையை குடுத்தா, அவங்க யாருக்கு பரிசு குடுப்பாங்க???? (மீ திங்கிங்)…
வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற மல்லி சைட்…
VinithaPriya Manickam :
#Interstellarkadhal
Epppa ena story da..Chanceless.. sathiyama ithu ivangaloda first story nu sonna yarum namba matanga..enaku intha story ku epdi review ezhuthurathu nae therila.antha alavauku pularichitu…At first I thought it as an usual fantasy story..but poga poga author oda imaginary level eritae pochu..Maths and science knowledge lam chuma dhool kelapiruku awesome.. Crasanta and akilas ️nalla irunthuchu..Adhi yoda Kadhal ku neenga kudutha conclusion arumai..Pamothiyas unexpected twist ?? ..Inum yarachum intha story ah padikama iruntha padichirunga…And author keta boost, Horlicks ellam parcel anupirunga???
Hăĺîmã binte ibrahim :
REVIEW..REVIEW..REVIEW…
Vinto’s Interstellar Love
ஏன்மா எங்கம்மா இருந்தீங்க இவ்வளவு நாளா???
நீங்களாவது பூமியில்தான் பிறந்து வளர்ந்தீங்களா இல்லை கயா கிரகத்திலா???
இதுவரைக்கும் நான் இப்படி ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் நாவல் படித்ததே இல்லை உண்மையா செம்ம அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்..
கடைசி வரைக்கும் பரபரப்பாகவே கொண்டு போய் இருக்கீங்க..
இதுல இதுதான் உங்களோட முதல் கதையாம்… முதல் கதைக்கே இந்த ரேஞ்சுனா அடுத்த அடுத்த கதைக்கெல்லாம் உங்க கதையை படிக்க நாங்க குளுகோஸ் குடிச்சிட்டு தான் உட்காரணும் போல.. ஒரு நல்ல ஹாலிவுட் படத்துல seat edge scene ன்னு சொல்லுவாங்களே அந்தமாதிரி அந்த இருக்கை நுனிக்கு வந்து படம் பார்க்கிற மாதிரி ஃபீல் உருவாக்குச்சு உங்க கதைய படிச்சப்போ…
என்னால இன்னும் உங்க கதைக்குள் இருந்து வெளியே வர முடியல..
கிரகங்கள் பற்றிய வர்ணனை அப்புறம் எல்லா புதிர்கள் சான்சே இல்ல…
கடைசியா என்னோட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க இந்த கதைல நீங்க எழுதி இருக்கிற சில விஷயங்கள் அதாவது கணக்கு புதிர்கள் அப்புறம் morse code இதெல்லாம் நீங்க இந்த கதைக்காக கத்துக்கிட்டீங்கலா இல்ல இயல்பாவே நீங்க கணக்கு புலியா…??
நல்ல அட்வென்சரஸ் பரபரப்பான நாவல் படிக்கனும் னு நினைக்கிறவங்க லிங்க் எடுக்கிறது குள்ள இத போய் படித்து விடுங்கள்…
Chitrasaraswathi :
மல்லிகா மணிவண்ணன் தளத்தில் வின்டோவின் இன்டர்ஸ்டெல்லர் காதல் எனது பார்வையில். ஃபேன்டசி கதைகளின் மேல் எப்பொழுது நிறைய பேருக்கு ஆர்வம் அதிகமிருக்கும். இந்தக் கதை அதற்கு சரியான தேர்வாக இருக்கும். எழுத்தாளரின் முதல் கதை என்பதே தெரியாத அளவு அவ்வளவு முதிர்ச்சியான கச்சிதமான எழுத்து. கயா கிரகம் பூமியைவிட பலமடங்கு தொழில் நுட்பத்தில் முன்னேறிய கிரஹம். அந்தக் கிரகத்தின் உருவாக்கிய தேவதை செலினா. கயா கிரகத்தின் பேரரசர் சீரஸ் அவரது மனைவி மினர்வாவும் தங்களது கிரகத்தின் நன்மைக்காகவும் தங்களது எதிரியாக தோன்றும் ப்ரொமேத்தியஸ்ஸிடமிருந்தும் கர்ப்பிணியான மினர்வாவின் வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற சிறு வாகனத்தின் மூலம் முட்டை வடிவில் அனுப்பி வைத்துவிட்டு தங்களது உயிரைத் துறக்கின்றனர். அந்த விமானம் பூமிக்கு வந்து அதிலிருந்த பெண்குழந்தை கண்ணன் மற்றும் அவரது மனைவி துர்காவிடம் கிடைக்கிறது. அதனுடன் ஒரு பறவையும் கிடைக்கிறது. நந்தினியும் மூமூ என்ற பறவையும் வளரும் பொழுது ஏற்படும் மாற்றங்கள், அதனால் அவளது மனம் அடைகிற பாதிப்புகள் இருந்தாலும் அவள் மிகவும் புத்திசாலித்தனமான பெண்ணாக இருக்கிறாள்.
நந்தினியைத் தேடி வரும் கயா கிரகத்தினரிடமிருந்து கயா கிரக மந்திரி பொய்சடன் அவளைக் காப்பாற்றி அவளது நண்பன் ஆர்யன் மற்றும் இஸ்ரோவில் பணிபுரியும் அவனது நண்பன் ஆதி ஆகிய இவர்கள் மூவரும் கயா கிரகத்தின் விமானத்தில் பயணம் செய்ய நேரிடுகிறது.
24 ஆண்டுகளஉக்கு ஒரு முறை வரும் அந்த நிகழ்வுக்காக சோல் பாக்ஸ் சாவியைத் தேடி வரும் கயா கிரக வாசிகள், ஈரின் கல்லைத் தேடி எடுக்க நந்தினி என்ற க்ரிசான்டா கயா கிரகத்தின் பேரரசியானவள் பல கணக்குப் புதிர்களை விடுவித்து ஊரின் கல்லை கைப்பற்ற கயா கிரகம் வருகிறாள்.
டைட்டன் என்ற மாபெரும் அழிவுசக்தியாக உள்ள டைட்டன் யார் , இவர்களின் தேவதை செலினா மீண்டும் தோன்றி மாபெரும் அழிவிலிருந்து இந்த அண்டத்தை காப்பாற்றினார்களா என்பதை ஹாலிவுட் படத்தில் வருவதைப் போல காட்சியமைப்புகள், படங்களுடன் தந்துள்ளார் எழுத்தாளர். பலக் கணித புதிர்கள் மூலம் அந்த மாய உலகத்தை நாம் நேரில் பார்ப்பது போன்ற புகைப்படங்கள். நிறைய உழைப்பைத் தந்துள்ளார் எழுத்தாளர். ஆங்கில கதைகளுக்கு நிகரான எழுத்து.
நல்லக் கற்பனைத் திறன் கொண்ட கதை. வாழ்த்துகள் வின்டோ.
Shivani Selvam :
கதையின் தலைப்பு: இன்டெர்ஸ்டெல்லார் காதல்
எழுதியவர்: வின்டோ
இதுவரை இது போலொரு கதையை நான் வாசித்ததில்லை. முற்றிலும் வித்தியாசமான கதைக்களம்.
என்ன சொல்றது? கதைய படிச்சிட்டு இருக்கும் போதே கதாசிரியர் கிட்டப்போய் இது எந்த நாவலோட ட்ரான்ஸ்லேசன் இல்ல எந்த ஹாலிவுட் or கார்ட்டூன் படத்தை பார்த்து கதை எழுதுனீங்கன்னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டேன்
ஏன்னா ஸ்டோரி அப்படி இருந்தது. கூட இது எழுத்தாளரோட முதல் கதைன்னா என்னால நம்பவே முடியல.
ஸ்ரீதர் ஜெயஸ்ரீ ட்வின்ஸ்ல ஆரம்பிச்ச கதை, அதை வச்சே பின்னாடி ஆதித்யன் நந்தினி யாருன்னு கண்டுபிடிக்கும் போது இது பக்கா பிளானிங்கோட எழுதப்பட்ட கதை போலவே என்று எனக்குத் தோன்றியது.
பரிணாம வளர்ச்சி, நிறைய அறிவியல் துணுக்குகள், ஒருமுறைக்கு மூன்று நான்குமுறை வாசித்தால் மட்டுமே நம் மூளையை எட்டும் புதிர்கள், அத்தியாயங்கள் ஆரம்பிக்கப்படும்போது வர்ணிக்கப்பட்ட அச்சூழ்நிலைகள் எல்லாமே அற்புதமாக இருந்தது.
ஆரியன், லூனா, பொசய்டன், ப்ரொமேத்தியஸ், செலீனா என அத்துனை கதாபாத்திரங்களும் தனித்தன்மையுடன் விளங்கினார்கள்.
போர் காட்சிகள் எல்லாம் கண்முன் தோன்றியது போல் இருந்தது.
இறுதியில் மூமூவும் என் மனதில் இடம் பிடித்து விட்டது.
ஏலியன் இருக்கிறதா இல்லையா என்பதே விடை தெரியாத ஒன்று. இச்சூழ்நிலையில் கயா கிரகம் என்று ஒன்றை உருவாக்கி பூமியை விட அறிவில் தொழிற்நுட்பத்தில் அவர்களை உயர்ந்தவர்களாக காட்டி, வெலாரிஸ் கோட்டை ,பெருங்கடல் கோட்டை, சோல் பாக்ஸ், ட்ராகன்கள், பறக்கும் மனிதர்கள், கிரகந்தம் புக் என அடுக்கிக் கொண்டே போனது கதாசிரியரின் கற்பனா சக்தியின் உச்சம்.
ஓசியா எங்களை வேற ஒரு கிரகத்திற்கு கூட்டிட்டு போனதுக்கு தான்க்ஸ் வின்டோ. Think out of the box என்ற வரி இந்த கதைக்கு நிச்சயம் பொருந்தும்.
ஆனால் கதையில் இருந்த ஒருகுறையாக எனக்கு தோன்றியது புதிர்கள் கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கலாம். எனக்கு புரியாத இரண்டு புதிர்களுக்கான விடை விளக்கத்தை ஸ்கிப் பண்ணி விட்டேன். மற்றபடி கதை ரொம்ப சூப்பர்.
இறுதியில் நந்தினி கிரிசான்டாவாகவே மாறியதும், ஆதித்யனை ரைட்டராக காண்பித்ததும் சில நிமிடங்களுக்கு பின்னாடியே என்மூளையை எட்டியது. ஏனெனில் கயாகிரக நந்தினியையும் பூமி கிரக ஆதித்யனையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
உங்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு எனது பாராட்டுகள் வின்டோ. போட்டியில் வெற்றி பெறவும் எனது வாழ்த்துகள்❣️
Gokila Gopinath :
கதையின் தலைப்பு: வின்டோ’ஸ் இன்டெர்ஸ்டெல்லார் காதல்
எழுதியவர்: வின்டோ
இதுவரை இது போலொரு கதையை நான் வாசித்ததில்லை. முற்றிலும் வித்தியாசமான கதைக்களம்.
அவ்வளவு அருமை. படிக்க ஆரம்பித்தேன் முடிந்த பிறகு தான் எழுந்தேன்.
ஏன்னா ஸ்டோரி அப்படி இருந்தது.
ட்வின்ஸ்ல ஆரம்பிச்ச கதை, அதை வச்சே start பண்ணி… Hero, heroine, friend னு ஒரு relationship கொண்டு வந்து அவங்களோட பரிணாம வளர்ச்சி, நிறைய அறிவியல் துணுக்குகள், இப்படி போகும்.
எனக்கு maths னா alergy but இந்த ரைட்டர் அதுல புகுந்து விளையாடிற்பாங்க. ஆத்தி…இம்புட்டு puzzle வைச்சு எழுதனும் னா அவங்க உழைப்பு க்கு கண்டிப்பாக பாராட்டனும்.
அவ்வளவு hard work பண்ணிற்காங்க இந்த கதைக்கு.
2 or 3 times read பண்ணா மட்டுமே நமக்கு புரியும்.
Puzzles and science…Such a wonderful journey story. எனக்கு super ஆ புரிஞ்சது puzzle எல்லாம். நீங்களும் try பண்ணுங்க..நந்தினி @ க்ரிசென்டா, ஆதித்தியன், ஆரியன், லூனா, பொசய்டன், ப்ரொமேத்தியஸ், செலீனா, மூமூ ..எல்லா characters செம..செம..
போர் காட்சிகள் எல்லாம் கண்ணு முன்னாடி feel ஆகுது. ஆசிரியர் கற்பனை…கயா கிரகம் என்று ஒன்றை உருவாக்கி பூமியை விட intelligentஆ அவர்களை உயர்ந்தவர்களாக காட்டிர்பாங்க..வெலாரிஸ் கோட்டை ,பெருங்கடல் கோட்டை, பறக்கும் ட்ராகன்கள், பறக்கும் மனிதர்கள், பிரம்ம கந்தம் book, soul box என அடுக்கிக் கொண்டே போனது கதாசிரியரின் கற்பனை வேற லெவல்…
Climax கொஞ்சம் expected தான்… ஆனா அந்த twist… செம போங்க. இந்த அருமையான வித்தியாசமான முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் vinto.
எல்லாரும் miss பண்ணாம படிங்க
Maha Bala :
இன்டர்ஸ்டெல்லர் காதல்
—- வின்டோ
சாதாரண கதைகளத்தில் ஆரம்பித்த இக்கதை அண்டங்களையும் , பல கிரகங்களையும் கடந்து நம்மை அழைத்து சென்று முழு பிரம்மிப்பில் தள்ளுகிறது என்று சொல்வது மிகையாகாது…….
கதை ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த இடத்துலையும் நமக்கு ஆர்வம் குறையாம கொண்டு போனது ஆசிரியரின் திறமை க்கு எடுத்துக்காட்டு…..
நாம் படித்து மறந்த , பரிணாம மாற்றங்கள், அதன் கோட்பாடு, கம்பியில்லா மின்சாரம், relativity, time dilation, twin paradox, maths puzzle, Fibonacci sequences , constant values, Morse code, binary digit னு ஏகப்பட்ட விசியங்களை பத்தி தெளிவா சொல்லிருப்பங்க…… ரொம்ப இன்டெர்ஸ்டிங் அஹ் வும் தெளிவாவும்…..
ஆசிரியர் இதுக்காக எவ்ளோ எவ்ளோ புத்தகங்களை ரெபெர் பண்ணிருப்பாருன்னு நினைக்கவே தலை சுத்தது…..
அது அப்படினா , கயா கிரகம், 7 சிற்றரசர்கள், பேரரசர்கள், செலினா,ப்ரோமோத்தியாஸ், டைட்டன், போசய்டன், தங்க நிற கண்கள், 176c, கைகண்டா, ஆர்ப்பட்டர் கிரகங்கள்,பார்ச்மெண்ட், ஈரின் கல், gauntlet , வெல்லாரிஸ் கோட்டை,பெருங்கடல் கோட்டை,வெள்ளை கரு முட்டை, soul box, பிரம்ம கிராந்தம், சக்தி பெட்டகம், மூமூ இன்னும் பல , எல்லாமே கற்பனையின் உச்சம்…… இவ்ளோ அழகா கற்பனை செய்ய முடியுமா னு மயிற்கூச்சம் ஏற்படுத்தியவை………
இரட்டையரின் பிறப்பில் துவங்கும் கதை , அவர்கள் வளர்ந்து அவர்களின் பிள்ளைக்களால் விறு விறு என்று நகர்கிறது…….
ஆரியன் ஆதித்யன்
பால்ய நண்பர்கள்….. சைக்காரிஸ்ட் அஹ் அறிமுக மாகி நல்ல நண்பனா நம்ம மனச தொட்ட ஆரியன் ஒரு பக்கம், scientist அஹ் அறிமுகமாகி நல்ல காதலனா நம்ம மனச தொட்ட ஆதித்யன் மறு பக்கம் னு நம்ம, அவங்க பக்கம் சுண்டி இழுப்பாங்க……
நந்தினி என்கிற க்ரிசண்டா
அறிவியல் பாதி, பிறப்பின் மகத்துவம் பாதி னு கலந்து செய்த கலவை இவள்……அன்பு, பண்பு ,பாசம், காதல், அறிவு, ஆளுமை னு எல்லாதுலையும் இவள் பேரரசி தா
நந்தினிஆதி
உண்மையாவே இவர்கள் காதல் இன்டெர்ஸ்டெல்லர் காதல் தா…..
ப்ரோமோத்தியாஸ் ? அண்ட்
டைட்டன்?
இவர்கள் , அறிவியல், ஆச்சரியம், பிரம்மிப்பு இதன் குழந்தைகளோ என சிந்திக்க வைப்பங்க நம்மையும்……
கிரகங்களை கடந்த காதல், வித விதமான கோட்டைகள்,வித்தியாசமான உயிரினங்கள் , அறிவியலின் அற்புதம், கணிதத்தின் மகத்துவம், மெய் சிலிர்க்க வைக்கும் தியாகம், ஆளுமை, பாசம், இதுக்கு மேல பெரிய ட்விஸ்ட்…….
ஆசிரியரின் கற்பனை வளம்,அறிவு எல்லாம் வேற லெவல்…….
Really hats off you sir Vinto Vinto ……
Zeenath Parveen :
Interstellar kadhal wow sema stry .writer vinto sema thalakanam pidichavaga pola (athanga arivaliya than apdi sonnanen).unga maths atharkana equation riddles atha solve panna vitham pppaaa chance illa 32 episodela Hollywood pada rangeku (athuvum 2 part yedukalam )kuduthurukeega .neega yepadi itha karpanai panni yeluthu vadivam kudutheegalo padikira yenaku thalaya pichikalam pola iruthuchu .kathai fulfilla yellame kuduthu irutheega love comedy twist marmam adventers oru oru kolkaluku povathum athan vadivamaipum semama .maths universe adventers pidikiravagaluku sema chance padiga.congrats vinto sis
பிரியா மோகன் :
வணக்கம் வாசக மக்களே!!! இப்போ நான் ஒரு கதையை பத்தி நாலு வார்த்தை சொல்ல வந்துருக்கேன்…
காதல், காமெடி, திரில்லர், சஸ்பென்ஸ், மாயாஜாலம், அறிவியல் புனைவு இப்படி எல்லா வகைலயும் நான் கதைகள் படிச்சிருக்கேன்… ஆனா, சமீபத்துல இது எல்லாம் கலந்த ஒரு கதையை படிச்சுட்டு தலை சுத்தி போய் உட்காந்துருக்கேன்…
ஒரு ரைட்டரால எப்படி இந்த அளவுக்கு யோசிக்க முடியுது?! ஆரம்பத்துல வர ஒரு சின்ன விஷயம் கூட, ஒரு பார்வை கூட, இறுதில ஒரு ட்விஸ்ட்டா இருக்கப்போ ‘வாவ்’ சொல்ல வைக்குது…
கதையை பத்தி நான் என்ன சொல்ல!? வேற்றுகிரவாசியான நம்ம ஹீரோயின் எப்டி பூமிக்கு வந்தாங்க, வந்த இடத்துல என்ன என்ன நடக்குது, எப்படி அவ மறுபடி தன் சொந்த கிரகத்துக்கு தன் காதலன் மற்றும் நண்பனின் துணையோடு போறா! போற இடத்துல என்ன என்ன காத்துட்டு இருக்கு!!! இதெல்லாம் நீங்க கதை படிக்கும்போது கண்டிப்பா உங்களை ஆச்சர்யப்படுத்தும்…
கண்டிப்பா படிச்சு பாருங்க… என்ன கதைன்னு கேட்குறீங்களா!? அதை சொல்லல… ஹீஹீ…
மல்லிகா மணிவண்ணன் அவர்களின் புதிய தளத்தில் இருக்கும் போட்டிக்கதைகளில் ஒன்றான “இன்டெர்ஸ்டெல்லர் காதல்” by Vinto Vinto
அந்த தலைப்புக்கான விளக்கம், சூப்பரோ சூப்பர்
#Voting நடந்துட்டு இருக்கு மக்களே… உங்கள் வாக்குகளை அள்ளி வழங்க மறவாதீர்… சீக்கிரமா எல்லா கதையும் படிச்சுட்டு vote போடுங்க…
Voting link First comment ல குடுத்துருக்கேன்…
To Author- கதை ரொம்ப scientific ah போகும்போது, வார்த்தைகள், அர்த்தங்கள் எல்லாம் புரிஞ்சும் புரியாமலும்… அதை படிக்கும்போது, கதையோடு ஒட்டும்த்தன்மைல கொஞ்சம் விலகலும் ஏற்படுது. அடுத்த முறை கொஞ்சம் இன்னும் என்னை மாறி ஆளுங்களுக்கும் புரியுற மாறி விளக்கமா போட்டுட்டா வசதியா இருக்கும்
அதேபோல.. ஆரம்ப அத்தியாயங்களில் இருந்ததை விட போக போக எழுத்து நடை மெருகேறிக்கொண்டு சென்றுள்ளது… வாழ்த்துகள் ப்ரோ
Sankaragomathy Shankar :
Intersteller Love Vinto Vinto
அருமையான வித்யாசமான கதை.. 48 கதைகளில் தனித்து தெரியும் – அப்படி ஒரு கதை களம்.. முதல் கதை என்றால் நம்ப முடியவில்லை.. அருமையான வியக்க வைக்கும் கற்பனை திறன்..
கதையின் பெயரை பார்த்து வாசகர்கள் இந்த அருமையான கதையை படிக்க தவறிவிட்டனரா என்று தெரியவில்லை.. இந்த அருமையான கதை 3வது நிலையினுள் நுழையவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது..
நிறைய அறிவியல் சார்ந்த செய்திகள்(theory) கதையில் இருந்தது.. அவற்றை ஆராய்ந்து தெரிந்துக் கொண்டீர்களா இல்லை இயல்பிலேயே உங்களுக்கு தெரிந்தவற்றை கூறினீர்களா என்று எனக்கு தெரியவில்லை.. I admire ur imagination & knowledge bro.. Hats off to ur creation(story).??? வாழ்த்துக்கள் ப்ரோ
‘கயா’ எனும் வேற்று கிரகத்தி்ன் அரசனும் அரசியும் தங்கள் உயிர் பிரியும் முன் தங்களது குழந்தையின் உயிரை காப்பாற்ற குழந்தையை பூமிக்கு அனுப்புகிறார்கள். அந்த பெண் குழந்தை வளர்ந்து பெரியவளானதும் எப்படி தனது நண்பன் மற்றும் மனம் கவர்ந்தவனின் உதவியுடன் சொந்த கிரகத்திற்கு சென்று தனது பெற்றோரின் இறப்பிற்கு காரணமானவனிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறாள் என்பது தான் கதை.
அவளது சொந்த கிரகத்திற்கு செல்லும் முன் வில்லனை வெல்ல தேவைப்படும் ஈரி்ன் கல்லை எடுக்க வெவ்வேறு கிரகங்களுக்கு சென்று பல தடைகளையும் சவால்களையும் சந்திக்கிறாள். எந்தெந்த கிரகத்திற்கு செல்ல வேண்டும் என்பதை அறிய கிடைக்கும் குறிப்பில் இருந்து கிரகத்தை கண்டுபிடிப்பதே சவாலான விஷயம் தான். ஆனால் அவளோ puzzle எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி னு ஈஸியா கண்டுபிடிப்பாள். puzzle எல்லாமே அருமை ப்ரோ.. உங்களோட அறிவு திறன் மொத்தத்தையும் இந்த கதையில் தந்துட்டீங்களா? நான் முதல் puzzle மண்டையை பிச்சி யோசிச்சேன்.. (gameplayerr.com) அப்பறம் எதுக்கு வேண்டாத வேலை நம்ம நந்தினி எப்படியும் கண்டு பிடிச்சு சொல்லுவா னு நல்ல பிள்ளையா யோசிக்காம படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. 🙂 🙂
கடைசியில் செம விறுவிறுப்பாகவும் எதிர்பாரா திருப்பங்களுடனும் கதை இனிதே முடியும்..
வித்யாசமான கதையை படிக்க விரும்புவோர் இதை கதையை மிஸ் பண்ணிடாதீங்க.. அருமையான கதை.
கிட்ட திட்ட இங்கிலீஷ் படம் பார்த்த பீல்.. ஒவ்வொரு விஷயத்திற்கும் அருமையான விளக்கம் தந்திருந்தீங்க.. Time dilation, Memory collection in book போன்ற concepts இங்கிலீஷ் படம்(Ant Man, Harry Porter, Avengers etc) நிறைய பார்த்ததால் எளிதாக புரிந்தது. நீங்களும் தெளிவா சொல்லி இருந்தீங்க..
சின்ன கிளாஸ்ஸில் decimal to binary conversation படிச்சப்பவும், collegeயில் Fibonacci, Amstrong number etc program எழுதினப்பவும் சரி என் mindயில் ஓடியது ‘இதெல்லாம் படிச்சு என்ன செய்ய போறோம்! என்ன use?’ என்பது தான்.. உங்க கதை ஈஸியா புரிய தான் படிச்சேன் னு இப்போ தான் புரியுது
உங்க கதை படிச்சு, நேத்து நைட் கனவில் சின்ன கிளாஸ் biology-ல படிச்ச theory-யெல்லாம் வந்துட்டு போச்சு..
மொத்தத்தில் அருமையான கதை.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.. தாமதமான விமர்சனத்திற்கு மன்னிக்கவும் ப்ரோ.. நேத்து தான் இந்த கதையை படிச்சு முடிச்சேன்..