Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 13

ஒளி 13 :::-

 

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்!
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்!
செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்!
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்!
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்!
சத்தியம் சத்தியம் இது சத்தியமே!
மாலை சூடிய காலை கதிரின் மேலே!



Advertisement

 

அதிகாலை ஏகாம்பரேஸ்வரர் ஏலவார்குழலியின் திருமண வைபவத்தை கண்ணார கண்டுவிட்டு அனைவரும்  வீட்டின் கூடத்தில் இருந்தனர். வள்ளியும் பழனியின் மனைவி இந்திராவும் காலை உணவின் சமையலில் இறங்க வெளியே இவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

 

Advertisement

“வாசுகி! சாமி ஊர்வலம் எப்படியும் கோவிலில் இருந்து கிளம்பி இருக்கும் இங்க நம்ப தெருவிற்கு வரும் போது தீபாராதனை காட்டணும்.. அதுக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டியா..”

Advertisement

 

“ஹான்ன்ம்மா .. எல்லாம் எடுத்து வச்சுட்டேன்.. சாமி தூக்கிட்டு வரவங்களுக்கு கொடுக்க மோர், ஜூஸ் எல்லாம் பழனியை வாங்கிட்டு வர சொல்லிருக்கேன்…” 

 

Advertisement

“ம்ம்ம்.. நம்ப இந்திராவை தீபாராதனை கொடுக்க சொல்லு…”

 

“இல்லம்மாஇந்த முறை ரதி கொடுக்கட்டும்..”

 

அனைவர் கவனமும் அவரிடம் திரும்பியது..

 

“அவளுக்கு சீக்கிரம் கல்யாண யோகம் வரட்டும்னு தான்… அவளை கொடுக்க சொல்றேன்”… என்றவாறு பாண்டியனிடம் திரும்பி,

 

“அண்ணா! நான் நேத்து பேச ஆரம்பித்த விஷயம் இன்னும் அப்படியே தான் நிக்குது”.. என வாசுகி கேட்க..

 

“ஏன் வாசுகி? இப்பவே எல்லாம் பேசி முடிக்கணுமா?? பொறுமையா பேசிக்கலாம் விடு” என அவர் கணவர் பாபு அதட்ட

 

“என்ன வாசுகி ?” என பாண்டியன் கேட்க

 

“அண்ணா! அவள் அந்த இடம் வாங்கட்டும் வீடும் கட்டட்டும்.. எல்லாமே நல்ல விஷயம் தான்..ஆனால் வயசு ஏறிட்டு போகுதுல.. அதுக்கும் ஒரு முடிவு பண்ணுங்க” .. 

 

“பெரியம்மா கேட்கறதும் சரி தானே ரதிநீ உன் முடிவு சொல்லு ..” 

 

இவ்வளவு நேரம் அமைதியை எல்லாம் வேடிக்கை பார்த்தவள் , அந்த கேள்வி தன்னை நோக்கி திரும்புவதை உணர,

 

“பெரிம்மா.. இந்த விஷயம் எல்லாம் முடியட்டுமே.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க…” என அவள் தவிப்புடன் கேட்க

 

“இன்னும் எவ்வளவு நாள் ரதி ? “

 

“ஒரு ஆறு மாசம் பெரிம்மா .. அதுக்கு அப்புறம் இதை பத்தி பேசலாமே…”

 

எதுக்கு இந்த ஆறு மாசம் அவள் மனசாட்சி கேட்க .. “அவங்களை ஒரு முறை பார்த்து பேசிட்டா போதும்.. அப்ப தான் எனக்குள்ள ஒரு தெளிவு கிடைக்கும்அவ்வளவு தானா.. ஆமா பின்ன வேற என்ன அவ்வளவு தான் … “

 

“அண்ணா! அப்ப நம்ப சிவாக்கு பேசி ஒப்புதாம்பூலம் மாத்திக்கலாம்.. ஆறு மாசம் அப்புறம் கல்யாணம் வச்சுக்கலாம்..”

 

இதை கேட்டு அனைவர் முகமும் மலர்ந்தது.. சாந்திக்கும் மகிழ்ச்சியே!..

 

ரதியின் முகம் குழப்பத்தை காட்ட ..” என்ன ரதி ?நம்ப சிவா தானேஇங்கயே நம்ப குடும்பத்தோட ஒன்னுக்குள்ள ஒண்ணா இருந்துக்கலாம்..”.என வள்ளி சொல்ல

 

“யாருக்கு கல்யாணம் யாருக்கு கல்யாணம்” என ஒரு குரல் கேட்டதும்,எல்லோரும் அங்கே திரும்பினர்

 

[the_ad id=”6605″]

 

 

 

“டேய் சிவா!!” என வாசுகி தான் சுதாரித்தார்

 

“அத்தை! யாருக்கு கல்யாணம் எனக்கா? “என மலர்ந்து கேட்க..

அதை பார்த்து அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது.. 

 

“டேய்! வந்ததும் பெரியவங்களை பார்த்து எப்படி இருக்கீங்கனு  விசாரிக்காமல் என்ன இது ?” என பாண்டியன் அதட்டியதும்,

 

அப்போது தான் எல்லோரும் அவனை பார்த்து சிரிப்பதை உணர்ந்து.. அசடு வழிந்தவாறு எல்லோரையும் நலம் விசாரித்தான்.     

 

அப்போதும் விடாமல் அவனின் பெரிய அத்தையிடம் வந்து 

 

”அத்தை!நான் கேட்டதுக்கு பதில் சொல்லலஇப்ப தான் ஏதோ உங்க எல்லாருக்கும் பொறுப்பு வந்து எனக்கு கல்யாணம் பத்தி பேசறீங்கனு நினைச்சேன்அப்ப எனக்கு இல்லையாஎன வருந்துவது போல் கேட்க..

 

“டேய் ! இன்னைக்கு சாமி கல்யாணம் அந்த ஊர்வலம் வர போகுது அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்.. நீ போய் குளிச்சுட்டு வா போ” என சரோஜா அவனை விரட்டி வாசுகியிடம் கண் காட்டினார்..

 

“ரதி ! நீ போய் வேற புடவை கட்டிட்டு ரெடி ஆகி வா எல்லாம் எடுத்து வைப்போம்” என வாசுகி அவளிடம் சொல்லி விட்டு சமயலறையில் நுழைந்தார்

 

அப்போது தான் அவள் ஒருத்தி  அங்கிருப்பதை அவன் கவனித்தானே.. 

 

“ஹே ! ரதி நீ எப்ப வந்தாய் ? எப்படி இருக்க? ரொம்ப பெரிய அப்பாடக்கர் ஆபிசர் ஆகிட்ட போல அதான் எங்களை கண்டுக்கலஎன அவன் அவளை சீண்டியதும்..

 

அவளிடம் இருந்த இறுக்கம் சற்று தளர்ந்தது.. “யாரு நானு!! இவ்வளவு நேரம் இங்க தான் நின்னுட்டு இருந்தேன் உன் கண்ணுக்கு தெரில.. அதை விட முக்கியமா வேற ஏதோ நீ பேசிட்டு இருந்த இப்ப என்னை கேட்கிறியா நீ… போடா டேய் ..” என அவளும் விடாமல் பேச..

 

“அம்மு! என்ன நீ கொஞ்சம் கூட மரியாதையை இல்லாம பேசற… அவனை மாமான்னு கூப்பிடுனு ஏற்கனவே சொல்லிருக்கேன்” என சாந்தி அவளை கண்டித்தார்.

 

“அப்படி சொல்லுங்க அத்தை.. ஒழுங்கா என்னை நீ மாமான்னு கூப்பிடுற சரியா  ரதி” ..அவளிடம் குறும்புடன் சொல்லி கண்ணடிக்க

 

ரதி அவனை முறைக்க,,

 

“டேய் ! அவளை வம்பிழுக்கமா நீ முதல்ல போய் குளிச்சுட்டு வா” ! என அவனின் அம்மா அவனை உள்ளே தள்ளினார்.

 

அவன் போனதும் அவளே அவள் மாமாவிடம் சென்று,

 

“மாமா !! ப்ளீஸ் இந்த இடம் வாங்கறதுனு எல்லாம் முடியட்டுமேஎனக்குள்ள இருக்க இந்த போராட்டம் எல்லாம் முடிஞ்சால் தான் அடுத்து என்னனு என்னால யோசிக்க கூட முடியும்ப்ளீஸ் எல்லோரும் புரிஞ்சிக்கோங்க”என அவள் கண்கள் கலங்கியதும் அனைவருக்கும் பதறியது.

 

“எல்லோரும் எதுக்கு அவளை கட்டாயப்படுத்திருங்கஅவளுக்குனு நேரம் வரும் போது எல்லாம் தானா நடக்கும்.. அவளை அமைதியா விடுங்க .. போங்க போய் வேலைய பாருங்க “ என சரோஜா எல்லோரையும் அதட்டினார்..

சாமி ஊர்வலத்தில் ரதியையே ஆராதனை எடுக்க வைக்க, சிவா அவளிடம் இருந்த தவிப்பை கவனித்தவன் தனியே அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான். எல்லாம் முடிந்து மதிய உணவு முடிந்ததும்,

“நான் ஈவினிங் ட்ரைன்க்கு கிளம்பறேன்… நாளைக்கு ஆபீஸ் போகணும்.. “என எல்லோரிடமும் சொல்ல..

 

“சரி ரதி! நாங்க இடத்திற்கான விவரம் எல்லாம் பேசிட்டு உனக்கு போன் பண்றேன்… நமக்கு சாதகமா தான் இருக்கும்… நீ ஏதும் கவலைப்படாத”.. 

 

[the_ad id=”6605″]

 

 

 

“சரி மாமா! நான் போய் எல்லாம் எடுத்து வைக்கிறேன்” என்று பழனியின் ரூமினுள் நுழைந்தாள்..

 

அவளுக்கு போகும் போது கொடுத்து அனுப்ப ஊறுகாய், பொடி என்று எல்லாம் ரெடி செய்ய பெண்கள் உள்ளே செல்ல, சிவா ரதியிடம் பேச வேண்டி ரூமிற்கு சென்றான்.

 

“என்ன ரதி கிளம்பிட்ட! மாமாகிட்ட இருந்து தப்பிக்க பயந்து ஓடற போல…” அவனை முறைத்தபடியே அவள் வேலையை தொடர, 

 

அவன் குறும்பை விட்டு “நான் இன்னைக்கு தானே வந்தேன் இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல… ஒரு வருஷம் ஆச்சு நீயும் நானும் மீட் பண்ணி.. “அவன் சோகமாக சொல்ல..

 

அவளும் அதனால் தானே வந்தவுடன் அவனை கேட்டாள்… சிவா அவளின் பெரிய மாமாவின் இரண்டாவது மகன்.. இவளை விட மூன்று வயது பெரியவன்.. சிறு வயதிலிருந்தே இருவருக்கும் சேராது எப்போதும் சண்டை தான் சில சமயம் வாய் சண்டை சில சமயம் கை சண்டை கூட… எல்லாமே உரிமை சீண்டல் தான்..

 

ஆனால் ஒருவர் மீது ஒருவர்க்கு அன்பு அதிகம் .. இருவருக்கும் இடையில் ஒளிவு மறைவு கிடையாது.. எவ்வளவு தான் அடித்து கொண்டாலும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்தது இல்லை… உறவையும் தாண்டி இருவரிடமும் புரிதலான நட்பு இருந்தது…

 

அதன் வெளிப்பாடே இப்போது சிவாவின் ஆதங்கம்… அவளுக்கும் அதே ஏக்கம் தானே..

 

“இல்ல சிவா… ரெண்டு நாள் தான் லீவு கிடைச்சது… அந்த இடம் விஷயம் முடிவானதும் கிரயம் பண்ண எப்படியும் லீவு எடுக்கணும், அதான் இப்ப நான் போய் ஆகணும்…”

 

“ரொம்ப நாள் அப்புறம் பார்க்கறோம்ல உடனே நீ போறது கொஞ்சம் அப்செட் அவளோ தான்…  சரி விடு .. அந்த இடம் விஷயம் எல்லாம் என்ன ஆச்சு” என அவன் கேட்டதும்… அவனிடம் எல்லாவற்றையும் கூறினாள்.. திருமண விஷயம் உட்பட…

 

“என்னது உன்கூட கல்யாணமா? நல்லா அனுபமா போல ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு என் கல்யாணம் பத்தி எவ்ளோ கனவுல இருந்தேன் … இப்படி பண்றாங்களே…இதுக்கு நான் காவி கட்டிட்டு இமயமலை போய்டுவேனே…” என அதிர்வது போல் அவன் சொல்ல…

 

“டேய் ! மாமா ! உனக்கு நானே அதிகம் … இதுல உனக்கு அனுபமா கேட்குதா ?” என இடுப்பில் கை வைத்து அவனை முறைக்க…

 

“போடி! அதுக்கு நான் கெத்து சிங்கிளா இருந்துப்பேன்..”

 

“ஹான் !! ரொம்ப நல்லது.. ஒரு பொண்ணு லைப் தப்பிக்கும்..”

 

அவளை முறைத்துக்கொண்டே, “ஆமா நீ அப்ப கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டியா ?”

 

“யாரு நானு ..உன்ன கல்யாணம் பண்ணிக்க .. உனக்கு ஆசை தான் போடா..” 

 

“ஹே ! என்னடி … நான் ஒரு அக்ரி என்ஜினீயர்.. நாளைக்கு உலகமே என்ன நம்பி தான் இருக்கு .. என்னோட அழகுக்கும்   திறமைக்கும் எவ்வளவு பொண்ணுங்க லைன்ல நிக்கிறாங்க தெரியுமா…”

 

“சொன்னாங்க .. பிபிசில சொன்னாங்க உன்னை தான் வலை வீசி தேடறாங்களாம்… இன்டர்நேஷனல் கிரிமினலாமே நீ…”

 

“போடி .. உனக்கு பொறாமை… சரி என்ன தான் சொல்லி வச்சிருக்க …”

 

“ஆறு மாசம் டைம் கேட்டிருக்கேன்…”

 

“எதுக்கு ஆறு மாசம் ..உனக்கு ஆள் ஏதும் செட் பண்றியா” என கிண்டலடிக்க ..

 

“தெரியல சிவா… எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்று அவள் சுருதி இறங்க..

 

“ரதி ! நீ யாரையோ பார்க்கணும் பேசணும்னு சொன்னியே ? அது என்னாச்சு ?”

 

“இன்னும் அவங்கள பத்தி விவரம் தெரியல சிவா..”

 

“சரி! அவங்களை பத்தி வீட்டில பேசிட்டியா?”

 

“எதுக்கு அவங்களை பத்தி பேசணும்” என குழப்பமாக கேட்க,

 

“பின்ன…அவங்க தானே உன் ஆளு ?”

 

“டேய் மாமா ! உளறாதே !”

 

“அப்ப எதுக்கு அவங்களை தேடற ?”

 

உடனே அவளிடம் ஒரு அமைதி முகம் மென்மையை காட்ட,

 

“அதுவா அவங்கள நான் இது வரைக்கும் சந்திச்ச சூழ்நிலைகள் எல்லாம் கொஞ்சம் பாசிட்டிவ்… நான் இப்படி யோசிக்கறது கொஞ்சம் ஸ்டுப்பிடா தான் இருக்கும்… என்னவோ நம்ப ரொம்ப இக்கட்டான நிலைல இருக்கும் போது நம்பள ஒரு சக்தி வழி நடத்தும்ல… என் பின்னாடி இருக்க என்னோடே உந்து சக்தின்னு கூட சொல்லலாம்.. 

 

அது போல தான் எனக்கே தெரியாம எனக்குள்ள அவங்களை என்னோடே பாசிட்டிவ் எனர்ஜியாக கொண்டு இவ்வளவு நாள் எல்லாம் பண்ணேன்… இப்ப இந்த இடம் வாங்கறது எல்லாம் ரொம்ப தவிப்பா இருந்துச்சு… அதான் அவங்களை ஒரு முறை நேர்ல பார்த்து பேசினா எனக்கு எல்லாம் சரி ஆகும்னு தோணுச்சு..”. 

 

“அடிப்பாவி! இவ்வளவு நாள் நீ தேடறதுக்கு என்ன என்னவோ காரணம் இருக்கும்னு நினைச்சேன்.. நீ என்னவோ அவர் தான் என்னோடே எனர்ஜி ட்ரின்க், அந்த ஸ்ட்ரோங் எனர்ஜிக்கு தான் அவரை தேடறேன்னு சொல்லிட்ட…”   

 

“ஆமா அவர் பெயர் என்ன ?என்ன பண்றாங்க? எங்க இருக்காங்க?”

 

அவள் இடது வலமாக தலையை அசைக்க..

 

“என்ன? அவர் பேர் கூட தெரியாதா?”

 

“ம்ம்ம் .. ஆமா… நேத்து கூட நம்ப இடம் பார்க்க போய்ட்டு வரும் போது, தெரிஞ்ச இடத்துல விசாரிச்சேன்… ஒன்னும் உருப்படியா கிடைக்கல…”சோர்ந்து சொல்ல…

 

“ம்ம்ம் … என்னனு சொல்ல… இப்ப இடம் வாங்கறது எல்லாம் சேர்ந்து வர போல அவரையும் நீ சீக்கிரம் மீட் பண்ணுவனு தோணுது…”

 

உடனே அவள் முகம் மலர்ந்தது… “ஆமாவா.. எனக்கும் அப்படி தான் தோணுது…”

 

“ஆனால் இப்படி பெயர் கூட தெரியாம இருப்பனு நான் எதிர்பார்க்கல..அவன் கிண்டலடிக்க

 

“அவர் பெயர் என்னவா இருக்கும்னு எவ்ளோ பெயர் யோசிச்சேன்னு எனக்கு தானே தெரியும்” என அவள் மனதோடு முணுமுணுக்க…

 

[the_ad id=”6605″]

 

 

 

“உனக்கு அவர் மேல ஒரு க்ரஷ் இருக்குனு தோணுது…” குறும்போடு கேட்க…

 

“டேய்!” 

 

“அப்ப இல்லையா…சரி விடு … நல்ல வேலை அவரு தப்பிச்சாரு…”

 

“போடா டேய்!!”

 

“ம்ம்ம்ம்.. அவர் மேல ஒரு ஹீரோஒர்ஷிப்ன்னு வேணும்னா சொல்லலாம்…”

 

“ஓஓஓஓ !!! சரி முதல்ல மீட் பண்ணு அப்புறம் இதை பத்தி பேசலாம்..”

 

“ம்ம்ம்ம்…”

 

“நீ ரெடி ஆகி வா! நான் உன்னை ஸ்டேஷன்ல விடறேன்…” என்று   அவன் வெளியேறவும்..  

 

“ரதி !” என அழைத்தபடியே பழனி உள்ளே வர…

எப்பவும் அவளை அக்கறையில் அதட்டி உருட்டும் அவளின் சின்ன மாமா அவளருகே வந்தார்…

 

“கிளம்பிட்டியா??” 

 

“ஆமா மாமா…” 

 

“சரி வா நான் கூட்டிட்டு போறேன்..”

 

“இல்ல மாமா சிவா வரேன்னு சொன்னான்..”

 

“அப்படியா சரி !”   

 

“உனக்குள்ள இருக்க போராட்டம் மீறி வேற ஏதோ தவிப்பு இருக்குனு உணர முடியுது… எதுனாலும் சரி ஆகிடும் பார்த்துக்கலாம் நாங்க இருக்கோம் சரியா…” என்றபடியே அவளின் தலையை ஆதரவாக கோதி விட்டு சென்றார்.

 

அவளும் பின்னாலே வெளியே வந்து எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினாள்..

 

மறுபடியுமான ட்ரெயின் பயணத்தில் அவள் நினைவுகள் தானாகவே அவனை நோக்கி சென்றது. அவனுடனான கடைசி இரண்டு சந்திப்பில் கூட அவன் பெயரைத் தெரிந்துக் கொள்ளாத தன் மடத்தனத்தை இப்போது நினைத்து நொந்துக் கொண்டாள்.  

 

பெயர் அறியா உன் அறிமுகத்தில்..

அதிகம் நான் தேடியது உன்னை விட..

உன் பெயரைத் தான்!…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!