Irulil Thedum Oliyaai Nee 15
ஒளி 15 ::
நீ வந்தாய் என் வாழ்விலே!
பூ பூத்தாய் என் வேரிலே!
நாளையே நீ போகலாம்!
என் ஞாபகம் நீ ஆகலாம்!
யார் இவன்… யார் இவன்…!
ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..!
Advertisement
“ஓய்!”
Advertisement
“ஓய் !”
Advertisement
அவன் இருமுறை அழைத்ததும் தான் சுற்றம் உணர்ந்து அவனைப் பார்த்தாள்.
Advertisement
“என்ன ?” என்று கண்களாலேயே அவனிடம் வினவ ,
“நம்ப ஸ்டேஷன்ல போய் இறங்கும் போதே மணி பத்து கிட்ட ஆகி இருக்கும்… அங்க இருந்து போய் சந்தியா பஸ் பிடிக்கணும்னா முடியாது.. அதனால நீ உன் வண்டியில கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் கூட்டிட்டு போய் விடேன்..” என்று ரதியிடம் அவன் கேட்க,
“யார் அது சந்தியா?” என்று அவனிடம் கேட்டாள்.
அவனோ அவளை முறைத்தவாறு அருகிலிருந்த பெண்ணைக் காட்டினான்.
“ஓஎம்ஜி! பேசின இருபது நிமிஷத்துல அந்த பொண்ணோட ஃபுல் பயோடேட்டா எடுத்துட்டான் போலவே…” என மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தவளை மறுபடியும் அழைத்தான்.
“ஓய் !”
“அப்ப அப்ப ஏதோ ஒரு உலகத்துக்கு போயிடற கொஞ்சம் இந்த உலகத்துக்கு வாயேன்…அப்படியே அந்த வளையல்ல இருந்தும் கையை எடு… கண்ணாடி வளையலை போட்டு இப்படி உருட்டுற அது உடைஞ்சு கையை எங்கயும் கிழிக்க போகுது…” என்று அதட்டினான்.
அவளோ அவனை முறைக்க, “இந்த மாதிரி கூட்டத்துல வரும் போது உனக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி இது பாதுகாப்பு இல்ல…” என்று அவள் வளையலைக் காட்டி சொல்ல அவனை இடையிட்டாள்.
“எனக்கு சரி அது என்ன மத்தவங்களுக்கு?”
“பின்ன அன்னைக்கு உன்ன உள்ளே இழுக்கும் போது உன் வளையல்ல ஏதோ உடைஞ்சு இருக்கு போல அது என் கையை கிழிச்சுடுச்சு… அதான் சொன்னேன்..” என்று கேலிக் குரலில் சொன்னான்.
“அச்சோ ! சாரி !”
“உன் சாரியை அப்புறம் சொல்லிக்கலாம் நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல அடுத்து நம்ப தான் இறங்கணும்”
“ம்ம்ம் ! நீங்க வாங்க நான் கூட்டிட்டு போறேன்.” என்று அவனிடம் நேராக பதிலளிக்காமல் அந்த பெண்ணை அழைத்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ்க்கா..”
[the_ad id=”6605″]
ஒரு சின்ன சிரிப்போடு அதைக் கடந்தவள் இறங்க ஆயத்தமானாள். சந்தியாவை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பியவளின் அருகே அவனும் வண்டியோடு வந்தான்.
“சரிண்ணா! ரொம்ப தேங்க்ஸ் … நீங்க பேசினது கேட்டதும் கொஞ்சம் தெம்பா இருந்தது. இனி கவனமா இருப்பேன். வரேண்ணா..”
“சரிம்மா ! பத்திரமா போய்ட்டு வா..” என்று கூறினான்.
ரதியோ அவனை முறைத்தவாறே நிற்க, அவனோ கிளம்பு என்று அதட்டலாக தலையசைத்தான்.
ஊரே நிசப்தமாக இருக்க, தன் அருகே ஒரு பைக் வருவதை பார்த்து இன்னும் வேகமெடுத்தாள்.
“ஓய் “ என்ற அவன் அழைப்பில் இன்பமாய் திரும்பினாள்.
“பொறுமையா பார்த்து ஓட்டு.. அந்த பொண்ணை கீழத் தள்ளி விட்டுடாதே” என்று அவளை நக்கலடிக்க,
“ம்ம்க்கும்…” என்று நொடித்தவள் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர, இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை அவள் பஸ்சில் ஏற்றி விட்டனர்.
பஸ்சில் ஏறும் முன் அந்த பெண்ணிடம், “இது போல எல்லாரையும் நம்பி கூட போகாதே எப்போதும் கவனமாக இரு” என்று சொல்லியே அனுப்பினான்.
அதன்பின் ரதியிடம் வந்தவன் சிறு புன்னகையோடு, “தேங்க்ஸ்!” என்று சொல்ல,
“நீங்களே கூட்டிட்டு வந்திருக்கலாம்ல.. இதுக்கு எதுக்கு இரண்டு பேரு..”
”என்னை ஒரு முறை பார்த்த நீயே என் பக்கத்துல உட்கார யோசிக்கற அது சரியும் கூட… ஆனால், அந்த பொண்ணோ ஏற்கனவே பயந்து போயிருக்கு. இதுல நான் தனியா கூட்டிட்டு வர முடியுமா.. அப்படியே முடிஞ்சாலும் அது சரியான விஷயம் இல்லை அதான் உன்கூட அனுப்பினேன்..” என்று கூறினான்.
“அவர் பார்க்கலைன்னு நினைச்சா இப்படி அவர்கிட்ட பல்பு வாங்கறியே பேபி..” என்று மனதோடு சொல்லியவள் “சரி தான்! அப்புறம் எதுக்கு நீங்களும் கூட வந்தீங்க?”
[the_ad id=”6605″]
“ஓய் ! உனக்கு மூளையே வேலை செய்யாதா?”
இதுக்கும் மூளைக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பியவள் அவனின் கேலியை அப்போதே உணர்ந்து அவனை முறைத்தாள்.
“பின்ன, உங்க இரண்டு பேரையும் இந்த நேரத்துக்கு தனியா அனுப்ப முடியுமா? அதான் கூட வந்தேன். இதைக் கூட யோசிக்க மாட்டியா?”
அவனின் அக்கறை மனதை நிறைத்தாலும் வேண்டுமென்றே அவனை சீண்டினாள். “ஆஹான்.. நீங்க அவ்ளோ பெரிய அப்பாடக்கர்னு தெரியாம போச்சு..” என்று கிண்டலடிக்க,
அவளை முறைத்தவன், “உனக்கு வீட்டுக்கு போற ஐடியா இல்லையா.. மணி பத்தரை ஆகப் போகுது.”
“அச்சோ ! லேட்டாச்சு.. அப்பாவே வந்துட்டு இருப்பாரு.. நான் கிளம்பறேன்” என்று கிளம்பியவளின் கூடவே அவனும் வந்தான்.
அவள் கேள்வியாக நோக்க, “உங்க தெரு வரைக்கும் வரேன் வா.”
“இல்ல பரவாயில்ல.. பக்கம் தான் நானே போயிக்கிறேன்..” என்று சொல்லியவள்,
அவன் அழுத்தமான பார்வையில் அமைதியாக கிளம்பினாள்.
சிறிது தூரம் சென்றதும் அவனே அந்த அமைதியைக் கலைத்தான்.
“இந்த டைம்க்கு தனியா வர்றியே உனக்கு பயமா இல்லையா…” என்று குறும்பாக கேட்க,
“அதெல்லாம் இல்லாம எங்க போச்சு.. ட்ரெயின் ஏறினதும் கூட பயந்து தான் உங்க புக்கைத் தட்டி விட்டேன்.. ஆனால் இப்ப பயமா இல்லை…” என்று அவள் சிரிப்போடு சொல்ல,
“ஏன் அப்படி?” என அவன் கேட்க,
“அதான் நீங்க இருக்கீங்களே?” என்ற அவளின் பதிலில் மெலிதாய் அதிர்ந்தான்.
“பின்ன நீங்க கூட இருக்கும் போது உங்களை விட எனக்கு என்ன பெரிய ப்ராப்ளம் வந்துட போகுது” என்று குறும்பாய் அவள் பதில் அளிக்க, அதில் அவன் சிரிப்பு அப்படியே சுருங்கியது..
அதற்குள் அவள் வீட்டின் அருகே வந்திருக்க, அவன் கிளம்ப திரும்பினான்.
“ஹலோ ! பாஸ் ! நில்லுங்க !”
வண்டியை அவள் வீட்டின் முன்னே நிறுத்தி விட்டு அவனை அழைத்தவாறு அருகே வந்து அவன் முகத்தைப் பார்க்க அதுவோ எந்த உணர்வும் காட்டாதபடி நிர்ச்சலனமாக இருந்தது. அவளை நேரே பார்க்காமல் எங்கோ பார்த்திருந்தான்,
“பாஸ் ! உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று மெல்லிய குரலில் ரதி சொல்ல, அந்த குரலின் மென்மையில் அவளை நோக்கித் திரும்பினான்.
அவளோ,“சாரி அண்ட் தேங்க்ஸ் பாஸ்ன்னு!” சொல்ல,
“அவ்வளவு தானே” என்று பார்வையிலே அவன் கேட்டதும்,
“அப்புறம் நீங்க ரொம்ப……” என்று அவள் இழுக்க,
அவள் கண்களில் குறும்பைக் கண்டு இளகியவன் “ரொம்ம்ம்ப…” என்று அவளை போலவே கேட்க,
“ரொம்ப இல்லைனாலும் கொஞ்சம் நல்லவங்க தான்…” என்று கண்ணையும் கையையும் சுருக்கி சொல்லிவிட்டு ஓடி விட்டாள்.
“ஓய் ! ஓடாதே !” என்று அவன் குரலைக் கேட்க அவள் அங்கில்லை.
அவளின் வார்தையைக் கேட்டு சிறு சிரிப்போடே அங்கிருந்து கிளம்பினான்.
அவளிடம் வண்டி இருப்பதை அவன் எப்படி அறிந்தான் என்பதையும் அவள் யோசிக்கவில்லை.. இத்தனை நேரம் கூட இருந்தவனிடம் பெயரையும் கேட்கவில்லை, எனக்கு பெயர் இருக்கு “ஓய்” னு கூப்பிடாதீங்கன்னு அவளும் அவள் பெயரை சொல்லவில்லை…
அவளுக்குத் தான் அவன் பெயர் தெரியாது ஆனால் அவள் பெயர் அவனுக்கு முன்பே தெரியும் என்பதை அவள் அறியும் நேரமும் வருமோ…
ஒரு துள்ளலோடு வீட்டினுள் நுழைந்தவள் பெற்றோரிடம் இருந்த இறுக்கத்தை கவனிக்கத் தவறினாள். சீக்கிரமாக உண்டு உறங்கியவள் அவர்கள் உறக்கத்தை தொலைத்ததையும் அறியாமல் போனாள்.
[the_ad id=”6605″]
நேற்றைய சந்திப்புப் பற்றி விஜிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் காலம் முழுசுக்கும் ஓட்டியே தள்ளிடுவாள் என்று தோழிகளிடம் கூட அவள் கூறவில்லை.
மறுநாள் ஸ்டேஷனில் இவளே அவனைத் தேடினாள். ஆனால் அவள் கண்ணுக்கு அவன் சிக்கவில்லை. ஒருவேளை அது தான் இருவரின் கடைசி சந்திப்பு என்று தேடினாளோ…!
உன்னை மறைத்தேனோ!
உண்மை மறைத்தேனோ !
இல்லை என்னையோ மறைத்தேனோ !
