Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 6

ஒளி 6: 

 

அன்பு காதலன் வந்தான் காற்றோடு!

அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு!



Advertisement

அவன் அள்ளி எடுத்தான் கையோடு!

அவள் துள்ளி விழுந்தாள் கையோடு!கனிவோடு!

 

Advertisement

டிவியில் பழைய  பாடல் ஓடிக்கொண்டு இருக்க, அவள் அம்மா பாடல்களை ரசித்தபடியே மாவு அரைத்து கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டே புன்னகையோடு உள்ளே நுழைந்தாள். 

Advertisement

 

“என்னம்மா ! பாட்டெல்லாம் பலமா இருக்கு, வாட்ஸ் தி மேட்டர் ?” என ரதி கேட்க,  

 

Advertisement

 

[the_ad id=”6605″]

 

 

 

அவள் அம்மா அவளை முறைத்து கொண்டே , “போய் டிரஸ் மாத்திட்டு  கை கால் கழுவிட்டு வாடி ” என்றதும், 

 

இரவு உடை எடுத்துக்கொண்டு செல்லவும் எதிரே அவள் அப்பா வரவும் அவளுக்கு ஆச்சர்யம்…

 

காலையில் கடைகள் பத்து மணிக்கு மேலே தான் திறப்பர் அதனால் லேட்டாகவே செல்வார். இரவும் இவள் உறங்கின பிறகே வருவார்.  

 

வேலைக்கு செல்ல ஆரம்பித்த இந்த நாட்களில் மூவரும் சேர்ந்து இருக்கும் தருணங்கள் குறைந்தது. 

 

காலை இருவரும் சேர்ந்து  வாக்கிங் செல்லும் நேரமே தந்தையோடு இருப்பது. பலமுறை வருந்தியது உண்டு இரவு நேரங்களில் ஒன்றாக உணவு அருந்த கூட முடியவில்லை என்று.. 

 

இவளுக்கு ஞாயிறு விடுமுறை என்றால் ராஜதுரைக்கு வாரநாட்களில் ஏதேனும் ஒரு நாள் விடுமுறை, அதனால் விடுமுறை நாட்களில் கூட தந்தையுடன் இருக்க முடியாது. 

 

ஆனால் தந்தை இன்று சீக்கிரம் வரவும் அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

 

”என்னப்பா இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க?” 

 

அவளின் மகிழ்ச்சி அவரையும் தொற்ற, “இன்னைக்கு விஷேஷ நாள் ஏதும் இல்ல அம்மு கடையிலும் கூட்டம் இல்ல அதான் சீக்கிரம்!” 

 

“ஆமா! நீ ஏன் இன்னைக்கு லேட்டா வந்து இருக்க ?”

 

“எப்பவும் போல ட்ரைன் சிக்னல் பிரச்சனைப்பா அவுட்டர்ல போட்டுட்டான் அதான் லேட்… இருங்கப்பா நான் போய் முகம் கழுவிட்டு வரேன் “

 

வெகு நாட்கள் கழித்து மூவரும் சேர்ந்து உணவருந்தினர்.. ரதி மகிழ்வாய்  பேசினாலும் அவளிடம் இருந்த சோர்வைக் கண்டு தந்தையாய் மனம் வருந்தினார்.

 

“அம்மு ! சம்பளம் கம்மியா இருந்தாலும் இங்கயே ஏதாவது வேலை பாரேன்மா, பாரு எவ்ளோ  சோர்வா இருக்க…இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு போய் வேலை பார்க்கணுமா.., இதுல காலையிலே  என்கூட வாக்கிங் வரணும்னு வேற அடம்பிடிக்கற…” என்று தந்தை கேட்க,

 

“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லப்பா…வேலையும் சரி போய் வர இந்த travelum சரி எனக்கு  ரொம்ப பிடிச்சு இருக்குப்பா நீங்க ஏதும் கவலைபடாதீங்க..”

 

“உனக்கு பிடிச்ச படிப்பு கூட அப்பா படிக்க வைக்கலலம்மா  ஒருவேளை அப்படி படிச்சு இருந்தால் நல்லா இருந்து இருக்கும்ல…”  

 

ஒருநொடியில்  அவள் கண்கள் அதை  பிரதிபலித்தாலும் , “இது  கூட எனக்கு பிடிச்ச படிப்பு தான்ப்பா  நீங்க ஏன் இவ்ளோ கவலைப்படறீங்க … பிரீயா  விடுங்க…நான் ரொம்ப சந்தோஷமாதான் இருக்கேன் …ஏற்கனவே  லேட் ஆச்சு நீங்க போய் தூங்குங்க… நான் நாளைக்கு போட டிரஸ்  எடுத்து வச்சுட்டு வந்து தூங்கறேன்“ என நகர்ந்தாள்…

 

தந்தையும் மகளும் இப்போது பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த சாந்திக்கும், கணவர் சொல்லுவது போல மகள் விரும்பிய படிப்பு கூட தாங்கள் படிக்க வைக்க முடியலையோ என்று அன்றைய நாட்களின் நினைவிற்கு சென்றார்.

 

ரதி என்ன தான் விளையாட்டு பிள்ளையானாலும் பொறுப்பானவள், படிப்பிலும் சுட்டி , 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று இருந்தாள். அவளுக்கு மருத்துவ துறையில் ஏதேனும் ஒரு படிப்பு படிக்க ஆசை, மெரிட்டில் அவளுக்கு பல் மருத்துவத்திற்கும் கிடைத்தது. 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

ஆனால் கல்வி என்பது சந்தையில் விற்கப்படும் பொருளாக மாற  மெரிட்டில் கிடைத்தாலும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம்… 

 

“ஏங்க! வீட்டு பத்திரம் வேணும்னா அடமானம் வச்சு கடன் வாங்கி படிக்க வைக்கலாமா” என சாந்தி கேட்கும் போதே ரதி இடையிட்டாள்… 

 

“அம்மா! என்ன பேசற ? நமக்கு இருக்கறது இந்த வீடு மட்டும் தான் .. அதை வச்சு படிக்கணும்னு அவசியம் இல்ல புரியுதா ?இது இல்லனா வேற கோர்ஸ் படிச்சுட்டு போறேன் அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல..”

 

“இல்ல அம்மு! அம்மா சொல்றதே என்னவோ சரினு தோணுது…”

 

“அப்பா ! என்னோட சேர்த்து நாலாவது தலைமுறையா இந்த இடத்தில இருக்கோம்னு சொல்லுவீங்க… சொத்தா இல்லாம இது நம்மோட பூர்வீகம்னு சொல்ற உங்களுக்கு இந்த இடம் எவ்ளோ முக்கியம்னு எனக்கு தெரியும்… அதனால இதை அடகு வைக்கறது பத்தி யோசிக்காதீங்க…” என கண்டிப்போடு கூறினாள்.

 

ராஜதுரையின் வருமானத்திற்கும் படிப்பின் கட்டணத்திற்கும் ஈடு இல்லாமல் போக லோன் வாங்கியாவது மகளை படிக்க வைக்கலாம் என்றாலும் முழு கட்டணம் லோனில் கிடைக்காத நிலையில் தன் அத்தை கமலாம்மாவிடம் உதவி நாடினார். அந்த சமயத்தில் அவர் காஞ்சிபுரத்தின் எம் எல் ஏ வேறு …

 

ஒரு நாள் காலை நேரத்திலே தந்தையும் மகளும் அவர் இல்லம் செல்ல, அப்போது வெளி வராண்டாவில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டு இருந்தனர் கமலாம்மாவும் அவர் கணவர் பெருமாளும்…

 

“வணக்கம் அத்தை ! வணக்கம் மாமா ! நல்லா இருக்கீங்களா !”

 

“ம்ம்ம்!” என அவர் மாமா பதில் அளித்தாலும் கமலம்மா அது கூட பேசாமல் இருவரையும் ஆராய்ந்தார். 

 

“என்ன ? காலையிலே அப்பாவும் பொண்ணும் வந்து இருக்கீங்க ??”

 

“ரதிக்கு பல் மருத்துவத்தில் படிக்க சீட் கிடைச்சு இருக்க அத்தை” ? என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ரதி இருவர் காலிலும் விழுந்து வணங்கினாள்.

 

“ஓ! நல்லது ! வேற என்ன ?”

 

“இல்ல அத்தை…”

 

“என்ன சொல்லு ?எனக்கு டைம் இல்ல..”

 

“மெரிட்டில் கிடைத்தாலும், கவர்ன்மெண்ட் சொல்றது விட காலேஜ்ல அதிக பணம் கட்ட சொல்றாங்க”… என்று ராஜதுரை தயங்கியவாறே சொல்ல,

 

“ஆமா ! அப்படி தான் சொல்லுவாங்க ! பின்ன மெடிக்கல்ல சும்மாவா தருவாங்க…”

 

“நான் எடுத்த மார்க்கு மெரிட்டில் தானே பாட்டி கிடைச்சு இருக்கு, இதுல இன்னும் அதிகமா பீஸ் கட்ட சொன்ன எப்படி கட்றது…” என்று ரதி துடுக்காய் கேட்க,

 

“அதெல்லாம் அப்படி தான் ! உனக்கு சொன்னா புரியாது! நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க அதை சொல்லுங்க…”

 

“நீங்க கொஞ்சம் பேசுங்கத்த… ஒண்ணு கேக்கற பணம் கட்டணும் இல்லனா யாராவது சிபாரிசு பண்ணா குறைப்பாங்கனு தெரிஞ்சவங்க சொன்னாங்க அதான் உங்க கிட்ட உதவி கேட்டு வந்து இருக்கோம்”… என ராஜதுரை சொன்னார்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“இதுல நான் என்ன பண்ணனும்னு எதிர்பாக்கறீங்க?”

 

“நீங்க காலேஜ்ல கொஞ்சம் பேசுங்கத்த..” 

 

“ம்ம்ம்…”சிறிது நேரம் யோசனையில் இருந்துவிட்டு  

 

“சரி நாளைக்கு இவள அனுப்பி விடு”… 

 

“சரிங்கத்த போய்ட்டு வரோம்…” என இருவரும் விடைபெற்றதும் , 

 

“ஏன் கமலா என்ன செய்ய போற?” என இத்தனை நேரம் பார்வையாளராக இருந்த கமலாம்மாவின் கணவன் பெருமாள் கேட்க,

 

“முதல்ல காலேஜ்ல பேசி பாக்கறேன் முடிலனா நேரா தலைவர்கிட்ட பேசி பார்க்கணும்…” 

 

“தலைவரும் முடிலனு சொன்னா பணம் குடுத்து நீ படிக்க வைக்க போறியா என்ன ?”

 

“அதெல்லாம் இல்ல … அவங்கப்பன் எனக்கு என்ன பண்ணிட்டான் நான் பணம் குடுத்து அவள படிக்க வைக்கறதுக்கு… ஆனா எங்க குடும்பத்துல இவ மட்டும் தான் இந்த அளவுக்கு படிச்சு மார்க் எடுத்து இருக்கா.. சரி பேசறது தானே ஒரு முறை முயற்சி பண்ணுவோம்… அதுக்கப்பறம் அவ தலையெழுத்து… சும்மாவே இந்த பொண்ணு நம்ம கிட்ட மொறைப்பா பேசும் அவளுக்கு இந்த அளவுக்கு இறங்கி செய்யணுமானு யோசனை பண்றேன்”

 

“அதான் பணம் கொடுக்கல தானே…பேசி பாரு கமலா…”

 

“ம்ம்ம்ம்…” 

 

மறுநாள் காலேஜில் ஒத்துக்கவில்லை.. 

 

“இல்ல சாரி மேடம்! தப்பா எடுத்துக்காதீங்க மேனேஜ்மென்ட் மீறி எதுவும் செய்ய முடியாது … இது எல்லா ஸ்டுடென்ட்ஸ்க்கும் பொது இவங்களுக்கு குறைச்சு பீஸ் வாங்கனது மத்த ஸ்டுடென்ட்ஸ்க்கு தெரிய வந்தா தேவை இல்லாம பிரச்சன வரும்” என்று பிரின்சிபால் கையை விரித்தார்…

 

அடுத்து தலைவரை சந்திக்க ரதியை மட்டும் கமலம்மாள் அழைத்து சென்றார்.

 

மறந்தேன் என மறைத்தது!

இன்று மறக்காமல் கண்ணெதிரே வந்தது!

மறவாது மறைத்த அந்த மறைபொருள் நீயா அல்லது எந்தன் கனவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!