Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedகாற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK-11-1

“வள்ளி டார்லிங் எங்க இருக்க” என்று சொல்லி தனது ஸ்கூல் பேக் உடன் உள்ளே நுழைந்தான் விசாகன்.

“டேய் உள்ள நுழையும்போதே கத்திகிட்டே தான் வருவியா டா” என அவனை அதட்டி கொண்டு வந்தார் பார்வதி.

“ ஐய் பாரு டார்லிங் எப்போ வந்தீங்க நீங்க வந்தது யாருமே என்கிட்ட சொல்லல” என்று சொல்லி அவரின் கையை பிடித்து இரண்டு சுத்து சுற்றி விட்டான் விசாகன்.



Advertisement

“டேய் தல சுத்துது கடவுளே எப்படியா பண்ணுவ ராஸ்கல்”என்று சொல்லி அவன் தோளில் செல்லமாக அடித்தார்.

“என்ன பாரு இதுக்கே இப்படி சொல்லுற. ஆக்சுவலி நான் உன்ன தூக்கி சுத்தலாம் நெனச்சேன். பட் உன் வெயிட் என் பிஞ்சி கையாள தாங்க முடியாது. அதான் அந்த ஐடியா அப்படியே தூங்கிப் போட்டுட்டேன்”

“சரியான வாலு டா நீ”என்று அவன் காதை திருகினார்.

Advertisement

“ஆ ஆ வலிக்குது பாரு வி..விடு”என்று அவரிடம் இருந்து தனது காதை மீட்டவன். “என்ன பாரு நீ மட்டும் தான் வந்தியா உன் பாய் பிரண்ட் எங்க. மாம்ஸ் எங்க. அதோட வீட்டுல என்ன யாரையும் காணும்”

Advertisement

“அதுவாடா எல்லாரும் அமிழ்தினிக்கு உடம்பு சரியில்லனு அங்க போய் இருக்காங்க. உன் தாத்தா உள்ள படுத்து தூங்குறாங்க. உன் மாமா ஏதோ வேலையா வெளி ஊர் போய் இருக்கான்”

“ஓ அக்காவுக்கு இப்ப எப்படி இருக்கு. அப்ப வீட்டுல நம்ம மட்டும் தான் இருக்கோமா”

“இப்ப அவ நல்லா இருக்காளாம். வீட்டுல நம்மள தவற ஒரு ஆள் இருக்கு யாருனு நீ கண்டுபிடி பாப்போம்”

Advertisement

“யார் பாரு தாத்தா வா”

“இல்ல டா உங்க அக்கா தான்”

“அவளுக்கு தான் உடம்பு சரியில்லைனு சொன்னிங்களே அவ ஏன் இங்க’ என்றவன் பார்வதி பாட்டியை பார்த்து, ‘இனி அக்கா வா”என்றான் சந்தேகமாக

“உன் இனி அக்காவே தான் அவ ரூம்ல இருக்கா போய் பாரு”

“உண்மையாவா பாட்டி அக்கா வந்து இருக்கா”என்றான் அப்போதும் சந்தேகமாக

“உண்மையா தான் டா நீ போய் பாரு நான் உங்களுக்கு குடிக்க எடுத்துட்டு வரேன்”என்று சொல்லி சமையறையை நோக்கி சென்றார்.

அவன் அப்போதும் சந்தேகமாக அவளின் அறைக்கு சென்றான்.

உள்ளே இருந்த இனியாவை பார்த்த பிறகு தான், “அக்கா”

என கூவிக்கொண்டு வந்து அவளை கட்டிக்கொண்டான்.

அவளும் “டேய் விசா”என்று அணைத்து கொள்ள

 “மிஸ் யூ கா. ஏன் இவ்வளவு நாள் இங்க வரல.நீயும் இல்ல. அமி அக்காவும் இல்ல நீங்க இரண்டு பேரும் இல்லாம நான் லோன்லியா இருக்குற மாதிரி பீல் பண்ணுனேன் தெரியுமா”என்றான் கலங்கும் குரலில்

“டேய் விசா என்ன டா அழறியா. இங்க பாருடா நிமிந்து என்ன பாரு”என தன்னிலிருந்து அவனை பிரித்து அவன் முகத்தை பார்க்க முயற்சித்தாள்.

ஆனால் அவளுக்கு முகத்தை காட்டாமல், “நான் ஒன்னும் அழல. உங்களுக்குக்காக யாராவது கவலை படுவாங்களா. நீங்க இல்லாம நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். நீங்க யாரும் எனக்கு வேண்டாம் என் வள்ளி டார்லிங் இருக்கு எனக்கு”என்றான் கரகரப்பான குரலில் ரோஷமாக

“ பாருடா எங்க குட்டி தம்பிக்கு உள்ள ரோஷத்தை. சரி டா நீ தான் என்னை தேடவே இல்லையே. நான் இப்பவே கிளம்புறேன் டா”என்று சொல்லி பொய்யாய் கிளம்புவது போல தனது ட்ராவல் பேக்கை கையில் எடுத்தாள்.

உடனே அவள் கையில் இருந்த பேக்கை பிடுங்கி அதன் இடத்தில் வைத்துவிட்டு அவளை பெட்டில் அமர வைத்து விட்டு அவள் கால்களுக்கு அடியில் அமர்ந்து மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்.

சிரிப்புடன் அவன் தலையை கோதி விட தொடங்கினாள்.

“இனிமே என்னை விட்டுட்டு போகாத அப்படி போறதா இருந்தா கண்டிப்பா தினமும் எனக்கு கால் பண்ணனும் சரியா”என்றான்.

“சரிடா அமுல் பேபி, நான் எங்க போனாலும் கண்டிப்பா உனக்கு கால் பண்றேன்”என்று சொல்லி அவன் மூக்கைப் பிடித்து ஆட்டினாள்.

“அக்காவும், தம்பியும் பண்ணுறீங்க. காபி சாப்பிட வாங்க”என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு சாப்பிட காபியும், வாழை பூ வடையும் கொண்டு வந்தார் பார்வதி.

“ஐய் எனக்கு ரொம்ப பிடிச்ச வாழைப்பூ வடை பாரு டார்லிங் சூப்பர். உன் வாழைப்பூ வடைக்கு என் நாக்கு அடிமை தெரியுமா” என்று சொல்லி எழுந்துவந்து அவர் கையில் இருந்த ட்ரேயை வாங்கினான்.

“டேய் கண்ணா பார்த்து சூடா இருக்கு”என்றவர் ‘சரி நீங்க சாப்பிடுங்க நான் தாத்தாவுக்கு கொடுத்துட்டு வரேன்” என்று சொல்லி சென்றார்.

 “அக்கா காபி வித் வடை அண்ட் ஒரு லவ் ஸ்டோரி சோ டெல் மீ யுவர் லவ் ஸ்டோரி. சொல்லுங்க சொல்லுங்க அந்த சம்பவம் எப்படி நடந்துச்சி”

“அதுதான் என் லைப்ல நான் பண்ணுன பெரிய தப்பு போடா நீ வேற அத நினைச்சி பார்க்கக் கூட

நான் விரும்புல”

“அட சொல்லுக்கா எனக்கு டைம் பாஸ் ஆக வேண்டாமா”

“டேய் உனக்கு டைம் பாஸ்ஸாச நான் என் லவ் ஸ்டோரிய சொல்லனுமா எடு அந்த கம்ப”

“அக்கா நோ வயலன்ஸ் இப்ப என்ன நீ சொல்லமாட்ட அவ்வளவுதான ஓகோ நோ ப்ராப்ளம். எனக்கு எதுக்கு அந்த வெட்டி கதை”

“டேய் உன்ன இன்னைக்கு கொல்லபோறேன் டா”என அவனை அடிக்க வர அவள் கையில் மாட்டாமல் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டான்.

“டேய் குட்டி சாத்தான் நீ வெளிய வருவ இல்ல அப்ப இருக்கு டா உனக்கு”என மூடிய அறையின் முன்பு கத்திவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்தாள் இனியா.

படுக்கையில் அமர்ந்து தனது லேப்டாப் ஓபன் செய்ய அதில் இருந்த பழைய புகைபடங்களை பார்த்ததும் மனது மூன்றுவருடத்திற்கு முன்பு நடந்தது நினைவில் வந்தது.

“அம்மா ஏன் அழுற நான் என்ன கல்யாணமாகியா போறேன் படிக்க தான போறேன் அதுவும் நம்ம பாட்டி வீட்டுக்குதான போறேன். இதுக்கு ஏன் ஃபீல் பண்ணுற.இப்ப போய்டு லீவ் விட்ட உடனே வர போறேன் இதுக்கு ஏன் அழுவுற”என்று தனது தாய் சிவகாமியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் இனியா.

“இந்த கோயம்புத்தூர்ல இல்லாத காலேஜா அங்க இருக்கு நீ பேச்சுலர் டிகிரி இங்க தான பண்ணுன மாஸ்டருக்கு ஏன் சென்னைக்கு போகனும் பிடிவாதம் பிடிச்சி சேர்ந்த. போ நீ எப்படியும் என்ன பார்க்க வரமாட்ட எனக்கு தெரியும்” என சிறு குழந்தை போல அழ தொடங்கினார் சிவகாமி.

“ அம்மா ஏம்மா சின்ன குழந்தை மாதிரி பிடிவாதம் பண்ற ரெண்டு வருஷம் இப்படிங்கிறதுக்குள்ள போயிடும். அதுக்குள்ள நான் டிகிரி முடிச்சுட்டு வந்துடுவேன் அதுவரைக்கும் நீ நல்ல பிள்ளையா வீட்டுல இருக்கனும் சரியா அழக்கூடாது” என சிறு குழந்தைக்கு சொல்வது போல தனது அம்மாவை சமாதானம் செய்தாள் இனியா.

“ அது எனக்கு புரியுது இருந்தாலும் ரெண்டு வருஷம் உன்ன பாக்காம இருக்கணுமே அது எனக்கு கஷ்டம் இல்லையா” என்று இன்னும்சமாதானம் ஆகாமல் கண்ணை கசக்கி கொண்டு இருந்தார் சிவகாமி.

“ ஐயோ சிவாம்மா என்ன நீங்க அதான் நான் உங்க கூடவே இருக்கேன் இல்ல நான் உங்கள விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன் சரியா. இப்படி கண்ண கசக்கிட்டே நீங்க இருந்தீங்கன்னா இனியா எப்படி அங்க போய் நிம்மதியா படிக்க முடியும். சிரிச்சுகிட்டே அவளுக்கு பாய் சொல்லுங்க பாப்போம்” என அவரை சமாதானம் செய்தாள் ஆனந்த அமிழ்தினி. இவளும் இனியாவும் ஒரே வருடத்தில் மூன்று மாத இடைவெளியில் பிறந்தவர்கள். எப்போதும் இருவரும் ஒன்றாக தான் இருப்பார்கள். பிளஸ் டூ வரை இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர். கல்லூரிக்கு செல்லும்போது தான் இருவருக்கும் பிரிவு வந்தது. இனியா இன்ஜினியரிங் தேர்வு செய்ய அமிழ்தினியோ ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் தேர்வு செய்து தற்போது அதே ஊரில் பி எட் முடித்துவிட்டு ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறாள்.

“ஆமா சிவாம்மா நானும் உங்க கூடவே இருக்கேன் இல்ல. நம்ம எல்லாரும் சேர்ந்து இவள கழட்டி விட்டுட்டு ஃபன் பண்ணலாம் சரியா” என்றான் விசாகன்

“ அப்படியா சொல்ற இருந்தாலும்” என இழுக்க

“ என்ன சிவாம்மா எங்க கூட இருக்க மாட்டீங்களா” என சோகமாக இருவரும் சொல்ல

“ அப்படி இல்லடா செல்லங்களா என் கூட நீங்க மூணு பேரும் இருந்திங்கனா நான் சந்தோஷமா இருப்பேன். சரி பரவால்ல போறேன்னு சொல்றா போகட்டும் நம்ம மூணு பேரும் சேர்ந்து இனிமே ஜாலியா இருப்போம் சரியா” என்றார் தெளிந்த முகமாக

“ ஓ எத்தனை நாள் பிளான் இது என்ன கழட்டிவிட்டு நீங்க மட்டும் ஜாலியா இருக்கலாம் பிளான் பண்றீங்களா சரி ஓகே இருந்துக்குங்க. நான் போயிட்டு லீவுக்கு கண்டிப்பா வருவேன் அப்ப பார்த்துக்கொள்கிறேன் உங்களை” என அவர்களை தழுவி அணைத்துவிட்டு பாய் சொல்லி அவளுக்காக காத்திருந்த வண்டியில் ஏறி விமான நிலையத்திற்கு சென்றாள்.

 அவள் சென்ற பிளைட் சென்னை ஏர்போர்ட்டில் போய் இறங்க இவள் செக்கிங் முடித்துவிட்டு வெளியே வர அங்கே அவளுக்காக காத்திருந்த இளமாறனை பார்த்து “மாமா” என கூவிக்கொண்டு சென்று தோளோடு அணைத்துக் கொண்டாள்.

பாசமாக வந்து தழுவிய தனது அக்கா மகளை பார்த்து புன்னகையுடன் அவளை அணைத்துவிட்டு, “ஸ்பீடா ஓடி வராத சொன்னா கேட்க மாட்டியா டா. என்ன பழக்கம் இனியா இது நீ இன்னும் சின்ன குழந்தையா” என்றான் கண்டிப்பாக.

“மாமா வந்த உடனே ஆரம்பிக்காதீங்க. என்னோட காலேஜ்ல தான் நீங்கள் ப்ரோபோசர் இங்கே என்னோட மாமா அதை மட்டும் உங்க மைண்ட்ல ஸ்டோர் பண்ணிக்கங்க ஓகே” என்றாள் மிரட்டலாக.

“ சரிங்க மேடம் நீங்க சொன்னா சரிதான்” என பணிவாக தனது உடலை இடுப்பு வரை வளைத்து சொன்னான் மாறன்.

“அது இந்த இனியாக்கிட்ட இப்படி தான் இருக்கணும் வால்தானம் எதாவது பண்ணிங்க உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன் ஓகே”

“வாலு ரொம்ப வாய் கூடி போச்சு”என்று அவள் காதை திருகினான்.

“ஆ.. ஆ.. விடு…. விடு.. மாமா” என்று அலறினாள் இனியா.

“இந்த சேட்டை எல்லாம் வீட்ல வச்சுக்கோ காலேஜுக்கு வந்தா நான் உன் ப்ரொபோசர் அதை மட்டும் மைண்ட்ல வச்சுக்கோ சரியா” என்றான் மிரட்டலாக சொல்லி அவள் காதில் இருந்து கையை எடுத்தான்.

“ஆ வலிக்குது நீ சொன்னா சரி மாமா. காலேஜுக்கு வந்தா உன்னை எனக்கு யாருன்னு தெரியாது ஓகேவா”

“ஓகே தான் சரி வா நம்ம காருக்கு போகலாம் உனக்காக அம்மாவும், அப்பாவும் வீட்ல வெயிட் பண்றாங்க” என்று சொல்லி முன்னே நடந்தான்.

 அவனை பின் தொடர்ந்து வந்தவள் அந்த காபி ஷாப் பார்த்தவுடன் “மாமா” என அழைத்து, “ லைட்டா பசிக்குது மாமா ஒரு டீ மட்டும் குடிச்சிட்டு போவோம் ப்ளீஸ் ப்ளீஸ்” என கெஞ்சினாள்.

 அவன் கோபமாக அவளின் முகத்தை பார்க்க பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் இனியா.

“ ட்ராமா குயின் முகத்தை அப்படி வச்சுக்காத வா வாங்கி தரேன்” என அந்த காபி ஷாப் உள்ள அழைத்து சென்று ஒரு காபி வாங்கி கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றான் இளமாறன்.

 

காரில் இருந்து இறங்கியவுடன், “தாத்தா பாட்டி” என கத்திக்கொண்டு உள்ளே ஓடினாள் இனியா.

“எவ்வளவு தடவை சொன்னாலும் நீ திருந்தவே மாட்டியா” என அவள் பின்னே திட்டிக் கொண்டு அவளின் டிராவல் பேக் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

 அதற்குள் இங்கே தனது பாட்டி தாத்தாவிடம் நலம் விசாரித்து விட்டு அவள் பாட்டி செய்து வைத்திருந்த பூரியை திங்க தொடங்கி விட்டாள்.

“ எப்ப பாரு சோறு சோறு சோறு. சோறு தவிர உனக்கு என்ன தாண்டி தெரியும். அது எப்படி தின்னுகிட்டே இருக்க ஆனா உடம்பு மட்டும் வைக்கவே மாட்டேங்குது” என திட்டிக்கொண்டு அவள் எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தான் இளமாறன்.

“ ஏன் டா குட்டிமாவ திட்டிக்கிட்டே இருக்க. நீ சாப்பிடு டா செல்லம் அவன் அப்படித்தான். அவனும் சாப்பிட மாட்டான் சாப்பிடுறவங்களையும் சாப்பிட விட மாட்டான். பாப்போம் இவனுக்கு வரப்போற பொண்ணு எப்படி வந்து இவன படுத்த போறான்னு” என்றார் பார்வதி.

“ ஆமாம் பாட்டி. அத்தை வந்த உடனே இந்த மாமாவ ட்ரில் எடுக்க சொல்லனும்”என்று மாறனுக்கு பழிப்புக்காட்டி தட்டில் இருந்தவற்றை சாப்பிட தொடங்கினாள் இனியா .

 “ஆமா பாட்டியும் பேத்தியும் உட்கார்ந்து பாருங்க. என்னோட பொண்டாட்டி ஒன்னும் உங்க ரெண்டு பேர் மாதிரி வாயாடி இருக்க மாட்டா” என்றான் எதையோ யோசித்துக் கொண்டு மாறன்.

“ என்ன மாமா அத்தைய ரெடி பண்ணி வச்சிருக்கியா எனக்கு தெரியாம சொல்லு” என்றாள் சந்தேகமாக

“ ஏய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல உன் வாய் வச்சுட்டு சும்மா இரு. போற போக்குல ஏதாவது கொளுத்தி போட்டுட்டு போய்டாத உங்க பாட்டிகிட்ட என்னால பதில் சொல்ல முடியாது”

 “ ஓ சொல்ல மாட்டேன் இரு நான் கண்டுபிடிக்கேன். அது யாருன்னு எனக்கு தெரியட்டும் அதுக்கப்புறம் தான் இருக்கு மாமா உனக்கு”

“ ரொம்ப வாயாடாத போய் சாப்பிட்டு படுத்து ரெஸ்ட் எடு போ”

“ம் உன்னோட முகமே சரியில்ல பிடிக்கிறேன் கண்டுபிடிக்கிறேன் கூடிய சீக்கிரம்” என சொல்லி அவள் தங்குவதற்காக உள்ள அறைக்கு சென்றாள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!