Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandaenadi un Kaathalai – 10

KUK – 10

டாக்டர் வந்து பரிசோதித்து பார்த்த பின்பு சாதாரண மூச்சுதிணறல்தான் என்றவர் ஒரு வாரத்திற்கு மருந்து மாத்திரை எழுதி கொடுத்து சென்றுவிட்டார்.

“ஏய் தேனு நீ கொடுத்த பில்டப்புல வீடே கதிகலங்கி போயிட்டு” படுத்து இருந்த பாட்டியின் கால் அருகில் தலையில் கை வைத்து உட்கார்ந்து இருந்த தேனுவை பார்த்து சொன்னான் நவீன்.

அவளுக்கே தான் கொஞ்சம் ஓவரா சத்தம் போட்டோமோ என்று இருந்தது. “இல்லைங்க ஐயா நான் பாட்டிய இந்த மாதிரி பார்த்ததுயில்ல…. கண்ணு சொருகி போய் இருந்தாங்க அதான் பயத்துல பதறிட்டேன்” என்றாள்.



Advertisement

பயந்து இருந்தவளை எழுப்பி “போய் கிட்சன் வேலையை பார்… இனி பாட்டிக்கு  நானே எல்லாம் கொண்டு வந்து கொடுக்கிறேன்” அங்கு இருந்து தேனுவை அனுப்பினாள் கங்கா.

சூர்யா புறம்  திரும்பியவள் “சூர்யா நீயும், அப்பாவும் காலை பூஜைக்கு போய்ட்டு வந்து இருங்க… ராத்திரிக்கு நாங்க எல்லாரும் வரோம்”

அவனுக்கு கோவிலுக்கு போக விருப்பமில்லை என்பது அவன் முகத்திலே தெரிந்தது. அதை கண்டு கொண்ட கங்கா “சூர்யா பூஜைக்கு பாட்டி தான் வரனும் அவங்க இப்படி இருக்கிறதுனால பதிலுக்கு நீயும், அப்பாவும் போயிட்டு வாங்க. பாட்டி அம்மனுக்கு சாத்த புடவையும், நகையும் எடுத்து வச்சிருக்காங்க  நான் எடுத்துட்டு வரேன்” அவன்  அடுத்த பேசும் முன்பு அங்கு இருந்து நகர்ந்து விட்டார்.

Advertisement

 

Advertisement

கோவில் பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களை ஊர் ஜனங்கள் மரியாதை மழையில் நனைத்துவிட்டனர்.

“ச்ச் என்னப்பா இது.. வயசுல எனக்கு பெரியவுங்க கூட என்னை ஐயானு கூப்பிட்றாங்க. எனக்கு ஒரே கூச்சமா இருக்கு.” அவனுக்கு அப்படி அழைப்பது பிடிக்கவில்லை என்பதை அவன் முகத்திலே காட்டினான்.

“அது உனக்கு கிடைக்கிற மரியாதை இல்லை சூர்யா. உங்க தாத்தா சொந்தம் நாம்… அதனால் நெல்லுக்கு போகிற  நீர் புல்லுக்கு பாயிற மாதிரி நமக்கும் மரியாதை கிடைக்கு”

Advertisement

“ஓகே டாடி எனக்கு புரியுது. பட் இந்த ஐயா-ங்கற அடைமொழி இல்லாம கூப்பிடலாம். கேட்டா என்னோட ஃபேஸ் தாத்தா மாதிரி இருக்குனு சொல்றாங்க. இவங்க வேலை பார்த்தாங்க அதனால தாத்தா சம்பளம் கொடுத்தாங்க இதுக்கு போய் பெரிய கடவுள் மாதிரி தாத்தாவ கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. சரி அந்த காலம் அப்படியே இருந்துட்டாங்க… இந்த காலத்து பிள்ளைங்ககிட்டயும் அப்படியே சொல்லி வளக்குறாங்க அப்படியே அடிமை மாதிரி” தேனு அன்று சொன்னதை நினைவு கூர்ந்தான்.

“அது அப்படி இல்லை சூர்யா. அவங்களோட விஸ்வாஸ்த்தை ஒரு எல்லையோடு நிறுத்திக்க விரும்பல அதான் அது தலைமுறை தலைமுறையா தொடருது. இதுல நாம சொல்லி ஒன்னும் செய்ய முடியாது. ஒன்னு அவங்களா புரிஞ்சிக்கனும் இல்லைனா அவங்களோட அடுத்த தலைமுறை பிள்ளைங்க சொல்லி புரிய வைக்கனும்.” தந்தை சொல்வதையும் ஒப்புக்கொண்டான்.

அன்று இரவு எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி தயாராகி வெளிவந்தனர். பெரியவர்கள் எல்லாம் ஒரு காரிலும், சிறியவர்கள் ஒரு காரிலும் சென்றனர்….. விக்கி, அனிக்கா மட்டும் தனியாக ஒரு காரில் சென்றனர்.

சூர்யா ஓட்டிச்சென்ற காரில்தான் மலரும் இருந்தாள். நவீன் முன்னாடி அமர்ந்து இருந்தான். சூர்யாவிற்கு ஏதோ மனம் சஞ்சலமாகவே இருந்தது, காரின் கண்ணாடி வழியாக மலரை பார்த்தவன் மனதில் கொஞ்சம் அமைதி ஏற்பட்டது.

ஏதோ ஒன்று குறுகுறுக்க ஜன்னலில் இருந்து பார்வையை  எடுத்து நிமிர்ந்து பார்த்தவள் உதடு தானாக மலர்ந்தது, தான் சுவாசிக்கும் காற்றில் அவனது வாசத்தை மட்டும் தனியாக நுகர்ந்தது அவளது நுரையீரல்.

உடனே பார்வையை ஜன்னல் புறம் திருப்பினாள். அவனுக்கோ அவள் தலை சூடிய மல்லிகை மணம் ஒருவகை கிறக்கத்தை உண்டு பண்ணியது. அடர்ந்த பச்சை வண்ணத்தில் தங்க ஜரிகை கொண்ட புடவை உடுத்தி இருந்தாள்.

அதே வண்ணத்தில் கண்ணாடி வளையல், காதில் ஜிமிக்கி, கலுத்தில் பச்சை அட்டிகை, நீளமான் சங்கிலி, லேசான கண்மை அந்த பூனை கண்ணுக்கு, இது எல்லாத்திருக்கும் மேலாக நட்சத்திரம் போல் மின்னும் மூக்குத்தி. மொத்தமாக அவன் அவனாக இல்லை. பார்வையை அவள்புறம் இருந்து அவனால் திருப்பவே முடியவில்லை.

கோவில் வந்ததும் மேள சத்தம், வில்லு சத்தம், ஜனங்களின் சந்தோக்ஷ குரல் அந்த இடம் முழுவதும் ஒருவித பாஸிட்டிவ் எனர்ஜி பரவி இருந்தது. காரில் இருந்து இறங்கி கூட்டத்தில் கலந்து  விட கங்கா, சுஜா இருவருக்கும் இடையில் நடந்து வந்து இருந்தாள் மலர்.

 

“மலர் தாம்புள தட்டு கார் டிக்கில இருக்கு எடுத்துட்டு வர மருந்துட்டேன். போய் எடுத்துட்டு சூர்யா கூட வந்துரு அவன் கார் பக்கம்தான்  நிக்கிறான்” கங்கா சொன்னதும் வேறு வழி இல்லாமல் காரை நோக்கி சென்றாள்.

இங்கு வந்ததில் இருந்து மனம் ஒருமாதிரியாகவே இருக்க கைகளை மடக்கி சீட்டில் சாய்ந்து கண் மூடி அமர்ந்து இருந்தான் சூர்யா.

காரின் அருகில் வரவர சஞ்சலத்துடன் இருந்தவள் அவனின் அந்த கண்மூடி இருந்த தோற்றம் கண்டு அப்படியே நின்று விட்டாள். அவள் புடவைக்கு இணையாக ஆலிவ் கிரின் சர்ட் போட்டு இருந்தான்.

வேக்ஷ்டி உடுத்தி இருந்தாள் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆனால் கங்கா எவ்வளவோ சொல்லியும் வேக்ஷ்டி உடுத்த மாட்டேனு சொல்லிட்டான். காலையில் தன்னுடன் சாப்பிடும் பொழுது சிறுபிள்ளை போல் நடந்து கொண்டவன் பாட்டிக்கு உடம்பு முடியலைனு தேனு வந்து சொன்னதும் பரபரப்பாக இயங்கி அடுத்த அரைமணி  நேரத்தில் இந்த குக்கிராமத்திற்கு மருத்துவரை வர வைத்து விட்டான் இந்த கள்ளன்.

“என்ன உன் அத்தான் பார்க்கிற மாதிரி அழகா இருக்கேனா” கண்மூடி அமர்ந்து இருந்த சிலைக்கு உயிர் வந்தது போல் வாயை மட்டும் அசைத்தான்.

“ஹ்ம்ம் ஏதோ இருக்கிங்க… இருந்தாலும் என் அத்தை பெத்த பையன் அழகு குறைச்சலுனு சொல்ல மனசு வரல”

காரின் கதவு கண்ணாடி பாதி இறங்கி இருக்க அதை முழுதாக இறக்கியவன் அவளது கையை பிடித்து நொடிக்குள் தன் பக்கம் இழுத்து இருந்தான்.

இதை எதிர்பார்க்காத மலருக்கு விட்டு இருந்த பயம் மறுபடி வந்து ஒட்டி கொண்டது. அவர்களை சுற்றி சுற்றி கார்கள் நின்று இருந்தததால் இவர்கள் இருப்பது சற்று மறைவாகவே இருந்தது.

“ஆனால், என் மாமே பொண்ணு  நான்  முன்ன பார்த்தத விட இப்போ எனக்கு ரொம்ப அழகா தெரியுதா. அதுவும் இந்த மூக்குத்தி என்னை அப்படியே கொன்னு எடுக்குது. முன்னாடி இருந்த அந்த பயம் இல்லை சற்று தெளிவான பேச்சு. ஹ்ம்ம் உன் படிப்பு தந்த தையிரியம் அப்படிதான” அந்த நெருக்கம் அவளை ஏதோ செய்தது.

“நான் வந்து நின்னது உங்களுக்கு தெரியுமா??! கேட்டவளது சூடிய மல்லி பூவின் மீது அவன் பார்வை சென்றது. அதை அவளும் புரிந்து கொண்டாள்.

“அது மட்டும் இல்லை….. உன்னோட லேவண்டர் பெர்ஃபுயூம் வாசனைதான் முதலில் என்  நாசி உணர்ந்த்து” என்றான்.

கையை அவனிடம் இருந்து இழுத்தவள் “டிக்கியில தாம்புள தட்டு இருக்காம். அத்தை எடுத்து தர சொன்னாங்க. நீங்களும் கோவிலுக்கு கண்டிப்பா வரனுமா” கோர்வையாக அடுக்கினாள்.

“அமெரிக்கா போயிட்டு வந்ததும் கம்பெனிக்கு போக விடாமா திருவிழானு கூட்டிட்டு வந்து சாமியார் மாதிரி கோவில சுத்த வைக்கிறிங்க. நீ வேணா உள்ள போ என்னால வர முடியாது. என்னை உள்ள வரவைக்கதான் என்ன பெத்த தெய்வம் இந்த ஐடியா பண்ணி இருக்கு” தாம்புளத்தை அவள் கையில் கொடுத்தான்.

“ஏன் அத்தான் வெளிநாடு போய் படிச்சிட்டு வந்ததால நாத்திகனா மாறிட்டிங்களோ”

“உன் அத்தான் எப்போ சாமியே கிடையாதுனு பேசி பார்த்து இருக்க. எல்லாதுக்கு ஒரு லிமிட் இருக்கு. இங்க வந்ததுல இருந்து கோவிலுக்கு அதிகமாகவே போய் சாமி என் முகத்தை மறக்க முடியாதபடி அவர் கண்ணுல என்னை காட்டிட்டு வந்துட்டேன்.” என்றான்.

“ப்ளீஸ் அத்தான். இன்னைக்கு நைட்டோட இரவு திருவிழா முடிஞ்சிரும். நீங்க என்கூட உள்ள வந்து சாமி கும்மிட்டு வெளிய வந்து உங்க மாமன் பொண்ணுக்கு இந்த கடை விதியில ஏதாவது வாங்கி தாங்க” எப்படியாவது அவனை உள்ளே அழைத்து சென்றுவிடனும் என்று பேசினாள்.

அவளது கெஞ்சல் அவனை சற்று கரைக்காதான் செய்தது. “அப்படியே உங்க அத்தை பிடிவாதம்.” இருவரும் ஒன்றாக கோவில் நோக்கி சென்றனர்.

தூரத்தில் சின்ன கைகலப்பு நடக்க “இதுலா திருவிழால சகஜம்தான் நீ வெறிச்சி பார்க்காம வா” கை பிடித்து இழுத்தான்.

‘எவ்வளவு இயல்பா கையை பிடிக்கான். ரொம்ப இடம் கொடுக்கேனோ’ தன் எண்ணத்தில் உழன்று கொண்டு இருந்தவள் முன்பு ஒருவன் மிக நெருக்கமாக மோத வந்ததை அவள் கவனிக்கவில்லை.

“ஏய்” என்ற சூர்யாவின் கர்ஜனையில் பயந்துவிட்டாள். தன் தோள் இருபுறத்தையும் பற்றி தன்னோடு அணைத்து வைத்து இருந்தான்.

“என்னடா குடிச்சி இருக்கியா. முன்னாடி பொண்ணுங்க வரதுகூட உன் கண்ணுல படலையோ” சற்று பயங்கரமாகவே மிரட்டினான்.

அப்பொழுதுதான் மலர் தன் முன்னே நின்றவனை கவனித்தாள். குடிச்சி இருப்பான் போல் நாத்தம் குடலை புரட்டியது, எண்ணை தேய்க்காத சுருட்டை முடி, கண்ணை கூசும் மஞ்சள் வண்ண சட்டை அவனை பார்க்கவே அவளுக்கு அருவறுப்பாக இருந்தது.

தன் அத்தானின் கை பிடித்து “அத்தான் அவனை பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு… ப்ளீஸ் உள்ளே போவோமே” முகத்தை அக்ஷ்டகோணலாக வைத்து இருந்தாள்.

“உன்னை சொல்லனும்… நான் பிடிக்கலனா இவன் மேல மோதி இருப்ப.. கண்ணை திறந்து வச்சிட்டே வரமாட்டியோ. கனவுலே  அப்படியே மிதந்து வருவ போல” அவளுக்கும் நாலு டோஸ் விழுந்தது.

அது அவளுக்கு பழகிய ஒன்று என்பதால் அதை பெரிதாக அவள் கண்டு கொள்ளவில்லை. “அத்தான் என்னால ஸ்மெல் தாங்க முடியல. இன்னும் கொஞ்ச  நேரம் நின்னா கண்டிப்பா வாமிட் எடுத்துருவேன்” மூக்கை கையால் மூடி மறைத்து இருந்தாள்.

“முன்னாடி போ” சலனமின்றி அவளோடு நடந்தான். ஆனால் மலர் மட்டும் ஏதோ யோசனையோடு வந்தாள். மூளையில் மின்னல்வெட்ட “அத்தான் நேற்று நைட்டு நம்ம வீட்டுக்கு வந்தவனும் இதே மஞ்சள் கலர் டிரெஸ்தான் போட்டு இருந்தான்” என்றாள்.

“இருட்டுல உனக்கு எதுவும் தெரியலனு சொன்ன”

“ம்ச்ச் அத்தான் இந்த கலர் ட்ரெஸ் எந்த இருட்டிலும் பளிச்சின்னு தெரியும். அதுவும்  நேத்து  நான் பயந்து இருந்ததால எனக்கு இது நியாபகத்துக்கு வரல” எப்படியாவது அவன் நம்பிவிட வேண்டும்னு சொன்னாள்.

சரியாக அந்த நேரத்தில் அவனுக்கு போன் வர அதை எடுத்தவன் அதில் கஸ்டமர் கேர் என்று காட்டியது.

“ஒரு முக்கியமான் போன் மலர். நீ பூஜை தட்டை உள்ளே கொடுத்துட்டு வா. நான் அவனை பிடிச்சி வைக்கிறேன்” என்றவன் அங்கு இருந்து நகர்ந்தான்.

அவளும் வேகமாக கோவிலுக்கு உள்ளே சென்றாள். சுற்றி சுற்றி பார்த்தவனுக்கு அந்த மஞ்சள் சட்டைக்காரன் கண்ணிலே படல. தொலைவில் நவீன்  ஒருவனிடம் சண்டை போட்டு இருப்பதை பார்த்தவன் அங்கு சென்றான்.

“மச்சான் என்ன இது” சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்து கேட்டான்.

அவனுக்கு முன்னாடி ஒருத்தனின் சட்டையை பிடித்து நின்ற நவீன் “இந்த ரஸ்கல்ஸ் குடிச்சிட்டு வந்து பொண்ணுங்க மேல விழுந்து அதை நல்லா எஞ்சாய் பண்றாங்க சூர்யா. அதுவும் இப்போ ஒரு சின்ன பொண்ணு மேல விழுந்துட்டு தெரியாம விழுந்துட்டோம் அப்படின்னு சொல்றாங்க இவனும், இந்தா கீழே விழுந்துகிடக்குதுல ஒரு நாதாரி அவனும் இவன் கூட சேர்ந்தவன் தான்” அதே மஞ்சள் சட்டை காரன் போதையில் மயங்கி கிடந்தான்.

“இவனுங்க இந்த ஊரு ஆளுங்க இல்லை ஐயா. இதுக்குனே திருவிழாக்கு இந்த மாதிரி ஜென்மங்க குடிச்சிட்டு வருதுங்க” பெரியவர் ஒருவர் சொல்ல அதை ஆமோதிதவாறு பேச்சுடன் அந்த கூட்டம் கலைந்து சென்றது.

தெருவிதி கடை ஒன்றில் சோடா வாங்கிட்டு வந்த சூர்யா கீழே மயங்கி இருந்தவன்  முகத்தில் தெளித்தான். “என்னடா பண்ற” கோபத்தில் கேட்ட நண்பனிடம் “ நவீன் இவன் தான் நேத்து நம்ம வீட்டுக்கு வந்து இருக்கான்” என்றவன் மலர் சொன்னதை அவனிடம் சொன்னான்.

பூஜை தட்டை கொடுத்துவிட்டு சாமிகும்பிட்டு விட்டு உடனே வெளியே ஓடி வந்தாள் மலர்.

“ம்ச்ச் அத்தானை எங்கே??” சுற்றி பார்வையை அலசினாள்.

“யாரை எதிர் பார்த்துட்டு இருக்க மலர்” அனிக்கா அவள் அருகில் வந்து நின்றாள்.

அவளுடன் பேச பிடிக்கவில்லை என்றாலும் வழிய வந்து பேசுபவளை அலட்சியம் செய்ய முடியவில்லை மலரால். “அத்தானை தேடிட்டு இருக்கேன்” அந்த பதில் எதிரி நிற்பவளை எந்தவிதமாக தாக்கும் என்பதை அறியாமல் சொன்னாள்.

‘இன்னைக்கு உனக்கு நடக்க போற கூத்தை உன் அத்தாவந்து காப்பாத்துத்தானா என்று பார்ப்போம்’ மனதுக்குள் கருவியவள் சிரித்த முகத்துடன் “மலர் பாட்டி மட்டும் வீட்ல தனியா இருப்பாங்க. நான் வீட்டுக்கு போறேன் என்கூட துணைக்கு வீடு வரை வரியா?” என்று கேட்டாள்.

‘இவளுக்கு பாட்டி மீது அப்படி ஒன்னும் அக்கறை கிடையாதே.’ நம்பாத பார்வையுடன் அனிக்காவை பார்த்தாள்.

‘அப்படியே அவள் அத்தான் மாதிரி. குடும்பமே நல்லா புத்திசாலியா பிறந்து தொலைச்சி இருக்கு’ பல்லைகடித்தாள்.

“அது…. நான் இந்த மாதிரி கோவில் ஃபங்க்க்ஷன் எதுவும் போனது இல்லை . இந்த சத்தம் என் காது ஜவ்வை கிழிச்சிரும் போல அதான்  வீட்டுக்கு போனும்னு சொன்னேன்” ஒருவழியா அவள் நம்பும்படி காரணத்தை சொன்னாள்.

அனிக்கா கூட போக விருப்பமில்லை என்றாலும் அவளை இந்த இருட்டில் தனியாக அனுப்பவும் மலருக்கு மனம் வரவில்லை. என்னமோ தான் பெரிய தைரியசாலி மாதிரி அனிக்கா கூட சென்றாள்.

கோவிலுக்கும் அவர்கள் வீட்டுக்கும் இரண்டு தெருதான் இடைவெளி. வீட்டு வாயில் வரை வந்தவள் “ நான் கோவிலுக்கு போறேன் அனிக்கா நீ பத்திரமா உள்ளே இருந்துக்கோ” திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

என்ன சொல்லி அவளை நிறுத்த என்று நகத்தை கடித்து துப்பி கொண்டு இருந்தாள். அவசரமாக வெளியே ஓடி வர… கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மலர்  நடந்து போய் கொண்டு இருந்தாள்.

“மலர், மலர்” என்று அழைத்த வண்ணம் அவள் அருகில் சென்றாள்.

“என்ன” சற்று எரிச்சலாகவே கேட்டாள் மலர். கடையில பிடிச்சத வாங்கி தரேனு சொன்னான் அங்கு போகவே முடியாதபடி இவள் தொந்தரவு செய்கிறாளே என்ற எரிச்சலில் இருந்தாள் மலர்.

“உன் ரூம்ல ஏதோ விழும் சத்தம் கேட்டது மலர். அதான் கூப்பிட்டேன்” .

அனிக்கா சொன்னதும் அவசரமாக அவள் அறை நோக்கி சென்றாள்.

இருவரும் செல்வதை பார்த்த விக்கி தான் வந்த காரில் வீட்டிற்கு சென்றான். வீட்டில் உள்ளவர்கள் மிஞ்சி போனால் அரைமணி நேரத்தில் வந்துவிடுவர்….. அதனை கணக்கு செய்யது தான் அனிக்கா மலரை அழைத்து வந்தாள்.

மாடியில் தன் அறையின் உள்ளே மலர் சுற்றி பார்க்க எந்த பொருளும் விழுந்ததுக்கான் அடையாளம் எதுவும் தெரியவில்லை. ஏதோ மனதில் உறுத்த அறையை விட்டு வெளியே செல்ல காலடி எடுத்து வைக்கவும் அனிக்கா வீட்டின் மெயின் சுவிட்சை கட் பண்ணிவிட்டு வெளியே வந்து நின்றுவிட்டாள்.

விளக்கு எல்லாம் அணைந்ததும் பயந்து போய் நின்று இருந்தவளின் காதில் பக்கத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் இருந்து கதவை தட்டும் சத்தமும் அதோடு சேர்ந்து அதனை திறந்து கொண்டு ஒரு உருவம் வரவும் பயத்தில் உடல் நடுங்க மயங்கி சரிந்துவிட்டாள் மலர்.

மலரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!