Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandaenadi un kaathalai – 14

KUK – 14

மலரின் வகுப்பு தோழனின் பார்வையின் அர்த்தம் புரியாத அளவுக்கு சூர்யா மக்கு கிடையாது. ‘பய ரொம்ப நாள் ரூட் விட்டுட்டு இருக்கான் போல’ அவன் பார்வையை கண்டதும் சூர்யாவுக்கு தெரிந்து விட்டது.

“சொல்லு மலர் எதுக்கு இவ்வளவு நாள் லீவ் போட்ட??” விடாது குமார் கேட்க, மலருக்கு கோபமாக இருந்தது.

“ம்ச்ச் இப்போ இது முக்கியமா…. அதான் வந்துட்டேன்ல” எரிச்சலாக பதில் சொன்னாள்.



Advertisement

அதற்குள் அவள் வகுப்பு தோழி, மலரின் நெருங்கிய தோழி ‘அபி’ அங்கு வந்துவிட. “ஹேய் மலர்!… வெல்கம் பேக்.” கட்டிபிடித்து சந்தோக்ஷத்தை வெளிப்படுத்தினாள்.

மலர் பக்கத்தில் சூர்யாவும், குமாரும் நிற்பதை கவனித்தே இருந்தாள். “இந்த லூசு இப்போதான் க்ளாஸ்ல என்கிட்ட நீ எப்போ வருவனு கேட்டுட்டு இருந்துச்சு …. அதுக்குள்ள இங்க வந்து  நிக்கிறான்” மெதுவாக மலரின் காதில் சொன்னாள்.

எவ்வளவுதான் மெதுவாக சொன்னாலும் அது சூர்யாவின் பாம்பு காதிற்கு எட்டி விட்டது. உதடு விரித்து புன்னைகைத்தவன் “ஹேலோ மிஸ்….. ஐ’ம் . . . . .” சூர்யா கவிதா முன் கை நீட்டினான்.

Advertisement

அவன் பெயரை  சொல்லுவதற்குள் “எஸ் மிஸ்டர் ஐ நோ….யூ ஆர் சூர்யா. மை பெஸ்ட்டி பெட்டர்ஹாஃப். ஐ’ம் கவிதா” பதிலுக்கு கை குலுக்கி இருவரும் அறிமுகமானர்.

Advertisement

“ஒரு வாரம்… ஊருல நடந்தது என்னனு லைவ் டெலகாஸ்ட் பண்ண மாதிரி எல்லத்தையும் சொல்லி என்னை ஒரு வழி செஞ்சிட்டா”

“ம்ச்ச் என் மானத்தை வாங்கத குரங்கு” கவிதாவின் கை சதையை பியித்து எடுப்பவள் போல் பலமாக கிள்ளி வைத்தாள்.

“ஆஆஆ லூசே….” கிள்ளியை இடத்தை தடவி விட்டவள்., அருகில் குமார் முகம் இறுக சூர்யாவை பார்த்து நிற்பது தெரிந்தது.

Advertisement

“என்ன மலர்??! நீ சூர்யா அண்ணாவை எனக்கு அறிமுகம் படுத்தி வைச்சிட்ட…. நம்ம குமாருக்கு அண்ணாவை தெரியாதுலா?? ரெண்டு பேருக்கும் இன்ட்ரோ கொடு” மலரிடம் குமாரை கண் ஜாடையால் காட்டினாள்.

“சாரி குமார் .. இந்த லூசு வந்து பண்ண அலப்பறையில இவர் யாருனு சொல்ல மறந்துட்டேன். ஹீ இஸ் மை ஹஸ்பென்ட்…. அத்தான் இது குமார், மை க்ளாஸ்மேட்” சூர்யா அருகில் சென்று அவன் கையை பிடித்துகொண்டு அறிமுகம் படுத்தினாள்.

ஆலிவ் கீரின் கலர் உடை அணிந்து இருந்தான். எந்தவித சதை பிடிப்பு எதுவும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான தோற்றத்துடன் இருந்தான் சூர்யா. வலது கையை பேன்ட் பாக்கெட்டில் நுழைத்து இருந்தான்.

இடது கை மலரின் விரல்களுடன் சிறைப்பட்டு இருந்தது. முதல் பார்வையிலே தெரிந்தது ஆள் பக்கா ஹேண்ட்சம் என்று….. சூர்யாவின் தோற்றத்தில் இன்னும் முகம் கறுக்க “ஹெலோ சர்….. எனக்கு க்ளாஸ்ல வொர்க் இருக்கு நான் கிளம்புறேன்” என்றவன் திரும்பி பார்க்காது சென்று விட்டான்.

“ஓகே அண்ணா நீங்க சீக்கிரம் பேசிட்டு மலரை அனுப்பி வைங்க. நான் க்ளாஸ்ல வெயிட் பண்றேன். பாய்…” இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு சென்றாள்.

நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் சூர்யாவை திரும்பி பார்க்க…. அவன் பார்வை கோர்த்து இருந்த இருவரின் விரல்கள் மீது இருந்தது.

சுற்றுபுறம் உணர்ந்து கையை எடுக்க முயன்றவளால் முடியவில்லை. அவன் இறுக்கமாக பிடித்து இருந்தான். “அ..த்தான் கையை விடுங்க. சுற்றி போகிறவங்க நம்மளதான் பார்த்துட்டு போறாங்க??” சாம்பல் நிற கண்ணை உருட்டி அங்கும் இங்கும பார்த்தாள்.

“நானா வந்து உன் கையை பிடிச்சேன்?!”

“. . . . . . . . .”

“எதுக்கு வாலன்ட்டியாரா வந்து நீயே என் கையை பிடிச்ச காரணம் எனக்கு தெரியனும்” அவனுக்கு ரீசன் தெரிந்தே கேட்டான்.

“ம்ச்ச் அந்த குமார் என்கிட்ட கொஞ்சம் அட்வான்டெஜ் எடுத்துக்குவான். எவ்வளவு சொல்லியும் கேட்கல அதான்…..” மேலே சொல்லாமல் அவன் முகம் பார்த்தாள்.

கள்ள சிரிப்பு முகத்தில் தவழ “அத்தான்!….. உங்களுக்கு ரீசன் தெரிஞ்சும் என்னை நிக்க வைச்சி வம்பு பண்ணிட்டு இருக்கீங்க.” அவனது கையை உதறிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.

‘இடியட்… எல்லாரும் முன்னாடியும் கையை பிடிச்சி நல்லா க்ஷோ காமிச்சிட்டு இருந்து இருக்கேன். அவன்தான் கிண்டல் பண்றான் உனக்கு எங்க அறிவு போனுச்சு’ போகும் வழியெங்கும் புலம்பி தீர்த்தவளின் முன்பு வந்து நின்றான் குமார்.

அவனை பார்த்ததும் எரிச்சல் அதிகரிக்க ‘எல்லாம் இவனால் வந்தது’ “ம்ச்ச் குமார் அதான் எனக்கு கல்யாணம் ஆயிட்டு தெரிஞ்சிருச்சில அப்புறம் எதுக்கு இப்படி பின்னாடி வர”

“உனக்கு நிஜமாவே இந்த கல்யாணத்துல இக்ஷ்டமா மலர்” கடைசி முயற்சியாக கேட்டு பார்த்தான்.

“ப்ளீஸ் குமார்…. கோபத்தை கன்ட்ரோல் பண்ணி வச்சி இருக்கேன். ஃபுயூச்சருல உனக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பா.” கையெடுத்து கும்பிடாத குறையா அவனை அனுப்பி வைத்தாள்.

முகம் வாட திரும்பி சென்றவனை பார்க்க பரிதாபமாக இருந்தாலும் ஒரு பக்கம் ‘இனி தொந்தரவு செய்யமாட்டான்’ என்ற நிம்மதியே அதிகமாக இருந்தது.

“எதுக்குடி இப்படி சின்ன பிள்ளைங்களுக்கு சொல்ற மாதிரி கெஞ்சுற. ஸ்ட்ரிட்டா சொல்லி அனுப்பி இருக்கனும் நீ” மலர் குமாரிடம் தன்மையாக பேசியது கவிதாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

“இந்த நேரத்துல நான் கோபமா பேசினா ஏற்கனவே ஹர்ட் ஆகி இருக்கவன் இன்னும் வெக்ஸ் ஆகிருவான். அப்புறம் அது கோபமாக மாறி எனக்கு தான் ப்ராபளம். நல்லா படிக்கிற பையன் வேற இந்த உப்பு சப்பு இல்லாத விக்ஷயத்தால அவன் ஃபுயூட்ச்சர் ஸ்பாய்ல் ஆகிட கூடாது. அதான் என்னால முடிஞ்ச அளவுக்கு கோபத்தை கன்ட்ரோல் பண்ணி பேசி அனுப்பிவிட்டேன்” என்றாள்.

“சில விக்ஷயத்தை நீ டிஃப்ரண்ட் ஆங்கிள யோசிக்கும் பொழுது எனக்கு ஆச்சரியமா இருக்கும் மலர். லவ் யூ சோ மச்” தோழியை அணைத்து முத்தமிட்டாள் கவிதா.

மலரை கொண்டு விட்டு, வீட்டிற்கு திரும்பியவன் உடனே சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்று விட்டான்.

சங்கர் இருந்த வரை வாகன உற்பத்தி மட்டும்தான் செய்தார். ஆனால், சூர்யா அமெரிக்காவில் இருக்கும் பொழுதே வெகிக்கல தயாரிப்பு,, வடிவமைப்பு என்று பலவித யோசனையை புகுத்தி இருந்தான்.

அதனால் கடந்த இரண்டு வருட காலம் அவன் இங்கு இல்லை என்றாலும் அலுவலகத்தில் நடப்பது எதுவும் அவன் கவனத்தில் இருந்து தப்பாது இருந்தது.

“சார் இன்னும் டூ டேஸ்ல புது மாடல் கார் க்ஷோரூம் இருக்கு. பட், இந்த நேரத்துல வார்னிஸ் டீம் எம்ப்ளாயீஸ் வேலையை முடிக்க முடியாதுனு சொல்றாங்க” சூர்யாவின் செக்ரிட்டிரி ஈஸ்வர் தயங்கி நின்றான்.

வாகனத்தோட உதிரி பாகங்கள் எல்லாம் தயாராகி அதை ஃபிட் பண்ணுவதற்கு முன்பு நல்லா வார்னிஸ் செய்வர். அதே போல் வாகனம் தயாராகிய பின்பும் அதனை வாட்டர் வார்னிஸ், வெகிக்கல் ரீஃப்ரஸ்னிங்க், கலர் கோட்டிங்க் போன்றவை செய்து புத்தம் புதுசாக மாடலுக்கு மக்கள் முன் வைப்பர்.

கார், பைக் மாடல் டிசைனுக்கு இஞ்சினியர்கள் இருந்தாலும், வாகனம் ரெடி ஆனதும் மேற்குரிய வேலை செய்ய தொழிலாளர்கள் இருந்தனர்.

“ஏன்?? இதுபோல இதுக்கு முன்னாடி நடந்தது இல்லையே… வாட்ஸ் த ரீசன்??” நிதானமாக கேட்டான்.

“நீங்க அப்ராட்ல இருக்கும் பொழுது ரெண்டு தடவை இது மாதிரி நடந்து இருக்கு சார். பட், உங்க அப்பா உங்களுக்கு இது தெரிய  வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதான் இன்ஃபார்ம் பண்ணல.”

“ஓகே, போன ரெண்டு தடவை எதுக்கு ஸ்ட்ரைக் பண்ணாங்க”

“அஸ்யூஸ்வல் தான் சார்…. சம்பளம் கூட்டி கேட்டாங்க. பட் சார், போனஸை விட அதிகமாகவே இவங்களுக்கு சம்பளம் கொடுத்தாற்று. மறுபடியும் அதே டிமன்ட் வைக்கிறாங்க” ஈஸ்வருக்கே தொழிலாளர்கள் செய்வது சற்று அதிக்கபடியே என்று தோன்றியது.

“சார், இதுக்கு பின்னாடி யூனியன் லீடர் காளி-னு ஒருத்தன் இருக்கான். அவன் பேச்சை கேட்கலைனா அவர்களை எந்த நிலைமைக்குனாலும் ஆளாக்கிருவான். அவனுக்கே பயந்தே நிறைய பேர் அவன் பின்னாடி நிற்பர்” தனக்கு தெரிந்த அளவுக்கு எல்லாம் சொல்லி முடித்தான்.

வேக நடையுடன்  தொழிலாளர்களை சந்திக்க சென்றான். அங்கு குழுமி இருந்தவர்களின் பாதி பேர் முகத்தில் பயமும், சலிப்பும் இருந்தது.

அவன் வந்து நின்றதும் மரியாதைக்காக எல்லாரும் எழுந்து நிறனர். அவர்களை அமர சொன்னவன் “வெல்,” மெதுவாக முனங்கியவன் அங்கும், இங்கும் சில நிமிடம் நடந்தான்.

“ஒகே, நீங்க இப்போ கேட்க்கிற டிமான்ட்டிற்கு நான் ஒத்துக்கிறேன். பட் நம்ம அலுவலகத்துல இருந்து சில பேரோட குழந்தைங்க படிக்கிறதுக்காக மாசம் மாசம் கல்வி தொகை வழங்கபடும், இனிமே அது முடியாது.” தீர்மானமாக சொன்னான்.

அவனின் அந்த உறுதியான பேச்சில் ‘சொன்னது போல் செய்து விடுவானோ’ என்ற பயம் வர கூட்டத்தில் பாதி பேர் எழுந்து வேலைக்கு சென்றனர்.

“டேய் கந்தா…! அந்த ஆளு சும்மா சொல்லுறாருடா அதுலா ஒன்னும் பண்ணமாட்டாங்க” கந்தன் என்பவனிடம் காளி உரைக்க,

“இங்க பாரு காளி உன் பேச்சுக்கு பயந்துட்டுதான் இங்க வந்தோமே தவிர சம்பளத்தை கூட்டி கேட்க எங்களுக்கு மனசு இல்லை. இரண்டு மடங்கு அதிகமாகவே அவங்க போனஸ் தந்து இருக்காங்க…. இப்போ உன் பேச்சை கேட்டு நாங்க இங்க இருந்தா எங்க புள்ளைங்க படிக்காம நடுத்தெருவுல தான் நிக்கிம். அப்போ நீயா வந்து துட்டு கொடுத்து படிக்க வைப்ப….” என்றார்.

கந்தன் பேசுவதும் சரி என்று பட இன்னும் ஒரு சிலர் எழுந்து சென்றனர். “ஒகே ஈஸ்வர், நீங்க மிச்சம் இருக்கவுங்க நேம் லிஸ்டை எடுத்து வச்சிக்கோங்க. இவங்களுக்கு சம்பள பாக்கி செட்டில் பண்ணி வேறு புது ஆட்களை வேலைக்கு சேர்ப்போம். இன்னைக்கு இவினிங்கே பேப்பர்ல் விளம்பரம் கூடுங்க” கட்டளையிட்டபடி வெளியே சென்றான்.

காளியை தவிர அங்கு இருந்த மற்றவர்களுக்கு பயம் பிடித்து கொள்ள “காளி இந்த வேலையை விட்டுட்டா  இவ்வளவு கனிசமான சம்பளத்துக்கு இங்க மதுரையில வேற எங்கயும் வேலை கிடைக்காது. உனக்கு ஆயிரம் வேலை இருக்கும் ஆனா எங்களுக்கு இந்த ஒரு வேலைதான். இந்த வேலையை விட்டுட்டா என் பொன்டாட்டி என்னை அடிச்சே தொறத்தி விட்டுடுவா.” மற்ற எல்லோரும் இதையே காரணமா வச்சி கிளம்பி போய்விட்டனர்.

“இங்கு பாரு காளி!.. பெரிய முதலாளி என்ன சொன்னாலும் பொறுத்து போகிறவர். ஆனால், இவன் அப்படி இல்லைன்னு நிருபிச்சிட்டு போய்ட்டா. தேவையில்லாம அவன்கிட்ட மோத வேண்டாம். அவன் எதை பற்றியும் கவலை படுற மாதிரியே தெரியல. நம்ம ஆளுங்களை நல்லா நாடி பிடிச்சி வைச்சிருக்கான். எங்க, எதை சொன்னால் பயந்து வேலைக்கு போவாங்கனு தெரிஞ்சி பேசுறான். ஜாக்கிரதையா இரு” கடைசியில் ஒருவன் காளிக்கு ஃபிரி அட்வைஸ் கொடுத்துட்டு போக இன்னும் கடுப்பாகிவிட்டான்.

நேராக சூர்யாவின் அறை நோக்கி சென்றவன் பட்டென கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டான். பதறி போன ஈஸ்வர் அவனை தடுத்து “காளி வெளியே போ.. எதுனாலும் சாரே வந்து உன்கிட்ட பேசுவாறு” அவனை வெளியே அனுப்ப முயல,

“யோவ் ஈஸ்வரு நான் உன்கிட்ட பேச வரல. பெரிய முதலாளி பையன்கிட்ட பேசனும். துறைக்கு எங்ககிட்ட பேச நேரம் இல்லையோ??!”  நக்கலாக கேட்டான்.

இருவர் பேச்சையும் கவனித்தவன் நிதானமாக “ஈஸ்வர்  நான் சொன்ன வொர்க் முடிச்சிட்டு வாங்க” அவனை போகுமாறு கண்ணால் சொன்னான்.

காளி முன்னாடி சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தவன் “சொல்லுங்க மிஸ்டர் காளி!! என்ன வேணும்” ரொம்ப கூலாக கேட்டான்.

‘இவன் என்ன இப்படி கேட்கிறான்.’ எதிர்த்து பேச வந்தவன் வார்த்தை வராமல் தினறி போய் நின்றான். அவனது அந்த தயக்கத்தை உணர்ந்தவன் கண் இமைக்கு நேரத்தில் தன் வலது காலால் அவன் இரு காலகளை உதைத்து தள்ள இந்த தாக்குதலை எதிர் பார்க்காதவன் உடனே கீழே விழுந்தான்.

அவனது இடது உள்ளங்கையை கால் பூட்ஸ்சால் சூர்யா மிதிக்க வலியில் துடித்தவன் “ஐயோ சாரு வலிக்கு…. காலை எடுங்க” காளி வலியில் முனங்கினான்.

இன்னும் சற்று அதிகமாகவே காலுக்கு அழுத்தம் கொடுத்து “ நீ என்ன செஞ்சாலும் பொறுத்து போக மாட்டேன். இப்போ இவ்வளவு நாள் நீ வேலைக்கு இருந்தது உன் அப்பாவோட விஸ்வாசத்துக்காக. அந்த மனுசன் ரொம்ப கேட்டதால உனக்கு இந்த வேலையை எங்க அப்பா கொடுத்தாறு. இனி உன்னால தொழிலாளர்களுக்கு ஏதாவது தொந்தரவு வந்துச்சு இந்த மதுரையில எங்கயும் வேலை செய்ய முடியாத அளவுக்கு கால், கையை உடைச்சி போட்டுருவேன்” பற்களுக்கு இடையே வார்த்தகளை கடித்து துப்பினான்.

‘பார்த்த முதல் நாளே இப்படி இவன் நடந்து கொள்வான்… அதுவும் தன் அப்பா வரை இவன் தெரிந்து வைத்து இருப்பான்’ என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை. விட்டால் போதும் என்றவன் அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டான்.

ஈஸ்வரை அழைத்து அவனுடைய நவடிக்கையை கண்கானிக்க ஏற்பாடு செய்தான். பின் இரண்டு நாட்கள் கழித்து நடக்க இருக்கும் க்ஷோரூமிற்கான வேலை அதிகமாக அதை பார்த்து கொண்டு இருந்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

செல்போன் மெஸ்ஸேஜ் வந்ததற்கான அடையாளமாக சினுங்க எடுத்து பார்த்தான். ‘அத்தான் நான் கவிகூட வீட்டுக்கு வந்துட்டேன்.’ மலர் அனுப்பி இருந்தாள்.

மணியை பார்க்க அது ஐந்து இறுபது என காட்டியது. வெயிட்பண்ணி பார்த்து, வரலனு கோப பட்டு இருப்பாளோ’ அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்தான்.

“சூர்யா காபி குடிச்சிட்டு போ” கங்கா சொல்ல, “ஃப்ரெஸ் ஆயிட்டு வரேன்” என்றவன் மேலே சென்றான்.

‘எந்த மன நிலையில் இருக்காளோ’ மனதிற்குள் நினைத்தவன் சட்டேன கதவை திறந்து உள்ளே சென்றான். அங்கு அப்பொழுதுதான் குளித்து முடித்து வெறும் மார்பு துண்டுடன் பாத்ரூமில் இருந்து வெளி வந்தவளை பார்த்தவனுக்கு மூச்சு முட்ட அப்படியே உறைந்து நின்றுவிட்டான்.

சூர்யா வர மாட்டான் என்கிற தையிரியத்தில் தாழ் போடாமல் இருந்தவள் அவன் திடீரென்று வந்து நின்றதும் அவளும் திகைத்து நின்றுவிட்டாள்.

நொடி பொழுதில் தன்னை மீட்டெடுத்தவன்  குரலை சாதாரணமாக்கி “ஃபைல் எடுக்க வந்தே மலர்” என்றவன் மேஜை மீது உள்ள ஏதோ ஃபைல் ஒன்றை எடுத்துவிட்டு வெளியே பால்கனிக்கு சென்று விட்டான்.

“ஸ்ஸப்பா, ராட்சஸி செம காட்-டா இருக்கா. கொஞ்ச நாள் கூட விரத்தை கடை பிடிக்க விடமாட்டா போல???!” அவஸ்தையில் வாய் விட்டு முணங்கினான்.

இங்கு மலரின் நிலைமையோ வேறாக இருந்தது…..

மலரும்……………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!