Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandaenadi un Kaathalai – 3

 

 

தான் எப்படி ஒரு தாக்கத்தை மலர் மனதில் உருவாக்கிருக்கிறோம் என்பதை சூர்யா அறியவில்லை. ஆனால் மலருக்கு அந்த தாக்கம் ரொம்ப இனிமையாகவும், புதுமையாகவும் இருந்தது.

தனக்காக அவன் வருணிடம் போய் பேசியதே சூர்யா மீது மலருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது அதை அவள் உணர இந்த சந்தர்ப்பம் சரியாக அமைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.



Advertisement

மலருக்கு அவள் வாழ்க்கை பூத்து குலுங்கும் பூங்காவனமாக மாறி இருந்தது. பாசமாக பார்த்துக்கொள்ளும் அத்தை, மாமா தன் மனதுக்கு இனிய சூர்யா இவர்கள் யாவரும் பக்கத்தில் இருக்கும் பொழுது அவளுக்கு உலகில் வேறு எதுவும் பெரிதா தெரிய வில்லை.

நாளுக்கு நாள் இவர்களின் பாச பிணைப்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை. சூர்யாவின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சூர்யாவின் மீது உள்ள கூச்சம் மலருக்கும் இன்னும் அதிகமாக தான் இருந்தது.

சூர்யா தன் கல்லூரி வாழ்கையில் நுழையும் தருணத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு நாட்களையும் தள்ளி கொண்டு இருந்தான். மலர் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு அதனால்  கங்காவின்  கவனம் மலர் மீது அதிகமாகவே இருந்தது.

Advertisement

முன்பெல்லாம் படிக்காம இருக்க மலர் ஏதாவது காரணம் சொன்னாலும் கங்கா அதை பெரிதாக எடுத்தது கிடையாது. ஆனால் இப்போ அவள் எந்த காரணம் சொன்னாலும் கங்கா கொஞ்சம் கடுமையாகவே இருந்தாள் மலரின் படிப்பு விஷயத்தில்.

Advertisement

இதில் கூத்து என்னவென்றால் சில சமயம் சூர்யாவிடம் கேட்டு படிக்க சொல்லும்பொழுது மலருக்கு வானத்தில் பறக்கிறது மாதிரி தான் இருக்கும். அன்றும் இப்படிதான் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தவனிடம் கங்கா,

“கண்ணா மலருக்கு கொஞ்சம் இந்த கணக்கு மட்டும் சொல்லி கொடுடா அது மட்டும் அவளுக்கு சுட்டு போட்டாலும் வர மாட்டிங்கிறது” என்றாள்.

குரலில் குறும்புடன் “ஆமா, அவளுக்கு கணக்கு மட்டுமா வர மாட்டிக்கு…. எல்லா பாடமும் குதிரை கொம்பு தான்” என்றான்.

Advertisement

இவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த மலர்க்கு கொஞ்சமே கொஞ்சம் ரோஷம் வர “போதும் எனக்கும் கொஞ்சம் படிப்பு வரும் நீங்கள் சொல்லி கொடுத்தால் நான் நல்லாவே படித்து ஹைய் மார்க் எடுப்பேன்” என்றாள் மலர்

அவள் பேசியதை ஆச்சிரியமாக பார்த்தவன் தன் அன்னையிடம் “அம்மா உன் மரும இன்னைக்கு தான் சின்ன வயசில சொல்லி கொடுத்த தமிழ் வார்த்தையை தவறு இல்லாமல் தந்தி அடிக்காமல் கோர்வையா பேசி இருக்கிறாள். இவள் ஒன்பது முடித்து அடுத்த பத்து தேர்ச்சி பெற எப்படியும் உனக்கு கொள்ளு பேரன் வந்து விடுவான்” என்றான் கிண்டலாக.

தான் அவனிடம் சகஜமாக பேசியதை தான் அவன் இப்படி கிண்டல் அடிக்கிறான் என்று தெரியவும் இன்னும் ரோஷம் அதிகமாகியது மலருக்கு.

கோபத்துடன் தன் அத்தையை திரும்பி பார்த்தால் அங்கு அவள் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு இருந்தாள். அதில் இன்னும் கோபமுற்றவள் “யாரும் எனக்கு சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை நானே படிச்சிக்கிறேன்” என்று அவள் அறைக்கு சென்று விட்டாள்.

“டேய் நீ அவளை இப்படி கிண்டல் பண்ணா  எப்படி அவாங்கிட்ட சகஜமாக பேசுவாள். போ போய் அவளை சமாதானம் செய்து அவளுக்கு பாடம் சொல்லி கொடு”  என்றவர் மலரை அழைத்தார்.

ஐந்து நிமிடம் கழித்து வெளி வந்தவள் ‘என்ன’ என்பது போல் தன் அத்தையை பார்த்தாள்.

“மலர் அத்தான் உன்னை இனி கிண்டல் செய்ய மாட்டான் நீ போய் அவன்கிட்ட கேட்டு படிடா என் செல்லம் இல்ல” என்று கொஞ்சி கெஞ்சி அவளை படிக்க அனுப்பினாள் கங்கா.

வெளியே தோட்டத்தில் உள்ள கல் மேடையில் இருவரும் அமர்ந்து இருந்தனர். அவளுக்கு உள்ள சந்தேகம் அனைத்தையும் ரொம்ப தெளிவாக புரியும் படி சொல்லி கொடுத்தான்.

வீட்டில் அத்தை முன்பு அவனிடம் பேச்சை உயர்த்தியவளால் இங்கு அவன் அருகாமையில் மூச்சி திணறி போய் விட்டாள். ஒரு இரண்டு மணி நேரம் படிப்பில் கவனம் கொண்டவள் பின் அவளால் முடிய வில்லை அது அவள் முகமே காட்டி கொடுத்தது அவனுக்கு.

“என்ன பிளவர் படிக்க மூட் போய் விட்டதா என்ன?. இப்படி இருந்தா கண்டிப்பா நீ தேறுவது ரொம்ப கஷ்டம்” என்றான் விளையாட்டாக.

அவனுக்கு அவள் அவனிடம் சகஜமாக பேசியது ரொம்ப பிடித்து இருந்தது. சொல்ல போனால் அவன் அதனை ரசித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், மலர்க்கு அப்போ இருந்த தையிரியம் இப்போ இல்லை. அதுவும் அவன் அருகில் இருக்கும் பொழுது சொல்லவா வேண்டும். அதனால் அவன் சொன்னதிற்கு பதிலாக,

“இல்லை அத்தான் நான் கண்டிப்பா பாஸ் ஆயிடுவேன். நீங்க கிண்டல் பண்ற அளவு ரொம்ப மோசம்லா இல்ல என் படிப்பு” என்றாள் மெல்லிய குரலில்.

“ஹ்ம்ம் சுத்தம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிட்டாயா…. சரி நான் உள்ளே போறேன் உனக்கு சந்தேகம் வரும் பொழுது என் ரூம்க்கு வா சரியா” என்று விட்டு உள்ளே சென்று விட்டான்.

இப்படியே இவர்கள் நாட்கள் யாருக்கும் காத்து இராது வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது. இதற்கிடையில் சூர்யா கல்லூரியில் நுழையும் நாளும் வந்தது. 

மதுரையில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைத்தது. தான் விரும்பி எடுத்த (பி.இ. ஆட்டொமொபைல்) படிப்பு அதனால் ரொம்ப உற்சாகமாகவே இருந்தான் சூர்யா.

தன் அன்னை, அப்பாவிடம் சொல்லிவிட்டு தன் புதிய வண்டியான (New hero passion pro) நியூ ஹீரோ பஸன் ப்ரோவை ஓட்டிக்கொண்டு சென்றான்.

பார்கிங் இடத்தில் வண்டியை விட்டு வந்தவன் தன் வகுப்பை நோக்கி சென்றவனின் காதில் “டேய் சூர்யா” என்ற அழைப்பு கேட்க ‘யாரு’ என்று திரும்பி பார்த்தவன் அங்கு தன் சிறு வயது தோழன் நவீன் நிற்பதை பார்த்து அவன் புறம் திரும்பி.,

“டேய், ஏன்டா எரும இப்படி ஓடி வருகிற,. ஆமா நீயும் இந்த காலேஜ் தானா எந்த டிப்பார்ட்மென்ட்”

 “ஏன்டா, பார்கிங் ஏரியாவில் இருந்து கத்திக்கிட்டே பின்னாடி வரேன் உன் காதில விழவே இல்லையாடா” வேகமாக மூச்சுகளை எடுத்து விட்டவன் சூர்யாவை நோக்கி  கோபத்துடன் கேட்டான்.

“இல்லடா நிஜமா எனக்கு கேட்கல… சரி இப்போ எதுக்கு இப்படி மூச்சு வாங்க சீன் போடுற…. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா” என்றான் நவீனை இன்னும் வெறுப்பேத்தும் விதமாக

அவன் சொன்ன பதிலில் அவனை கொலை வெறியில் பார்த்தவன் “ஆமாடா  நல்லவனே ஏன் கேட்க மாட்டா உனக்காக ஓடி வந்தேன்ல இன்னும் சொல்லுவ… ஹ்ம்ம் எல்லாம் என் விதி” என்று சலித்து கொண்டான்.

சூர்யா முறைப்பதை கண்டு தன் விளையாட்டு தனத்தை கைவிட்டு “சரி மச்சான் நரசிம்ம அவதாரம் எடுத்துராத…. நானும் உன் டிப்பார்ட்மென்ட் தான் நீ சேர்ந்தது எனக்கு முதலிலே தெரியும் உனக்கு சின்ன இன்ப அதிர்ச்சி கொடுக்க தான் உன்கிட்ட சொல்லலை”  புன்னகையுடன் சொன்னான் நவீன்.

முதலில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் விரும்பி எடுத்த பாடம் என்பதால் சூர்யா ரொம்பவே பிடித்து படித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

சூர்யா, மலர் இருவர் வாழ்க்கையும் எந்த மாற்றமும் இல்லாது மழை பெய்த பின் காணப்படும் தெளிந்த வெண்மேகம் போல் அவர்கள் வாழ்க்கை தெளிவாக இருந்தது.

அதே போல், மலருக்கும் சூர்யாவின் மீது இருந்த ஈர்ப்பு  நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் இருந்தது.

 ஆயிற்றி, ஒரு வழியாக மூன்று வருடம் முடித்து இப்பொழுது இறுதி வருடத்தில் கால் பதித்து இருந்தான் சூர்யா.

மலரும் தன் பள்ளியின் இறுதி வருட படிப்பில் காலடி எடுத்து வைத்தாள். தன் படிப்பு, வாழ்கையில் உள்ள எல்லா விதமான முடிவை எடுக்கும் பொறுப்பை மலர் எப்பொழுதும் சூர்யாவிடம் தான் கலந்து ஆராய்வாள்.

அதனால் தான் அடுத்ததாக பள்ளி முடித்து கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்பதிலும் சூர்யாவின் கருத்தை கேட்டாள்.  

தன் நண்பர்களுடன் வெளியே சுத்தி விட்டு வந்த சூர்யா தன் அறையை நோக்கி வந்து கொண்டு இருந்தன் அங்கு தன் அறை முன்பு மலர் தயங்கி நிற்கவும் யோசனையுடன் அவளிடம்,

“என்ன பிளவர் இங்கு நிற்கிற நீ வழக்கமா அம்மா முந்தானையை பிடிச்சிட்டு தானே சுற்றுவ” என்றான் கிண்டலாக.

அவன் கிண்டல் எல்லாம் அவளுக்கு பழகி போன ஒன்றாக மாறிவிட்டது. அதனால் அவள் அதை கண்டு கொள்வதே இல்லை என்பதை விட அவன் கிண்டலுக்கு அவளால் பதில் சொல்ல முடியாது என்பது தான் உண்மை.

எங்கே அவன் முகம் பார்த்தால் தான் மலர்க்கு பேச்சே வருவது இல்லையே. தொண்டையில் இருந்து வார்த்தை வருவேனா என்று அடம் பிடிக்கும், இதில் எங்கே போய் அவன் கேட்கும் கேள்விக்கு அவள் பதில் சொல்லுவாள்.

“அது வந்து அத்தான்… இப்போ ப்ளஸ்-டூ வந்துட்டேன் அடுத்த காலேஜ்ல அடுத்து என்ன படிக்கலாம்-னு…” அவள் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள் அவள் தோள் பிடித்து அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்து விட்டு தன் அறைக்குள் சென்று ஒரு பேப்பரை எடுத்து கொண்டு வந்து மலர் முன் நீட்டினான்.

“மலர், மலர்” என்று இருமுறை அழைத்தும் அது அவள் காதில் விழவேயில்லை.

எங்கே, அவள் இந்த உலகில் இருந்தாள் தானே அவன் அழைப்புக்கு செவி சாய்ப்பாள். அவள் தான் அவன் தன்னை தொட்ட உடனே உடல் சிலிர்த்து அவன் தொடுகை கொடுத்த அதிர்ச்சியில் இருந்தாலே….. இன்னும் அவள் அதில் இருந்து மீள வில்லை.

“ப்ளவர்ர்ர்ர்……” என்று அவள் செவிப்பறை கிழியும் வரை கத்தின பின் தான் கந்தர்வ உலகத்தில் இருந்து கலி யுகத்திற்கு வந்தாள்.

அவசரத்தில் “என்ன அத்தான்” என்று நடுங்கி கொண்டு கேட்டாள்.

“எத்தனை முறை கூப்ட்டேன் உன் காதில் விழவே இல்லையா…. சரி இந்தா இதை பிரித்து பார்” சூர்யா கொண்டு வந்த பேப்பரை அவள் கையில் கொடுத்தான்.

‘என்ன இது’ என்று வாங்கி பார்த்து படித்தவள் தன் சாம்பல் கண்ணை விரித்து தன்னவனை கண்களில் கண்ணீர் குளம் தேங்க, உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தாள்.

அவளின் அந்த தோற்றம் சூர்யாவின் மனதிற்குள் ஏதோ செய்தது. ‘சை அன்னைக்கு ஃபங்க்ஷன் அப்போமும் இப்பிடிதான் அவளை அந்த ரெட் சாரியில பார்த்ததும் மனசு ஒரு மாதிரி இருந்துச்சு. இப்பவும் மலர் கண்ணை பார்த்ததும்…’ அவனுக்கு மூச்சுமுட்டியது.

அவள் முகத்தில் இருந்து பார்வையை கடினபட்டு எடுத்து தன் பின்னங்கழுத்தை தேய்த்துவிட்டு மூச்சை இழுத்து விட்டான். அதன் பின் ஒரளவுக்கு தன்னை சமன்படுத்தி கொண்டான்.

“என்ன பிளவர் உனக்கு இந்த கோர்ஸ் ஓகே தான” என்றான் முகம் நிறைந்த சிரிப்புடன்.

“ரொம்ப தங்க்ஸ் அத்தான். நான் இதை எப்படி உங்ககிட்ட சொல்லனு தயங்கிட்ட் இருந்தேன். ஆனால் இப்போ எனக்கு ரொம்ப சந்தோக்ஷம்” என்றாள் மன நிறைவுடன்.

 “உனக்கு தான் தையர்கலை மற்றும் ட்ரெஸ் டிசைனிங்கில விருப்பம் ஆயிற்றே. அதான் அந்த கோர்ஸ் இருக்கிற பெஸ்ட் காலேஜ் லிஸ்ட் எடுத்து வச்சிருந்தேன்” என்று  தன் அறைக்குள் சென்று விட்டான்.

‘அப்போ அத்தாகிட்ட அத்தை சொல்ல வில்லையா?… அவரே தான் என் விருப்பம் அறிந்து இதை செய்து இருக்கிறார்’ என்றவளின் மனம் முழுவதும் பூவின் வாசமாக, வண்ணமாக நிறைந்து இருந்தது.

தன் அத்தை, மாமாவிடம் சொல்லி மகிழ்ந்தவள் அன்று முழுவதும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டு தான் இருந்தாள்.

இங்கு, சூர்யாவின் கல்லூரியில் அவனுக்கு இது இறுதி வருடம் என்பதால் அந்த செட் மாணாக்கள் எல்லாம் சந்தோஷம் மற்றும் வருத்தம் என்று இரு மனநிலையில் இருந்தனர்.

சூர்யா கல்லூரியின் மாணவ தலைவன் என்பதால் அவனுக்கு படிப்பு வேலை தவிர்த்து கல்லூரி வேலையும் கூடுதலாகவே அமைந்து விட்டது.

அன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய வரவேற்ப்பு விழா பற்றி பேராசிரியரிடம் பேசி விட்டு வந்தவன் தன் எதிரில் வந்த பெண்ணை பார்க்காது மோதிவிட்டான்.

“ஹேய் பார்த்து வர தெரியாது உனக்கு இப்படியா வந்து மோதுவ இடியட்” என்று வசமரியாக திட்டி கொண்டு இருந்தாள்.

தன் மீது தான் தவறு என்று அறிந்து அவளிடம் மனிப்பு கேட்க எண்ணியவன் அவள் தன்னை ‘இடியட்’ என்றதும் கோபம் தலைக்கு ஏற அவளை பார்த்தவன் ஒரு நொடி அவளுடைய அல்ட்ரா மாடர்ன் அழகில் மயங்கி தான் போய் விட்டான்.

ஒரு நொடி தான் என்றாலும் அவனின் அந்த மயக்க நிலையை குறித்து கொண்டவள் மனதில் தன் அழகில் மீது உள்ள கர்வம் இன்னும் அதிகரித்தது அந்த அல்ட்ரா மாட்ர்ன்னுக்கு.

தன்னை மீட்டு கொண்டவன் “ஹலோ தெரியாம மோதிட்டேன் என் மீது தான் தவறு…. அதுக்காக ரொம்ப அதிகமாக பேசுற. முதலில் நீ பேசியதற்கு மன்னிப்பு கேட்டுட்டு இங்கு இருந்து போ” என்றான் கோபத்துடன்.

“நீ தான் கண்ணு தெரியாம வந்து மோதினாய். முதலில் நீ மன்னிப்பு கேள்” அவள் அவனுக்கு சளைத்தவள் தான் இல்லை என்பதை பேச்சில் நிறுபித்து கொண்டு இருந்தாள்.

சூர்யா விரல் நீட்டி கோபத்தில் கத்துவதற்குள் அங்கு அவனை பேராசிரியர் அழைத்து விட அவளை முறைத்து விட்டு “உன்னை பிறகு கவனித்து கொள்கிறேன்” என்று சென்று விட்டான்.

பின், வகுப்புக்கு வந்தவன் கோபத்தின் உச்சத்திலே இருந்ததால் தன் நண்பர்களை போட்டு வாட்டி எடுத்துவிட்டான்.

ஒரு கட்டத்தில் நவீன் அவனிடம் “டேய் மச்சான், என்னடா ஆயிட்டு உனக்கு இப்படி போட்டு எங்களை தாளிக்கிறாய் முடியலடா”.

“எல்லாம் அவள் தான் அந்த பிசாசுதான் மச்சான் முதல் நாளே என்னை கடுப்பு ஏத்திவிட்டாள்” கடித்த பற்களின் இடையே வார்த்தை வெளி வந்தது.

 நவீனுக்கு அதிர்ச்சி தான் இதுவரை சூர்யாவிடம் நிறைய பெண்கள் பேச வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் எல்லாம் ஒரு எல்லைக்கு மேல் பேச்சு வைத்து கொள்ள மாட்டான்.

 அப்படிபட்டவன் முதன் முதலாக ஒரு பெண்ணை கோபமுடன் திட்டுகிறான் என்றால் அவள் இவன் மனதில் ஒரு ஈர்ப்பை விதைத்து விட்டாள் என்பதை நவீன் அறிந்து கொண்டான். அவளை அறியும் ஆவலில் “யாரு மச்சான் அந்த பொண்ணு” என்றான் ஆர்வத்துடன்.

அப்பொழுது பார்த்து அவளே சூர்யாவின் வகுப்புக்குள் ஒரு துண்டு பேப்பருடன் நுழைந்தாள்.

அவளை பார்த்து ஒரு நொடி மயங்கி நின்றவன் பின் சுதாரித்து தன் நண்பன் புறம் திரும்பி அவள் புறம் கண்ணை காட்டினான். நவீனும் ‘யாரு’ என்று திரும்பி பார்த்தவன், அவளை பார்த்ததும் முகம் சுளிப்புடன்,

“ஓஹோ இவளா…. இவள் பெயர் அனிக்கா முதலாம் ஆண்டு மாணவி கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்” என்றான் குரலில் சுரத்தே இல்லாது.

“ம்ம் அனிக்கா அவளை மாதிரி மார்டன்னாகவும், அழகாகவும் இருக்கு” என்றான் சூர்யா அவளை பார்த்தவாறு.

தன் நண்பனா இது என்று அதிர்ச்சியில் இருந்தான் நவீன். பொதுவாகவே சூர்யா இப்படி ஒரு பொண்ணை பார்த்ததும் ஃப்ளட்டர் ஆகிற ரகமில்லை.

ஆனா இந்த அனிக்காவின் விக்ஷயத்தில் அவனின் திடீர் மயக்கம் நவீனுக்கு சற்று கவலையே தந்தது.

‘ஹ்ம்ம் இதில் நாம் சொல்ல ஒன்னுமே இல்லை. சொல்லி கேட்க்க கூடிய ஆளும் இவன் இல்லை.’ என்று நினைத்தவன் ‘சூரியாவே இந்த மயக்கத்தில் இருந்து தெளிந்த்தால் தான் உண்டு’ என்றவன் அடுத்த நடக்கபோவதை ஆராய தொடங்கினான்.

 

மலரும்………

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!