Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

kandeanadi un kaathalai – 1

KUK – 1

      கண்கள் மூடி பிள்ளையாரின் முன் அமர்ந்து இருந்த கங்காவுக்கு கடந்த பத்து வருடமாக ஒரே வேண்டுதல் தான், பிரிந்து போன தன் அண்ணன் குடும்பம் தன் குடும்பத்துடன் சேர்ந்து விட வேண்டும் என்ற வேண்டுதல் மட்டும் தான்.

கீழே இறங்கி வந்த சங்கர் தன் மனைவி பூஜை அறையில் இருப்பது தெரிந்து வரண்டாவில் அமைதியாக இருந்து செல் போன் நோண்டி கொண்டு இருந்தார்.

சிறு வயதிலே பெற்றோரை இழந்து தன் உழைப்பால் முன்னேறி இப்போழுது கார் உதிரி பாகம் தொழில் செய்து வருகிறார். சங்கரை பற்றி கேள்விபட்டதும் அவரது  நல்ல குணத்திற்காகவே கங்காவின் தந்தை அவளை சங்கருக்கு மணம் முடித்து வைத்துவிட்டார்.



Advertisement

அவருக்கு தெரியாதா அவர் பதி என்ன வேண்டி கொண்டு இருப்பார் என்று…. அவரும் தேடாத இடம் இல்லை தன் செல்வாக்கை பயன் படுத்தி முடிந்த மட்டும் தேடி பார்த்து விட்டார்…. ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

பூஜை அறையில் இருந்து வந்த கங்காவின் முகம் பார்த்தே அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று கண்டு கொண்டார் சங்கர்.

“என்ன கங்கா இன்னைக்கு ரொம்ப வாட்டமா இருக்க… கண்டிப்பா உன் அண்ணன் கிடைத்து விடுவார் கங்கா… உன்னுடைய இந்த நிலை நம் பையன் சூர்யாவை எந்தவிதமாகவும் பாதிக்க கூடாது.” ஒருவித கூர்பார்வையுடன் தொடர்ந்தார்.

Advertisement

நேற்று வந்து ‘அம்மா என்கிட்ட சரியா பேசவே இல்லை அப்பா’னு அவன் என்கிட்ட சொல்லும் போது அந்த இடத்தில ஒரு தகப்பனா எனக்கு கக்ஷ்டமா இருந்தது கங்கா” என்று குரலில் கண்டிப்புடன் கூடிய ஒரு வேதனையோடு  கூறினார்.

Advertisement

“சாரிங்க கொஞ்ச நாளாவே என் மனசு நெருடலாவே இருக்கு. அதனால் தான் சூர்யாவை கூட என்னால் சரியாய் கவனிக்க முடிய… இனி இப்படி நடக்காது கவனமா இருக்கேன்” –கங்கா.

அவள் குற்ற உணர்ச்சியில் கூறியதும் எழுந்து சென்று கங்காவை தன்னுடன் அணைத்துகொண்டார் சங்கர்.

“சாரி சொல்அளவுக்கு நீ எந்த பெரிய தப்பும் செய்யல கங்கா உன்ன பற்றி எனக்கு தெரியாதா என்ன?….. நீ எதிலும் கவன குறைவாக இருப்பவள் அல்ல.., இருந்தும் உன் அண்ணன் விஷயம் உன்னை ரொம்ப பாதிக்கினு எனக்கு  நல்லாவே தெரியும் அதை நான் பார்த்துக்கிறேன் நீ எதையும் போட்டு குழப்பிக்காதே என்ன புரியுதா” என்றார் கனிவாக.

Advertisement

கணவன் சொல்வதும் உண்மை தான் இப்போ கொஞ்சம் நாளா தன் பிள்ளையின் மீது அவள் கவனம் இருப்பதே இல்லை. அவள் அண்ணன் குடும்பத்தின் நினைப்பு மட்டும் தான்.

அவளும் என்ன தான் செய்வாள் இறந்து போன தன் அப்பாவின் கடைசி ஆசை அதை அவளால் எப்படி நிறைவேற்றாம இருக்க முடியும்.

அவள் யோசனையை கலைத்தது சூர்யாவின் சூ-வின் ஓசை.  மாடியில் இருந்து அவன் வரும் அழகை ரசித்தவள் கண்களுக்கு அப்பொழுது தான் அவனது முகத்தின் வாட்டம் தெரிந்தது.

எல்லாம் என் கவன குறைவால் வந்தது  என்று நினைத்தவள்வனிடம் இருந்து விலகி சூர்யாவின் அருகில் சென்று நின்றாள்.

 அன்னை வந்து நின்றதும் தன் முகத்தை திருப்பி கொண்டான் அந்த பத்து வயது வாண்டு. அவனது அந்த செய்கையில் கணவன் மனைவி இருவர் முகத்திலும் ஒரு புன்னகை தோன்றியது.

‘கோபத்தில் அப்படியே அவன் தாத்தாவே தான்என்ற கங்காவின் மனதில் தன் அப்பாவின் இந்த கோபம் தான் தன் அண்ணன் இப்பொழுது தனியாக இருப்பதற்கு காரணம் என்று சுற்றி சுற்றி அவள் அண்ணன் விஷயத்திலே வந்து நின்றது.

அதை சற்று ஒதுக்கியவள் சூர்யாவின் உயரத்துக்கு குனிந்து அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் தாடையை பிடித்தாள்.

“சாரி சூர்யா… அம்மா கொஞ்சம் டிஸ்ட்ரப்பா இருந்தேன் அதான் உன்னை என்னால சரியா கவனிக்க முடியல கண்ணா இனி இப்படி இருக்க மாட்டேன் சரியா செல்லம் ” என்று கொஞ்சி கெஞ்சி அவனை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்.

“போதும் மம்மி நேற்று ஸ்கூல் வருண் என்கிட்ட சண்டை போட்டான் அதை உங்ககிட்ட சொல்ல வந்தா நீங்க முகத்தை சோகமாக வைச்சிட்டு எங்கோ பார்த்துட்டு இருந்தீங்க. இனி  உங்ககிட்ட நான் எதுவுமே சொல்ல போவது இல்லை  மம்மி ”.

மகனின் வேதனை மனதை சுட “இனி இப்படி நடக்காது கண்ணா அம்மாவை இந்த ஒரு முறை மட்டும் மனிச்சிடு சூர்யா”  குரல் கம்ம  கண்களில் லேசாக துளிர்த்த கண்ணீருடன் கூறினாள்.

 இதுவரை அன்னை அழுது பார்க்காதவன் இப்போ அவன் முன்னாடியே அழும் பொழுது சின்ன பையன் ரொம்பவே பதறி போய்விட்டான்.

“நோ மம்மி நீங்க அழாதிங்க நான் கோப படல” என்று கங்காவின் கண்ணீரை துடைத்து விட்டு அந்த பிஞ்சு கையால் அவளை அணைத்து கொண்டான். 

மகனின் செயலில் மனம் கனிந்தவள் அவனை தூக்கி சாப்பாடு மேஜை மீது அமர வைத்து அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவனுக்கும் வருணுக்கும் இடையில் என்ன சண்டை என்று கேட்டாள்.

“என் பென்சிலை எடுத்து வைச்சிகிட்டு அவனோடதுனு பொய் சொன்னா மம்மி.  அது என்னுடையதுனு சொல்லியும் அவன் கேட்க  அதான் மிஸ்கிட்ட போய் சொன்னேன்”.

“அதுக்கு மிஸ் என்ன சொன்னாங்க” அவனுக்கு சாதம் ஊட்டியவாறு கேட்டாள்.

“உன் பென்சில்-தானு எவிடன்ஸ் எதாவது இருக்கானு கேட்டாங்க”

“அதுக்கு நீ என்ன சொன்ன”

“பென்சில் பேக் சைட்-ல கொஞ்சம் சார்ப் பண்ணி என்னோட  நேம் ஃபர்ஸ்ட் லெட்டர் எழுதி இருந்தேன் அதை பாத்துதா மிஸ் அவன்கிட்ட இருந்து என் பென்சிலை வாங்கி கொடுத்தாங்க…  அது அவனுக்கு பிடிக்கல மம்மி அதான் மிஸ் போனதும் என்னை அடிச்சிட்டான்”.

அவன் வாயை துடைத்தவாறு “பதிலுக்கு நீயும் கை நீட்டினியோ” என்று கடுமையான குரலில் கேட்டாள் கங்கா.

அவளை பொறுத்த வரை பொறுமைக்குதான் முதல் இடம். சூர்யாவுக்கும் அவர் சொல்லி கொடுத்தது அதுதான்… ஆனால் ‘கோபம்’ இந்த ஒரு விசயத்தில் மட்டும் அப்படியே அவன் தாத்தா மாதிரி உருவெடுத்திருந்தான் கங்காவின் மைந்தன். அவளால் அவனிடம் இருந்து இந்த ஒரு குணத்தை மட்டும் மாற்றவே முடியவில்லை.

“இல்லை மம்மி அதுக்குள் மிஸ் வந்துட்டாங்க. சோ, அவனை அடிக்க முடியல … பட்,  டுடே ஐ’வில் கிவ் மை பனிஸ்மேன்ட்” என்றான் சிறு வயது கோபத்துடன்.

“இங்கு பாரு கண்ணா வருண் செஞ்சது மிஸ்டேக்-தான்… சோ, நீ அதை மிஸ்கிட்டதா சொல்லனும். தட் இஸ் தி கரெக்ட் வே. நீ மிஸ்கிட்ட சொல்லாம அவனை அடிச்சனா அம்மா உன்கிட்ட பேச மாட்டேன்”.

தான் எது சொன்னால் அவன் இந்த கோபத்தை கை விடுவான் என்பது கங்காவுக்கு நன்கு தெரியும்.

“சரி மம்மி அவனிடம் நான் சண்டை போடாம இருக்கேன் உங்களுக்காக”  என்றான் கோபத்துடன்.

அப்பொழுதுதான் தன் கணவனும் இங்கே இருக்கிறார் என்ற நினைவு கங்காவுக்கு வந்தது. சங்கர் அமைதியாக இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டு இருந்தார்.

அவருக்கு இந்த விஷயம் நேற்றே மகன் சொல்லி தெரியும் இருந்தும் ‘நீயே இதை அம்மாவிடம் நாளை சொல்லி விடு’ என்று சூர்யாவிடம் சொன்னார்.

அவருக்கு தன் மனைவி இதை எப்படி கையாலுவாள் என்று நன்கு தெரியும். கங்காவின் அப்பா ரொம்பவே பழையவாதி…. பெண்கள் எப்பவும் வீட்டின் உள்ளே இருக்க வேண்டும் வீட்டு ஆண்கள் பேச்சை கேட்டு அடங்க வேண்டும் என்ற குணம் உடையவர்.

ஆனால், கங்காவின் அம்மா அவளையும் அவன் அண்ணன் மாணிக்கத்தையும் அப்படி வளர்க்கவில்லை. மாணிக்கம் அப்படி எந்த கட்டுபாடும் விதிக்காதவன்…. அவனை பொறுத்த வரை பெண்களும்  ஆண்களுக்கு சமம். அதனால் கங்காவுக்கு அவளின் அண்ணனின் குணம்  ரொம்ப பிடிக்கும்.

“வாங்க சாப்பிடலாம்” என்ற கங்காவின் குரலில் சுயம் வந்தவர் “அப்பாடி இப்பவாது நான் ஒருத்தன் இங்கு இருப்பது உன் கண்ணுக்கு தெரிந்ததே….. எங்கே என்னை பட்டினி போட்டு ஆபிஸ் அனுப்பி விடுவாயோ என்று நினைத்தேன்” என்றார் குரலில் கேலியோடு.

“போதும் உங்களுக்கு என்னை எப்படியாவது வம்பு இழுக்க வேண்டும்…. வாங்க சீக்கிரம் சாப்பிட்டு விட்டு சூர்யாவை பள்ளியில் கொண்டு விடுங்கள்”.

“அதானே பார்த்தேன் உன் மகனுக்கு தாமதம் ஆகுதுனு என்னை கவனிக்கிறாய்…. ஹ்ம்ம் இல்லை என்றால் நான் எங்கு உன் கண்ணுக்கு தெரிய போகிறேன்” என்றார் ஒரு பெருமூச்சுடன்.

“ஹ்ம்ம் ரொம்ப ஆசை தான் எல்லாம் கவனித்த வரை போதும் சாப்பிட வாங்க” என்று சிரிப்புடன் சொல்லி விட்டு சென்றாள் கங்கா. பின் அவருக்கு சாப்பாடு பரிமாறி சூர்யாவையும் கிளப்பி கொண்டு இருந்தாள்.

சூர்யாவை காரில் ஏற்று முன் “ சூர்யா ஸ்கூலில் …… அவள் முடிக்கும் முன் அவனே திரும்பி “மிஸ்கிட்ட மரியாதையா பேசனும், கேர்ள்ஸ கிண்டல் பண்ண கூடாது, யாரை பார்த்து பேசும் பொழுது கண்ணை பார்த்து பேசனும், bad வேர்ட்ஸ் பேச கூடாது …. இதானே நான் கண்டிப்பா follow பண்றேன் ஓகே …. பை மம்மி” என்றுவிட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அவனின் சுட்டி தனத்தை பெற்றோர் இருவரும் ரசித்து கொண்டு இருந்தனர்.

“ஹ்ம்ம் இதெல்லாம் நல்லா கடைபிடிக்கிறான்… ஆனால் கோபத்தை மட்டும் விட மாட்டிக்கிறான்” என்றாள் மனத்தாங்கலுடன்.

“விடு கங்கா கண்டிப்பாக ஒரு நாள் அவனுக்கு புரியும் நீ வருத்த படாத” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

காரை ஓட்டி கொண்டு இருந்த சங்கருக்கு தன் மனைவியை நினைத்து பெருமையாக இருந்தது. “பள்ளியில் பிள்ளைகள் படிப்பை மட்டும் தான் கற்று கொண்டு வருகிறார்கள்…. பெற்றவர்கள் நாம் தான் பிள்ளையின் வளர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டும். சிறு வயதில் நல்ல பழக்கம் சொல்லி கொடுத்தால் தான் வளரும் போது நல்ல மனிதனாக வளருவான்… அவன் வளர்ப்பு பெற்றோர் நம் கையில் தான் இருக்கு” என்பாள். அவள் சொன்ன மாதிரி சூர்யாவையும் வளர்த்தாள் என்று நினைத்து கொண்டார்.

இங்கு வீட்டிலும் கங்கா இதை தான் நினைத்து கொண்டு இருந்தாள்.  தன் அப்பாவை தவிர தன் வாழ்வில் தனக்கு கிடைத்த மற்ற மூன்று ஆண் சொந்தகளும் அவளுக்கு கிடைத்த வரம் என்பாள். அவள் கணவன், மகன், அவள் அண்ணன்… ஆனால் அவள் அண்ணனை தான் அவளால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.

 அவள் அண்ணன் அப்பாவின் பேச்சை கேட்காமல் ஓடி போய் கல்யாணம் செய்து கொண்டார். அதனால் அவள் அப்பா அவரது இறுதி காலம்  வரை கோபத்தில் தான் இருந்தார்.

பின் பிள்ளை பாசம் கடைசி வென்று விட இறக்கும் போது ‘அவனுக்கு சேர வேண்டிய சொத்தை அவனிடம் சேர்த்து விடு என்று சொல்லி… அவனிடம் தான் மனிப்பு கேட்டதாகவும் சொல்லு’ என்றுவிட்டு மறைந்து விட்டார்.

அண்ணன் மீது அதிகம் பாசம் கொண்டு இருந்தவளுக்கு அவளது அப்பாவின் வார்த்தை மகிழ்ச்சியை தந்தது தான். ஆனால், அப்பா இறந்த கொஞ்ச நாளிலே அவளது அம்மாவும் இறக்க அவளால் எதையும் யோசிக்க முடியல.

அவள் அப்பா இறந்து இரண்டு வருடம் ஆகிறது இன்னும் அவள் அண்ணன் அவளிடம் வந்த பாடு இல்லை. சூர்யா ஒரு வயது குழந்தையா இருக்கும் பொழுது வீட்டை விட்டு சென்றார். அவனுக்கு இப்போ பத்து வயது ஆகிறது இன்னும் அவரை பற்றி ஒரு தகவலும் இல்லை.

பின் வீட்டு வேலை செய்யும் பெண் வந்து விட மதிய சாப்பாடு தயாரிக்கும் வேலையில் இடுபட்டு கொண்டு இருந்தாள்.

 இங்கு சூர்யாவை பள்ளியில் கொண்டு விட்ட சங்கர் தன் அலுவலகத்துக்கு சென்றார். பிறவியிலே கங்கா மதுரையில் பெரிய வளமான குடும்பத்தை சேர்ந்தவள்.

சங்கர் இப்பொழுது கங்காவின் அப்பா நிறுவனமான ஜவுளி கடை மற்றும் அவர் நிறுவனம் கார் உதிரி பாகம் செய்யும் தொழிலும் பார்த்து கொண்டு இருக்கிறார்.

அலுவலகம் சென்று அமர்ந்தவர் அங்கு உள்ள வேலையில் மூழ்கி விட்ட நேரத்தில் அவருக்கு போன் கால் வந்தது…. எடுத்து பேசியவர் மிகவும் அதிர்ச்சி ஆகி தன் மனைவியை கூட்டி கொண்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு சென்றார்.

“எதுக்குங்க மருத்துவமனைக்கு வந்துருக்கிறோம்… அய்யோ சூர்யாவுக்கு ஏதாவது ஆகிவிட்டதா சொல்லுங்க” என்று அழுது கறைந்து கொண்டு இருந்தாள்.

ஆனால் சங்கர் காட்டிய அறையை திறந்து கொண்டு சென்றவள் அப்படியே உறைந்து நின்று விட்டாள். அங்கு படுத்து இருந்தவர் அவள் அண்ணன் மாணிக்கம். ‘இதனால் தான் தன் மனம் இரண்டு நாட்களாக கொஞ்சம் நெருடலாகவே இருந்ததா… அய்யோ என் அண்ணனை இந்த நிலையிலா  நான் பார்க்க வேண்டும்’ என்று மனதில் அரற்றி கொண்டு இருந்தாள்.

கதவை திறக்கும் சத்தம் கேட்டு மாணிக்கம் கண் விழித்தார். தன் தங்கையை கண்டதும் அவர் கண்களில் ஒரு மின்னல் வந்து சென்றது….

மெதுவாக கை அசைத்து கங்காவை அழைத்தார். கண்களில் வழிந்த கண்ணீருடன் தன் அண்ணன் பக்கம் சென்றவள் அவர் கைகளை பிடித்து கொண்டு,

“ஏன் அண்ணா என்னை இப்படி ஏமாற்றினாய்… உன்னை இப்படி பார்ப்பேன்னு கனவிலும் நினைக்கவில்லை. உனக்கும் ஒன்னும் ஆகாது நீ குணமாகி வந்து விடுவாய் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது” என்றாள்.

மாணிக்கம் ஒரு சோக முறுவலுடன் மெதுவாக “ இல்லை கண்ணு இன்னும் கொ…ஞ்சம் நே…ரம் ம…ட்டும் தான் இந்த உயிர் இருக்கும். எ..ன் பத்மா எ..ன்..னை வி..ட்டு போய் விட்…டாள்.”

“அவள் இல்லா உலகில் நா…ன் இருக்க விரும்…ப வில்லை…. என் கவலை எல்லாம் எ…ன் ம..கள் பற்றி தா…ன்” என்றார் மூச்சு வாங்க.

“இல்லை அண்ணா உனக்கு துவும் ஆகாது…. உன் மகள் எங்கே அவளை நான் பார்க்கனும்” என்றாள் கண்ணீருடன்.

மாணிக்கம் திரும்பி பார்த்த திசையில் பள்ளி சீருடையுடன் கண்களில் மிரற்றியோடு கண்ணீருடன் ஒரு ஐந்து வயது சிறுமி நின்றாள். கங்காவுக்கு பார்த்ததும் தெரிந்து விட்டது அது தன் அண்ணன் குழந்தை என்று அப்படியே அவள் அண்ணனின் ஜாடை நிறம் மட்டும் கொஞ்சம் அதிகம் அவள் அண்ணி நிறம் போல் என்று நினைத்து கொண்டாள்.

தன் அண்ணனிடம் இருந்து விலகி அந்த சிறுமியின் அருகில் சென்றவள் அவளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாள். அவளை அழைத்து கொண்டு தன் அண்ணனிடம் சென்றவள் “ அப்படியே உன் முகம் அண்ணா” என்றாள் பூரிப்புடன்.

அவர் மகளை பார்த்ததும் மாணிக்கத்தின் முகம் மென்மையானது, “கங்…கா இவ…ள் மலர்…விழி எனக்கு ஐந்து வரு…டம் கழி…த்..து பிறந்தவள். இனி இவள் உங்…க..ள் இரு..வ..ர் பொ..று..ப்பு” என்று சங்கரின் கை பிடித்து சொன்னவர்…. இதுக்கு தான் காத்து இருந்தது போல் மாணிக்கத்தின் உயிர் அவரை விட்டு பிரிந்து சென்றது.

என்ன, எப்படி’ என்று யோசிக்ககூட நேரம் இல்லாது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ஒரு லாரி வந்து இவர்கள் சென்ற காரின் மீது மோதி மாணிக்கத்தின் மனைவி அங்கேயே இறந்து விட்டார். தன் மகளை தங்கையிடம் சேர்க்க தான் இவ்வளவு நேரம் மாணிக்கம் கையில் உயிரை பிடித்து வைத்து இருந்தார்.

இரண்டு மாதம் முன்பு தான் அவர் குடும்பம் மதுரைக்கு குடி வந்தது. அவருக்கு தன் தங்கையின் வீடு தெரிந்தாலும் அவர் அங்கு செல்ல வில்லை…. எங்கே, தன்னால் தன் தங்கை மீது அப்பா கோபித்து கொள்வாரோ என்று பயந்து இருந்தார். இறுதயில் சேரவே முடியாத படி சென்று விட்டார்.

எல்லா வேலையும் முடிந்து இருவரையும் அடக்கம் செய்து வர இரவு பத்து மணி ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்த பின்னர் தான் கங்காவுக்கு சூர்யா நினைவு வந்தது. வரண்டாவில் வேலைக்காரி அமர்ந்து இருக்க பக்கத்தில் படுத்து இருந்தான்.

இவர்கள் இருவரும் வரும் சத்தம் கேட்டு முழித்தவன் தன் அன்னையிடம் ஓடி சென்றவன்  சடன் பிரேக் போட்டது போல் நின்றான் அவள் தோளில் உறங்கி கொண்டு இருந்த சிறுமியை பார்த்து ‘யாரு’ என்ற முக பாவத்துடன் இருந்தான்.

“யாரு மம்மி இந்த பேபி” என்றான்.

அவன் குரல் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்தவள் தன் அத்தையிடம் இருந்து இரங்கி அந்த பெரிய வீட்டை ஒரு மிரற்றியுடன் மலங்க மலங்க அவளது சாம்பல் நிற கண்களை உருட்டி பார்த்து கொண்டு இருந்தாள்.

அவளின் அந்த கண் மற்றும் அதனின் கலர் சிறுவனான  சூர்யாவை கவர்ந்து விட அவளிடம் “யூர் ஐஸ் ஆர் சோ பீயூட்டி லைக் யூ” .

வாட்’ஸ் யூர் நேம் பேபி” என்றான்.

மலர்விழி பிறந்ததில் இருந்து ஒரு கிராமத்தில் இருந்தவள். அவளுக்கு இந்த நகரத்து வழக்கம் புதிது அதனால் இப்படி ஒருவன் தன்னை அழைப்பதை கண்டு பயந்தவள் கங்காவின் அருகில் போய் நின்று அவளின் கையை இறுக்கி பிடித்து கொண்டாள்.

“சூர்யா இது மலர்விழி இனி இவள் நம்முடன் தான் இருக்க போகிறாள். மீதி நாளை பேசி கொள்வோம் நீ அப்பா கூட தூங்கு நான் மலருடன் படுத்து கொள்கிறேன்” .

“நோ மம்மி நான் உங்ககூட தான் படுப்பேன்” –சூர்யா.

“கண்ணா அம்மா சொல்லவதை கேள். நீ அப்பா கூட படுத்துக்கோ மலர் தனியா படுத்தால் பயப்படுவாள்” என்று கொஞ்சம் கடுமையாக பேசி அவனை அனுப்பி வைத்தாள்.

படுக்கையில் விழுந்த மலருக்கு ஒன்றுமே புரியவில்லை. எடுத்து சொன்னாலும் புரிந்துகொள்ளும் வயதும் இல்லை அவளுக்கு. சூர்யாக்கு அவளின் பயந்த உருண்டை சாமபல் நிற கண்கள்  நினைவோடு உறங்கிவிட்டான்.

மலரும்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!