Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 20 2

 

“வேந்தன் அண்ணா கோவிலுக்கு போய்ட்டு வர்ற வரை இப்படி எல்லாம் பேசக்கூடாது… ”

 

பதில் மெசேஜாக ,



Advertisement

 

” அப்ப ஏன் பேசப் போறேன்….ஒன்லி செய்கை தான்….. என்றதோடு இதயங்களையும் முத்தங்களையும் ஸ்மைலிகளாக அனுப்பியதோடு கண்ணடிக்கும் ஸ்மைலியையும் அனுப்ப ….. ”

 

Advertisement

முகத்தில் ஃபோனைப் புதைத்துக் கொண்டவள் , “விக்கி ……” என்ற அழைப்போடு குட்னைட் சொல்லி வைத்துவிட்டாள்.

Advertisement

 

முகத்தில் புன்னகையோடு நிம்மதியான உறக்கமும் அவளைத் தழுவிக் கொண்டது. ஆனால் விக்ரமால் உடனே உறங்க முடியவில்லை. மனைவியிடம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்தவனுக்கு , அவளின் ‘விக்கி’ என்றழைப்பு ஏதேதோ ஞாபகங்களை கொண்டு வந்து விட்டது. அப்பொழுதுதான் அவள் விமான நிலையத்தில் கட்டிப்பிடித்து காதல் சொல்லும் போதும் சத்தம் குறைவாக என்றாலும் ‘விக்கி’ என்றது ஞாபகம் வர கடந்துப் போன சில நாட்கள் ஞாபகம் வந்தது.

 

Advertisement

மணி பார்த்தான் , அமெரிக்காவில் பகலாக இருக்கும் என்பதால் திலீபனுக்கு உடனே அழைத்து விட்டான்.

 

“என்னடா புது மாப்பிள்ளை இந்நேரம் ஃபோன் பண்ற…”

 

“புது மாப்பிள்ளையா இருந்து என்னப் பண்ண நான் துபாய்ல உன் தங்கச்சி சென்னைல….அப்படியே பக்கத்துல இருந்தாலும் நான் இன்னும் KAB தான் …..”

 

திலீபன் சிரிப்பான் என்ற எதிர்பார்த்தவனுக்கு மாறாக, மிகவும் சீரியஸாக ,

 

“ஏன்… ஏன் மாப்ள கட்டாயத்துல நடந்துட்டுனு யோசிக்கிறியா …. பாப்பாவுக்கு பேச்சு போச்சுங்கிறத தவிர வேற குறையே கிடையாதுடா … அதுவும் திரும்ப வந்துரும்….”

 

“டேய் லூசு… ஏன் இப்படி யோசிக்கிற ….” என்றவன் காரணத்தைக் கூற , இப்போது ஆதி நினைத்தது போலவே சத்தமாக சிரித்தவனிடத்தில் மூன்று மாத அழும் மகனைக் கொண்டு வந்து தந்த சங்கீதா , அவனிடமிருந்து ஃபோனை வாங்கி ,

 

“அண்ணா எப்படி இருக்க , நாங்க எல்லாம் பேக் பண்ணியாச்சு பொங்கலுக்கு ஊரோட வந்துருவோம்…. உன் கல்யாணத்துல அப்படி செய்யணும் இப்படி செய்யனும்னு கனவு கண்டேன் . கடைசில நான் பக்கத்துல இல்லாமயே கல்யாணம் பண்ணிக்கிட்ட , ஊருக்கு வந்து இருக்கு.” எனச் செல்ல சண்டை இட்டுச் செல்ல , மறுபடி வாங்கிய திலீபன் ,

 

“ஏன்டா நீ சொன்னது போல உன் கல்யாணத்துல தான் முதல் பிள்ளையே பெத்துருக்கேன் … படிப்பு படிப்புனு ஒரு மனுசன வச்சு செஞ்சுட்டிங்களே டா .… இதுல பாட்டிக்கு உடம்பு சரியில்லனு அத்தையும் பிரசவம் முடிஞ்ச ஒரு வாரத்துலயே கிளம்பியாச்சு … திடீர்னு அரவிந்த் கல்யாணம் அதும் வித்யாவோட , உன் மருமகனுக்கு விசா கிடைக்க இவ்வளவு நாள் …. ரொம்ப மிஸ் பண்றோம் டா எல்லாரையும்… எப்படா ஊர் வருவோம்னு இருக்கு …”

 

இது தான் சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த விக்ரம் , ” மச்சான் உன்  தங்கச்சிங்க  எல்லாருக்கும் கல்யாணம் ஆகிருச்சா….”

 

“டேய் எங்க வீட்டு சின்ன இளவரசிய நீ தானே கல்யாணம் பண்ணின … என்னடா கேள்வி இது….”

 

“மச்சான் … உன் சித்தப்பா பொண்ணுங்க நிறைய பேர் உன்டே டா ….”

 

“என் தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆகிருச்சானு கேட்கிறியா … இல்ல நீ சைட் அடிச்ச உன் மாமா பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சானு கேட்கிறியா ….” என சிரித்த திலீபன் ,5tr6u89/

 

“தங்கச்சிங்க எல்லாருக்கும்  கல்யாணமாகி குழந்தையும் பொறந்தாச்சு , அம்மு மட்டும் படிச்சிட்டு  இருந்தா … இப்ப என்ன திடீர்னு குடும்ப விஷயமெல்லாம் பேசுற …   நான் தான் வெளிநாட்டுல மாட்டிக்கிட்டேன். நீ அங்க தான இருந்த ….போடா பிஸ்னஸ் பிஸ்னஸ்னு குடும்பத்துல என்ன நடக்குதுனு தெரியாம இருக்காத … எங்க கல்யாணத்துக்கு தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த ,அனு கல்யாணத்துக்கும் அப்படி தான் வந்த … கடைசில உன் கல்யாணத்தையும் ரெண்டே நாள்ல முடிவு பண்ணிட்டியேடா …..”

 

சிரித்துக் கொண்ட விக்ரம் , ” முன்ன எப்படியோ இனி நீ சொல்றது போல குடும்பத்தையும் பார்க்கணும் … சரிடா என் மருமகன சீக்கிரம் கூட்டிட்டு வா…ஒரு நாள் கைல வச்சுப் பார்த்ததே அவ்வளவு சந்தோஷமா இருந்தது … “அதற்கு மேல் சாதாரணமாகப் பேசி வைத்தாலும் மனதில் ஒரு நிம்மதியும் வந்தது. இப்போது அவனுக்கும் மனைவியின் நினைவுகளுடன் நிம்மதியான உறக்கம் .

 

அவனது வேலைகளை அங்குப் பார்க்க , இங்கு வரு தங்கள் அலுவலகத்திற்குப் போவதும் மாலையில் இரு மாமியார்களும் அவளை குரல் நிபுணத்துவரிடம் அழைத்துச் சென்று வருவதும் எனப் பார்த்து பார்த்து மருமகளை கவனித்துக் கொண்டனர். அவள் உறவினள் என்ற போதே அவளைக் கவனித்துக் கொண்டவர்கள் தங்கள் குலம் தழைக்கச் செய்ய வந்தவளை சும்மா விடுவர்களா.

 

வீட்டினரின் கவனிப்பும் கணவனின் அன்பும் அமிர்தாவை உடலளவிலும் மனதளவிலும் உற்சாகமாக வைத்திருந்தது .அந்த வாரக் கடைசியில் அண்ணனோடு வந்த தோழியைக் கண்டதும் உற்சாகம் இரு மடங்காக , வருவின் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.

 

அரவிந்த் மனைவியை  மனமே இல்லாது விட்டுச் செல்ல வந்தவன் , தங்கையை விக்ரம் வீட்டினர் கவனித்துக் கொள்வதைக் கண்டு மன நிறைவோடுச் சென்றான்.

 

இப்போது மாலையில் வித்யாவும் அவளோடு செல்ல , அந்த சென்டரைக் கண்ட வித்யா ,

 

“ஹேய் இது என்னடி எங்க காலேஜ் பக்கத்துலயே இருக்கு , உங்கண்ணா சென்னைல நிறைய நாள் பயிற்சி எடுக்க வந்துருக்கோம்னு சொன்னாங்க. ஆனா இங்க னு சொல்லல….”

 

” பின்ன உன்னைய பார்க்க அண்ணனுக்கு வாய்ப்பு உருவாக்கித்தர வேண்டாமா …. நான் இங்க இருந்தா , அண்ணா பக்கத்துல அவங்க காலேஜ் மேட் ரூபாலிய பார்க்க போவாங்கனு எனக்குத் தெரியும்.” எனச் சொல்லி சிரிக்க ,

 

உணர்ச்சிவசப்பட்ட வித்யா , ” எப்படி உனக்குத் தேங்க்ஸ் சொல்லனேத் தெரியலடி …. நீங்க ரெண்டு பேரும் என் ஒவ்வொரு அசைவையும் கவனிச்சிட்டு இருந்துருக்கீங்க, ஆனா நான் …ஏன் வரு அண்ணன நீ அஞ்சு வருஷம் கழிச்சு இப்போதான் பார்க்கிறியா ….”

 

அழகாக கண் சிமிட்டி ‘இல்லை’ என்றவள் ,

 

” எப்பவும் உங்கண்ணன் கூடவே இருக்கணும்னு தானே இந்தப் படிப்பையே படிச்சேன் . சோ உங்க அண்ணன ஃபாலோ பன்றது ரொம்ப கஷ்டம் இல்லையே , சைட் விசிட் க்கு நம்ம கம்பெனிக்கு மும்பய் கே போயிருக்கேன்….வேலையில உங்கண்ணா டெடிகேஷன் இருக்கே….” என அவனைப் பார்த்த நாட்களை நினைத்தவளின் முகம் புன்னகை பூச ,

 

“நீ சைட் அடிக்க போயிருக்க ….சைட் விசிட் போனாளாம்….” என சிரித்த வித்யா ,

 

“பேசியிருக்கியா…. வரு.. ஐ …மீன்… நேருக்கு நேர் ….”

 

“ம்ஹூம்…. உன் கல்யாணத்துக்கு முதல் நாள் தான் பார்த்தோம் … அதுக்கு மேல சீக்ரெட் ” எனச் சிரித்தாள்.

 

“போடி …” எனக் கோபித்துக் கொண்டவள், அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. இரவில் இருவருமே தங்கள் அறையிலயே இருந்துக் கொண்டனர்,  அவரவர் கணவரிடம் தனிமையில் பேசுவதற்கு ஏதுவாக .

 

இந்நிலையில் அன்று இரவு வந்த அழைப்பை எடுத்ததுமே விக்ரம் மனைவிக்கு பறக்கும் முத்தங்களை கொடுக்கவும் , புன்னகையோடு நின்றவளிடம் ,

 

”  ஹாப்பி நியூ இயர் … மை டியர்…. அதோட வேந்தனும் வந்துட்டான் …. அதுதான் இந்த முத்தம் ….” எனப் புன்னகைக்க , அதே வேளையில் அறைக் கதவும் தட்டப்பட, திறந்தவள் வித்யாவோடு அண்ணனையும் கண்டு மகிழ்ந்தவளிடம் ,

 

“வரு உங்கண்ணன் உனக்கு மட்டும் சர்பிரைஸ் தரலடி … எனக்கும் தான் …” என்றவள் மொபைலில் அண்ணனையும் கண்டுப் பேசிவிட்டு வீட்டு வரவேற்பறையில் நின்றிருந்த பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டே அவரவர் அறைக்கு வந்தனர்.

 

அதற்குள் அரபு நாடுகளிலும் புது வருட கொண்டாட்டம் துவங்க , தன்னால் இன்று அவளோடு இருக்க முடியாத ஆதங்கத்தை வெளிப்படுத்தியவன் விரைவில்  வேலை முடிந்து வந்து விடுவதாகச் சொன்னவன் பார்ட்டிக்குச் செல்வதாக சொல்லி சென்றான்.

 

எப்போதும் அவன் நினைவில் இருந்தவளுக்கு புது வருடம் துவங்குவதுக் கூட ஞாபகமில்லை. மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் இறுதியில் பார்ட்டிக்குச் செல்கிறேன் என்றதும் மனது என்னவோ போலாயிற்று.

 

வளைகுடா நாட்டின் நேரப்படி புது வருடம் துவங்க சிறிது நேரமிருக்க , காத்திருந்தவள் சரியான நேரத்திற்கு அவனை அழைத்து விட்டாள். உடனேயே எடுத்தவன் , “ரிது…. நீ இன்னும் தூங்கல… அன்ட் வாட் எசர்பிரைஸ் நீயா கூப்பிட்டுருக்க….” எனப் புன்னகைக்க ,

 

‘இல்லை’ என்பதாக தலையசைத்தவள், “பார்… பார்ட்டி… முடிஞ்சதும் என்னைக் கூப்பிடுவீங்களா , எங்க பார்ட்டி … அதே ஹோட்டல்லயா… வேற எங்கேயுமா…..”

 

பலமாக சிரித்த விக்ரம் , “என்னாச்சு பார்ட்டினதும் பயப்படுறியா…. நான் தங்கியிருக்கிற இடத்துல தான் … ” என்றவன் ஒரு சின்னக் கண்ணாடி கோப்பையைக் காண்பித்து ,

 

“இதுல ஒரு சிப் ….அவ்வளவுதான் வச்சிட்டேன்…. ஒன் மினிட்” என்றவன் போனையும் அணைத்து விட்டு ஒரு பத்து நிமிடத்தில் அவனறையில் இருந்து அழைத்தான்.

 

அதற்குள் வரு ஏதேதோ ஞாபகத்தில் அழுதிருக்க அவள் முகத்தைப் பார்த்தே ,

 

” என்னடா வருஷ துவக்கமே அழுதுருக்க…. நான் ரொம்பலாம் குடிக்க மாட்டேன். என் வாழ்க்கைல ஒரே ஒரு தடவை அந்த தப்ப பண்ணிருக்கேன். அதுக்கப்புறம்… ம்ஹும்…. அரவிந்துக்குக் கூடத் தெரியும் …..”

 

“தெரியும் …. ” எனச் சிறு குழந்தைப் போல் சொல்ல ,

 

” என்ன… தெரியுமா … நிச்சியம் அரவிந்த் சொல்ல வாய்ப்பில்ல … திலீபன் சொன்னானா…. வரட்டும் அவன்…” எனச் சிரிக்க ,

 

“யாரும் சொல்லல நானே பார்த்தேன்….” எனப் பட்டென பதிலளித்தவள் , பின்

 

“அது… ஊர்ல … அன்னைக்கு திலீபண்ணாவ வீட்டுக்கு அழைச்சிட்டு வரும் போது கார்ல நீங்களும் இருந்ததைப் பார்த்தேன்….”

 

“ஓ…. அது மறக்கவே முடியாது. சரி நீ அப்பவே என்னைப் பார்த்திருக்கியா …. சாரி எனக்கு உன்னை ஞாபகமில்லை , நீங்க அக்கா தங்கச்சிங்க எப்போவும் ஒன்னா இருப்பீங்களா … எனக்கு நீ யார்னு தெரியாம போச்சு … உண்மையச் சொல்லணும்னா நீ ன்னு இல்ல யாரையும் எனக்கு அடையாளம் தெரியாது. எப்பவும் பிஸ்னஸ்… பிஸ்னஸ்… பிஸ்னஸ்தான்….அம்மா வீட்டு சொந்தங்கள யாருனு தெரியாம , சித்தியா , அத்தையானு யோசிக்கும் போது அம்மாகிட்ட நல்லா திட்டு வாங்குவேன்னாப் பாரு ….” எனச் சிரித்தவன் ,

 

“இனி அப்படியில்ல… என் கனவு ஓரளவு நிறைவேறிடுச்சு , இனி குடும்பத்தைப் பார்க்கணும் பிளஸ் குடும்பத்தை பெருக்கணும்….” என சிரிக்க ,

 

அவன் பேச்சுக்களைக் கேட்டு வரு கண்களில் நீர் கோர்க்க,

 

” எப்ப வருவீங்க …. எனக்கு உங்களை நேர்லப் பார்க்கணும் …. சீக்கிரம் வாங்க … ஐ….” என்றவள் , ஃபோனை வைத்து விட்டாள்.

 

‘ எது வந்த போதும்….

 

இந்த அன்பு போதும் … ‘

 

தூவும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!