Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Kavi Sowmi’s Ennaval 30

என்னவள்_30

 

கார்த்திக் வீட்டில் மொத்தமாக குழுமி இருந்தனர். கார்த்திக் தாய்,தகப்பனார் அதே போல மாயாவின் தாய்,தந்தை என்று மொத்தமாக…பிருந்தா டியூஸ்சனுக்கு புறப்பட்டு சென்று இருந்தாள்.

 



Advertisement

“மாயாவின் தகப்பனார் கார்த்திக்கை பார்த்து கார்த்திக் கல்யாணம் முடிஞ்சாச்சு ஹனிமூனுக்கு எந்த ஊருக்கு போகலாம்ன்னு முடிவு செஞ்சு இருக்களிங்க என்று ஆரம்பித்தார். “

 

மாயா கார்த்திக் என்ன சொல்ல போகிறான் என்று அவனது முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள். 

Advertisement

 

Advertisement

“அங்கிள் வேலை நிறைய இருக்கு…இப்ப

முடிக்கற வேலை வரிசை கட்டி நிற்கிறது இப்போதைக்கு எங்கேயும் போக முடியாது.  இப்பவே சிமெண்ட் காலி மண் தேவையின்னு லைனா போன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க…நான் சைட் பக்கம் போயே பத்து நாள் ஆகுது. ஒரு மாதம் போகட்டும் யோசிக்கலாம். “

 

Advertisement

இப்போது கார்த்திக்கின் தகப்பனார் தான் பேசினார்.  “டேய் நான் பார்த்துவிட்டு இருந்த வேலை தானே நானே கவனிக்கறேன். இப்போது போகாமல் எப்போது போக போற.. கடைசி கடைசிக்கு நாலுநாளாவது போயிட்டு வா…”

 

பார்த்துக்கொண்டு இருந்தது மாயாவுக்கு கார்த்திக் மேல் கோபம் வந்தது….வேகமாக எழுந்து தங்களது அறைக்கு போக மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். லஷ்மி தான் “என்ன மாயா பேசாமல் எழுந்து போகிற..என்று கேட்க…”

 

“இல்லை அத்தை அவர்களே பேசி முடிக்கட்டும் அப்புறம் வர்றேன் எனக்கு தலைவலிக்கிறது…என்று சொல்லி விட்டு போனாள்.”

 

“இல்லை கார்த்திக் மாயாவை கூப்பிட்டுட்டு போயிட்டு வா அவ்வளவு தான் சும்மா…சும்மா வேண்டாம்ன்னு சொல்ல கூடாது.  இதுதான் டைம்…இதெல்லாம் நல்ல மெமரிஸ்…ஒகே வா…எந்த ஊருக்கு அப்படிங்கறதை மாயா கிட்ட கேட்டுச்சொல்லு ..என்றபடி நகர்ந்து சென்றார்  கார்த்திக்கின் தந்தை. “

 

“அப்பா…எனறவன் சரி நாளைக்கு வேலை நடக்கறது இடத்திற்கு வந்து ஒரு தடவை பார்த்துவிட்டு புறப்படறேன். ரெண்டு நாள் தான் அதற்கு மேலே எல்லாம் சுற்றி முடியாது.  “

 

“என்னவோ செய்…உன்னோட இஷ்டம்”  என்றவர் தனது நண்பனை பார்த்து…”சாப்பிடலாம் வாடா என்று அழைத்தார். “

 

அங்கே மாடிக்கு செல்ல…”மாயா இவனை பிடித்து கொண்டாள். அதென்ன கார்த்திக் ஹெனிமூன் வேண்டாம்ன்னு நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு சொல்லறிங்க…என்கிட்ட கேட்க மாட்டிங்களா…நெற்றியை சுருக்கியபடி கூற…”

 

“அவங்கதான் புரிஞ்சிக்காமல் பேசறாங்கன்னு பார்த்தா நீ வேற படுத்தாத மாயா…ரெண்டு நாள் தான் வரமுடியும் எந்த ஊர்ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ…அதுவும் நாளைக்கு எல்லாம் புறப்பட முடியாது.  ரெண்டு நாள் கழித்து தான் டேட் பிக்ஸ் பண்ணனும். பக்கத்தில் ஏதாவது  இடம் பாரு…”

 

“ஏன் அவ்வளவு கஷ்டம் கார்த்திக்..இஷ்டம் இல்லாமல் எங்கேயும் வர வேண்டாம். இங்கேயே இருக்கலாம் நான் போய் அப்பாகிட்ட சொல்லிடறேன்.”

 

“மாயா…”

 

“ஆமாம்…ரெண்டு நாளில் என்ன பார்க்கமுடியும். .இல்லை உங்களை பற்றி நான் தான் என்ன தெரிஞ்சிக்க முடியும்…நான் தான் பைத்தியக்காரி…பைத்தியம் மாதிரி உங்களை பற்றி  மட்டும் யோசிக்கறேன் உங்களுக்கு அது மாதிரி எதுவுமே இல்லை போல இருக்கு .பரவாயில்லை பொறுமையா தெரிஞ்சுக்கறேன்.இன்னும் தான் வருஷம் இருக்கே அறுபது வயதில் கூட தெரிஞ்சிக்கலாம் ஒன்றும் அவசரம் இல்லை. “

 

[the_ad id=”6605″]

 

 

 

“மாயா…ஏன் இப்படி பேசற…எனக்கு கஷ்டமாக இருக்கும்….எதையும் யோசிக்கறது இல்லை எதிரி கிட்ட பேசற மாதிரி முகத்தில் அடிக்கறமாதிரி பேசற..”

 

“கார்த்திக் நான் நிறைய ஆசைப்பட்டேன் உங்கள் கூட அமெரிக்கா, ஆஸ்திரேலியா சுத்தனும்ன்னு எல்லாம் ஆசை இல்லை.  இங்கே இருக்கற ஊட்டின்னா கூட ஒகே தான்.  ஆனால் அட்லிஸ்ட் ஒரு வாரமாவது  நமக்கே நமக்குன்னு நேரத்தை செலவு பண்ணனும்ன்னு ஆசைபட்டேன் அது தப்பா…வேண்டாம்ன்னா சொல்லிடுங்க எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.  அடுத்து இருந்த பெட்ரூம்பில் கவிழ்ந்துபடுத்துக்கொண்டாள்.”

 

“மாயா…மாயா என்ன பாரு எதுக்காக இப்படி பேசற…சரி…ஒகே போகலாம்.  ஊட்டிக்கு போகலாமா…”

 

“வாட்… என்றபடி வேகமாக எழுந்தவள்…ஊட்டின்னா…ஊட்டிதான் செலக்ட் பண்ணுவிங்களா…நான் வேற இடம் பார்த்து வச்சிருக்கறேன்…எத்தனை நாள்  அதை மட்டும் சொல்லுங்க…குழந்தை போல ஆர்வமாக கேட்டாள்.”

 

“ஒரு வாரம் போகலாம் ஆனால் இந்த ஒரு முறை மட்டும் தான்  சீக்கிரம் செலக்ட்  பண்ணு….சும்மா சும்மா எங்கேயாவது போகணும்ன்னு கேட்க கூடாது.  “

 

ஒருவழியாக இரண்டு பேரும் புறப்பட்டனர்…அது தூரம் எல்லாம் இல்லை அருகில்இருந்த கேரளா என முடிவு செய்தனர்…அதிரபள்ளி இரண்டு தாள்…அப்படியே படகு இல்லம் இரண்டு நாள்கள்…இப்படி அழகாக ப்ளான் செய்து புறப்பட்டு இருந்தனர்.

 

“பிருந்தா கூட மாயாவிடம் அண்ணி போட்டோஸ் எல்லாம் அடிக்கடி வாட்சப்புக்கு  அணுப்பனும் என்று  கூறி அனுப்பி வைத்தாள்”… ஒரு வாரம் வேகமாக முடிவடைந்து இருந்தது. இரண்டு பேரும் ஹனிமூன்னிற்கு  சென்று …

 

அங்கே இவர்களை தவிர வேறு யாரையும்  யோசிக்க கூட நேரம் இல்லை அந்த அளவுக்கு இருவரும் அவர்களது உலகத்தில் சஞ்சரித்தனர். ஒரு இடத்தில் கூட கார்த்திக்கை விட்டு நகரவில்லை மாயா…அவனின் தோளோடு தோள் சாய்ந்தபடி அவனது கரத்தை பற்றியபடி கேரளாவை வலம் வந்தாள்.

 

மகிழ்ச்சி ஓன்று மட்டுமே இருவருக்கும் நடுவில் இருந்தது.  மாயாவை தவிர வேறு எதற்கும் கார்த்திக்கை யோசிக்கவிடவில்லை…இவனும் அவளிடம் மொத்தமாக மயங்கி தான் போயிருந்தான். நிறைய பிதற்றல்,நிறைய உளரல் என… “எப்படி மாயா நீ இல்லாமல் இத்தனை நாள் இருந்தேன் என்று கேட்டபடி…ஒருநிமிடம்  கூட அவளை தனியாக விடவில்லை. திகட்ட திகட்ட தனிமையை அனுபவித்தனர் .”

 

மொத்தத்தில் மயங்கி கிடத்தானா இல்லை மாயா அவனிடம் மயங்கி இருந்தாலோ தெரியவில்லை. எல்லாம் திரும்பி வரும் வரை மட்டுமே…இங்கே வந்ததுமே கார்த்திக் மொத்தமாக மாறி இருந்தான். அவனது வேலை அவனை விழுங்க ஆரம்பித்தது.  கார்த்திக்  காலையில் சைட்டிற்கு புறப்பட்டால் மாலை ஆறுமணிக்கு  வீட்டிற்கு  வர ஆரம்பித்து இருந்தான்.  அது கூட மாயாவிற்காக… அதுவும் முதல் நாள் சைட்டிற்கு செல்ல நேரம் முழுக்க அங்கேயே சென்று விட இவன் வீட்டிற்கு வந்த போது இரவு பத்துமணியை தொட்டு இருந்தது. 

 

[the_ad id=”6605″]

 

 

மாயா மதியம் அழைத்து முதலில் பேசி இருந்தால் இரவு லேட்டாகவும் சாப்பிட்டவள் கோபத்தோடு அவளது அறைக்குள் சென்று பெட்ரூம்பில் கதவை அடைத்து கொண்டு படுத்து கொண்டாள். இவன் வந்ததுமே கார்த்திக்கின் தாய் தந்தை இரண்டு பேருமே இவனை திட்ட ஆரம்பித்து இருந்தனர். “டேய் ஏண்டா இப்படி இருக்கற…புதுசா கல்யாணம் இப்போதுதானே  ஆகி இருக்கு…ஏன் இப்படி பண்ணற…சீக்கிரமே வரத் தெரியாதா…அவள் காலையில் இருந்து உன்னை தான் எதிர் பார்க்கறா…இங்கே யார் கிட்டேயும் பேசலை..புரிஞ்சி நடந்துக்கோ….என்று சொல்ல…”

 

“அம்மா இனி சீக்கிரம் வரேன் இப்ப சாப்பாடு தாங்க ரொம்ப பசிக்கிறது” என்றபடி சாப்பாடு புறப்பட்டான் தனது அறையை நோக்கி… ஹாலை தாண்டியவன் அங்கே  பெட்ரூம்  கதவு பூட்டி இருக்க…மெதுவாக கதவை  தட்ட  ஆரம்பித்தான் கார்த்திக். 

 

அவனுக்கு அவளுடைய பிடிவாதம் அப்போது புரியவில்லை. மாயா கதவை திற…என மறுபடியும் மறுபடியும் தட்ட பத்துநிமிடம் முடிந்த போது கதவை திறந்தாள்.

 

“ஸாரி கார்த்திக்…இங்கே வீட்டுக்கு காவலுக்கு என்ன வச்சிக்கலை நான் உன்னோட  ஒய்ப்…எனக்கு கொடுக்க வேண்டிய ரெஸ்பான்ஸ் நீ தரணும். இன்னொரு முறை இப்படி பண்ணின நான் கதவை திறக்கமாட்டேன். நீ ஹாலில்தான் தூங்கணும். நீ என்ன தட்டினாலும் திறக்கமாட்டேன் என்றபடி கோபமாக போய் படுத்து கொண்டாள்.”

 

“மாயா” என்றபடி பின்னே வர..”.லுக் கார்த்திக் முதலில் தெரிஞ்சிக்கோ..

வேலை முக்கியம்தான் அதுக்காக அங்கேயே  நீ  குடி  இருக்க கூடாது. அங்கேயே இருக்கவும் முடியாது கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி வேணும்னாலலும் இருந்து இருக்கலாம் அதுக்கா  இப்போதும் இப்படியே இருப்பேன்னு சொல்லறது நல்லா இல்லை…புரியுதா…வீட்டில் நான் ஒருத்தி இருக்கிறேன்.  உனக்காக காத்திட்டு இருக்கறேன் அதை ஞாபகத்தில் வை…கல்யாணம் முடிஞ்சது இனி அவ்வளவு தான் இனி எப்போதும் போல இருக்கலாம் அப்படின்னு நினைக்காதே…நான் அதற்கெல்லாம் விட மாட்டேன்”.இது கொஞ்சம் சரியாக கார்த்திக்கிடத்தில் வேலை செய்தது.

 

பெரிதாக சண்டை போடும் பழக்கம் எதுவும் இல்லாதவன் கார்த்திக்.  அடுத்த நாளில்  இருந்து சரியாக ஏழு மணிக்கு வருவதை பழக்கத்தில் வைத்து இருந்தான். தொடர்ந்து பழக்கபடுத்தி கொண்டான் என்றுதான்  சொல்லவேண்டும். 

 

ஏழுமணிக்கு வந்ததும் ஹாலில் கொஞ்சநேரம் அமர்ந்து தாய்தந்தையிடம், பிருந்தாவிடம் பேசிவிட்டு  மாடிக்கு வருவான்.

 

மாயா கொஞ்சம் விசித்திரம் தான் அவனுக்கு அவனிடம் பேசுவதிலேயோ பழகுவதிலேயோ எந்த குறையும் சொல்ல முடியாது ஆனால் வீட்டில் உள்ளவர்களோடு அதிகமாக ஒட்டுவது இல்லை.  தேவைக்கு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி….நகர்ந்து விடுவாள்.

 

“அண்ணா அண்ணி கூட ஜாலியா இருக்கும்ன்னு நினைச்சேன் அதிகம் பேசறது இல்லை ணா…என்று கொஞ்சம் குறைப்பட்டு கொண்டாள்.”

 

“இப்பதானே புதிதாக வந்து இருக்காறா போக போக பழகிடுவாம்மா என்ன சமாதானம் செய்திருந்தான்.”

 

ஆனால் மாறும் எண்ணம் எதுவுமே மாயாவிற்கு இல்லை.  காலையில் எழுந்தால் இவனோடு வந்து சாப்பிடுவதோடு சரி…அதற்கு பிறகு சற்று நேரம் அமர்ந்து விட்டு மேலே மாடிக்கு வந்தால் என்றால் மறுபடியும் மதியம் தான் இறங்கி வருவது…மறுபடியும் மேலே சென்று தூங்கி எழுந்தால் என்றால் மாலை ஃகாபிக்கு கீழே வருவாள்.கொஞ்சம் மேக்கப்போடு…எப்போதும் தலைகலையாது உடை நழுங்காது அவள் காட்சி தருவது அப்படிதான்.  இங்கே வேலைக்கும் ஆட்கள் இருந்ததால் இவளுக்கு என்று செய்ய எந்த வேலையும் கிடையாது .

 

வீட்டில் உள்ளவர்களுக்கு புதுசா கல்யாணம் ஆனவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் என்பது போல எண்ணம் தான்.  பிருந்தாவை கூட மாடிக்கு அனுப்புவது இல்லை. “அங்கே போக கூடாது பிருந்தா…அடிக்கடி தொந்தரவு பண்ண கூடாது.  கீழே வரும்போது பேசிக்கோ..”.என்று சொல்லி இருந்தார். அதற்கு மாயா கீழே பிருந்தா இருக்கும் நேரம் வரணுமே…அவள் வருவது எல்லாம் இல்லை. 

 

கார்த்திக் கூட இரண்டு முறை சொல்லி இருந்தான். “கீழே போ மாயா எப்போதும் இப்படி ரூம்குல்ல இருக்காதே  இது நம்ம வீடு நம் வீட்டு மனுஷங்க..என்று….”

 

“அதற்கும் இவனிடம் தான் சண்டையிட்டால் நீதான் நைட் தூங்க விடறது இல்லை எனக்கு மதியம் தான் தூக்கம் வருது போ என்று…”

 

“ஏய் அநியாயமாக பொய் சொல்லாதே…நீதான் கொட்ட கொட்ட விழித்து இருக்கற…”

 

[the_ad id=”6605″]

 

 

“ஆமாம் லேப்டாப் எடுத்துவிட்டு உட்கார்ந்துக்கற…நான் என்ன பண்ண…தூக்கம் வரலை வேடிக்கை பார்க்கிறேன்.”

 

“வேடிக்கை பார்க்கலை மாயா நீ என்ன சைட் அடிக்கிற….கார்த்திக் குறும்பாக சொல்ல….”

 

“எப்படி வேணும்னாலும் வச்சிக்கோ…ஆனால் நான் இப்படி தான் என்று முடித்துக்கொண்டாள்.”

 

அன்று நான்கு மணிக்கே  வேலை முடிந்து இருக்க…நேரத்தோடு வீட்டிற்கு வந்து இருந்தான். ஹாலில் பிருந்தா நீண்ட நேரமாக எழுத…பிறகு அடித்து விட்டு மறுபடியும் எழுத… இதை பார்த்தவன் என்ன பிருந்தா என்ன ஆச்சு…ஏன் பேப்பரை அடிக்கடி கிளிக்கற…

 

“அண்ணா இந்த கணக்கு ரொம்ப படுத்துது சுத்தமாக புரியவில்லை பிருந்தா சலிப்பாக சொல்ல…”

 

“நான் சொல்லி தரவா உனக்கு…கார்த்திக் கேட்டு இருந்தான். “

 

“ம் . .” என்ற பிருந்தா உனக்கு இப்போது வேலை எதுவும் இல்லை தானே என்று சொல்ல…

 

“இப்போது ஃபிரி தான் இரு முகம் மட்டும் கழுகிட்டு வருகிறேன் என்றபடி

புறப்பட்டான். “அங்கே போகவும் அனுப்ப வேண்டிய மெயில் ஞாபகம் வர…லேப்டாப்பை ஓபன் செய்து விட்டு மாடி அறையில் இருந்த ஹாலில் அமர்ந்து கொண்டான். கீழே இவன் வந்தது தெரியாது மாயாவிற்கு வழக்கம்போல ரெடி ஆனவள் பெட்ரூம் கதவை திறந்து வர…இவனை பார்க்கவும் இவனிடம் விளையாடும் ஆசை வந்து இருந்தது.  யோசிக்காமல் ஃப்ரிஜில் தண்ணீர் எடுத்து வந்தவள் இவனை கவனிக்க கார்த்திக்கின் கவனம் முழுவதும் லேப்டாப்பில் மட்டுமே இருந்தது.  

 

பின்புறமாக வத்தவள் தண்ணீர் பாட்டிலை ஓபன் செய்து கார்த்திக்கின் பின் புற சட்டையில் ஊற்றி இருந்தாள். ஏற்கனவே வேலை முடிந்து இருக்க ஷட் டவுன்  கொடுத்து கொண்டு இருந்தவன் இவள் என்பது தெரியவும் வேகமாக அவளின் கையை பிடித்து இருந்தான்.

 

கார்த்திக் விடு..விடு என்று சத்தமிட…

அதென்ன எப்பப்பாரு விளையாட்டு உனக்கு…இன்றைக்கு நீ முடிஞ்ச…என்றபடி அவளை எளிதாக  தூக்கிய படி  அடுத்த அறைக்குள் நுழைந்தான்.

 

“என்ன செய்ய போகிற…விடு…விடு என்று மறுபடியும் சத்தம் வைக்க…”

 

“சொல்லறேன் செல்லம் செம பேக்கப்பா இருக்கற… இப்போது இதை கலச்சிடலாம்… என்றவன் பாத்ரூம்பின் கதவை திறந்து

ஷவரை  திறந்து விட்டு அவளை தண்ணீருக்கு  நேராக காட்டியபடி….இனி தண்ணீர் ஊற்றுவே…என்று கேட்க…அவளும் சிரித்தபடியே இவனையும் நனைந்து விட்டாள்.”

 

எல்லாமே இரண்டு நிமிடம் தான்.  வெளியே வாசலில் பிருந்தாவின் சத்தம் கேட்டது “அண்ணா…அண்ணா  என்று…”

 

ஒரு நிமிடம் தான் வேகமாக இவளை இறக்கி விட்டவன் ஸாரி மாயா…பிருந்தாவிற்கு மேக்ஸ் சொல்லி தர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்.மறந்தே போச்சு..அது தான் தேடி வந்து இருக்கறா…என்றபடி வேகமாக இறக்கி விட்டவன் ஒரே நிமிடத்தில் பெட்ரூம்பிற்குள் வந்து சட்டையை மாற்றிக் கொண்டு…இதோ வரேன் பிருந்தா என்று வெளியேறி இருந்தான்.”

 

முழுக்க நனைந்தபடி கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தவளுக்கு அவ்வளவு ஆத்திரம் அந்த நிமிடம் பிருந்தா மீது…ஏதோ மொத்த சந்தோஷமும் அவளால் கெட்டு விட்டது போல… அப்படியே கோபத்தோடு நின்று இருந்தாள்.

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!