Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

KV 3 3

 

சித்தார்த் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து சந்தியா “என்ன டா இன்னும் உனக்கு என் மேல கோபம் போகலையா?….” என்று பாவமாகக் கேட்க, அவளைக் குறும்பு புன்னகையுடன் பார்த்த சித்தார்த் 

உன்னைப் போய் நான் லவ் பண்ணுவேன்னு நீ எப்படி நினைச்ச? நீ எல்லாம் என் லிஸ்ட்லையே இல்லை. என்னோட ரேஞ்சே வேற.  நான் பாலிவுட், ஹாலிவுட் எல்லாம் தாண்டி ஒரு தேவதைக்காக வெயிட் பண்றேன்…” என்றான் கண்களில் கனவுகளுடன்.

சந்தியா அவன் சொல்ல, சொல்ல முகம் மலர்ந்தவள் “நீ மட்டும் இல்லாம, ஊரே உன் பொண்டாட்டிய பார்த்து ரசிக்கனும்னு சொல்ற….” என்று சொன்னது தான் தாமதம், கனவுலகில் இருந்து பட்டென்று கீழே விழுந்த சித்தார்த், சந்தியாவைப் பார்த்து முறைத்தவன் “என் பொண்டாட்டிய பத்தி தப்பாவா சொல்ற….” என்று அவளை அடிக்கத் துரத்த, அவள் சிரித்துக் கொண்டே ஓடினாள்.



Advertisement

எங்கே தங்கள் நட்பை இழந்து விடுவோமோ என்று பயந்த இரு இள நெஞ்சங்களும், தங்கள் நட்பு என்றும் பிரியாது என்ற சந்தோஷத்தில் சிறகடித்து வானில் பறந்தனர். அந்த நாளுக்குப் பிறகு சந்தியா சித்தார்த் நட்பு இன்னும் ஆழமானது. 

சித்தார்த் வீட்டில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து உணவு அருந்துவார்கள். அவன் பெற்றோர்கள் மருத்துவர்கள் என்பதால் மற்ற நாட்களில் சேர்ந்து உணவு உண்ண அவர்களுக்கு நேரமே இருக்காது. அன்றும் அது போல் மூவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

இன்னைக்கு மீன் குழம்பு ரொம்ப நல்லாயிருக்குல….” என்று சித்தார்த்தின் அம்மா வனிதா கேட்க, 

Advertisement

சித்தார்த்தின் அப்பா பிரகாஷ் “ஆமாம் வனிதா சூப்பர்….” என்றார். 

Advertisement

அதைக் கேட்ட சித்தார்த்க்கு அப்போது சந்தியாவின் நினைவு தான் வந்தது. ஒரு நாள் அவன் அம்மா சமைத்த மீன் “குழம்பை கொண்டு போய் அவளிடம் கொடுக்க, அதை முகர்ந்து பார்த்துவிட்டு,

இது என்ன மீன் குழம்பு வாசமே வரலை, புளிய கரைச்சு அதுல நாலு கரண்டி மிளகா தூளை போட்டுட்டா, அது பேர் மீன் குழம்பா…” என்று சந்தியா சாப்பாட்டைக் குறை சொல்ல, சித்தார்த்துக்குக் கோபம் வந்துவிட்டது. 

உனக்கு வேண்டாம்னா சாப்பிடாத, எங்க அம்மா செஞ்சத குறை சொன்னா எனக்குப் பிடிக்காது…” என்று சித்தார்த் அவள் கையில் இருந்த பாத்திரத்தை பிடுங்க,

Advertisement

சரி சரி இனிமே குறை சொல்லல, இன்னும் நல்லா சமைக்கலாமேன்னு சொன்னேன்…” என்றவள், மீன் குழம்பை ஊற்றி சாப்பாட்டை ஒரு கட்டு கட்டினாள். அதை இப்போது நினைத்த சித்தார்த்துக்குச் சிரிப்பு வர, அவன் அதை அடக்கியபடி சாப்பிட்டு எழுந்தான். 

சித்தார்த் வீட்டில் சந்தியாவைப் பற்றி தன்  பெற்றோரிடம் சொன்னது இல்லை. அவர்களுக்கும் அதைப் பற்றிக் கேட்க எல்லாம் நேரம் இல்லை. அவர்கள் பணம், அந்தஸ்த்து அதைத் தான் பெரிதும் மதிப்பார்கள். அதனால் தான் சந்தியாவை அவன் வீட்டுக்கு அழைத்ததே இல்லை. அவனுக்குச் சந்தியாவைத் தன் பெற்றோர் உதாசீனப்படுத்தினால் தாங்க முடியாது. 

சந்தியாவும் கல்லூரி விட்டால் ஹாஸ்டல் என்று தான் இருப்பாள். எப்போதாவது ஒரு முறை அனுவுடன் ஷாப்பிங் செல்வாள். சித்தார்த்துக்கு அடுத்து அனு தான் சந்தியாவிற்கு நெருங்கிய தோழி, அனு குட்டையாகச் சற்று கொழுக், மொழுக் என்று சிவந்த நிறத்தில் இருப்பாள். கலகலப்பான சுபாவம் கொண்டவள். எல்லோரிடமும் நன்றாகப் பழகுவாள். சந்தியாவும், அனுவும் சேர்ந்தால், அந்த இடமே சிரிப்பு சத்தத்தில் அதிரும். 

சந்தியா ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், அவளின் அப்பா வந்து அழைத்துக் கொண்டு செல்வார். அதே போல், அவரே தான் திரும்ப வந்து விட்டுவிட்டும் செல்வார். இப்படியே அந்த வருடம் முடிந்து, அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்தது. சந்தியா விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவள், சித்தார்த்திடம் “உனக்கு இந்த அட்ரெஸ் தெரியுமா…” என்று ஒரு மென்பொருள்  நிறுவனத்தின் பெயரை காட்டி கேட்டாள்

சித்தார்த் “நந்தனத்தில் இருக்கு….” என்றதும், 

அதுக்கு இங்க இருந்து எந்தப் பஸ் போகும்?” என்று எல்லா விவரமும் அவனிடம் கேட்டு தெரிந்துகொண்டாள். சித்தார்த்தும் அவளுக்குத் தெரிந்தவர்கள் யாரவது இருப்பார்கள் என்று நினைத்தான். 

அவர்களுக்கு எப்போதும் செவ்வாய் அன்று காலை, முதல் இரண்டு வகுப்புகள் இருக்காது. அப்போது எதாவது வேறு வேலைகள் செய்வார்கள். அந்த நாட்களில் எல்லாம் சந்தியா லேட்டாகத்தான் கல்லூரிக்கு வருவாள். அப்படி வருபவள் முகம் வாடி இருக்கும். சித்தார்த் அவளிடம் அதைப் பற்றி விசாரித்தும், அவள் அவனிடம் ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை. 

செவ்வாய்க் கிழமையானால் சந்தியா எங்கோ சென்றுவிட்டு வருகிறாள். அப்படி வருபவள் சாதரணமாக இருந்தாலும் பரவாயில்லை, அன்று முழுவதும் ஒரே சோகம் தான். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த சித்தார்த், அந்த வாரம் அவனும் சந்தியா அன்று தன்னிடம் கேட்ட விலாசத்துக்குச் சென்றான்.

சந்தியா நந்தனத்தில் இருந்த அந்த மென்பொருள் நிறுவனத்தின் எதிரில் இருக்கும் கடையில், தலையில் துப்பட்டாவை போட்டுக் கொண்டு எதோ சாமான் வாங்குவது போல் நின்று கொண்டிருந்தாள். 

சித்தார்த் சந்தியாவைப் பார்த்த போது, அவள் அந்த மென்பொருள் நிறுவனத்தின் வாசலையே பாத்துக்கொண்டிருந்தாள். இவ என்னத்த இப்படிப் பார்க்கிறாள் என்று நினைத்த சித்தார்த், அவள் பின்னே சென்று “சந்தியா….” என்று அழைக்க சந்தியா திடுக்கிட்டு திரும்பினாள். 

சித்தார்த்தை பார்த்ததும் சந்தியா நிம்மதி பெருமூச்சு விட, சித்தார்த் அவள் கலங்கிய கண்களைப் பார்த்து அதிர்ந்தான். 

யார சந்தியா பார்க்கிற…” என்று சித்தார்த் கேட்க, சந்தியா தன் கையை நீட்டி எதிரில் காட்டினாள். 

அவள் காட்டிய திசையில் நிறையப் பேர் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர். இவள் யாரை சொல்கிறாள் என்பது போல் சித்தார்த் பார்க்க, “அந்த ஐவரி கலர் ஷர்ட்…” என்றாள் சந்தியா.

சந்தியா காட்டிய திசையில் ஐவரி கலர் ஷர்ட் அணிந்து ஒருவன் சென்று கொண்டிருந்தான். சித்தார்த் ஐயோ முகத்தைப் பார்க்கலையே என்று நினைத்தபோது, அவன் சொன்னது அங்கே சென்று கொண்டிருந்தவனுக்குக் கேட்டது போல், நின்று பின்னே திரும்பி யாருடனோ பேசினான். 

ஐவரி கலர் முழுக்கை சட்டையும், காபி ப்ரௌன் நிற பேண்ட்டும் அணிந்து, அலையலையான கேசத்தைப் படிய வாரி, நெற்றியில் சின்னத் திருநீறு கீற்றுடன், ரொம்ப வெள்ளையாக இல்லாமல், மாநிறத்துக்குச் சற்று கூடுதலான நிறத்தில், கலையான முகத்துடன் பார்க்க நன்றாக இருந்தான். அவனோடு பேசியவன் எதோ சொல்ல, அவன் அதற்கு பல் வரிசை தெரிய சிரிக்க, இப்போது இன்னும் அழகாகத் தெரிந்தான்.

சித்தார்த்க்கு அவனைப் பார்க்கும் போது, அந்நியன் ஒருவனைப் பார்ப்பது போலவே இல்லை. அவன் அலுவலகத்தின் உள்ளே சென்றதும், சித்தார்த்தின் பார்வை சந்தியாவை நோக்கி திரும்பியது. அவள்  முகமும் மலர்ந்திருந்தது. 

யாரு சந்தியா அவங்க?” 

என்னோட கதிர் மாமா…” என்ற சந்தியாவின் குரலில் துள்ளல் இருந்தது. 

உன்னோட மாமான்னா நேர்ல போய்ப் பேச வேண்டியது தான, எதுக்கு மறைஞ்சு நின்னு பார்க்கிற..?” என்று கேட்டதும், சந்தியாவின் முகம் மாற, அவள் அங்கிருந்து சென்றாள். 

அவளுடன் நடந்த சித்தார்த் “வா என் பைக்லையே போவோம்.” என்றதும், “இல்ல எங்க வீட்ல தெரிஞ்சா திட்டுவாங்க. நீ போ நான் ஆட்டோவில வர்றேன்.” என்றாள். 

அவளைப் பார்த்து முறைத்த சித்தார்த் “நீ இப்படி ரோட்ல நின்னு, உங்க மாமாவை சைட் அடிக்கிறது மட்டும் தெரிஞ்சா, ஒன்னும் சொல்லமாட்டாங்களா…” என்றான். 

அது அவங்க தான் என் மாமாவை நான் கட்டிகனும்னு சொன்னாங்க.” என்றாள் சாதாரணமாக,

சித்தார்த் அவளை ஆச்சர்யமாக பார்த்தான். “அப்ப உனக்கு உரிமையான உங்க மாமாவை, ஏன் மறைஞ்சு நின்னு பார்க்கிற? நேர்ல பார்த்துப் பேசவேண்டியது தான…” என்றதும்,  மீண்டும் சந்தியாவின் கண்கள் கலங்க “அது என்னோட பேசாது…” என்றவள், அங்கே வந்த ஆட்டோவில் ஏறி கல்லூரிக்கு சென்றாள். சித்தார்த் ஒன்றும் புரியாமல் குழம்பி போய் அங்கேயே நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!