Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Maarum kaalangal Maaraa kaathal Episode 5.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

“விக்ரம் இந்த குண்டு மல்லி, செம்பருத்தி  ரெண்டு செடியையும் கொஞ்சம் பேக்யார்டுல(தோட்டம்) எடுத்து வைங்க.” என்று சஞ்சனா அந்த  வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பிரமாண்டமாக இருந்த இரண்டு தொட்டிகளில் இருந்த செடிகளை பார்த்து .

 



Advertisement

அவன் அதனை மெதுவாக நகர்த்தி கொண்டு தோட்டத்திற்கு வந்தான்.

 

“ஏன்மா மாப்பிள்ளையை கஷ்டப் படுத்துற? எப்படியும் நாளைக்கு இல்ல நாளை மறுநாள் குளிர் வந்திடும். திரும்ப உள்ள எடுத்துட்டு வந்து வைக்கணும்.” என்றார் கலைவாணி.

Advertisement

 

Advertisement

“அம்மா அத எல்லாம் பார்த்தா, செடி காஞ்சி போயிடும். நான் வெதர் ஆப்ல வெதர் செக் பண்ணி பாத்துட்டேன். அடுத்த நாலு நாளைக்கு வெதர் ஓரளவுக்கு பரவாயில்லை. செடிகள் தாங்கும்.” என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

 

சாதனா  சின்ன தொட்டியில் இருந்த துளசி செடியை எடுத்து வந்து  தோட்டத்தின் வெய்யிலில் வைத்தாள்.

Advertisement

 

சஞ்சனா தண்ணீர் செடிகளுக்கு ஊற்ற பூ வாளி எடுத்து வந்தாள்.

 

அதை கவனித்த  கலைவாணி

“நீ இந்த குளிரில் தண்ணீல கை வைக்காதே.” என்று கூறினார்.

 

“அம்மா பரவாயில்லை. நான் பார்த்துக்கிறேன். ஒன்னும் ஆகாது எனக்கு. இந்த குளிர், தண்ணீர் எல்லாமே பழக்கம் தான்.”

 

“இல்லடி  கைக்குழந்தை வச்சிருக்க. அதுக்கு தான் சொன்னேன்.” என்றார் கலைவாணி  அக்கறையாக.

 

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல அம்மா. எனக்கு ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழந்தை அழும் சத்தம் கேட்டது.

 

“சஞ்சு நீ போய் அவனை பாரு. நான் தண்ணி ஊத்தரேன்.”  என்றவள் அவளிடமிருந்து பூ வாளியை வாங்கிக் சென்று தண்ணீர் எடுத்து வந்தாள்.

 

அப்போது வீட்டில் அழைப்பு மணி ஒலிக்க கலைவாணி கதவை திறந்தார்.

“ஹாய் பாட்டி” என்றபடி உள்ளே நுழைந்தாள் ஜோதி.

“வா ஜோ,  விஜயா” என்று  கலைவாணி அழைக்க இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

“ஹாய் சாதனா ஆண்டி.” என்றபடி தோட்டத்திற்கு ஓடிவந்தாள் சாதனா.

 

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

 

தோட்டத்தில் இருந்த நாற்காலியில்  ஜோதி, விஜயா இருவரும் அமர்ந்தனர்.

 

“இன்னிக்கு வெதர் பரவாயில்லை இல்ல சாதனா?” என்று கேட்டாள் விஜயா

 

“ஆமாம் விஜயா. இன்னும் ரெண்டு நாளைக்கு ஓகேவா இருக்கு. அதுக்கப்புறம் கூட பரவாயில்லை. அதான் செடிகளை வெளிய வைக்கிறோம்.”  என்றாள் சாதனா.

 

“எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நேத்து  அவ்ளோ கோல்டா  இருந்தது.  ஷாப்பிங் போனப்போ நாங்க மூணு பேரும் ஹெவி ஜாக்கெட் போட்டுட்டு போகவேண்டி இருந்தது. இன்னிக்கி என்னடானா  வெதர் நல்லா இருக்கு. மைல்ட் ஜாக்கெட் போட்டாலே போதும்.” என்றாள் விஜயா.

 

“ஆமாம் இது டெக்சாஸ். இங்க டெம்பரேச்சர் ஒரு நாளைக்கு ஒரு மாதிரி இருக்கும். ஓவர் நைட்ல டெம்பரேச்சர் மாறிடும். உங்களுக்கு ஆச்சரியமா இருக்கு. எங்களுக்கு பழகி போச்சு. உங்களுக்கும் பழகிடும்”

 

“பார்ப்போம். செடிகள் ரொம்ப நல்லா இருக்கு.”

 

“ஆமாம் சஞ்சனா தான்  வெயில் வரும்போது வெளிய வச்சு  குளிர் வரும்போது உள்ள வச்சு இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கா. அதான் இன்னும் நல்லா இருக்கு.”

 

ஜோதி அதே தோட்டத்தில் ஒரு மூலையில் இருந்த ஆரஞ்சு பழ மரத்திடம் சென்றாள்.

 

மரம் முழுவதும் நிறைய ஆரஞ்சு பழங்கள் காய்த்து  பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருந்தது.

 

“ஆன்ட்டி இந்த ஆரஞ்சு ட்ரீ சூப்பரா இருக்கு.” என்றாள் அதில் கீழே தொங்கிய ஒரு ஆரஞ்சு பழத்தை கையால் தடவியபடி.

 

“உனக்கு பிடிச்சிருக்கா? அதை பறித்துக்கோ.”  என்றாள் சாதனா.

 

“ஹையா! தேங்க்யூ ஆன்ட்டி என்று குதித்து அவள் கைக்கு எட்டிய அந்த பழத்தை பறித்துக் கொண்டாள் ஜோதி.

 

சாதனா அங்கு வந்து அவள் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த மேலும் சில பழங்களை பறித்து விஜயா இடம் கொடுத்தாள்.

 

“விஜயா சாப்பிடுங்க. ரொம்ப டேஸ்டா இருக்கும்.” என்று சாதனா கூற இருவரும் தோலை உரித்து விட்டு பழத்தை சாப்பிட்டனர்.

 

“ஆரஞ்ச் செம டேஸ்டா இருக்கு.” என்றாள்  விஜயா.

 

“ஆமா ஆண்ட்டி. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று ரசித்துச் சாப்பிட்டாள்.

 

 

“இன்னும் வேணுமா ஜோ?” என்று கேட்டபடி அங்கு குழந்தையுடன் வந்தாள் சஞ்சனா.

 

“இல்லை சஞ்சனா. என்கிட்ட இன்னும் ரெண்டு பழம் இருக்கு. இதுவே போதும்.” என்றாள் விஜயா.

 

“ஆமாம் ஆன்ட்டி போதும் எங்களுக்கு.” என்றாள் ஜோதி.

 

குழந்தையை வைத்துக்கொண்டு  வெயிலில் அங்கு இருந்த லேசான குளிருக்கு இதமாக அமர்ந்தாள் சஞ்சனா.

 

“செடி எல்லாத்தையும் நீங்கதான்  மெயின்டெயின் பண்றதா சாதனா சொன்னாங்க. நல்லா மெயின்டெயின் பண்றீங்க.” என்று பாராட்டினாள் விஜயா.

 

“ஆமாம் எனக்கு  கார்டனிங் பிடிக்கும்.”

 

“ஓ அப்படியா?”

 

“ஆமாம் நீங்க சம்மர்ல வந்திருந்தீங்கனா, பெரிய காய்கறி தோட்டத்தை இங்க பார்த்திருப்பீங்க.  spinach, lettuce, parsely, mint, tomato,chilly, egg plant, okra,  இன்னும் நிறைய வெஜிடபிள்ஸ் பார்த்திருப்பீங்க. இவள் தான் எல்லாத்தையும் பாத்துக்குவா. விக்ரம் தேவையானதை வாங்கிட்டு வந்து தருவார்.”  என்றாள் சாதனா பெருமையாக.

 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு பாதி ஹெல்ப் பண்றது   சாதனா தான்.” என்று உண்மையை சொன்னாள் சஞ்சனா.

 

“அந்த போட்டோஸ் எல்லாமே எங்க கிட்ட இருக்கு.” என்றபடி தன் ஐபோன் ல் இருந்த காய்கறி புகைப்படங்களை காண்பித்தாள் சஞ்சனா .

 

அதனை பார்த்துவிட்டு “சூப்பர்” என்றாள் விஜயா.

 

“இன்னும் பூச்செடி நிறைய இருந்தது. என்னோட டெலிவரி, வெதர் சேஞ்ச் அப்படி இப்படினு எல்லாம் காஞ்சு போச்சு. ரெண்டு மூணு மாசம் போனதும் வெதர்  கொஞ்சம் பெட்டர் ஆனப்புறம் திரும்பவும் எல்லாத்தையும் ஆரம்பிக்கணும்.” என்றாள் சஞ்சனா ஆர்வமாக.

 

“சூப்பர் எனக்கும்  எங்கெங்க  எதை வாங்கனும்னு சொல்லுங்க. நானும் எங்க வீட்ல செய்றேன்.” என்றாள் விஜயா.

 

“ஷ்யூர். சொல்றேன்.” என்றாள் சஞ்சனா.

 

சாதனா ஜோதி இருவரும் அந்த தோட்டத்தில்  பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

 

ஒருமுறை சாதனா பந்தை  பிடிக்காமல் தவறவிட ஜோதி சிரித்தாள். ஒருமுறை ஜோதி பந்தை தவறவிட சாதனா பலமாக சிரித்தாள்.

 

சஞ்சனா சாதனாவை பார்த்தாள். அவள் இப்படி சிரித்து நெடுநாட்கள்  ஆகி  இருந்தன.

 

குழந்தையுடன் சேர்ந்து குழந்தையாகவே மாறி ஓடி, ஆடி விளையாடிக் கொண்டிருந்த தமக்கையை  பார்த்து  ரசித்தாள் சஞ்சனா.

 

சாதனாவை இன்னொரு ஜோடி கண்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. அந்த ஜோடி கண்கள் சுகந்தன் உடையது. இந்த வீட்டில் பின்புறத்தில் இருந்த அந்த வீட்டில்தான்  சுகந்தன் கார்த்திக்குடன்  குடித்தனம் இருந்தான்.

 

அவன் இந்த வீட்டை தேர்வு செய்ததற்கு காரணமும் இதுதான்.

 

அங்கு இருந்தபடியே இந்த வீட்டை அவன் கண்காணிக்கலாம். சாதனாவை பார்த்து ரசிக்கலாம். சுகந்தன்  அரை அந்த வீட்டு மாடியில் இருந்தது. அங்கு இருந்த ஜன்னல் வழியாக லேசாக திரையை விலக்கி அவள் பிடித்து விளையாடி கொண்டிருந்ததை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

 

விக்ரம் வீட்டு தோட்டத்திற்கு பின்னால் சுகந்தன் குடியிருந்த வீட்டின் தோட்டம் இருந்தது. இரு வீட்டிற்கும் நடுவில் ஒரு பொதுவான இடமும் இரு  வீட்டு தோட்டத்திற்கும் தனித்தனியாக கேட் இருந்தது. இதற்கு முன்பு இருந்தவர் வீட்டை விற்று விட  வீட்டை வாங்கியவர் சுகந்தன், கார்த்திக் இருவருக்கும் வாடகைக்கு கொடுத்திருந்தார். வீட்டை விற்றவர், வாங்கியவர் இருவரையும் விக்ரம் தெரிந்து வைத்திருந்தான். ஆனால் பதினைந்து நாட்களுக்கு முன்பு குடி வந்திருந்த சுகந்தன், கார்த்திக் இருவரும் குடி வந்திருக்கும் விபரம் அவனுக்கு மட்டும் இல்லை அந்த வீட்டில் இருந்த யாருக்கும் தெரியாது.

 

இந்த குளிர்காலத்தில் அவரவர் அவரவர் வீட்டிற்குள்  அதிக பொழுதை  கழிப்பதால் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் போயிற்று.

 

 

 

 

கருநீல நிற முழுக்கை டி-ஷர்ட், கருப்பு நிற முழு பேண்ட், மேலே ஸ்வெட்டர் கருப்பான நீண்ட அடர்த்தியான கூந்தலை தூக்கி குதிரைவால் என பார்க்க படு ஸ்டைலாக இருந்தாள் சாதனா. இப்படியும் அப்படியும் தாவி ஓடி விளையாடி கொண்டு இருக்கும் போது அவளுடைய நீண்ட கூந்தல் இப்படியும் அப்படியும் ஆடியது. அதனை  பின்னுக்குத் தள்ளியபடி விளையாடிக் கொண்டிருந்தாள் அவள்.

 

‘கொஞ்சம் இளைத்து வெளுத்து போய் இருக்கா. இந்த  குளிருக்கு வெளுத்து போயிருப்பா. ஏன் இளைத்த போயிருக்கா? சரியா சாப்பிடுவது இல்லையா?’ என்று அவளுக்காக யோசித்தான்.

‘எப்படி எல்லாம் உன் அப்பா கிட்ட சண்டை போட்டு என்னை ஒத்துக்க வைச்சு இந்த கல்யாணத்த பண்ணின. ஆனால் நீ என்கூட சந்தோசமா இருந்தியா? உன்னை என்னால சந்தோஷமா வச்சுக்க முடிஞ்சுதா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் அவன். முகத்தில் ஒரு சோகம் படர்ந்தது.

 

“என்னடா உன் தேவியின் தரிசனமா?” என்று கேட்டபடி அங்கு வந்தான் கார்த்திக்.

 

“கொஞ்சம் அப்படித்தான். அவள் அந்தக்குழந்தை ஜோதி கூட விளையாடிட்டு இருக்கா.”

 

“இன்னும் பாத்துக்கிட்டே இருந்தா போதுமா? போய் அவ கிட்ட பேசு.”

 

“எங்கடா பேசறது? என்னை பார்த்தாலே எரிஞ்சு  விழறா. அப்புறம் எங்க பேசுறது ?அங்க பாரு எப்படி சிரித்து விளையாடிக் கொண்டு இருக்கா. பேசாம இப்படியே அவளை விட்டுவிடலாமாnu கூட தோணுது.” என்றான் சிறு சோகத்துடன்.

 

“இல்லடா நீ தப்பா யோசிக்கிற. அவங்க வெளிய சிரிச்சு விளையாடுறாங்க. அவங்க தனியா இருக்கும்போது பாரு. ஒரு சோகம்  அவங்க கண்ணுல தெரியும். அவங்க உன் கூட தான் சந்தோஷமா இருப்பாங்க.”

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!