Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK episode 5.2

“ஆமாண்டா. நீ சொல்றது கரெக்ட் தான். அன்னிக்கி நான் அவங்க வீட்டுக்கு போய் இருந்தப்போ கதவை சாத்திட்டு கதவு மேல சாஞ்சுகிட்டு அழுதா. அதை நான் பார்த்தேன்.

எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமா  அவள் மனசுல நான் இருக்கறதை கெஞ்சி, கொஞ்சி புரிய வச்சு அவளை சமாதானம் செய்யணும்.” என்றான் பெருமூச்சுடன்.

 

“கொஞ்சம் கஷ்டம் போல தான் தெரியுது.” என்றான் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்.



Advertisement

 

“ஆமாண்டா. அவளுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. அந்த  பிடிவாதத்தில் ஒரு நியாயம் இருக்கும்.” என்றான் உறுதியாக.

 

Advertisement

“சரிடா நீ உன் ஷோவை கன்டினியூ பண்ணு. நான் இங்க இருந்து மொக்கை போடாம கிளம்பறேன்.” என்று விட்டு சென்றான் கார்த்திக்.

Advertisement

 

கடல், ஆயிரம் மைல்கள் தாண்டி வந்த அவனால் சில அடிகள் தாண்டி இருந்த அவளிடம் உரிமையுடன் நெருங்க முடியாமல் தவித்தான்.

மீண்டும் பார்வையை அந்த வீட்டு தோட்டத்தில் செலுத்தினான்.

Advertisement

 

ஏதோ சொல்லிவிட்டு விஜயா தன் குழந்தை ஜோதியுடன் வீட்டுக்குள் சென்றாள்.

 

சஞ்சனா குழந்தையுடன் உள்ளே செல்ல சாதனா அங்கு இருந்த நாற்காலியில்  அமர்ந்தாள். மீண்டும் அவள் முகத்தில் ஒரு வித சோகம்  படர்ந்ததை சுகந்தன் கவனித்தான். அங்கு இருந்த டேபில் மீது  ஒரு கை இருக்க இன்னொரு கை கன்னத்தை தாங்கி இருந்தது. கண்கள் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தன.

 

‘இவன் எப்படி எங்க இருக்கான்? சஞ்சனா கிட்ட இவனை பார்த்ததை பத்தி சொல்லலாமா? வேண்டாம் அம்மாவுக்கு தெரிஞ்சா  திரும்பவும் பிரச்சனைதான்.” என்று அவளும் அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

அது தெரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் சுகந்தன். கலைவாணி வந்து ஏதோ கூற சாதனா உள்ளே சென்றாள்.

 

டைனிங் டேபிளில் மட்டன் பிரியாணி, வஞ்சிரம் வறுவல், முட்டை பொரியல் இருந்தன.

 

சஞ்சனா, விக்ரம் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். விஜயாவும் ஜோதியும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

 

“வா சாது சாப்பிடு.” என்று சஞ்சனா கூப்பிட அவளும் வந்து அமர்ந்தாள்.

 

அனைவரும் பேசியபடி சாப்பிட்டனர்.

 

“சாது தீபாவளி பார்ட்டி நம்ம கம்யூனிட்டியில் அரேஞ்ச் பண்ணிக்கிட்டு இருக்காங்க. தெரியுமா?”

 

“ஆமாம் தெரியும். அதுக்கு என்ன?”

 

“அதுக்கு என்ன வா? லேடிஸ் பத்து பேர் சேர்ந்து ஒரு டான்ஸ் ஆட போறாங்க. நீயும் போய் சேர்ந்து கொள்.” என்றாள் சஞ்சனா.

 

“அட போடி. எனக்கு   பிராக்டிஸ் பண்ணி டான்ஸ் ஆட டைம் கிடையாது.”

 

“இன்னிக்கி சும்மாதானே இருக்க.”

 

“ஏண்டி நானே சாட்டர்டே, சண்டே ரெண்டு நாள் தான் ஃப்ரீயா இருக்கேன். அது உனக்கு பொறுக்கலையா?” என்று கேட்டாள் சாதனா.

 

“அதுக்கு இல்லடி நம்ம வீட்ல இருந்து எப்பவும் நாம ஏதாவது ஒரு பர்பாமன்ஸ் கொடுப்போம்.”

 

“ஆமாம் நீயும் விக்ரமும் டான்ஸ்  ஆடுவீங்க.”

 

“ஆமாம் ஆனால் இந்த வருஷம் குழந்தைகிட்ட ரொம்ப பிஸி. அதனால நாங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடல. நீ விஜயா கூட சேர்ந்து ஆடு.”

 

“என்ன?  அவங்க அவங்க ஹஸ்பண்ட் கூட ஆடுவாங்க.”

 

“இல்லைடி.  அவருக்கு டான்ஸ் வராதாம். அதனால அவங்க உன் கூட ஆடலாமாnu  கேட்டாங்க. உன்கிட்ட கேட்க யோசிச்சு என்னை கேட்டாங்க.”

 

“வேண்டாம் (a)சஞ்சு.” என்றாள் சாதனா.

 

“ஏன் சாதனா, நீ தான் நல்லா டான்ஸ்  ஆடுவாயே. பரதநாட்டியம் கூட தெரியும். ஏதாவது ஒன்னு  ஆடு. சாட்டர்டே சண்டே பிரக்டிஸ் பண்ணா போதும். உனக்காக இல்லைனாலும்  விஜயாவுக்காக ஆடு. ப்ளீஸ்டி. நம்ம வீட்ல இருந்து யாராவது பற்பம் பண்ணா நல்லா இருக்கும்.” என்றாள் சஞ்சனா.

 

சிறிது நேரம் யோசித்துவிட்டு “சரி” என்று ஒருவழியாக ஒத்துக்கொண்டாள்.

 

விக்ரம் சஞ்சனாவை பார்த்து புருவத்தை உயர்த்தி ‘எப்படியோ ஒத்துக்க வச்சுட்ட.’ என்று கண்களால் சொன்னான். சஞ்சனா புன்னகைத்தாள்.

 

 

சஞ்சனாவுக்கு சாதனா கலகலப்பாக தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் அவள் இந்த இரண்டு வருடங்களாக பெரிதாக அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது கிடையாது.

 

சிறிது நேரம் வந்து இருந்து விட்டு சென்று விடுவாள். இந்த முறை அப்படி இருக்க விடாமல் சஞ்சனா சாதனாவை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள  வைத்துவிட்டாள். அந்தப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிந்தது.

 

“அப்புறம் நாம தான்  ஃபுட் ஆர்டர் பண்ணனும். விக்ரம் நீங்க ரெண்டு மூணு ஹோட்டல் போய் சாப்பிட்டு பார்த்து இந்தியன் ஃபுட் எந்த ஹோட்டலில் நல்லா இருக்குனு சொல்லுங்க. ஆர்டர் பண்ணனும். போன தடவை ஆர்டர் பண்ண ஃபுட் நல்லாவே இல்ல. இந்த தடவை சாப்பிட்டு பார்த்து தான் ஆர்டர் பண்ணனும்.”

 

“சஞ்சனா எனக்கு கிடைக்கிறது கொஞ்ச நேரம். அந்த கொஞ்ச நேரத்தில் நான் குழந்தைகூட, உன் கூட இருக்கிறதா? இல்லை இப்படி சுத்திக்கிட்டு இருக்கிறதா? அதுவுமில்லாம எனக்கு இந்த டேஸ்ட் பார்த்து செலக்ட் பண்ண தெரியாது. ரொம்ப கஷ்டம்.”  என்றான்.

 

“சஞ்சனா யாராவது ரெண்டு ஃபேமிலி இன்சார்ஜ் இருப்பாங்க இல்லையா ?  நாம ஒன்னு. இன்னொருதங்க யாரு?” என்று கேட்டாள் சாதனா.

 

“அது யாரோ கார்த்திகாnu போட்டு இருந்தது.”

 

“அப்போ அவங்களை இதை பண்ண சொல்லலாம் இல்லையா?”

 

“அப்படி சொல்றது நல்லா இருக்காது. அதுவும் இல்லாம அவங்க இந்த கம்யூனிட்டிக்கு புதுசு. பழக்கம் இருந்தாலும் நாம அப்படி சொல்லலாம். இப்ப என்ன பண்ணுவது?” என்று  யோசித்துவிட்டு.

 

“ சாது….” என்று கொஞ்சும் குரலில் கூப்பிட்டாள் சஞ்சனா.

 

“புரிஞ்சி போச்சு. இப்போ அடுத்த பலியாடு நான் தானா?” என்று கேட்டாள் சாதனா.

 

“கரெக்ட்டா புரிஞ்சுகிட்ட. ப்ளீஸ் சாது. நீயும்  அந்த கார்த்திகாவும் போய் டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு எந்த ஹோட்டல்nu செலக்ட் பண்ணுங்க.” என்றாள் சஞ்சனா ஒரு வழியை கண்டுபிடித்தவளாக.

 

“நான் எப்படி? எனக்கு யாருன்னே தெரியாது  சஞ்சு.”

 

“யாராய் இருந்தால் உனக்கு என்ன? நீ உன் காரில் போ. அவங்க அவங்க காரில் வரட்டும். ரெண்டு பேரும் இன்றோடுயூஸ் பண்ணிட்டு சாப்பிட்டுட்டு ஹோட்டல் செலக்ட் பண்ணுங்க.”

 

“எதுக்குடி தேவையில்லாம அவங்கள டிஸ்டப் பண்ணிக்கிட்டு. பேசாம நானே சாப்பிட்டு பார்த்து செலக்ட் பண்றேன். என்ன சொல்ற சஞ்சு?”

 

“வேண்டாம் சாது. போன தடவை ஒருத்தங்க  தான் செலக்ட் பண்ணாங்க. நல்லாவே இல்ல. அதைக் கேள்விப்பட்ட அவர் ரொம்ப எம்பரசிங்கா பீல் பண்ணினாங்க. இந்த தடவையாவது இரண்டு பேர் சேர்ந்து செலக்ட் பண்ணலாம். ஒருவேளை பிடிக்கலன்னாலும் ஒருத்தரை மட்டும் குறை சொல்ல முடியாது.”

“சரி நீ  சொல்வதில் பாயிண்ட் இருக்கு. அப்படியே பண்ணலாம். அப்பதான் நாம தனியா  மாட்டிக்க மாட்டோம்.

 

அப்புறம் எப்ப போகணும்?”

 

“அது எனக்கு தெரியல. அந்த தீபாவளி  பார்ட்டி வாட்ஸ்அப் குரூப்ல  உன்னை ஆட் பண்றேன். நீ அந்த குரூப்பில் இருந்து கார்த்திகா நம்பர் வாங்கிக்கோ. வாங்கிட்டு ரெண்டு பேரும்  பேசுங்க.” என்றாள் சஞ்சனா.

 

“சரி (பஞ்சு நான் பேசுறேன்.”   என்றாள் சாதனா.

 

இப்படி பேசியபடியே அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!