Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Margazhi Poove

Margazhi Poove..! – 13 (1)

கீழே வந்தவன் நேராக பவித்ராவிடம் சென்றான். அவளும் அருணும் வழக்கம் போல் அங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க,

“இங்க வந்தும் உங்க ரெண்டு பேர் சண்டையும் தீரலையா..? பவி சாப்பிட்டியா..? இல்லைன்னா வா, நான் சாப்பிடப் போறேன்..! என்றான்.

“நான் சாப்பிட்டேன் மாமா..! என்றாள் பவித்ரா, கொஞ்சம் வெட்கத்துடன்.

“கடவுளே..! இவ வெட்கப்படுறதை எல்லாம் என்னால கண் கொண்டு பார்க்க முடியலை. தயவு செஞ்சு என்னைக் காப்பாத்துங்க..! என்றான் அருண்.



Advertisement

“போடா..! ரொம்பத்தான்..! என்றவள்,

“நீங்க போய் சாப்பிடுங்க மாமா..! இவன் கிடக்குறான் லூசு…! என்றான்.

“யாரு நான் லூசு..? நீ சாப்பிட்டேன்னு அவனுக்கும் தெரியும். இருந்தாலும் வந்து கூப்பிடுறான்னா என்ன அர்த்தம்…? நீயும் கூட போகணும்ன்னு அர்த்தம். அது கூட தெரியாத மக்கு மரமண்டை… என்றவன், பிரவீனிடம் திரும்பி,

Advertisement

“இந்த பெட்டர்மாஸ் லைட்டேதான் வேணுமா..? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, நல்லா யோசனை பண்ணிக்க..! என்றான் அருண்.

Advertisement

பிரவீண் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் முகத்தில் மென்னகை இருந்தது.

“சரி ரெஸ்ட் எடு..! என்று சொன்னவன்,

“அருண்..! ஒரு நிமிஷம் வா..! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..! என்று அருணைத் தனியாக அழைத்துச் சென்று சொல்ல வந்ததை  சொல்லி முடித்தான் பிரவீண்.

Advertisement

“நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு அந்த திவ்யாவால பிரச்சனை வராதுன்னு எனக்குத் தோணுது..! என்றான் அருண்.

“கண்டிப்பா நடக்கும் அருண். ஆனா, அவ வந்தாலும், என்ன பிரச்சனை பண்ணினாலும் நான் சொன்னது நியாபகத்துல இருக்கு தானே..? என்றான்.

“டன்..! சிறப்பா செஞ்சுடுவோம் பிரவீண்..! என்றான் அருண்.

“ஞான்..அப்பறம் இது எதுவும் வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்..! என்ற பிரவீண், மீண்டும் மீண்டும் அருணிடம் அறிவுறுத்தி சென்றான்.

அடுத்த நாள் விடியல், பலரின் மனப் போராட்டத்திலேயே விடிந்தது. முகூர்த்தம் ஒன்பது மணிக்கு மேல் என்பதால் அவசரம் இன்றி கொஞ்சம் நிதானமாக எல்லாவற்றையும்  செய்ய முடிந்தது.

அடர் சிகப்பு நிற பட்டுப்புடவையில் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் விஷ்வ துளசி. பொதுவாக அவள் சேலை அதிகம் அணிந்ததில்லை. மாடர்ன் உடைகளில் வலம் வந்தவளை, இன்று பட்டுப்புடவையில் பார்த்து அசந்து விட்டனர் அனைவரும். பியூட்டிப் பார்லர் பெண்ணின் கைவண்ணத்தில் அவள் முகம் தங்கமென மின்னியது.

“அடியாத்தி.. எவ்வளவு அழகா இருக்கா என் பேத்தி. இத்தனை நாள் இந்த மொத்த அழகையும் எங்க ஒளிச்சு வச்சிருந்தான்னு தெரியலையே. முதல்ல திருஷ்ட்டி பொட்டு வைங்க..! என்று வள்ளிப் பாட்டி சொல்ல, மகளைப் பார்த்த வித்யாவிற்கு மனதிற்குள் அப்படி ஒரு பூரிப்பு. சுரேஷைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இது அவள் அழகினால் வந்த சந்தோஷமும், பூரிப்பும் அல்ல. ஒவ்வொரு பெண்ணைப் பெற்றவர்களுக்கும், அவளைக் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் போது வரும் சந்தோசம். ஒரு பரிதவிப்பு.

“என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா..! என்றார் சுரேஷ். அவரைப் பார்த்து சிரித்து மட்டும் வைத்தாள் துளசி. ஏனோ சிரிப்பைத் தாண்டி வார்த்தைகள் வரவில்லை. அவளுடைய அப்பாவைப் பார்த்த உடன், திவ்யா சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது துளசிக்கு.

பவித்ரா லெகன்ங்கா  அணிந்திருக்க, பிரவீணின் பார்வை முழுவதும் அவளின் மீதே இருந்தது. அவனின் இந்த பார்வையை பவித்ரா கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

“நீ இன்னைக்கு முழுக்கப் பார்த்தாலும், அந்த லூசுக்கு அதெல்லாம் தெரியாது. சின்ன பிள்ள இல்லையா..? அதான். இன்னும் கொஞ்சம் வளர்ந்தா சரியாகிடுவா. அதுவரைக்கும் நீ இப்படி பார்த்துட்டே இரு…! என்ற அருண்,

“என்ன..? அதை எங்களால தான் பார்க்க முடியலை..! என்று வாயை மூடி சிரித்தான்.

ராஜ சேகரும், சுந்தர சேகரும் வந்திருந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, நீலாவிற்கு வேலை சரியாக இருந்தது. வேலை பரபரப்பில் அவர் பிரவீணை கவனிக்கவில்லை. இல்லையென்றால் பவித்ராவை இப்படியெல்லாம் பார்க்க முடியுமா என்ன..?

பட்டு வேஷ்ட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து, அய்யர் சொன்ன மந்திரங்களை திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் விஜய். அவனை அறையில் இருந்து பார்த்த ரோசிலின்,

“அண்ணா செம்மையா இருக்காரு துளசி. நீ அவர் பக்கத்துல கொஞ்சம் டம்மியா தான் தெரிவ.. என்றாள்.

“யாரு நானு..? அந்த சுமார் மூஞ்சி குமாருக்குப் பக்கத்துல டம்மியா தெரிவேன்..! அடிப் போடி..! என்றவள், பார்க்காததைப் போல், அங்கிருந்து விஜய்யை எட்டிப் பார்த்தாள்.

“நீ நேராவே பார்க்கலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..! என்று ரோஸ்லின் காலை வார,

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..! என்ற துளசி,

மனதிற்குள்.... நிஜமாவே செம்மையா இருக்கானே..? என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“பொண்ணை அழைச்சுட்டு வர சொல்லுங்க..! என்ற ஐயரின் வார்த்தைகளில், கல்யாணப் பந்தலுக்கு அழைத்து வரப்பட்டாள் துளசி.

ஏனோ விஜய்யின் அருகில் அமரும் போது, இத்தனை நாள் இல்லாத படபடப்பு அவளுக்கு. கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. இதையெல்லாம் தாண்டி, எதையோ வென்று விட்ட உணர்வு அவள் மனதின் ஓரத்தில் வந்து போனது. ஆனால் அதை அவள் அறியவில்லை.

“இந்த புடவையில நீ ரொம்ப அழகாயிருக்க துளசி..! லுக்கிங் கார்ஜியஸ்..! என்றான் விஜய்.

அதுவரை இருந்த படபடப்பு பட்டென்று விலகியது அவளுக்கு.

“இன்னும் எத்தனை பேர்கிட்ட இப்படி சொல்லப் போற..? என்றாள் பட்டென்று. அது அவனின் காதில் சரியாக விழாமல் போனது யாரின் தவறு.

“என்ன சொன்ன..? என்றான் குனிந்து. அதற்கு அவளிடம் இருந்து முறைப்பே பதிலாய் கிடைத்தது.

அங்கிருந்த அனைவரின் ஆசியுடனும், குடும்பத்தாரின் ஆசியுடனும், மாங்கல்யத்தை துளசியின் கழுத்தில் கட்டப் போனான் விஜய்.

அந்த நேரத்தில் துளசியை அவன் பார்க்க, அவளுக்கோ எரிச்சல்.

“இப்ப என்ன..? நான் அப்படியே வெட்கப்பட்டுட்டு கண்ணாலையே சம்மதம் சொல்லனுமா..? இந்த சீன் எல்லாம் இங்க இல்ல. அதான் கட்ட வந்துட்டல்ல, கட்டு..! என்றாள் படக்கென்று.

“இது நாக்கா..? இல்லை தேள் கொடுக்கா..? என்ற யோசனையுடனே தாலியைக் கட்டப் போனான் விஜய்.

விஜய் இரண்டு முடிச்சு போட்டு, மூன்றாவது முடிச்சைப் போடும் நேரத்தில் போலீசுடன் உள்ளே வந்தாள் திவ்யா.

ஏனோ அந்த சூழ்நிலை விஜய்க்கு சரியாகப் படவில்லை. என்ன நினைத்தானோ தெரியவில்லை. மூன்றாவது முடிச்சை வேகமாக போட்டே விட்டான். செல்வி.விஷ்வ துளசி சுரேஷாக இருந்தவள், ஒருசில நிமிடங்களில் திருமதி. விஷ்வதுளசி விஜயகுமாராக மாறிப் போனாள். பிரவீண்ணுக்கு மூச்சே அப்போது தான் வந்தது.

போலீசுடன் வந்தவளை அங்கு யாருக்கும் தெரியவில்லை. பல முக்கியமான ஆட்கள் அங்கே இருந்ததால், அவளையும் அப்படித்தான் என்று எண்ணிக் கொண்டனர். அமைச்சரின் மகள், போலீஸ் பாதுகாப்புடன் திருமணத்திற்கு வந்திருப்பதாகவே எண்ணிக் கொண்டனர்.

அதே நேரத்தில் சிஎம் அந்த கல்யாணத்திற்கு வர, அங்கு நிலைமையே மாறிப் போனது. சுரேஷ் அவரை வரவேற்று மேடைக்கு அழைத்து செல்ல, திவ்யா என்ற ஒருத்தி அந்த கூட்டத்தில் மறைந்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும்.

“என்ன சார்..? நான் கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கேன். அவனை அரஸ்ட் பண்ணாம வேடிக்கைப் பார்த்துட்டு நிக்குறிங்க..? என்றாள். அவளால் கல்யாணம் நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர்..! கேக்குறாங்கல்ல..! என்றான் பிரவீண்.

“உங்களால பிரச்சனை வரும்ன்னு அவங்க ஏற்கனவே கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க மேடம். இருந்தாலும் நீங்க மினிஸ்டர் பொண்ணு, உங்க பேச்சை தட்ட முடியாமத்தான் இங்க வந்ததே. ஆனா, இங்க வந்து பார்த்தா சிம் சாரே இங்க தான் இருக்கார். இது பெரிய இடத்து விவகாரம். நீங்களே பேசி முடிச்சுக்கோங்க..! என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

திவ்யா வந்ததை துளசியும் பார்த்திருந்தாள். மேற்கொண்டு அங்கு என்ன பேசுகிறார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. அதை அண்ணனின் பொறுப்பில் விட்டு விட்டாள். ஆனால் விஜய்யால் அப்படி இருக்க முடியவில்லை. அவனின் பார்வை பிரவீண் மற்றும் திவ்யாவின் மீதே இருந்தது.

“எல்லா பக்கமும் பிளாக் பண்ணி, நீ ஜெயிச்சுட்டதா நினைக்காத பிரவீண். அவ எப்படி நிம்மதி வாழ்றான்னு நானும் பார்க்குறேன்..? என்றாள் ஆங்காரமாய்.

“நல்லா பாரு..! என்றான் பிரவீண்.

ஏமாற்றத்தின் வலியை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏதோ வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்து, தோற்று நிற்பதைப் போல் உணர்ந்தாள் திவ்யா. அவள் மேடையை நோக்கி போக முற்பட,

“அங்க எதுக்குப் போற..? என்றான் பிரவீண்.

“ரெண்டு பேருக்கும் கிப்ட் குடுக்க வேண்டாம்..? என்றாள் திவ்யா.

“தேவையில்லை..! என்றான்.

“ஆனால் எனக்குத் தேவையிருக்கே..! என்று அவனைத் தள்ளிக் கொண்டு போனாள் திவ்யா. அத்தனை பேர் முன்னிலையில் ஒரு நிலைக்கு மேல், அவனால் திவ்யாவை தடுத்து நிறுத்த முடியவில்லை.

அவள் மேலே வரும் போதே, விஜய்யின் புருவம் யோசனையில் சுருங்கியது. துளசியோ,

‘நீ எல்லாம் ஒரு ஆளா? என்பதைப் போல் பார்த்து வைத்தாள்.

நேராக விஜய்யின்  அருகில் வந்த திவ்யா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு எரிச்சலாக இருக்க,

“என்ன பிரச்சனை உனக்கு..? என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“நான் உன்னை விரும்பிக் கல்யாணம் கட்ட ஆசைப் பட்டேன்னு நினைச்சியா..? என் அக்காவை சாகடிச்சுட்டு நீ மட்டும் ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பியா..? நான் எங்க இருந்தாலும் உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டேண்டா..! என்றவள், துளசியின் பக்கம் திரும்பி…

“ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத… இது உனக்கு நிரந்தரம் இல்லை. ஏற்கனவே ஒருத்தியைக் கட்டி, அவ சாவுக்கு காரணமா இருந்தவன் இவன்.. அதை மட்டும் மறந்துடாத..! என்று திரியை கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்க, வேகமாய் வந்தான் பிரவீண்.

“நீ முதல்ல கிளம்பு..! என்று அவளை கிளப்புவதில் குறியாய் இருக்க,

“பிரவீண் இவ சொல்றது உண்மையா..? என்றான் இறுகிய குரலுடன்.

“அப்படி எல்லாம் எதுவுமில்லை விஜய்..! என்று பிரவீண் சொல்லிக் கொண்டிருக்க, விஜய் கேட்ட கேள்வியில் திவ்யா அதிர்ந்தாள் என்றால், துளசியோ கண்கள் தெறித்து விடும் அளவிற்கு அதிர்ச்சியடைந்தாள்.

“சொல்லு பிரவீண்..! இவ சொல்றது உண்மையா..? என்றான் அவனின் சட்டையைப் பிடித்து.

ஏதோ அசம்பாவிதம் என்பதை உணர்ந்த குடும்பத்தினர் வேகமாக அங்கே வர,

“என்னாச்சு விஜய்..? என்றனர்.

“என்ன எதுவுமே தெரியாத மாதிரி பேசுறான்..? என்று துளசி குழம்ப,

“சொல்லு பிரவீண்… எனக்கு ஏற்கனவே  கல்யாணம் நடந்ததா…? அப்படின்னா, என் மனைவி எங்க..? எதுக்காக என்கிட்டே பொய் சொன்ன..? என்றான் விஜய் உறுமலுடன். அவனுடைய கோபத்தில் பழைய விஜய் திரும்பியதைப் போல் இருந்தது.

“நானும் இவளும் லவ் பண்ணோம். ஒரு சின்ன பிரச்சனை. அதான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றான்னு தான என்கிட்டே சொன்ன..? கல்யாணம் முடிஞ்சா அவ கோபம் தீர்ந்து போய்டும்ன்னு சொன்ன..? ஆனா, அதெல்லாம் பொய்யா..? இல்லை இதோ இவ சொல்றது பொய்யா..? சொல்லு..! என்றான், அவனை காலரோடு பற்றி.

“இவ சொன்னது உண்மைதான்..! என்றான் பிரவீண் மெதுவாக.

“ஆனா, ஏன் அப்படி சொன்னேன்னு நீ புரிஞ்சுக்க விஜய்..? என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மாலையைக் கழட்டி எறிந்தவன், அங்கிருந்து கோபமாக சென்று விட்டான்.விஜய்யின் முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம்.

குடும்பத்தினர் அனைவரும் அவனைத் தடுத்துப் பார்த்தனர். ஆனால் விஜய்யை நிறுத்த முடியவில்லை.

எதையோ வென்று விட்ட சந்தோஷத்துடன் திவ்யா செல்ல, பிரவீண் தான் கலங்கி நின்றான். கல்யாணம் முடிந்த கையோடு உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று தான் அவனும் எண்ணியிருந்தான். ஆனால், உடனே.. இப்படி ஒரு நிலையில், அதுவும் திவ்யா வாயால் வெளிப்படும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

எதுவும் புரியாத நிலையில் முழித்துக் கொண்டு நின்றாள் துளசி. முதல் முறையாக அவள் கண்கள் கலங்கி இருந்தது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!