Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Margazhi Poove

Margazhi Poove..! – 29

பூ 29: அறைக்குள் எரிச்சலுடன், குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தாள் துளசி. அவளுக்கு மனதிற்குள் எரிச்சல் மண்டிப் போயிருந்தது. “இவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு..! பெரிய இவன் மாதிரி நேத்து பிரப்போஸ் எல்லாம் பண்ணான் விளக்கெண்ணெய்..! இன்னைக்கு என்னடான்னா, ஓடியே போய்ட்டான். எப்ப பார்த்தாலும் நான் தான் இவனுக்கு வெயிட் பண்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் இறங்கி வந்தா போதுமே, உடனே தலையில ஏறிடுவான். இருந்தாலும் இந்த சுமார் மூஞ்சிக் குமாருக்கு இவ்வளவு ஆகாது. இவனை […]


Margazhi Poove..! – 28

பூ 28: திவ்யா எவ்வளவு தான் விமலுக்கு தெரியக் கூடாது என்று ஒவ்வொரு விஷயத்தைப் பார்த்து பார்த்து செய்திருந்தாலும், விஷயம் எப்படியோ விமலின் காதினை எட்டியிருந்தது. அதிலும் முக்கிய ஆதாரமாக இருப்பவன், இப்போது அவளுடைய பாதுகாப்பில் இருக்கிறான் என்று தெரிந்த போது, அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திவ்யாவிடமிருந்து இப்படி ஒரு அதிரடி செய்கையை அவன் எதிர்பார்க்கவில்லை. கனகவேலுவுக்கு தெரியாது என்று நினைத்த விமல், அவரின் காதிற்கு விஷயம் செல்வதற்குள், திவ்யாவிடம் பேசித் தீர்த்து விடுவது என்ற […]


Margazhi Poove..! – 27 (2)

அவனின் சந்தோசம் அப்படியே தடைபடுவதை போல்…. அங்கு வந்தாள் திவ்யா. “ஏய் என்ன..? நேத்து வாங்கினது பத்தாதா..? மறுபடியும் எதுக்கு ஆபீஸ் வரைக்கும் வந்திருக்க..?” என்றான் பிரவீன். “அதை உன்கிட்ட  சொல்லனும்கிற அவசியம் எனக்குக் கிடையாது..” என்று திவ்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அமைதியா இரு பிரவீன்.. என்ற விஜய், “என்ன விஷயம்..?” என்றான். “முக்கியமான ஒரு சந்தேகம்.. அதை கேட்டுத் தெரிஞ்சுகிட்டு போகலாம்ன்னு வந்திருக்கேன்..!” என்றாள். “என்ன தெரியனும்..?” என்றான் விஜய். “நிஜமா, நீ எங்க […]


Margazhi Poove..! – 27 (1)

பூ 27: விமல் பேசிய நம்பரின் முகவரி முதல், அவனுடைய சரித்திரம் வரை அனைத்தும் இப்போது திவ்யாவின் கையில். கனகவேல் எவ்வளவு வற்புறுத்திக் கேட்டும் அவரிடம் சொல்ல மறுத்து விட்டாள் திவ்யா. அவள் சொல்லாமல் விட்டாலும், கனகவேலின் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த நம்பருக்கு சொந்தக்காரனை தூக்கிவிட்டால் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தாள் திவ்யா. ஆடிட்டருக்கு போன் செய்து, பினாமி பேரில் இருக்கும் சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் எவ்வளவு, அது […]


Margazhi poove..! – 26

பூ 26:   “நீ என்ன பண்ணுவியோ தெரியாது. விஷயம் வெளிய வரக் கூடாது..! முக்கியமா என்னோட பேர் வெளிய தெரியவே கூடாது..!” என்று விமல் போனில் பேசிக் கொண்டிருக்க, அவனின் அறையை கடந்து சென்ற திவ்யாவின் காதில் லேசாக விழுந்து வைத்தது. “எந்த விஷயம் வெளிய வரக்கூடாதுன்னு பேசிட்டு இருக்கான். என்ன பிரச்சனை..?” என்று மனதில் எண்ணியவள், நடையை மட்டுப் படுத்தி கொஞ்சம் உன்னிப்பாக கேட்கத் தொடங்கினாள். “அந்த டிரைவர் இப்போ எங்க இருக்கான்..?” “அவன் […]


Margazhi Poove..! – 25

பூ 25: வீட்டிற்கு கோபமாக சென்ற திவ்யா, யாரிடமும் பேசாமல் நேராக சென்று அறைக்குள் முடங்கினாள். விமலும் எரிச்சலுடன் இருந்ததால் அப்படியே அமர்ந்திருந்தான். கனகவேல் அப்போது தான் சென்னை கிளம்பிக் கொண்டிருந்தார். “என்ன? திவ்யா அதுக்குள்ள வந்துட்டா? மீட்டிங் முடிஞ்சதா..? அசோசியேஷன் எலக்சன் வேற வருதுல்ல. அதைப்பத்தி அங்க ஏதும் பேசினாங்களா..? இந்த தடவை யார் எலக்சன்ல நாமினேட் ஆகியிருக்கா..?” என்றார் விமலைப் பார்த்து. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அப்படியே அவரைப் பார்த்திருக்க, அவன் பதில் […]


Margazhi Poove..! – 24

பூ 24: மீட்டிங்கில் அசோசியேஷன் சார்பாக அங்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்க, விஜய்யின் கவனம் முழுவதும் துளசியின் மீது தான் இருந்தது. இவ்வளவு அருகில் அவளைப் பார்ப்பது அவனுக்கு இதுவே முதல் முறை. அவர்கள் கிட்டத் தட்ட ஒரே வீட்டில் இருந்தாலும், தொட்டுப் பேச கூட வள்ளி அனுமதிக்க மாட்டார். அதனால் யாரும் அத்தை மகள், மாமன் மகன் என்று கொஞ்சி குலாவியது இல்லை. அத்தை மகளே ஆனாலும், இரண்டடி தள்ளி நின்று தான் பேச வேண்டும் […]


Margazhi Poove..! – 23

பூ 23: வேண்டா வெறுப்பாக விஜய்யின் அறைக்குள் சென்ற துளசிக்கு, விஜய் இருந்த நிலையைப் பார்த்து அவளுக்குள் மறைக்கப்பட்டிருந்த உணர்வுகள் அனைத்தும் அவளையறியாமல் வெளியே வந்தது. என்னதான் மனதிற்கு கடிவாளம் போட்டாலும், சில விஷயங்களில் மனம் நம்முடைய பேச்சை மீறித்தான் விடுகிறது. துளசியின் மனமும் இப்போது அவளுடைய உணர்வுகளை வெளியே  தள்ளிக் கொண்டிருந்தது. கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், அதை வெளியே காட்டாமல் இருப்பதில் துளசியை மிஞ்ச யாருமில்லை. “விஜய்..!!” என்றாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு, குரலில் அவ்வளவு […]


Margazhi Poove..! – 22

பூ 22: அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்ட விஜய்யின் மனநிலையை பிரவீனால் கொஞ்சமும் கணிக்க முடியவில்லை. அமைதியாக எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் விஜய். “ரொம்ப லேட் ஆகிடுச்சு விஜய்..! நீ போய் முதல்ல தூங்கு..!எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்..!”  என்றான் பிரவீன். “ஆமாண்ணா..! நீங்க வந்து தூங்குங்க.. ஒரே நாள்ல எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவிங்க..?” என்று அருணும் அவன் பங்குக்கு சொல்ல, அந்த மொட்டை மாடிப் பனி தான் குளிர்ச்சியாய் இருந்ததே தவிர விஜய்யின் […]


Margazhi Poove..! – 21 (2)

“ஒரு நாளும் நடக்காது..! எங்கப்பா நம்ப மாட்டார்” என்றாள் கோபமாக. “ஏன் நம்பமாட்டார். அவரைப் பொறுத்தவரை நீ லவ் பண்றது வேற ஜாதிப் பையனை. அதுக்கு துணையா இருக்குறது விஜய்..! இப்படித்தாண்டி விஷயம் தெரியும் என் மக்கு மாமன் மகளே..!” என்றான் தெளிவாய். “நடக்காது..!” என்றாள். “நடக்கும்..! நடத்திக் காட்டுறேன். என்ன..? அந்த விஜய் தலையிடாம இருந்திருந்தா, கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம். எதிர்காலத்துல நீ பீல் பண்ணக் கூடாது பாரு..!” என்றான் விமல். “நீ தாலி […]