Margazhi Poove..! – 29
பூ 29:
அறைக்குள் எரிச்சலுடன், குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தாள் துளசி. அவளுக்கு மனதிற்குள் எரிச்சல் மண்டிப் போயிருந்தது.
“இவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு..! பெரிய இவன் மாதிரி நேத்து பிரப்போஸ் எல்லாம் பண்ணான் விளக்கெண்ணெய்..! இன்னைக்கு என்னடான்னா, ஓடியே போய்ட்டான். எப்ப பார்த்தாலும் நான் தான் இவனுக்கு வெயிட் பண்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் இறங்கி வந்தா போதுமே, உடனே தலையில ஏறிடுவான்.
இருந்தாலும் இந்த சுமார் மூஞ்சிக் குமாருக்கு இவ்வளவு ஆகாது. இவனை கெஞ்சி கதற விடலை.. என் பேரு விஷ்வ துளசி இல்லை..!” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே இருந்தாள்.
Advertisement
என்ன எதிர்பார்த்தாள் என்று அவளுக்கு தெரியவில்லை. மனதில் என்ன ஏமாற்றம் என்று அவளுக்குத் தெரியவில்லை. காரணமே இல்லமால் அழுகையாய் கூட வந்தது.
நாம் ஒன்றை எதிர்நோக்கியிருக்க, அது நடக்காமல் போனால் வரும் விரக்தி அவளுக்கும். அதனால் வந்த எரிச்சலில் நேரம் போவதே தெரியாமல் அமர்ந்திருந்தாள். செல்போனின் சத்தத்தில் நிஜத்திற்கு வந்தவள், பிரவீன் அழைப்பதைப் பார்த்து, அசட்டையாக எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அவன் அழைக்க,
“இப்ப எதுக்கு விடாம போன் பண்ற..? நான் நிம்மதியா இருக்குறது உனக்குக் கூட பிடிக்கலையா..?” என்று எடுத்த எடுப்பில் எறிந்து விழுந்தாள்.
Advertisement
“என்னாச்சு துளசி..? ஏன் இவ்வளவு கோபம்..?” என்றான் பிரவீன். அவனின் அமைதியான பேச்சில், தன்னுடைய தவறை உணர்ந்தாள் துளசி.
Advertisement
“சாரிண்ணா..! ஏதோ டென்சன்..! எதுக்கு போன் பண்ண..?” என்றாள்.
“நான் காலையில ஒரு பைல் கேட்டேனே..! அது விஜய் ரூம்ல கபோர்ட்ல இருக்கு..! அதோட சாவி, என்னோட ரூம்ல இருக்கு. அதை எடுத்து, அந்த டாக்குமெண்ட்ஸ போட்டோ எடுத்து அனுப்பு துளசி..! ப்ளீஸ்..!” என்றான் பிரவீன்.
“சரிசரி..! அதுக்கு ஏன் பிளீஸ் எல்லாம் போடுற..?” என்றவள் போனை வைத்து விட்டு, விஜய்யின் அறைக்கு சென்றாள், அந்த பைலைத் தேடி.
Advertisement
அவன் அறைக்குள் நுழையும் போதே, மனதின் பாரம் பாதியாக குறைந்திருந்தது.
“எந்த கபோர்ட்ல இருக்கு..?” என்றவள், ஒவ்வொன்றாய் தேடிக் கொண்டே வர, சாவி எதற்கும் பொருந்தவில்லை. அந்த பைலைத் தவிர அனைத்தும் அவள் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது. ஒருவழியாக ஒரு கபோர்டைத் திறந்தவள், பைலை எடுத்து விட்டு, கபோர்டை மூடப் போக, அதற்கு அடியில் இருந்த பொருள் அவள் கவனத்தை ஈர்த்தது.
அதற்குள் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தவளுக்கு,அதில் இருந்த எதையுமே நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, மனதிற்குள் தோன்றிய அதீத உணர்வுகள் அவள் இதயத்தை அப்படியே பிழிந்தது.
அப்படியே கத்தி அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால் அதை செய்யவும் முடியவில்லை..! அதே உணர்வோடு, பிரவீன் கேட்டதை போட்டோ எடுத்து அனுப்பினாள் துளசி. அவள் அனுப்பியதைப் பார்த்தவுடன், தனக்குள் சிரித்துக் கொண்டான் பிரவீன்.
“நீ வீட்டுக்கு கிளம்பு விஜய்…!” என்றான் பிரவீன்.
“என்ன விளையாடுறியா..? ஒரேதா முடிச்சுட்டே போகலாம்..!” என்ற விஜய், அடுத்து வேலையில் ஆழ்ந்து போனான். பிரவீனும் அவனை தொந்தரவு செய்யவில்லை.
“என்னாச்சும்மா..? துளசி ஏன் கீழ வரவேயில்லை..! அதுவும் விஜய் ரூம்க்கு போனா, இப்பவும் அங்க தான் இருக்கா..? எதுவும் பிரச்சனையா..?” என்றார் வித்யா.
“விஜய் ரூம்தான் இனி அவ ரூமும். அவ எங்கயோ இருந்துட்டு போறா. நீ கண்டுக்காத வித்யா..” என்றார் வள்ளி.
“ஏம்மா வித்யா..? எதுவும் பிரச்சனையா..?” என்றார் ரத்னவேல்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா..!” என்றார் வித்யா.
“பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை. நாளைக்கு பங்க்ஷனுக்கு செய்ய வேண்டிய எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சா வித்யா..?” என்று வள்ளி கேட்க,
“அதெல்லாம்.. முடிச்சாசும்மா. எனக்கு துளசியை நினைச்சுத் தான் பயமே..!” என்றார்.
“விஜய் பார்த்துப்பான். நீ கவலைப் படாத..!” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்தான் விஜய்.
“பிரவீன் எங்க விஜய்..?”
“கொஞ்ச நேரத்துல வந்திடுவான் பாட்டி. பேங்க் வரைக்கும் போயிருக்கான்..! ஆமா, துளசி எங்க..?” என்றான்.
“இன்னைக்கு அவளை எங்கயாவது வெளிய கூட்டிட்டு போயிருக்கலாம் விஜய். நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்ட, அவ முகமே சரியில்லை. ரூமை விட்டு வெளிய வரவேயில்லை..!” என்றார் வள்ளி.
“சாரி பாட்டி..! முக்கியமான வேலை…! இப்போ கூட்டிட்டு போறேன்..” என்றான்.
“அதெல்லாம் இனி வேண்டாம். வெளிய மழை வேற விடாம பெய்யுது..!” என்றார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வேகமாய் சென்றான் விஜய். துளசியின் அறையில் சென்று பார்த்தவன், அவளைக் காணாது, யோசனையுடன் தன்னுடைய அறைக்கு சென்றான். அங்கே அவனுடைய கட்டிலில், காலைக் கட்டிக் கொண்டு.. அதில் தலையை கவிழ்த்தி அமர்ந்திருந்தாள் துளசி.
“என்னாச்சு..? ஏன் இப்படி இருக்கா..?” என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றான். சென்றவன் அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க,
“விஜய்..! சேலையில செம்மையா வேற இருக்காளே..! சும்மாவே இங்க உன்னை கண்ட்ரோல் பண்ண முடியாது.. இன்னைக்கு உனக்கு கஷ்ட்ட காலம் தான்..” என்று அவனின் உள் மனம் சொல்ல, அதையெல்லாம் பொருட்படுத்தாது, அவளின் அருகில் சென்றவன்,
“விஷூ..!” என்றான். அவனின் அந்த அழைப்பில் அவள் விலுக்கென்று நிமிர, அவள் முகம் முழுவதும் வீங்கியிருந்தது. அவள் அந்த அளவிற்கு அழுதிருந்தாள்.
“ஹேய்.. துளசி..என்னாச்சு..? ஏன் இப்படி அழுதிருக்க..? யார் என்ன சொன்னா..?” என்றான் பரபரப்பாக. துளசி இந்த அளவிற்கு அழுது இப்போதுதான் பார்க்கிறான் விஜய்.
“என்னடி ஆச்சு..??” என்றான் விஜய். அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
“என்னடி எதுவும் சொல்ல மாட்டேங்குற..? இரு நான் பாட்டிகிட்ட கேட்குறேன்..!” என்று அவன் திரும்பி செல்ல முற்பட, வேகமாய் எழுந்தவள், அவனின் பின்னால் சென்று அவனை அணைத்திருந்தாள். அவளின் திடீர் அணைப்பில் திகைத்து நின்றவன் விஜய் தான்.
“சாரி குமாரு..!!!” என்றவளின் கண்ணீர், அவன் முதுகு சட்டையை நனைக்க,
அவளின் கையைப் பிடித்து முன்னால் இழுத்தவன்,
“இப்ப எதுக்குடி இப்படி அழற..? என்னன்னு சொன்னாத்தான தெரியும்..?” என்றான் பரிதவிப்புடன்.
“சாரிடா விஜய்..!” என்றவள், அவன் முகம் முழுவதும் முத்தமிட, அவளின் முத்தத்தில் திக்குமுக்காடிப் போனான் விஜய்.
முத்தமிட்டு முடித்தவள், அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள, எதுவும் புரியாமல், ஆனால் அவளின் அந்த அணைப்பில் உருகிப் போய் நின்றிருந்தான் விஜய்.
அப்போது தான் கட்டிலில் இருந்த அந்த பொருள் கண்ணில் பட்டது.
“என்ன இது..?” என்ற யோசனையுடன், அவளை லேசாக விலக்கியவன்.. அதை எடுத்துப் பார்க்க, அதில் விஜய் அவளுக்காக, வாங்கிய கம்மலும், கொலுசும் இருந்தது.
“இதுக்காடி இப்படி அழற..?” என்றான் யோசனையுடன்.
“இல்லை..!” என்றாள்.
“பின்ன எதுக்கு..? இது எங்க இருந்தது..?” என்றவனுக்கு அப்போது தான் பிரவீன் சொன்னது நியாபகத்திற்கு வந்தது.
“இது நான் வாங்கினதா துளசி..?” என்றான் யோசனையுடன்.
“ஆமா..!” என்று தலையை ஆட்டினாள்.
“அந்த பிறந்தாநாள் அன்னைக்குத் தான், நான் கோபமா சென்னை போனேன் இல்லையா..?” என்றான்.
“உனக்கெப்படித் தெரியும்..?” என்றாள்.
“பிரவீன் சொன்னான்..!” என்றான்.
“நீ இதையெல்லாம் அன்னைக்கே குடுத்திருந்தா, நமக்குள்ள இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது..!” என்றாள்.
“அதுக்கு முன்னாடி தான் நீ ஏதோ கோபமா பேசிட்டன்னு பிரவீன் சொன்னான். அதனால இதை நான் ரூம்ல தூக்கி எறிஞ்சுட்டு போய்ட்டேன்னும், அதை பிரவீன் எடுத்து வச்சதாவும் சொன்னான்..! இதுல அப்படி என்ன இருக்கு. ஒரு கம்மலும், கொலுசும். இதை வாங்கிக் குடுத்தா.. நீ இப்படியெல்லாம் முத்தம் குடுப்பேன்னு தெரிஞ்சிருந்தா, தினமும் வாங்கிக் குடுத்திருப்பேனேடி… என்றான் சிரிப்புடன்.
“நான் ஒன்னும் அதைப் பார்த்து அழுகல..!” என்றவள், அதில் இருந்த அட்டையை எடுத்துக் கொடுத்தாள்.
அது லவ் ப்ரப்போசல் அட்டையாக இருக்க, அதில் விஜய்யின் கையெழுத்து தெளிவாக இருந்தது. அப்போதே, துளசியிடம் காதலை சொல்லியிருந்தான் விஜய். அதைப் பார்த்த விஜய்க்குமே எப்படி உணர்கிறோம் என்று புரியாமல், என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தான் விஜய்.
“சாரி விஜய்..! நான் மட்டும் அன்னைக்கு ப்ரீத்தி பேசுனதை நம்பி, உன்கிட்ட சண்டை போடாம போயிருந்தா, இவ்வளவு பிரச்சனை இல்லைதானே..! எல்லாமே என்னால தான் விஜய். உன்னோட இந்த நிலைமைக்கு காரணமும் நான் தான் விஜய். ஐ ஆம் சாரி விஜய்..!” என்றவள், அவன் நெஞ்சில் சாய்ந்து கதறிக் கொண்டிருந்தாள்.
நினைவுகள் மறந்த நிலையில்… இப்போது தெரிந்த இந்த விஷயம் விஜய்க்கு எவ்வளவு ஆறுதல் என்று மற்றவர்களுக்குப் புரியாது. விஜய்க்கு மட்டுமே புரியும்.
“இப்ப உனக்கு எந்த சந்தேகமும், உறுத்தலும் இல்லைதானே துளசி..!” என்றான்.
“போடா..!” என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்கவே தயங்கினாள்.
“ஆமா, இதை எங்க இருந்து எடுத்த..?” என்றான் யோசனையாக.
“இந்த கபோர்ட்ல தான்..!” என்றாள்.
“அதோட சாவி இல்லையே..! தொலஞ்சு போய்டுச்சு, அதுக்குள்ள ஒண்ணுமே இல்லைன்னு சொன்னானே பிரவீன்..?” என்றான்.
“அவன் தான் இந்த பைலை எடுத்து போட்டோ போட சொன்னான். சாவி, பிரவீன் ரூம்ல இருந்தது..!” என்றாள்.
‘அப்போ உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குப் பிரவீன். வந்தனா கழுத்தில் தாலி இருந்ததைப் பார்த்துட்டு, எதுவும் தெரியாம… உண்மை தெரியாம இதை சொல்லாம இருந்திருக்க. இன்னைக்கு காலையில கூட இதைத்தான் சொன்னானா..? நீ வாடா உன்னை வச்சிக்கிறேன்..!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் விஜய்.
“ஐ லவ் யு விஜய்..! இப்போ நான் எப்படி பீல் பண்றேன் தெரியுமா..? இந்த நிமிஷம் நான் மட்டும் தான் அவ்வளவு சந்தோஷமா இருக்குறதா நினைக்கிறேன்..!” என்று அவள் பேசிக் கொண்டேயிருக்க, அவள் பேசியது எதுவும் அவனுக்கு காதில் விழவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
“என்னடா..?” என்றாள்.
“செம்மையா இருக்கடி..!” என்றான் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டே.
“டேய்..! பட்டப்பகல்ல உன்னோட பார்வையே சரியில்லை..! ஒழுங்கா போய்டு..!” என்றாள்.
“என்னடி போடா போடான்னு சொல்லிட்டு, நீ வந்துட்டே இருக்க..?” என்றவன் சிரிக்க,
“நான் எங்கடா வந்தேன்.?” என்றவள் முறைக்க,
“இதோ இப்படித்தான்..!” என்று அவளை இழுத்து தன்மேலே போட்டுக் கொண்டான்.
“விடு விஜய்..! கீழ பாட்டி எல்லாரும் இருப்பாங்க..! என்ன நினைக்க மாட்டாங்க..?” என்றாள்.
“ஒன்னும் நினைக்க மாட்டாங்க..! பேரன் இன்னைக்குத் தான் உருப்படியா ஒரு வேலை செய்றான்னு நினைப்பாங்க…!” என்றான்.
“இது பகல்..!” என்றாள் நெளிந்தவாறு.
“இங்க நம்ம வாழ்க்கையே பல்லைக் கட்டிட்டு சிரிக்குது, இதுல பகலாவது, இரவாவது..!” என்றான்.
“அது இல்ல விஜய்..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளின் வாயை இதழ் கொண்டு அடைத்திருந்தான்.
அந்த காரிகையுடன் கவி பாட தொடங்கியிருந்தவன், அவளை கற்பனையிலிருந்து நிஜத்திற்கு மீட்டுக் கொண்டிருந்தான். அவனின் காதல் கடலில், காரிகையவள் திக்குமுக்காடி மூழ்கிக் கொண்டிருந்தாள்.
அத்தனை நாள் காத்திருப்பையும், அன்றே முடித்துக் கொள்பவன் போல் இருந்தது விஜய்யின் வேகம். அவளும் விரும்பியே அவனுக்குள் தொலைந்து போனாள். எல்லா பிரச்சனைகளையும் தாண்டி, இருவரின் காதலும், மனமும் ஒன்று சேர்ந்திருந்தது.
அடுத்த நாள் விடியல், அவர்களின் வாழ்வில் அழகான விடியல். இப்படியொரு அழகான விடியல் அனைவரின் வாழ்விலும் இருந்திருக்கும். புது உலகத்தின் புதுமைகளைப் பார்த்தவள், பதுமையென உறங்கிக் கொண்டிருக்க, அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டு அருகில் படுத்திருந்தான் விஜய். நேரம் ஆனாலும் அவள் தூக்கம் கலைவதைப் போல் தெரியவில்லை அவனுக்கு.
“துளசி..!!!!” என்று ரத்னவேலின் குரலில் அவன் கத்த,
“நான் இல்ல தாத்தா..!” என்றபடி பதறியடித்து எழுந்தாள் துளசி. பிறகு தான் உண்மை புரிய,
“டேய் லூசுப் பயலே..!” என்று அவனை மொத்தத் தொடங்கினாள்.
“அடியேய்..! கொஞ்சமாவது புருஷன்னு மரியாதை குடுக்குறியா..? இரு பாட்டிகிட்ட சொல்றேன்..!” என்றான்.
“போய் சொல்லிக்கோ..!” என்றாள் தெனாவெட்டாய்.
“பயமில்லையா..?”
“இல்லை..! அதெல்லாம் சுமார் மூஞ்சிக் குமாரு பார்த்துப்பான்..!” என்றவள், மீண்டும் அவனை அணைத்துக் கொள்ள,
“அடியே ராங்கி… விடிஞ்சு நேரம் ஆச்சு. இன்னைக்கு தாலி பிரிச்சு கோர்க்கணும்..!” என்று அவன் நியாபகப் படுத்த,
“ஐயோ..! ஆமால.. போச்சு…என் மானமே போச்சு..!” என்று அவள் புலம்ப,
“விடுடி..என்கிட்டே தான போச்சு..தப்பில்லை..!” என்றான் அடக்கிய சிரிப்புடன்…
“டேய்..! உன்னை.. நான் இப்ப எல்லார் மூஞ்சியிலும் எப்படி முழிப்பேன்..!”
“ஏன் கண்ணை வச்சுத்தான்..!” என்றான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“துளசி..! சீக்கிரம் கிளம்பி வாங்க..! சாப்பிடுற எண்ணம் இருக்கா இல்லையா..?” என்ற வள்ளியின் குரலில், அடித்துப் பிடித்து எழுந்தாள்.
“நான் புல் மீல்ஸ் சாப்பிட்டேன்னு பாட்டிக்கு எங்க தெரிய போகுது..?” என்றவன் அவளைப் பார்த்து கண்ணடித்து வைக்க,
“நான் இப்ப எப்படி என்னோட ரூம்க்கு போறது..?” என்றாள் கவலையாய்.
“சிம்பிள்..! இங்கயே குளி..நான் போய் ட்ரஸ் எடுத்துட்டு வரேன்..! இல்லைன்னா நானும்..!” என்று அவள் பின்னால் போக,
“ப்ளீஸ் விஜய்..!” என்றவள், அவனை வெளியே தள்ளினாள். அவன் சிரித்துக் கொண்டே வெளியே வந்ததையும், பக்கத்தில் அவள் அறைக்கு சென்று அவளுக்கு டிரஸ் எடுத்து சென்றதையும், பார்க்காதவர் போல் பார்த்துக் கொண்டிருந்தார் வள்ளி.
“வித்யா..! எல்லாமே சுபம் போல. விஜய் முழு குடும்பஸ்தன் ஆகிட்டான். பாரு இப்பவே உன் பொண்ணு வேலை வாங்க ஆரம்பிச்சுட்டா..!” என்றார்.
“இந்த குடும்பத்துல யாருக்கும் நன்றியே இல்லை..!” என்று பிரவீன் போற போக்கில் சொல்ல,
“டேய்..! உனக்கு அடுத்த மாசமே கல்யாணம். தாத்தாகிட்ட பேசிட்டேன்… சுந்தரும் சரின்னு சொல்லிட்டான். இன்னைக்கு பேசி முடிச்சுடலாம் பேரா..” என்றார் வள்ளி.
“நீங்க தான் சூப்பர் பாட்டி..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, அங்கே வந்த விஜய்,
“பிரவீன்.. இங்க வாயேன்..!” என்றான்.
“வரமாட்டேன் போடா..” என்றான்.
“அப்ப நான் வரேன்..!” என்றவன் வந்து பிரவீனை அப்படியே அணைத்துக் கொள்ள,
“என்ன மாப்பிள்ளை கோபம் இல்லையே..?” என்றான் பிரவீன்.
“கோபமா..? புல் ஹேப்பி மச்சான். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலைடா.. உன்னை மாதிரி ஒரு மச்சினன் இல்லை நண்பன் கிடைக்க நான் தான் புண்ணியம் பண்ணியிருக்கணும்..!” என்றான்.
“சரி சரி போதும், போதும்..! வீட்டுக்குள்ள அப்பறம் கப்பல் தான் விடனும். அடுத்து ஆக வேண்டியதைப் பாருங்க..!” என்றான் அருண்.
“அடுத்து ஆக வேண்டியது என்னடா..?”
“எனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிங்கடா..!” என்றான்.
“பொண்ணெல்லாம் ரெடியா தான் இருக்கு..!” என்றாள் பவி.
“அப்படியா பவி.. அண்ணனுக்கு பொண்ணு பார்த்து வச்சிருக்கியா…?” என்றான்.
“இல்லையா பின்னே..! பொண்ணு அப்படியே ஒரு பேரழகு..!” என்றாள்.
“எந்த ஊர்..?”
“ஊரா..? வண்டலூர் ஜூல தாண்டா..!” என்று பவி சிரிக்காமல் சொல்ல,
“அடிங்க.. ! போங்கடா நானே தேடிக்கிறேன்..!” என்றான் அருண்.
“சரிண்ணா, கோபப்படாத.. நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்குறேன்..” என்று பவி சொல்ல,
“ஆணியே புடுங்க வேண்டாம்..! முதல்ல, உன்னையே ஒருத்தன் பார்க்குறான் பாரு… அவனை கவனி. என்னை ஆளை விடு..!” என்றான் அருண்.
“ம்ம்..அதெல்லாம் தப்பு, அம்மா சொல்லியிருக்காங்க..!” என்றாள் பவி.
“பிரவீன் இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, நல்லா யோசிச்சுக்க.. இந்த தேஞ்ச ரெக்கார்டே தான் வேணுமா..?” என்றான்.
“வேற வழி இல்லடா..! எனக்குப் போதும்..” என்றான் பிரவீன், போனால் போகுது என்பதைப் போல.
“விஜய்..!” என்று துளசியின் குரல் கேட்க,
“இதோ வந்துட்டேன் துளசி..!” என்றவாறு விஜய் ஓட, அவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
ஒரு மாதத்திற்கு பிறகு,
மேடையில் கல்யாண மாப்பிள்ளையாக பிரவீன் அமர்ந்திருக்க, அருகில் பவித்ரா பவ்யமாய் அமர்ந்திருந்தாள்.
துளசி அண்ணனின் கல்யாணத்தில் பிசியாக இருக்க, விஜய்க்கோ அவளை சைட் அடிப்பதே பெரிய வேலை. பட்டு சேலை சரசரக்க நடந்து கொண்டிருந்தவளை, சரசமாய் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.
“அண்ணா..! ஓவரா போகுது.. முடியலை..” என்றான் அருண்.
“விடுடா.. உனக்கு கல்யாணம் ஆகும் போது தான் உனக்குப் புரியும். இதெல்லாம் தனி பீல்டா..!” என்றான் விஜய்.
பிரவீன் கடுப்பாக இருப்பதைப் போல் தெரிந்தது விஜய்க்கு. அவனுக்கு அருகில் சென்றவன்,
“ஏன் மச்சான் முகம் ஒரு மாதிரி இருக்கு..?” என்றான்.
“இந்த கண்ணனை இன்னும் காணோம்டா..! உன்னோட கல்யாணத்துக்கு தான் டேக்கா குடுத்தான். இப்போ என்னோட கல்யாணத்துக்கும் ஆளையே காணோம்..?” என்று பிரவீன் புலம்பிக் கொண்டிருக்கும் போதே, வந்தான் கண்ணன். அவனுடன் ப்ரீத்தியும் வந்து கொண்டிருக்க, அதிர்ந்தான் பிரவீன்.
“ஏண்டா இப்படி ஷாக் ஆகுற..?” என்றான் விஜய்.
“கண்ணன் கூட வர்றது வேற யாரும் இல்லடா, ப்ரீத்தி. ஆனா, இவன் கூட எப்படி..?” என்றான் பிரவீன்.
“இந்த டென்ஷன் எல்லாம் உனக்கெதுக்கு. ரிலாக்ஸா இந்த நிமிஷத்தை என்ஜாய் பண்ணு மச்சான்..!” என்றான்.
விஜய்யின் அருகில் வந்த ப்ரீத்தி… அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு,
“சாரி விஜய்..! வெரி சாரி.. நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. இருந்தாலும் ஒரு பிரண்டா, அவளோட ஆத்மா சாந்தியடைனும்ன்னு தான் நான் அப்படி சொன்னேன்..” என்றாள் ப்ரீத்தி.
“உன்கிட்ட கடைசியா ஏதாவது சொன்னாளா..?” என்றான்.
“மனைவி இல்லை, தாலி கட்டலைன்னு விட்டு விட்டு சொன்னா.. நீங்க குணமாகி வந்த உடனே உண்மையை சொல்லனும்ன்னு நினைச்சேன். ஆனா, அந்த விமல் ஆளுங்க தான் என்னை பிளாக்மெயில் பண்ணி, வீட்ல எல்லாரும் பயந்து ஊரை விட்டே போகுற மாதிரி ஆகிடுச்சு..!” என்றாள்.
“கண்ணனை எப்படிப் பார்த்த..?” என்றான்.
“கண்ணன் எனக்கு வீட்ல பார்த்த வரன். போட்டோ பார்க்குற வரைக்கும் இந்த கண்ணன்னு தெரியாது. அப்பறம் தான் தெரிஞ்சது. எங்களுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு. இன்னும் ஒன் மந்த்ல மேரேஜ்..!” என்று ப்ரீத்தி சொல்லிக் கொண்டிருக்க, கண்ணனோ அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ என்னடா சொல்லப் போற நல்லவனே..?” என்றான் விஜய்.
“உன்னை இப்படிப் பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா..” என்ற கண்ணன் அவனை அணைத்துக் கொள்ள, இதையெல்லாம் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்த துளசிக்கு, ஏதோ ஒரு மன நிம்மதி. அவளின் பார்வையை உணர்ந்த விஜய்,
“என்னடி..? பார்வை பலமா இருக்கு..? என்ன சைட் அடிக்கிறியா..?” என்றான் மையலுடன்.
“இல்லடா..! ஆமாடா..!” என்றாள்.
“ஆமாவா இல்லையா..?”
“என் புருஷன் நான் சைட் அடிப்பேன்..! யாரு கேட்பா..?” என்றாள் துளசி சத்தமாக.
“நாங்க கேட்போம்..! தாயே தங்கச்சி, இன்னைக்கு அண்ணன் எனக்கு கல்யாணம்மா. இன்னைக்கு மட்டுமாவது என்னை பெர்பார்ம் பண்ண விடுங்கடா..! இதெல்லாம் வாழ்க்கையில ஒரு தடவை தாண்டா நடக்கும்..” என்ற பிரவீனைப் பார்க்க அனைவருக்கும் பாவமாய் இருக்க,
“சரி.. இவ்வளவு தான உன் ஆசை..! அப்படியே நடக்கட்டும்..!” என்றான் விஜய், பெரிய மனசுடன்.
“மாமா..! பேசிட்டே இருக்கீங்க..? தாலியைக் கட்டுங்க..!” என்றாள் பவித்ரா.
“எல்லாம் என் நேரம்டி..! நீ பேசணும், நான் கேட்கணும்ன்னு..” என்று புலம்பிக் கொண்டே தாலியைக் கட்டியிருந்தான் பிரவீன்.
வள்ளிப் பாட்டிக்கும், ரத்னவேலிற்கும் மனம் நிறைந்து போனது. வித்யாவும் சுரேஷும் மன நிறைவுடன் பார்த்துக் கொண்டிருக்க, நீலாவும், சுந்தரும் மகளுடைய கல்யாணத்தை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜ சேகரின் ஆன்மாவும் அவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கும்.
அன்றைய இரவு,
இரவின் ஏகாந்தத்தில், பால்கனியில் நின்று நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டிருந்தாள் துளசி. அவளை பின்னிருந்து அணைத்த விஜய்,
“என்ன பண்றிங்க மை டியர் ராங்கி..?” என்றான் மையலுடன்.
“பார்த்தா தெரியலை..! ஸ்டார்ஸ பார்த்துட்டு இருக்கேன்..” என்றாள்.
“அங்க பார்த்தது போதும். மாமனை பார்க்குறது..?” என்றான்.
“அதெல்லாம் முடியாது..!” என்றாள்.
“இன்னைக்கு பிரவீனுக்கு பர்ஸ்ட் நைட்டுடி..!” என்றான்.
“அதுக்கு..?”
“அதை நம்ம செலிபரேட் பண்ண வேண்டாமா..?” என்றான் விஜய் சிரிப்புடன்.
“டேய்..! எதெல்லாம் செலிபரேட் பண்றதுன்னு விவஸ்தை இல்லையா..?” என்றாள்.
“பொண்டாட்டிகிட்ட விவஸ்தை பார்த்தா, கதைக்கு ஆகுமா..?” என்றவன் அணைப்பை இருக்க,
“பழைய நியாபகம் வரலைன்னு உனக்கு கவலை இல்லையா விஜய்..?” என்றாள்.
“கண்டிப்பா இல்லை. இப்பவே நான் சந்தோஷமா இருக்கேன். எனக்கு இதுவே போதும்..! உனக்கு..?” என்றான்.
“எனக்கு நீ மட்டும் போதும்..! என்னோட காதல் மட்டும் போதும்..!” என்றவள், அவன் நெஞ்சத்தில் தஞ்சம் அடைய, அவனோ.. அவளை தனக்குள் இறுக்கிக் கொண்டான். அவர்களைப் பார்த்த நட்சத்திரங்களும் வெட்கப் பட்டு, தன்னை கருமேகங்களுக்குள் ஒளித்துக் கொண்டன.
மார்கழி பூவாய் என்றும் விஜய்யின் மனதில் மணம் பரப்பிக் கொண்டிருப்பாள் துளசி… விஜய்யின் விஷ்வ துளசி.
நன்றி.
