Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Marum Kaalngal Mara kathal (MKMK) Episode 1.1

 

Nanbargaluku vanakkam. I am back with another story.  Guys,  get ready to fly with me!.

சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 



Advertisement

காலை உறக்கம் கலைந்து  முகம் வரை மூடி இருந்த மொத்தமான போர்வையை லேசாக விலக்கி தலையை மட்டும் வெளியே நீட்டி பார்த்தாள் சாதனா. மர சுவரில் தொங்கிக்கொண்டிருந்த  அந்த பெரிய சுவர் கடிகாரத்தை பார்த்தாள். மணி 8 ஆகியிருந்தது.

“8 ‘o’ கிளா க்  ஆயிடுச்சா?”  என்று தனக்குத்தானே  கேட்டபடி

‘இன்னும் கொஞ்ச நேரம் இந்த  வார்ம் கம்போர்டேரில்(warm comforter) தூங்கலாம்.’ என்று சொன்ன மனதினை கட்டுப்படுத்திக்கொண்டு  குளிருக்கு இதமாக போர்த்திக் கொண்டிருந்த அந்த மொத்தமான போர்வையை முழுதுமாக விலக்கி அந்த பூப்போன்று பஞ்சு மெத்தையியிலிருந்து எழுந்து பாதத்தை தரைமீது ஒட்டியிருந்த கார்பட்(carpet) மீது வைத்தாள். அரை முழுதும் நிரம்பி இருந்த லேசான குளிர் காற்று அவளை சூழ்ந்தது. அணிந்திருந்த முழுக்கை டி-ஷர்ட்  முழு பேண்ட்  அந்த குளிருக்கு ஈடு கொடுத்தது.

Advertisement

 

Advertisement

குளியலறை சென்று பல் துலக்கிவிட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி சமையல் அறைக்கு சென்றாள். அங்கே இருந்த காபி மேக்கர் உதவியுடன் காபி போட்டு ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். ஒரு மிடறு காபி  அருந்தியபடி ஜன்னல் திரையை லேசாக விலக்கி வெளியே பார்த்தாள்.

சில மரங்களை தவிர மற்ற மரங்களில்d இலைகள் பச்சையிலிருந்து மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு மற்றும் பழுப்பு நிறங்களுக்கு மாறிக் கொண்டிருந்தன.

 

Advertisement

வெவ்வேறு மரங்கள் வெவ்வேறு நிற இலைகளுடன் காணப்பட்டன.  மரங்கள் தங்கள் நிறம் மாறிய இலைகளை வேகமாக வீசும் காற்றுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பறி கொடுத்து இது இலையுதிர் காலம் என்பதை காட்டின.

உதிர்ந்த  பலவண்ண இலைகள் சாலையின் மீது ஒரு போர்வை போல சாலையை போர்த்தி இருந்தன. முற்றிலுமாக இலைகளை இழந்த ஒரு சில மரங்கள் வெறும் கிளைகளுடன்  வண்ணம் இழந்து காட்சியளித்ன. மரங்கள், உதிர்ந்த இலைகளை சோகமாக பார்ப்பது போல சாதனாவுக்கு தோன்றியது. அந்த சோகம் அவளையும்  தொற்றிக்கொண்டது.

 

இந்த மரங்களைப் போலவே அவளது  வாழ்க்கையும் வண்ணம் இல்லாமலே இருக்கிறது. இந்த மரங்களுக்கு வசந்தம் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். ஆனால் இவள் வாழ்க்கையில் கடந்த இரண்டு வருடங்களாக  இலையுதிர் காலம் மட்டுமே  நீண்டு கொண்டிருக்கிறது.

 

ஒரு பெருமூச்சுடன் குடித்து முடித்த காபி கப்பை சிங்கிள் லேசாக கழுவி சமையல் அறையில் இருந்த பாத்திரம் துலக்கும் எந்திரத்தில் கப்பை வைத்தாள்.

 

“ என்னமா சாதனா எழுந்துட்டியா?” என்று கேட்டபடி அங்கு வந்தார்  தாய் கலைவாணி.

 

“ஆமாமா.”

 

“ஏன்மா இன்னைக்குதான் உனக்கு லீவ் ஆச்சே. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே?”

 

“ இல்லம்மா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதுக்காக தான்  எழுந்தேன்.”

 

“சரி. காப்பி  குடித்தாயா?”

 

“இப்பதான் குடித்தேன்  அம்மா.”

 

“சரி நீ போய் உன் வேலையை பாரு. இன்னிக்கு நான் பூரி உருளைக்கிழங்கு பண்ணப் போகிறேன். பூரி போடுவதற்கு முன்னாடி உன்னை கூப்பிடுறேன். வேலை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உடனே வா. அப்பதான்  இந்த குளிருக்கு சூடா சாப்பிடலாம்.” என்றார் தாய்.

 

“எதுக்குமா கஷ்ட படுறீங்க ப்ரெட் சாண்ட்விச் ஏதாவது சிம்பிளா பண்ணினா போதாதா?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் சாதனாவின் தங்கை சஞ்சனா.

 

“ஆமாம் அம்மா. sபஞ்சு சொல்றது கரெக்ட்டு தான். எதுக்காக இப்படி வெரைட்டி வெரைட்டியா பண்ணிட்டு இருக்கீங்க?”  என்று கேட்டாள் சாதனா தாயின் மீது அக்கறையாக.

 

“நீங்கள் எப்பவும் அப்படித்தானே சாப்பிடுறீங்க. நான் இங்கே இருக்கப்போகிறது 5 மாசம் தான். அந்த 5 மாசம் என் கையால விதவிதமா சமைச்சு போட்டால்தான் எனக்கு திருப்தியா இருக்கும்.” என்றார் கலைவாணி மகள்கள் மீது பாசமாக.

 

“அம்மா நீங்க இங்க வந்து இருக்கிறது எங்களுக்கு விதவிதமா சமைச்சு போட இல்ல. என்னையும் குழந்தையையும் பார்த்துக்க மட்டும் தான். ஞாபகம் வச்சுக்கோங்க. மத்த நேரத்துல ரெஸ்ட் எடுங்க.” என்றாள் சஞ்சனா அக்கறையாக.

 

“எல்லாம் எனக்கும் ஞாபகம் இருக்கு. குழந்தை பிறந்து ஒரு மாசம் ஆகுது. நீயே குழந்தையை பார்த்துக்க ஆரம்பிச்சுட்ட.  வீட்டு வேலையும் ரொம்ப கிடையாது. துணி துவைக்க வாஷிங் மெஷின், அதை காயவைக்க டிரையர். சாமான் துளக்க டிஷ் வாஷர், வீட்டை பெருக்க ரோபோட் வேக்கம், பெருசா தூசு படிவது கிடையாது. ஒட்டடை தூசி, தட்டும் வேலையும் கிடையாது.

 

சமைக்கிறது மட்டும்தான் வேலை. அதுக்கும் காபி மேக்கர், பிரெட் சாண்ட்விச் மேக்கர், ஒனியன் கட்டர், சமைக்கிறாயோ இல்லையோ எலெக்ட்ரிக் குக்கர், விதவிதமான பாத்திரம்nu நிறைய வாங்கி வச்சிருக்க.

 

நம்ம ஊர்ல எல்லாத்துக்கும் ஆல் வைக்கிற மாதிரி இங்கே எல்லாத்துக்கும் மெஷின் இருக்கு.

அதான் அந்த சமைக்கிற வேலையைஆவது செய்யலாம்னு பார்க்கிறேன்” என்றார் தாய்.

 

“என்னமா இப்படி சொல்லிட்டீங்க? எல்லாத்துக்கும் மெஷின் இருந்தாலும் இதையெல்லாம் போட்டு எடுக்க வேண்டிய வேலை இருக்கே. குழந்தை பிறக்கும் வரைக்கும் வேலை கம்மி தான்.

குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வேலை அதிகமாகிவிடும். குழந்தை கிட்டவே நமக்கு நேரம் சரியா இருக்கும். குழந்தை வளர்ந்து  ஸ்கூல் போக ஆரம்பிச்சா குழந்தையை ஸ்கூலுக்கு  ரெடி பண்ணி அனுப்பறது, திரும்ப வந்ததும், பாட்டு கிளாஸ், செஸ்   கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ், டான்ஸ் கிளாஸ், taekwondo class (தற்காப்பு கலை) இந்த மாதிரி எல்லா கிளாஸ்க்கும் கூட்டிகிட்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வர்றது,  அப்புறம் இந்தியன் காய்கறி விக்கிற கடைக்கு போய் நாம சாப்பிடற காய்கறி, மளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வர்றது, வால்மார்ட் போய் வீட்டுக்கு தேவையான மத்ததை எல்லாம் வாங்கிட்டு வர்றது, இப்படி எவ்வளவு வேலை  ஒரு ஹவுஸ் வைஃப் இங்கே செய்கிறோம் தெரியுமா?

 

நான் சொன்ன இந்த எல்லா  இடமும் தூரம் தூரமா  இருக்கும். நாம கார்ல தான் போய் வாங்கிட்டு வரணும். நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி நடந்து போய் தெருமுனையில் இருக்கிற கடையில எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து விட முடியாது. ஏதோ ஒருசில அப்பார்ட்மெண்ட் பக்கத்துல அப்படி இருக்கும். ஆனால் மோஸ்ட்லி அப்படி இருக்காது.  இன்னும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் இரண்டு பேரும் வேலைக்கு போகிறவர்களா இருந்தால் இன்னும் வேலை ரெண்டு பேருக்கும் ஜாஸ்தியா இருக்கும். இதுக்கு நடுவுல குழந்தைகளுக்கு பிளே  டேட் அரேஞ்ச் பண்ணனும். அப்புறம் பிரெண்ட்ஸ் கூட வாரம் ஒரு தடவை அப்படி இல்லைனா மாதம் ஒரு தடவையாவது பாட்லக் அரேஞ்ச் பண்ணனும்.” என்று முடிக்காமல் பட்டியலை நீட்டிக்கொண்டே போனால் சஞ்சனா.

 

“அது என்னடி பாட்லக்? “என்று கேட்டார் கலைவாணி.

 

“அப்படினா தமிழ்ல கூட்டாஞ்சோறுன்னு சொல்லுவாங்க. சின்ன வயசுல விளையாடுவோம் இல்லையா? அதே மாதிரிதான்.

 

என்னோட ஃப்ரெண்ட் ஒரு பத்து ஃபேமிலி  சேர்ந்து யார் யாரு என்னென்ன பதார்த்தம் செய்து எடுத்துட்டு வரணும்னு பிளான் பண்ணி அதே மாதிரி பண்ணி எடுத்துட்டு வந்து ஒரு வீட்ல சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவோம். அப்படியே  குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து விளையாடுவாங்க. பெரியவங்க நாங்களும் கூட ஏதாவது கேம் விளையாடுவோம். நீங்கள் முதல் தடவையா அமெரிக்காவுக்கு வந்து இருக்கீங்க. நீங்க வந்து இருந்த ஒரு மாசமும் என்னோட டெலிவரி, குழந்தை அப்படினு போயிடுச்சு. இன்னும் அஞ்சு மாசம் இங்க தானே இருக்கப் போறீங்க.  நீங்களே பாருங்க. உங்களுக்கு புரியும்.” என்றாள் சஞ்சனா.

 

“நீ சொல்றது எல்லாத்தையும் கேட்டால் மலைப்பா தான் இருக்கு.  நம்ம ஊரு பரவாயில்லை போல இருக்கே? எல்லாத்துக்கும் வேலைக்கு ஆல் வெச்சுக்கலாம். இங்கு அப்படி வைக்க மாட்டாங்களா?”

 

“அப்படி சொல்ல முடியாது. நாங்கள் ஆள் வைத்து இருக்கிறோம். நீங்க பாக்கலையா?”

 

“பார்த்தேன் பார்த்தேன். வீட்டு  பாத்ரூம் டாய்லெட்   இரண்டையும் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு லேடி வந்து கிளீன் பண்ணிட்டு போறாங்க. தோட்டம், தெருவில் இருக்கும்  செடிகளை அழகா கட் பண்ணிட்டு போக ஒருத்தர் வருவாரு. ஆனாலும் நம்ம ஊர்ல சாதாரணமா சாமான் துளக்க, வீடு பெருக்கி துடைக்க, துணி துவைக்க ஆள் வச்சு இருக்கிற மாதிரி  வேலைக்கு ஆள் வச்சிக்க மாட்டாங்களா?”

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!