Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 1.2

“இங்க தான் எல்லாத்துக்கும் மெஷின் இருக்கு இல்லமா? அப்புறம், வீட்டு வேலையை எல்லோரும் ஷேர் பண்ணி பண்றதனால வேலைக்கு ஆள் வைப்பது இங்கே  நம்ம ஊர் மாதிரி அவ்வளவு காமன் கிடையாது.”

 

“சரி சரி. அக்கரைக்கு இக்கரை பச்சை.

உன் கிட்ட பேசிகிட்டே  உருளைக்கிழங்கு ரெடி பண்ணிட்டேன். சாதனாவை கூப்பிடு. பூரி போட போகிறேன்.” என்றார் கலைவாணி .



Advertisement

 

“சாது சாது” என்று கூப்பிட சாதனா

“ என்ன சஞ்சு?” என்று கேட்டபடி வந்தாள்.

Advertisement

 

Advertisement

“அம்மா சூடா  பூரி போடறாங்க. வா சாப்பிடலாம்.”

 

“சரி”என்ற கொடி டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

Advertisement

 

அப்போதுதான் குளித்து முடித்து வெளியில் வந்தான் சஞ்சனாவின் கணவன் விக்ரம்.

 

“வாங்க மாப்பிள்ளை.  பூரி சாப்பிடுங்க.” என்று கலைவாணி அழைக்க  அவனும் அமர்ந்து சஞ்சனா, சாதனை உடன் பேசியபடி சாப்பிட ஆரம்பித்தான்.

 

குழந்தை அழும் சத்தம் கேட்டது.

அதனைக் கேட்ட  சஞ்சனா “நான் போய் பார்க்கிறேன்.” என்று எழுந்திருக்க முற்பட்டாள்.

ஆனால் விக்ரம் “சஞ்சு, நீயே ரொம்ப நாள் கழித்து  உனக்கு பிடிச்ச பூரி உருளைக்கிழங்கு உங்க அம்மா கையால சாப்பிட்டுட்டு இருக்க. நீ சாப்பிடு. நான் போய் பார்க்கிறேன்.” என்று விட்டு  பதிலை எதிர் பாராமல் எழுந்து சென்றான்.

 

அவனைக் கவனித்த கலைவாணி

“எவ்வளவு தங்கமான மாப்பிள்ளை.” என்று அவனை புகழ்ந்து விட்டு சாதனாவை பார்த்து

“நீயும் எங்க சொல்பேச்சு கேட்டு இருந்தால் உனக்கும் இந்த மாதிரி  ஒருவர் கிடைத்து உன் வாழ்க்கையும் நல்லபடியா அமைந்திருக்கும்.” என்று பெருமூச்சுடன் கூறினார்.

 

இதனை கேட்ட சாதனா சாப்பாட்டை பாதியிலேயே விட்டுவிட்டு எழுந்து சென்றாள்.

 

“அம்மா  ஏன்மா இப்படி அவள் சாப்பிடும்போது பேசறீங்க?” என்று கவலையுடன் கேட்டாள் சஞ்சனா.

 

“பண்றதெல்லாம் தப்பு சொன்னால் கோபம் மட்டும்  மூக்குக்கு மேலே வரும்.” என்றார் கலைவாணி விடாமல் .

 

“அம்மா ப்ளீஸ்.” என்று சஞ்சனா கூற

 

“சரி சரி. நான் உன் அக்காவை எதுவும் சொல்லல.” என்றுவிட்டு அமைதியானார்.

 

வேகவேகமாக தன் அறைக்குள் நுழைந்த சாதனா குளித்து உடை மாற்றிக் கொண்டு  தோளில் இருந்து முட்டி வரையில் இருக்கும் அந்த பெரிய கோட், ஷூ அணிந்து  தன் பைலட் கார் சாவியை எடுத்துக்கொண்டு வேகவேகமாக இறங்கி வெளியில் சென்றாள்.

 

“எங்க போறேன்னு சொல்லாம இவள் இப்போ எங்கே போகிறா?” என்று  சஞ்சனாவை பார்த்து கேட்டார் கலைவாணி.

 

“அம்மா அவ இங்கே எங்கேயாவது பக்கத்துல தான் போவா.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சஞ்சனாவின் கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.  திறந்து படித்தாள்.

“going to latha’s home” (லதா வீட்டிற்கு செல்கிறேன்) என்று அதில் இருந்தது.

 

அதைப் பார்த்த சஞ்சனா “அம்மா அவள் அவளோட ஃபிரண்ட் லதா வீட்டுக்கு போய் இருக்கா.”. என்று விவரம் தெரிவித்தாள்

 

“அதை சொல்லிட்டு போகறதுக்கு என்ன?” என்று கேட்டபடி சாப்பிட்டு முடித்த தட்டை டிஷ் வாஷர் இல்  வைத்தார் கலைவாணி.

 

“அதான் என்கிட்ட சொல்லிட்டா இல்லம்மா, விடுங்க.” என்று முடித்தாள் சஞ்சனா.

 

சாலையில் சிகப்பு சிக்னலை பார்த்து காரை நிறுத்தினாள் சாதனா. இவள் முன்பு ஒரு கார் நின்று கொண்டிருக்க இவள் பின்பு 2 கார்கள் நின்று கொண்டிருந்தது.  அப்போது அவளுடைய கைபேசி ஒலித்தது. அதனை எடுத்து ஸ்பீக்கரில்  போட்டு காரில் இருந்த

செல்போன் ஸ்டாண்டில் செல் போனை வைத்துவிட்டு

“ஹலோ  திலீப் .”என்றாள்.

 

“ஹாய் சாதனா, how is your weekend going?”( வார இறுதி எப்படி போகிறது?) என்றான் திலீப்.

 

“Going good.” (நல்லா போகுது)என்றாள் சாதனா.

 

“அப்புறம் இன்னிக்கு நாம மீட் பண்ணலாமா?” என்று கேட்டான் .

 

“இன்னிக்கா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் சாதனா.

 

“If you don’t mind, (உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால்) நாம இன்னிக்கி மால்ல மீட் பண்ணலாமா? I have something to tell you.” (உன்னிடம் சொல்ல என்னிடம் ஒரு விஷயம் இருக்கு.)

 

“ஓகே.” என்றாள் சஞ்சனா.

 

அவன் இடத்தை சொல்ல அவள் காரை அங்கு செலுத்தினாள்.

 

ஒரு குக்கிராமத்தை அடைத்து கட்டியது போல கட்டியிருந்த அந்த ஷாப்பிங் மாலுக்குள் காரை  ஓட்டினாள் சாதனா.

அவன் வருவதாக சொல்லி இருந்த இடத்திற்கு நேராக காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி அந்த குளிரில் போட்டிருந்த கோட்டின் தலைப்பகுதியை எடுத்து தலையில் போட்டுக்கொண்டு நடந்து உள்ளே சென்றாள்.

 

அந்தமாலில் போட்டிருந்த  பெரிய சோபாவில்  கோட் அணிந்து அமர்ந்திருந்த திலீபன் இடம் வந்தாள்.

 

“ப்ளீஸ்.” என்று அவன் காட்டிய அந்த சோபாவில் அமர்ந்தாள் சாதனா.

 

“Tell me  திலீப்.( சொல்லுங்க) என்ன விஷயம்?” என்று கேட்டாள் ஆர்வமாக.

 

“ Give me a sec  (ஒரு நிமிஷம்)”என்றவன் ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு விட்டு அவன் கையில் வைத்திருந்த ஒரு வைர மோதிர டப்பாவை திறந்து அவளிடம் நீட்டி

“Will you marry me?(என்னை கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா ?)”என்று அமர்த்தல் ஆக கேட்டான்.

 

“திலீப்” என்று ஆச்சரியத்தில்d  உச்சிக்கு சென்றாள் சாதனா.

 

“I cant believe this!( என்னால நம்ப முடியல) என்னை பத்தி எல்லாம் தெரிஞ்ச நீங்களா  எனக்கு ப்ரொபோஸ் பண்றீங்க?” என்று கேட்டாள் விழி அகல.

 

“உன்னோட பாஸ்ட் லைபை பற்றி  I just don’t care.( எனக்கு அக்கறை இல்லை)” உனக்கு ஓகேன்னா சொல்லு. நாம  இதை legal approach  (சட்டப்படி ) பண்ணலாம்.” என்றான்.

 

“சாரி திலீப். இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல. எனிவே. நான் உங்களை தப்பு சொல்ல முடியாது. ஆனால் நான் உங்களை எப்பவும் அப்படி பார்த்தது கிடையாது. நீங்க எனக்கு நல்ல பிரண்ட் அவ்வளவுதான்.” என்றாள் .

 

“இப்பவே உன்னோட முடிவை  சொல்லவேண்டியது கிடையாது. Take your own time (நேரம் எடுத்துக் கொள்)“ என்றான்.

 

“சாரி. எத்தனை நாள் யோசித்தாலும் என்னோட முடிவில் எந்த மாற்றமும் இருக்காது.”  என்றாள் சாதனா திட்டவட்டமாக.

 

இதனைக் கேட்ட அவன் எதுவும் பேசவில்லை. இருவரும் அமைதியாக சிறிது நேரம் இருந்தனர்.

பிறகு சாதனா “ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ.” என்று விட்டு அங்கிருந்து கிளம்பி வீடு  வந்து தன் அறைக்குள் புகுந்து கதவை சாத்தி விட்டு  அணிந்திருந்த ஷூ, கோட் இரண்டையும் கழட்டி எரிந்துவிட்டு படுக்கையில் தொப்பென்று விழுந்தாள்.

 

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாலோ அவளுக்கு தெரியாது.

 

“சாது” என்று சஞ்சனாவின் குரல் கேட்டு எழுந்தாள்.

 

கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு

“என்ன சஞ்சு?” என்று கேட்டாள்.

 

சிவந்து இருந்த சாதனாவின் கண்களை பார்த்த சஞ்சனா அவள் அழுது இருப்பதை புரிந்து கொண்டாள்.

‘பழைய கதை எதையாவது நினைத்து அழுது இருப்பாள்’ என்று நினைத்துக் கொண்டு அதை பற்றி கேட்டு அவளை கஷ்டப் படுத்த விரும்பாமல்

 

“இந்த குட்டி பையனை பாரேன். எப்படி அழகா சிரிக்கிறான்?” என்று அக்காவை திசை திருப்ப முயன்றாள்.

 

அப்போதுதான் சஞ்சனாவின் கையில் இருக்கும் ஒரு மாத குழந்தையான   விஷாலை கவனித்தாள்.

 

அன்று பூத்த பன்னீர் ரோஜா பூ  குவியல் போல இருந்த அவனை தன் கையில் வெகு ஜாக்கிரதையாக வாங்கினாள். குழந்தை சாதனாவை பார்த்தான்.

 

“குட்டி பையா,  பட்டு பையா” என்று அவனை சாதனா கொஞ்சினாள். அதனை புரிந்து கொண்டது போல அந்த பச்சிளம் குழந்தை லேசாக இதழ் விரித்து சிரித்தான்.

அந்த சிரிப்பில் மயங்கிய சாதனா “ரொம்ப க்யூட்டா சிரிக்கிறான்.” என்றாள் மற்றதை மறந்து.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!