Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Meendum orumurai-10-2

அப்பா உங்க கிட்ட எத்தனை ஐநூறு ரூபாய் நோட்டு இருக்கு?”

“மூணு இருக்குடா”,

“சரி அப்போ, இது ஆயிரத்தி முன்னூறு. இப்ப என்கிட்ட இருக்க சில்லறை எல்லாம் சேர்த்து மொத்தமா 5532 ரூபாய் இருக்கு. இன்னைக்கு கலெக்ஷன் இதுதான்” என்று கூறி அந்த வேலினி பணத்தை, தந்தையிடம் கொடுக்க, அவரும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு, அவள் தாயிடம் கொடுத்தார்.

தெய்வானை எப்போதும் போல் கையில் வாங்கிய பணத்தை சாமி படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு உறங்கும் முன்பு எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று அப்படிக்கு சென்று விட்டார்.



Advertisement

குழலினி படித்து முடித்துவிட்டு அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தவள், “அப்பா எப்பவுமே அம்மா கையிலேயே பணத்தை கொடுக்குறீங்க? உங்க அம்மா கோச்சுக்க போறாங்க?” என்று கேட்க,

“அப்படி கேளுடி தங்கம். பாரு அம்மா குத்துக் கல்லு மாதிரி உக்காந்து இருக்கேன்‌. என்கிட்ட குடுக்காம உங்க அம்மா கிட்ட கொடுக்கிறான்”, “ஹலோ சிவகாமி எங்க அம்மா இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த புதுசுல அவங்க கைல கொடுக்கிறதுக்கு அப்பாவ பழக்கப்படுத்தனதே நீங்கதான.

இப்ப என்னமோ புதுசா வந்து நடுவில் பஞ்சாயத்தெல்லாம் பேசுறீங்க? என்ன? ஹான்????

Advertisement

“யாரு அப்படி உங்க அம்மா சொன்னாளா?” “எங்க அம்மா சொல்லல. நீ தான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட சொன்ன”, “ஆமா சொன்னேன் சொன்னேன், என்று விட்டு அந்த பேச்சை அத்துடன் விட்டுவிட்டு, பேத்தியின் கிண்டலுக்கு ஆளாவதற்கு முன்பாக வேறு பேச்சை மாற்றினார் சிவகாமி பாட்டி.

Advertisement

அவர் பேச்சை மாற்றுவது புரிந்து சிரித்துக்கொண்ட வேலினி தந்தையிடம் திரும்பி, “அப்பா நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம். சரியா காலையிலேயே கிளம்பிருங்க. காலையிலக்கு குழலினி பாட்டியோட கடையை பாத்துக்குவா, அம்மா அதுக்கப்புறம் வந்துருவாங்க.

இரண்டு நாள் நீங்க கொஞ்சம் ஃப்ரீயாவே இருங்க, நம்ம ரெண்டு பேரும் முக்கியமான இடத்துக்கு போறோம். அங்க உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” ‘அப்படி என்னடா வேலை?” “நான் தான் சொல்லிட்டேனே முக்கியமான வேலைன்னு”.

” இந்த வீட்ல யாரு பெரிய மனுஷங்கன்னே தெரிய மாட்டேங்குது டா பாப்பா” என்று தந்தை கிண்டல் போல் பெருமையாக கூறிய, அந்த வஞ்சப்புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டாள் வேலினி.

Advertisement

“சரி வாங்க சாப்பிடலாம்”, என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு அம்மா சமைத்து வைத்த உணவை எடுத்து வந்து வைத்துவிட்டு அனைவருக்கும் பரிமாறி தானும் உணவு உண்ண ஆரம்பித்தாள்.

தூங்கி எழுந்ததும் தந்தையை வேகமாக புறப்படக் கோரி அவள் அவரை அழைத்துக் கொண்டு சென்ற இடம் ஒரு தையல் பயிற்சி மையம். அங்கு ஆண்களுக்கு பிரத்தியேகமாக ஆண்களின் உடைய தைப்பதற்கு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே ஆறுமுகத்திற்கு மேல் சட்டையும் கால் சராயும் தைக்க தெரியும் என்பதால் புதிதாக ஒரு ஆண்கள் உடுத்தும் குர்தா தைக்க பழக்கவதற்க்காகவே அவரை அழைத்து வந்திருந்தாள்.

இங்கு இரண்டு நாள் பயிற்சி மட்டுமே அவருக்கு. ஏற்கனவே நன்றாக தைக்க தெரியும் என்பதால் 2 நாள் தொடர்ந்து முழுதாக பயிற்சி எடுத்தால் போதுமானது என்று அங்கு விசாரிக்கும் போதே தெரிந்து வைத்திருக்க, இரண்டு நாளைக்கு 600 ரூபாய் என்ற விகிதத்தில் அங்கு அவரை அழைத்து வந்திருந்தாள்.

“இல்லடா இது வேண்டாம். ‌சின்ன பிள்ளைங்க ஏதோ ஸ்கூல் போய் கத்துக்கிற மாதிரி இருக்கு” என்று சிறுபிள்ளையாய் அடம்பிடித்த தந்தையிடம் கண்டிப்பாக கூறி அவரை விட்டுவிட்டு அவள் புறப்பட்டு கடைக்கு சென்று இருந்தாள்.

மாலை நேரத்தில் தானே சென்று தந்தையை அழைத்து வந்தாள். அன்றைய வருமானத்தை எண்ணி பார்த்துவிட்டு சாமி படத்திற்கு முன்பாக வைத்த பின்னே தந்தை மகளிடம் பேசிக் பேசினார்.

அதற்கு, “ஏன் பாப்பா? அப்பா உனக்கு என்ன பண்ணேன். இப்படி மாட்டி விட்டிட்டுயே”,

“உங்களுக்கு இது புடிச்சிருக்கா? இல்லையா?”. பிடிச்சிருக்கு பாப்பா. இன்னைக்கு கட்டிங் வரைக்கும் ஃபுல்லா கத்துக்கிட்டே. நாளைக்கு தச்சு முடிச்சிருவேன்.

அவருக்கு அது பிடித்திருக்கிறது என்பதே, இவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “அப்ப நாளைக்கு ஒரு நாள் தான் கிளாஸ் போயிட்டு வந்துருவீங்களா?” “சரிடா போயிட்டு வந்துடறேன்.

வருவாள்….

மகா ஆனந்த்..✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!