Meendum Orumurai -18
பாகம்-18
வேலினிக்கு அன்று வேலை ஓடவே இல்லை. காலையில் தன் கணவன் கொடுத்துச் சென்ற அந்த முத்தத்தின் ஈரம் மட்டும் இன்னும் கன்னத்தோடு ஒட்டிக்கொண்டு இருப்பதாக அவள் மனம் நினைத்துக் கொண்டிருந்தது.
Advertisement
அவனுடனே இருக்க வேண்டும் என்று அவளின் ஒவ்வொரு அணுவும் துடிக்க ஆரம்பித்தது. இத்தனை நாட்களாக அவள் ‘அவனுக்காக நான், எனக்காக அவன்’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தவள், முதல்முறையாக காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் அறிய முயன்றாள்.
அவன் என்றாலே அவளுக்கு பிடித்தம் தான். ஆனால் இந்த கொஞ்ச நாட்கள் அவனை நினைக்கும்போது வெட்கம் வந்து தொலைத்தது. அது அவளுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Advertisement
அவன் குழந்தை பற்றி பேசும்போது சிவந்தாள் தான், ஆனால் இன்று ஏனோ அவனை நினைத்தாலே கன்னங்கள் எல்லாம் சிவப்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. இதற்கு என்ன அர்த்தம் என்று கூட விளங்க முடியாமல் அவள் தவித்துக் கொண்டு இருந்தாள்.
Advertisement
அன்று மாலையும் அவனே வந்து அவளை அழைத்து சென்றான். கேலி கிண்டல் என்று எந்த சங்கடமும் கொடுக்காமல் சமத்துப் பிள்ளையாக அவளை அழைத்துக்கொண்டு வீடு சென்றான்.
Advertisement
வீடு சென்றதும் உள்ளே நுழைந்த வேலினி தன் பையை தூர போட்டுவிட்டு கைகளை மேலே தூக்கி நெட்டி தள்ள, அவள் இடையில் அவன் கரம் புகுந்து கொண்டது.
தன் வேதாளத்தை பின்னிருந்து எப்போதுமே அணைத்துக்கொள்ளும் பழக்கம் இந்த விக்ரமாதித்தனுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் இன்றைய அணைப்பு அவளுக்கு வேறு எதையோ உணர்த்தியது.
அவன் தேடலை, தவிப்பை அவனின் அணைப்பிலே அவன் உணர்த்த, இவள் தான் என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் திணறினாள்.
சில நொடிகள் மட்டும்தான் அவளுக்கு திணறல் குழப்பம் எல்லாம் இருந்தது. ஆனால் அவன் அணைப்பில் கூடிக் கொண்டே சென்ற அந்த இறுக்கம் அவளை எதுவும் சிந்திக்கவிடாமல் அவனிடம் அவளை சரண் அடைய வைத்தது.
பின் இருந்து அணைத்த அவன் கைகளை விலக்கி விட்டவள், அவன் முகம் பார்த்து நின்றாள். அவளின் அந்த செயல் அவன் முகத்தில் ஏமாற்றத்தை கொண்டு வர, உடனே அவள் அவனை முன்புறம் இருந்து பட்டென்று அணைத்துக்கொண்டாள்.
குருவிற்கு தலை கால் புரியாத நிலை, மொத்த சொர்க்கமும் தன் கையில் கிடைத்த ஆனந்தம். அடுத்த நொடி எதைப் பற்றியும் சிந்திக்க வில்லை அவன். தன் தேடலை தவிப்பை அவளின் இதழ்களுக்குள் ஆழ்ந்த முத்தமிட்டு தீர்த்துக் கொள்ள முயற்சி செய்தான்.
நீண்ட நேரம் இட்ட அந்த ஆழ்ந்த முத்தம் கூட அவன் தவிப்பையும் தேடலையும் போக்கிவிடவில்லை. அவளை அள்ளி அணைத்துக்கொண்டு படுக்கையறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.
தன்னை முழுமையாக அவளுக்கு வழங்கி, அவளிடம் இருந்து அவளை பெற்றுக் கொள்ளும் வேலையில் தன்னை முழுதாக ஆழ்த்தி கொண்டான். மீண்டும் கதவை திறக்கும் போது நேரம் நள்ளிரவை நெருங்கியிருந்தது.
அப்போதும் கூட தன் மனைவி பசிக்கிறது என்று கூறிய ஒரே காரணத்திற்காகத்தான் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மனைவியையும் குளியல் அறையில் விட்டு விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தவன், நான்கு பெட் ஆம்லெட்டை போட்டு முடித்து மனைவி முன்பாக வைத்தான்.
அவள் குளித்து முடித்துவிட்டு அதை வேகமாக உண்டு முடிக்க, கடைசியாக அவள் இதழ்களில் ஒட்டிக் கொண்டிருந்த சிறு துகளை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டவன், அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல் மீண்டும் தன் காதல் ஆலாபனையை தொடங்கினான்.
காலையில் இருவருக்கும் தங்கள் பணிக்கு செல்ல நேரம் தாமதம் ஆகிவிட, அரக்கப் பறக்க கிளம்பி வேகமாக வேகமாக கல்லூரிக்கு சென்று சேர்ந்தாள் வேலினி.
அவளை இறக்கிவிட்டு தான் மட்டும், மீண்டும் வீட்டுக்கு வந்தவன் முதல் வேலையாக தங்கள் அறையை சுத்தப்படுத்தி முடித்தான். முடித்ததும் தன் சட்டையை கழட்டி விட்டு, கண்ணாடி முன்பாக நின்று தன் மனைவி தனக்கு கொடுத்த காதல் பரிசை எல்லாம் பார்த்து வெட்கச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.
ஒரு அரை மணி நேரமாக அந்த வேலையை விடாமல் செய்து கொண்டிருந்தவன், ஏதோ யோசனை ஆக சில நிமிடங்கள் நின்றிருந்தான். யோசனையின் முடிவில் அவன் முகம் பளிச்சென்று ஒரு சிரிப்பை சிந்தியது.
அந்த சிரிப்புக்கான அர்த்தத்தை வேலினி வீடு திரும்பிய போது, அவளுக்கு அவன் அளித்த இன்ப அதிர்ச்சியில் புரிய வைத்திருந்தான் நம் நாயகன்.
வேலினி முடிந்தவரை அன்று ஒரே இடத்தில் அமர்ந்து செய்வது போலான எந்த வேலையையும், செய்யவில்லை. ஏனெனில் அவளுக்கு ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.
இரவு முழுக்க தூங்காமல் காதல் பாடம் படித்தவள், கல்லூரியில் தூங்கி வழிந்திடுவாளோ என்று அஞ்சி ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். வீடு திரும்பிய போது அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.
கணவனும் அவளை அழைக்க வரவில்லை. தன்னை அழைக்க வராதவன் மேல் கோபம் வந்தாலும், அவனும் தன்னைப்போல் உடல் சோர்வில் தான் இருப்பான். இந்த சமயத்தில் ஏதாவது முக்கிய வேலையில் இருப்பான்” என்று எண்ணிக் கொண்டு பேருந்தில் வீடு வந்து சேர்ந்தாள்.
வீடு வந்து சேர்ந்தவர்களுக்கு வீடு சுத்தமாக இருக்க, ஒரு நிம்மதி ஏற்பட்டது. சுத்தம் செய்பவர் இன்று வந்து சென்றிருப்பதாக எண்ணிக் கொண்டாள். சரி குளித்து உடைமாற்றலாம் என்ற எண்ணத்தில் தன் அறைக்குச் சென்றவள் அங்கு கண்ட காட்சியில் வெட்கம் வந்து கைகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள்.
அந்தக் காதல் தம்பதிகளின் அறை புதிதாக திருமணமான தம்பதிகளின் முதலிரவு அறைப்போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் இவளுக்கு வந்த வெட்கத்தில் முகத்தை மூடிக்கொள்ள, அப்போதுதான் சரியாக அவள் கணவனும் குளியலறையில் இருந்து வெளியேறினான்.
இவளை கண்டதும் ரசனையாக பார்த்து நிற்க, ஏற்கனவே வெட்கத்தில் சிவந்திருந்தவள் இப்போது இன்னும் இறுக்கமாக கைகொண்டு தன் முகத்தை மூடிக்கொண்டாள். இவனோ, “ஓய் வேதாள குட்டி”, என்று கூப்பிட்டு கைகளை விரித்துக்காட்ட, கைகளில் அகற்றி அவனை பார்த்தவள், வேகமாக ஓடி சென்று அவனுக்குள் அடங்கி நின்று கொண்டாள்.
அவனோ, “ஏய் வேதாளம், பால் சொம்பு இல்லாம வந்து இருக்க?” என்று கிண்டல் பேச, “போடா”, என்று இவள் அவன் மார்பில் குத்தி விட்டு மீண்டும் இறுக்கி அவனை அழைத்துக் கொண்டாள்.
“இங்க பாரு வேதாளக் குட்டி எனக்கு ஃபர்ஸ்ட் நைட் கரெக்ட்டா கொண்டாடியே ஆகணும். அதனால நான் சொல்ற மாதிரி டிரஸ் பண்ணிட்டு ரெடி ஆகு”, என்று கூறி குளியல் அறைக்குள் அவளை விரட்டிவிட்டு, அவளுக்கான உடையே அங்கே வைத்திருப்பதாக கூறி வெளியேறினான்.
அங்கிருந்து சமையல் கட்டிற்கு சென்றவன், அவளுக்காக சமைத்து வைத்திருந்த உணவை எடுத்து சாப்பாட்டு மேஜை மேல் வைத்தான். சிறுது நேரத்தில் அவள் குளித்து தயாராகி விட்டாளா என்று பார்க்க உள்ளே சென்றான்.
அவள் அவன் வாங்கி வைத்திருந்த புடவையில் தேவதையாக வெளியே வர, அவன் செயல்களில் இன்னும் அவசரம் கூடிப் போனது. அவளை அந்த அறையின் அலங்காரங்களை கூட ரசிக்க விடாமல், வேகமாக இழுத்துக் கொண்டு சாப்பாடு மேஜையில் அமர வைத்து, தானே ஊட்டி விட ஆரம்பித்தான்.
இவளால் அவன் கண்களை சந்திக்க முடியவில்லை. காலையில் வேகமாக கிளம்பியதில் அவளுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் இப்போது வெட்கம் சூழ்ந்து கொள்ள அவன் முகத்தையே காணாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் வேலினி.
குருவும் அவள் தடுமாற்றத்தை ரசித்தவாறு எந்த கேலியும் செய்யாமல் உணவு ஊட்டி விட்டு, அவள் கை பிடித்து எழுப்பி நிறுத்தினான்.
அவன் அவசரத்தை எல்லாம் கண்டவள், அவனின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்று எண்ணி வெட்கச் சிரிப்பு சிரிக்க, அவனோ அவள் கையை பிடித்துக்கொண்டு, “கார்டன்ல ஒரு வாக் போலாமா?” என்றான். இவளுக்கு புஸ் என்று போனதுதான்.
இருந்தும் தற்போதைய மனநிலைக்கு அந்த ‘வாக்’ எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி அவன் கைகளைப் பிடித்தவாறு நடக்க தொடங்கினாள். தோட்டத்தில் நடந்த படி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவள் தடுமாற்றம் எல்லாம் மாறும்வரை இயல்பாக அவளை பேசி பேசி சரி செய்த பின்னே தான் வீட்டிற்குள் அழைத்து வந்தான்.
வந்தவன் அவளை இயல்பாக அழைத்துக் கொண்டே சென்று சமையல் அறையில் எடுத்து வைத்திருந்த பால் சொம்பை அவள் கைகளில் வழங்கியதும் தான் அவளுக்கு அடுத்து என்ன என்று புரிந்தது.
மீண்டும் ஒரு படபடப்பு அவளை தொற்றிக் கொள்ள, இவன் அவளிடம் எதுவும் பேசாமல் கன்னத்தில் முத்தம் மட்டும் வைத்துவிட்டு, அங்கிருந்து நகன்று சென்றுவிட்டான். அவனின் அந்த செய்கையே அவள் வரவிற்காக அவன் காத்திருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்லியது.
வேலினிக்கு ஏனோ முதல் முறை போல் ஒரு பயமும் படபடப்பும் அவளை சூழ்ந்து கொண்டது. இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவள், சில நிமிடங்களையே தைரியத்தை திரட்டி கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.
கதவை தாழிட்டு விட்டு அவன் அருகில் வந்தவள், அவனிடம் பால் சொம்பை நீட்ட , அவன் வாங்கி அதனை ஓரமாக வைத்து விட்டான். தன்னையே பார்த்து நிற்கும் தன் கணவனின் பார்வையை சமாளிக்க முடியாமல் வேறு புறமாக திரும்பிக் கொண்டு, “பால் குடிக்கலையா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் வேலினி.
இவனோ, “இல்லாத பாலை எப்படி குடிக்கிறது வேதாள குட்டி என்று நமட்டு சிரிப்போடு கூறினான். அப்போது தான் அவளுக்கு நினைவு வந்ததது. பால் சொம்பு எந்த கணமும் இல்லாமல் இருந்தது.
வெறும் பேச்சுக்கே அந்த பால்சம்பை தன் கையில் கொடுத்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள், பட்டு பட்டு என்று அவன் முதுகில் நான்கு அடியை போட, “நீ அங்கேயே அதை கண்டுபிடிச்சு. என்கிட்ட சண்டைக்கு வருவேன்னு பார்த்தேன். நீ என்னடான்னா வெக்கப்பட்டுக்கிட்டே வந்து உண்மையிலே இன்னைக்கி ஃபர்ஸ்ட் நைட்ட சிறப்பாக்கிட்டியே” என்று கூற, அவள் மீண்டும் அவனை அடிக்க வந்தாள்.
இவன் உடனே அவள் கைகளை பிடித்து, உள்ளங்கையில் ஆரம்பித்த முத்தத்தை முத்த ஊர்வலமாக மாற்றினான்.
அவள் உள்ளங்கையில் ஆரம்பித்த அந்த முத்த ஊர்வலம் நிறைவு பெறும்போது அவர்களின் ஆடைகள் மொத்தமாக களைந்து போயிருந்தது. அவர்களும் கலைத்துப் போயிருக்க, இதற்கு மேல் அவளை படுத்த விரும்பாத அந்த கணவன், தன் மனைவியை மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான்.
வேலினி சிவகுரு தம்பதியினர் தங்கள் காதல் வாழ்க்கையில் சிறகடித்து பறக்கத் தொடங்கியிருந்தனர். பகல் முழுக்க தங்கள் கடமையை சிறப்பாக செய்து களைத்து வருபவர்கள், இரவில் தங்கள் துணையிடம் காதலும் மோகம் போட்டி போட யுத்தம் புரிந்து
களைத்த பிறகுதான் ஓய்வுக்கு செல்வர். காலையில் முதல் வேலையாக படுக்கையறை சுத்தம் செய்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தான் சில குரு.
படுக்கையறையை தவிர்த்து வீடு மொத்தத்தையும் துடைக்கும் வேலையை வேலையாள் செய்து விடுவதால் இவர்களுக்கு சமையல் மட்டும் வேலையாக இருந்தது.
அதுவும் பவானியின் வளர்ப்பில் நன்றாக சமைக்க கற்றுக் கொண்ட குருவும் மனைவிக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் தானே தினமும் இரண்டு வேளையும் சமைத்து விடுவான். விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு வேலை மட்டும் அவள் சமைப்பாள்.
ஆனால் விடுமுறை நாட்களில் அவர்கள் உணவு நேரம் என்பது சரியாக இருக்காது. மற்ற நாட்களில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தை விட இந்த விடுமுறை நாட்களில் கிடைக்கும் அதிக நேரத்தை ஒரு நொடி கூட விடாமல் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சற்றும் விழகாமல் காதலித்தே தீர்த்துக் கொள்வார்கள்.
கணவனுடன் வாழ ஆரம்பித்த நாட்களில் இருந்து வேலினியை துரத்திக் கொண்டிருந்த விதி கண்டம் என்ற அனைத்தும் அவளை விட்டு தூரம் சென்றிருந்தது. அவை அனைத்தையும் அவள் மறந்தே மறந்தே போயிருந்தாள்.
எப்போதும் கணவன் மட்டுமே அவள் ஞாபகமாக மாறிப் போயிருந்தான். கல்லூரிக்கு சென்று பணி செய்வது, வீட்டிற்கு வந்தால் கணவனை சுற்றுவது இதுவே அவள் முழு நேர வேலையாக மாறிப் போயிருந்தது.
குரு முன் இருந்தே வேலினியை மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்தவன் தான். இப்போது அவனுக்கு சொல்லவும் வேண்டுமா மனைவி மட்டுமே அவனுக்கு உலகமென முழுதாக மாறிப் போயிருந்தாள்.
அவர்கள் வாழ்க்கையை தொடங்கி மூன்று வாரங்கள் ஆகி இருக்க, திடீரென்று தேதியை பார்த்து விட்டு வேலினி தனக்கு மாதவிடாய் நாட்கள் நெருங்கி விட்டதா என்று யோசித்தாள்.
அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பது அவள் நினைவுக்கு வர, “ஒரு வேளை இந்த தடவை பீரியட்ஸ் வரலைன்னா…. அதுவா இருக்கும் இல்ல…” என்று இன்னும் நடக்காத ஒன்றை எண்ணி அவள் கனவு காண, கணவனுக்கு மூக்கு வேர்த்து விட்டது.
“ஏய் வேதாள குட்டி என்ன ஏதோ யோசிச்சிட்டு இருக்க?” என்று கேட்க ஒன்னும் இல்லையே என்று சமாளித்தவளிடம் துறுவி துறுவி கேட்டு பதிலை பெற்றிருந்தான்.
அவள் கூறியதைக் கேட்டதும் இவன் அவள் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தான். உடனே இவள் சினுங்களாக, “எதுக்கு இப்ப என்னை கொட்டின”, என்று கேட்க “சினுங்காத டி”, என்றான் இவன்.
“ஏண்டி நமக்குள்ள எல்லாம் நடந்தே மூணு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள பிள்ளை பத்தின ஆசை உனக்கு தேவையா?”
“ஹலோ ஹலோ… நீங்க இதெல்லாம் நடக்குறதுக்கு முன்னாடியே என்கிட்ட நாலு பிள்ளை வேணும்னு கேட்டீங்க அதை மறந்துடாதீங்க”,
இவனுக்கு தான் அவள் கூறியதை கேட்டதும் ஒரு மாதிரியாகிவிட்டது. தலையை கோதிக்கொண்டு அவர் சிரிப்பை அடக்கி அமர்ந்திருக்க, இவள் என்னமோ நான் உன்னை மடக்கிவிட்டேன் பார் என்பது போல் கெத்தாக உட்கார்ந்து இருந்தாள்.
அவனின் சிரிப்பு அவளுக்கு எதையோ உணர்த்த, தன் தலையில் பட்டென்று தட்டிக் கொண்டவள், அவன் தோள்களில் முகம் புதைத்துக்கொள்ள அவனும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் அவள் கணவன்.
வருவாள்…
மகாஆனந்த்..✨
