Meendum Orumurai -Final
பாகம்-19
வேலினி அன்று மாலை சீக்கிரமே வீடு திரும்பியிருந்தாள். ஆனால் குரு இன்னும் வந்திருக்கவில்லை அவன் அன்று மிகவும் தாமதமாகவே வந்து சேர்ந்தான்.
மழையும் அடித்து ஊற்றிக் கொண்டிருக்க, மகிழுந்தில் வந்தும் நனைந்து தான் வந்திருந்தான் குரு.
Advertisement
“வந்தது கார்ல. ஆனா எப்படி இப்படி நனைஞ்சு வந்திருக்க பாரு?” என்று அவனை திட்டிக் கொண்டே, துண்டை எடுத்துக் கொடுத்து அவனுக்கு துடைத்தும் விட்டுக் கொண்டிருந்தாள்.
Advertisement
இவனோ சும்மா இருக்காமல் அவள் இடையில் கை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, அவள் பட்டென்று அவள் கைகளில் ஒரு அடியை போட்டாள்.
Advertisement
“இப்ப நீ அமைதியா இல்ல. அவ்வளவுதான் பாத்துக்கோ”, என்று மிரட்ட, குரு மூஞ்சியை உர் என்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
Advertisement
பின்னர் அவனை உடைமாற்ற சொல்லி அனுப்பி வைத்துவிட்டு வெளியே வந்தவள், மாலை சிற்றுண்டியை எல்லாம் எடுத்து வைத்து அவனுக்கு கொடுக்க தயார் செய்தாள்.
அவள் கொடுத்த சிற்றுண்டியை உண்டு முடித்தவன், அவளிடம் “வேதாளம் கொஞ்ச நேரம் மழைய ரசிக்கலாம் வா”, என்று பால்கனி அருகே இழுத்துச் சென்றான்.
அங்கு சென்றதும் அவள் பின்புறம் இருந்து அணைத்துக் கொண்டு காதுமடலில் முத்தம் பதித்த ஆரம்பிக்க, அதற்கு மேல் அவள் எங்கே மழையை ரசிக்க, அவன் கொடுத்த மென் முத்தத்தில் கிறங்கிக் கொண்டிருந்தாள் வேலினி.
எப்போதும் வேலினி கல்லூரிக்கு செல்வதற்கு கெட்டி செல்லும் புடவைக்கு ஏற்ற நிறத்தில் கற்கள் பதித்த காதணிகளை அணிந்து செல்வாள். அவளின் இந்த கற்கள் பதித்த காதணிகள் மீது குருவுக்கும் ஆசை கொட்டிக் கிடந்தது.
அதுவும் அவள் நீளம் அணிந்து வந்தாள், இவன் கிறங்கி விடுவான்.
இன்று அவள் அணிந்திருந்த காதணியில் முத்தம் பதித்து கொண்டே இருந்தவன், அது தொந்தரவாக இருப்பதாக நினைத்தானோ என்னவோ அதை கழட்டி கீழே வைத்துவிட்டு காதின் அந்த மெல்லிய பாகங்களுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
பின் ஏன் அவன் செய்த செயலில் இவள் பட்டென்று கண்களை திறந்து காதை தொட்டு பார்க்க, புதிதாக ஒரு காதணி அங்கு இடம் பெற்றிருந்தது.
அவள் பால்கனியின் மறுபக்கம் இருந்த அந்த கண்ணாடியில் அவள் உருவத்தை பார்க்க, அவள் காதுகளில் வீற்றிருந்த நீலகற்கள் பதித்த அந்த காதணிகள் அவளை ஈர்த்தது. அவள் என்ன இது என்று அவனிடம் கேள்வி எழுப்ப, அவனும் “எனக்கு உன்னோட இந்த நீலக்கல் தோடு ரொம்ப பிடிக்கும். அதுக்காக தான் இந்த ஸ்பெஷல் நீலக்கல் தோடு என் வேதாள குட்டிக்கு” என்று கூறி அதில் ஒரு முத்தம் வைத்தவன் இன்னொரு பக்கம் காதணியையும் கழட்டிவிட்டு புதியதை மாற்றி விட்டான்.
இப்போது அவளைப் பின் இருந்து அணைத்தவாறு கண்ணாடியில் தெரிந்த இருவரின் உருவத்தையும் பார்த்து ரசித்த வண்ணம் நின்றிருந்தான். “இது நம்ம ரெண்டு பேருக்கும் மட்டும் ஸ்பெஷல். யாருக்கும் இதை குடுத்திடாத”
“கண்டிப்பா கொடுப்பேன்”
“யாருக்கு டி குடுக்க போற” என்ற பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.
“வேற யாருக்கு என் பேத்திக்கு கொடுப்பேன். அதுவும் என் ஆயுள் முடியு காலத்தில”
“பேத்தி …கா …????. நம்ம பொண்ணுங்கள நடுவுல விட்டுட்ட”
“மகள்கள் எல்லாம் எப்பவும் அப்பா செல்லம். என் பேத்திகள் எல்லாம் என்னை மாதிரி பாட்டி செல்லங்களா இருப்பாங்க. அதனால அவங்களுக்கு தான் கொடுப்பேன்”.
“இப்பவே ஓரவஞ்சனை யா?”
“ஆமாஆமா… மகனும் மகளும் பிறந்ததுக்கு அப்புறம் நீ எப்படி ஓரவஞ்சனையா நடந்திக்கிறேன்னு நானும் பார்க்கிறேன். அப்ப தெரியும்” என்றவள் இரவு உணவை சமைக்க செல்ல இவனும் உதவிக்கு பின்னே சென்றான்.
இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு காலையில் வேலினி எழுந்து கடிகாரத்தை பார்க்க, அது நாளையும் சேர்த்து காட்டும் கடிகாரம் என்பதால் அன்றைய தேதியையும் குறிப்பிட்டது.
அதை பார்த்ததும் வேலினி ஸ்தம்பித்து அமர்ந்து விட்டாள். அவளுக்கு எப்படி இந்த நாள் மறந்தது என்று அவளுக்கே தெரியவில்லை
இரவெல்லாம் கொஞ்சி கெஞ்சி தன்னிடம் காதல் யுத்தம் புரிந்த தன் கணவன் குழந்தையாக உறங்கிக் கொண்டிருக்க, அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனை நினைக்கும் போது தான் மனம் பாடாய் பட்டது. வேகமாக குளித்து தயாராகி பூஜை அறையில் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் கடவுளிடம் அன்று இறுதியாகவும் உறுதியாகவும் ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் வைத்துவிட்டு எழுந்து விட்டாள். அவள் வேண்டுதல் என்ன என்பது, அவளும் அந்த கடவுளும் மட்டும் அறிந்த ரகசியமாகவே இருந்து விட்டது.
குரு எழுந்து வந்து பார்க்க மனைவி புன்னகை முகமாக சமையல் செய்து வைத்து காபியுடன் அவனை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.
அவளிடம், “என்ன இன்னைக்கு வேகமாக கிளம்பனுமா? இவ்வளவு வேகமா எந்திரிச்சு ரெடி ஆயிட்ட?” என்று அவன் கேட்க, “அப்படி எல்லாம் எதுவும் இல்ல. இன்னைக்கு நான் லீவ் போட்டுட்டேன்” என்று அவள் கூறவும்,
“நிஜமாவா லீவா?” என்று அவன் குஷியாக கேட்டான். அவள், “ஆமா லீவுதான்”, என்று அவன் கண்களை பார்த்துக்கொண்டே கூறினாள்.
அந்த குரல் அவனை மயக்க, அவள் இடையை வளைத்து அவள் இதழ்களுக்குள் கவி பாட ஆரம்பித்தான். அந்த முத்தக்கவிதை முன்னேறி மெத்தையில் முடிய அவளே வழி வகுத்துக் கொடுத்தாள்.
கொஞ்சி, கிறங்கி, மயங்கி மீண்டும் ஒரு காதல் யுத்தத்தை முடித்த இருவரும், களைத்து படுத்து கொண்டு எழுந்து கொள்ளவே மனம் இல்லாதது இருந்தனர்.
அவன், “பசிக்குது” என்றதும்தான் இருவரும் எழுந்து குளித்துவிட்டு வந்தனர்.
பின் அவள் சமைத்து வைத்த உணவை உண்டு வீட்டிலேயே தோட்டத்திற்கு சென்று சுற்றிக் கொண்டிருக்க, அவனை எங்கும் அவள் நகரவிட வில்லை.
வெளியே எங்காவது செல்லலாமா என்று அவன் கேட்டதற்கும் எங்கும் செல்ல வேண்டாம் இங்கு இருந்தாலே போதும் என்று அவனுடன் பிணைந்த வாறே சுற்றிக் கொண்டிருந்தாள்.
அப்போது குருவிற்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று பேசியவன், “நான் உடனே கிளம்பனும்” என்று புறப்பட போக, இவள் அவனை தடுத்து நிறுத்தி, “எங்க போற குரு ப்ளீஸ் போகாத” என்று கெஞ்சினாள்.
அவன், “இல்லடா..புரிஞ்சுக்கோ… கதிரவனோட ஒரு பிரெண்ட் இருக்கான். அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். என் பிளட் குரூப் தான் அவனுக்கு. நான் பிளட் கொடுத்துட்டு வரேன்”,
“இல்ல இல்ல நீ பிளட் குடுக்க போனாலும் சரி, நானும் உன் கூட வரேன். என்ன விட்டு போகாத”, என்று கூறி அவளும் அவனுடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்றாள்.
அங்கு போக கதிரவனின் நண்பன் குடும்பமும் கதிரவனும் நின்றிருந்தனர். குரு முதலில் ரத்தம் கொடுத்துவிட்டு கதிரவனிடம் என்ன ஆனது என்று விசாரித்துக் கொண்டிருந்தான்.
வேலினி மிகவும் பதட்டமாக அவனைப் பார்த்தவாறு நின்று இருந்தாள். கதிரவன் அவள் நடவடிக்கையை கண்டு விட்டு,
“அண்ணி ஒரு மாதிரி இருக்காங்க டா. நீ கெளம்பு. அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கறதுனால ஒரு மாதிரி டென்ஷன் இருக்காங்கனு நினைக்கிறேன்” என்று அனுப்பி வைத்தான்.
குருவிற்கும் கூட வேலினியை அங்கே நிறுத்தி வைப்பது பிடிக்கவில்லை என்பதால் அவனும் சரி என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
வீடு திரும்பும் வழியில் குருவிற்கு அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. முதலில் அதை எடுக்காமல் இருந்தவன், பின்பு தவிர்க்க முடியாமல் அதை எடுத்து காதில் வைத்தான்.
உடனே வேலினி, “என்ன பண்ற குரு. முதல்ல வண்டியை ஓரம் நிறுத்திட்டு பேசு”, என்று கோபமாக கத்தி விட, இவன் “சரி சரி கூல் கூழ்” என்று அவளை அமைதியாக இருக்க கூறிவிட்டு ஓரமாக வண்டியை நிறுத்திய பின் தன் பேச ஆரம்பித்தான்.
அலைபேசியில் குரு முழு முதலாளியாக மாறி யாருக்கோ ஆணை கட்டளை இட்டுக் கொண்டிருக்க, அந்த தோரணையில் வேலினி பதட்டம் நீங்கி அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த சமயத்தில்தான் அந்த பெரும் நிகழ்வு நிகழ்ந்து முடிந்தது.
ஓரமாக நின்றிருந்த வண்டியின் மேல் ஏதோ இன்னொரு பெரிய வண்டி வந்து இடித்து கீழே இவர்களை சாய்த்தது.
சரியாக அது குரு இருந்த புறமாக இடித்து இருக்க, முதல் அடி அவனுக்கு தான் பட்டது. அந்த புறம் இருந்த கண்ணாடிகள் மொத்தமும் சிதறி, அது அவன் உடலில் எல்லாம் குத்தி கிழித்திருந்தது.
வேலினிக்கும் மறுபுறம் இருந்த கண்ணாடியில் தலை பலமாக மோதி நின்றது. நிச்சயம் கண்ணாடியின் துகள்கள் அவள் தலையில் குத்தி இருக்க வேண்டும். ஆனால் ரத்தம் எதுவும் வரவில்லை.
அவளால் தலையை அசைக்கக்கூட முடியாது, தலையில் ஒரே நேரத்தில் பத்து ஆணிகளை அடித்தது போல் ஒரு பெரும் வலி அவளை தாக்கியது.
அந்த நிலையிலும் தன் கணவன் என்ன செய்கிறான் என்று அவனை திரும்பி பார்க்க, அவனும் எழுந்து, தன் மனைவியை தான் பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
குரு என்று அவள் ஈன சுவரத்தில் கூப்பிட, அவனும் வேலினி என்று எழும்பி அவளையும் எழுப்பி விட்டான்.
அவளால் வலி பொறுக்க முடியவில்லை என்றாலும் கொஞ்சமும் தன் கணவனிடம் தனக்கு வலி இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ளாமல் எழுந்து, அவன் முகம் பார்த்தாள்.
அவன் உடலில் இருக்கும் காயங்கள், அதில் வலிந்து கொண்டிருந்த ரத்தமும் அவன் நிலையை அவளுக்கு எடுத்துரைக்கும் கண்களில் திரண்டு வந்த கண்ணீரை மொத்தமாக அடக்கி கொண்டு,
“உனக்கு ஒன்னும் ஆகலல்ல?” என்று கேட்டாள். “இல்லை” என்று அவன் தலையசைக்க, “எனக்கும் எதுவும் ஆகல” என்று அவன் கேட்கும் முன்பாகவே அவளே பதில் கூறினாள்.
“நம்ம ரெண்டு பேரும் நல்லா இருக்கோம். எனக்கு நீ ..உனக்கு நான்….. ரொம்ப வருஷம் இதே மாதிரி சந்தோஷமா இருக்க போறோம். நீ கவலைப்படாத” என்று அவனுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துக் கொண்டே, அவனுக்காக புன்னகை புரிந்தாள்.
அந்த புன்னகை அவனையும் தொற்றியது. தான் மனைவியுடன் நிச்சயம் வெகு காலம் மகிழ்வோடு வாழ்வேன்” என்று எண்ணத்தோடு மயங்கிய கண்களை மூடிக்கொண்டவனுக்குள் துடித்துக் கொண்டிருந்த இதயம் மொத்தமாக தன் துடிப்பை நிறுத்தி இருந்தது.
போன முறை வேலினிக்கு கிடைத்த வாழ்க்கையில், அவள் தன் உயிரை இழந்த போது, அவளுக்கு சில வினாடிகளுக்கு பின் தன் உயிரை நீத்த குரு, எந்த அளவு வேதனைகளை அனுபவித்தானோ அதே அளவு வேதனையை இன்று வேலினியும் அனுபவித்தாள் குருவின் மரணத்தின் மூலமாக.
எல்லாம் முடிந்து விட்டது. அவள் கைகளை விட்டு அனைத்தும் போய்விட்டது. ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனை ஏற்கவும் முடியவில்லை. துடியாக துடித்தாள் வேலினி.
அந்த சாலை ஆள் அரவம் அற்று இருப்பதால் அங்கு யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால் இடித்த வண்டியில் இருந்து ஒருவன் மெதுவாக இறங்கி வந்தான். அவன் கவிழ்ந்து கிடந்த வண்டியில் இருந்து பெண்ணின் குரல் கேட்க, அவளை காப்பாற்ற முயற்சித்தான்.
வேலினி இருந்த திசையில் வேகமாக வந்தவன், கீழே குனிய அவன் உள்ளே இருந்த வேலினியை கண்டு அதிர்ச்சி அடைந்தான். வேலினி என்று அவன் கூப்பிட்டதும் இவள், அவன் புறம் திரும்பிட அங்கு நின்றவனை பார்த்தாள்.
அவன் அருண், அதாவது சத்யாவின் தந்தை. சத்யாவை காப்பாற்றிய அன்று அவனை கண்டாள் பின் இன்று தான் மீண்டும் காண்கிறாள். குரு எப்போதும் அருண் மேல் காட்டும் வெறுப்பு தான் அவளுக்கு நினைவு வந்தது.
அவனால் இப்படி தான் இந்த முறையும் நடக்க போகிறது என்று தன் காதல் கணவன் உணரந்திருக்கிறான் என்பது வேலினிக்கு விளங்கியது.
அருண் அவளிடம், “வேலினி வேலினி….என்னை மன்னிச்சிடு மா. ப்ரேக் பிடிக்கல. நான் தெரியாம…”என்று தடுமாறினான்.
வேலினி எதுவும் கூறவில்லை. அவனை குற்றம் எதுவும் சொல்லவும் இல்லை. இப்போது என்ன செய்யப் போகிறோம் என்று யோசிக்க கூட முடியாமல் வந்த கண்ணீரைத் துடைக்கக்கூட, மறந்து தன் கணவனையே பார்த்து அமர்ந்திருந்தாள் அவள்.
அருண் அவளை வெளியே எடுக்க நினைக்க, ஆனால் கொஞ்சமும் வெளியேற வேண்டும் என்ற எண்ணவில்லை அவள். மெதுவாக அருணை திரும்பி பார்த்தவள், தன் காதுகளில் இருந்த அந்த நீலக் கற்கள் பதித்த காதணியை கழட்டி அவன் கைகளில் கொடுத்தாள்.
அவன் முதலில் அதை வாங்காது அவளை வெளி வர கூறிக் கொண்டிருக்க, அவள் எதுவும் பேசாமல், அந்த காதணியை மட்டும் அவன் கைகளில் நீட்டினாள்.
“இதை சத்யா கிட்ட குடுங்க. சத்யாக்கு அப்புறம் இது அவ குழந்தைகளுக்கும் வாரிசுகளுக்கும் மட்டும் தான் போய் சேரனும். அவளுக்காக நான் கொடுக்கிற பரிசு” என்று கூறிவிட்டு அவள் தன் கணவன் புறம் திரும்பி கொண்டாள்.
அருண் அவள் கைகளைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்தபோது பட்டென்று கைகளை தட்டி விட்டவள், முழுதாக தன் கணவனின் உடல் மீது சாய்ந்து அவன் நெற்றியில் ஆழமாக ஒரு முத்தம் பதித்தாள். “என்ன விட்டு போக மாட்டேன்னு சொன்ன இல்ல?” என்று கூறிக்கொண்டு, அவன் தோல் சாய்ந்து கண் மூடிக்கொள்ள, அவளின் உயிரும் சிறிது சிறிதாக அவள் உடலை விட்டு பிரிந்து காற்றோடு கலந்திருந்தது.
தூரத்திலிருந்து பார்த்து வந்த தன் காதலியை நெருங்கி வரும் வேலையில் மொத்தமாக அவளை தொலைத்து விட்டோம் என்று துடித்த அந்த காதலன், மீண்டும் அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி அவளுடன் இணைந்து வாழ்ந்து, அவள் முக சுணக்கங்களை கூட சகித்திட முடியாமல் அவள் சோகங்களை எல்லாம் களைந்து அவளின் சிரிப்பை பார்த்தவாறே மறைந்து போயிருக்க.
அவன் மனைவியோ , அவனுக்கு எல்லாமாக உடன் இருந்து.,,, தான் முதலில் சென்று விட்டால், அந்த வலி தாங்காமல் கணவன் துடித்துடுவான் என்று எண்ணி அவனுக்கு பதில் அந்த வேதனையை தான் அனுபவித்து கொள்கிறேன் என்று கடவுளிடம் சாபமாக பெற்று உயிர் நீத்திருந்தாள்.
அன்றுடன் வேலினி சிவகுரு என்ற அந்த காதல் ஜோடியின் அத்தியாயம் முடிவுக்கு வந்திருந்தது
———-முற்றும்———-
மகாஆனந்த்..✨
