Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 18.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

வீட்டுக்குள் நுழைந்த கந்தனை “வாங்க” என்று ஒற்றை வார்த்தையில் அழைத்துவிட்டு சென்றார் கலைவாணி.

கார்த்திகேயன் அந்த பக்கமே வரவில்லை



Advertisement

சாதனா “ உனக்காக அம்மா உனக்கு பிடிச்ச மாதிரி குழிப்பணியாரம் பண்ணி வச்சிருக்காங்க. கை கழுவிட்டு வா. சாப்பிடலாம்.”. என்றாள் சாதனா

சுகந்தன்நம்பமுடியாமல் “உங்கம்மா எனக்காக குழிப்பணியாரம் பண்ணி வச்சு இருக்காங்களா? நம்பிட்டேன்.” என்று அவள் முகத்தை பார்த்து சிரித்தபடி சொன்னான்.

அவன் சிரிப்பில் இருந்த அர்த்தம் புரிய

Advertisement

“சரி. நான் தான் செய்தேன். ஆனால் அம்மா ஹெல்ப் பண்ணாங்க.”  என்று உண்மையை சொன்னாள் சாதனா.

Advertisement

‘இவளோட அம்மா எனக்கு குழிப்பணியாரம் பண்றாங்களாம். எனக்கு குழி பறிக்காமல்  இருந்தால் போதாதா?

என்று நினைத்ததை வெளியில் சொல்லாமல் சிரித்தான் சுகந்தன்.

 

Advertisement

சாதனா,  சுகந்தன்இருவரும் குழிப்பணியாரம் கார சட்னி தொட்டு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் சுகந்தன்கை கழுவ சென்றான்.

சாதனா அந்த தட்டுகளை எடுத்துக்கொண்டு சமையலறை சென்றாள். சமையலறையில் கலைவாணி பதறியபடி சாதனா விடம் கேட்டது அவன் காதில் விழுந்தது.

 

“என்னடி இது? உன் கையில காயம்.” என்று பதறியபடி கேட்டார் கலைவாணி.

“அது ஒன்னும் இல்லை. அன்னிக்கி கந்தனுக்கு உடம்பு சரியில்ல. அதான் கஞ்சி   காய்ச்சி எடுத்துட்டு வரும்போது கைல லேசா  பட்டுடுச்சு.” என்றாள் அலட்சியமாக சாதனா.

“என்னடி இது பெரிய காயமா இருக்கு. உனக்கு இதெல்லாம் செஞ்சு பழக்கமே கிடையாது.”

“ஆமாம் கிடையாது. அதுக்காக எப்பவுமே அப்படியே இருக்க முடியுமா? அதுவும் இவனுக்கு இப்படி உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது.” என்று சிறிது கோபத்துடன் கேட்டாள் சாதனா.

“அதுக்கு இல்லடி. பார்த்து பத்திரமாக பண்ணி இருக்கலாம் இல்ல?” என்று வருத்தத்துடன் கேட்டார் அவர்.

 

“அப்போ ஏதோ ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. இந்த வேலையை முடிச்சுட்டு அந்த வேலையை செய்யணும்னு வேகமா செய்யலாம்னு செய்தேன் பாரு, கையில பட்டுடுச்சு.”

“சரி காயம் பட்டால் என்ன? உடனே மருந்து தடவ வேண்டியது தானே?”

 

“அதான் சொன்னேன்  இல்லம்மா. எனக்கு வேறு வேலை இருந்தது. அதோட மருந்து தேடிப் பார்த்தேன். கிடைக்.கவில்லை. அப்புறம் போடலாம்னு நினைச்சேன். வேலையில் மறந்துட்டேன்.”

“என்னடி இப்படி சொல்ற? காயத்தை பார்த்தா உனக்கு ரொம்ப எரிச்சலா இருந்திருக்கும் போல இருக்கு.”

“ஆமாம்மா எரிச்சலாக தான் இருந்தது. ஆனால் அப்புறம் மறந்து போச்சு.” என்றாள் சாதாரணமாக.

“சரி. நீ தான் மறந்துட்ட. உன் புருஷன் ஆவது பார்த்து மருந்து போட்டிருக்கலாம் இல்ல?”

“ அம்மா உங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாது.  ஆளை விடுங்க.” என்று அவள் சொன்னது சுகந்தன்காதில் விழுந்தது.

“இவள் ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல? உடம்பு சரியில்லாம இருந்ததால்  நானும் இவளை கவனிக்கவே இல்லை. இதை அவள் அவங்க அம்மாகிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல? ஒருவாரம் ஆபீஸ்க்கு போகாததால் ஆபீஸ் வேலை அடுத்த ஒரு வாரம் ரொம்ப டைட்டா இருந்தது. இவள் முகத்தை பார்த்து பேச கூட எனக்கு நேரம் இல்லை. இந்த நிலைமையில் நான் எப்படி இவள் கையை பார்க்கிறது? இவள்தானே வந்து என்கிட்ட சொல்லி  இருக்கணும்.’ என்று  நினைத்தான் சுகந்தன்

 

கலைவாணி மூலமாக இந்த விபரம் கார்த்திகேயனுக்கு தெரியவந்தது. கார்த்திகேயன் மகளின் கையை பார்த்து வருந்திய தோடு நிற்காமல் சுகந்தன்மீது தன் கோபத்தை காட்டினார்.

வீட்டு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் சுகந்தன்.

“என் பொண்ணு கையை சார் பாத்தீங்களா? சூடா கஞ்சி பட்டு கையில் காயம் ஆகியிருக்கு. எப்படி இருக்க வேண்டியவள் அவள் தெரியுமா? இப்படி உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட்டு இருக்கா. ஆனால் நீங்க அதை பத்தி கொஞ்சம் கூட நினைக்காமல் நல்லா அவளை வேலை வாங்கிட்டு இருக்கீங்க.” என்று கோபமாக அவனிடம் கேட்டார்.

 

“இல்ல  அவள் என்கிட்ட சொல்லவே இல்ல. எனக்கும் ஃபீவர்…..”. என்று ஆரம்பித்த அவனை  தடுத்தார் அவர்.

 

“ஏன் உன் கிட்ட வந்து சொல்லல? இதுல இருந்தே தெரியலையா, அவளுக்கு உன் வீட்டில எவ்வளவு டென்ஷன் இருக்குன்னு. பாவம் இந்த காயத்தை மறக்கற அளவுக்கு அவளுக்கு வேலை இருந்திருக்கு. ஒரு சின்ன காயம் பட்டால் எப்படி கஷ்டப்படுவா தெரியுமா? அதை பெரிய விஷயமா  எங்க கிட்ட வந்து சொல்லி வீட்ல பெரிய கலாட்டா பண்ணுவா. அப்படிப்பட்டவள் இந்த காயத்தை உன் கிட்ட சொல்லல. அப்படினா அவளுக்கு அவளை பத்தி நினைச்சு பார்க்கவே நேரம் இல்லை. உன் வீட்டில் அப்படி அங்க வேலை செஞ்சுட்டு இருக்கா.

சரி அவள்தான்  இப்படி உன்னை விழுந்து விழுந்து கவனிச்சிட்டு இருந்தானா நீயாவது அவள் மேல அக்கறையா நடந்து இருக்கலாம் இல்லையா? பொண்டாட்டி கையில் ஒரு காயம் இருக்கு.  அதை கவனிக்க கூட உனக்கு நேரம் இல்லை. அவ்வளவு பிஸி! அந்த அளவுக்கு கூட  என் பொண்ணு மேல அக்கறை இல்லை.” என்று குற்றம் சாட்டினார் கார்த்திகேயன்.

 

கந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை அவர் சொல்வதில் பாதி உண்மை இருந்தது அவனுக்கு உடல்நலம் சரியாகி ஒரு வாரம் ஆகின்றது. இந்த ஒரு வாரத்தில் அவன் அவளிடம் அக்கறையாக 10 நிமிடம் கூட பேசவில்லை. ஒருவேளை பேசியிருந்தால் அவள் சொல்லி இருப்பாள். அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. எனவே அமைதி காத்தான்.

 

அவன் அமைதி அவரை மேலும் கோபப்படுத்த

“ஒரு பொண்ணை பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் போதாது. அவளை சந்தோஷமா வாழ வைக்கவும் தெரியணும். அவன் தான் கல்யாணம் பண்ணிக்கணும். கட்டின மனைவி மேல அக்கறையா இருக்க தெரியணும். அவன்தான் நல்ல புருஷன். இப்படி அக்கறையில்லாமல் இருக்கிறவன் எல்லாம் புருஷன் ஆகிவிட முடியாது. கல்யாணத்தை மட்டும் பண்ணிக்கிட்டா பத்தாது.  கட்டின மனைவியை கண்ணுக்குள்ள வெச்சு  பார்த்துக்க தெரியணும்.  ஆனால்  உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது. உன்னை முதன் முதலில் பார்த்த போதே எனக்கு அது தெரிஞ்சது. அதனாலதான் நான் சாதனாவிடம்  இந்த கல்யாணம் வேணாம்னு எவ்வளவோ சொன்னேன். அவள் எங்க கேட்டா? எல்லாம் அவளோட தலையெழுத்து. நான் என்ன பண்ண முடியும்? என்னிக்கி தான் அவளுக்கு நல்ல காலம் பிறக்கும்ன்னு தெரியல. என் பொண்ணு இந்த ரெண்டு வாரத்தில் பாதியா இளைத்து போயிருக்கா. அதை பார்க்கும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? அவள் ஒழுங்கா சாப்பிடாளா இல்லையானு கூட தெரியல. அதைக் கேட்கக் கூட அந்த வீட்டில் யாரும் இல்லை போல இருக்கே.” என்று பொரிந்து தள்ளினார்.

“ சுசுகந்தா” என்று கூப்பிட்டபடி அங்கு வந்தாள் சாதனா.

சாதனா அங்கு வருவதை பார்த்த கார்த்திகேயன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியானார்.

 

“ சுசுகந்தா வா. டைம் ஆச்சு. வீட்டுக்கு போகலாம்.” என்று அவனை கூப்பிட்டாள்.

 

சுகந்தன்கார்த்திகேயனை  பார்த்தான் அவர் அவனை பார்க்காமல்

“இன்னும் ஒரு வாரம் இங்க இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் இல்லையா சாது? எப்படி நிலைத்து போயிருக்க பாரு.” என்று கேட்டார் மகளை பார்த்து.

 

“அது போன வாரம் இவனுக்கு உடம்பு சரியில்லை இல்லபா? இவனை  கவனித்துக் கொண்டதால் நான் சரியா சாப்பிடல.” என்று அவள்  எதார்த்தமாக சொல்ல கார்த்திகேயன் கந்தனை  முறைத்தார்.

 

‘எரியிற கொள்ளியில் இவள் வேறு எண்ணையை ஊற்றுகிறாள்.’ என்று நினைத்துக்கொண்டு மனைவியை கவனித்தான். ஆனால் அவள் முகத்தில் எந்த  கள்ளத் தனமும் இல்லை.

‘இவளோட அப்பாவை பத்தி தெரியாம இப்படி பேசிட்டு இருக்கா. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டா. நைஸா இங்க இருந்து கிளம்புவது நல்லது.’ என்று நினைத்துக்கொண்டான்.

 

மாமனாரும் மருமகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை கவனித்த சாதனா புரிந்து கொண்டாள்.

‘ஏதாவது தப்பா சொல்லி விட்டேனா?’ என்று நினைத்தவள்

“இப்போ தான் இவனுக்கு சரியா போயிடுச்சு இல்ல. இனிமேல் நல்லா சாப்பிட்டு திரும்ப பழைய வெயிட்க்கு வந்துடுவேன்.” என்றாள் புன்னகையுடன்.

“சரிமா  உன்னோட உடம்பையும் கவனித்துக் கொள்.” என்று கூறி அரைமனதாக வழியனுப்பி வைத்தார் கார்த்திகேயன்.

 

அன்று இரவு அறைக்குள் நுழைந்த மனைவியின் கையை பிடித்து பக்கத்தில் உட்கார வைத்தான் சுகந்தன்.

“என்னடா? என்ன?” என்று கேட்டாள் சாதனா.

“கையை காட்டு.” என்று அவள் கையை பார்த்தா மணிக்கட்டில் காயம் தெரிந்தது.

“இந்த காயம் பட்டதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?” என்று  வருத்தத்துடன் கேட்டான்.

“ஓ நான் அம்மாகிட்ட சொன்னதை கேட்டுட்டு இருந்தாயா? அப்போ உனக்கு உடம்பு சரியில்லை அதனால சொல்லல. அதுக்கு அப்புறம் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனால் நீ ரொம்ப பிஸியா இருந்த. எனக்கும் வேலை இருந்துச்சு. அப்படியே மறந்து போச்சு. இப்ப கூட நான் அம்மாகிட்ட சொல்லல. அம்மாவா தான் பார்த்து கேட்டாங்க. நீ அப்படி கேட்டிருந்தால் கண்டிப்பா சொல்லி தான் இருப்பேன்.” என்றாள் அவள் மீது எந்த குற்றமும் இல்லை என்று  சொல்லும் விதமாக.

 

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!