Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 18.2

“சரி எனக்கு தான் உடம்பு சரியில்லை அம்மாகிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல?”

“உங்க அம்மாகிட்ட நான்! நல்ல காமெடி! உன்னை விட்டுட்டு ஒருநாள் ஆபீஸ் போயிட்டு வந்தேன் இல்லையா? அதுல இருந்து உங்க அம்மா என் மேல கோபமா இருக்காங்க. அதுவுமில்லாம,  ஏற்கனவே எனக்கு சமையல் தெரியலன்னு உங்க அம்மா குறை சொல்லுவாங்க இப்போ கஞ்சி காய்ச்ச போய் இந்த மாதிரி ஆயிடுச்சுன்னு சொன்னா இதை கூட ஒழுங்கா செய்ய தெரியலன்னு என் மேல தான் தப்பு சொல்லுவாங்க. அதனால அவங்க கிட்ட எனக்கு சொல்ல தோணல. சுகன்யாவை கலவரப் படுத்த விரும்பல.”

 

“எல்லாத்துக்கும் பதில் வச்சுக்கோ. சரி. இனி. எந்த சின்ன காயம் பட்டாலும் என்கிட்ட சொல்லு. சரியா? நான் உடம்பு சரியில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. சொல்லு.” என்றான் அவள் கன்னத்தை தடவியபடி.



Advertisement

“சரி கையை காட்டு.” என்று அந்த இடத்தை தொட்டுப்பார்த்தான் காயம் ஓரளவு காய்ந்து இருந்தது.

 

“ரொம்ப வலிக்குதா?” என்று லேசாக அந்த இடத்தை வருடியபடி கேட்டான்.

Advertisement

 

Advertisement

“இப்போ ஒன்னும் பெயின் இல்லை.” என்று அவள் சொல்ல அப்போ அன்னிக்கி ரொம்ப வலித்ததா?” என்று கேட்டான்.

“ஆமா. ரொம்ப  எரிச்சலா இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சரியா போச்சு.”

கார்த்திகேயன் குற்றம்சாட்டியது ஞாபகம் வர

Advertisement

“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா இருக்கியா?” என்று கேட்டான்.

“ஏன் அப்படி கேட்கிற?”

“இல்லை வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா நீ சந்தோஷமா  இருந்து இருப்ப இல்ல?”

“சீ போடா. நான் உன் கூட தான் சந்தோஷமா இருப்பேன். வேற யார் கூடயும் என்னால சந்தோஷமா இருக்க முடியாது. நமக்குள்ள அப்பப்போ சண்டை, பிரச்சனை, கஷ்டம் வர தான் செய்து. ஆனாலும் நான் உன்கூட இருக்கும் போதுதான் மனநிறைவோடு இருக்கிறேன். இதுவே எனக்குப் போதும்.” என்றாள் அவன் தோளில் சாய்ந்தபடி.

“இந்த மணிக்கட்டு கொஞ்ச நாளைக்கு இப்படி சிவந்து போய் பார்க்க அசிங்கமா இருக்கும் இல்ல?” என்று லேசாக வருத்தத்துடன் கேட்டாள் சாதனா.

 

“அப்படியெல்லாம் இல்லை.” என்று சொன்னவன் அந்த இடத்தில் மென்மையாக முத்தமிட்டான்.

“இன்னும் கொஞ்சம் அழுத்தமா கொடுக்கலாம். எனக்கு  வலிக்காது.” என்றாள் அவள் லேசாக சிரித்தபடி.

“அதுக்கு என்ன? கொடுத்துட்டா போச்சு.” என்று  அவளை கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்தான் சுகந்தன்காதலுடன்.

 

பழைய ஞாபகங்கள் நெஞ்சில் பாரத்தை கூட்டியது. அருகிலிருந்த சாதனாவை பார்த்ததும் அந்த  நாட்களின் இனிமை, உரிமைக்காக ஏங்கியது.  அவளை ஏக்கமாக பார்த்தபடி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான் கந்தன்.

மனதின்  வருத்தம் அவன் உடல் நிலையை மேலும் பாதித்தது. அன்று இரவு  உறக்கத்தில் பினாத்தினான். ஜுரம் அதிகமானது. அவன் சத்தத்தை கேட்டு கண்  விழித்தாள் சாதனா.

 

அவன் தூக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டிருப்பதை பார்த்தாள்

‘ஃபீவர் அதிகமா ஆயிடுச்சா?’ என்று கவலையுடன் அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.

காய்ச்சல் அதிகமாகி இருப்பது தெரிந்தது.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா தான் இருந்தான். சரியா போயிடும்னு பார்த்தா, இப்போ திடீர்னு அதிகமாயிடுச்சு. ஏன் இப்படி? ஒழுங்கா தானே மெடிசன் கூட போட்டுட்டு இருக்கான்.’ என்று காரணம் புரியாமல் தவித்தாள் சாதன.

மருந்து எடுத்து வந்து அவனுக்கு கொடுத்தாள்.

கொடுத்துவிட்டு அவன் தோளில் தட்டி அமைதியாக தூங்க வைக்க முயன்றாள்.

அப்போது அவன் சட்டென்று “சாதனா சாது” என்றபடி அவள் கையை இழுத்து பிடித்து அவன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

 

திடீரென்று அவன் இப்படி கையை பிடித்து இழுப்பான் என்று எதிர்பாராத சாதனா தடுமாறி அவன் மேல் சரிந்தாள். அவன் அவளை தோளோடு அணைத்தபடி அமைதியாக உறங்க ஆரம்பித்தான். அவன் உறக்கத்தை கெடுக்க விரும்பாமல்  சாதனா சிறுது நேரம் அப்படியே இருந்தாள். அவன் நன்கு உறக்கத்தில்  ஆழ்ந்தான். நெடுநாட்களாக அவன் தேடிக் கொண்டிருந்த பொக்கிஷம் அவன் கைக்கு கிடைத்தது போல ஒரு அமைதியில் உறங்கினான். அவள் மனதிலும் ஒரு நிம்மதி பரவியது. இவன் எனக்காக ‘இவ்வளவு ஏங்குகின்றனா? உண்மைதானா?’ என்று நம்பமுடியாமல் தவித்தாள் சாதனா. அவளும் உள்ளுக்குள் அவனுக்காக ஏங்குகிறாள் என்பதை அவளுக்கு அவள் மனம் உணர்த்தியது.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.  இதற்கு மேலும் இவன் பக்கத்தில் இருந்தால் அழுகை அதிகமாகி அவன்  எழுந்து விடக்கூடும் என்று நினைத்து மிக மென்மையாக அவனை விட்டு விலகி தன் இடத்திற்கு சென்று படுத்துக்கொண்டாள்.

 

நெடுநாட்களுக்கு பிறகு அவனுடைய தொடுகை அவளை ஏதோ செய்ய அவள்  தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு உறங்க நெடுநேரம் ஆனது.

 

அன்று காலை விக்ரம் மேலே ஏறி வந்து கந்தனை பார்த்தான். சுகந்தன்அப்போதுதான் குளியலறையிலிருந்து வந்தான்.

“ஹாய் சுகந்தன்எப்படி இருக்கீங்க?” என்று அக்கறையாக கேட்டான் விக்ரம்.

“கொஞ்சம் பரவாயில்லை. மெடிசன் எடுத்துக்கிட்டா  ஃபீவர் போகுது. இல்லன்னா வருது. எனக்கு இப்படி தான் ஃபீவர் வந்தால் படுத்திட்டு தான் போகும்.” என்றான்  சிறு சலிப்புடன்.

“வைரல் ஃபீவர் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் டைம் எடுக்கும். நல்லா ரெஸ்ட் எடுங்க. சரியா போயிடும்.” என்றான் விக்ரம் ஆறுதலாக.

அப்போது கந்தனின் கைபேசி ஒலித்தது. எடுத்து பேசினான்.

நேடலி  தான் பேசினாள்.

 

“Feeling better Natalie.  (இப்போது பரவாயில்லை. நேடலி” என்று அவன் அந்த பெயரை சொன்னதை கேட்டதும் சாதனா அவன் தொடர்ந்து பேசுவதை உற்று கவனித்தாள்.

சிறு இடைவெளிக்கு பிறகு

“Oh that file? I have that with me. (ஓ அந்த பைலா அது என்னிடம் உள்ளது.)” என்றான்.

“ya. sure. Come in the evening.  (சரி சாய்ந்திரம் வாங்க)” என்றுவிட்டு தொடர்பைத் துண்டித்தான்.

“விக்ரம்  எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. நான் வீட்டுக்கு  போகணும்.” என்றான் கந்தன்.

“என்ன சொல்றீங்க?  சுகந்தன்வெளிய  நல்லா மழை பெய்து கிட்டு இருக்கு. காத்து வேற பயங்கரமா அடிக்குது. உடம்பு சரியில்லாத நேரத்தில் நீங்க போகணுமா?”

“பரவாயில்லை. உங்க காரை எடுத்துட்டு போயிட்டு வந்துடறேன்.” என்றான் கந்தன்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். என்ன வேணும்? எங்க இருக்குன்னு சொல்லுங்க. நான் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு ஆபிஸ்க்கு போறேன்.” என்றான் விக்ரம் அக்கறையாக.

“எதுக்கு உங்களுக்கு சிரமம். நானே பாத்துக்கிறேன்.”

“இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. நான் ஆபீஸ் போக ரெடியா இருக்கேன். அப்படியே உங்களுக்கு எடுத்து கொடுத்துட்டு போய்விடுவேன். சொல்லுங்க.”

“சரி  ரெட் கலர்  பைல் என்னோட ஆபீஸ் பேக்ல இருக்கு. ஆபீஸ் பேங்க் என்னோட ரூம் டேபிள் மேல இருக்கு.” என்று சொல்லவும் விக்ரம் சென்று எடுத்து வந்து கொடுத்தான்.

 

சுகந்தன்விழித்திருக்கும் நேரத்தில் அந்த வேலையை  செய்து கொண்டிருந்தான்.

‘இந்தக் காய்ச்சலில் இவன் இந்த வேலையை செஞ்சு ஆகணுமா?’ என்று நினைத்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை  சாதனா.

தன்னுடைய மொபைல் எடுத்து நேடலிக்கு  அவன் இருக்கும்  வீட்டின் லொகேஷன் அனுப்பினான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!