Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 2.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

“ஹாய் விக்ரம்.” என்றபடி உள்ளே நுழைந்தார்d விக்ரமின் நண்பர்d ராஜேஷ்.

 



Advertisement

“வெல்கம்  ராஜேஷ், அண்ட் மிஸஸ் ராஜேஷ்.” என்று அந்த தம்பதிகளை வரவேற்றான் விக்ரம்.

 

“ஜோதி அங்கிளுக்கு ஹாய் சொல்லு.” என்று தன் ஏழு வயது மகள் ஜோதியிடம் சொன்னான் ராஜேஷ்.

Advertisement

 

Advertisement

குழந்தை ஜோதி  “ஹாய் அங்கிள்.” என்று சொன்னபடி விக்ரமை பார்த்து கையசைத்தாள்.

“ஹாய் க்யூட் கேர்ள். வாங்க. எல்லோருக்கும் உங்களை இன்றோடுயூஸ் பண்றேன். “ என்றபடி அவள் கையை பிடித்து அழைத்து கொண்டு வீட்டினரிடம் வந்தான்.

 

Advertisement

“இவங்க என்னோட வைஃப் சஞ்சனா. இந்த குட்டி பையன் என் சன் விஷால். இவங்க சஞ்சனாவின் அம்மா.” என்று ஹாலில் அமர்ந்து இருந்த அனைவரையும் அறிமுகப்படுத்தினான்.

 

பிறகு சஞ்சனாவிடம் திரும்பி  “சஞ்சு இவங்க ராஜேஷ். பக்கத்து வீட்டில் குடி வந்திருக்காங்க. இவங்க அவங்க  பெண் ஜோதி. இவங்க ராஜேஷ் வைப் விஜயா” என்று எல்லோருக்கும் எல்லாரையும் அறிமுகப் படுத்தினான்.

 

“உட்காருங்க விஜயா.’ என்றாள் சஞ்சனா.

 

விஜயா அsஞ்சனா பக்கத்தில் அமர்ந்தாள்.

“ குழந்தை க்யூட். “என்றபடி புன்னகைத்தாள் விஜயா.

 

“தேங்க்ஸ்.” என்றாள் சஞ்சனா.

 

“ஹாய் ராஜேஷ்.” என்றாள் சஞ்சனா அவனைப் பார்த்து.

 

“ஹாய் சஞ்சனா.” என்றான் அவன் பதிலுக்கு.

 

“என்னோட வைஃப் அமெரிக்காவுக்கு புதுசு. நான் இங்கு ஒரு வருஷமா இருக்கிறேன். ஆனால் இவங்க ரெண்டு பேரும் இப்ப தான் வந்து இருக்காங்க. வந்து அஞ்சு நாள் தான் ஆகுது.”

 

“ஓ அப்படியா? அப்போ jet lag (நெடுந்தூர வின் பயணம் மற்றும் தூங்கும் நேரம் மாறுவதால் ஏற்படும் களைப்பு)  எப்படி இருக்கு?” என்று விசாரித்தாள் சஞ்சனா.

 

“எனக்கு ஓகே தான். இவள் தான் சாயந்திரம் நாலரை மணி ஆனால் போதும். தூங்கிடுவாள்” என்றாள் விஜயா.

 

“ஃபர்ஸ்ட் டைம் இல்ல, கொஞ்சம் டைம் எடுக்கும்.  2 வீக் ஆகும்.  அப்புறம் சரியாயிடும்.”

 

“ Jet lag  பரவாயில்ல.  குளிர் தான் எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்க எல்லாம் எப்படி தான் இந்த ஊரில் இருக்கீங்களோ?. ஊர் ரொம்ப அமைதியா இருக்கு. அது என்னமோ எனக்கு பிடிக்கவே இல்லை.”

 

“முதல்ல கொஞ்ச நாள் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். அதுக்கப்புறம் பாருங்க. உங்களுக்கு அமெரிக்கா செட் ஆகிவிடும்.”

 

“உங்களுக்கும் இப்படிதான் இருந்ததா? ஆமாம். எனக்கு  இங்க வந்த புதுசுல இங்கே எல்லாம் இருக்கவே முடியாதுnu தோணிச்சு. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இந்த இடம் எனக்கு பழகிடுச்சு. உங்களுக்கும் சீக்கிரமே பழகிவிடும்.  டிரைவிங் லைசன்ஸ் வாங்கிட்டா போதும் நமக்கு  தனிமை தெரியாது.” என்றாள் சஞ்சனா.

 

“வீட்ல போரடிக்குது போரடிக்குதுன்னு சொல்லிட்டே இருக்கா.”  என்றான் ராஜேஷ்.

 

“அங்க நிறைய சொந்தக்காரங்க கூட இருந்துட்டு இப்போ இங்க தனியா இருக்கிறது எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அதான் சொல்லிட்டு இருந்தேன். இவன் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கான். என்னைவிட ஜோதிக்கு ரொம்ப போரடிக்குது. அவளை எப்படி சமாளிக்கிறதுnu தான் தெரியல.” என்றாள் விஜயா.

 

“அதுக்கு என்ன உங்களுக்கு போரடிக்கும் போதெல்லாம் நீங்க வீட்டுக்கு வாங்க. அம்மாவுக்கும் அமெரிக்கா புதுசுதான். நாம எல்லோரும் பேசிட்டு இருக்கலாம்.”

 

“ஓ அப்படியா? நாளையிலிருந்து நான் வர்றேன்.”

 

“அய்யய்யோ அவள் தினமும் வந்துடுவா.” என்றான் ராஜேஷ்.

 

“வரட்டும் ராஜேஷ். விஜயா நீங்க எப்ப வேணாலும் இங்கே வரலாம். எவ்வளவு நேரம்  வேண்டுமென்றாலும்  இங்கேயே இருக்கலாம்.  இனிமே நாம  ஃபேமிலி பிரெண்ட்.” என்றாள் புன்னகையுடன் விஜயாவின் கை மேல் கை வைத்து.

 

விஜயா “ரொம்ப தேங்க்ஸ் சஞ்சனா.” என்றாள் புன்னகையுட

 

ஜோதி “ஐயா” என்று கத்தியபடி குதித்தாள்.

 

அவளது சத்தம் கேட்டு வெளியில் வந்தாள் சாதனா.

 

அவளைப் பார்த்ததும் ஜோதி

“இந்த ஆன்ட்டி  யாரு?” என்று சஞ்சனாவிடம் கேட்டாள். இவங்க என்னோட அக்கா. இங்கே ஒரு ஐடி கம்பெனியில் ஒர்க் பண்றாங்க.” என்று அறிமுகப்படுத்தினாள் சஞ்சனா.

 

“ஓ சூப்பர். உங்க அக்காவும் இங்க வேலை  செய்கிறார்களா? பரவாயில்லை நாடு விட்டு நாடு வந்தாலும் உங்க அக்கா உங்க கூடவே இருக்காங்க. நீங்க ரொம்ப லக்கி.” என்றாள் விஜயா.

 

பேச்சு சாதனாவை பற்றி ஆரம்பித்ததும் சுதாரித்த விக்ரம்

“ராஜேஷ், விஜயா டீ சாப்பிடுவீங்களா?” என்று பேச்சை மாற்றினான்.

 

இதைக் கேட்ட கலைவாணி

“மறந்தே போயிட்டேன் பாருங்க.” என்றபடி எழுந்து சமையல் அறைக்கு சென்றார்.

சென்று அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தார்.

 

இஞ்சி மணம் கமழ டீயை குளிருக்கு இதமாக அனைவரும்  ரசித்து அருந்தினர்.

 

“சரி நான் மாய்ஸ்சரைசர் வாங்க வேண்டியிருக்கு. வால்மார்ட் போயிட்டு வரேன்.” என்று விட்டு எழுந்தாள் சாதனா.

 

“ஆன்ட்டி  நானும் உங்ககூட வரட்டுமா?” என்று கேட்டாள் ஜோதி.

 

சாதனா விஜயாவை பார்த்தாள்.

 

“ ஜோ வெளிய குளிர் ஜாஸ்தியா இருக்கு. அப்புறம் போகலாம்” என்று சொல்லி பார்த்தாள். ஆனால் ஜோதி கேட்பதாக இல்லை.

 

அவள் அடம் பிடிப்பதை கவனித்த ராஜேஷ்

“விஜி நீயும் கூட போயிட்டு வா.” என்று சொல்ல விஜயா, ஜோதி இருவரும் சாதனா உடன்  காரில் கிளம்பினார்.

 

வால்மார்ட் முன்பு காரை நிறுத்தி விட்டு மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.

 

வால்மார்ட் முன்பு ஒரு பெரிய கிறிஸ்மஸ் ட்ரீ அழகாக பலவண்ண விளக்குகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்த ஜோதி

“அம்மா வாங்க. இங்க ஒரு போட்டோ எடுக்கலாம்.” என்று விஜயாவை அழைத்தாள்.

 

“எங்க ரெண்டு பேரையும் ஒரு போட்டோ எடுக்க முடியுமா?” என்று  சாதனா இடம் கேட்டாள் விஜயா.

 

சாதனா “சூர்”என்று விஜயாவின் செல்போனை வாங்கி இருவரையும் அந்த கிறிஸ்மஸ் ட்ரீ பக்கத்தில் அழகழகாக போட்டோ எடுத்தாள்.

 

“ஆன்ட்டி இங்கே  எந்த கடைக்கு போனாலும் கிறிஸ்மஸ் ட்ரீ இருக்குமா?”  என்று கேட்டாள் ஜோதி.

 

“ஆமாம் ஜோ. இது நவம்பர். அடுத்தது டிசம்பர் மாதம் இல்லையா? இப்போதிலிருந்தே கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் ஆரம்பிச்சுடுவாங்க. அதனால இப்படித்தான் இருக்கும். இன்னும் மால் போய் பாரு. பெரிய ரெட்  கலரில் க்ரீன் கலரில் வைட் கலரில் கிறிஸ்மஸ் ட்ரீ இருக்கும்.”

 

“அப்படியா?” என்று சாதனாவிடம் கேட்டவள் தாயிடம் சென்று

“அம்மா நாம போய் பார்க்கலாம் என்றான்a ஆர்வமாக.”

 

“அப்புறம் போகலாம்  ஜோதி. இப்போ நாம  ஆன்ட்டி கூட வந்திருக்கிறோம். அவங்களை பர்ச்சேஸ் பண்ண விடு.” என்றாள் விஜயா சிறு கண்டிப்புடன்.

 

“பரவாயில்லை குழந்தை தானே. கம் வித் மீ ஜோ.” என்று ஜோதியை கையில் பிடித்துக்கொண்டு தனக்கு தேவையான  பொருள்களை எடுத்துக் கொண்டிருந்தாள் சாதனா.

 

“அம்மா எனக்கு அந்த பார் சாக்லேட் வேணும்.” என்றாள் ஜோதி.

 

“நான் இப்போ கார்டு எடுத்துட்டு வரல. அப்புறம் அப்பா கிட்ட சொல்லி வாங்கிக்கலாம்.” என்று சமாதானப்படுத்த முயற்சித்தாள் விஜயா.

 

ஆனால் ஜோதி கேட்கவில்லை. இதனை கவனித்த சாதனா

“ஜோ உனக்கு தேவையான பார் சாக்லேட்டை எடு. நான் வாங்கித் தருகிறேன்.” என்று சாதனா சொல்ல அடுத்த நொடி ஜோதி ஓடிச்சென்று  அந்த சாக்லேட்டை எடுத்து வந்தாள்.

 

“இந்தா இந்த ஷாப்பிங் கார்டில் போடு .”என்று  தான் தள்ளிக் கொண்டு வந்ததை காண்பித்தாள் சாதனா.

 

ஜோதி ஆனந்தமாக அதில் போட்டாள்.

 

பில் போடும் இடத்தில் ஒரு க்யூ இருந்தது.

 

“அச்சச்சோ விஜயா நான் சாக்ஸ் வாங்க மறந்துட்டேன். நீங்க ரெண்டு பேரும் இங்க வெயிட் பண்ணுங்க. நான் ஒரு நிமிஷத்துல வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக நடந்து சாக்ஸ்  இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

 

அவளுக்கு தேவையான சாக்சை எடுத்துக்கொண்டு  வேகமாக நடந்து திரும்பிக் கொண்டு இருக்கையில்

“சுகந்தா..” என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.

 

அந்த பெரிய வால்மார்ட் கட்டிடத்தில் எங்கிருந்து குரல் கேட்டது என்று அவளால் தெளிவாக யூகிக்கமுடியவில்லை.

 

நான்கு பக்கமும் பார்வையை  சுழல விட்டு   ‘யார் யாரை கூப்பிடுகிறார்கள்’ என்று தேடினாள்.

 

ஆனால் அங்கு அவள் கண்களுக்கு எட்டிய தூரம் வரை நீண்ட கோட் மற்றும் தொப்பி அணிந்த அமெரிக்கர்கள் மட்டுமே தெரிந்தனர்.

 

ஒரு இந்தியனை கூட பார்க்க முடியவில்லை. வேகமாக நான்கு பக்கமும் நடந்து தேடினாள். ஆனால் எதிர்பார்த்த யாரும் அவள் கண்களுக்கு தென்படவே இல்லை. அதற்குப் பிறகு அந்த குரலும் கேட்கவில்லை. விஜயா மற்றும் ஜோதியை பில் போட  பணம் இல்லாமல் நிறுத்தி வைத்து விட்டு வந்தது ஞாபகம் வர வேறுவழியின்றி மேலே தேட முடியாமல் அவர்களிடம் வந்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!