Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 24.2

“நானும்தான்.” என்றாள் அவள்.

“  நிஜமாவா?”

“ஆமாம் நிஜமா தான்.”

“அப்புறம் ஏன் இந்த இடைவெளி?” என்று அவன் கேட்கவும் அவள் அவன் மார்போடு ஒட்டி கொண்டாள்.



Advertisement

“அப்போ பெண்குழந்தை கன்ஃபார்ம் தான்.”. என்றான் அவன்

“எந்த குழந்தையாக இருந்தாலும் எனக்கு ஓகே தான்”  என்றாள் அவள். “எனக்கும்தான்.”. என்றவன் அதற்குப் பிறகு பேசவில்லை

இருவரும் இரண்டு வருடங்களாக மனதில் வைத்திருந்த மொத்த காதலையும் அன்று இரவு கட்டிலில் பரிமாறிக்கொண்டனர்.

Advertisement

 

Advertisement

சாதனா, சுகந்தன்இருவரும் விக்ரம் வீட்டில் இருந்தனர்.

கலைவாணி கந்தனுக்கு ஒரு கப்பில் பாயாசம் போட்டு எடுத்து வந்து கொடுத்தார்.

சுகந்தன்அதை வாங்கி ஸ்பூன் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “மாப்பிள்ளை பாயசம் எப்படி இருக்கு?” என்று ஆர்வமாக கேட்டார் கலைவாணி.

Advertisement

“செம டேஸ்ட்டா இருக்கு. அத்தை.” என்றான்  சுகந்தன்.

“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை.” என்றார் கலைவாணி வாயெல்லாம் பல்லாக.

“இருங்க நான் உங்களுக்கு இன்னொரு கப் பாயாசம் எடுத்துட்டு வரேன்.” என்று எழுந்து சென்றார் கலைவாணி.

தனியாக அமர்ந்து இருந்த. கந்தனிடம் வந்தார் கார்த்திகேயன்

“மாப்பிள்ளை நான் பேசினதை……” என்று தயங்கி தயங்கி ஆரம்பித்தார். “மாமா அதை எல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன். நீங்களும் அதை  மறந்துடுங்க. நீங்க  என்னை மனதார மாப்பிள்ளையா  ஏற்றுக்கொண்டதே போதும்.” என்றான் சுகந்தன்பெருந்தன்மையாக.

“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை.” என்றார் கார்த்திகேயன் நிம்மதியாக.

அப்போது விக்ரம் அங்கு வந்தான்.

“ அப்புறம் சுகந்தன்நீங்க அடுத்த மாசம் இந்தியாவுக்கு போவதா சாதனா சொன்னாங்க. இவ்வளவு தூரம் வந்துட்டு சுத்தி பார்க்காம போனால் எப்படி? ஒரு வாரம் நாம எல்லோரும் நியூயார்க்  ட்ரிப் போகலாமா?” என்று கேட்டான் விக்ரம்.

“போகலாம் விக்ரம். சாதனாவுக்கு என்கூட அங்கெல்லாம் போகணும்னு ஆசை. அதையும் நிறைவேற்றின மாதிரி இருக்கும்.” என்றான் சுகந்தன். அப்படியே அனைவரும் கிளம்பி நியூயார்க் சென்றனர். அங்கு சுதந்திர தேவி சிலை,  நயாகரா நீர்வீழ்ச்சி, வெள்ளை மாளிகை போன்ற இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவுக்கு  திரும்பினர்.

சுகந்தன், சாதனா இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றார் தாமரை. சாதனா, சேகர், வாசுதேவன் மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். சாதனா சுகன்யாவின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

சாதனா தான் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை குழந்தைக்கு கொடுத்தாள். அவன் வாங்கிக் கொண்டு  நன்றி கூறினான்.

“எனக்கு தேங்க்ஸ் வேண்டாம் ரித்தீஷ். நான் உன்னோட மாமி.” என்றாள் சாதனா “ஓகே மாமி” என்றான்.

“சாதனா இப்பதான் வீடு நிறைந்து இருக்கு” என்றார் தாமரை நிம்மதியாக. “என்னோட மனசும் இப்போதுதான் நிறைந்து இருக்கு அத்தை.” என்றாள் சாதனா.

“பழசை எல்லாம்….” என்று ஆரம்பித்த தாமரையை இடைமறித்தாள் சாதனா. “அதையெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன் அத்தை. இனி அதைப் பற்றி யாரும் பேச வேண்டாம். ப்ளீஸ்.” என்றாள் சாதனா. இதனைக்கேட்ட  வாசுதேவன், சேகர் இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தாமரை, சுகன்யா இருவரும் சேர்ந்து வடை பாயசத்துடன் மதிய உணவு தயாரித்து இருந்தனர். குளித்துமுடித்து சாதனா, சுகந்தன் இருவரும் வர அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டே கலகலப்பாக சாப்பிட்டனர்.

அந்த கலகலப்பு எப்போதும் இருக்கவேண்டும்  என்று அனைவரும் கடவுளை வேண்டிக் கொண்டனர்.

சுபம்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!