Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mullai Mullaal Edukkum Viththai Kaathal

Mullai Mullaal Edukkum Viththai Kaathal 2

முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை

பாகம் – 2

புதுப்புது முகங்கள், மதிக்கோ சுமித்ராவைத் தவிர வேறு யாரையும் தெரியாது. ழசநைனெயவழைn pசழபசயஅஅந நடந்த அந்த ஐந்து நாட்களிலும் ஒரு சில நண’பர்களை சேர்த்துக் கொண்டாள் மதி. எங்கு சென்றாலும் அவர்கள் 5 பேரும் ஒரு குழுவாகவே சுற்றுவார்கள். ஐவரும் கிராமத்துக் பெண்கள். சுமி, மதி தவிர காவியா, மோனிஷா, தாட்ஷாயினி ஆகியோரே நண்பர்கள். பொதுவாகவே பாடசாலை என்றாலும் சரி, பல்கலைக்கழகம் என்றாலும் சரி நாளைந்து பெண்பிள்ளைகள் கைகளையை கோர்த்துக் கொண்டு செல்வது வாடிக்கையானதே. மதி நண்பர்களுடன் மிகவும் கலகலப்பாக இருந்தாலும் அவளது மனது மட்டும் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தது என்னவோ உண்மைதான். பல்கழைக்கழகத்திற்கு சென்று 5 நாட்களாயின, தான் எதிபார்த்ததை விடவும் பல்கழைக்கழக வாழ்க்கை அவ்வளவு கசப்பில்லை என்றே எல்லோரும் நினைத்திருந்தார்கள் ஏனெனில் அவர்களுக்கு அப்போது விரிவுரைகள் ஆரம்பித்திருக்கவில்லை. (என்ன நண்பர்களே நம்ம ஹீரோ இன்னும் நவெசல ஆகல்லயேன்னு பாக்கிறிங்களா, இப்போ வருவாரு பாருங்க).

அன்று திங்கட்கிழமை, மதி காலை 8.30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வந்தாள். அவளுக்கு 9 மணிக்கு விரிவுரைகள் ஆரம்பித்து 2 மணிக்கே முடிவதாயிருந்தது. சுமிக்கு அன்று கொஞ்சம் தலைவலியாக இருந்ததால் அவள் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை. மதி தனியாக வரவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள். அப்போதுதான் அவள் முதல்முறையாக அவனைக் கண்டாள். ஒரு பையனைச் சுற்றி நாளைந்து பெண்கள் கூடியிருந்தார்கள். அந்தப்பையனுக்கும் அவர்களுக்குமிடையில் ஏதாவது பிரச்சினையிருக்குமோ? இல்லையே அவர்கள் சிரித்து சிரித்து பேசுவதைப் பார்த்தால் அப்படி இல்லையே? என்றவாறெல்லாம் யோசித்துக் கொண்டு “அது சரி இது என்ன நம்ம கிராமமா? பொண்ணும் பையனும் கொரோனா வந்தது போல ஒரு மீட்டர் தூர இடைவெளியப் பேணுறதுக்கு? என்று நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். ஆனால் அந்தப் பெண்கள் அவனை ஒரு பொருட்காட்சியகத்தைப் பார்ப்பது போல் பார்த்தார்கள் என்பதை தூரத்திலிருக்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியும். அவர்கள் என்ன இதற்கு முன் ஆண்களையே பார்த்தில்லையா?



Advertisement

அல்லது இவர்கள் வியந்து பார்க்குமளவுக்கு அவன் என்ன அவ்வளவு பேரழகனா? என்று உள்;ர நினைத்துக்கொண்டு தன் பாட்டுக்கு போனை நோண்டிக் கொண்டிருந்தாள். அவன் அந்தப் பெண்களுடன் ஆண்பிள்ளைகளுடன் பேசுவதைப் போலவே சாதாரணமாகவே பேசினது மட்டுமல்லாமல் ஆண்கள் தங்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளும் “மச்சி” போன்ற வார்த்தைகளுக்கும் அங்கு குறைவில்லை. மீண்டும் அந்தக் கும்பலை பார்த்த மதி ஒரு கணம் திடுக்கிட்டு “ ஏன் இன்னைக்கு நம்ம மனசு கண்டத எல்லாம் நினைக்குது? இப்பிடி வெட்டியா உட்கார்ந்து இருந்தா அப்பிடித் தான் யோசிக்கத் தோணும். இந்த சுமி வேற தலையிடின்னு கிடந்துட்டா, வேற வானரங்களும் இன்னும் வரயில்லையே… என்ன பண்றது” என்று அங்கு நிலத்தோடு அமைக்கப்பட்டிருந்த நீண்ட ஆசனங்களில் அமர்ந்தாள். மதி மீண்டும் அந்தப் பெண்களையும் பையனையும் பார்க்க எண்ணி திடீரென்டு திரும்பிப் பார்ப்பதற்கும், அந்தப் பையன் திரும்புவதற்கும் சரியாக இருந்தது. மஞ்சல் நிறமா அல்லது இளம் பச்சை நிறமா என்று அடையாளம் காணமுடியாத அளவு ஒன்றிய நிறங்களைக் கொண்ட டீசேர்டும் நீல நிற டெனிம் பேண்டும் அணிந்திருந்தான். பெண்களுடன் கதைக்கும் போது அவனது வலது கையை பேண்டின் பைக்குள் இட்டுக்கொண்டு கதைத்துக் கொண்டிருந்தான். அந்த டீசேர்டில் கழுத்தின் அருகில் இருக்கும் ஒரு பட்டனையும் திறந்துவிட்டிருந்தான். அது அவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்களின் கட்டளையின் கீழ் செயற்படும் காலம் என்பதால் அனைத்து ஆண்களும் சேர்ட் அணிந்து அதனை பேண்டுக்குள் செலுத்தி உத்தியோக ”ர்வமாகவும், முஸ்லிம் பெண்கள் என்றால் அபாயாவும் பர்தாவும் அணிய வேண்டும் என்பதோடு, இந்து கத்தோலிக்கப் பெண்கள் அனைவரும் சல்வார் அணிந்து தாவணி போட்டே ஆகவேண்டும். அவனது ஆடை வைத்துக் கொண்டு அவன் நிச்சயமாக  சிரேஷ்ட மாணவனாகத் தான் இருக்க வேண்டும் என்பதை மதி ஊகித்துக் காண்டாள். அந்த ஊகம் மறுக்கப்படலாம்.

மதி இன்று கொஞ்சம் மஞ’சலும், இளம் பச்சையும் கலந்தது போல சல்வார் அணிந்து அதற்கேற்ற நிறத்தில் லெகின்சும், தாவணியை கழுத்தோடு அணியாமல் அவளுக்கே உரிய கலாச்சாரப் பாணியில் நெஞ்சை மறைத்து அணிந்திருந்தாள். நீண்டு வளர்ந்த அவளது கார்மேகக் கூந்தலை கொஞ்சம் லூசாகப் பிண்ணி அரைவாசிக்கு விட்டு முன்னால் எடுத்து விட்டிருந்தாள். பிண்ணி விட்டு வலது புறமாக எடுத்து போடப்பட்டிருந்த அவளது கூந்தல் அவளது வலது புறக்காதை மறைத்தும் கன்னங்களை இலேசாக வருடிய படியும் இருந்தது. தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவளது முகம் சரியாகத் தெரியாவிட்டாலும் கூட அவளது செம்மை காணும் கண்களை ஒரு நிமிடம் சொக்கத்தான் வைத்துவிடும். ஆண்கள் இரசிக்கக் கூடிய அழகு, பெண்களும் பொறாமைப்படும் அளவுக்கு வளைவு நெளிவுகள் அவளிடம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. பிரம்மன் அழகாக வடிவமைத்த பெண்சிற்பமவள், ராஜா ரவிவர்மனின் கற்பனைக்கும் எட்டாத ஓவியமவள்..

(இனி நம்ம ஹீரோவ பற்றிப் பார்ப்போம்) அவன் நேரே மதியை நோக்கி வந்தான். அவனை அதுவரைக்கும் பீடத்தின் பக்கம் கண்டதேயில்லை. அவளும் அங்கேயெ பார்த்திருந்ததால் அவன் நேரே வரவும் திடீரென்று தனது பார்வையை திருப்பிக் கொண்டாள். அவன் அவளை நோக்கி தனது விரல்களால் சொடக்குப் போட்டு “ஹலோ…பேபி…மை நேம் இஸ் ஸ்ரீ… ஐ மீன் ஸ்ரீதர்.. என்ட் !” என்றான் அவளிடம். அளவான உடம்பு, ஜிம்மெல்லாம் சென்று நன்றாக செப்பனிடப்பட்ட உடல் பாகங்கள், அவ்வளவு நிறமாக இல்லையென்றாலும் அந்த நிறம் அவனது அழகைத் தூக்கி விட்டது. இணைந்த புருவங்கள், சீரான பார்வை, நேரிய நடை, திமிறான பேச்சு அது அவனிடம் அதிகமாகவே இருந்தது. மதிக்கு இவையெல்லாவற்றையும் தாண்டி அவனிடம் தெரிந்த ஒன்று அவனது திமிரான பேச்சு மட்டுமே. என்ன தைரியம் இதற்கு முன்னர் ஒருபோதும் சந்தித்திராத ஒரு பெண்ணைப் பார்த்து பேபி என்கிறான்.

Advertisement

இங்கிதம் தெரியாதவன் போல, அவனை சுற்றி இருந்த பெண்களின் ஆடை அலங்காரங்கள், மேக்அப்ஸ் எல்லாம் அவர்கள் நகரத்தில் வாழ்ந்த பெண்கள் என்பதைப் போலவே அவர்களை சித்தரித்திருந்தது. அது தான் அவர்களைப் போல நினைத்து தன்னிடம் அவ்வாறு பேசினானோ? “ஒரு வேளை சீனியரா இருக்குமோ? ஐயோ நல்லவேளை இப்பவாச்சும் இந்த மரமண்டைக்கு தெரிஞ்சுதே? என்று நினைத்து அமைதியாகவே இருந்தாள். ஸ்ரீ அவளது அமைதியைப் பார்த்து “ஹலோ ஒரு மரியாதைக்காச்சும் ஒருத்தங்க தன்னை இன்ரோ பன்னினா அதுக்கு ரெஸ்பொன்ஸ் பண்ணனும்…” என்று எடுத்தவுடனே கூறிவிட்டான். மதிக்கோ சுளீரென்று கோபம் வந்து விட்டது, “மரியாதையப் பத்தி இவன் பேசுறானா? முன்னப் பின்ன தெரியாதா ஒரு பெண்ணப் பார்த்து பேபின்டு சொல்றான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். சீனியராக இருக்குமோ எந்த பயத்தில் தனது மலரிதழ்களைத் திறந்து “மதி” என்றாள். அவனோ அதற்கு “ ஹலோ மதிச்சுத்தான் கேட்டேன்… நேம் என்ன என்டு” என்றான் ஸ்ரீ. மதி பொறுமையாக “மை நேம் இஸ் மதி.. ஐ மீன் வளர்மதி” என்று அவனது பாணியிலேயே பதில் கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து நீங்கினாள்.

Advertisement

ஏனோ தெரியவில்லை, ஸ்ரீயை நோக்கிய முதல் பார்வையிலேயே மதிக்கு அவனது நடத்தைகளும், பேச்சுக்களும் பிடிக்கவில்லை. ஆனால் அவனோ அதைக் கொஞசம் கூட கணக்கில் எடுக்காதவனாய் “ ஹலோ..மதி நம்ம ரெண்டு பேரும் சேம் கலர் வெயார் பண்ணியிருக்கோம்.. அதோட இந்த ரெஸ் உங்களுக்கு செம்மயா இருக்கு..” என்று மனதில் பட்டதைக் கூறிவிட்டான். என்ன இவ்வளவு உரிமையோடு பெயர் சொல்லிக் கூப்பிடுகின்றான் என்று நினைத்தவள் அவன் கூறிய ஆடை அழகைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் அவள் பாடசாலை செல்லும் காலம் முதலே அவளது நேர்த்தியான ஆடை அலங்காரங்களுக்கு பாடசாலை மற்றும் அவளது சமூகம், நண்பர்கள் மத்தியில் பாரிய வரவேற்பு உண்டு. அதில் மதிக்கொரு சந்தோஷமும் ஏற்படும். ஆனால் இன்று ஸ்ரீ சொல்லும் போது மட்டும் எரிச்சல் வந்தது அதுவும் “சேம் கலர்” என்று வேறு சொல்லிவிட்டான். அதனால் ஏற்பட்ட  எரிச்சலினால் அவனை நோக்கி மதி ஒரு வரண்ட புன்னகையை வீசி விட்டுச் சென்றாள்.

முதவாவது விரிவுரைகள் ஆரம்பமாகிய நாள் அன்று. மதி நேராக வகுப்பிற்குள் சென்றாள். அங்கு அவளது ஏனைய நண்பர்களும் உட்கார்ந்திருந்தார்கள். லேசாக அவர்களிடம் பொய்க் கோபம் காட்டிவிட்டு அவர்களது அருகில் போய் உட்கார்ந்தாள். “என்னடி எங்க போயிருந்த நீ? நாங்க கெண்டீன் ல இருந்தோம், சாப்பிட்டியா நீ” என்று ஆரம்பித்தாள் தாட்சாயினி. “ஆமாண்டீ உங்களுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நீங்க வர இல்லயே… கொஞ்ச நேரம் பார்த்திட்டு வந்துட்டேன்” என்று மதி கூற ஐயோ சோரி டீ என்று நண’பர்கள் மூவரும் தங்களது முகத்தை பாவமாக வைத்திருந்தனர். “அட சீ பரவால்ல விடுடீ இது பெர்ஸ்ட் டே, பட் இதுக்குப்பிறகு என்ன தனியா விட்டிட்டு வராதிங்கடீ நான் ஒரு சீனியர் லூசுகிட்ட மாட்டிட்டேன்.. நல்ல காலம் பெரிசா ஒன்னும் அவன் கலாய்க்க இல்ல” என்று ஸ்ரீயைப் பற்றிக் கூறுவதற்குள் விரிவுரையாளர் உள்ளே வந்து விட்டார். அனைத்து மாணவர்களும் எழும்பி மரியாதை செய்து விட்டு உட்கார்ந்தார். அவர்களுக்கு அன்று கணிதப்பாடம் இடம்பெற இருந்தது. அதற்காக தான் வந்திருந்தார் விரிவுரையாளர் சக்திவேல். அவர் தன்னைப் பற்றி இலேசாக ஒரு அறிமுகம் கொடுத்தார். மேலும் பாடங்கள் தொடர்பான விளக்கத்தையும் ஒரு அறிமுகத்தையும், மட்டுமல்லாது கணிப்பீடுகள் பற்றியும் கூறியிருந்தார். அது முதல் நாள் என்பதால் விரிவுரையாளர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அதற்குப் பிறகு பத்து மணியளவில் அரசியல் விஞ்ஞானம் நடப்பதாயிருந்தது. அரசியல் விஞ்ஞானத்தினை படிப்பிப்பதற்கான அன்று மிஸ். சாந்தினி வந்திருந்தார். வரும்போதே ஆயிரம் மலர்கள் ”த்துக் குலுங்கியது போல அவ்வளவு புன்னகையுடன் உள்நுழைந்தார். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் மாணவர்களுடன் பாடம் இடம்பெறும் நேரத்தில் விரிவுரையாளராகவும் மற்றைய நேரத்தில் நல்ல நண்பராகவும் இருப்பார். கலைப்பீடத்தின் தமிழ் மொழியில் கற்கும் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்களம், ஆங்கில மொழியில் கற்கும் மாணவர்களுக்கு மத்தியிலும் கூட இவருக்கு ஒரு தனி மதிப்புண்டு என்பது பீடம் அறிந்த ஒரு விடயமே. ஆனால் படிப்பென்று வந்தால் மிகவும் கண்டிப்பானவராக மாறிவிடுவார். பாடசாலையைப் போலல்லாது பல்கலைக் கழகம் என்பது பரந்து பட்டதொன்று என அடிக்கடி கூறுவார். அவர் உளவியலிலும் தேர்ச்சி பெற்றவர். அதனால் மாணவர்களின் மனதையும் புரிந்து கொள்ள அவ்வளவு நேரம் எடுப்பதில்லை அவருக்கு.

Advertisement

கணிப்பீட்டில் கவனயீனமாக இருந்து விட்டு கடைசி நேரத்தில் “ மேடம் பென்டிரைவ் ல எல்லாத்தையும் சேர்வ் பண்ணி வச்சிருந்தேன். பஸ்ல வரும் போது பென் மிஸ் ஆகிட்டுது மேடம்”, “மேடம் அவ்வளோ கஷ்டப்பட்டு பென் ல சேர்வ் பண்ணி வச்சிருந்தேன்.. எல்லாம் டிலீட் ஆகியிருக்கு மேடம் பிளீஸ், எனக்கு இன்னும் வன் டே டைம் தாங்க மேடம்” “ஐயோ மேடம் எக்ஸேம் எழுத ஏலாம போயிட்டுது மேடம், சரியான பீவர் ” என்று பல்கலைக் கழக மாணவர்கள் தஙகளுடைய அசட்டுத் தனத்திற்கு சொல்லும் எதிர்வாதங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறார் விரிவுரையாளர் சாந்தினி. பல்கலைக் கழக மாணவர்களின் விரிவுரைகள் மற்றும் பரீட்சை தொடர்பான கவனயீனங்களுக்கு எப்போதும் சாட்டாக அமைவது இரைப்பை அழற்சி (பயளவசவைளை) நோய் தான். பொதுவாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குறிப்பாக விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் மத்தியில் இந்த நோய்க்கு குறைவேயில்லை. அனைத்துக்கும் காரணம் கெண்டீனில் போடும் உப்பில்லா சோறும், உருக்குலைந்த பருப்புக் கறியும் தான்.

“ஸ்கூல் மாதிரியா இங்க நினைச்ச மாதிரி லீவ் எடுக்கலாம்” என்று சுற்றித் திரிந்து பல்கலைக் கழக வாழ்க்கையினை சந்தோஷமாக கழிப்பவர்களுக்கும் குறைவேயில்லை. விரிவுரைகளுக்கு வருகை தராமல் ஊர் சுற்றும் மாணவர்களின் அச்சத்திற்குரிய நேரம் தான் பரீட்சை எழுத அவர்களது பல்கலைக்கழக வரவு கணக்கிலெடுக்கப்படும் தருணம். கிட்டத்தட்ட எழுபது சதவீதமான வருகையை பரீட்சைக்காக பல்கலைக் கழகங்கள் தேவைப்படுத்துகின்றன. இடைநிலைப் பரீட்சையெனில்(ஆனை நஒயஅ) அங்கு வரவு தொடர்பான பிரச்சினை அவ்வளவாக எழாது, இறுதிப் பரீட்சையிலேயே இவ்வாறான பிரச்சினைகள் எழும். ஆனாலும் எமது மாணவர்கள் சிலர் கடும் புத்திசாலிகள், எடுக்கின்ற லீவுக்கெல்லாம் மருத்துவச் சான்றினை எடுத்து வைத்திருப்பார்கள், பணம் கொடுத்தால் போலி மருத்துவசான்று கொடுக்கும் வைத்தியர்களும் உள்ளனர். பல்கலைக் கழகம் இது தொடர்பாக ஆழ்ந்து நோக்கினாலே அன்றி இவை போலி மருத்துவச் சான்றுகள் என்பதை அவ்வளவு இலேசாகக் கண்டுபிடிக்காது. ஏனெனில் பல்கலைக் கழக மாணவர்கள் இந்த மாதிரியான விடயங்களில் தவறை சரியாகச் செய்வதில் கெட்டிக்காரர்கள். இது விரிவுரையாளர்கள் அறிந்த ஒரு விடயமே.. தன்னை பார்த்துவிடக் கூடாது என்று கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கும் ”னையாய் மாணவர்கள் அனைத்துக் கேடித்தனங்களும் செய்வார்கள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போலயே இருப்பவர்கள் தான் விரிவுரையாளர்கள், அவர்கள் கல்வியல் மேதைகள் என்பதை விட அவர்கள் இந்த வயதையும், பல்கலைக் கழக வாழ்க்கையையும் தாண்டித் தானே வந்திருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!